Saturday, October 15, 2011

திருவல்லிக்கேணி கண்டேனே!வில்லாளன் பார்த்தனுக்கு வித்தகனாய் ரதஞ்செலுத்தி
      விண்ணோரும் மண்ணோரும் வியந்தவுரை நயந்தளித்து
பொல்லாத கவுரவர்க்காய்ப் பீடுமர் உதிர்த்தகணை
      பொன்மேனி தனில்தாங்கிப் பொறுத்திருந்த பெருமானாம்
நில்லாத நீளலைகள் நிதம்வந்து பணிந்தேற்றும்
      நின்றதிருக் கோலமுற்ற மாதவனை வேங்கடந்தான்
செல்லாதே கண்டுவந்தேன் சேவித்தேன் சாரதியை
      சென்னைநகர்த் திருவல்லிக் கேணிதனிற் கண்டேனே!


திருக்கண்ட பேயாழ்வார் தேன்தமிழில் பாடியதும்
      திருமழிசை ஆழ்வாருன் திவ்வியத் தலம்வந்தே
உருக்கண்டு உவகையுடன் ஊறுகவி உரைத்ததுவும்
      உத்தமனுன் புகழ்பாடி திருமழிசை ஆழ்வாரும்
அருட்கண்டு அந்தாதி அழகுற வியற்றியதும்
      அண்ணல் ராமானுசர்க்கு ஆராமுதாகியதும்
பொருட்கொண்ட மூவேந்தர் பல்லவரும் பூசித்த
      பொற்றாளைத் திருவல்லிக் கேணிதனிற் கண்டேனே!


மாலவனாம் மலையப்பன் கண்ணபிரான் திருவுருவை
      மகிழ்வுடனே பூண்டுநிற்கும் மாட்சிதனைக் காண்பதிங்கு
காலமெனும் தேர்செலுத்திக் கண்டுதொழும் அடியாரைக்
      கருமவினைப் பாதையினைக் கடப்பதற்கே மனமிரங்கி
ஞாலமதில் தருமமதைச் சூதுகவ்வும் போதினிலே
       நயந்துவந்தே காத்தருளும் நாயகனும் அவனுடனே
கோலவிழி வேதவல்லி கொலுவிருந்தே குறைதீர்க்கும்
      கோவில்தனைத் திருவல்லிக் கேணிதனிற் கண்டேனே!


நம்பிதிரு மாலவனை நம்பிதினம் நாடியவர்
      நாராயணன்பெயரை நாவாறக் கூறியவர்
உம்பரிடர் தீர்த்தவனை உள்ளத்தில் ஏற்றியவர்
      உனையன்றி கதியில்லை யெனவந்து போற்றியவர்
கொம்பினை வலக்கையிற் கொண்டபெரு மானவனைக்
      கொற்றவரும் மற்றவரும் கும்பிடுபிரானவனை
அம்புவியில் கண்டவர்க்கு அருள்வெள்ளம் காட்டுவதோர்
      ஆண்டவனைத் திருவல்லிக் கேணிதனிற் கண்டேனே!

21 comments:

K.s.s.Rajh said...

நல்ல கவிதை

aotspr said...

மிக அருமையான கவிதை.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

CS. Mohan Kumar said...

சென்ற வாரம் தான் திருவெல்லிக்கேணி சென்று வந்தேன். பகிர்வுக்கு நன்றி

Unknown said...

அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!

Jayakumar Chandrasekaran said...

அருமை. பாரதி இருந்திருந்தால் நிச்சயம் உங்களைப் பாராட்டியிருப்பார். பாரதியின் அதே நடை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை சேட்டை.. ஆண்டவன் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.....

கும்மாச்சி said...

நல்ல கவிதை சேட்டை.

பெருமாள் மீசை வைத்திருக்கும் ஒரே கோயில் பார்தசாறதி கோயில்.

middleclassmadhavi said...

அருமையான கவிதை! பாராட்டுகள்.

துளசி கோபால் said...

சனிக்கிழமை உங்க புண்ணியத்தால் பார்த்ஸாரதி தரிசனம்! மிகவும் நன்ரி சேட்டை.

அல்லிக்கேணி அழகன் அவன்!

rajamelaiyur said...

அழகான கவிதை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

ரிஷபன் said...

பெருமாள் கடைக்கண் பட்டு விட்டதோ.. அல்லிக்கேணியை அழகு தமிழில் கண்டேனே..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நகைச்சுவை நாடி ஓடி தேடி வந்தேன்.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிஸனம் கிடைத்தது. சந்தோஷம்.

அழகு தமிழில் அற்புதக் கவிதை. பாராட்டுக்கள்.

மகேந்திரன் said...

மாதவனுக்கோர் பாமாலை
அழகுத் தமிழில்

பெசொவி said...

Nice one!

Venkat said...

தலைப்பைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்று நினைத்து நுழைந்தேன். இனிய தமிழில் அழகான சந்தத்துடன் பார்த்தசாரதிப் பெருமாள் மேல் புதுப் ப்ரபந்தம். மிக நல்ல முயற்சி. தொடரட்டும்.

அன்புடன் வெங்கட்

சி.பி.செந்தில்குமார் said...

அட!!!!!!!!!

kaialavuman said...

அருமையான ”பாசுர”க் கவிதை. நன்றிகள் சேட்டை.

G.M Balasubramaniam said...

அன்பின் சேட்டை, முதலில் பிடியுங்கள் என் பாராட்டுக்களை. அரசியல் நையாண்டி மட்டும்தான் எழுதுவிர்கள் என்று நினைத்திருந்தேன். அழகு தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். பிறமொழிப் படங்களையும் நடுநிலையுடன் விமரிசிக்கிறீர்கள்.ஒரு வட்டம் உங்கள் பதிவுகளில் புகுந்து வந்தால் உங்கள் பன்முகம் தெரிகிறது. இன்று முதல் உங்கள் பதிவுகளை விடாமல் தொடருவேன் மீண்டும் வாழ்த்துக்கள்.

settaikkaran said...

//K.s.s.Rajh said...
நல்ல கவிதை//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

October 15, 2011 9:17 AM
//Kannan said...

மிக அருமையான கவிதை.......நன்றி,//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//மோகன் குமார் said...

சென்ற வாரம் தான் திருவெல்லிக்கேணி சென்று வந்தேன். பகிர்வுக்கு நன்றி//

//விக்கியுலகம் said...

அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//jk22384 said...

அருமை. பாரதி இருந்திருந்தால் நிச்சயம் உங்களைப் பாராட்டியிருப்பார். பாரதியின் அதே நடை.//

பாரதி தரிசித்த பெருமான் எனக்கும் ஒரு துளி அருள் பாலித்தால் போதும்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!//

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை சேட்டை.. ஆண்டவன் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.....//

அப்படியே ஆகட்டும் வெங்கட்ஜீ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
October 15, 2011 9:56 AM
//கும்மாச்சி said...

நல்ல கவிதை சேட்டை.பெருமாள் மீசை வைத்திருக்கும் ஒரே கோயில் பார்தசாறதி கோயில்.//

ஆம்! காணக்கண்கோடி வேண்டும்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//middleclassmadhavi said...

அருமையான கவிதை! பாராட்டுகள்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//துளசி கோபால் said...

சனிக்கிழமை உங்க புண்ணியத்தால் பார்த்ஸாரதி தரிசனம்! மிகவும் நன்ரி சேட்டை.//

நான் தரிசித்து வந்த மகிழ்ச்சியில் எழுதினேன். எல்லாம் அவன் செயல்!

//அல்லிக்கேணி அழகன் அவன்!//

சந்தேகமில்லை!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//FOOD said...

கவிதை அருமையா இருக்கு.//

சந்தேகமில்லை!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

அழகான கவிதை//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

பெருமாள் கடைக்கண் பட்டு விட்டதோ.. அல்லிக்கேணியை அழகு தமிழில் கண்டேனே..//

பெருமாளின் தரிசனம் கிடைத்த நிறைவில் தான் எழுதினேன். :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நகைச்சுவை நாடி ஓடி தேடி வந்தேன்.புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிஸனம் கிடைத்தது. சந்தோஷம். அழகு தமிழில் அற்புதக் கவிதை. பாராட்டுக்கள்.//

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெருமாளை அதிகாலை தரிசித்தேன் ஐயா. அவனைப் பற்றி எழுத ஆவல் ஏற்பட்டு எழுதியது தான் இது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மகேந்திரன் said...

மாதவனுக்கோர் பாமாலை
அழகுத் தமிழில்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//பெசொவி said...

Nice one!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//venkat said...

தலைப்பைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்று நினைத்து நுழைந்தேன். இனிய தமிழில் அழகான சந்தத்துடன் பார்த்தசாரதிப் பெருமாள் மேல் புதுப் ப்ரபந்தம். மிக நல்ல முயற்சி. தொடரட்டும்.//

திவ்வியப்பிரபந்தம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அவனருள் வேண்டும் கோரிக்கையாய் இதை பெருமாளின் பாதகமலங்களில் வைத்தேன். திருவருள் இருந்தால் தொடர்வேன். மிக்க நன்றி! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

அட!!!!!!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல! :-)

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

அருமையான ”பாசுர”க் கவிதை. நன்றிகள் சேட்டை.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! வேங்கடவரின் வாழ்த்தே கிடைத்து விட்டது! :-)

//G.M Balasubramaniam said...

அன்பின் சேட்டை, முதலில் பிடியுங்கள் என் பாராட்டுக்களை. அரசியல் நையாண்டி மட்டும்தான் எழுதுவிர்கள் என்று நினைத்திருந்தேன். அழகு தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். பிறமொழிப் படங்களையும் நடுநிலையுடன் விமரிசிக்கிறீர்கள்.ஒரு வட்டம் உங்கள் பதிவுகளில் புகுந்து வந்தால் உங்கள் பன்முகம் தெரிகிறது. இன்று முதல் உங்கள் பதிவுகளை விடாமல் தொடருவேன் மீண்டும் வாழ்த்துக்கள்.//

அன்பின் ஐயா! வலைப்பதிவில் நமக்குத் தோன்றுவது எதுவாக இருந்தாலும், பிறர் வாசிப்பார்கள் என்ற உள்ளுணர்வுடன் தானே அனைவரும் எழுதுகிறோம். எனது முயற்சிகள் உங்களைப் போன்றோருக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் ஆசியும் ஆதரவும் இருந்தால், இன்னும் முயற்சிகள் தொடரும் ஐயா!

வருகைக்கும் கருத்துக்கும் பின்தொடர துவங்கியிருப்பதற்கும் மிக்க நன்றி ஐயா!