Sunday, January 31, 2010

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை எழுத ஆரம்பிக்கிற வரைக்கும் நானும் கேள்விப்பட்டதில்லை. இனிமேல் நிறையக் கேள்விப்படுவோம். சொறிகால் வளவன் சரித்திரத்தொடர் என்பதால், அவர் நிதானமாக வருவார். ஆத்திர அவசரத்துக்கு வடக்கிலிருந்து சுட்ட ஜோக்குகளை ரீமேக் செய்து ஒரு சமகால சரித்திர நாயகனை உருவாக்க வேண்டும் என்ற தணியாத அரிப்பின் காரணமாக, இன்று ஷாஜஹான் டீ ஸ்டாலில் சமோசா கடித்தபோது எனது கற்பனையில் ஊதுபத்திப்புகை போலத் தோன்றியவரின் உருவமே - ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.

ஐயாக்கண்ணுவுக்கு மைக்ரோஸாஃப்டில் வேலை பார்க்க வேண்டும் என்று, தச்சநல்லூர் பிரவுசிங் சென்டரில் முதல் முதலாகக் கணினியைப் பார்த்த நாளதுமுதலாக ஆசை ஏற்பட்டு விட்டது. அதற்காக மிகவும் அல்லாடித்தள்ளாடி ஒரு விண்ணப்பமும் தயாரித்து பில் கேட்ஸுக்கு அனுப்பியும் விட்டார். ஆனால், அவரது துரதிருஷ்டம், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, அமெரிக்காவிலிருந்து வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் வந்து விட்டது. அதில் இருந்ததாவது.

"Dear Mr. Aiyyakkannu",(டியர் மிஸ்டர் ஐயாக்கண்ணு)

"You do not meet our requirements", (யூ டூ நாட் மீட் அவர் ரிக்வைர்மென்ட்ஸ்)

"Please do not send any further correspondence". (ப்ளீஸ் டூ நாட் செண்ட் எனி ஃபர்தர் கரஸ்பாண்ட்ன்ஸ்)

"No phone call shall be entertained", (நோ ஃபோன் கால் ஷல் பீ என்டர்டைன்ட்)

"Thanks", (தேங்க்ஸ்)

ஐயாக்கண்ணு ஆகாசத்துக்கும் பூமிக்குமா சந்தோஷத்துலே குதிக்க ஆரம்பிச்சிட்டாரு. அவருக்கு இடுக்கண் வருங்கால் நகுக குறளும் தெரியாது; இங்கிலீஷும் தெரியாது. ஏன் குதிச்சாருன்னு கேட்கறீகளா? கேளுங்கப்பு....!


சுத்துப்பட்ட எட்டுப்பட்டியையும் கூப்பிட்டு கடாவிருந்து வச்சாரு ஐயாக்கண்ணு. பொறவு, எல்லாருக்கும் அமெரிக்காவுலேருந்து வந்த லெட்டரை எடுத்து வாசிச்சுக் காண்பிக்க ஆரம்பிச்சாரு.

"மக்கா! அமெரிக்காவுலேருந்து பில் கேட்ஸு லெட்டர் போட்டிருக்காருலே! படிக்கேன் கேளுங்க...,"ன்னு படிக்க ஆரம்பிச்சாரு.

"உங்களுக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியாதுன்னு தெரியும்லே. லெட்டரை வாசிக்கும்போது ஒடனுடனே தமிழிலேயும் சொல்லுகேன். கேளுங்க..."

எட்டுப்பட்டி சனமும் குத்துக்கால் போட்டுக்கிட்டு ரொம்ப கவுரதையா கேட்க ஆரம்பிச்சாங்க. ஐயாக்கண்ணு படிக்காரு கேளுங்க....!

"டியர் மிஸ்டர் ஐயாக்கண்ணு", அதாவது.........அன்புள்ள ஐயாக்கண்ணு அண்ணாச்சி.....!"

"யூ டூ நாட் மீட்.....! என்ன சொல்லுகாரு கவனிச்சீகளா? என்னைச் சந்திக்கவே மாட்டேங்குதீக....ன்னு சொல்லுகாரு."

"அவர் ரிக்வைர்மென்ட்ஸ்", நீங்க எங்களுக்கு ரொம்ப அத்தியாவசியமில்லா...?

"ப்ளீஸ் டூ நாட் செண்ட் எனி ஃபர்தர் கரஸ்பாண்ட்ன்ஸ்". சும்மா கடுதாசெல்லாம் போட்டிட்டிருக்காதீக! தேவையில்லே அண்ணாச்சி!

"நோ ஃபோன் கால்.......", "எஸ்.டி.டியெல்லாம் பண்ணாதீக! எதுக்குங்கேன்...?

"ஷல் பீ என்டர்டைன்ட்......," உங்களை மவராசனா பார்த்துக்குவோமில்லா....?

"தேங்க்ஸ்", "ரொம்ப ரொம்ப நன்றி அண்ணாச்சி....!"


ஐயாக்கண்ணு லெட்டரைப் படிச்சு முடிச்சதும் தண்ணித்தொட்டி தொறந்து வச்ச தாசுல்தாருக்குக் தட்டுனா மாதிரி மொத்த சனமும் கைதட்டுனாக...!

"அண்ணாச்சி! எப்போ போறீக அமெரிக்காவுக்கு...?"

"அறுப்பு முடிஞ்சதும் போயிர வேண்டியது தான்," என்று பெருமிதமாகச் சொன்னார் ஐயாக்கண்ணு.

போனாரா இல்லையா? பொறுத்திருந்து பார்க்கலாம்.....!!

12 comments:

manjoorraja said...

waiting (வெய்ட்டிங்)

settaikkaran said...

//waiting (வெய்ட்டிங்)//

ஆஹா! இதை வச்சு ஒரு பிட்டு போடலாம் போலிருக்குதே! நன்றி!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. அது சூப்பரு அப்பு..
அட.. இப்படிதான் படிக்கனும் தெரியாம,
எவ்வளவு சான்ஸ்ச விட்டுடேனே..

settaikkaran said...

ஆகா.. அது சூப்பரு அப்பு..
அட.. இப்படிதான் படிக்கனும் தெரியாம,
எவ்வளவு சான்ஸ்ச விட்டுடேனே..

//நன்றிங்கண்ணே! ஏதோ இதைப் படிச்சு எதிர்கால சந்ததி இங்கீலீஷ் நல்லாப் புரிஞ்சுக்கிட்டா சரி! :-) //

சாமக்கோடங்கி said...

//"ப்ளீஸ் டூ நாட் செண்ட் எனி ஃபர்தர் கரஸ்பாண்ட்ன்ஸ்". சும்மா கடுதாசெல்லாம் போட்டிட்டிருக்காதீக! தேவையில்லே அண்ணாச்சி!//

எப்படி இதெல்லாம்... முடியல...

பின்னீட்டிங்க போங்க...

settaikkaran said...

//எப்படி இதெல்லாம்... முடியல...

பின்னீட்டிங்க போங்க...//

மிக்க நன்றிங்க! அடிக்கடி வந்து போயிட்டிருங்க!

settaikkaran said...

//கலக்கல்//

நன்றி அக்பர்! அடிக்கடி வாங்க!!

பிரபாகர் said...

நண்பா,

அருமையா கலக்குறீங்க! நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க இடுகைய படிச்சி! வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

settaikkaran said...

//நண்பா,

அருமையா கலக்குறீங்க! நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க இடுகைய படிச்சி! வாழ்த்துக்கள்...//

எல்லாம் நீங்க கொடுத்த உற்சாகம் தான். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மிக்க நன்றி!!

அகல்விளக்கு said...

என்னத்த சொல்ல...

ஆபிஸ்ல எல்லாரும் சிரிக்கிறத ரெக்கார்ட் பண்ணி வேணா அனுப்புறேன்...

ரொம்ப நேரமா சிரிச்சுகிட்டே இருக்காய்ங்க...

:-)

நீங்க கலக்குங்க தல....

settaikkaran said...

//என்னத்த சொல்ல...

ஆபிஸ்ல எல்லாரும் சிரிக்கிறத ரெக்கார்ட் பண்ணி வேணா அனுப்புறேன்...

ரொம்ப நேரமா சிரிச்சுகிட்டே இருக்காய்ங்க...

:-)

நீங்க கலக்குங்க தல....//

எல்லாரும் சிரிச்சிட்டு சந்தோஷமாயிருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்திரும். ரொம்ப நன்றிங்க

பிரேமா மகள் said...

வாய் விட்டு சிரிக்க வெச்சீங்க... நன்றி பாஸ்..