Thursday, January 28, 2010

ஆசை,தோசை,அப்பளம்,வடை!

ஆசை,தோசை,அப்பளம்,வடை! -எல்லாமே சுட்டது தான்!

ஆசைங்குறது ஆணுக்கும் உண்டு; பெண்ணுக்கும் உண்டு! ஆனா, பாருங்க எல்லாரும் பெண்களுக்குத் தான் ஆசை அதிகமுன்னு எழுதுறாங்க. (அப்பாடா, இனிமேலாவது வலையுலகத்துலே நம்மளைக் கொஞ்சம் கண்டுக்குறாங்களான்னு பார்ப்போம்!)

ஒரு ஊருலே புதுசா ஒரு கடை திறந்தாங்களாம். நம்ம பிக்-பஜார் மாதிரி ஒரு அடுக்குமாடிக்கட்டிடம்; மொத்தம் ஆறு மாடிங்க! ஆனா, அங்கே விற்பனைக்கு வச்சிருந்தது என்னவோ ஒரே ஒரு பொருள் மட்டும் தானாம் - கணவர்கள்! ஆமாம், அந்தக் கடைக்குப் போயி பொண்ணுங்க அவங்களுக்குப் புடிச்சா மாதிரி கணவனைப் பார்த்து பில் போட்டு, பிளாஸ்டிக் பையிலே தூக்கிட்டு வந்திரலாம்.

ஆனா பாருங்க, இதுலே ரொம்ப முக்கியமான விஷயம் என்னான்னா, வாங்க வர்றவங்க மேலே மேலே தான் போக முடியுமே தவிர கீழே வர முடியாது; ஒரு தளத்துலேருந்து அதுக்கு முந்தின தளத்துக்கு வர முடியாது; நேரா கீழ்த்தளத்துக்கே வந்திர வேண்டியது தான்.

ஒவ்வொரு தளத்துலேயும் ஒவ்வொரு மாதிரி கணவர்களை விற்பனைக்கு வச்சிருந்தாங்களாம். தரம் தரமாப் பிரிச்சு, பார்-கோடிங் பண்ணி, லேபல் தொங்க விட்டு வச்சிருந்தாங்களாம். இதைக் கேள்விப்பட்ட ஒரு அம்மணி, சரி, நாமும் போய் சல்லிசா நல்ல புருசனாக் கிடைச்சா வாங்கிட்டு வந்திரலாமேன்னு கிளம்பிப்போனாங்களாம்.

முதல் தளம். வாசல்லே ஒரு பெரிய அறிவுப்புப்பலகை இருந்திச்சாம். என்னான்னு அம்மணி பார்த்தாங்களாம்: "இந்தத் தளத்தில் இருக்கிறவங்கோ நல்ல சோலியிலே இருக்காங்க."

"அட, இது பரவாயில்லையே,"ன்னுச்சாம் அம்மணி. "நமக்கு வந்து வாய்சசவனுங்கெல்லாம் அப்பனோட பணத்தை வச்சுக்கிட்டு அலம்பல் பண்ணுறவனுங்கோ! பாக்கெட் மணி கிடைக்கலேன்னா பத்து நாளைக்கு போன் கூட பண்ண மாட்டானுங்கோ! ஆனாலும், அடுத்த மாடிக்கும் போய்த் தான் பாப்பமே?"

இரண்டாவது தளம். அறிவிப்புப்பலகை "இங்கே இருக்கிறவங்களுக்கு வேலைவெட்டியிருக்கு. பொஞ்சாதின்னா உசிரு!"

"அட, நல்லாருக்கே,"ன்னுச்சாம் அம்மணி. "ரெண்டாவது தளத்திலேயே இப்படீன்னா மூணாவது இதை விட நல்லாத்தானே இருக்கும்?"

மூணாவது தளம்: "இங்கே இருக்கிறவங்களுக்கு வேலையிருக்கு; பொஞ்சாதின்னா உசிரு; பார்க்கவும் சும்மா கிண்ணுன்னு இருப்பாங்க!"

"இது தான் மேட்டரா?" அம்மணி யோசிச்சுது. "மேலே போகப்போக அயிட்டம் நல்லாவே இருக்குது."

அத்தோட நிக்காம அடுத்த தளத்துக்கும் போச்சுது அம்மணி.

"இங்கே இருக்கிறவங்களுக்கு நல்ல வேலையிருக்கு; பொஞ்சாதின்னா உசிரு; பார்க்க ராசாவா இருப்பாங்க; சமையல் கூட பண்ணுவாங்க!" -அப்படீன்னு நாலாவது தளத்து போர்டு சொல்லிச்சு.

"கிட்டத்தட்ட ஷாப்பிங்கே முடிஞ்சா மாதிரி தான்,"ன்னு கூச்சலே போட்டாங்க அம்மணி. "எதுக்கும் அஞ்சாவது மாடிக்கும் போய்த்தானே பார்ப்போமே? இதை விட பெட்டராக் கிடைச்சா வேண்டான்னா இருக்கு...?"

அஞ்சாவது மாடியிலே அறிவுப்புப் பலகை என்ன சொல்லிச்சு? "இவங்கெல்லாம் நல்ல வேலையிலே இருக்காங்க, பொஞ்சாதின்னா உசுரு, சமையல் தெரியும். அத்தோட குழந்தைகளை நல்லாக் கவனிச்சுப்பாங்க!"

"யுரேகா!"ன்னு கத்தினாங்களாம் அம்மணி. "ஆனா, இதை விடவும் நல்ல புருஷன் ஆறாவது மாடியிலே இருந்தாகணுமே! இவ்வளவு தூரம் வந்திட்டு அதை ஏன் மிஸ் பண்ணனும்? போயிர வேண்டியது தான்."

ரொம்ப ஆசையாசையா அம்மணி ஆறாவது மாடிக்குப் போனாங்களாம். வெளியே பெரிய போர்டு மாட்டியிருந்துச்சு. என்னா...?

"நீங்க இந்த மாடிக்கு வந்த 34,56,789,012-வது பெண்மணி. இங்கே விற்பனைக்கு எந்த ஆம்பிளையும் இல்லை. பொண்ணுங்களைத் திருப்திப்படுத்தவே முடியாதுன்னு புரிய வைக்கிறதுக்காகத் தான் இவ்வளவு பெரிய மாடியைக் காலியா வச்சிருக்கோம். போயிட்டு வாங்க!"

இந்தக் கதையைப் படிச்சிட்டு, எப்படி நீ பொண்ணுங்களை மட்டம் தட்டி எழுதலாமுன்னு கோபப்படாதீங்க! உண்மையிலேயே இந்தக் கதையிலிருந்து என்ன தெரியுதுன்னா, இந்த உலகத்துலே ஒரு நல்ல ஆம்பிளை கிடைக்குறது குதிரைக்கொம்பு மாதிரி. அதுனாலே என்னை மாதிரி நல்ல ஆளுங்களை ஆதரிச்சு, என்னோட பதிவையும் ஒரு வாட்டி தமிழ்மணத்துலே "இந்த வார நட்சத்திரம்," ஆக்கி விட்டிருங்க! தாய்க்குலம் ஓட்டுலே ஆனாத் தான் உண்டு. வணக்கம்!

பி.கு: இதைப் படிச்சிட்டு இது ஆங்கிலக்கதையை உல்டா பண்ணினதுன்னு பின்னூட்டம் போட்டு நேரத்தை விரயம் பண்ணாதீங்க! குறிப்பா அந்த ஒரிஜினல் கதையைப் படிக்காம சும்மானாச்சுக்கும் இதை நான் எங்கேயோ படிச்சிருக்கேனேன்னு அலப்பறை பண்ணுற வேலையெல்லாம் வேணாம்.

6 comments:

Ananya Mahadevan said...

வோட்டு போட்டாச்சு போட்டாச்சு. கதை எங்கியோ (ஃபார்வார்டு ஆயி ஈமெயில்ல வந்த மாதிரி) இருந்ததுன்னு கண்டிப்பா சொல்ல மாட்டோம்ல. :)

settaikkaran said...

//வோட்டு போட்டாச்சு போட்டாச்சு. கதை எங்கியோ (ஃபார்வார்டு ஆயி ஈமெயில்ல வந்த மாதிரி) இருந்ததுன்னு கண்டிப்பா சொல்ல மாட்டோம்ல. :)//

அதான் மேலேயே போட்டுட்டேனே! எல்லாம் சுட்டதுன்னு! :-)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா...

// அதுனாலே என்னை மாதிரி நல்ல ஆளுங்களை ஆதரிச்சு, என்னோட பதிவையும் ஒரு வாட்டி தமிழ்மணத்துலே "இந்த வார நட்சத்திரம்," ஆக்கி விட்டிருங்க! //

ரைட் சார்.. உங்களை "நிரந்திர நட்சத்திரம்" ஆக்க பட்டாபட்டி கழகம் பாடுபடும்...

இதற்காக தலைவர் பட்டாபட்டி காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை ,
உண்ணாவிரதமிருக்க முடிவு செய்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா...

// அதுனாலே என்னை மாதிரி நல்ல ஆளுங்களை ஆதரிச்சு, என்னோட பதிவையும் ஒரு வாட்டி தமிழ்மணத்துலே "இந்த வார நட்சத்திரம்," ஆக்கி விட்டிருங்க! //

ரைட் சார்.. உங்களை "நிரந்திர நட்சத்திரம்" ஆக்க பட்டாபட்டி கழகம் பாடுபடும்...
இதற்காக தலைவர் பட்டாபட்டி காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை
உண்ணாவிரதமிருக்க முடிவு செய்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

settaikkaran said...

//ரைட் சார்.. உங்களை "நிரந்திர நட்சத்திரம்" ஆக்க பட்டாபட்டி கழகம் பாடுபடும்...
இதற்காக தலைவர் பட்டாபட்டி காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை
உண்ணாவிரதமிருக்க முடிவு செய்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.//

அண்ணே! நீங்க ஒரு தடவை சொன்னாலே நூறு தடவை சொன்னா மாதிரின்னு எல்லாரும் சொல்லறாங்க; ரெண்டு தடவை சொல்லியிருக்கீங்கன்னா செய்யாமலா இருப்பீங்க? ரொம்ப நன்றிங்க! :-))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்படியில்லைங்கோ.. புரியாதவங்களுக்கு
பல முறை சொல்லிக்கொடுப்பதில்லையா?.
ஹி..ஹி..ஹி.. ( எப்படியோ சமாளிச்சிட்டே பட்டாபட்டி)