Tuesday, April 13, 2010

சுக்குக்கஷாயம் with சேட்டை

பகுதி.01

உலகெங்கும் உள்ள தமிழர்களே! சித்திரைத்திங்கள் முதல்நாளாகிய இன்று, சேட்டை டிவி உங்களுக்காக வழங்குகிற சிறப்பு நிகழ்ச்சியே இந்த ’சுக்குக்கஷாயம் வித் சேட்டை.’

உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் பல இமாலயச்சாதனைகளைச் செய்யப்போகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து வந்திருக்கிற முதல் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? தள்ளாத வயதிலும் தளராமல் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரபல ஹாலிவுட் நடிகை புளிசர்பத் பாய்லர் அவர்கள். அவர்களை வருக வருகவென்று வரவேற்கிறோம்.

சே.கா:வணக்கம் மிஸ் புளிசர்பத் பாய்லர் அவர்களே

மிஸ் பாய்லர்: வணக்கம் சேட்டை!

சே.கா: கடந்த ஒருவாரமாக உங்களது ஒன்பதாவது திருமணம் குறித்து பல வதந்திகள் உலவிட்டிருக்கு. இது பற்றி எங்க சேட்டை டிவி நேயர்களுக்கு நீங்க ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

மிஸ் பாய்லர்: கண்டிப்பாக! இதெல்லாம் சுத்த வதந்தி! எனக்கும் ஒன்பதாம் நம்பருக்கும் ஆகாதுன்னு ஜோசியர் சொல்லியிருக்காரு. அதுனாலே தான் என் செருப்பு சைஸ் கூட ஒன்பதாயிருந்தாலும் ஒரு காலிலே அஞ்சாம் நம்பரும் இன்னொரு காலிலே நாலாம் நம்பரும் போட்டுட்டிருக்கேன்.

சே.கா: இப்படி திடீர்னு வதந்தி பரவ என்ன காரணம்?

மிஸ் பாய்லர்: என்னத்தைச் சொல்ல? நான் கடைசியா 1991-லே தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் இருபது வருஷமா நான் கல்யாணமே பண்ணிக்கலியா, அந்த வயித்தெரிச்சலிலெ இப்படியொரு புரளியைக் கிளப்பிட்டாங்க!

சே.கா: நீங்க எவ்வளவோ படத்துலே நடிச்சிருக்கீங்க! ரெண்டு ஆஸ்கார் வாங்கியிருக்கீங்க! எட்டுதடவை கல்யாணம் பண்ணி எட்டு பேரை டைவோர்ஸ் பண்ணியிருக்கீங்க!

மிஸ் பாய்லர்: தப்பு தப்பு! எட்டு தடவை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், ஏழு பேரைத் தான் டைவோர்ஸ் பண்ணியிருக்கேன். ரிச்சர்ட் மட்டனை மட்டும் ரெண்டு தடவை கல்யாணம் பண்ணி ரெண்டையும் டைவோர்ஸ் பண்ணிட்டேன்! ஆக மொத்தம் கணக்கு ஏழு தலை தானே ஆகுது!

சே.கா: சரி போகட்டும், நீங்க யார் யாரை எப்போ கல்யாணம் பண்ணினீங்க? எப்போ டைவோர்ஸ் பண்ணினீங்கன்னு கரெக்டா சொல்ல முடியுமா?

மிஸ் பாய்லர்: முன்னாடியே சொல்லியிருந்தா என் செக்ரட்டரி கிட்டே சொல்லி ஒரு பிரிண்ட்-அவுட் எடுத்திட்டு வந்திருப்பேனே? நான் கணக்கிலே கொஞ்சம் வீக்!

சே.கா: பரவாயில்லே! குத்துமதிப்பா சொல்லுங்க!

மிஸ் பாய்லர்: முதல்லே நிக்கி ஜில்டன்! 1950-னு நினைக்கிறேன். அவரை 1951-லே டைவோர்ஸ் பண்ணிட்டேன்.

சே.கா: ஓஹோ! ஒரே ஒரு வருஷம் தானா?

மிஸ் பாய்லர்: அவ்வளவு தான்! அவரை 51-லே டைவோர்ஸ் பண்ணிட்டு, 52-லே மைக்கேலைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

சே.கா: பரவாயில்லையே! இவ்வளவு வருஷமானாலும் புருஷன் பேரை நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே?

மிஸ் பாய்லர்: தேங்க்ஸ்! அவரு ரொம்ப நல்ல மாதிரி! அதுனாலே அவரை அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் டிஸ்மிஸ் பண்ணினேன்...அதாவது டைவோர்ஸ் பண்ணினேன்.

சே.கா: ஓஹோ! அப்புறம் யாரை டைவோர்ஸ் பண்ணினீங்க? சாரி, யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?

மிஸ் பாய்லர்: மூணாவதா மைக்கேல்!

சே.கா: ரெண்டாவது புருஷன் மைக்கேலுன்னீங்க கொஞ்ச முன்னாலே!

மிஸ் பாய்லர்: அந்த மைக்கேல் வேறே; இந்த மைக்கேல் வேறே! முதல் மைக்கேல் பேரு மைக்கேல் வெல்டிங்; இரண்டாவது மைக்கேல் பேரு மைக்கேல் பெயின்டிங்!

சே.கா: சரிதானுங்க!

மிஸ் பாய்லர்: எங்கே விட்டேன்? மறந்திட்டேன்.

சே.கா: மூணாவது கல்யாணம், ரெண்டாவது மைக்கேல்லே விட்டீங்க!

மிஸ் பாய்லர்: சரிரி! ரெண்டாவது மைக்கேல்! .ரெண்டாவது...மைக்கேல்....அவரை...எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? ஒரு நிமிஷம் ஸ்தூ....! சரியா நினைவுபடுத்திச் சொல்லுறேன். 50லே அவரு.......அப்புறம் அவரை 51-லே டைவோர்ஸ் பண்ணினேன்! அதுக்கப்புறம் 52லேருந்து 57 வரைக்கும் இவரு! இவரை 57 பிப்ருவரியிலே டைவோர்ஸ் பண்ணினேன். அப்படீன்னா, அடுத்த கல்யாணம் மார்ச்சிலேயா ஏப்ரலிலேயா இல்லை பிப்ருவரியிலா?

சே.கா: என் கிட்டேயா கேட்கறீங்க?

மிஸ் பாய்லர்: ஹி..ஹி! இல்லே..எனக்கு நானே பேசிட்டிருக்கேன். யோசிக்கிறேன் இல்லியா..?

சே.கா: ஒண்ணு பண்ணுவோமா? நீங்க நல்லா யோசியுங்க! அதுவரைக்கும் ஒரு சிறிய விளம்பர இடைவேளை விட்டிரலாமா?

மிஸ் பாய்லர்: ஓ யெஸ்!

சே.கா: சேட்டை டிவி நேயர்களே! ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்குப்பிறகு ’சுக்குக்கஷாயம் வித் சேட்டை,’ தொடரும்!

விளம்பரம்!

கணவனின் தொல்லையா? மாமியார் கொடுமையா? நாத்தனார் நக்கலா? கொழுந்தியாள் கொழுப்பா? ஒரு மணிநேரத்தில் உடனடி விவாகரத்து வேண்டுமா? உடன் அணுகவும்! விவாகரத்து வெங்கடசாமி பி.ஏ.பி.எல்! தொலைபேசி எண்: 12345 00000. ஆடிமாதத்தள்ளுபடியும் உண்டு.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

பகுதி.02

சே.கா: வெல்கம் பேக் டு சுக்குக்கஷாயம் வித் சேட்டை! பிரபல ஹாலிவுட் நடிகை புளிசர்பத் பாய்லர் பல சுவாரசியமான புள்ளிவிபரங்களை, அதாவது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொடருவோமா? மிஸ் பாய்லர்! முதல் கணவர் ஹில்டனோட ஒரு வருஷம், இரண்டாவது கணவர் மைக்கேலோட அஞ்சு வருஷம் இருந்திட்டு டைவோர்ஸ் பண்ணினதைப் பற்றிக் குறிப்பிட்டீங்க! இப்போ மூணாவது கணவர் மைக்கேலே எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?

மிஸ் பாய்லர்: ஞாபகம் வந்திருச்சு! 1957-ம் வருஷம் ஜனவரி மாசம் முதலாம் மைக்கேலை டைவோர்ஸ் பண்ணிட்டு, பிப்ருவரி மாசம் இரண்டாம் மைக்கேலைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

சே.கா: ஓஹோ! ஒரு மாசம் தான் இடைவெளி!

மிஸ் பாய்லர்: இல்லீங்க, முதலாம் மைக்கேலை ஜனவரி இருபத்தியாறாம் தேதி டைவோர்ஸ் பண்ணிட்டு, இரண்டாம் மைக்கேலை பிப்ருவரி ரெண்டாம் தேதி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஜஸ்ட் ஒரு வாரம் தான் இடைவெளி!

சே.கா: இதைப் பார்த்துட்டு யாராவது 23-ம் மைக்கேல்னு படம் எடுக்காம இருந்தா சரி! போகட்டும், உங்க மூணாவது புருஷனான இரண்டாவது மைக்கேலோட எத்தனை வருஷம் வாழ்க்கை நடத்தினீங்க?

மிஸ் பாய்லர்: ஜஸ்ட் ஒரு வருஷம்! 1958 மார்ச்சுலே அவரையும் டைவோர்ஸ் பண்ணிட்டேன்.

சே.கா: ஓஹோ! சரி, அடுத்த கல்யாணம் எவ்வளவு நாள் கழிச்சு? ஒருவாரமா பத்துநாளா?

மிஸ் பாய்லர்: இல்லே இல்லே! இந்தவாட்டி ரெண்டுமாசம் கழிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 1958 மே மாசம் தான் அடுத்த கல்யாணம்.

சே.கா: சரிதான், கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிராச்சே! ரெண்டு கல்யாணத்துக்கு நடுவிலே ரெண்டு மாசம் கேப் கூட இல்லாட்டி எப்படி?

மிஸ் பாய்லர்: கரெக்ட்!

சே.கா: அவர் பேரு என்னங்க? நாலாவது கணவர் பேரு?

மிஸ் பாய்லர்: அவரோட பேரு...வந்து..ஒரு விளம்பர இடைவெளி விடலாமா?

சே.கா: அதெல்லாம் வேண்டாம். நான் வேண்ணா க்ளூ தரட்டுமா? உங்க நாலாவது கணவரோட முதல் பெயருக்கு மூணு எழுத்து..சரியா?

மிஸ் பாய்லர்: "----------"

சே.கா: "முதல் எழுத்து ’’! ஞாபகம் வருதா..?"

மிஸ் பாய்லர்: "-----------"

சே.கா: "கடைசி எழுத்து ’டி’. இப்போ சொல்ல முடியுமா..?"

மிஸ் பாய்லர்: "------------"

சே.கா: "நடு எழுத்து "ட்"! இப்பவாவது சொல்லிடுங்க! இதுக்கு மேலே க்ளூ கொடுக்க முடியாது!"

மிஸ் பாய்லர்: "ஓ! எட்டி! எட்டி குக்கர்!"

சே.கா: "பார்த்தீங்களா? நீங்க கண்டுபிடிப்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்!"

மிஸ் பாய்லர்: "ஆமா ஆமா! எட்டி குக்கரை 1959- மே மாசம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் 1964-ம் வருஷம் வரைக்கும் அவரை டைவோர்ஸே பண்ணலே!"

சே.கா: "ஒரு நிமிஷம்! நீங்க சொல்லுறதை வச்சுப் பார்த்தா முதல் கல்யாணமும், மூணாவது கல்யாணமும் தலா ஒரு வருஷம், இரண்டாவது கல்யாணமும், நாலாவது கல்யாணமும் தலா அஞ்சு வருஷம் தாக்குப் பிடிச்சிருக்கு! ஒரு ஃபார்முலா மாதிரி வச்சிட்டிருந்திருக்கீங்க!"

மிஸ் பாய்லர்: "கரெக்டா சொன்னீங்க, அதுனாலே தான் அதே மாதிரி ஆறாவது கல்யாணமும் அஞ்சு வருஷமாவது நீடிக்கணுமேன்னு அஞ்சாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

சே.கா: "நியாயமான ஆசைதான்! அஞ்சாவது கல்யாணம் யார் கூட? எப்போ நடந்தது?"

மிஸ் பாய்லர்: "எட்டி குக்கரை டைவோர்ஸ் பண்ணிட்டு அடுத்த பத்தாவது நாளே ரிச்சர்ட் மட்டனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

சே.கா: "சபாஷ்! அவரையும் ஒரு வருஷம் கழிச்சு டைவோர்ஸ் பண்ணிட்டீங்களா?"

மிஸ் பாய்லர்: "இல்லியே! அது ஒரு சோகக்கதை!"

சே.கா: "ஏன்? என்னாச்சு?"

மிஸ் பாய்லர்: "அந்தாளு கூட பத்துவருஷம் டைவோர்ஸே இல்லாமக் குப்பை கொட்டினேன்."

சே.கா: "த்சு..த்சு! ஆனாலும் ஆண்டவன் அவரை இப்படி சோதிச்சிருக்கக் கூடாது!"

மிஸ் பாய்லர்: "என்னது?"

சே.கா: "அதாவது உங்களை இப்படிச் சோதிச்சிருக்கக் கூடாதுன்னு சொல்ல வந்தேன். போகட்டும், அவரை எதுக்கு டைவோர்ஸ் பண்ணினீங்க?"

மிஸ் பாய்லர்: "பின்னே என்னங்க? அதுவரைக்கும் சரியா அஞ்சு வருஷமானா நான் டைவோர்ஸ் பண்ணிடுவேன்னு ஒரு இமேஜ் இருந்ததே! அதைக் கெடுத்துக்கலாமா?"

சே.கா: "நியாயமான கோரிக்கைதான்! மேலே சொல்லுங்க!"

மிஸ் பாய்லர்: "1964-லே ரிச்சர்ட் மட்டனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, 1974-லே டைவோர்ஸ் பண்ணினேன். ஆனா, என்னோட துரதிருஷ்டத்தைப் பாருங்களேன். அடுத்த ஒரு வருஷத்துக்கு என்னை யாருமே கல்யாணம் பண்ணிக்கலே!"

சே.கா: "அட பாவமே! ஒரு வருஷமா ஒரு கல்யாணமோ ஒரு டைவோர்ஸோ கூட இல்லாம ரொம்ப சிரமப்பட்டிருப்பீங்களே? அப்புறம் என்ன பண்ணினீங்க?"

மிஸ் பாய்லர்: "என்ன பண்ணுறது? திரும்பவும் ரிச்சர்ட் மட்டனையே 1975-லே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

சே.கா: "ஐயோ பாவம்! இப்போ உங்களோட ஃபார்முலா படி அஞ்சு வருஷம் டைவோர்ஸ் பண்ணாம இருந்திருக்கணுமே?"

மிஸ் பாய்லர்: "இல்லையே! அந்தக் கல்யாணம் ஒரு வருஷம் தான் தாக்குப்பிடிச்சுது! ஜூலை 1976-லே டைவோர்ஸ்!"

சே.கா: "ஹை! அப்போ அடுத்த கல்யாணம் டிஸம்பர் 1976-லே தானே?"

மிஸ் பாய்லர்: "அட ஆமாம், எப்படிக் கண்டு பிடிச்சீங்க?"

சே.கா: "இதென்ன பெரிய கம்பசூத்திரமா? ப்ரைமரி ஸ்கூல் குழந்தைகூட சொல்லிடும்! சரி நீங்க ஏழாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே? அவர் பேர் என்ன?"

மிஸ் பாய்லர்: "அவரு பேரு ஜான் மோர்னர்!அவரை 1982-லே தான் டைவோர்ஸ் பண்ணினேன்."

சே.கா: "பரவாயில்லை, இவருக்குக் கூட ஒரு வருஷம் அதிகம்..புரோபேஷன் எக்ஸ்டெண்டு பண்ணிட்டீங்களோ!"

மிஸ் பாய்லர்: "ஹி..ஹி! ஆமாம்!"

சே.கா: "அப்புறம் கடைசியாத் தான் லாரின்னு ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க இல்லியா?"

மிஸ் பாய்லர்: "ஆமாம்! 1991-ம் வருஷம் அக்டோபர் மாசம் 6-ம் தேதி லாரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

சே.கா: "அப்பாடா! தெளிவா ஞாபகம் வச்சிருக்கீங்களே!"

மிஸ் பாய்லர்: "எப்படி மறக்க முடியும்? அது தானே கடைசியாப் பண்ணிக்கிட்ட கல்யாணம்?"

சே.கா: "கரெக்ட்! ஆனா எதுக்கு ஒரு கட்டிட மேஸ்திரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

மிஸ் பாய்லர்: "என்ன பண்ண? எனக்கும் வயசாயிருச்சு, என் வீடும் பழசாயிடுச்சு! அடிக்கடி வீட்டுலே ரிப்பேராயிட்டிருந்ததா? அதான் பேசாம ஒரு மேஸ்திரியையே கல்யாணம் பண்ணிக்கிட்டா கொத்தனாருக்குக் கொடுக்கிற கூலியாவது மிஞ்சுமேன்னு நினைச்சேன். ஆனா ஒண்ணு, அவரையும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் டைவோர்ஸ் பண்ணினேன்."

சே.கா: "எவ்வளவு பெரிய விஷயம்? இந்த விஷயத்துலே உங்களுக்கு ஏழை பணக்காரன்கிற வித்தியாசமே இல்லை போலிருக்கு! எல்லாரையும் ஒரே மாதிரி நடத்தியிருக்கீங்க!"

மிஸ் பாய்லர்: "ஆமாமா! அமெரிக்காவுலே நாங்க ஆம்பிளைங்களுக்கு சம உரிமை கொடுத்திருக்கோமே?"

சே.கா:"அதெல்லாம் சரி! இந்த வயசுக்கு மேலே இந்தியாவுக்கு வரணுமுன்னு ஏன் தோணிச்சு?"

மிஸ் பாய்லர்: "அது வேறே ஒண்ணுமில்லே. இந்தியாவிலே ஒரு தாத்தாவும் பாட்டியும் எழுபது வருசமா டைவோர்ஸே பண்ணிக்காம ஒத்துமையா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த ரகசியத்தைக் கண்டு பிடிக்கலாமேன்னு தான் வந்தேன்."

சே.கா: "கண்டுபிடிச்சீங்களா?"

மிஸ் பாய்லர்: "ஓ! அதாவது இந்தியாவிலே கல்யாணமுன்னு நாள் பூரா பண்ணுறாங்க. சில ஊருங்கள்ளே ரெண்டு நாள் கூட பண்ணுறாங்களாம். இப்படிப்பண்ணினா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு யாருக்குத்தோணும்? அதான் ஏன் வீண் அவஸ்தைன்னு ஒரு கல்யாணத்தோட நிறுத்திக்கிறாங்க போலிருக்கு!"

சே.கா: "ரொம்ப சரி! ஏதோ ஜோசியரையெல்லாம் போய்ப் பார்த்தீங்களாமே?"

மிஸ் பாய்லர்: "ஓ, அதுவா? ஏன் ஒன்பதாவது கல்யாணம் தடைப்படுதுன்னு கேட்டேன். அதுக்கு அவரு ஒரு தீர்வு சொல்லியிருக்காரு!"

சே.கா: "என்னான்னு...?"

மிஸ் பாய்லர்: "ஒன்பதுதானே ராசியில்லாத நம்பர், அதுனாலே காலையிலே ஒரு தவளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சாயங்காலமா இன்னொரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிட்டாரு!"

சே.கா: ரெண்டும் ஓண்ணுதானே, கரெக்டாத் தான் சொல்லியிருக்காரு ஜோசியரு! மாப்பிள்ளை பார்த்திட்டீங்களா?"

மிஸ் பாய்லர்: "பார்த்திட்டாப்போச்சு! ஆமாம், சேட்டை! உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...?"

சே.கா: "ஐயையோ....பேட்டிமுடிஞ்சது...கஷாயம் குடிக்கக் கூப்பிட்டா என்னைக் காஷாயம் கட்ட வச்சிருவீங்க போலிருக்குதே.....! ஆளை விடுங்க....!!"

(இந்தப் பதிவுக்கும் எலிசபெத் டெய்லரின் ஒன்பதாவது திருமணம் குறித்த வதந்திக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது - என்று நான் சொன்னாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றாலும் சொல்ல வேண்டியது எனது கடமை!)

42 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஆமாம், சேட்டை! உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...?"//

சேட்டை இந்த கேள்விக்கு சீக்கிரம் பதில் சொல்லாப்பா?

சிநேகிதன் அக்பர் said...

////ஆமாம், சேட்டை! உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...?"//

சேட்டை இந்த கேள்விக்கு சீக்கிரம் பதில் சொல்லாப்பா?//

கன்னா பின்னா ரிப்பீட்ட்ட்டு...

சீதாலட்சுமி said...

சேட்டையின் சேட்டை உச்சத்திற்குப் போய்விட்டது.
பதிவுகளும் நூறைத் தாண்டிவிட்டது
நம் சேட்டைக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமே
சேட்டைக்கு ஒரு பட்டமும் கொடுக்கலாம். சேட்டையின் மூளையை இன்ஷ்யூர் செய்யலாம். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன
சீதாம்மா

Chitra said...

விளம்பரம்!

கணவனின் தொல்லையா? மாமியார் கொடுமையா? நாத்தனார் நக்கலா? கொழுந்தியாள் கொழுப்பா? ஒரு மணிநேரத்தில் உடனடி விவாகரத்து வேண்டுமா? உடன் அணுகவும்! விவாகரத்து வெங்கடசாமி பி.ஏ.பி.எல்! தொலைபேசி எண்: 12345 00000. ஆடிமாதத்தள்ளுபடியும் உண்டு.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.


இந்த ஒரு விளம்பரம் மட்டும் போதுமா??? இன்னும், இன்னும், பல விளம்பரங்களை எதிர் பார்க்கிறேன்!
கலக்கல் பேட்டி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சேட்டைக்கு இன்னும் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க சார்..

பிரபாகர் said...

சேட்டை டி.வின்னு நிஜமா ஆரம்பிச்சிடலாம் போல இருக்கு!

ரொம்ப நன்னாருக்கு சேட்டை!

பிரபாகர்...

சுதாகர் said...

பேட்டி அருமை சேட்டை.....
பாத்து பேட்டின்ற பேர்ல புளிசர்பத் பாய்லர்ரம்மா உங்க வேட்டிய உருவிடபோறாங்க.... பாத்துக்கோங்க......

அஷீதா said...

Arumaiyaana petti chettai...kalakkal :))))))

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

manjoorraja said...

சேட்டை .... இனிய புத்தாண்டில் இது சூப்பர் பேட்டி.

manjoorraja said...

முந்தா நாள் ரம்பா ரிஷப்ஷனிலும், நேத்து சென்னை கிரிக்கெட் மைதானத்திலும் கலைஞரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை பற்றி உங்க டிவியில் செய்தியே இல்லையே ஏன்?

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்,
"சேட்டை டி.வி. நிலைய ஊழியர்களுக்கும்"
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பிரேமா மகள் said...

முடியல மக்கா.... சென்னை கூவத்து கொசுக்கள் உங்களை மீது தன் பார்வையை திருப்ப...

தக்குடு said...

ROFTL post...:)

மங்குனி அமைச்சர் said...

//மிஸ் பாய்லர்: "பார்த்திட்டாப்போச்சு! ஆமாம், சேட்டை! உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...?"///


யோவ் சேட்ட , நேரா விசயத்துக்கு வரவேண்டியதுதானே , நாங்க என்ன சொல்ல போறோம் , உங்கல்யானத்துகு நல்லா சாப்படு வாழ்த்து சொல்லுவோம் , ஏன் இப்படி சுத்திவளைச்ச

ரோஸ்விக் said...

முடியல ராசா முடியல... பேசாம அந்த பொன்னுக்கும் உனக்கும் ஒரு "இதை" உருவாக்கிவிட்டா என்ன?? :-)

ஜெட்லி... said...

அது என்னப்பா விளம்பரத்தில் ஆடி மாதம் தள்ளுபடி??

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்,
"சேட்டை டி.வி. நிலைய ஊழியர்களுக்கும்"
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே!
ரசிக்கும் வகையில் அமைந்தது உங்களின் பேட்டி . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன் .

பனித்துளி சங்கர் said...

ஏலே பார்த்துல சேட்டை !
சீக்கரம் புளிசர்பத் பாய்லர் பேட்டிய முடிச்சுக்கல இல்லைனா பத்தாவது ஆளா நீயிர் வந்தாலும் சொல்லுவதற்கில்லை .

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல் பேட்டி போங்க! அடுத்து என்ன சிறப்பு பட்டி மன்றமா?

வெங்கட் நாகராஜ்

settaikkaran said...

////ஆமாம், சேட்டை! உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா...?"////

\\சேட்டை இந்த கேள்விக்கு சீக்கிரம் பதில் சொல்லாப்பா?\\

அவ்வளவு சீக்கிரம் சொல்லிருவேனா? அதை வைச்சே ஒரு பெரிய பதிவு போடணுமுன்னு நினைச்சிட்டிருக்கேனில்லா? :-)))))

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

///////கன்னா பின்னா ரிப்பீட்ட்ட்டு...///////

பதிலும் கன்னா பின்னா ரிப்பீட்டுங்கோய்......! :-))))))

மிக்க நன்றி!!

settaikkaran said...

//சேட்டையின் சேட்டை உச்சத்திற்குப் போய்விட்டது. பதிவுகளும் நூறைத் தாண்டிவிட்டது//


ஆமாம் அம்மா! தமிழ்நாட்டுலே 12 ஊருலே வெயில் 100 டிகிரியைத் தாண்டிடுச்சாமே! ஒருவேளை, அதோட விளைவா இருக்குமோ? :-)

//நம் சேட்டைக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமே.
சேட்டைக்கு ஒரு பட்டமும் கொடுக்கலாம்.//

நல்லதா ஒரு டாக்டர் பட்டம் கொடுங்களேன்! யாரு வேண்டாங்கிறாங்க...? :-)

//சேட்டையின் மூளையை இன்ஷ்யூர் செய்யலாம். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன//

இது கொஞ்சம் கஷ்டம்! ஏற்கனவே பல இன்சூரன்ஸு கம்பனியிலே ஏறி இறங்கிட்டேன் - மூளை இன்சூரன்ஸ் பண்ண! அவங்க மாட்டேன்னுட்டாங்க -இல்லாத பொருளுக்கெல்லாம் இன்சூரன்ஸ் கிடையாதாமே? :-))

மிக்க நன்றிம்மா!

settaikkaran said...

//இந்த ஒரு விளம்பரம் மட்டும் போதுமா??? இன்னும், இன்னும், பல விளம்பரங்களை எதிர் பார்க்கிறேன்!
கலக்கல் பேட்டி!//

அதுலே பாருங்க, நம்ம டிவி கம்பனிக்கு சரியா ஸ்பான்ஸர் கிடைக்க மாட்டேங்குறாங்க! ஒரு பாராட்டுவிழா நடத்தி அதை நேரடி ஒளிபரப்பு பண்ணப்போறோம். அப்புறம் பாருங்க விளம்பரத்தை....! :-))

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//சேட்டைக்கு இன்னும் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க சார்..//

வாங்கண்ணே! என்னது, ரகசியத்தையெல்லாம் வெளியிலே போட்டு உடைக்கப்படாது! ஸ்ரேயா, தமன்னா காதுலே விழுந்தா வருத்தப்பட மாட்டாங்களா? :-)))))

மிக்க நன்றிண்ணே!!!

settaikkaran said...

//சேட்டை டி.வின்னு நிஜமா ஆரம்பிச்சிடலாம் போல இருக்கு!//

ஏற்கனவே இருக்கிற டிவிங்க சேட்டை தானே அதிகம் பண்ணிட்டிருக்காங்க! :-)))) நான் வேறேயா???

//ரொம்ப நன்னாருக்கு சேட்டை!//

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//பேட்டி அருமை சேட்டை.....//

மிக்க நன்றிங்க!!! :-))))

//பாத்து பேட்டின்ற பேர்ல புளிசர்பத் பாய்லர்ரம்மா உங்க வேட்டிய உருவிடபோறாங்க.... பாத்துக்கோங்க......//

அதுனாலே தானே நான் ஒண்ணுக்கு ரெண்டு பேண்ட் போட்டுக்கிட்டு பேட்டியெடுத்தேன். :-))))

settaikkaran said...

//Arumaiyaana petti chettai...kalakkal :))))))//

வாங்க வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

//தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி துபாய்ராஜா அவர்களே! உங்களது ராஜசபையை நான் தொடர்ந்து வருகிறேன். எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உரித்தாகுக! :-))))

settaikkaran said...

//சேட்டை .... இனிய புத்தாண்டில் இது சூப்பர் பேட்டி.//

மிக்க நன்றியண்ணே! :-)))

settaikkaran said...

//முந்தா நாள் ரம்பா ரிஷப்ஷனிலும், நேத்து சென்னை கிரிக்கெட் மைதானத்திலும் கலைஞரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை பற்றி உங்க டிவியில் செய்தியே இல்லையே ஏன்?//

அதுக்கு யாரோ காப்பிரைட் வாங்கிட்டாங்களாம். அதுனாலே நம்ம டிவிக்கு உரிமை தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க! மிக்க நன்றிண்ணே! :-))))

settaikkaran said...

//உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், "சேட்டை டி.வி. நிலைய ஊழியர்களுக்கும்" இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி அண்ணே! என் சார்பாகவும், என் குடும்பத்தார் சார்பாகவும், எனது நிறுவனத்தார் சார்பாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். :-)

settaikkaran said...

//முடியல மக்கா.... சென்னை கூவத்து கொசுக்கள் உங்களை மீது தன் பார்வையை திருப்ப...//

ஏனுங்க, கோயம்புத்தூர், திருப்பூரு, ஈரோடு பக்கமெல்லாம் கொசுவே கிடையாதுங்களா? சில பதிவுகளைப் படிச்சா அப்படித் தெரியலீங்களே...? :-)))))

settaikkaran said...

//ROFTL post...:)//

மிக்க நன்றிங்க, வருகைக்கும் கருத்துக்கும்....! அடிக்கடி வாங்க!

settaikkaran said...

//யோவ் சேட்ட , நேரா விசயத்துக்கு வரவேண்டியதுதானே , நாங்க என்ன சொல்ல போறோம் , உங்கல்யானத்துகு நல்லா சாப்படு வாழ்த்து சொல்லுவோம் , ஏன் இப்படி சுத்திவளைச்ச//

நல்லா சாப்பிட்டு வாழ்த்துச் சொல்வீங்களா? அவ்ளோ தானா? மொய்யெல்லாம் எழுத மாட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!

settaikkaran said...

//முடியல ராசா முடியல... பேசாம அந்த பொன்னுக்கும் உனக்கும் ஒரு "இதை" உருவாக்கிவிட்டா என்ன?? :-)//

ஐயா சாமி, இப்பவே இந்தப் பேட்டியைப் படிச்சதுலேருந்து ஸ்ரேயாவும் தமன்னாவும் போன் மேல போன் போட்டு திட்டித்தீர்த்திட்டிருக்காங்க சாமி! ஆளை விடுங்க!!! :-)))))

மிக்க நன்றி!!!!!

settaikkaran said...

//அது என்னப்பா விளம்பரத்தில் ஆடி மாதம் தள்ளுபடி??//

அதாவது கணவன்,மனைவி ரெண்டு பேருலே யாராவது ஒருத்தர் ஃபீஸ் கொடுத்தாப் போதும். :-))))

மிக்க நன்றி!!

settaikkaran said...

//உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், "சேட்டை டி.வி. நிலைய ஊழியர்களுக்கும்" இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி அண்ணே! என் சார்பாகவும், என் குடும்பத்தார் சார்பாகவும், எனது நிறுவனத்தார் சார்பாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். :-)

settaikkaran said...

//ஏலே பார்த்துல சேட்டை !
சீக்கரம் புளிசர்பத் பாய்லர் பேட்டிய முடிச்சுக்கல இல்லைனா பத்தாவது ஆளா நீயிர் வந்தாலும் சொல்லுவதற்கில்லை .//

ஆ...அஸ்குபுஸ்கு! அப்படியெல்லாம் மாட்டிக்குவோமா என்ன? பாய்லரா இருந்தாலும் சரி, கேர்ளரா இருந்தாலும் சரி, அவங்க பாச்சா நம்ம கிட்டே பலிக்காது...ஆமா! :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

//கலக்கல் நண்பரே!
ரசிக்கும் வகையில் அமைந்தது உங்களின் பேட்டி . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன் .//

தொடர்ந்து வருகை புரிந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துகிற உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே! :-))

settaikkaran said...

//கலக்கல் பேட்டி போங்க! அடுத்து என்ன சிறப்பு பட்டி மன்றமா?//

ஆஹா, இதுவும் நல்ல ஐடியாவே இருக்கே? யோசிக்க வேண்டியது தான். :-)))

மிக்க நன்றிங்க!!!!!