Friday, April 30, 2010

வாங்க,கோடீஸ்வரனாகலாம்!

சேட்டைக்காரன்: வணக்கம்! வந்தனம்! நமஸ்தே! நமஸ்கார்! டிவியைப் பார்த்தாலும் சரி, பேப்பரைப் படிச்சாலும் சரி, இவன் கோடிக்கணக்குலே ஊழல் பண்ணினான், அவன் கோடிக்கணக்குலே லஞ்சம் வாங்கினான்னு தான் செய்தி படிக்கிறோம். சே, நமக்கு ஒரு லட்ச ரூபாயாவது கொடுத்திருக்கக் கூடாதான்னு லபோதிபோன்னு மனசு அடிச்சுக்குதா இல்லியா? அந்தக் குறையைப் போக்கத்தான், சேட்டை டிவியிலே உங்க எல்லாரையும் கோடீஸ்வரனாக்கணுமுங்கிற நோக்கத்தோட தொடங்கப்பட்டது- வாங்க கோடீஸ்வரனாகலாம் என்ற நிகழ்ச்சி!"

நிகழ்ச்சியோட விதிமுறைகள் எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! மொத்தம் பதினைந்து கேள்விகள்! ஒவ்வொரு கேள்விக்கும் கம்ப்யூட்டரிலே நாலு விடை தெரியும். அதுலே மூணு விடை சரியான விடை; ஒரே ஒரு விடை தப்பானது. ஆக, சரியான கேள்விக்கு தப்பான விடையை சரியாக் கண்டுபிடிக்கிறது தான் இந்த வாங்க, கோடீஸ்வரனாகலாம் விளையாட்டு!

ஆயிரம் ரூபாயிலே ஆரம்பிச்சு பதினைந்தாம் கேள்விக்கு சரியாக நீங்க தப்பான பதிலைக் கண்டுபிடிச்சுச் சொன்னா உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் நாலணா,எட்டணா நாணயங்களாக மூட்டை மூட்டையாகக் கொடுக்கப்படும். ஐந்தாவது கேள்வி வரை வர்ற அறிவாளிங்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், பத்தாவது கேள்வி வரைக்கும் வர்ற அதிகப்பிரசங்கிகளுக்கு மூணு லட்சத்து இருபதாயிரம் ரூபாயும் கிடைக்கும். பதினைந்தாவது கேள்வி வரை வர்றவங்க...சரி, எதுக்கு? வேண்டாம், நம்மூரிலே அப்படி யாரும் வர மாட்டாங்கன்னுற தைரியத்துலே தானே நாங்களே நிகழ்ச்சி நடத்திட்டிருக்கோம்!

ஆட்டத்துக்கு நடுவுலே ஜூட் விட்டா, அதுவரை ஜெயிச்ச பணத்தை வாங்கிட்டுப் போயிரலாம். ஆனா, அம்பேல் ஆயிட்டீங்கன்னா, ரிட்டர்ன் டிக்கெட்டுக்குக் கூடக் காசு கிடைக்காது. மாறா நீங்க போட்டிருக்கிற வாட்சு,மோதிரம் எல்லாத்தையும் சப்ஜாடா கழட்டிக்கிட்டு அனுப்பிருவோம்.

மொத்தம் மூணு லைஃப்லைனிருக்கு! ஆடியன்ஸ் கிட்டே கேட்கலாம்; தொலைபேசியிலே யார் கிட்டேயாவது கேட்கலாம்; அப்புறம் ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி!

இன்னிக்கு என் கூட விளையாடப்போறவர் சுங்குவார்சத்திரம் சூடாமணி! இவரு நேத்தே விளையாட ஆரம்பிச்சு, முதல் ஐந்து கேள்விகளுக்கு சரியா தப்பான விடையைச் சொல்லி பத்தாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டாரு! நேத்து மின்வெட்டு காரணமாக அந்த நிகழ்ச்சியை நாங்க அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துலே மொட்டை மாடியிலே நடத்தினதாலே யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை! மீதி ஆட்டத்தை இன்று தொடர்வோம்.

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: வெல்கம் மிஸ்டர் சூடாமணி! உட்காருங்க!

சூடாமணி: நன்றிங்க!

சேட்டைக்காரன்: இதுவரைக்கும் பத்தாயிரம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க! எப்படியிருக்கு?

சூடாமணி: நல்லாத்தான் இருக்கு! ஆனா, பத்தாயிரம் ரூபாயை நாலணா, எட்டணா காயினாக் கொடுத்தா லாரி வாடகைக்கே சரியாப் போயிடுமே? அதான் இன்னிக்கு கோடி ரூபாய் ஜெயிச்சே ஆகணுமுன்னு வந்திருக்கேன். தனி கூட்ஸ் வண்டியே புக் பண்ண வேண்டி வந்தாலும் பரவாயில்லை!

சேட்டைக்காரன்: ஓ.கே! வாங்க கோடீசுவரனாகலாம் விளையாட்டு ஆரம்பமாயிருச்சு! நிகழ்ச்சியின் ஆறாவது கேள்வி!

மிஸ்டர் சூடாமணி! சமீபத்துலே வருமானவரித்துறை கிட்டே மாட்டிக்கிட்ட ஐ.பி.எல்.அணி எது? உங்களுக்கான நான்கு விடைகள் இதோ!

A.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
B.கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்.
C.ராஜஸ்தான் ராயல்ஸ்
D.ஆந்திரா பிக்கிள்ஸ்

சூடாமணி: டி.ஆந்திரா பிக்கிள்ஸ்!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! ஆந்திரா பிக்கிள்ஸ் என்ற விடையை லாக் செய்யுங்கள்! ஆந்திரா பிக்கிள்ஸ் என்பது சரியான விடை சூடாமணி! இருபதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: ஏழாவது கேள்வி! உங்களுக்குப் பொது அறிவு சம்பந்தப்பட்ட செய்திகளிலே ஈடுபாடு உண்டா மிஸ்டர் சூடாமணி?

சூடாமணி: பொதுவா, எனக்கு அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே ஈடுபாடு கிடையாதுங்க! சினிமா மட்டும் தான் பார்க்கிறது வழக்கம்!

சேட்டைக்காரன்: ஹாஹா! சரி, இதோ உங்களுக்கான ஏழாவது கேள்வி!

இந்த நான்கு போலி சாமியார்களில், போலீஸுக்குத் தண்ணி காட்டத் தெரியாதவர் யார்?

A.சுவாமி வெட்டியானந்தா
B.சுவாமி கத்தியானந்தா
C.சுவாமி நித்தியானந்தா
D.சுவாமி பக்கியானந்தா

சூடாமணி: சி. சுவாமி நித்தியானந்தா!

சேட்டைக்காரன்: ஆர் யூ ஷ்யூர்? போலீஸுக்குத் தண்ணி காட்டத் தெரியாதவர்???

சூடாமணி: ஆமாங்க! சுவாமி நித்தியானந்தா தான்!

சேட்டைக்காரன்: உறுதியா சொல்லுறீங்களே! விடையை லாக் பண்ணிடலாமா?

சூடாமணி: அவரையே "லாக்" பண்ணியாச்சு! விடை தானே, பண்ணுங்க!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! சி. சுவாமி நித்தியானந்தா என்ற விடையை லாக் செய்யவும். மிஸ்டர் சூடாமணி! சுவாமி நித்தியானந்தா என்பது..........மிகச் சரியான விடை! நாற்பதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: மிஸ்டர் சூடாமணி! எட்டாவது கேள்விக்குப் போகலாமா? சட்டசபை,பாராளுமன்றம் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது எது?

A.கூச்சல்
B.குழப்பம்
C.வெளிநடப்பு
D.அமைதி

சூடாமணி: டி.அமைதி!

சேட்டைக்காரன்: அமைதி! கம்ப்யூட்டர் அண்ணாச்சி! அமைதியை லாக் பண்ணுங்க! ஆஹா, சரியான விடை! மிஸ்டர் சூடாமணி! எண்பதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க! அடுத்து ஒன்பதாவது கேள்வி! இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு வழங்குவது எது? உங்களுக்கான நான்கு விடைகள்....!

A.பணம்
B.புடவை/வேட்டி
C.க்வார்ட்டர்
D.ஹூண்டாய் கார்

சூடாமணி: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி! அடுத்த தேர்தலிலே என்ன நடக்குமுன்னு தெரியாது. இப்போதைக்கு விடை ஹூண்டாய் கார் தான்.

சேட்டைக்காரன்: நல்லா யோசிச்சுச் சொல்லுங்க! ஹூண்டாய் கார் தானா விடை?

சூடாமணி: ஏன் சேட்டை சந்தேகமாக் கேட்கறீங்க? உங்களுக்கு யாராவது ஹூண்டாய் கார் கொடுத்தாங்களோ?

சேட்டைக்காரன்: இதையெல்லாம் ஸ்டூடியோவிலே வச்சுக் கேட்கப்படாது. சரியா? விடையைச் சொல்லுங்க!

சூடாமணி: ஹூண்டாய் கார்

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! ஹூண்டாய் காரை லாக் பண்ணுங்க! ஆஹா! மிகச்சரியான விடை! மிஸ்டர் சூடாமணி! ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: மிஸ்டர் சூடாமணி! பத்தாவது கேள்விக்கு சரியா தப்பான விடையைச் சொன்னா, கண்டிப்பாக மூணு லட்சத்து இருபதினாயிரம் ரூபாயை நீங்க வீட்டுக்கு எடுத்திட்டுப்போகலாம். கேள்வி என்னான்னா......தமிழ் சினிமாவுலே அதிக சம்பளம் வாங்குற நடிகர் யார்? உங்களுக்கான விடைகள்....

A.ரஜினிகாந்த்
B.விஜய்
C.அஜித்
D.ஜே.கே.ரித்தீஷ்

சூடாமணி: டி. ஜே.கே.ரித்தீஷ்! லாக் பண்ணுங்க!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! டி.ஜே.கே.ரித்தீஷ் என்ற விடையை லாக் பண்ணுங்கள்! மிகச் சரியான விடை! மிஸ்டர் சூடாமணி! இனிமேல் நீங்க தோத்தாலுமே மூன்று லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுத் தான் போவீங்க! எப்படி சரியா தப்பான விடையக் கண்டுபிடிச்சீங்க?

சூடாமணி: பெரிய கம்பசூத்திரமா? உங்க கம்ப்யூட்டர் அண்ணாச்சியிலே எது டி-ன்னு வந்தாலும் அது தான் விடையா இருக்குமுன்னு ஒரு ஊகம் பண்ணி அடிக்கிறது தான்.

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! கவனமாயிருங்க! சரி மிஸ்டர் சூடாமணி! இப்போ நீங்க மூணு லட்சத்தி இருபதினாயிரம் ரூபாய் பணத்தை ஜெயிச்சிட்டீங்க! அதை வச்சு என்ன பண்ணப்போறீங்க?

சூடாமணி: முதல்லே எண்ணிப்பார்ப்பேன்! உங்க முழியைப் பார்த்தாலே அதிலேருந்து ஒரு கை அள்ளிப் பாக்கெட்டுலே போட்டிருப்பீங்களோன்னு சந்தேகமாயிருக்கு எனக்கு!

சேட்டைக்காரன்: ஏன்யா மானத்தை வாங்குறே? காலையிலேருந்து சிங்கிள் டீ கூட குடிக்காம நிகழ்ச்சி நடத்திட்டிருக்கேன். என்னைப் போயி சந்தேகப்படறியே? சரி, பதினோராவது கேள்விக்குப் போகலாமா?

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: இப்போ இவங்க எதுக்குக் கை தட்டுனாங்க? கொடுத்த பணத்துக்கு மேலேயே கரகோஷம் பண்ணுறாங்கய்யா! சரி, கேள்விக்கு வருவோம்! கொஞ்சம் கஷ்டமான கேள்வி! நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு சினிமாக்கலைஞர்கள் மீது கோபத்தை உண்டாக்குவது எது?

A.அரசியல் பேசுவது
B.கற்பு பற்றி பேசுவது
C.சிகரெட் புகைப்பது
D.ஒதுங்கிப்போவது

சூடாமணி: ஹிஹி! இந்த வாட்டியும் டி தான் விடை! உங்க கம்ப்யூட்டரை மாத்துங்க சேட்டை! இல்லாட்டி பிச்சையெடுக்கிற நிலைமை வந்திரும்.

சேட்டைக்காரன்: இனிமேத் தானா? நாலணா, எட்டணாத் துட்டெல்லாம் எங்கேருந்து வந்ததுன்னு நினைக்கறீங்க? எல்லாம் காளிகாம்பாள் கோவில், கபாலீச்வரர் கோவில் வாசலிலே கலெக்ஷன் ஆனது தான். அது போகட்டும், விடையென்ன டி தானே? கம்ப்யூட்டர் அண்ணாச்சி! டி. ஒதுங்கிப்போவது என்பதை லாக் பண்ணுங்க ப்ளீஸ்! மிகச்சரியான விடை! சூடாமணி, ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க! அடுத்த கேள்விக்குப்போகலாமா?

சூடாமணி: சீக்கிரமாக் கேளுங்க! லேட்டாச்சுன்னா லாரி கிடைக்கிறது கஷ்டம்!

சேட்டைக்காரன்: பனிரெண்டாவது கேள்வி இதோ! இந்தியாவில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ள மாநிலம் எது?

A.உத்திரப்பிரதேசம்
B.ஆந்திரா
C.தமிழ்நாடு
D.பஞ்சாப்

சூடாமணி: ஹையா! இதுவும் டி தானே? லாக் பண்ணுங்க சேட்டை! பஞ்சாப்! பனிரெண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஜெயிச்சிட்டேன்! எல்லாரும் ஜோராக் கைதட்டுங்கோ!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: ஆர்டர்! ஆர்டர்!! சைலன்ஸ்!! காசு வாங்குறது என் கிட்டே! கை தட்டறது அவன் சொன்னதுக்கா? இப்போ கேட்கிறேன் பாரு! கேள்வி நம்பர் பதிமூன்று! இந்தியாவிலேயே லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிற மாநிலம் எது? உங்களுக்கான நான்கு விடைகள் இதோ:

A.உத்திரப்பிரதேசம்
B.தில்லி
C.தமிழ்நாடு
D.தமிழ்நாடு

ஹை! மிஸ்டர் சூடாமணி! இப்போ நீங்க ’டி’ சொல்லுவீங்களா? சொல்லுவீங்களா?

சூடாமணி: அஸ்க்கு புஸ்க்கு! அதெப்படி சொல்லுவேன்? இந்த தடவை பி.தில்லி தானே விடை? ஹிஹிஹி!

சேட்டைக்காரன்: அப்படீன்னா இதையும் லாக் பண்ணட்டுமா? கம்ப்யூட்டர் அண்ணாச்சி...

கம்ப்யூட்டர் அண்ணாச்சி: லாக் பண்ணியாச்சு சேட்டை! நீயும் உன் டிவியும் உன் புரோகிராமும்...தூத்தெறி!

சேட்டைக்காரன்: அட எல்லாரும் கைதட்டுங்கப்பா! சூடாமணி இருபத்தி ஐந்து லட்சம் ஜெயிச்சிட்டாரில்லே? ஜோரா ஒரு தடவை கைதட்டுங்கோ!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சூடாமணி: என்ன சேட்டை? கொறளி வித்தை காட்டுறவன் மாதிரி சொல்லுறே?

சேட்டைக்காரன்: பழக்கதோஷம் தான்! சரி, இப்போ ஐம்பது லட்ச ரூபாய்க்கான கேள்வியைக் கேட்கப்போறேன். என்ன பதில் சொல்லுறீங்கன்னு பார்ப்போம். பதினான்காவது கேள்வி உங்களுக்காக இதோ! இந்தியாவிலேயே அதிக பாராட்டு விழாக்கள் நடக்கும் மாநிலம் எது? உங்களுக்கான ஆப்ஷன்ஸ் இதோ...

A.உத்திரப்பிரதேசம்
B.தமிழ்நாடு
C.தமிழ்நாடு
D.தமிழ்நாடு

சூடாமணி: சேட்டை! ஐம்பது லட்சம் ஜெயிச்சிட்டேன்! ஐம்பது லட்சம் ஜெயிச்சிட்டேன்!! விடை ஏ.உத்திரப்பிரதேசம்! லாக் பண்ணு!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: அடுத்த தடவை கேள்வியை மாத்தறேனோ இல்லியோ, பார்வையாளர்களை மாத்தியே தீரணும்? போகட்டும்! மிஸ்டர் சூடாமணி! இதோ இறுதியாக, பதினைந்தாவது கேள்வி! அண்மையில் பாராளுமன்றத்தொடரின் போது உல்லாசப்பயணம் சென்ற மத்திய மந்திரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

A. தமிழ்நாடு
B. தமிழ்நாடு
C. தமிழ்நாடு
D. தமிழ்நாடு

சூடாமணி: சேட்டை, கேள்வி ரொம்ப கஷ்டமாயிருக்கு! லைஃப்லைனை உபயோகப்படுத்திக்கலாமா?

சேட்டைக்காரன்: தாராளமா! எந்த லைஃப்லைனை உபயோகப்படுத்தப்போறீங்க?

சூடாமணி: ஆடியன்ஸ் போல்! பார்வையாளருங்க கிட்டே கேட்கப்போறேன்.

சேட்டைக்காரன்: லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்! ஒரு கோடி ரூபாய்க்கான கேள்விக்காக சூடாமணி உங்களது உதவியை நாடுகிறார். உங்கள் கையிலிருக்கிற டப்பாவில் அனேகமாக A,B,C,D என்ற நான்கு எழுத்துக்கள் தெளிவாக இருந்தாலும் இருக்கும். உங்களது விடைகளை அதற்குரிய பொத்தானை அழுத்தித் தெரிவிக்கவும். டப்பாவுக்கு வாரண்டி தீர்ந்துவிட்டபடியால் கொஞ்சம் மெதுவாக அழுத்தவும். யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ!

பார்வையாளர்கள் பொத்தானை அழுத்த, திரையில் அவர்கள் அளித்த வாக்குகளின் முடிவு தெரிகிறது. அது......

A.தமிழ்நாடு 25%
B.தமிழ்நாடு 25%
C.தமிழ்நாடு 25%
D.தமிழ்நாடு 25%

சேட்டைக்காரன்: சூடாமணி! பார்வையாளர்களே சற்றுக் குழம்பித்தான் போயிருக்கிறார்கள் போலிருக்கிறது.

சூடாமணி: யாரு சொன்னாங்க, அவங்க ரொம்பத் தெளிவாத் தான் இருக்காங்க! வேலியிலே போறதை வேட்டியிலே விட்டுக்க அவங்க என்ன சேட்டை டிவியா?

சேட்டைக்காரன்: அது சரி, இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? இதுவரை ஐம்பது லட்சம் ஜெயித்து விட்டீர்கள்! இதை வாங்கிக்கொண்டு போயி சுங்குவார்சத்திரத்துலே நிதிநிறுவனம் ஆரம்பித்தால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து எல்லா டிவிக்களிலும் பேப்பர்களிலும் உங்கள் புகைப்படத்தோடு பெயர் வருமே?

சூடாமணி: சரி, ஒரு கை பார்த்திடலாம்! நான் இன்னொரு லைஃப்-லைனை யூஸ் பண்ணப்போறேன். ஃபிஃப்ட்டி-ஃபிஃப்ட்டி!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! சூடாமணி இரண்டாவது லைஃப்-லைனை உபயோகப்படுத்த விரும்புகிறார். எனவே கேள்விக்கான நான்கு விடைகளில் இரண்டு சரியான விடைகளைக் கடாசிவிட்டு, ஒரு சரியான பதிலையும் ஒரு தப்பான பதிலையும் மட்டும் காட்டுங்க ப்ளீஸ்!

திரையில் இரண்டு விடைகள் மறைந்து, இரண்டு விடைகள் மட்டுமே தெரிகின்றன. அவை:

A.தமிழ்நாடு
D.தமிழ்நாடு

சேட்டைக்காரன்: ஓ! சூடாமணி! கம்ப்யூட்டரும் உங்களுக்குக் கைகொடுக்கவில்லையே!

சூடாமணி: எப்படிக் கைகொடுக்கும்? ஏற்கனவே உடைச்ச கம்ப்யூட்டரெல்லாம் பத்தாதா?

சேட்டைக்காரன்: இப்போது என்ன செய்யப்போகிறீர்கள் சூடாமணி? இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இன்னும் ஒரு லைஃப்-லைன் மீதமிருக்கிறது. தொடர்ந்து ஆடப்போகிறீர்களா அல்லது கிடைத்தது போதும் என்று அம்பது லட்ச ரூபாயைச் சில்லறையா வாங்கிக்கிட்டு அடுத்த லாரியைப் பிடித்து ஊருக்குப்போகப்போறீர்களா?

சூடாமணி: சரி, மூன்றாவது லைஃப்-லைனையும் உபயோகப்படுத்துகிறேன். Phone A Friend! ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுவின் செல்நம்பருக்கு போன் போடுங்கள்!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! சூடாமணி இறுதியாக ஃபோன்-ய-ஃபிரண்டையும் உபயோகிக்க விரும்புகிறார். ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச வையுங்கள் ப்ளீஸ்!

ட்ரிங்...ட்ரிங்...! ட்ரிங்...ட்ரிங்...!!

சேட்டைக்காரன்: ஹலோ!

ஆ.அய்யாக்கண்ணு: அலோ, எவம்லே இது? நான் இங்கண இருக்கேமுண்ணு உனக்கு எப்படிலே தெரியும்?

சேட்டைக்காரன்: மிஸ்டர் அய்யாக்கண்ணு! நான் வாங்க கோடீஸ்வரனாகலாம் நிகழ்ச்சியிலிருந்து சேட்டைக்காரன் பேசுகிறேன்.

ஆ.அய்யாக்கணு: லேய், நீ பிளாக்குப் போட்டுத் தொல்லை கொடுக்குது போதாதுண்ணா போனிலேயும் வாறே? திருநேலி பக்கம் வந்திராதே! தச்சநல்லூர் தாண்ட மாட்டே சொல்லிப்புடுகேன்.

சேட்டைக்காரன்: மிஸ்டர் அய்யாக்கண்ணு! உங்க நண்பர் சுங்குவார் சத்திரம் சூடாமணி எங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்! இது வரை ஐம்பது லட்சம் வென்றிருக்கிறார்.

ஆ.அய்யாக்கண்ணு; யாரு, அந்த எளவெடுத்த பயலா? அம்பது லட்சமா? லே சேட்டை, என்னியும் கூப்புடுலே மக்கா! நானும் அமெரிக்கா போறேனில்லா?

சேட்டைக்காரன்: இறுதிக்கேள்விக்கு அவரால் தப்பான விடையைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். உங்களிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்பார்! மிஸ்டர் சூடாமணி, ஒரே ஒரு நிமிஷம் தான்...யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ....!

சூடாமணி: அண்ணாச்சி,நல்லா இருக்கீயளா? அதாவது அண்ணாச்சி, பாராளுமன்றத்தொடருக்குப் போகாம பிக்னிக் போன மந்திரி எந்த மாநிலமுன்னு கேக்காரு இந்த சேட்டை! ரெண்டு பதிலிருக்கு அண்ணாச்சி! ஒண்ணும் தமிழ்நாடு, இன்னொண்ணு தமிழ்நாடு! இதுலே எது தப்பான விடை அண்ணாச்சியோவ்?

ஆ.அய்யாக்கண்ணு: லேய் பொச கெட்டபயலே! ஊருக்கு மதுரை வழியா திரும்பி வாறியா கேரளா வழியா சுத்திப் போகப்போறியா? கோயில்பட்டி பஸ் ஸ்டாண்டுலே வெள்ரிப்பிஞ்சு சீவுற மாதிரி சீவிருவாங்கலே...! கெடைக்கிற வண்டியைப் புடிச்சு ஊருக்கு வந்து சேருலே கோட்டிக்காரப்பய மக்கா! செத்தம்பொறவு கோடி ரூபாய் இருந்தா என்ன, கோடித்துணி கூட இல்லாட்டாத் தான் என்னா? கிளம்புலே நீ!

சேட்டைக்காரன்: ஒரு நிமிஷம் முடிந்தது! என்ன பதில் சூடாமணி!

சூடாமணி: சேட்டை, என்னை விட்டிரு! எனக்கு ஒரு கோடி ரூபாயெல்லாம் வேண்டாம். எங்காத்தாவுக்கு நான் ஒரே புள்ளே! இன்னும் காது கூட குத்தாம வச்சிருக்காக! நான் போறேன், இந்த ஆட்டத்துக்கு நான் வரலே...

சேட்டைக்காரன்: சூடாமணி, ஜூட் விட்டால் அம்பது லட்ச ரூபாய் கிடைக்கும்!

சூடாமணி: அதை நீயே வச்சுக்க சேட்டை! எப்படியும் நாளைக்கு உன் டிவி இருக்கப்போறதில்லே! அம்பது லட்ச ரூபாயை வச்சு ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு நல்லபடியாப் பொழைக்கிற வழியைப் பாரு! நான் ஊருக்குப்போறேன்.

சேட்டைக்காரன்: மிஸ்டர் சூடாமணி! ஒரு நிமிஷம்!

சூடாமணி: சேட்டை! எனக்கு எக்மோர் வரைக்கும் போக ஒரு ஆட்டோ புடிச்சுத்தர்றியா? நான் சென்னைப்பக்கமே வர மாட்டேன்.

சேட்டைக்காரன்: ஆஹா, இதோ ஆட்டோவே வந்திருச்சு போலிருக்கே!

ஆட்டோ: இங்கே சேட்டைக்காரன்னுறவன் யாரு?

சூடாமணி: ஐயோ, ஆட்டோக்காரர் கையிலே அருவா! நான் ஜூட்!

சேட்டைக்காரன்: ஐயையோ, இது வேறே ஆட்டோ மாதிரியில்லே இருக்கு! நான் அம்பேல்!

53 comments:

ஈரோடு கதிர் said...

சூப்பர் சேட்டை

பிரபாகர் said...

முழு நீள நகைச்சுவை படம் பார்த்த திருப்தி! அருமை நண்பா!

சேட்டை டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை.... இது போல் அடிக்கடி செய்யுங்க!

பிரபாகர்...

ஜில்தண்ணி said...

\\நீங்க போட்டிருக்கிற வாட்சு,மோதிரம் எல்லாத்தையும் சப்ஜாடா கழட்டிக்கிட்டு அனுப்பிருவோம்.\\

ஐய்யோ,நான் இல்லீங்க

\\கம்ப்யூட்டர் அண்ணாச்சி! ஹூண்டாய் காரை லாக் பண்ணுங்க!\\

கம்ப்யூட்டர் அண்ணாச்சி:லாக் பன்னிட்டேன்,தொரக்க முடியல
(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டையின் சேட்டை நல்லா இருக்கு

அன்புடன் நான் said...

சேட்டை நல்லாத்தான் இருக்கு.

அகல்விளக்கு said...

செம்ம சேட்டை...

:)

ஜில்தண்ணி said...

அடுத்த நிகழ்சியில் பங்கேற்க்க வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கோ,கண்டிப்பா வரேன்

Aba said...

@சேட்டை,

//லேய், நீ பிளாக்குப் போட்டுத் தொல்லை கொடுக்குது போதாதுண்ணா போனிலேயும் வாறே? திருநேலி பக்கம் வந்திராதே! தச்சநல்லூர் தாண்ட மாட்டே சொல்லிப்புடுகேன்.//

ஆகா சேட்டை.. நா பேசுறத ரெக்கார்ட் பண்ணி எனக்கேவா ரிப்பீட்டு அடிக்கற நீயி? லேய்.. நா யாருன்னு தெரியுமாலே? கரிகாலன் பேரக்கேட்டா சுத்துப்பட்டு கிராமமேல்லாம் அலறும்லே.... பீ கேர்புல்..

Chitra said...

சும்மா சொல்லக் கூடாது - இந்த வாரு வாருனா - ஆட்டோ மட்டும் இல்ல ஜீப்பும் சேர்ந்து வரும்..... ha,ha,ha,ha....

Unknown said...

சேட்டை ஆரம்பமாயிருச்சிடோய்...

சிநேகிதன் அக்பர் said...

அந்த கடைசில சொன்ன ஆட்டோ மேட்டர் சூப்பரோ சூப்பர்.

கலக்குறீங்க சேட்டை.

Rekha raghavan said...

டபுள் ரூம் போட்டு யோசிப்பீங்களோ? நகைச்சுவையில் இப்படி பின்னி பெடலெடுக்கரீங்களே . இந்த சேட்டை மிகப் பிரமாதம்.பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜில்தண்ணி said...

அடுத்த நிகழ்சியில் பங்கேற்க்க வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கோ,கண்டிப்பா வரேன்
//

நானும்...


நானும் வரேன்.. சூப்பர் கலக்கல்

சைவகொத்துப்பரோட்டா said...

கோடீஸ்வரன் ஆகுறது ரொம்ப சுளுவா
இருக்கே!!!

ஜெய்லானி said...

// எங்காத்தாவுக்கு நான் ஒரே புள்ளே! இன்னும் காது கூட குத்தாம வச்சிருக்காக! நான் போறேன், இந்த ஆட்டத்துக்கு நான் வரலே...//

ஹா..ஹா....

ஷர்புதீன் said...

:)

பொன் மாலை பொழுது said...

// வாட்சு,மோதிரம் எல்லாத்தையும் சப்ஜாடா கழட்டிக்கிட்டு அனுப்பிருவோம்.//

ஜட்டிய கழட்டாம இருந்தா நானும் ஆட்டத்துக்கு வர்றேன்

vinthaimanithan said...

//பொதுவா, எனக்கு அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே ஈடுபாடு கிடையாதுங்க! சினிமா மட்டும் தான் பார்க்கிறது வழக்கம்!//

தமிழ்நாட்டு ஜனத்தொகையில அம்புட்டு பேரும் அப்டிதானுங்கோவ்

அப்புறம் உங்களுக்கெல்லாம் ஆட்டோ பத்தாது... வேற... வேற... வேற

manjoorraja said...

மத்த டிவிக்களில் வரும் நிகழ்ச்சியை விட இந்த சேட்டைக்காரன் டிவிலெ வரும் இந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சி.... சூப்பரோ... சூப்பர். கலக்குறீங்க சேட்டை.

ஸ்ரீராம். said...

இன்னமும் ஆட்டோலதான் வர்றாங்களா...அழகுதான் போங்க...

vasu balaji said...

சூப்பர்ப்:))

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நெச டீ.வீ.பொட்டீயில வர்ரத விட உங்க நிகழ்ச்சி ந்ல்லாயிருக்கு ந்ல்ல கற்பனைத்திறன்..

ரிஷபன் said...

ஹா..ஹா..ஹா..
ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே குசும்பு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலகலப்பான நிகழ்ச்சி..

செ.சரவணக்குமார் said...

எக்ஸலன்ட் நண்பா.

Philosophy Prabhakaran said...

தொடர்ந்து சேட்டையோடு சமூகக்கருத்துகளையும் சொல்லி வருகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

சுதாகர் said...

என்ன சேட்டை கடைசில ஆட்டோவே வந்திருச்சு போல.....

சூப்பரப்பு.........

மசக்கவுண்டன் said...

என்ன சொல்றதுன்னு தெரியலீங்க? கோடி ரூபாய்னா எவ்வளவு இருக்கும்? ஒரு டிரங்குப்பெட்டில வச்சுக்கிடலாங்களா?

settaikkaran said...

ஈரோடு கதிர் said...

//சூப்பர் சேட்டை//

ஆஹா! உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது. மிக்க நன்றி!

settaikkaran said...

பிரபாகர் said...

//முழு நீள நகைச்சுவை படம் பார்த்த திருப்தி! அருமை நண்பா!//

உங்களது உற்சாகமூட்டும் பின்னூட்டம் படித்து புதிய உத்வேகம் பிறக்கிறது.

// சேட்டை டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை.... இது போல் அடிக்கடி செய்யுங்க!//

நிச்சயம் இது போல இன்னும் தொடர்ந்து பல இடுகைகள் போட முயல்வேன். மிக்க நன்றி!

settaikkaran said...

ஜில்தண்ணி said...

//ஐய்யோ,நான் இல்லீங்க//

பயந்திட்டீங்களா? :-))

//கம்ப்யூட்டர் அண்ணாச்சி:லாக் பன்னிட்டேன்,தொரக்க முடியல(பார்வையாளர்கள் கரகோஷம்)//

எங்க பார்வையாளர்களைப் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க போலிருக்கே? :-)

// சேட்டையின் சேட்டை நல்லா இருக்கு//

//அடுத்த நிகழ்சியில் பங்கேற்க்க வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கோ, கண்டிப்பா வரேன்//

மிக்க நன்றி!! :-))

settaikkaran said...

அகல்விளக்கு said...

//செம்ம சேட்டை... :)//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

சி. கருணாகரசு said...

//சேட்டை நல்லாத்தான் இருக்கு.//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

கரிகாலன் said...

//ஆகா சேட்டை.. நா பேசுறத ரெக்கார்ட் பண்ணி எனக்கேவா ரிப்பீட்டு அடிக்கற நீயி? லேய்.. நா யாருன்னு தெரியுமாலே? கரிகாலன் பேரக்கேட்டா சுத்துப்பட்டு கிராமமேல்லாம் அலறும்லே.... பீ கேர்புல்..//

அண்ணாச்சி, கோபப்படாதீய! ஏதோ ஒரு ஃபுளோவுலே எளுதிப்புட்டேம். இனி கவனிச்சு எளுதேன். சரிதானுங்களா? நன்றிங்கண்ணாச்சியோ....!

settaikkaran said...

Chitra said...

//சும்மா சொல்லக் கூடாது - இந்த வாரு வாருனா - ஆட்டோ மட்டும் இல்ல ஜீப்பும் சேர்ந்து வரும்..... ha,ha,ha,ha....//

என்னங்க, திருநேலிக்காரங்களா இருந்துக்கிட்டு இந்த பயங்காட்டறீய? :-)) ஆட்டோ, ஜீப் வரதுக்கு முன்னாலே காலிலே போயி விளுந்திருவோமில்லா?

மிக்க நன்றி!!

settaikkaran said...

முகிலன் said...

//சேட்டை ஆரம்பமாயிருச்சிடோய்...//

மிக்க நன்றி!! :-))

settaikkaran said...

அக்பர் said...

//அந்த கடைசில சொன்ன ஆட்டோ மேட்டர் சூப்பரோ சூப்பர்.//

ஹிஹி! உங்களுக்குப் பிடிச்சிருக்குங்களா? ரொம்ப மகிழ்ச்சிங்க!

//கலக்குறீங்க சேட்டை.//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

KALYANARAMAN RAGHAVAN said...

//டபுள் ரூம் போட்டு யோசிப்பீங்களோ? நகைச்சுவையில் இப்படி பின்னி பெடலெடுக்கரீங்களே . இந்த சேட்டை மிகப் பிரமாதம்.பாராட்டுகள்.//

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நம்ம மண்டையிலே மொத்தம் அஞ்சு ரூமு இருக்காமில்லா? அத வச்சுத்தான்...ஹிஹி! :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

பட்டாபட்டி.. said...

//ஜில்தண்ணி said...

அடுத்த நிகழ்சியில் பங்கேற்க்க வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கோ, கண்டிப்பா வரேன்//

நானும்...

நானும் வரேன்.. சூப்பர் கலக்கல்//

ஆஹா! இதை வச்சு ஒரு தொடர்பதிவு போடலாம் போலிருக்குதே! பண்ணிடுவோம்! :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

சைவகொத்துப்பரோட்டா said...

//கோடீஸ்வரன் ஆகுறது ரொம்ப சுளுவா
இருக்கே!!!//

பின்னே, சேட்டை டிவி நடத்துனா வேறே எப்படியிருக்கும்? :-))))

மிக்க நன்றி!!

settaikkaran said...

ஜெய்லானி said...

// எங்காத்தாவுக்கு நான் ஒரே புள்ளே! இன்னும் காது கூட குத்தாம வச்சிருக்காக! நான் போறேன், இந்த ஆட்டத்துக்கு நான் வரலே...//

//ஹா..ஹா....//

மிக்க நன்றி!! :-)))))

settaikkaran said...

ஷர்புதீன் said...

// :) //

மிக்க நன்றி!!

settaikkaran said...

கக்கு - மாணிக்கம் said...

//ஜட்டிய கழட்டாம இருந்தா நானும் ஆட்டத்துக்கு வர்றேன்//

அந்த உத்தரவாதமெல்லாம் தர முடியாதுங்க! :-)))

மிக்க நன்றி!!

settaikkaran said...

விந்தைமனிதன் said...

//தமிழ்நாட்டு ஜனத்தொகையில அம்புட்டு பேரும் அப்டிதானுங்கோவ்//

நாம ரெண்டு பேர் கூடவா? :-))))//அப்புறம் உங்களுக்கெல்லாம் ஆட்டோ பத்தாது... வேற... வேற... வேற//

வேறே வேறேன்னு சுறாவை அனுப்பிராதீங்க!!

மிக்க நன்றி!!

settaikkaran said...

ஸ்ரீராம். said...

//இன்னமும் ஆட்டோலதான் வர்றாங்களா...அழகுதான் போங்க...//

என்னங்க பண்றது, பெட்ரோல் விலை ஏறிடுச்சில்லா? :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

வானம்பாடிகள் said...

// சூப்பர்ப்:))//

ஐயா, மிக்க நன்றி!!

settaikkaran said...

தமிழ் வெங்கட் said...

//நெச டீ.வீ.பொட்டீயில வர்ரத விட உங்க நிகழ்ச்சி ந்ல்லாயிருக்கு ந்ல்ல கற்பனைத்திறன்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

ரிஷபன் said...

//ஹா..ஹா..ஹா..ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே குசும்பு..//

ஹிஹி! அத வச்சுத்தானே பொட்டிதட்டி வண்டியோட்டிக்கிட்டிருக்கேன். :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//கலகலப்பான நிகழ்ச்சி..//

அண்ணே! மிக்க நன்றி!!

settaikkaran said...

செ.சரவணக்குமார் said...

//எக்ஸலன்ட் நண்பா.//

நண்பரே! மிக்க நன்றி!!

settaikkaran said...

philosophy prabhakaran said...

//தொடர்ந்து சேட்டையோடு சமூகக்கருத்துகளையும் சொல்லி வருகிறீர்கள்... வாழ்த்துக்கள்...//

தொடர்ந்து வருகை புரிந்து உற்சாகமூட்டுவதற்கு மிக்க நன்றி!!

settaikkaran said...

சுதாகர் said...

//என்ன சேட்டை கடைசில ஆட்டோவே வந்திருச்சு போல.....//

ஆமாங்க, புலி வருது கதையாயிடுச்சு!

//சூப்பரப்பு.........//

மிக்க நன்றி!!

settaikkaran said...

மசக்கவுண்டன் said...

//என்ன சொல்றதுன்னு தெரியலீங்க? கோடி ரூபாய்னா எவ்வளவு இருக்கும்? ஒரு டிரங்குப்பெட்டில வச்சுக்கிடலாங்களா?//

இப்படியொரு சந்தேகமா? ஒண்ணு பண்ணுவோம். நான் டிரங்குப்பெட்டி கொண்டுவரேன். நீங்க ஒரு கோடி கொண்டாங்க. பார்த்திடலாம். :-))

மிக்க நன்றி!!

வெங்கட் நாகராஜ் said...

கலக்கிட்டீங்க சேட்டை. பெரிய லாரிதான் வரப்போகுது போங்க.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி