Tuesday, April 6, 2010

மனம் ஒரு குரங்கு

எட்டுமணிநேர ஏசி வாசத்தை முடித்து வெளியே இறங்கியபோது, கோடைவெயில் விட்டுச்சென்ற வெப்பம் அஸ்தமனத்துக்குப் பின்பும் வெளியே காத்திருந்தது.

ஆயிற்று! இனிமேல் அம்ரிதாவில் டீ அருந்துவதற்குப் பதிலாய், குளிர்ச்சியாக எதையேனும் பருகிவிட்டு, நீண்ட கூட்டுவண்டிப் பயணத்திற்காக தொண்டையை ஆயத்தப்படுத்த வேண்டியது தான். வரிசையாயிருந்த கடைகளில் கூட்டம் குறைவாயிருந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து,’ஒரு லெமன் ஜூஸ்,’ என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினேன். சில்லென்ற எலுமிச்சைரசம் எனது உள்ளங்கையோடு உறவாடுவதற்கு முன்னரே எனது கண்கள் அந்தக் கடையில் தென்பட்ட சில வஸ்துக்களைப் பார்த்து, இது(வும்) ஒரு மலையாளியின் கடை என்ற செய்தியை எனக்குள்ளே இறக்கியது.

’ஒன் சிங்கிள் சமோசா!’ எனக்கருகில் வந்து நின்ற அந்த நபர் கேட்கவும், அந்தக் கடைக்காரர், காகிதத்தட்டில் ஒரு சமோசாவை வைத்து, இயந்திரத்தனமாக அதன் தலையின் மீது பச்சைச்சட்டினியை ஊற்றிக்கொடுத்தார்.

"வொய் சட்டினி? ஐ டிட் நாட் ஆஸ்க் ஃபார் சட்னி!" பக்கத்தில் நின்ற நபருக்குப் பதைபதைப்பு. பாவம், தமிழ் தெரியாதவர் போலிருக்கிறது.

"அதை முதல்லே சொல்லணும். எங்க கடையிலே இப்படித்தான்," அந்தக் கடைக்காரரின் பதிலில் இருந்த அலட்சியம் என்னை ஒரு நிமிடம் உலுக்கியது.

பழரசத்தைக் குடித்து முடித்துவிட்டு,"பத்து ரூபாய் கொடுத்தேன்; மீதி கொடுங்கண்ணா," என்றேன் நான்.

"பத்து ரூபா கொடுத்தியா? உன் ஜேப்புலே மீதி சில்லறை இருக்கும் பாரு!" அலட்சியமாக பதில் வந்தது.

"ஹலோ! நீங்க கொடுத்தாத் தானே இருக்கும்? எப்போ மீதி கொடுத்தீங்க?" நான் எரிச்சலை அடக்கியபடி குரலை உயர்த்தாமல், அழுத்தமாக்கிக் கேட்டேன்.

"உன் ஜேப்புலே பாரு நீ!"

"நான் பொய் சொல்லறேனா?" நான் இரைந்தேன்.

"அப்போ நான் பொய் சொல்றேனா?" அந்தாளும் இரைந்தான். "ஜேப்பிலே இருக்கும் பாரு!"

அந்த மலையாளி என்னை ஒருமையில் அழைத்தது எனக்கு சுருக்கென்றது. மலையாளிகள்! தேங்காயையும், புழுங்கலரிசியையும், மரச்சீனிக்கிழங்கையும் தின்று தின்று திமிரெடுத்த மலையாளிகள்!

"என் ஜேப்பிலே சில்லறை இருக்கா இல்லியான்னுறது பிரச்சினையில்லை; நீங்க மீதி கொடுத்தீங்களா இல்லியா?"

"முதல்லே ஜேப்புலே மூணு ரூபாய் இருக்குதா பாரு!"

"யோவ்! என் சட்டைப்பையிலே சில்லறை நிறையவே இருக்கு! நீ கொடுத்தியா?"

"கொடுத்தேன்! பாரு, மூணு ரூபா கொடுத்தேன்!" என்ன ஒரு அழிச்சாட்டியம் இந்த மலையாளிக்கு.....? கேவலம் மூன்று ரூபாய்க்காக....!

"இதோ பாரு!" என் சட்டைப்பையிலிருந்தவற்றைக் காலி செய்து காண்பித்தேன். நான்கு ஐந்து ரூபாய் நாணயங்கள்; ஒரே ஒரு இரண்டு ரூபாய் நாணயம்!

"பார்த்தியா? இதுலே ஒரு ரூபாய் காயின் இருக்கா? இப்ப எடு மூணு ரூபாயை!" எனது குரல் இப்போது உரத்து விட்டிருந்தது.

"நான் கொடுத்தேன், நீ பேண்ட் பாக்கெட்டுலே போட்டிருப்பே!"

எங்களுக்குள்ளே வாக்குவாதம் முற்றியது. என்ன திமிர் இந்த மலையாளிக்கு....? எவ்வளவு நேரம்? சரியாக நினைவுகூர முடியவில்லை. மூன்று ரூபாய்க்காக மூச்சிரைக்க, எல்லாரும் பார்க்க ஒரு தமிழனும் மலையாளியும் சண்டையில் ஈடுபட்டிருந்தோம்.

"முதல்லே தமிழ்நாட்டுலே இருக்கிற மலையாளிங்களை ஓட ஓட விரட்டணுண்டா பேமானி! கரையான் மாதிரி அரிச்சிட்டிருக்கீங்க தமிழ்நாட்டை நீங்க! ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுறா மாதிரி, அண்டிப்பொழைக்க வந்தவன் நீ, எங்களையே அதிகாரம் பண்ணுறியா? இந்த மூணு ரூபாயிலே நான் ஆண்டியாகப்போறதுமில்லே, நீ அரண்மனை கட்டப்போறதுமில்லே! இப்படி ஏமாத்திப்பொழைக்கிற பொழைப்புக்கு போயி பிச்சை எடுத்துச் சாப்பிடுடா! மலேரியாக் கொசுங்கடா மலையாளிங்க எல்லாரும்! அத்தனை பயலுவளையும் அடிச்சு விரட்டணுண்டா தமிழ்நாட்டை விட்டே!"

இவை நான் ஏசியதில், பிறருடன் பகிர்வதற்கு ஏற்ற வார்த்தைகள் மட்டுமே! எழுதாதது மிக அதிகம்!

அது ஒரு பொது இடம்; அருகில் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்; கைதட்டும் தூரத்தில் கடற்கரை ரயில்நிலையம் என்பதால் விஷயம் கைமீறிப்போனால், போலீஸ் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது; சகவியாபாரிகள் அந்த கொழுப்பு பிடித்த மலையாளிக்குத் துணையாகப் பேச வரலாம்; கைகலப்பில் கொண்டு போய் விடலாம் - இவை எதுகுறித்தும் கவலைப்படாமல், எனக்குள்ளிருந்து விழித்தெழுந்த கிராமத்தான் தனது ஒருநாள் பணிப்பளுவின் அழுத்தத்தையும், பலமுறை ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தந்த ஆக்கிரோஷத்திலும் அந்தக் கடைக்காரன் மீதிருந்த கோபத்தில் கேரளாவையும்,மலையாளிகளையும் வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தான்.

எனது உடல் கிடுகிடுவென்று நடுங்கிக்கொண்டிருப்பது எனக்குப் புரிந்தது. நான் மிகுந்த பதற்றத்தில் இருந்தேன் என்பது புரிந்தது. எனது கைகள் பரபரத்து ஏடாகூடமாக எதையாவது செய்து தொலைப்பதற்கு முன்னர், அங்கிருந்து நகர வேண்டும் என்று மீதமிருந்த சிறிதளவு விவேகம் என்னை எச்சரித்தது.

"உருப்பட மாட்டீங்கடா!" என்று கடைசியாக ஒரு சாபத்தை இட்டு விட்டு, கடற்கரை ரயில்நிலையத்துக்குள் நுழைந்தபோது, நான் வழக்கமாகப்போகிற தாம்பரம் வண்டி கிளம்பியிருக்கவே, அடுத்த நடைமேடையில் நின்றிருந்த செங்கல்பட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன்.

மலையாளிகள்!

திமிர் பிடித்த மலையாளிகள்!

உருப்படாத மலையாளிகள்!

மனதுக்குள்ளே கேரளாவையும் மலையாளிகளையும் சபித்துக்கொண்டேயிருக்கையில் ரயில் புறப்பட்டது.

இதுவரை மலையாளிகளினால் எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு கசப்பான அனுபவங்களும் ஒவ்வொன்றாக மீண்டும் நினைவுக்கு வந்தன. ரயில் வேகம்பிடிக்க பிடிக்க, மலையாளிகளின் மீதான எனது ஆத்திரமும் மென்மேலும் தீவிரமடைவது போலிருந்தது.

கடவுளின் தேசமாம்! மெத்தப்படித்த மேதாவிகளாம்! பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டேயிருந்தேன்.


எழும்பூர் ரயில்நிலயத்தில் வண்டிநின்றதும், எனக்கு எதிரே காலியாக இருந்த இருக்கைகளில் இரண்டு பெண்கள் வந்து அமர்ந்தனர். அசிரத்தையாக அவர்களை ஏறிட்டவன், அதிர்ந்து போனேன்.

கண்கொட்டாமல் பெண்களை வெறிப்பது அநாகரீகம் என்பது புரிந்திருந்தபோதிலும், அந்த இரண்டு பெண்களையும், அந்த ஆத்திரமான மனநிலையிலும் அவ்வப்போது தற்செயலாகப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டே வந்தேன். சற்றே எனது ஆத்திரம் தணிந்து போய், அந்த இரண்டு பெண்களையும் திருட்டுத்தனமாக நோட்டமிட்டுக்கொண்டு வந்தேன்.

விளம்பரமாடல்களாக இருப்பார்களோ? அதிலும் அந்தப் பெண்களில் சற்றே நிறம் மட்டாக இருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் தான் என்னவொரு திருத்தம்! அவளது முகமும், கண்களும் தான் எவ்வளவு அழகு! அவள் மட்டும் தமிழ்சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டால், இப்போது இருக்கிற கதாநாயகிகளெல்லாம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டி வந்து விடும் போலிருக்கிறதே!

எழும்பூரிலிருந்து மாம்பலம் வரையிலும் எப்படியும் ஒரு நூறு தடவையாவது அவர்கள் இருவரையும், குறிப்பாக அந்த மாநிறமான பெண்ணையும் பார்த்திருப்பேன் என்று தோன்றியது.

தற்செயலாக கீழே நோக்கியபோது, செக்கச்செவேலென்றிருந்த அந்தப் பெண்ணின் காலடியில்,என்னிடமிருந்ததைக் காட்டிலும் புராதனமான ஒரு செல்போன் விழுந்து கிடந்தது.


"எக்ஸ்க்யூஸ் மீ! உங்க செல்போன்!" அப்பாடா, பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

அந்தப் பெண் சட்டென்று கீழே பார்த்து விட்டு, "ஐயோ எண்டே கர்த்தாவே!" என்று பதறியபடி தனது செல்போனை எடுத்துக்கொண்டு, தனது கைப்பையில் வைத்து, ஜிப்பை இழுத்து மூடிவிட்டு என்னைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள்.

"தேங்க்யூ வெறி மச்!"

ஓ! மலையாளிப்பெண்ணா? அது தான் இவ்வளவு அழகாக, திருத்தமாக, செதுக்கி வைத்த சந்தனச்சிலைபோல பளபளவென்று மொழுமொழுப்பாக இருக்கிறாள்.

நீங்கள் என்னதான் சொல்லுங்கள், மலையாளப் பெண்களிடம் இருக்கிற மாதிரி இயற்கையான அழகை வேறு பெண்களிடம் பார்க்கவே முடியாது. அவர்களின் சருமத்தில் இருக்கிற ஜொலிப்பு இருக்கிறதே, சுத்தமான தங்கநிறம்! தலைமயிரின் அடர்த்தி மலையாளப்பெண்களுக்கு இருப்பதுபோல எவருக்கும் இருக்கவே முடியாது; காரணம், அவர்கள் தேங்காய் எண்ணை தவிர வேறு எதையும் உபயோகிக்கமாட்டார்களாமே? ஒல்லியாகவும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமல் பூசினாற்போல உடல்வாகு; இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் ஆயிற்றே மலையாளிகள்! உணவு கூட கப்பக்கிழங்கு போன்ற எளிதான சத்துள்ள ஆகாரம் தானே? உதட்டுச்சாயமோ, அபரிமிதமான ஒப்பனையோ இல்லாமல் கூட, அவர்கள் முகத்தில் தான் என்ன ஒரு அழகு? அவர்களது கண்களில் தான் என்ன ஒரு ஈர்ப்பு?

அதனால் தான் அந்தக் காலத்து பத்மினி தொடங்கி இந்தக்காலத்து அசின்,நயன்தாரா,நவ்யா நாயர்,கோபிகா,பாவனா,பத்மப்ரியா என்று பல மலையாள நடிகைகள் தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது கொடிகட்டிப் பறந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால்....

இந்த மலையாளிகள் இருக்கிறார்களே....! ஆஹா!

41 comments:

manjoorraja said...

ரொம்ப ஓவர்.

ஆமா அசின் போட்டோ மட்டும் தான் கிடைச்சுதா?

Ahamed irshad said...

மலையாளிகளைப் பத்தின உங்க கணிப்பு நூத்துக்கு நூறு சரி தல........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லாத்தான் இருக்கப்பு..
நானு கூட, என்னோட சூட்கேஸை ரெடி பண்ணிட்டேன்.. ( அங்க வந்து , அவனுககூட சண்டைய போட்டு, தமிழன் மானத்தை தலை நிமித்தி நிற்க்க....)

நல்ல வேளை.. என்னை காப்பத்தினே.. எண்ட குருவாயூரப்பா..

பிரபாகர் said...

அருமையான அனுபவக்கோர்வையும், அதற்கு ஏற்றார்போல் அழகான தலைப்பும்... சேட்டை! இது மாதிரி வெரைட்டியா எழுதுங்கள். ரொம்ப நல்லாருக்குங்க நண்பா!

பிரபாகர்.

அகல்விளக்கு said...

அய்யாகோ....

என்ன அவமானமிது....

சைவகொத்துப்பரோட்டா said...

மிக பொருத்தமான தலைப்பு!!!

ஹுஸைனம்மா said...

நான்கூட அறிவுரை சொல்லலாம்னு நெனச்சு (கிடைச்ச கேப்ல நாட்டாமையாகலாம்னுதான்) படிச்சா, அவ்வ்வ்வ்...

Chitra said...

ஜொள்ளு ஆற்றில், ஒரு சேட்டை வெள்ளம்.

malar said...

முதல் பாதியில் வெறுப்பு...

பின் பாதியில் ஜொள்ளா?

’’’’’அந்த மலையாளி என்னை ஒருமையில் அழைத்தது எனக்கு சுருக்கென்றது ’’’’

உண்மை.....

’’’மலையாளிகள்! தேங்காயையும், புழுங்கலரிசியையும், மரச்சீனிக்கிழங்கையும் தின்று தின்று திமிரெடுத்த மலையாளிகள்!’’’’

திமிருக்கு இப்படி ஒரு ரகசியம் இருக்கா

சிநேகிதன் அக்பர் said...

இதுக்குப்பேர்தான் அந்தர் பல்டி.

//கடவுளின் தேசமாம்! மெத்தப்படித்த மேதாவிகளாம்! பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டேயிருந்தேன். //

இந்த வரி வரைக்கும் சேட்டைக்காரன் என்ற மானஸ்தன் இருந்தார் அதன் பிறகு எங்கே போனார்? :)

நல்லாயிருக்கு சேட்டை. இந்த மலையாளிங்களே இப்படித்தான் பாஸூ, பசையுள்ள இடத்துல பம்முவாங்க. சாதாரண ஆட்கள்ட்ட திமிரா பேசுவணுங்க.

முகுந்த்; Amma said...

அண்ணாச்சி, மெட்ராசில எக்மோர் பக்கத்தில இப்போ புதுசா பெரிய ஆறு ஓடுதுன்னு சொன்னாங்க. இப்போ தானே புரியுது, அந்த ஆறு எங்க உற்பத்தி ஆச்சுன்னு. பார்த்துப்பா வெள்ளம் வந்துடப்போகுது.

நல்லா இருந்தது சேட்டை.

எல் கே said...

பாதி தாண்டினவுடனே நினச்சேன் இப்படி இருக்கும்னு

அன்பரசன் said...

கர்சீப் எடுத்து தொடச்சுக்கோங்க.

மசக்கவுண்டன் said...

எனக்கொண்ணு தெரிஞ்சாகணும். இந்த தமிழன்களுக்கு எதற்கெடுத்தாலும் ஏன் மூக்குக்கு மேல் கோபம் வருது?

பித்தனின் வாக்கு said...

ஆகா சேட்டை, தவறு உங்கள் பார்வையில் உள்ளது. மற்றவர்களிடம் உள்ளது. அவனாவது உங்களை ஊரு விட்டு ஊர் வந்து பொழைக்கின்றேம்மின்னு அடிக்காம உட்டான்.சென்னை தறுதலைகள் என்றால் கண்டிப்பாக அடித்து இருப்பார்கள். எல்லா இடத்திலும்,எல்லா மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு.
ஒரு மலையாளி, இன்னேரு மலையாளி வரும் வரை நல்லவந்தான். இரண்டு பேர் சேர்ந்துட்டால்தான் அவங்க குணம் தெரியும். ஆனாலும் ஜொள்ளு பத்தி சொல்ல முடியாது. ஏன்னா மீ டூஊஊஊஉ

மாதேவி said...

எரிச்சல் ,ரசனை இரண்டும் சேட்டையின் கைகளில் அருமை.

settaikkaran said...

//ரொம்ப ஓவர்.//

ஹி..ஹி! மிக்க நன்றிண்ணே! :-))

//ஆமா அசின் போட்டோ மட்டும் தான் கிடைச்சுதா?//

ஒரு சோறுபதமுன்னு விட்டுட்டேன்! :-)

settaikkaran said...

//மலையாளிகளைப் பத்தின உங்க கணிப்பு நூத்துக்கு நூறு சரி தல........//

கசப்பான அனுபவங்கள் பல! இன்னும் முடிந்தபாடில்லை; தொடர்கின்றன அந்த அவமானங்கள்!

மிக்க நன்றி!!

settaikkaran said...

//நல்லாத்தான் இருக்கப்பு..//

மிக்க நன்றிண்ணே!

//நானு கூட, என்னோட சூட்கேஸை ரெடி பண்ணிட்டேன்.. ( அங்க வந்து , அவனுககூட சண்டைய போட்டு, தமிழன் மானத்தை தலை நிமித்தி நிற்க்க....)//

தொண்டை வற்ற நான் தான் கத்திட்டிருந்தேன். ஒரு தமிழன் கூட ’என்ன விஷயம்?’னு கூட கேட்கலேண்ணே!

//நல்ல வேளை.. என்னை காப்பத்தினே.. எண்ட குருவாயூரப்பா..//

:-)))))))))

settaikkaran said...

//அருமையான அனுபவக்கோர்வையும், அதற்கு ஏற்றார்போல் அழகான தலைப்பும்..//

இந்த சம்பவம் நடந்து பத்துநாட்களாகியும், இப்போது தான் எழுதுகிற துணிச்சல் வந்தது. ஒருவேளை அன்றே எழுதியிருந்தால், இன்னும் கடுமையான சொற்பிரயோகங்கள் இருந்திருக்கலாம். நல்ல வேளை!

//சேட்டை! இது மாதிரி வெரைட்டியா எழுதுங்கள். ரொம்ப நல்லாருக்குங்க நண்பா!//

அவசியம் எழுதுகிறேன் நண்பரே! மிக்க நன்றி!!

settaikkaran said...

//அய்யாகோ....

என்ன அவமானமிது....//

ஆமாண்ணே! மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமானாம் நம் மானமுள்ள தமிழருக்கு இப்படியோரு சோதனையா?

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

//மிக பொருத்தமான தலைப்பு!!!//

மிக்க நன்றிங்க

settaikkaran said...

//நான்கூட அறிவுரை சொல்லலாம்னு நெனச்சு (கிடைச்ச கேப்ல நாட்டாமையாகலாம்னுதான்) படிச்சா, அவ்வ்வ்வ்...//

நாங்களெல்லாம் திருத்த முடியாத ஜென்மங்கள்! :-))))
நல்லவேளை, நீங்க நாட்டாமையாகாம தப்பிச்சிட்டீங்க!

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//ஜொள்ளு ஆற்றில், ஒரு சேட்டை வெள்ளம்.//

உண்மை தானுங்க! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறேனே! நான் எவ்வளவு நல்லவன் பார்த்தீங்களா? :-))))))

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//முதல் பாதியில் வெறுப்பு...
பின் பாதியில் ஜொள்ளா?//

பின்பாதி கூட இல்லை; கடைசி மூன்று பத்திகள் மட்டுமே! :-)))

//திமிருக்கு இப்படி ஒரு ரகசியம் இருக்கா//

இதுலே ரகசியம் எதுவும் இல்லீங்க! அவங்க சாப்பிடுற உணவுலே கொலாஸ்ட்ரால் ரொம்ப அதிகம்! :-)))))

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//இதுக்குப்பேர்தான் அந்தர் பல்டி.//

ஹி..ஹி! நெசந்தானுங்க!!

//இந்த வரி வரைக்கும் சேட்டைக்காரன் என்ற மானஸ்தன் இருந்தார் அதன் பிறகு எங்கே போனார்? :)//

ஆமாம், எங்கே போனார்? :-))))))))

//நல்லாயிருக்கு சேட்டை. இந்த மலையாளிங்களே இப்படித்தான் பாஸூ, பசையுள்ள இடத்துல பம்முவாங்க. சாதாரண ஆட்கள்ட்ட திமிரா பேசுவணுங்க.//

சகிக்கிற கூட்டம் இருக்கிற வரையிலும், இவங்க இப்படித்தான் இருப்பாங்க! :-)

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//அண்ணாச்சி, மெட்ராசில எக்மோர் பக்கத்தில இப்போ புதுசா பெரிய ஆறு ஓடுதுன்னு சொன்னாங்க. இப்போ தானே புரியுது, அந்த ஆறு எங்க உற்பத்தி ஆச்சுன்னு. பார்த்துப்பா வெள்ளம் வந்துடப்போகுது.//

நல்ல வேளை, அந்த ஆறு எப்பவுமே கரைபுரண்டு ஓடினதா வரலாற்று ஆய்வாளர்கள் கூட சொன்னதில்லே! அதுனாலே ஆபத்தில்லே! :-)))

//நல்லா இருந்தது சேட்டை.//

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

//பாதி தாண்டினவுடனே நினச்சேன் இப்படி இருக்கும்னு//

இது தானே தமிழ்நாட்டுலே நடக்குது? அதுனாலே உங்களுக்கும் புரிஞ்சதுலே பெரிய ஆச்சரியம் இல்லீங்க! :-))

மிக்க நன்றிங்க!

settaikkaran said...

//கர்சீப் எடுத்து தொடச்சுக்கோங்க.//

உண்மைதானுங்க! நான் வெளிப்படையா சொன்னதுனாலே, கர்சீப்பாலே துடைச்சிக்கணும். வெளியே சொல்லாதவங்களை நினைச்சாத்தான் பாவமாயிருக்கு! :-))

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//:)//

:-)

settaikkaran said...

//எனக்கொண்ணு தெரிஞ்சாகணும். இந்த தமிழன்களுக்கு எதற்கெடுத்தாலும் ஏன் மூக்குக்கு மேல் கோபம் வருது?//

ஆமாம் கவுண்டரே! ஏன் கோபம் வருது நமக்கு? அவனுங்க பாட்டுக்கு மலையாள சினிமாவுலே நம்மளை வில்லனாக் காட்டட்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே தமிழைக் கிண்டல் பண்ணட்டும். நம்மளைப் பாண்டின்னு சொல்லட்டும். தமிழச்சியை தமிழத்தின்னு சொல்லட்டும். நம்ம வீட்டுத்திண்ணையிலே படுத்திட்டு நம்ம வீட்டுக்குள்ளேயே துப்பட்டும்! ஏன் கோபம் வருது நமக்கு? வரக்கூடாதுண்ணே! :-))

மிக்க நன்றி!

settaikkaran said...

//ஆகா சேட்டை, தவறு உங்கள் பார்வையில் உள்ளது. மற்றவர்களிடம் உள்ளது. //

இருக்கலாம்! இப்படியொரு சமாதானம் சொல்லிக்கொண்டு சகித்துக்கொண்டு போவது நல்லது தான்! :-)


//அவனாவது உங்களை ஊரு விட்டு ஊர் வந்து பொழைக்கின்றேம்மின்னு அடிக்காம உட்டான்.சென்னை தறுதலைகள் என்றால் கண்டிப்பாக அடித்து இருப்பார்கள்.//

ஒரு தமிழன் பிற மாநிலத்தில் போய் இதுபோல அடாவடி பண்ண முடியுமா என்ற கேள்வி எழுகிறதே! பரவாயில்லை, தமிழன் அடிவாங்கவே பிறந்தவன், உள்ளூரிலும் சரி,வெளியூரிலும் சரி!

//எல்லா இடத்திலும்,எல்லா மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு.
ஒரு மலையாளி, இன்னேரு மலையாளி வரும் வரை நல்லவந்தான். இரண்டு பேர் சேர்ந்துட்டால்தான் அவங்க குணம் தெரியும்.//

ஆனால், அவர்களை சகித்துக்கொண்டிருப்பதில் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது. :-))

//ஆனாலும் ஜொள்ளு பத்தி சொல்ல முடியாது. ஏன்னா மீ டூஊஊஊஉ//

ஹா..ஹா..ஹா! மிக்க நன்றிங்க!!! :-))))

Rettaival's Blog said...

அரசாங்கம் என்னமோ ஒரு ட்ரிக் வெச்சிருக்கு.. ஆனா சொல்லமாட்டிங்கிறானுக சாரே..

**********************************

சொல்லிட்டா அந்த ஃபொட்டோ ல நீயில்ல உக்காந்திருப்ப...!

பிரேமா மகள் said...

சேட்டை நல்ல பதிவு..பட் இது உங்களின் மீதிருந்த மதிப்பை எடை போட்டு பார்க்க வைக்கிறது.. மலையாளியை திட்டுகீறீர்கள். சரி... அவன் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த மலையாளிகளையும் திட்ட வேண்டாமே? அவன் திறமை.. கிடைத்த இடத்தில் பிழைத்துக் கொள்கிறான்.. தமிழன் போல ஜால்ரா அடித்து வீணாகப் போகவில்லையே?

மலையாளப் பெண்கள் அழகுதான், அதே சமயம்.. சரி விடுங்க...

நான் மலையாளிகளுக்கு சப்போட் செய்வதாக நினைக்காதீர்கள்.. ஈரோடு மாவட்டத்தில் கோலோச்சியிருக்கும்... அக்மார்க் .... ஜாதி குடும்பத்து பெண்..

இந்த கமெண்ட்.. உங்கள் மனதை புண் படுத்தினால் தாராளமாக டெலிட் செய்து விடலாம்..

manjoorraja said...

எல்லா மலையாளிகளும் மோசமானவர்களல்ல. மலையாளிகள் மட்டுமல்ல. எல்லா மக்களிலும் மோசமானவர்களும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

manjoorraja said...

பிரேமா மகள் சொல்வதை ஆமோதிக்கிறேன்

settaikkaran said...

//சேட்டை நல்ல பதிவு..//

மிக்க நன்றி!

//பட் இது உங்களின் மீதிருந்த மதிப்பை எடை போட்டு பார்க்க வைக்கிறது..//

ஏனுங்க? :-)

ஒரே நாளில், ஒரு மணிநேரத்துக்குள், ஒரு விஷயத்தில் இரு எதிரும் புதிருமான கருத்துக்களை நான் கொள்ள வேண்டிய ஒரு வினோதமான அனுபவத்தையே இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனது எதிர்மறையான கருத்தின் தீவிரத்தை அப்படிக்கு அப்படியே எழுதியிருக்கிறேன்.

இதையே நான் வழக்கம்போல நிறைய நகைச்சுவை கலந்து, வேறு யாருக்கோ நிகழ்ந்த சம்பவமாகக் காண்பித்து, வார்த்தைகளுக்கு முலாம் பூசி, எழுதியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்திருந்தால், என்னை நானே மதித்திருக்க முடியாமல் போயிருக்குமே!


//மலையாளியை திட்டுகீறீர்கள். சரி... அவன் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த மலையாளிகளையும் திட்ட வேண்டாமே? அவன் திறமை.. கிடைத்த இடத்தில் பிழைத்துக் கொள்கிறான்..//

எப்படி எல்லா மலையாளத்துப் பெண்களும் அழகிகள் இல்லையோ, அதே போல எல்லா மலையாளிகளும் மோசமானவர்களாக இருக்க முடியாது என்பது தானே இந்தப் பதிவின் கருவே? :-) அதற்காகத் தானே, இப்படியொரு தலைப்பு? இப்படியொரு படம்...?

//தமிழன் போல ஜால்ரா அடித்து வீணாகப் போகவில்லையே?//

ஆஹா! இப்போது நீங்கள் செய்வது, சொல்வது மட்டும் என்னவாம்? தமிழர்கள் அத்தனை பேரும் ஜால்ரா போடுகிறார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்? நீங்களும் நானும் யாருக்கு ஜால்ரா போடுகிறோம்? :-)))))))))


//மலையாளப் பெண்கள் அழகுதான், அதே சமயம்.. சரி விடுங்க...//

சரி, விட்டுட்டேன்! நீங்கள் சொல்ல விரும்பாததை நான் புரிந்து கொண்டேனுங்கோ! :-))))

//நான் மலையாளிகளுக்கு சப்போட் செய்வதாக நினைக்காதீர்கள்.. ஈரோடு மாவட்டத்தில் கோலோச்சியிருக்கும்... அக்மார்க் .... ஜாதி குடும்பத்து பெண்..//


நல்லாத் தெரியுங்கோ! :-)) நான் வசிப்பது சென்னையாயிருப்பினும், எனது வேர்கள் இருப்பது எட்டயாபுரத்துக் கரிசல்மண்ணுங்க!

//இந்த கமெண்ட்.. உங்கள் மனதை புண் படுத்தினால் தாராளமாக டெலிட் செய்து விடலாம்..//

"இன்னா வேண்ணாலும் எழுதலாம்,"னு போட்டுட்டு டிலீட் பண்ணினா, சேட்டைக்காரனோட பல்பு ஃபியூஸ் ஆகிறாது? :-)

உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன்! அதே சமயம், அந்த சம்பவம், அதைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட மூர்க்கத்தனமான ஆத்திரம், அதுவே தலைகீழாக மாறிய வினோதம் - இவற்றை வெளிப்படுத்த எனக்குத் தெரிந்தவகையில் எழுதியிருக்கிறேன். அவ்வளவே!

உங்களது கருத்தில் இருக்கிற ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்கும், உங்களது பொறுமைக்கும், தொடரும் உங்கள் ஆதரவுக்கும், இனியும் தொடரப்போகும் ஆதரவுக்கும் நன்றிங்க! :-)))))))

settaikkaran said...

//எல்லா மலையாளிகளும் மோசமானவர்களல்ல. மலையாளிகள் மட்டுமல்ல. எல்லா மக்களிலும் மோசமானவர்களும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

மஞ்சூர் அண்ணா! எப்படி மலையாளப் பெண்களும் அழகானவர்கள் இல்லையோ, அதே போல எல்லா மலையாளிகளும் மோசமானவர்கள் அல்ல என்பதே இந்தப் பதிவின் கரு. மாறுபட்ட எண்ணங்களின் தாக்கத்தால் முன்முடிவுகளுக்கு வருகிறோம் என்பதால் தான், "மனம் ஒரு குரங்கு" என்று தலைப்பும், நன்மையும், தீமையும் எல்லா இடத்திலும் இருக்கும் என்பதை உணர்த்தவே(நீங்கள் கூறியது தான்!), பாஸிடிவ், நெகடிவ் இரண்டும் கலந்த ஒரு படத்தையும் போட்டிருந்தேன்.

மிக்க நன்றிண்ணே!

settaikkaran said...

//பிரேமா மகள் சொல்வதை ஆமோதிக்கிறேன்//

அண்ணே! பிரேமா மகள் அவர்களுக்கும் பதில் எழுதியிருக்கிறேன். தயை கூர்ந்து வாசிக்கவும்.

பிரேமா மகள் said...

சேட்டைக்காரன் said...
//உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன்! அதே சமயம், அந்த சம்பவம், அதைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட மூர்க்கத்தனமான ஆத்திரம், அதுவே தலைகீழாக மாறிய வினோதம் - இவற்றை வெளிப்படுத்த எனக்குத் தெரிந்தவகையில் எழுதியிருக்கிறேன். அவ்வளவே!//


உங்கள் மனதில் ஏற்பட்ட வருத்தமும், அதனால் ஏற்பட்ட பதிவும் புரிகிறது சேட்டை.. அதே சமயம், எதேனும் மலையாளி உங்கள் பதிவை படிக்கும் போது மனம் வருத்தப்படக் கூடாது என்பது என் எண்ணம்.. தனிப்பட்ட முறையில் நம் எழுத்து யாரையும் காயப்படுத்தக் கூடாது.. எழுத்துச் சுகந்திரம் இருக்கும் நாட்டில்தான் நாம் பிறந்திருக்கிறோம்.. அதே சமயம் நம் சுகந்திரத்தின் எல்லை வரையறுக்கப்படவில்லை.. அவ்வளவுதான்... மற்றபடி உங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவங்கள், கோவையில் நான் படிக்கும் போது எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.. ஆக உங்கள் பதிவுக்கு தைரியமாய் ஓட்டுப் போடுகிறேன்..

settaikkaran said...

//உங்கள் மனதில் ஏற்பட்ட வருத்தமும், அதனால் ஏற்பட்ட பதிவும் புரிகிறது சேட்டை.. அதே சமயம், எதேனும் மலையாளி உங்கள் பதிவை படிக்கும் போது மனம் வருத்தப்படக் கூடாது என்பது என் எண்ணம்..//

எட்டு வருடங்களுக்கும் மேலாக என்னுடைய சுகதுக்கங்களில் பங்கெடுக்கும் எனது ஆருயிர் நண்பனும் மலையாளியே! :-))


//தனிப்பட்ட முறையில் நம் எழுத்து யாரையும் காயப்படுத்தக் கூடாது.. எழுத்துச் சுகந்திரம் இருக்கும் நாட்டில்தான் நாம் பிறந்திருக்கிறோம்.. அதே சமயம் நம் சுகந்திரத்தின் எல்லை வரையறுக்கப்படவில்லை.. அவ்வளவுதான்...//

மிகவும் உண்மை! முழுமையாக ஒப்புக்கொள்ளுகிறேன்.


//மற்றபடி உங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவங்கள், கோவையில் நான் படிக்கும் போது எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.. ஆக உங்கள் பதிவுக்கு தைரியமாய் ஓட்டுப் போடுகிறேன்..//

ஆஹா! உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும் எனது மனமார்ந்த நன்றி! :-)))