Friday, January 8, 2010

ஒரு தினசரிப் பயணத்தின் போது!

டயரியெல்லாம் எளுதாதே! சின்னப்புள்ளத்தனமாயிருக்கு, லேப்-டாப் வச்சிருக்கே, பிராட்பேண்டு வச்சிருக்கே! அடிச்சுத்தள்ளு ஒரு வலைப்பதிவுன்னு அட்வைஸ் பண்ணுன ஸ்ரீகாந்துக்கு ஒரு கும்புடுங்கோய்!

நேத்தைக்குப் பாருங்க, எட்டுமணிக்குத் தான் எந்திரிச்சேன்! குளிச்சிட்டு டிபன் சாப்பிடலாமுன்னா ட்ரைன் மிஸ் ஆயிரும். குரோம்பேட்டை ஸ்டேஷன் வாசலிலே ஒரு பூவம்பழமும் டீயும் குடிச்சிட்டு அவசர அவசரமா வண்டியைப் பிடிச்சேன். மவுண்டுலே மூணாவது நாளா தொடர்ந்து வர்ற அந்தப் பொண்ணைப்பாத்தா "உன்னாலே உன்னாலே," படத்துலே சதாவோட சினேகிதியா வர்ற நடிகை மாதிரி இருந்துச்சு. சிரிச்சா அவளும் சிரிப்பாள்னு தோணுச்சி! ஆனா சிரிக்கலே! சிரிச்சு என்ன பண்ணப்போறோம்? இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு லவ்ஸு,மேரேஜெல்லாம் பேசப்படாது. இன்னும் அசோசியேட்டாக் கூட ஆவலே! அதுனாலே அந்தப் பொண்ணைப் பார்த்துக்கிட்டிருக்காம, வண்டியிலே ஒட்டியிருந்த ஸ்டிக்கரையெல்லாம் பார்த்துக்கினே வந்தேன். சுயதொழில் வாய்ப்பு, பேயிங்-கெஸ்ட், லேடீஸ் ஹாஸ்டல்-னு கலர் கலரா ஸ்டிக்கருங்க! நடுவாப்புற நடுவாப்புற "ப்ரீத்தி ஐ லவ் யூ," ன்னு எவனோ கிறுக்கியிருந்தான். அப்புறம் சைதாப்பேட்டை வந்ததும் தான் அந்தப் பொண்ணு வந்துச்சி!

ஆறு அல்லது ஏழு வயசிருக்கும்! அழுக்கழுக்கா சட்டை; கிளிஞ்சு போன கவுனு. கூடவே அதை விட அழுக்கா அம்மா, இடுப்புலே ஒரு சின்னக்குளந்தையோட! மாம்பலம் வரைக்கும் கதவாண்டயே நின்னுட்டிருந்தாங்க! அப்பாலே, அந்த அம்மா பையிலேருந்து ஒரு மேளத்தை எடுத்துக்குச்சியாலே தட்ட ஆரம்பிச்சது. இந்தப் பொண்ணு அப்படியே குட்டுக்கரணம் போட்டுது! ரெண்டு கையையும் ஊனிக்கிட்டு தலைகீழா நின்னுது! ஓடுற டிரைனிலே பேலன்ஸ் பண்ணிக்கிட்டு நிக்கவே முடியாம நாங்க அல்லாடிக்கினு இருந்தோம். ஒரு ஆறு வயசுப்பொண்ணு தலைகீழா நிக்குது. அப்பாலே அந்தம்மாட்டேயிருந்து ஒரு வளையத்தை வாங்கி அந்த வளையத்துக்குள்ளாற போயி வெளியிலே வந்தது. அல்லாரும் பார்த்துக்கினாங்க்! நானும் பார்த்துக்கினேன்! எக்மோர் வராங்காட்டி எல்லார் முன்னாடியும் போயி அந்தப் பொண்ணு தட்டை நீட்டிச்சு! என் கிட்டே சில்லறை இல்லை! அஞ்சு ரூபா காயின் போட மனசு வரலே சாமீ! அது பார்க் ஸ்டேஷனிலே இறங்கிப்போயிருச்சு!

எங்கப்பாரு எப்பவுமே பிச்சை போடுவாரு! நாலணா,எட்டணான்னு! நானும் ஒரு ரூபாய் போடுவேன்! நாளைக்கு எனக்கும் கல்யாணம் ஆகி, என் குழந்தை வளர்ந்தா பத்து ரூபா போட்டாலும் போடலாம். அல்லது, என் புள்ளையே கூட இந்த அழுக்குப்பொண்ணு மாதிரி கையிலே ஒரு தட்டோட ட்ரைனிலே வித்தை காட்டிப் பிச்சையெடுத்தாலும் எடுக்கலாம்.

இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது; யோசிச்சா பயம் வருதில்லே? எனக்கும் வருது. என்ன செய்ய?

5 comments:

manjoorraja said...

நல்லா இருக்கு உங்க சேட்டைகள்.

வாழ்த்துகள்.

manjoorraja said...

நல்லா இருக்கு உங்க சேட்டைகள்.

தொடர்ந்து எழுதவும்.

வாழ்த்துகள்.

பிரசாத் said...

எப்படிங்க உங்களால மட்டும் இப்படி எதார்த்தமா எழுத முடியுது… எனக்கும் சொல்லித் தாங்களேன்… கத்துக்கிறேன்…

settaikkaran said...

மஞ்சூர் ராசா அண்ணே!

என்னோட வலைப்பதிவுலே முதல்லே கருத்துத் தெரிவிச்சிருக்கீங்கோ! நீங்க நல்லாயிருக்கணும் மகராசா!

settaikkaran said...

பிரசாத் அண்ணே!

இதெல்லாம் வெறும் புலம்பல் அண்ணே! புலம்பலுக்கு லாஜிக் கிடையாது. தொடங்கினா நிக்க மாட்டேக்கு