Monday, April 12, 2010

தாக்கரே காக்க காக்க!


இடம்: மும்பாய் பால் தாக்கரே வீடு.

(சேட்டைக்காரனும் அவரது மொழிபெயர்ப்பாளர் சூடாமணியும் தாக்கரே ஐயாவுக்காகக் காத்திருக்கின்றனர்)

சே.கா: அடேய் சூடாமணி! ஒழுங்கா மொழிபெயர்க்கணும். இல்லாட்டி உன் முழியை நான் பெயர்த்திடுவேன் தெரியுதா?

சூ.ம: அதெல்லாம் சரி! பொன்னாடை வாங்கிட்டு வருவீங்கன்னு பார்த்தா பொன்-கர்ச்சீப் வாங்கிட்டு வந்திருக்கீங்க?

சே.கா: பால் தாக்கரேயோட போட்டோவே பார்த்ததில்லையா நீ? அவர் மட்டும் ஜிப்பா போடாம இருந்தா என்னிக்கோ பம்பாயிலேருந்து பறந்து போய் பாகிஸ்தானிலே விழுந்திருப்பாரு! அதான் அவரோட சைசுக்கு ஏத்தா மாதிரி கொண்டு வந்திருக்கேன். புரியுதா?

(பால் தாக்கரே வருகிறார்)

சே.கா: தலைவா வாழ்க! நீ வாழ்க! உன் கட்சி வாழ்க! உன் பிள்ளை வாழ்க! உன் சேனை வாழ்க! உன் சேப்பங்கிழங்கு வாழ்க! ஸாரி...உன் தொண்டர்கள் வாழ்க! டேய் சூடாமணி, மொழிபெயர்த்துச் சொல்!

(சூடாமணி மொழிபெயர்த்துச் சொல்கிறார். இதைத் தொடர்ந்து சேட்டைக்காரனும், பால் தாக்கரேயும் சூடாமணியின் உதவியோடு பேசிய பேச்சு இது தான்)

தாக்கரே: சொல்லுங்க சேட்டை! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?

சே.கா: தலைவா! பாகிஸ்தானோட சூழ்ச்சியைக் கவனிச்சீங்களா? நம்மளைப் போரிலே ஜெயிக்க முடியலேன்னு, இங்கிருக்கிற பொண்ணுங்களையெல்லாம் ஒவ்வொண்ணா லவட்டிக்கினு போய் கல்யாணம் பண்ணிக்கிறானுவ....!

தாக்கரே: அதுக்குத்தான் நான் அறிக்கை விட்டுட்டேனே! இனிமேல் பாகிஸ்தானிலிருந்து கிரிக்கெட் ப்ளேயர், ஹாக்கி ப்ளேயர், ஃபுட்பால் ப்ளேயர், கட்டிங் ப்ளேயர்...இவ்வளவு ஏன், ஹோட்டல் சப்ளேயர் கூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டேனே!

சே.கா: என்னா அறிக்கை விட்டு என்னா புரயோஜனம்? சானியா கைநழுவிப்போயிருச்சு! இப்போ என்னடான்னா, சுஷ்மிதா சென் கிரிக்கெட் ப்ளேயர் வாசிம் அக்ரமைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களாம்...!

தாக்கரே: என்னது? கேட்கவே அதிர்ச்சியா இருக்கே! சுஷ்மிதா சென்னுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியா?

சே.கா: ஆமாம் ஐயா! நான் கூட நேத்து வரைக்கும் அதுக்கும் கல்யாணமாகி, உங்க வயசிலே ஒரு குழந்தையிருக்குமுன்னு நினைச்சிட்டிருந்தேன். இன்னிக்கு சப்பைமூக்கன்னு ஒருத்தரோட வலைப்பதிவைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கினேன்.

தாக்கரே: விட்டுத்தள்ளு சேட்டை! உன்னோட அழகுக்கும் அறிவுக்கும் சுஷ்மிதாவை விட நல்ல ஃபிகரா கிடைக்கும்.

(சூடாமணி சிரிக்க, சேட்டைக்காரன் அவனை முறைக்க....!)

சே.கா: ஐயா! நான் சொல்ல வந்த விஷயமே வேறே! இந்தியாவிலே ஆம்பிளைங்களா இல்லை? சரி, ஏதோ ஷாயப் மலிக் பார்க்க நல்லாயிருக்காரு, சானியா கட்டிக்கிச்சு, போனாப்போகட்டுமுன்னு விட்டா, இந்த சுஷ்மிதாவுக்கு வாஸிம் அக்ரம் தானா கிடைச்சாரு? அந்தாளுக்கு சர்க்கரைவியாதின்னு அவரே விளம்பரத்துலே சொல்லுறாரு! இந்த மாதிரி வியாதியஸ்தனையெல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்? என்னை மாதிரி அயோக்கியமா இருக்கிறவங்களை, மன்னிக்கணும், ஆரோக்கியமா இருக்கிறவங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாமில்லே? இத்தனை வருஷத்துலே எனக்கு ஜலதோஷம் கூட வந்தது கிடையாது. தெரியுமா?

சூ.ம: ஆமாங்க ஐயா! எங்கே ஜலதோஷம் வந்திருமோன்னு, நம்ம சேட்டை ரொம்ப வருஷமா குளிக்கிறதே இல்லை!

சே.கா: மவனே சூடாமணி, சென்னைக்கு வா, உன்னை ஆறினமணியாக்கிடறேன்.

தாக்கரே: ஹூம், என்ன பண்ணுறது சேட்டை? எனக்கோ வயசாயிடுச்சு!

சே.கா: வாஸ்தவம் தான், இனிமே உங்களைக் கொல்லங்குடி கருப்பாயி கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க!

தாக்கரே: அதைச் சொல்லலே, இப்பெல்லாம் நான் சொல்றதை முதலமைச்சர் கூட கேட்குறதில்லை. எது சொன்னாலும் ஏறுக்கு மாறாவே செய்யுறாங்க!

சே.கா: ஐயா, உங்களைத் தான் மலைபோல நம்பி வந்திருக்கேன். ஏற்கனவே இந்தியாவிலே பெண் விகிதாச்சாரம் ரொம்பக் குறைச்சலாயிருக்குன்னு எல்லாரும் கவலைப்படுறாங்க! இதுலே இருக்கிற நல்ல ஃபிகரையெல்லாம் பாகிஸ்தானிங்க லவட்டிக்கிட்டுப் போனா, நாங்களெல்லாம் காலம்பூராவும் கன்னியா, அதாவது கட்டைப்பிரம்மச்சாரியாத் தானிருக்கணும்.

தாக்கரே: சேட்டை! என்னை ரொம்ப டச் பண்ணிட்டே!

சே.கா: ஓ சாரி, தள்ளியே உட்கார்ந்து பேசறேன்.

தாக்கரே: அதில்லே சேட்டை, உங்க ஊருலே இவ்வளவு தலைவருங்க இருக்கும்போது நீ என்னை வந்து பார்த்து முறையிடுறியே! அது சரி, உங்க ஊரு பெரிசுங்க கிட்டே இது விஷயமாப் பேசினியா?

சே.கா: எங்க ஊரு தலைங்களுக்கு வூட்டுலேயே தலைக்கு மேலே பிரச்சினையிருக்கு! அவங்களை விடுங்கய்யா! இப்போ பாருங்க ஐயா, பா.ஜ.க.ஆட்சியிலே வெங்காயத்தை ஏற்றுமதி பண்ணினாங்க! என்ன ஆச்சு?

தாக்கரே: வெங்காயத்துக்குக் கிராக்கி வந்திருச்சு! கிலோ நூறு ரூபாய்க்கு வித்தாங்க! ரெண்டு நாள் தொடர்ந்து நான் பக்கோடா சாப்பிடாம இருந்தேன் தெரியுமா?

சே.கா: அதே மாதிரி இப்போ சரத்பவார் கோதுமையை ஏற்றுமதி பண்ணினாரு, என்னாச்சு?

தாக்கரே: அதான் விலைவாசியெல்லாம் சகட்டுமேனிக்கு ஏறிப்போய் கோதுமைக்குப் பெரிய தட்டுப்பாடு வந்திருச்சே!

சே.கா: அதே மாதிரி தான், இப்படியே இந்தியாவுலே இருக்கிற பொண்ணுங்க வெளிநாட்டு மாப்பிள்ளைங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனா அப்புறம் இங்கே பொண்ணுங்களுக்குத் தட்டுப்பாடு வந்திராது...?

தாக்கரே: அட, ஆமாம்!

சே.கா: பொண்ணுங்களுக்குத் தட்டுப்பாடு வந்தா, கல்யாணம் கொறஞ்சு போயிடும். அப்புறம் ஜனத்தொகை குறைஞ்சு போயிடும். யோசிச்சுப்பாருங்க ஐயா, உங்களுக்குப் பொழுது போகலேன்னு யாரையாவது அடிக்கணுமுன்னா யாரை அடிப்பீங்க?

தாக்கரே: ஐயையோ! என்ன சேட்டை இப்படி பயமுறுத்தறே?

சே.கா: இப்பவாவது நான் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டீங்களே!

தாக்கரே: மும்பை மராட்டியருக்கேன்னு சொன்ன மாதிரி இந்தியப்பெண்கள் இந்தியருக்கேன்னு ஒரு தலையங்கம் எழுதட்டுமா?

சே.கா: அதெல்லாம் சரிவராது! மும்பை மராட்டியருக்கேன்னு டெண்டுல்கரே ஒத்துக்கலியே!

தாக்கரே: இனிமே பாகிஸ்தானிங்க இந்தியாவுக்கு வந்தா அவங்க இந்தியனாயிடணுமுன்னு ஒரு அறிக்கை விடட்டுமா?

சே.கா: ஐயா, சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க, வர வர உங்க அறிக்கையெல்லாமே சிங்கமுத்துவோட அறிக்கை மாதிரி காமெடியாயிட்டிருக்கு! வித்தியாசமா ஒரு யோசனை சொல்றேன் கேட்கறீங்களா?

தாக்கரே: சொல்லு சேட்டை!

சே.கா: ஐயா, நீங்க என்ன சொன்னாலும் அதை எதிர்க்கிறது தான் இப்போ ஃபேஷனாயிட்டிருக்கு. அதுனாலே....!

தாக்கரே: அதுனாலே....

சே.கா: பாகிஸ்தான் கிரிக்கெட் ப்ளேயருங்க இங்கே மாசாமாசம் வந்து விளையாடணுமுன்னு அறிக்கை விடுங்க....!

தாக்கரே: என்னது...?

சே.கா: அது மட்டுமல்ல, உலகத்திலேயே ரொம்ப அழகான ஆண்கள் பாகிஸ்தானிலே மட்டும் தானிருக்காங்க, இந்தியாவிலே உங்களையும் என்னையும் மாதிரி விதிவிலக்காத் தான் கண்ணுக்கு அழகா ஆம்பிளைங்க இருக்காங்கன்னு அறிக்கை விடுங்க....!

தாக்கரே: சேட்டை....!

சே.கா: கடைசியா இன்னொரு அறிக்கை விடுங்க! இனிமே இந்தியாவிலே இருக்கிற நடிகைங்க, விளையாட்டு வீராங்கனைங்க, எல்லாரும் பாகிஸ்தான் கிரிக்கெட் ப்ளேயருங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடுங்க!

தாக்கரே: என்னது...?

சே.கா: அப்படிச்சொன்னீங்கன்னா, பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்னு எல்லாக் கட்சியும் உங்களை எதிர்ப்பாங்க. அதுக்கப்புறம் பாகிஸ்தானிலேருந்து ஒரு ஈ,எறும்பு கூட இந்தியாவுக்கு வர முடியாது. அப்புறம் எப்படி சானியாவையும், சுஷ்மிதாவையும் லவட்டின மாதிரி மத்த பொண்ணுங்களை லவட்டிக்கிட்டுப் போக முடியும்? என்ன நான் சொலறது?

தாக்கரே: கௌன் ஹை உதர்? இஸ் ஆத்மீ கா பீச்சே ஹமாரா குத்தோன் கோ பேஜ்தோ! இஸ் கோ பகாவோ!

சே.கா: என்ன சூடாமணி? சூடா டிபனும் காப்பியும் கொண்டு வரச்சொல்லுறாரா?

சூ.ம: அண்ணே, நம்ம மேலே நாயை அவுத்து வுடச்சொல்றாரு! வாங்க ஓடிடலாம்.

சே.கா: ஐயோ, நாயா? எஸ்கேப்......!

சூ.ம: சேட்டை, எங்கே ஓடுறீங்க? வி.டி.ஸ்டேஷன் இந்தப்பக்கம் இருக்கு?

சே.கா: யாரு ஸ்டேஷனுக்கு ஓடுறாங்க, வாடா அரபிக்கடல்லே குதிச்சு நீந்தியே சென்னைக்குப்போயிடலாம்.

38 comments:

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை நல்லாவே இருக்கு. ஆனா தாக்கரே நாயை அவுத்து உடமாட்டாரு - புலியை அவுத்து உட்டுடுவாரு. ஜாக்கிரதை! :)

வெங்கட் நாகராஜ்

பனித்துளி சங்கர் said...

///////தலைவா! பாகிஸ்தானோட சூழ்ச்சியைக் கவனிச்சீங்களா? நம்மளைப் போரிலே ஜெயிக்க முடியலேன்னு, இங்கிருக்கிற பொண்ணுங்களையெல்லாம் ஒவ்வொண்ணா லவட்டிக்கினு போய் கல்யாணம் பண்ணிக்கிறானுவ....!///////


ஆஹா விசயம் அப்படி போகுதா ! கலக்குறீங்க சேட்டை .
மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

மசக்கவுண்டன் said...

பிரமாதம் போங்க.

Anonymous said...

சேட்டை... சிங்கமுத்துகிட்டு வம்ப விலகொடுத்து வாங்கிட்டீங்க.. அப்படியே நீந்தி பாகிஸ்தான் போயிடுங்க...

பிரபாகர் said...

சேட்டை!

போட்டு தாக்கரே!

ரொம்ப துணிச்சல்தான்!

பிரபாகர்...

நஜீபா said...

சேட்டை, சமீப காலத்துலே இந்த மாதிரி நகைச்சுவையா எழுதுற ஒருத்தரை நான் பார்த்தா நினைவில்லை. உங்களுக்கு நிகர் நீங்க தான்...அடிச்சு தூள் கிளப்பறீங்க....!

Unknown said...

உம்ம சேட்டை தாங்க முடியலங்கானும்.. ஒழுங்கு மரியாதையா இரும். பால் தாக்கரேவையெல்லாம் தாக்குனீர்னா அப்புறம் அவா ஆட்டோ இல்ல டேங்கர் லாரியே அனுப்புவா..

Chitra said...

மும்பை மராட்டியருக்கேன்னு சொன்ன மாதிரி இந்தியப்பெண்கள் இந்தியருக்கேன்னு ஒரு தலையங்கம் எழுதட்டுமா?

.......ha,ha,ha,ha.....
கலக்கல் பதிவு! நக்கல் மன்னன், நீங்கள் தான்!

முகுந்த்; Amma said...

தாக்கரேயை வம்புக்கு இழுக்காதீங்க அண்ணாச்சி, அப்புறம் அவர் ஆளை வச்சி தாக்கு தாக்குன்னு தாக்கீருவாறு.

என்ன புதுசா சுஷ்மிதா பத்தியெல்லாம் கவலை படுறீங்க. பாவம்ங்க ஸ்ரேயா.

சுதாகர் said...

தல சான்சே இல்ல....... எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.....ஒரு நாள் ல செய்யிற முக்கியமான கடமை ல உங்க ப்ளாக் படிக்குறதையும் வெச்சிருக்கேன்....... பணி தொடர்வதர்க்கு வாழ்த்துக்கள்.......

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை ரொம்பதான் குசும்பு..

அடிச்சி தூள்கிளப்புறீங்க.. கலக்குங்க...

சிநேகிதன் அக்பர் said...

அய்யோ அய்யோ! செம காமெடி போங்க.

பால் தாக்கரே கிட்டையே சேட்டையா.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சானி..சானினு சொல்றாங்களே..
அது யாருண்ணா?..

சீதாம்மா said...

அர்த்தமுள்ள அரட்டை
ரசிக்கின்றேன்
சீதாம்மா

பித்தனின் வாக்கு said...

நல்ல வழக்கம் போல சேட்டைப் பதிவு. கவலைப்படாதிங்க சேட்டை. நாம பங்களாதேஷ் பிகருகளை உஷார் பண்ணிவிடலாம். இந்தியப் பெண்களைக் காட்டிலும் அவர்கள் அழகு.

settaikkaran said...

//சேட்டை நல்லாவே இருக்கு. ஆனா தாக்கரே நாயை அவுத்து உடமாட்டாரு - புலியை அவுத்து உட்டுடுவாரு. ஜாக்கிரதை! :)//

ஆஹா, நல்ல வேளை சொன்னீங்க! இதை கற்பனையோட நிறுத்திக்கிறேன். மும்பை பக்கமே தலைவச்சுப் படுக்க மாட்டேனில்லா...? :-))

மிக்க நன்றி!!!

settaikkaran said...

//ஆஹா விசயம் அப்படி போகுதா ! கலக்குறீங்க சேட்டை .
மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !//

வாங்க வாங்க சங்கர், தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்திட்டிருக்கீங்க! உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும். :-))

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கணும். :-))))))

settaikkaran said...

//பிரமாதம் போங்க.//

மிக்க நன்றி கவுண்டரே! :-))

settaikkaran said...

//சேட்டை... சிங்கமுத்துகிட்டு வம்ப விலகொடுத்து வாங்கிட்டீங்க.. அப்படியே நீந்தி பாகிஸ்தான் போயிடுங்க...//

என்னாது, ரொம்ப அனுபவப்பட்டவரு மாதிரி அலர்றீங்க? :-)))

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//போட்டு தாக்கரே!

ரொம்ப துணிச்சல்தான்!//

ஆமாம்! :-))

தாக்கரேவுக்கு தமிழ்தெரியாதுங்கிற தைரியம். எனக்கு மும்பை போக வேண்டிவராதுன்னுற தைரியம் தான். மிக்க நன்றிங்க! :-)))))))

settaikkaran said...

//சேட்டை, சமீப காலத்துலே இந்த மாதிரி நகைச்சுவையா எழுதுற ஒருத்தரை நான் பார்த்தா நினைவில்லை. உங்களுக்கு நிகர் நீங்க தான்...அடிச்சு தூள் கிளப்பறீங்க....!//

வாங்கக்கா வாங்க, இத்தனை நாளா எங்கே போயிட்டீங்க? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//உம்ம சேட்டை தாங்க முடியலங்கானும்.. ஒழுங்கு மரியாதையா இரும். பால் தாக்கரேவையெல்லாம் தாக்குனீர்னா அப்புறம் அவா ஆட்டோ இல்ல டேங்கர் லாரியே அனுப்புவா..//

இந்த ஒருவாட்டி மன்னிச்சு வுட்டுருங்க! பெரியவங்க சொல்லிட்டீங்க, இனிமேல் குறைச்சுக்குறேன். :-))))

மிக்க நன்றி!!!!!!

settaikkaran said...

//.......ha,ha,ha,ha.....
கலக்கல் பதிவு! நக்கல் மன்னன், நீங்கள் தான்!//

வாங்க வாங்க, தவறாமல் வந்து உற்சாகப்படுத்துவதில் நீங்களும் ராணி தான் போங்க! மிக்க நன்றி!! :-)))

settaikkaran said...

//தாக்கரேயை வம்புக்கு இழுக்காதீங்க அண்ணாச்சி, அப்புறம் அவர் ஆளை வச்சி தாக்கு தாக்குன்னு தாக்கீருவாறு.//

அப்படியா சமாச்சாரம்? அவரு மேட்டரெல்லாம் சொதப்பிருச்சுன்னு தான் எல்லாரும் பேசிக்கிறாங்க, அதான் துணிஞ்சு போட்டேன்.

//என்ன புதுசா சுஷ்மிதா பத்தியெல்லாம் கவலை படுறீங்க. பாவம்ங்க ஸ்ரேயா.//

சேச்சே! நான் சுஷ்மிதாவுக்காகக் கவலைப்படலீங்க, ஒட்டுமொத்த இந்திய ஆண்களுக்காகவும் பொதுநோக்கோடு எழுதப்பட்ட பதிவுங்க இது. என்ன இருந்தாலும் ஸ்ரேயாவுக்கு நான் துரோகம் நினைப்பேனா....? :-))))

மிக்க நன்றிங்க!!!!

settaikkaran said...

//தல சான்சே இல்ல....... எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியுது.....ஒரு நாள் ல செய்யிற முக்கியமான கடமை ல உங்க ப்ளாக் படிக்குறதையும் வெச்சிருக்கேன்....... பணி தொடர்வதர்க்கு வாழ்த்துக்கள்.......//

இவ்வளவு தாராளமாக பாராட்டுற உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும்போது, தானாவே எழுத வருதுங்க! அது தான் உண்மை! மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//சேட்டை ரொம்பதான் குசும்பு..

அடிச்சி தூள்கிளப்புறீங்க.. கலக்குங்க...//

ரொம்ப நன்றிங்க அண்ணே! "வலைச்சரத்தில்" கதை போல நீங்கள் எழுதிய பதிவு இருக்கே, அட்டகாசம்! இத்தனை பணிகளுக்கிடையிலும் வந்து உற்சாகப்படுத்தினதுக்கு மிக்க நன்றிண்ணே! :-)))

settaikkaran said...

//அய்யோ அய்யோ! செம காமெடி போங்க. பால் தாக்கரே கிட்டையே சேட்டையா.//

ஹிஹி! அவருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் தெரிஞ்சவங்க யாரும் போட்டுக்கொடுக்க மாட்டாங்கன்னு ஒரு அசட்டுத்துணிச்சல் தானுங்க! :-)))

மிக்க நன்றி!!!!

settaikkaran said...

//சானி..சானினு சொல்றாங்களே..
அது யாருண்ணா?..//

உக்கும்! சானிக்குக் கல்யாணமே முடிஞ்சு, மூணு பிரியாணி, ஏழு சூப்பு, இருபத்தி மூணு சைட்-டிஷ், எட்டு ஐஸ்-க்ரீமுன்னு விருந்து நடக்கப்போவுது, இப்போ வந்து கேட்கறீயளாக்கும்? :-)))))

மிக்க நன்றிண்ணே!!!!

settaikkaran said...

//அர்த்தமுள்ள அரட்டை
ரசிக்கின்றேன்//

அம்மாவின் வருகை, எனக்குக் கிடைத்த பெருமை! மிக்க நன்றியம்மா!!

settaikkaran said...

//நல்ல வழக்கம் போல சேட்டைப் பதிவு.//

மிக்க நன்றிங்க! தொடர்ந்து உற்சாகப்படுத்துறீங்க! பெரிய மனசு உங்களுக்கு!!

//கவலைப்படாதிங்க சேட்டை. நாம பங்களாதேஷ் பிகருகளை உஷார் பண்ணிவிடலாம். இந்தியப் பெண்களைக் காட்டிலும் அவர்கள் அழகு.//

போற போக்கைப் பார்த்தா அந்த மாதிரிதான் ஏதாவது பண்ணனும் போலிருக்கு. :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு சேட்டை.. :)

Aba said...

சூப்பரா இருக்குப்பா இது....

//கட்டிங் ப்ளேயர்...இவ்வளவு ஏன், ஹோட்டல் சப்ளேயர் கூட வரக்கூடாது//

யோவ், வி.சி.டி. பிளேயர், டி.வி.டி. பிளேயர் இதெல்லாம் விட்டுட்டாரே???

Prasanna said...

//நான் கூட நேத்து வரைக்கும் அதுக்கும் கல்யாணமாகி, உங்க வயசிலே ஒரு குழந்தையிருக்குமுன்னு நினைச்சிட்டிருந்தேன்//

அவர யூத்துனு சொல்லி நைசா ஐஸ் வச்சிட்டீங்க:)

பிரேமா மகள் said...

இந்த பையனை யாராச்சும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்களேன்ப்பா... அட்டகாசம் தாங்க முடியலையே?

settaikkaran said...

//நல்லா இருக்கு சேட்டை.. :)//

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

சூப்பரா இருக்குப்பா இது....

மிக்க நன்றிங்க! :-)))

//யோவ், வி.சி.டி. பிளேயர், டி.வி.டி. பிளேயர் இதெல்லாம் விட்டுட்டாரே???//

அட, ஆமாம், எப்படி விட்டாரு...? :-)))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//இந்த பையனை யாராச்சும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்களேன்ப்பா... அட்டகாசம் தாங்க முடியலையே?//

இது நல்ல ஐடியாவா இருக்கு. பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும்போது எனக்கு இந்தியாவிலே பொண்ணு கிடைச்சாலும் கிடைக்குமே! :-))

நன்றிங்க!!!

settaikkaran said...

//அவர யூத்துனு சொல்லி நைசா ஐஸ் வச்சிட்டீங்க:)//

நான் சொன்னேனோ இல்லியோ, உள்ளர்த்தத்தைக் கண்டுபிடிச்சிட்டீங்களே பிரசன்னா...! :-))

மிக்க நன்றி!!