Tuesday, August 23, 2011

வாங்க, கூரையேறிக் கோழிபிடிப்போம்


(இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல; யாருக்காவது குத்தினால் நான் பொறுப்பல்ல!)

தங்களை என்னைவிடவும் தேசபக்தர்கள் என்று கருதுபவர்கள், அநாவசியமாக எனது ஹிட்ஸ்களை அதிகமாக்கி, என்னைப் பிரபலமாக்காமல், அவர்கள் விரும்புகிற ராம்லீலா பஜனைப்பதிவுகளைச் சென்று வாசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்ற நட்புகளுக்கு சம்பிரதாயமான வரவேற்போ வந்தனமோ எப்போதுமே அவசியப்பட்டதில்லை! இனியும் அவசியப்படாது என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.

ஒரு தனியார் நிறுவன ஊழியன் என்ற முறையில், அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்குச் செல்லுகிற அருவருப்பான கட்டாயம் எனக்கு இருக்கிறது. காறித்துப்பவும் லாயக்கற்ற சிலர்முன்பு கைகட்டி, பல்லைக்காட்டி ஒவ்வொரு கட்டத்திலும் எனது சுயமரியாதையின் குரல்வளையை நானே நெறிக்க வற்புறுத்தப்படுகிறேன். "த்தூ! இந்தப் பொழப்புக்கு......’ என்று மனதுக்குள் சபிப்பதைத் தவிர வழியின்றி, சகித்துக்கொண்டு, ஏட்டுச்சுரைக்காய் கொள்கைகளுடன் சமரசம் செய்துகொண்டு, மலத்தை மிதித்த அசூயையுடன்தான் ஒவ்வொருமுறையும் அரசு அலுவலகங்களை விட்டு வெளியேற நேரிடுகிறது. இந்த அவஸ்தையை அனுபவித்தவர்களிடம் கேளுங்கள் - ஊழல் ஒழிய வேண்டும் என்று அவர்கள் எப்படி உள்ளுக்குள் புழுங்கி, தினமும் தங்களது சாம்பலைத் தாங்களே அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதை! என் போன்றவர்களின் நெற்றியில் ஒரு கண்ணிருந்தால், அரசு அலுவலகங்களுக்காகப் புதிதாய்க் கட்டிடங்கள் எழுப்பத் தேவைப்பட்டிருக்காது; இருக்கிற கட்டிடங்களில் பலதும் வெறிச்சோடிப்போயிருக்கும்.

எவனுக்கய்யா தனது வருங்கால சந்ததியை, அதிகாரவர்க்கத்தின் கலாசிகளின் கருணைப்பார்வைக்காக கால்கடுக்க, கைகட்டி நிற்க வைக்க வேண்டுமென்று தோன்றும்? எங்கிருந்தாவது ஒரு நேர்மைக்கீற்றுவந்து, குப்புறப்படுத்துச் சாகக்கிடக்கிற நம்பிக்கையைத் தொட்டுத்தூக்கி எழுப்பிவிடாதா என்ற நப்பாசை எவனுக்கு இல்லை? உறங்கி எழுந்ததும் குடும்பத்தாரின் முகத்தைப் பார்க்கிற ஒவ்வொருவனுக்கும், அவர்களையாவது அந்த சாக்கடையில் விழாமல் காப்பாற்ற வேண்டுமே என்று தோன்றாமலா போய்விடும்? விருப்பமின்றி லஞ்சம் கொடுக்கிறவனின் மனம்படுகிற அவஸ்தைக்கும், ஒரு வழிப்பறித்திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனின் அவஸ்தைக்கும் யாராவது வந்து ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம்!

அப்புறம், நான் தேசபக்தனென்று எவருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. பத்து ரூபாய் கொடியை சட்டையில் குத்தியதும், எனது தேசபக்தி அங்கீகரிக்கப்படும் என்றால், அந்த தேசபக்திக்குச் செலவழிக்கிற பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு, நான் பிரகடனப்படுத்தப்பட்ட தேசத்துரோகியாய் இருக்க சம்மதிக்கிறேன். இன்று தேசமெங்கும் கொடிபிடித்துக் கோஷமிடுகிறவர்கள்தான் என்னைக்காட்டிலும் தேசபக்தியுடைவர்கள் எனில், அவர்களது தற்பெருமைக்குத் தலைவணங்கிவிட்டு, வழிவிட்டு ஒதுங்கி நிற்கச் சம்மதிக்கிறேன். ஆனால், நான் எறியப்போகிற சில கேள்விகளுக்கு, எவரேனும் ஒரு சுத்தமான அக்மார்க் தேசபக்தன் நேர்மையாகப் பதில் தேடுவார் என எதிர்பார்க்கிறேன்.

  • முந்தைய தி.மு.க.ஆட்சியின் போது உங்களுக்கு சென்னையில், உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, உங்களது ஊழல் எதிர்ப்பு உணர்வும் தேசபக்தியும் எந்த டாஸ்மாக்கில் குவார்ட்டர் அடித்துக்கொண்டிருந்தது? இன்றைக்கு மத்தியில் இருக்கிற அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் ஒரு மாநில அரசு என்பதால்தான், இந்த திடீர் எழுச்சியும் குறைப்பிரசவத்தில் பிறந்த கொள்கைப்பிடிப்பும்! இல்லாவிட்டால், மண்புழுக்கள் சீறியிருக்குமா?

  • உதாரணத்துக்கு, இன்றைக்கு அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிற ரஜினி அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்?(நான் ரஜினியின் பரமவிசிறி (அ) வெறியன் என்றாலும் முன்பொரு முறை பால்தாக்கரேயை அவர் ’தெய்வம்’ என்று சொன்னபோதே காறித்துப்ப வேண்டும் போலிருந்தது.)

இந்த வரிசையில் நான் கேட்க விரும்புகிற கேள்விகளின் அணிவகுப்பு மிகவும் நீளமானது என்பதால் முக்கியமான கேள்விக்கு வருகிறேன்.

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்,’ என்பது போல சென்னையிலும் ஜன்லோக்பாலை ஆதரித்து ஒரு பட்டினிப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சந்தோஷம்! நம்மை தேசபக்தர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கோ, ஆட்சேபிக்கிறவர்களுக்கு ’தேசத்துரோகி,’ என்ற பட்டம் சுமத்துவதற்கோ, இத்தகைய பொன்னான வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதனால், நடத்துங்க ராசா....!

லோக்பால் அல்லது ஜன் லோக்பால் என்பது வந்துவிட்டால் தேசத்தில் ஊழல் ஒழிந்து விடும் என்று நம்புகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள்! ஏதாவது ஒரு நம்பிக்கை இருப்பது நல்லதுதான். நான் கூட செவ்வாய், வெள்ளியென்றால் அன்னை காளிகாம்பாளை தரிசிக்காமல் அலுவலகம் செல்வதில்லை. என்னுடைய நம்பிக்கையும் என்றாவது ஒருநாள் நிறைவேறாமலா போய்விடும்? யார் கண்டார்கள், இன்ஃபோசிஸில் காலியாகியிருக்கும் நாராயணமூர்த்தியின் இருக்கையில் என்னை அன்னை காளிகாம்பாள் அமர்த்தினாலும் அமர்த்தலாம். நான் காத்திருக்கத்தயார்! அம்பாள் ஆர்டரை அனுப்புவாளாக! அண்ணா ஊழலை ஒழிப்பார் எனும்போது எதுவும் நடக்கலாம்.

முதலில் லோக்பால் என்பது மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்பதையாவது என் போன்றவர்களின் தேசபக்தியைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிற புண்ணியவான்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புவோமாக! ஆக, நீங்கள் அண்ணா நகர் ஆர்ச்சில் சார்ஜண்டுக்குக் கொடுத்த ஐம்பது ரூபாய்க்காகவோ, DL வாங்க வட்டாரப்போக்குவரத்துத் துறைக்குக் கொடுத்த கையூட்டுக்காகவோ, சாதிச்சான்றிதழ் வாங்கக் கொடுத்த லஞ்சத்துக்காகவோ லோக்பாலின் கதவைத் தட்டமுடியாது என்பதை ஒப்புக்கொள்ளுவீர்களா புண்ணியவான்களே?

அதற்கு நீங்கள் அணுக வேண்டியது லோக்பாலை அல்ல; லோக் ஆயுக்தாவை! துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இன்றுவரை லோக் ஆயுக்தா நிறுவப்படவில்லை. ஆகவே, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பால் வந்தாலும் நீங்கள் இங்கே லஞ்சம் கொடுப்பது நிற்கப்போவதில்லை. (நீங்கள் நிறுத்தாத வரை!) ஆகையால், முதலில் லோக் ஆயுக்தாவை தமிழகத்துக்குக் கொண்டுவர முயற்சிப்போமா?

சொல்லுங்கள், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர எந்த தேசபக்தன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்?

எவனாவது வருவான், அவன் முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருந்து, கண்மூடித்தனமாய்க் கல்லெறிந்துவிட்டு ஓடத்துடிக்கிற திடீர் வீரர்களே, இப்பொழுது நடக்கிற உண்ணாவிரதத்தை ’தமிழகத்தில் லோக் ஆயுக்தா வரும்வரைக்கும்,’ நீட்டிக்கும் போராட்டமாய் யார் முன்னெடுக்கிறீர்கள்?

அட, லோக் ஆயுக்தா வந்தால் தமிழகத்தில் லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடுமா? என்று கேட்கிறவர்களுக்கு, இந்த தேசவிரோதியின் சில செய்திகள் கீழ்வருமாறு:

"என் வாழ்க்கையில் முப்பது வருடங்களை, மஹாராஷ்டிராவில் ஊழலை ஒழிப்பதற்காகவே செலவழித்திருக்கிறேன். எனது உண்ணாவிரதங்களால் மொத்தம் ஏழு ஊழல் தடுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன," என்று மார்தட்டிய அண்ணல் அண்ணா ஹஜாரேயின் சொந்த மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே முதல்முதலாக லோக் ஆயுக்தா நிறுவப்பட்டது. இப்போது அந்த லோக் ஆயுக்தாவின் கதி என்ன? இதோ......

அண்ணாவின் சொந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தா வெறும் காகிதப்புலி!
Lokayukta a 'paper tiger' in Anna's home state

மகாராஷ்டிரா - ஊழலில் நம்பர்.1
Most corruption cases in Maharashtra, Rajasthan 2nd

அண்ணா ஹஜாரேயின் மாவட்டத்தில்தான் அதிக ஊழல்
Most corrupt Maharashtra babus caught in Hazare territory

லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் துடைத்துப்போட முடியாதபடி ஊழல் மலிந்திருப்பதற்கு, என் போன்ற தேசவிரோதிகளுக்கு இருக்கிற பங்கு எங்களது தேசப்பற்றைச் சந்தேகிக்கிறவர்களுக்கும் இருக்கிறது. இதை என் போன்ற தேசவிரோதிகள் எப்படி சொடுக்குப்போட்டு நிறுத்த முடியாதோ, அதே போல அண்ணா ஹஜாரே போன்ற அவதாரபுருஷர்களாலும் நிறுத்த முடியாது.

தொடைநடுங்கி நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தின் திடீர் வீரத்தைப் பரணிபாடி உங்களுக்கு நீங்களே சொரிந்து விட்டுக்கொள்ளுமுன்னர், ஊழலில் உங்களின் பங்கென்ன என்று ஒரு கணக்குப்போட்டு வைத்துக்கொள்ளுங்கள்!

இதை நிறுத்த வேண்டியது நாம்; நாம் மட்டும்தான்!

அதற்கு அண்ணா ஹஜாரே 21-08-11 அன்று பேசியபடி, அனைவரும் தியாகம் செய்யத் தயாராயிருங்கள்; துணிவுடன் இருங்கள்; அற்பசந்தோஷங்களைப் புறந்தள்ளுங்கள்; தேசத்துக்காக எதையும் செய்யச் சித்தமாயிருங்கள்!

செய்வீர்களா தேசபக்தர்களே? இந்தியாவை ஒரு ராலேகாவ் சித்தியாக்குவீர்களா?

இதுவரை நான் எழுதிய இடுகைகளில் இருக்கும் ஒரு ஆதாரத்தையும் மறுதலிக்கும் விதமாக பதில் எழுத அண்ணா ஹஜாரேயின் பக்தகோடிகளில் பலருக்குப் பொறுமையில்லை என்பது பின்னூட்டங்களைப் பார்த்தாலே புலப்படுகிறது.

பணக்காரனையும் சந்தா வசூலித்துக் கொள்ளையடிக்கிறவனையும், பொருளாதாரத்தைச் சீரழிக்கிற பணமுதலைகளையும், கள்ளச்சந்தைப் பேர்வழிகளையும் தண்டிக்க முடியாத ஒரு ஜன் லோக்பாலை வைத்துக்கொண்டு சாமானிய மனிதனுக்கு உதவப்போகிறது என்று ஆசைகாட்டுகிற தேசபக்தர்களுக்கு ஒரு அறிவுரை!

வாதத்துக்கு எதிர்வாதம் எடுத்து வைக்கத் துப்பில்லாதவர்கள், கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கும் உங்களது தேசபக்திப் பட்டங்களைக் கழிப்பறையில் காப்பாற்றி வைத்திருங்கள்! பின்னால் தேவைப்படும்!

55 comments:

கோகுல் said...

காட்டமான அலசல்!
எதையும் கண் மூடித்தனமாக ஆதரிக்குமுன் ஆராய வேண்டும்.
இதுக்கு என்னென்ன பின்னூட்டங்கள் வரப்போகுதோ?

சார்வாகன் said...

அருமையான அலசல்,
நல்லது நட்ந்தால் அனைவருக்குமே நல்லதுதான் என்றாலும்,இந்த ஜன் லோக்பால், பலன் தருமா என்று விவாதிப்பதையும் ஏற்றால்தான் ஊழல் ஒழிப்பு என்பது சாத்தியமா என உணர முடியும்.நீங்கள் கூறியவன்னம் கீழ் மட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிந்தாலே பிற‌ ஊழல்கள் இல்லாமல் போய் விடும்.
நன்றி

நீச்சல்காரன் said...

நாரணமூர்த்தியின் இடம் காலியாக இல்லையண்ணா. ஏற்கனவே எனக்கு தந்து நான் அதை K.V.கமல்நாத்துக்கு கொடுத்துட்டேன்.

Venkat said...

இதை நிறுத்த வேண்டியது நாம்; நாம் மட்டும்தான்!

I agree completely!

Anonymous said...

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்...

இது என் கருத்து...இது தேசப்பற்றின் அடையாளமில்லை...வெறும் common sense தான்...nothing more nothing less....
"60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலைவர் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்...

Unless one has a solution and can muster this much support for a noble cause ..without any return in mind..
அவரோடு வாயை மூடிக்கொண்டு இணைவது தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் நல்லது...இந்தியாவுக்கும் நல்லது...

அவரைப்போல் ஒரு தலைவர் வர இன்னும் ஒரு நூற்றாண்டு காத்திருக்கப்போகிறீர்களா?

அவருக்கு ரெண்டு பொண்டாட்டி...அவர் கோடு போட்ட அன்டர்வேர் போடுபவர்...அவர் மது அருந்துவார்...அவர் பேருந்தில் கல்லடித்தார்... என்றெல்லாம் சொல்லி ஓடத்தொடங்கியிருக்கும் புரட்சி புகைவண்டியை தடம் புரள வைப்பது முட்டாள்தனம்...

அது சோறு போட்டு வளர்த்த தாய்க்கும்...நன்றியில்லாமல் தினம் மிதிக்கும் மண்ணுக்கும் துரோகம்...

மறுபடியும்...நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

விரிவான அலசல்.... உங்கள் கருத்து சிலருக்கு ஒத்து போகாமல் இருக்கலாம். ஆனால் உண்மை இருக்கிறது

Philosophy Prabhakaran said...

// முன்பொரு முறை பால்தாக்கரேயை அவர் ’தெய்வம்’ என்று சொன்னபோதே காறித்துப்ப வேண்டும் போலிருந்தது //

ஹாட்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சேட்டை.

///நான் தேசபக்தனென்று எவருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. பத்து ரூபாய் கொடியை சட்டையில் குத்தியதும், எனது தேசபக்தி அங்கீகரிக்கப்படும் என்றால், அந்த தேசபக்திக்குச் செலவழிக்கிற பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு, நான் பிரகடனப்படுத்தப்பட்ட தேசத்துரோகியாய் இருக்க சம்மதிக்கிறேன்.///---அசைக்க முடியாத ஆணித்தரமான வார்த்தைகள்..!

அசத்தல் இடுகை..! நீங்க கலக்கிகிட்டே இருக்கீங்க சகோ..!

லஞ்சம் வாங்குகிறவர்கள் மீது எடுக்கப்படும் அதே நடவடிக்கையை லஞ்சம் குடுக்கிறவர்கள் மீதும் ஜன் லோக்பால் எடுக்குமேயானால்...

ஹா... ஹா...ஹா... அண்ணா ஹசாரே கூடாரம் காலி..!

நிறைய பேருக்கு ஜன் லோக்பால் மாநில அளவுக்கும் உரியது என்றே தவறாக நினைக்கின்றனர் : காரணம் ஊடகங்கள்..!

ஒருவேளை அண்ணா ஹசாரே தன் ஜன் லோக்பாலில்...

"ஊடகங்களையும் அங்கே தனியார் முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்கள் நடந்துகொள்ளும் சார்புநிலையையும், செய்தியில் பாரபட்ச நிலையையும், ஊடகங்களின் ஊழல்களையும், அவைகளின் பொய்ச்செய்திகளையும், இல்லாததை இருப்பது போல எழுதும்/சொல்லும்/காட்டும் மாய்மாலத்தையும், குற்றம் செய்த கம்பெனிகள் பற்றிய செய்தியில் எப்போதும் "ஒரு பிரபல தனியார் நிறுவனம்..." என்று உண்மையை மறைப்பதையும், இனிமேல் ஜன்லோக்பால் விடாது... நிச்சயமாக கேள்விகேட்கும்" என்று மட்டும் சொல்லி இருந்தால்....

அடாடாடா...

ஓர் ஊடகத்தில் கூட இவரைப்பற்றி செய்தி சொல்லி இருக்க மாட்டார்கள்...!

இந்த "தேசபக்தர்"களுக்கு இவரை யாரென்றே இன்று தெரிந்திருக்காது அல்லவா சகோ.சேட்டை..!

settaikkaran said...

//கோகுல் said...

காட்டமான அலசல்! எதையும் கண் மூடித்தனமாக ஆதரிக்குமுன் ஆராய வேண்டும். இதுக்கு என்னென்ன பின்னூட்டங்கள் வரப்போகுதோ?//

கண்மூடித்தனம் என்பதே சரியான வார்த்தை! இது தொடர்ந்தால் முட்டாள்தனம் என்றும் சொல்ல நேரிடலாம்.

பின்னூட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு யார் பதில் சொல்கிறார்கள் நண்பரே? :-) அனானியின் பெயரில் வந்து ஆங்கிலத்தில் வசைபாடுவார்கள். இல்லாவிட்டால், இவன் தேசத்துரோகி என்று நட்புவட்டத்தில் புரளி கிளப்புவார்கள். who cares? :-))

மிக்க நன்றி நண்பரே! முதல் பின்னூட்டம் நடுநிலையாளரிடமிருந்து வந்திருப்பது மகிழ்ச்சி! :-)

settaikkaran said...

//சார்வாகன் said...

அருமையான அலசல், நல்லது நட்ந்தால் அனைவருக்குமே நல்லதுதான் என்றாலும்,இந்த ஜன் லோக்பால், பலன் தருமா என்று விவாதிப்பதையும் ஏற்றால்தான் ஊழல் ஒழிப்பு என்பது சாத்தியமா என உணர முடியும்.//

லோக்பால் பலன் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது முழுமையாக ஊழலை ஒழிக்க முடியாது - ஒழிக்க வேண்டியது நாம் என்பதே எனது வாதம்!

//நீங்கள் கூறியவன்னம் கீழ் மட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிந்தாலே பிற‌ ஊழல்கள் இல்லாமல் போய் விடும்.//

அதுவும் ஒரு நல்ல துவக்கமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//நீச்சல்காரன் said...

நாரணமூர்த்தியின் இடம் காலியாக இல்லையண்ணா. ஏற்கனவே எனக்கு தந்து நான் அதை K.V.கமல்நாத்துக்கு கொடுத்துட்டேன்.//

என் கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா? :-)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//Venkat said...

I agree completely!//

Thank You very much. :-)

settaikkaran said...

//ரெவெரி said...

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி!

//இது என் கருத்து...இது தேசப்பற்றின் அடையாளமில்லை...வெறும் common sense தான்...nothing more nothing less....//

இது common sense இல்லை; Nonsense! nothing more nothing less! இது எனது கருத்து!

// "60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலைவர் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்...//

முடியலே சாமீ! அறுபது வருசமா இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த தலைவர் யாருமே இல்லேன்னா சொல்றீங்க? ஜெயபிரகாஷ் நாராயணன்னு ஒருத்தர் இருந்தாரே?

//Unless one has a solution and can muster this much support for a noble cause ..without any return in mind..//

This Jan Lokpal cannot eradicate corruption in one stroke. It will only lead to another anarchy and even lead to a catastrophic collapse of the entire administrative system.


//அவரோடு வாயை மூடிக்கொண்டு இணைவது தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் நல்லது...இந்தியாவுக்கும் நல்லது...//

போங்க, போய் வாயை மூடிக்கிட்டு அவரோட போராடுங்க! நான் இந்த மாதிரி முட்டாள்தனத்துக்கெல்லாம் ஆளாக மாட்டேன்!

//அவரைப்போல் ஒரு தலைவர் வர இன்னும் ஒரு நூற்றாண்டு காத்திருக்கப்போகிறீர்களா?//

அப்படீன்னா, இங்கே இருக்கிற 120 கோடி பேரும் ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவனா? என்ன பேத்தறீங்க?

//அவருக்கு ரெண்டு பொண்டாட்டி...அவர் கோடு போட்ட அன்டர்வேர் போடுபவர்...அவர் மது அருந்துவார்...அவர் பேருந்தில் கல்லடித்தார்... என்றெல்லாம் சொல்லி ஓடத்தொடங்கியிருக்கும் புரட்சி புகைவண்டியை தடம் புரள வைப்பது முட்டாள்தனம்...//

இது புரட்சிப்புகை வண்டியில்லே! கட்டைவண்டி - இதுலே ஏறி இந்தியாவை முன்னேற்றப்பாதையிலே கொண்டு போறேன்னு சொல்றதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதீங்க!

//அது சோறு போட்டு வளர்த்த தாய்க்கும்...நன்றியில்லாமல் தினம் மிதிக்கும் மண்ணுக்கும் துரோகம்...//

நான் தான் துரோகின்னு முதல்லேயே சொல்லிட்டேனே தியாகி? நீங்க தியாகியாவே இருந்து பட்டினி கிடந்து செத்து லோக் ஆயுக்தாவை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருவீங்களா? துணிச்சல் இருக்கா?

//மறுபடியும்...நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்...//

நன்றி! ஒரு தேசபக்தரோட பாராட்டுக் கேட்க நல்லாயிருக்கு! :-)

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

விரிவான அலசல்.... உங்கள் கருத்து சிலருக்கு ஒத்து போகாமல் இருக்கலாம். ஆனால் உண்மை இருக்கிறது//

மிக்க நன்றி நண்பரே! சிலருக்கு அல்ல; பலருக்கு என் கருத்து பிடிக்காது என்பது தெரியும். கவலையில்லை. :-)

//Philosophy Prabhakaran said...

ஹாட்...//

நன்றி! :-)

settaikkaran said...

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.சேட்டை.//

ஸலாம் சகோதரரே!

//அசைக்க முடியாத ஆணித்தரமான வார்த்தைகள்..! அசத்தல் இடுகை..! நீங்க கலக்கிகிட்டே இருக்கீங்க சகோ..!//

கலக்க வேண்டும் என்பதை விடவும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள். என்னால் ஆட்டுமந்தையில் ஒருவனாய் இருக்க முடியாது.

//லஞ்சம் வாங்குகிறவர்கள் மீது எடுக்கப்படும் அதே நடவடிக்கையை லஞ்சம் குடுக்கிறவர்கள் மீதும் ஜன் லோக்பால் எடுக்குமேயானால்... ஹா... ஹா...ஹா... அண்ணா ஹசாரே கூடாரம் காலி..!//

உண்மையில், அண்ணாவின் கூடாரத்தைப் பற்றித்தான் எழுதவிருந்தேன். நடுவில் சில புண்ணியவான்கள் எனக்கு தேசபக்தர் பட்டம் கொடுக்கலாமா வேண்டாமா என்று கூட்டம்போட்டதால், அவர்களுக்குப் புரியட்டும் என்று எழுதியிருக்கிறேன். :-)

//நிறைய பேருக்கு ஜன் லோக்பால் மாநில அளவுக்கும் உரியது என்றே தவறாக நினைக்கின்றனர் : காரணம் ஊடகங்கள்..!//

காரணம், அண்ணா ஹஜாரே மத்திய லோக்பாலிலேயே மாநில லோக் ஆயுக்தாவையும் கொண்டுவர விரும்புகிறார். இதற்கு எத்தனை மாநில அரசுகள் சம்மதிக்கும்? ஜெயலலிதா சம்மதிப்பாரா? நிதீஷ்குமாரும், நரேந்திர மோடியும் சம்மதிப்பார்களா? உளறிக்கொண்டு திரிகிறார்கள் அண்ணாவின் கோஷ்டியினர்.

//ஒருவேளை அண்ணா ஹசாரே தன் ஜன் லோக்பாலில்... "ஊடகங்களையும் அங்கே தனியார் முதலாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்கள் நடந்துகொள்ளும் சார்புநிலையையும், செய்தியில் பாரபட்ச நிலையையும், ஊடகங்களின் ஊழல்களையும், அவைகளின் பொய்ச்செய்திகளையும், இல்லாததை இருப்பது போல எழுதும்/சொல்லும்/காட்டும் மாய்மாலத்தையும், குற்றம் செய்த கம்பெனிகள் பற்றிய செய்தியில் எப்போதும் "ஒரு பிரபல தனியார் நிறுவனம்..." என்று உண்மையை மறைப்பதையும், இனிமேல் ஜன்லோக்பால் விடாது... நிச்சயமாக கேள்விகேட்கும்" என்று மட்டும் சொல்லி இருந்தால்....//

ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிற காந்தி பிராண்ட் பொருட்களின் வியாபாரம் குறித்து என்.டி.டிவியில் காண்பித்ததும், கிழிகிழியென்று கிழித்து விட்டார்கள் அண்ணா மார்க் காந்தீயவாதிகள். :-))

//அடாடாடா...ஓர் ஊடகத்தில் கூட இவரைப்பற்றி செய்தி சொல்லி இருக்க மாட்டார்கள்...!//

இப்போது சில தொலைக்காட்சிகளிலேயே கூட "அண்ணா மிகவும் பிடிவாதம் பிடிக்கிறார்," என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கொஞ்சம் சொரணை வருவது போலிருக்கிறது. பார்க்கலாம்!

//இந்த "தேசபக்தர்"களுக்கு இவரை யாரென்றே இன்று தெரிந்திருக்காது அல்லவா சகோ.சேட்டை..!//

எழுதுவேன் விரைவில்! இந்தப் போராட்டம் எப்படி ஆரம்பித்து, யாரால், எதற்காக, இப்படி விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையும், ஜன் லோக்பால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும் எழுதுவேன்.

பார்த்துக்கொண்டே இருங்கள்! அர்விந்த் கேஜ்ரிவாலோ அல்லது கிரண் பேடியோ மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படப் போகிறார்கள் - வெகு விரைவில்! அப்போது புரியும், இந்தப் போராட்டத்தின் உண்மையான நோக்கம் என்னவென்று!

நன்றி சகோதரரே!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நண்பா.....சாதாரண இந்தியனுக்கு தேவை ஒரு எளிதான வழி என்பேன்...அவனுக்கு உள் வெளிக்குத்துக்கள் தெரிய வாய்ப்பில்லை என்பது என் கருத்து....நீங்கள் சொல்வது போல் குற்றம் இருப்பின் என் தவறை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்...."தேச விரோதி" என்பது பெரிய வார்த்தை என்று நினைக்கிறேன்..விளக்கங்களுடன் தங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றி....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//கலக்க வேண்டும் என்பதை விடவும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.//---இதைத்தான்... இதைத்தான் சொல்ல வந்தேன் சகோ.சேட்டை..!

விபரம் புரியாத மக்களை தொடர்ந்து தெளிவடையை வைக்கும் தங்கள் தொடர்ச்சியான முயற்சியில்...
அயராத உழைப்பில்...
மிகவும் சிறப்பாக
தொடர்ந்து கலக்கி வருகிறீர்கள்--- என்று..!


//எழுதுவேன் விரைவில்! இந்தப் போராட்டம் எப்படி ஆரம்பித்து, யாரால், எதற்காக, இப்படி விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதையும், ஜன் லோக்பால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும் எழுதுவேன்.//
---இறைநாடினால் அவசியம் எழுதுங்கள். வாசிக்க ஆவலாக காத்திருக்கின்றேன்..!


///பார்த்துக்கொண்டே இருங்கள்! அர்விந்த் கேஜ்ரிவாலோ அல்லது கிரண் பேடியோ மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படப் போகிறார்கள் - வெகு விரைவில்!////---இது வேறையா..???

இன்னொரு தபா நன்றிங்க!

சி.பி.செந்தில்குமார் said...

செம காட்டமா இருக்கே பதிவு!!!!!!!!

rajamelaiyur said...

ரொம்ப குழப்புறிங்க

rajamelaiyur said...

அண்ணா நல்லவரா? கெட்டவரா ?

rajamelaiyur said...

அன்புள்ள நண்பர்களே

இன்று என் வலையில்

தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!

rajamelaiyur said...

தமிழ்மணம் 15

Anonymous said...

சூப்பருங்க என்னோட மனசுல இருந்தத அப்படியே எழுதியிருக்கிங்க‌

DR.K.S.BALASUBRAMANIAN said...

மிக அருமையான பதிவு.

லோக்பாலோ புலிபாலோ எது வந்தாலும் தாசில்தார் ஆபீஸில் லஞ்சம் கொடுக்காமல் சாதிச்சான்றிதழ் வாங்கமுடியாது என்பது உண்மைதான்.

என்றாலும் கூட ஊழலுக்கு எதிராக ஒரு முயற்சி நடப்பதை நாம் ஆதரிக்கவேண்டும் என்பது என் கருத்து.

saidaiazeez.blogspot.in said...

நண்பன் சேட்டைக்கு
மிகவும் அருமையான், கருத்தாழமுள்ள, MIND BLOWING EYE OPENER.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
ஒரு போலீஸ் ஜெயலலிதாவை கைது செய்யுது...
இன்னொரு போலீஸு கலைஞரை கைது செய்யுது...
அப்போது ஒரு MP cum MINISTER அந்த போலீஸைப் பார்த்து "நான் யார் தெரியுமா?" என்று முட்டியை உயர்த்துகிறார்.
ஒரு சபாநாயகர் வானாளாவிய அதிகாரம் என்கிறார்
அனால் பாண்டிச்சேரியில் சட்டசபையையே கூட்ட முடியவில்லை
சேஷன் காட்டிய அதிகாரத்தைக்கொண்டு இன்று வரை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
சிலர் சின்ன போலீஸுக்கு பணியவில்லையேனில் இருக்கவே இருக்கு பெரிய போலீஸ் CBI அல்லது CBCID etc
டாக்டர் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தில் அனைத்தும் மிகத்துல்லியமாக கணிக்கப்பட்டதால் தான், அன்னை இந்திரா காந்தியின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டது.
நாம் சட்டத்தைப் பயன்படுத்துவதைவிட அதன் ஓட்டைகளையே அதிகம் பயன்படுத்துகிறோம் அல்லது சட்டத்தை அடுத்தவனை மிரட்ட அதிகம் பயன்படுத்துகிறோம். லஞ்சம் கொடுப்பவன் மாறாத வரை லஞ்சம் ஒழியாது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
இருக்கிற சட்டங்களையே சரியாக பயன்படுத்தினாலே நாம் உயர்ந்துவிடலாம்.
நம் உயர்வை விரும்பாதவர்களின் தகிடுதத்தமே இந்த லோக்பால், எருமைப்பால் எல்லாமே. எதுவும் நம்மை மாற்றப்போவதில்லை....நாம் மாறாதவரை

நிரூபன் said...

(இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல; யாருக்காவது குத்தினால் நான் பொறுப்பல்ல!) //

வணக்கம் சகோதரம்,

வாசலிலே நாயினைக் கட்டி வைச்சிருக்கிறீங்களே..

இருங்க படிச்சிட்டு வாரேன்.

பனித்துளி சங்கர் said...

//////லோக்பால் அல்லது ஜன் லோக்பால் என்பது வந்துவிட்டால் தேசத்தில் ஊழல் ஒழிந்து விடும் என்று நம்புகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள்!/////////////


வணக்கம் தலைவா நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன் . மேலே அடைப்பில் மேற்கோள் காட்டி இருக்கும் இதே ஆதங்க வாழ்த்துக்கள்தான் என்னுடையதும் .

நிரூபன் said...

பத்து ரூபாய் கொடியை சட்டையில் குத்தியதும், எனது தேசபக்தி அங்கீகரிக்கப்படும் என்றால், அந்த தேசபக்திக்குச் செலவழிக்கிற பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு, நான் பிரகடனப்படுத்தப்பட்ட தேசத்துரோகியாய் இருக்க சம்மதிக்கிறேன்.//

சகோதரம்....சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

உண்மையில் இலங்கை- இந்திய நாடுகளில் தம்மைத் தாமே தேசபக்தர்களாக வரிந்து கட்டிக் கொண்டு வந்து பிரச்சாரம் செய்வோர்,
ஒரு மாற்றுக் கருத்தினை முன் வைக்கும் போது துரோகி என்று சொல்வோர்
தம்மை முதலில் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போது தான் பிறரைப் பற்றி நாம் பேசவோ.
இல்லைப் பஞ்சாயத்துக் கூட்டவோ இலகுவாக இருக்கும்.

உங்களின் இக் கருத்தினை நான் ரிப்பீட் பண்றேன்.

நிரூபன் said...

சொற்களால் சாட்டையடி கொடுத்துள்ள உங்களின் கருத்துக்களோடு நானும் ஒத்துப் போகிறேன் சேட்டை.

settaikkaran said...

//விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா.....சாதாரண இந்தியனுக்கு தேவை ஒரு எளிதான வழி என்பேன்...அவனுக்கு உள் வெளிக்குத்துக்கள் தெரிய வாய்ப்பில்லை என்பது என் கருத்து//

மிக்க சரி! கண்டனத்தைத் தெரிவிக்கவோ, அல்லது ஆதரவைக் காட்டவோ இதுபோன்ற போராட்டங்கள் ஒரு வடிகாலாய் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

//....நீங்கள் சொல்வது போல் குற்றம் இருப்பின் என் தவறை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்//

நண்பரே! ஏன் பெரிய, சம்பிரதாயமான வார்த்தைகள்? என்னுடன் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளவர்களுடன் இன்றுவரை நட்போடு இருக்க முடிகிறது. மேலும் நீங்களோ நானோ மனதில் பட்டதை இடுகையாய் எழுதி விடுகிறோம். ஆகவே நமக்குள் அவ்வகையில் ஒரு ஒற்றுமையுண்டு.

நான் குறிவைத்திருப்பது, நம்மைப் போல இடுகை எழுதவோ அல்லது வாதங்களை வைக்கவோ முடியாமல், பின்னூட்டம் என்ற பெயரில் வாந்தியெடுத்துவிட்டுப் போகிற சில புண்ணியவான்களுக்கு! அவர்களுக்கு அஞ்சி நாம் எழுதாமல் இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்தவே இந்த இடுகை!

//...."தேச விரோதி" என்பது பெரிய வார்த்தை என்று நினைக்கிறேன்.//

நான் வலையுலகம் தவிர, செய்தித்தாள்களிலும், சில கூட்டங்களிலும் பேசப்படுகிற வார்த்தைகளை (ராம்லீலா மைதானம் உட்பட) சுட்டிக்காட்ட விரும்பினேன். அதனால், அந்த வார்த்தைகளை எழுத வேண்டி வந்தது.

//.விளக்கங்களுடன் தங்கள் பதிவுக்கு மீண்டும் நன்றி....//

உங்களது வருகைக்கும் பெருந்தன்மையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வலுக்கிறது.

ரிஷபன் said...

எவனுக்கய்யா தனது வருங்கால சந்ததியை, அதிகாரவர்க்கத்தின் கலாசிகளின் கருணைப்பார்வைக்காக கால்கடுக்க, கைகட்டி நிற்க வைக்க வேண்டுமென்று தோன்றும்? எங்கிருந்தாவது ஒரு நேர்மைக்கீற்றுவந்து, குப்புறப்படுத்துச் சாகக்கிடக்கிற நம்பிக்கையைத் தொட்டுத்தூக்கி எழுப்பிவிடாதா என்ற நப்பாசை எவனுக்கு இல்லை? உறங்கி எழுந்ததும் குடும்பத்தாரின் முகத்தைப் பார்க்கிற ஒவ்வொருவனுக்கும், அவர்களையாவது அந்த சாக்கடையில் விழாமல் காப்பாற்ற வேண்டுமே என்று தோன்றாமலா போய்விடும்? விருப்பமின்றி லஞ்சம் கொடுக்கிறவனின் மனம்படுகிற அவஸ்தைக்கும், ஒரு வழிப்பறித்திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனின் அவஸ்தைக்கும் யாராவது வந்து ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம்!

அப்படியே ஏற்கிறேன்.

Anonymous said...

என் பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததற்கு நன்றி...தொடர்ந்து இது போல எழுதுங்கள் எல்லா களங்களிலும்...சிந்தனையில் மாறுபட்டாலும்...உங்கள் எழுத்திற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு....

IlayaDhasan said...

என்ன பண்ணாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பது அவநம்பிக்கியின் சின்னம் . மயிற கட்டி மலைய இழுப்போம் வந்தா மலை இல்ல மயிறு , நம்பிக்கையின் சின்னம் ...

பூனைக்குமணி கட்டுவது யாருன்னு சொல்லோ ஒருத்தரு வந்திருக்காரு , அதுலயும் குத்தமாட சாமி ...

பத்து நாள் பட்டினி முடியுமா உன்னால என்னால .... அரை நாள் பட்டினி இருந்தோரோ இப்ப நியாபகத்துக்கு வர்றாங்க ....

குற்றம் பார்த்தே பேர் வாங்கும் நக்கீரா நீவீர் வாழ !

Katz said...

கோழி புடிச்சீங்களா? இல்லையா?

settaikkaran said...

//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

விபரம் புரியாத மக்களை தொடர்ந்து தெளிவடையை வைக்கும் தங்கள் தொடர்ச்சியான முயற்சியில்...அயராத உழைப்பில்...மிகவும் சிறப்பாக
தொடர்ந்து கலக்கி வருகிறீர்கள்--- என்று..!//

புரிகிறது சகோதரரே! மிகவும் அழுத்தமான இடுகையா? கொஞ்சம் பின்னூட்டமாவது நகைச்சுவையாக இருக்கட்டுமே என்றுதான் அப்படிச் சொன்னேன்! :-)

//---இறைநாடினால் அவசியம் எழுதுங்கள். வாசிக்க ஆவலாக காத்திருக்கின்றேன்..!//

இறைநாடினால், ஆஹா, உங்கள் வாயில் சர்க்கரைதான் போட வேண்டும் சகோதரரே! எதை எழுத வேண்டும் என்று எண்ணினேனோ, அது குறித்து இப்போது தான் எனது தில்லி நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் மடல் அனுப்பியிருக்கிறார்.

//---இது வேறையா..???//

இது தான் துவக்கமே! மத்ததெல்லாம் அப்பாலே வந்ததுதான்! :-)

//இன்னொரு தபா நன்றிங்க!//

உங்களுக்கும் எனது நன்றி சகோதரரே!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

செம காட்டமா இருக்கே பதிவு!!!!!!!!//

மேட்டர் காட்டமாயிருக்கே தல! :-)
மிக்க நன்றி!

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

ரொம்ப குழப்புறிங்க//

அண்ணாவை விடவா? :-))))))

//அண்ணா நல்லவரா? கெட்டவரா ?//

கெட்டவர் இல்லை-ன்னு சொல்லலாம். அம்புட்டுத்தேன்!

// தமிழ்மணம் 15//

நன்றி நண்பரே! மிக்க மகிழ்ச்சி!

settaikkaran said...

//carthickeyan said...

சூப்பருங்க என்னோட மனசுல இருந்தத அப்படியே எழுதியிருக்கிங்க‌//

நானும் உங்களைப் போலத்தானே? என்னால் திடீர் புரட்சிவாதிகளைப்போல எழுத முடியாதே! :-)
மிக்க நன்றி!

//DRபாலா said...

மிக அருமையான பதிவு. லோக்பாலோ புலிபாலோ எது வந்தாலும் தாசில்தார் ஆபீஸில் லஞ்சம் கொடுக்காமல் சாதிச்சான்றிதழ் வாங்கமுடியாது என்பது உண்மைதான்.//

ஆம், கொடுப்பதை நாம் நிறுத்தும்வரை எதுவும் மாற்றம் நிகழாது என்பதுதான் எல்லாரும் சொல்வது.

//என்றாலும் கூட ஊழலுக்கு எதிராக ஒரு முயற்சி நடப்பதை நாம் ஆதரிக்கவேண்டும் என்பது என் கருத்து.//

ஆதரிக்கலாம் ஒரு கட்டம் வரைக்கும்! ஆனால், அளவுக்கு மீறினால் போராட்டமும் நஞ்சுதான் என்பதை நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

மிக்க நன்றி!

settaikkaran said...

//சைதை அஜீஸ் said...

நண்பன் சேட்டைக்கு//

ஆஹா, வாங்க நண்பரே!

//மிகவும் அருமையான், கருத்தாழமுள்ள, MIND BLOWING EYE OPENER.//

மிக்க நன்றி!

//ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். ஒரு போலீஸ் ஜெயலலிதாவை கைது செய்யுது...இன்னொரு போலீஸு கலைஞரை கைது செய்யுது...அப்போது ஒரு MP cum MINISTER அந்த போலீஸைப் பார்த்து "நான் யார் தெரியுமா?" என்று முட்டியை உயர்த்துகிறார். ஒரு சபாநாயகர் வானாளாவிய அதிகாரம் என்கிறார்.அனால் பாண்டிச்சேரியில் சட்டசபையையே கூட்ட முடியவில்லை. சேஷன் காட்டிய அதிகாரத்தைக்கொண்டு இன்று வரை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. சிலர் சின்ன போலீஸுக்கு பணியவில்லையேனில் இருக்கவே இருக்கு பெரிய போலீஸ் CBI அல்லது CBCID etc. டாக்டர் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தில் அனைத்தும் மிகத்துல்லியமாக கணிக்கப்பட்டதால் தான், அன்னை இந்திரா காந்தியின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டது.//

நீங்கள் குறிப்பிட சட்ட விதிமீறல்கள், அதிகார துர்பிரயோகங்களைத் தாண்டியும், இன்று நாம் சில மலைக்கத்தக்க மாற்றங்களைக் கண்டுவருகிறோம் என்பதே நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அந்த முதிர்ச்சியை கோலாட்டம் போடப்பயன்படுகிற மைதானங்களிலே கொச்சைப்படுத்துவதை அனுமதிக்கலாகாது. சாக்கடை என்று சுத்தம் செய்யச்சொல்கிறவன், முதலில் அதில் இறங்கட்டும். அடாவடித்தனத்தையெல்லாம் அஹிம்சைப்போராட்டம் என்று சப்பைக்கட்டுக் கட்ட அனுமதித்தால், நாளை நமது வாக்குரிமை கேலிக்குரியதாகி விடும்.

//நாம் சட்டத்தைப் பயன்படுத்துவதைவிட அதன் ஓட்டைகளையே அதிகம் பயன்படுத்துகிறோம் அல்லது சட்டத்தை அடுத்தவனை மிரட்ட அதிகம் பயன்படுத்துகிறோம். லஞ்சம் கொடுப்பவன் மாறாத வரை லஞ்சம் ஒழியாது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.//

பட்டுக்கோட்டையார் பாட்டுத்தான்! திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்.....! :-))

//இருக்கிற சட்டங்களையே சரியாக பயன்படுத்தினாலே நாம் உயர்ந்துவிடலாம். நம் உயர்வை விரும்பாதவர்களின் தகிடுதத்தமே இந்த லோக்பால், எருமைப்பால் எல்லாமே. எதுவும் நம்மை மாற்றப்போவதில்லை....நாம் மாறாதவரை//

மிகவும் சரி! இருக்கிற சட்டங்கள் வலுவுடன் செயல்பட்டாலே போதும். புதிய சட்டம், புதிய அமைப்பு, புதிய கட்டுப்பாடு என்பதெல்லாம் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க இன்னொரு காரணமாய்த்தான் இருக்கும்.

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் சகோதரம், வாசலிலே நாயினைக் கட்டி வைச்சிருக்கிறீங்களே.. இருங்க படிச்சிட்டு வாரேன்.//

ஐயையோ, இது நம்ம வீடு சகோ! தைரியமா வாங்க! :-)

//சகோதரம்....சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.உண்மையில் இலங்கை- இந்திய நாடுகளில் தம்மைத் தாமே தேசபக்தர்களாக வரிந்து கட்டிக் கொண்டு வந்து பிரச்சாரம் செய்வோர், ஒரு மாற்றுக் கருத்தினை முன் வைக்கும் போது துரோகி என்று சொல்வோர்//

தெரியும். இதனாலேயே நான் இலங்கைப் பிரச்சினை குறித்த எனது கருத்துக்களை எழுதியதே இல்லை. உணர்ச்சிவசப்படுகிறவர்களே அதிகம் என்பதால், முட்டி மோதி பயனில்லை! :-(

//தம்மை முதலில் சுய பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் பிறரைப் பற்றி நாம் பேசவோ. இல்லைப் பஞ்சாயத்துக் கூட்டவோ இலகுவாக இருக்கும்.//

பலர் இங்கே மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை வாசிக்கிறார்களோ எனுமளவுக்கு, ஒரே மாதிரி ஆக்கபூர்வமான விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, ஆவேசப்படுவதையே வாடிக்கையாக்கி விட்டார்கள். எனவேதான், நானும் இம்முறை கொஞ்சம் காரம் சேர்க்க வேண்டிவந்தது.

//உங்களின் இக் கருத்தினை நான் ரிப்பீட் பண்றேன். சொற்களால் சாட்டையடி கொடுத்துள்ள உங்களின் கருத்துக்களோடு நானும் ஒத்துப் போகிறேன் சேட்டை.//

மிக்க நன்றி சகோ! மகிழ்ச்சி! :-)

settaikkaran said...

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வணக்கம் தலைவா நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன் . மேலே அடைப்பில் மேற்கோள் காட்டி இருக்கும் இதே ஆதங்க வாழ்த்துக்கள்தான் என்னுடையதும் .//

வாங்க, உண்மையிலேயே அத்தி பூத்தாற்போலத்தான் இருக்கிறது நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

அப்படியே ஏற்கிறேன்.//

வாங்க வாங்க! மிக்க நன்றி! :-)

//ரெவெரி said...

என் பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததற்கு நன்றி...தொடர்ந்து இது போல எழுதுங்கள் எல்லா களங்களிலும்...சிந்தனையில் மாறுபட்டாலும்...உங்கள் எழுத்திற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு....//

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்விஷயத்தில் என்னுடன் நேர் எதிர்மறையான கருத்துள்ளவர்களும் தொடர்ந்து வந்து நாகரீகமாக தங்களது அபிப்ராயங்களை வெளிப்படுத்துவது நம்பிக்கையூட்டுகிறது. அத்துடன், உங்களைப் போன்றோரின் மீது எனது அபிமானமும் அதிகரிக்கிறது. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//IlayaDhasan said...

என்ன பண்ணாலும் ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பது அவநம்பிக்கியின் சின்னம் . மயிற கட்டி மலைய இழுப்போம் வந்தா மலை இல்ல மயிறு , நம்பிக்கையின் சின்னம் ...//

அண்ணன் அடையாறு L.B.மார்குலேருந்து வந்திருக்கிறாப்புலே இருக்குது! :-)

மயிரைக் கட்டி மலையை இழுப்பவன் மடையன்! அதை மடத்தனம் என்று சொல்பவன் என்னை மாதிரி எதார்த்தவாதி! :-)

//பூனைக்குமணி கட்டுவது யாருன்னு சொல்லோ ஒருத்தரு வந்திருக்காரு ,அதுலயும் குத்தமாட சாமி ...//

பூனைக்கு மனிதன் ஈசியா மணிகட்டலாம். எலிக்குத்தான் பிரச்சினை! இங்கே யாரு எலி? :-)

//பத்து நாள் பட்டினி முடியுமா உன்னால என்னால//

ம், நீங்க எல்லா நியூஸ் சேனலிலும் லைவ்-டெலிகாஸ்டுக்கு ஏற்பாடு பண்ணுறதா இருந்தா, நான் ரெடி! :-))

//அரை நாள் பட்டினி இருந்தோரோ இப்ப நியாபகத்துக்கு வர்றாங்க ....//

பாவம், ஏதோ அவரால முடிஞ்சது!

//குற்றம் பார்த்தே பேர் வாங்கும் நக்கீரா நீவீர் வாழ !//

இல்லை! முன்னாலே பள்ளமிருக்கு, பார்த்துப்போன்னு சொல்லுற ஆளு!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Katz said...

கோழி புடிச்சீங்களா? இல்லையா?//

கூரையேறிட்டேன். :-)

kumar said...

//பத்து நாள் பட்டினி முடியுமா உன்னால என்னால//
"" கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம்
இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.""
(நன்றி : வினவு தளம்) http://www.vinavu.com/2011/08/22/chennaiyil-anna/

சமுத்ரா said...

பகிர்வுக்கு நன்றி

vinu said...

இந்தப் பதிவை ஆங்கிலத்தில் தரவும்.... இங்கு என்னுடன் பணிபுரியும் சில கன்னடங்கள் இன்று காலை நான் இதே கருத்தை கூறிய பொது கடுமையாக எதிர்த்தனர்... அவர்களுக்கு அனுப்பி படிக்கச்சொல்ல வேண்டும்

Prabu Krishna said...

லோக் ஆயுக்தா தான் அப்பட்டமான தீர்வு. நம் மாநிலத்துக்கு அது கனவுதானா?

இங்கே யார் நல்லவர்?

aotspr said...

\\"சொல்லுங்கள், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர எந்த தேசபக்தன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்?"//
நல்ல கேள்வி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

வெட்டிப்பேச்சு said...

கட்டுக்குள் அடங்காத உணர்வுக் குவியலாய் வார்த்தைகள்!

பொதுவாகவே இத்துனை உணர்வு மிக்கவர்களுக்கு நகைச்சுவை வசப்படாதென நம்பியிருந்தேன். அது போய் என நிரூபித்து விட்டீர்.

ஆனாலும் நீர் நகைச்சுவையைப் போற்றுவதே மிக மேன்மையாக இருக்கிறது. இந்த உங்களது பார்வையைக் கூட நகைச்சுவையாகச் சொல்லியிருந்தீர்களானால் எல்லொரும் ரசிப்பர், செய்தியும் வலியின்றி போய்ச் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

Anyway..எனக்கு உங்களில் உள்ள பாக்கியம் ராமசாமிதான் பிடித்திருக்கிறது..

அப்புறம்.. நீங்கள் எழுதியிருந்த காப்பியும் பேஸ்ட்டும் கண்ணெனத் தகும் என்ற பதிவில் அனைத்துமே மிக மிக அற்புதமாக ரசிக்கத்தக்கவை. சரள நடை..

அதை விட அந்த அர்னாப் கோஸ்வாமியின் கேள்விகளைப்பற்றி சொல்லியிருந்தீர்களே வடிவேலுவின் 'அப்புறம் கையை புடிச்சி இழுத்தியா..' என்கிறமாதிரியென்று...

அதைப் படித்தபின் என்னால் அவரது நிகழ்ச்சியை சிரிக்காமல் பார்க்க முடிவதில்லை.. வாழ்த்துக்கள்.

சீரியசாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். பார்வைகள் நிச்சயம் மாறும், பரிமளிக்கும்...

வாழ்த்துக்கள்.

God Bless You.

சி.பி.செந்தில்குமார் said...

haa haa அண்ணன் பதிவு போட்டா இப்போவெல்லாம் மைனஸ் ஒட்டு 2 கன்ஃபர்ம்././ வளர்ந்திட்டு வர்றார்.. !!!!!!!!!!!

settaikkaran said...

//சமுத்ரா said...

பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி!

//vinu said...

இந்தப் பதிவை ஆங்கிலத்தில் தரவும்.... இங்கு என்னுடன் பணிபுரியும் சில கன்னடங்கள் இன்று காலை நான் இதே கருத்தை கூறிய பொது கடுமையாக எதிர்த்தனர்... அவர்களுக்கு அனுப்பி படிக்கச்சொல்ல வேண்டும்//

அதற்கு அவசியப்படாது நண்பரே! அனேகமாக அண்ணாவின் உண்ணாவிரதம் இன்றோ நாளையோ முடிவுக்கு வந்துவிடும். அப்புறம், அண்ணாவின் தொண்டர்கள் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்! மிக்க நன்றி! :-)

//பலே பிரபு said...

லோக் ஆயுக்தா தான் அப்பட்டமான தீர்வு. நம் மாநிலத்துக்கு அது கனவுதானா?//

அப்படியொன்றுமில்லை. அரசு மனதுவைத்தால் உடனே தீர்மானம் நிறைவேற்றி சட்டம் இயற்றிவிடலாம். நல்ல வேளை, யாரோ ஒரு தகவல் உரிமைச் சட்டப் போராளி அரசுக்கு மனு அனுப்பியிருப்பதாக அறிகிறேன். நாமும் எழுதலாம்.

//இங்கே யார் நல்லவர்?//

எல்லோரும் நல்லவரே! :-)

மிக்க நன்றி!

//Kannan said...

நல்ல கேள்வி. நன்றி,

மிக்க நன்றி!

settaikkaran said...

//வெட்டிப்பேச்சு said...

கட்டுக்குள் அடங்காத உணர்வுக் குவியலாய் வார்த்தைகள்! பொதுவாகவே இத்துனை உணர்வு மிக்கவர்களுக்கு நகைச்சுவை வசப்படாதென நம்பியிருந்தேன். அது போய் என நிரூபித்து விட்டீர்.//

நமக்கெல்லாம் நவரசங்களையும் இறைவன் கொடுத்திருக்கிறானே? தேவைக்கேற்ப, அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப எழுதுகிறேன். அவ்வளவே!

//ஆனாலும் நீர் நகைச்சுவையைப் போற்றுவதே மிக மேன்மையாக இருக்கிறது. இந்த உங்களது பார்வையைக் கூட நகைச்சுவையாகச் சொல்லியிருந்தீர்களானால் எல்லொரும் ரசிப்பர், செய்தியும் வலியின்றி போய்ச் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்.//

நகைச்சுவையாகவே எழுதி எழுதி, என்னை நிறைய பேர் மொக்கைப்பதிவர் என்று சொல்லிவிட்டனர். :-))))

அதனால்தான் வீறுகொண்டு, மீசைமுறுக்கி, தோள்குலுக்கி இப்படியெல்லாம் அவ்வப்போது காரசாரமாக எழுதி ’நானும் ரவுடிதான்,’ என்று காண்பித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. :-)

//Anyway..எனக்கு உங்களில் உள்ள பாக்கியம் ராமசாமிதான் பிடித்திருக்கிறது.. அப்புறம்.. நீங்கள் எழுதியிருந்த காப்பியும் பேஸ்ட்டும் கண்ணெனத் தகும் என்ற பதிவில் அனைத்துமே மிக மிக அற்புதமாக ரசிக்கத்தக்கவை. சரள நடை..//

மிக்க நன்றி! அதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்று எனது சில நட்புகள் தெரிவித்திருந்தனர். உங்களது பாராட்டு மகிழ்ச்சி தருவதாயிருக்கிறது.

//அதை விட அந்த அர்னாப் கோஸ்வாமியின் கேள்விகளைப்பற்றி சொல்லியிருந்தீர்களே வடிவேலுவின் 'அப்புறம் கையை புடிச்சி இழுத்தியா..' என்கிறமாதிரியென்று...அதைப் படித்தபின் என்னால் அவரது நிகழ்ச்சியை சிரிக்காமல் பார்க்க முடிவதில்லை.. வாழ்த்துக்கள்.//

எனக்கு நகைச்சுவை பீறிடுவதே செய்தித்தொலைக்காட்சிகளைப் பார்த்துத்தான் - குறிப்பாக, அர்னாப் கோஸ்வாமியை! :-)

//சீரியசாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். பார்வைகள் நிச்சயம் மாறும், பரிமளிக்கும்...வாழ்த்துக்கள். God Bless You.//

தாராளமாக, ஏராளமாகப் பாராட்டியிருப்பதோடு மனமாற வாழ்த்தி உற்சாகப்படுத்தியிருப்பதற்கு எனது மனம்கனிந்த நன்றிகளும் வணக்கங்களும்! :-)

G.M Balasubramaniam said...

NGO-க்களும், CORPORATE-களும் மெல்ல மெல்ல மின்வசதி, கல்வி, சுகாதாரம், தண்ணீர் சப்ளை, ஊடகங்கள் கனிமங்கள் என்பனவற்றை எடுத்தாளத் துவங்கும் காலகட்டத்தில் இவையெல்லாம், ஜன்லோக்பாலின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்பது குறித்து ஏன் யாரும் எண்ணுவதில்லை. மிகவும் காட்டமான பதிவு.அதுவும் தேவைதான்.

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

haa haa அண்ணன் பதிவு போட்டா இப்போவெல்லாம் மைனஸ் ஒட்டு 2 கன்ஃபர்ம்././ வளர்ந்திட்டு வர்றார்.. !!!!!!!!!!!//

இப்படியொண்ணு இருக்கா? சொல்லவே இல்லே? :-)
ஏதோ, இப்படியும் எழுத முடியுது, அதை வாசித்து நிறைகுறைகளைச் சொல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது போதுமே தல.! மற்றதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்! :-))

நன்றி தல.!

settaikkaran said...

//G.M Balasubramaniam said...

NGO-க்களும், CORPORATE-களும் மெல்ல மெல்ல மின்வசதி, கல்வி, சுகாதாரம், தண்ணீர் சப்ளை, ஊடகங்கள் கனிமங்கள் என்பனவற்றை எடுத்தாளத் துவங்கும் காலகட்டத்தில் இவையெல்லாம், ஜன்லோக்பாலின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்பது குறித்து ஏன் யாரும் எண்ணுவதில்லை.//

வாருங்கள் ஐயா! நீங்கள் சொல்வது மிகச்சரி! உள்கட்டமைப்பு தவிரவும் ஏற்கனவே இருக்கிற சேவை நிறுவனங்களிலும் பல தில்லுமுல்லுகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வரத்தானே செய்கின்றன? இவற்றை ஒட்டுமொத்தமாக விலக்குவதன் மூலம், இது போன்ற அமைப்புகள் முன்னை விட அதிகமாய்ப் பெருகி, முறைகேடுகள் வளர்வதற்கு வழிவகுக்கிற அபாயமும் உள்ளது! நிரம்ப சரி!

//மிகவும் காட்டமான பதிவு.அதுவும் தேவைதான்.//

ஆம் ஐயா! அண்ணாவை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று ஒரு சிலர் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டதால் ஏற்பட்ட விளைவு.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!