Saturday, April 17, 2010

மா’நரக’க்காவல்


(டி.எஸ்.பி.டார்ச்சர் வெற்றிவேல் ஜீப்பில் வந்து இறங்கவும், ஏட்டு டிலக்ஸ் பாண்டியன் வந்து சல்யூட் அடிக்கிறார்)

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ், என்னய்யா இது? பீச்சுலே எங்கே பார்த்தாலும் ஜோடி ஜோடியா உட்கார்ந்திட்டிருக்காங்க? லா அண்டு ஆர்டர் என்னா ஆவுறது?

டிலக்ஸ் பாண்டியன்: சார்! அவங்கெல்லாம் புருசன் பொஞ்சாதிங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னய்யா உளர்றே? எனக்கே காதுகுத்தறியா? அதோ பாரு, அந்த ப்ளூ சுடிதார் பொண்ணும்...வெள்ளை டி-ஷர்ட்டும்! அவங்க கண்டிப்பா புருசன் பொஞ்சாதியா இருக்க முடியாதுய்யா!

டிலக்ஸ் பாண்டியன்: எப்படி சார் சொல்றீங்க?

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ், இவ்வளவு சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டிருக்காங்க! எப்படி புருசன் பொஞ்சாதியா இருக்க முடியும்? என் சர்வீஸுலே கல்யாணத்துக்கப்புறமும் இவ்வளவு சிரிக்கிற ஆம்பிளையை நான் பார்த்ததே கிடையாது தெரியுமா?

டிலக்ஸ் பாண்டியன்: சார், நீங்க உங்க அனுபவத்தை வச்சு ஒரு முடிவுக்கு வராதீங்க! நான் விசாரிச்சிட்டேன்! அந்தம்மா கழுத்துலே தாலி கூட இருக்கு சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னய்யா ஏட்டு நீ? நாம இந்த கெடுபிடியை ஆரம்பிச்சதிலேருந்து திர்லக்கேணியிலே ஒரு புது பிசினஸ் ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா உனக்கு?

டிலக்ஸ் பாண்டியன்: என்ன சார் அது?

டார்ச்சர் வெற்றிவேல்: பெல்ஸ் ரோட்டுலே ஒரு கடையிலே இமிடேஷன் தாலி வாடகைக்குக் கொடுக்கிறாங்க! ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாய்! அதை மாட்டிக்கிட்டு வந்து கப்பிள்ஸ்னு சொல்லி நம்ம கண்ணுலேயே மண்ணைத் தூவுறாங்கய்யா பப்ளிக்!

டிலக்ஸ் பாண்டியன்: உங்களுக்கு அந்தக் கடைதான் தெரியும்! ஸ்டார் தியேட்டராண்ட ஒரு கடையிலே குழந்தைங்களையே வாடகைக்கு விடுறாங்க சார்! லவர்ஸ் அந்தக் குழந்தைக்கு பலூனும் ஐஸ் க்ரீமும் வாங்கிக் கொடுத்து விளையாட விட்டுட்டு ஜாலியா தம்பதிங்க போல வேஷம் போட்டுக்கினு கடலை போட்டுக்கிட்டு இருக்காங்க சார்!

(இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு இளம்பெண் ஓடி வருகிறாள்.)

பெண்: சார்...சார்! ஹெல்ப் ஹெல்ப்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னம்மா பொண்ணு? என்னாச்சு?

பெண்: சார், அந்தப் பக்கம் நாலஞ்சு பசங்க பொண்ணுங்களைப் பார்த்து விசிலடிக்கிறாங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ் ஒன் நாட் த்ரீ! போய் அவனுங்களை இழுத்திட்டு வாய்யா!

டிலக்ஸ் பாண்டியன்: சார், அது யாரு தெரியுமா? சைதாப்பேட்டை சொக்குவோட பிள்ளையும் அவன் சினேகிதங்களும்! ஞாபகமிருக்கா, போன வாரம் கூட சொக்குவோட ஒண்ணு விட்ட அண்ணனோட கொள்ளுப்பேத்திக்கு நடந்த காதுகுத்துக்கு தலைவர் போயிருந்தாரே! மறுநாள் எல்லாப் பத்திரிகையிலேயும் போட்டோ போட்டிருந்தாங்களே! அந்த சொக்குவோட பையன்!

டார்ச்சர் வெற்றிவேல்: நல்ல வேளை! இந்தாம்மா! விசிலடிக்கிறதெல்லாம் இ.பி.கோவிலே அஃபென்ஸ் இல்லேம்மா. நாங்க கூடத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் விசிலடிக்கிறோம். இதையெல்லாம் பெரிசா கம்ப்ளைன் பண்ண வந்திட்டியே...போம்மா..போ!

பெண்: சார்..சார்..என்னைப் பார்த்து கண்சிமிட்டுறான் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: ஏம்மா? அவனோட கண்ணை அவன் சிமிட்டுறான்; உனக்கென்ன வந்தது? இப்போ போறியா இல்லே மெரீனா பீச்சுலே காதலனோட வந்திருக்கேன்னு உங்கப்பாவுக்கு போன் பண்ணட்டுமா?

பெண்: சார்..சார்..எனக்குக் கல்யாணமாயிடுச்சு சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: ரொம்ப நல்லதாப்போச்சு! உன் புருஷனோட செல்போன் நம்பரைக்கொடு! அவர் கிட்டே சொல்லறேன்.

பெண்: ஐயோ சார், நான் அவரு கூட தான் வந்திருக்கேன் சார்! அவரு பர்ஸை பிக்-பாக்கெட் அடிச்சவனைத் துரத்திட்டுப் போயிருக்காரு சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ் ஒன் நாட் த்ரீ! யாருய்யா நம்ம ஏரியாவுலே புது பிக்-பாக்கெட்?

டிலக்ஸ் பாண்டியன்: எல்லாம் நம்ம பிச்சுவா பக்கிரி கேங்தான்!

டார்ச்சர் வெற்றிவேல்: ஓ சரி சரி, நான் எனக்குத் தெரியாம வேறே புது பார்ட்டி வந்திருச்சோன்னு ஒரு நிமிஷம் பயந்திட்டேன். இந்தாம்மா பொண்ணு...மரியாதையா உன் புருசனைக் கூட்டிக்கிட்டு வூடு போய்ச்சேரு! இல்லாட்டி உங்க புருசன் தான் பிக்பாக்கெட் அடிச்சான்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவோம்...புரியுதா..?

பெண்: வேண்டாம் சார்! நாங்க சென்னையை விட்டே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப்போயிடறோம் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: போய்ச்சேரும்மா! சே, வர வர எதுக்குத்தான் கம்ப்ளைன் பண்ணறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமப்போயிருச்சு! அது போகட்டும், அதென்னய்யா அங்கே கும்பலா உட்கார்ந்திட்டிருக்காங்க?

டிலக்ஸ் பாண்டியன்: சார், அவங்களும் லவ்வர்ஸ் இல்லை; தம்பதிங்க தான்! நாம தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு கல்யாண மண்டபத்துலேருந்து டைரக்டா வந்திருக்காங்க! சந்தேகம் வரக்கூடாதுன்னு இன்னும் மாலையைக் கூடக் கழட்டலே! எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஐயரையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க!

டார்ச்சர் வெற்றிவேல்: கஷ்டம்! அதுசரி, அந்தப் பக்கம் சுண்டல் சாப்பிட்டுக்கிட்டிருக்காங்களே? அவங்களை விசாரிச்சியா?

டிலக்ஸ் பாண்டியன்: சார், அவங்க காதல்ஜோடிதான்! ஆனா பாருங்க...டீட்டெயில் கேட்டா இங்கிலீஷுலே திருப்பிக் கேள்வி கேட்குறாங்க!

டார்ச்சர் வெற்றிவேல்: ஓஹோ! அவங்களை விட்டிரு, யாராவது மினிஸ்டரோட சொந்தக்காரங்களா இருப்பாங்க! அப்புறம், அதோ பலூன் சுடுற இடம் பக்கத்துலே இருக்காங்களே...அது கண்டிப்பா ல்வ்வர்ஸ் தான்!

டிலக்ஸ் பாண்டியன்: ஆமா சார்! ஆனா, அந்தப் பையன் நம்ம பிளேடு பக்கிரியோட மகன் சார்! பெரிய இடத்து விவகாரம் நமக்கெதுக்கு சார்?

டார்ச்சர் வெற்றிவேல்: அடடா, என்னய்யா இது? பெரிய மனுசன் வீட்டுக்குழந்தைங்கெல்லாம் எதுக்குய்யா இந்த அசிங்கம் புடிச்ச இடத்துக்கு வர்றாங்க? நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஒரு நல்ல டி.பியோ, சர்க்யூட் ஹவுஸோ, ஹோட்டலோ ஏற்பாடு பண்ணிக்கொடுத்திருக்க மாட்டோமா?

டிலக்ஸ் பாண்டியன்: அதையும் நானே கேட்டேனே! அவனுக்கு எல்லா ஹோட்டலும் தெரியுமாம். அதுனாலே, ஏதாவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க, பார்க்கலாமுன்னு சொல்லிட்டான் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: சாராயம் விக்குறவன் கூட நம்மளை மதிக்க மாட்டேங்குறாங்களேய்யா?

டிலக்ஸ் பாண்டியன்: அதோ ஐஸ் க்ரீம் ஸ்டால் கிட்டே இருக்காங்களே! அது யாரு தெரியுதா? ஓட்டேரி நரியோட பொண்ணு!

டார்ச்சர் வெற்றிவேல்: இருக்கட்டும் பாவம்! நரி ஒருத்தன் தான் முப்பதாம் தேதியே சரியா மாமூல் கொண்டு வந்து கொடுக்கிறவன்; ரொம்ப நேர்மையான ரௌடி! விட்டிரலாம். நிலைமையைப் பார்த்தா நம்ம கெடுபிடியை ஆரம்பிச்சதுக்கப்புறம் மெரீனாவுலே காதலர்களே வர்றதில்லை போலிருக்குதே!

டிலக்ஸ் பாண்டியன்: ஆமா சார், இப்படியே போச்சுன்னா கிரைம்-ரேட்டை குறைக்கவே முடியாமப் போயிரும் போலிருக்கே?

டார்ச்சர் வெற்றிவேல்: இந்த நிலைமை இப்படியே நீடிச்சா, அந்தக்காலத்து போலீஸ் மாதிரி நாமளும் திருடறவன், கொள்ளையடிக்கிறவன், சாராயம் விக்கிறவனையெல்லாம் பிடிக்க வேண்டி வந்திருமோன்னு பயமாயிருக்கு பாண்டியன்!

டிலக்ஸ் பாண்டியன்: பயமுறுத்தாதீங்க சார்! எனக்கு அதெல்லாம் பழக்கமேயில்லை சார்! இன்னிக்கு வந்ததுக்கு யாராவது இளிச்சவாயனைப் பிடிச்சுக்கொண்டாந்திடறேன் சார்.

டார்ச்சர் வெற்றிவேல்: அதுக்கு அவசியமேயில்லை! நம்ம லேடி கான்ஸ்டபிள் ரீட்டா ஒரு ஜோடியைப் பிடிச்சுத்தள்ளிக்கிட்டு வர்றாங்க பாரு!

ரீட்டா: சார், இவங்க ரெண்டு பேரும் பீச்சுலே லவ் பண்ணிட்டிருந்தாங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: யாரும்மா நீ? இந்தப் பையன் யாரு? என்ன தைரியமிருந்தா மெரீனா பீச்சுலே வந்து காதல் பண்ணுவீங்க?

இளம்பெண்: சார்..சார்! எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் தெரியும் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னது? பெத்தவங்க கிட்டே சொல்லிட்டு காதல் பண்ணுறீங்களா? இதுக்கே உங்களைப் புடிச்சு உள்ளே போடணும்.

இளம்பெண்: ஐயோ சார், எங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு சார்!

டிலக்ஸ் பாண்டியன்: கல்யாணம் நிச்சயமானாலும் அதுவரைக்கும் நீங்க காதலருங்க தான்!

இளைஞன்: சார்! எங்களைப் பிடிக்கிறது இருக்கட்டும். படகுமறைவிலே உங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க ரெண்டு பேரு ரொமான்ஸ் பண்ணிட்டிருக்காங்க! அவங்களைப் புடியுங்க!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னது? கான்ஸ்டபிள் ரீட்டா! இது உண்மையா?

ரீட்டா: ஆமா சார், மண்ணடி ஏட்டு கனகாவும் மந்தவெளி ஏட்டு மயில்சாமியும்...!

டார்ச்சர் வெற்றிவேல்: என்ன கருமமய்யா இது? நம்ம டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படிப்பண்ணினா எப்படிய்யா?

டிலக்ஸ் பாண்டியன்: சார், நான் அன்னிக்கே சொன்னேனே சார்! மெரீனா பீச்சு டியூட்டிக்கு புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிறவங்களைப் போடாதீங்க...வயசானவங்களாப் பாத்துப் போடுங்கன்னு...நீங்க கேட்டாத்தானே...?

ரீட்டா: கொடுமை சார்! இங்கே வர்ற காதலர்களைப் பார்த்து நம்ம ஆளுங்களும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! இப்போ கூட நீச்சல்குளம் பக்கத்துலே நம்மாளுங்க ரெண்டு பேரு ’நான் தேடும் செவ்வந்திப்பூவிது,’ன்னு டூயட் பாடிட்டிருக்காங்க! ஏதோ ஷூட்டிங் போலிருக்குன்னு பப்ளிக் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்திட்டிருக்காங்க! ஒருத்தன் துண்டை விரிச்சு நிறைய சில்லறையே தேத்திட்டான்னா பாருங்களேன்.

டார்ச்சர் வெற்றிவேல்: ஐயோ மானம் போகுது! யோவ் ஒன் நாட் த்ரீ! மத்த லவர்ஸை விட்டிரு..நம்ம ஆளுங்க யாரைப்பார்த்தாலும் அவங்களையெல்லாம் இமீடியட்டா இங்கிருந்து விரட்டிரு! இதுக்கு மேலே நான் இருந்தா அசிங்கமாயிடும்...நான் போறேன்..

(டார்ச்சர் வெற்றிவேல் ஜீப்பைக் கிளப்பிக்கொண்டு சொல்கிறார்)

டிலக்ஸ் பாண்டியன்: ஹி..ஹி! ரீட்டா! உன் புருசன் வெளியூருலேருந்து வந்தாச்சா?

ரீட்டா: இல்லீங்க சார், அதுசரி, உங்க வீட்டுக்காரி பிரசவம் முடிஞ்சு வந்திட்டாங்களா?

டிலக்ஸ் பாண்டியன்: இல்லே ரீட்டா!

(எங்கேயோ எஃப்.எம்.ரேடியோவில் ’அடியே கொல்லுதே,’ பாடல் கேட்கிறது.)

56 comments:

எல் கே said...

//டீட்டெயில் கேட்டா இங்கிலீஷுலே திருப்பிக் கேள்வி கேட்குறாங்க!//

hahahha

எல் கே said...

//
டிலக்ஸ் பாண்டியன்: ஹி..ஹி! ரீட்டா! உன் புருசன் வெளியூருலேருந்து வந்தாச்சா?

ரீட்டா: இல்லீங்க சார், அதுசரி, உங்க வீட்டுக்காரி பிரசவம் முடிஞ்சு வந்திட்டாங்களா?//

:D:D

பிரபாகர் said...

மெலிதான நகைச்சுவை இழையோட நல்லாருக்கு நண்பா! சில இடங்களில் சரவெடி...

பிரபாகர்...

பனித்துளி சங்கர் said...

//////டிலக்ஸ் பாண்டியன்: சார்! அவங்கெல்லாம் புருசன் பொஞ்சாதிங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னய்யா உளர்றே? எனக்கே காதுகுத்தறியா? அதோ பாரு, அந்த ப்ளூ சுடிதார் பொண்ணும்...வெள்ளை டி-ஷர்ட்டும்! அவங்க கண்டிப்பா புருசன் பொஞ்சாதியா இருக்க முடியாதுய்யா!

டிலக்ஸ் பாண்டியன்: எப்படி சார் சொல்றீங்க?

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ், இவ்வளவு சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டிருக்காங்க! எப்படி புருசன் பொஞ்சாதியா இருக்க முடியும்? என் சர்வீஸுலே கல்யாணத்துக்கப்புறமும் இவ்வளவு சிரிக்கிற ஆம்பிளையை நான் பார்த்ததே கிடையாது தெரியுமா?///////////பார்த்து சேட்டை உங்க வீட்டுக்கார அம்மா படிச்சா அப்றம் இன்னைக்கு டார்ச்சர் வெற்றிவேல் அவங்களா மாறிவிடப் போறாங்க !

மீண்டும் வருவேன் .

பனித்துளி சங்கர் said...

///////(எங்கேயோ எஃப்.எம்.ரேடியோவில் ’அடியே கொல்லுதே,’ பாடல் கேட்கிறது.)
///////

சேட்ட எங்க எஃப்.எம்.ரேடியோவில் அய்யோ !அய்யய்யோ ! என்று பாடல்லல்வா கேட்கிறது .

ப.கந்தசாமி said...

:-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் :))

vasu balaji said...

தில்லக்கேணி டீடெய்ல்லாம் சுகுர்ரா கீதே நைனா! செம எஸ்பென்ஸ் போல்து! இன்னிக்கு இவனுங்க பண்ண வேலைக்கு இதுக்குதான் லாய்க்கி. சந்தோசமா கீதுபா. டாங்ஸ்.

சீதாலட்சுமி said...

சேட்டைக்கு அடிக்கடி மெரீனா போய்ப்பழக்கமோ
சீதாம்மா

அகல்விளக்கு said...

சூப்பரு...

shareking said...

nice

Unknown said...

எங்களைப்போல தனியாக பீச் போங்க எதாசும் கெடுபிடி இல்ல

சத்ரியன் said...

//ப்பிள்ஸ்னு சொல்லி நம்ம கண்ணுலேயே மண்ணைத் தூவுறாங்கய்யா பப்ளிக்!//

சேட்டை,

உன் கண்டுபிடிப்பில் ஒரு ஓட்டை.

பீச்சுல “மணலை”த்தானே தூவுவாங்க. நீங்க என்னடான்னா “மண்ணை”ன்னு எழுதியிருக்கீங்க.

சத்ரியன் said...

//என்னது? பெத்தவங்க கிட்டே சொல்லிட்டு காதல் பண்ணுறீங்களா? இதுக்கே உங்களைப் புடிச்சு உள்ளே போடணும்.//

சார்..சார்...சார்,

எங்க ஊருக்கும் ஒரு ”மெரினா பீச்” ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க சார். எங்க ”ஏரி”யாவுல கூட நெறைய லவ்வர்ஸ் இருக்காங்க சார்.

சிநேகிதன் அக்பர் said...

சேட்டை இன்ஃபர்மேஷன் ரொம்ப சரியா இருக்குற மாதிரி தெரியுது. டிபார்ட்மெண்ட்ல இருக்கிங்களா.

சென்ஷி said...

எல்லோரையுமே துவைச்சு காயப் போட்டிடறீங்க :)

தமிழ் பொண்ணு said...

real ah eruthu chu nice..

அஷீதா said...

nalla comedy :))

Chitra said...

பெல்ஸ் ரோட்டுலே ஒரு கடையிலே இமிடேஷன் தாலி வாடகைக்குக் கொடுக்கிறாங்க! ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாய்! அதை மாட்டிக்கிட்டு வந்து கப்பிள்ஸ்னு சொல்லி நம்ம கண்ணுலேயே மண்ணைத் தூவுறாங்கய்யா பப்ளிக்!


......ha,ha,ha,ha,ha,...... super comedy!
Keep Rocking!

ஸ்ரீராம். said...

:))

சுதாகர் said...

(¯`·._.·[●•»ரொம்ப நல்லா இருக்கு சேட்டை...... உங்க வாசகர்கள்ல போலீஸ் யாராவது இருக்க பாத்து..... என்னடா சேட்டைன்னு உங்க பட்டைய கௌப்பிட போறாங்க........ சேட்டையின் சேட்டைகள் தொடர வாழ்த்துக்கள்......«•●]·._.·´¯)

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரித்தேன் ரசிக்க ரசிக்க..

பெசொவி said...

super!
:-)))))))))))))))))))))))

Anonymous said...

//அவனுக்கு எல்லா ஹோட்டலும் தெரியுமாம். அதுனாலே, ஏதாவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க, பார்க்கலாமுன்னு சொல்லிட்டான் சார்!//

அருமையான நகைச்சுவை நண்பரே!

ரோஸ்விக் said...

எனக்கென்னமோ இந்த ஒன் நாட் த்ரீ-யோடது தான் இந்த பிளாக்-னு தோணுது... :-)))

ஜெய்லானி said...

//டிலக்ஸ் பாண்டியன்: ஹி..ஹி! ரீட்டா! உன் புருசன் வெளியூருலேருந்து வந்தாச்சா?

ரீட்டா: இல்லீங்க சார், அதுசரி, உங்க வீட்டுக்காரி பிரசவம் முடிஞ்சு வந்திட்டாங்களா?//

ஹி....ஹி...

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு சேட்டை. இது மாதிரி டிபார்ட்மெண்ட் பேரை யூஸ் பண்ணாதிங்க. பொதுவான பதிவா போடுங்க. காவலருக்கு பதிலா நம்ம பேசற மாதிரி அமையுங்க. அல்லது நண்டு.சிண்டுன்னு எதாவது பேரை யூஸ் பண்ணுங்க.

ஒரு டிபார்ட்மெண்ட பேரை பப்ளிக்கா எழுதுவது தவறு. சினிமாவில் காமெடி அடிப்பார்கள். ஆனா நாம பதிவில் எழுதினா இது ரிட்டன் எவிடென்ஸ் என்பது நினைவில் இருக்கட்டும்.

settaikkaran said...

LK said...

// டிலக்ஸ் பாண்டியன்: ஹி..ஹி! ரீட்டா! உன் புருசன் வெளியூருலேருந்து வந்தாச்சா?
ரீட்டா: இல்லீங்க சார், அதுசரி, உங்க வீட்டுக்காரி பிரசவம் முடிஞ்சு வந்திட்டாங்களா?//

:D:D

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

LK said...

//டீட்டெயில் கேட்டா இங்கிலீஷுலே திருப்பிக் கேள்வி கேட்குறாங்க!//

hahahha

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

பிரபாகர் said...

//மெலிதான நகைச்சுவை இழையோட நல்லாருக்கு நண்பா! சில இடங்களில் சரவெடி...//

உற்சாகமூட்டுகிற உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//பார்த்து சேட்டை உங்க வீட்டுக்கார அம்மா படிச்சா அப்றம் இன்னைக்கு டார்ச்சர் வெற்றிவேல் அவங்களா மாறிவிடப் போறாங்க !//

இருந்திருந்தா இவ்வளவு தைரியமா எழுதியிருப்போமாக்கும்? :-))) அதது நடக்குறபோது பார்த்துக்கலாம்!

//மீண்டும் வருவேன் .//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//சேட்ட எங்க எஃப்.எம்.ரேடியோவில் அய்யோ !அய்யய்யோ ! என்று பாடல்லல்வா கேட்கிறது .//

நீங்க எந்தக் கடையிலே அந்த ரேடியோவை வாங்குனீங்களோ? கண்டிப்பா, நாங்க வாங்குன கடையிலே இல்லே! :-))))))))

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

☀நான் ஆதவன்☀ said...

//:)))))))))))))//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

ச.செந்தில்வேலன் said...

//கலக்கல் :))//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Dr.P.Kandaswamy said...

// :-)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

வானம்பாடிகள் said...

//தில்லக்கேணி டீடெய்ல்லாம் சுகுர்ரா கீதே நைனா! செம எஸ்பென்ஸ் போல்து!//

பாதி சென்னைவாசியாயிட்டோமில்லே? :-)

அதுனாலே தான் டீட்டெயிலெல்லாம் தெரியுது.

//இன்னிக்கு இவனுங்க பண்ண வேலைக்கு இதுக்குதான் லாய்க்கி.//


என்னோட கோபத்தை எனக்குத் தெரிஞ்சவிதத்துலே வெளிப்படுத்தினேன் ஐயா!

//சந்தோசமா கீதுபா. டாங்ஸ்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

சீதாலட்சுமி said...

//சேட்டைக்கு அடிக்கடி மெரீனா போய்ப்பழக்கமோ//

ஹூம், ஒரு காலத்துலே சனி,ஞாயிறுன்னா அங்கே தான் டேரா!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அகல்விளக்கு said...

//சூப்பரு...//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

senthil kumar said...

//nice//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

A.சிவசங்கர் said...

//எங்களைப்போல தனியாக பீச் போங்க எதாசும் கெடுபிடி இல்ல//

இன்னும் கொஞ்ச நாளாச்சுன்னா, ஒருத்தனும் பீச் போகவே மாட்டான் போலிருக்குது.....!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

சத்ரியன் said...

//சேட்டை,

உன் கண்டுபிடிப்பில் ஒரு ஓட்டை.

பீச்சுல “மணலை”த்தானே தூவுவாங்க. நீங்க என்னடான்னா “மண்ணை”ன்னு எழுதியிருக்கீங்க.//

ஆஹா! இதுலே கூட இலக்கணப்பிழையெல்லாம் பார்த்துச் சொல்லுறாங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

சத்ரியன் said...

//என்னது? பெத்தவங்க கிட்டே சொல்லிட்டு காதல் பண்ணுறீங்களா? இதுக்கே உங்களைப் புடிச்சு உள்ளே போடணும்.//

சார்..சார்...சார்,

எங்க ஊருக்கும் ஒரு ”மெரினா பீச்” ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க சார். எங்க ”ஏரி”யாவுல கூட நெறைய லவ்வர்ஸ் இருக்காங்க சார்.

அடுத்த தேர்தல்லே எங்க கட்சிக்கு ஓட்டுப்போட்டா, நீங்க ஊட்டியிலே இருந்தாலும் அங்கே ஒரு பீச் அமைப்போம் என்று உறுதிகூறுகிறோம்.

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அக்பர் said...

//சேட்டை இன்ஃபர்மேஷன் ரொம்ப சரியா இருக்குற மாதிரி தெரியுது. டிபார்ட்மெண்ட்ல இருக்கிங்களா.//

என்னாங்க இப்படிக் கேட்டுட்டீங்க? நான் டிப்பார்ட்மென்டுலேயும் இல்லை, அப்பார்ட்மென்டுலேயும் இல்லை; மேன்சனிலே இருக்கிறேன். :-))))

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அக்பர் said...

//சேட்டை இன்ஃபர்மேஷன் ரொம்ப சரியா இருக்குற மாதிரி தெரியுது. டிபார்ட்மெண்ட்ல இருக்கிங்களா.//

என்னாங்க இப்படிக் கேட்டுட்டீங்க? நான் டிப்பார்ட்மென்டுலேயும் இல்லை, அப்பார்ட்மென்டுலேயும் இல்லை; மேன்சனிலே இருக்கிறேன். :-))))

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

சென்ஷி said...

//எல்லோரையுமே துவைச்சு காயப் போட்டிடறீங்க :)//

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! சும்மா...ஊறப்போட்டிருக்கேன் அம்புட்டுத்தேன்!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

madurai ponnu said...

//real ah eruthu chu nice..//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அஷீதா said...

// nalla comedy :))//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Chitra said...

//......ha,ha,ha,ha,ha,...... super comedy! Keep Rocking!//

:-))

உற்சாகமூட்டும் உங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

ஸ்ரீராம். said...

// :))//

மிக்க நன்றி!

settaikkaran said...

சுதாகர் said...

//(¯`·._.·[●•»ரொம்ப நல்லா இருக்கு சேட்டை...... உங்க வாசகர்கள்ல போலீஸ் யாராவது இருக்க பாத்து..... என்னடா சேட்டைன்னு உங்க பட்டைய கௌப்பிட போறாங்க........ சேட்டையின் சேட்டைகள் தொடர வாழ்த்துக்கள்......«•●]·._.·´¯)//

நம்ம வாசகர்களிலே எல்லாரும் இருக்காங்க! பட்டையைக் கிளப்பினாலும் ஜாமீனிலே எடுக்கவும் ஆளிருப்பாங்கன்னு நம்பறேன். :-))))))

உற்சாகமூட்டும் உங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//சிரித்தேன் ரசிக்க ரசிக்க..//

மிக்க நன்றிஅண்ணே!!

settaikkaran said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//super!
:-)))))))))))))))))))))))//

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! :-)))))

settaikkaran said...

abarasithan said...

//அருமையான நகைச்சுவை நண்பரே!//

உற்சாகமூட்டும் உங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

ரோஸ்விக் said...

//எனக்கென்னமோ இந்த ஒன் நாட் த்ரீ-யோடது தான் இந்த பிளாக்-னு தோணுது... :-)))//

ஐயையோ, இல்லீங்க! இது நாட் நாட் செவனோட பிளாக்குங்க! :-)))

மிக்க நன்றி!

settaikkaran said...

ஜெய்லானி said...

//டிலக்ஸ் பாண்டியன்: ஹி..ஹி! ரீட்டா! உன் புருசன் வெளியூருலேருந்து வந்தாச்சா?

ரீட்டா: இல்லீங்க சார், அதுசரி, உங்க வீட்டுக்காரி பிரசவம் முடிஞ்சு வந்திட்டாங்களா?//

ஹி....ஹி...

கருத்துக்கு மிக்க நன்றி! :-))))

settaikkaran said...

பித்தனின் வாக்கு said...

//நல்லா இருக்கு சேட்டை.//

மிக்க நன்றி!

//இது மாதிரி டிபார்ட்மெண்ட் பேரை யூஸ் பண்ணாதிங்க. பொதுவான பதிவா போடுங்க. காவலருக்கு பதிலா நம்ம பேசற மாதிரி அமையுங்க. அல்லது நண்டு.சிண்டுன்னு எதாவது பேரை யூஸ் பண்ணுங்க.//

ஆஹா! உங்களது ஆலோசனைகளைக் குறித்துக்கொண்டேன். இனி கவனம் செலுத்துகிறேன்.

//ஒரு டிபார்ட்மெண்ட பேரை பப்ளிக்கா எழுதுவது தவறு. சினிமாவில் காமெடி அடிப்பார்கள். ஆனா நாம பதிவில் எழுதினா இது ரிட்டன் எவிடென்ஸ் என்பது நினைவில் இருக்கட்டும்.//

இதுலே இவ்வளவு இருக்கா? எது எப்படியோ நகுதற்பொருட்டன்று நட்பு என்பதற்கு உதாரணமாய், அறிவுறுத்தியதற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல!