Wednesday, August 10, 2011

காப்பியும் பேஸ்ட்டும் கண்ணெனத் தகும்

பீடிகை.01: இந்த இடுகையில் உள்குத்து, வெளிக்குத்து, இடக்குத்து, வலக்குத்து, நடுக்குத்து, மேல்குத்து, கீழ்க்குத்து, முன்குத்து, பின்குத்து எதுவும் இல்லை என்று செத்துப்போன என் கொள்ளுத்தாத்தாவின் எள்ளுப்பாட்டியின் மீது சத்தியம் செய்கிறேன்.

பீடிகை.02: பீடிகை எனப்படுவதை செந்தமிழில் "முஸ்கி" என்பர். எனவே, அதை 'பீடி'யைக் கையில் வைத்துக்கொண்டு எழுதியது எனப் பொருள்கொள்ளுதல் தவிர்க்க!

கொஞ்ச நாட்களாகவே, வலையுலகத்தில் காப்பி-பேஸ்ட் பதிவர்களைக் குறித்த நக்கல் நையாண்டிகளும், காரசாரமான இடுகைகளும் அவ்வப்போது காணக்கிடைக்கின்றன.

அந்தோ! சற்றும் சுயமுனைப்பின்றி, பிறரது உழைப்பினை இலகுவாய் ஒற்றியெடுத்து ஒட்டி ஒப்பேற்றிக்கொண்டிருக்கும் உன்மத்தர்காள்! உம்மால் வலையுலகம் பொலிவற்று, நலிவுற்று, கிலியுற்றுக் கிடக்கும் இழிநிலையை எங்ஙனம் விளக்குவது? ஐயகோ! - என்றெல்லாம் விசனத்தில் புருவங்சுருக்கி, பொங்கியெழுந்து ஆங்காங்கே பலரது கண்டனக்குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. (சேட்டை, உனக்கும் தமிழ் வருதுடா ராசா!)

சரி, கொஞ்சம் கியரை மாத்திக்கிறேன்!

காப்பி-பேஸ்ட் என்னும் அருங்கலையை ஏதோ தமிழ் வலைப்பதிவர்கள் தான் தவமிருந்து வரமாய்ப் பெற்றது போல ஒரு மாயை உருவாகி விட்டது. உண்மையில் இந்த காப்பி-பேஸ்ட் என்பது ’தொட்டுத்தொடரும் ஒரு ஒட்டுப் பாரம்பரியம்."

சினிமாவையே எடுத்துக் கொள்ளுவோம்! எந்த ஒரு சினிமா வந்தாலும் ’இது அந்தப் படத்தைப் பார்த்து ஈயடிச்சான் காப்பியடிச்சிருக்காங்க," என்று திரைவிமர்சகர்கள் எழுதுவதில்லையா? (ஹலோ, அதுக்குள்ளே கமல்ஹாசன் ரசிகர் ஒருத்தரு மைனஸ் ஓட்டுப் போடக் கிளம்புறாரு பாருங்க! முழுசாப் படிங்கண்ணே! ஓட்டு எங்கே போயிரும்?)

உலகமே வியந்து போற்றிய இந்திய இயக்குனர் மறைந்த சத்யத்ஜித் ரே-க்கு மிகவும் பிடித்தமான திரைப்படம், "ஷோலே" இந்திப்படம் தானாம். ஆனால், அந்த ’ஷோலே" படமே அகிரா குரோசாவாவின் "செவன் சாமுராய்’, ஜான் ஸ்டர்ஜஸின் "தி மேக்னிஃபிஷியன்ட் செவன்", சாம் பெக்கின்பாவின் "தி வைல்ட் பன்ச்", ஜார்ஜ் ராய் ஹில்லின் "பட்ச் கேஸிடி அண்ட் தி சண்டன்ஸ் கிட்" போன்ற பல ஹாலிவுட் படங்களிலிருந்து ஆங்காங்கே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது தானாம். (இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் சேட்டை-னு கேட்கறீங்களா? எல்லாம் காப்பி-பேஸ்ட் கைங்கரியம் தான்!)

சமீபத்துலே வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிற "தெய்வத்திருமகள்," படம் கூட ஏதோ "I am Jam," மன்னிக்கவும் "I am Sam," என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாம்.

சினிமாவை விடுவோம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கப் போன நம்மூரு மாணவி காவ்யா விஸ்வநாதன் என்ற இளம்பெண் எழுதிய "How Opal Mehta got kissed, got wild, and got a life" என்ற புத்தகம் ஒரு ஈயடிச்சான் காப்பி என்று கண்டுபிடித்து, அதுக்கப்புறம் அவங்களை எல்லாரும் "How Kaavya Viswanathan got rich, got caught, and got ruined" என்று கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.

சரி, சினிமாக்காரங்களும், எழுத்தாளர்களும் தான் இப்படீன்னா, பத்திரிகையாளர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கலாமா?

கி.பி.1999-ல் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகையில் வி.என்.நாராயணன் என்பவர் “For ever in Transit” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் எங்கே எழுதினாரு? அப்படியே "ஸண்டே டைம்ஸ்" பத்திரிகையில் பிரையன் ஆப்பிள்யார்ட் என்பவரின் கட்டுரையை ஹைஜாக் பண்ணி இங்கிட்டுப் போட்டுட்டாரு! விஷயம் வெளியே தெரிஞ்சதும் மூச்சுக்காட்டாம ராஜினாமா பண்ணிட்டாராம்!

"இந்தியா டுடே" பத்திரிகையைப் பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அரூண் பூரி தான் அதன் ஸ்தாபகர் மற்றும் முக்கிய ஆசிரியர். அவர் 2010, அக்டோபர் 18 அன்று "எந்திரன்" படத்தைப் பற்றியும், ரஜினிகாந்தைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினாரு! அது இன்னாடான்னா, "ஸ்லேட்" என்ற பத்திரிகையில் க்ரேடி ஹெண்ட்ரிக்ஸ் என்பவர் எழுதின கட்டுரையிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணினதுன்னு குற்றச்சாட்டு எழுந்தது. "பொய்! பொய்! நான் ஜெட்-லாகில் இருந்தபோது என்னோட கட்டுரையை காக்காய் தூக்கிட்டுப் போயிருச்சு!" என்று அவர் சொன்னாலும், எல்லாரும் அதை அன்-நம்பபிள்-னு மறுத்திட்டாங்க!

சரி, தொலைக்காட்சிகளாவது தேவலாமா என்று பார்த்தால், அது இன்னும் கொடுமை!

NDTV has exclusive details -னு ஸ்க்ரோல் போடுறாங்க. அப்புறம் அம்மணி பர்கா தத் "BUCK STOPS HERE!" நிகழ்ச்சியிலே ஜோதிகாவை விட அட்டகாசமா எக்ஸ்பிரஷனோட யாரையாவது கேள்விகேட்டு மாட்டு மாட்டுன்னு மாட்டுறாங்க!

CNN-IBN SPECIAL! கொஞ்சம் முன்னாடி என்.டி.டிவியிலே போட்ட அதே ஸ்க்ரோலை வித்தியாசமாக் காட்டுறாங்க! அப்பாலே அம்மணி சாகரிகா கோஷ் இல்லாட்டி அண்ணன் ராஜ்தீப் சர்தேசாய் வந்து மூணாம் கிளாஸ் படிக்கிற புள்ளைங்களாட்டம் கையிலே ஒரு பென்சிலை வச்சுக்கிட்டு ஆட்டி ஆட்டிக் கேள்வி கேட்குறாங்க!

இவங்க கிட்டேயிருந்து தப்பிச்சாலும், TIMES NOW தம்பி அர்னாப் கோஸ்வாமி கிட்டேயிருந்து தப்பிக்கவே முடியாது. இவரு கேள்வி கேட்குற இஷ்டைலு இருக்குதே, "என்ன கையைப் புடிச்சு இழுத்தியா...?’ என்ற வடிவேலுவின் காமெடி கெட்டது போங்கள்!

பெரியோர்களே! தாய்மார்களே!!

இந்த மூணு பேருமே ஒரே பேப்பரைக் கையிலே வைச்சுக்கிட்டு, "என் கிட்டே தான் இருக்கு; நான் தான் கண்டுபிடிச்சேன்," என்று மார்தட்டிக்கிற பெருமையைப் பார்த்த பிறகுமா, காப்பி-பேஸ்ட் பண்ணுறது தப்புன்னு சொல்றீங்க?

அந்தோ, வேதனையில் என் இதயம் வெடித்துப் புஸ்வாணமாகி விடும் போலிருக்கிறதே!

அது தப்புன்னா, அந்தத் தப்பை நம்ம சேட்டை டிவியும் செய்யப்போகுது! இதோ உங்களுக்காக, இந்தியாவின் மாபெரும் ஊழல் குறித்த சி.ஏ.ஜி.அறிக்கைகள்!

SETTAI TV EXCLUSIVE! கீழே சொடுக்குங்க எசமான் சொடுக்குங்க!

ஆதர்ஷ் ஊழல்! திடுக்கிடும் தகவல்கள்
Link
காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

பார்த்தீங்களா? பல்பு வாங்கினீங்களா? சி.ஏ.ஜியின் இணையதளத்திலிருக்கிற அறிக்கையை சேட்டை டிவி Exclusive-னு சொல்லி ஏமாத்திருச்சே-ன்னு கோபம் வருதா?

இதைத்தான் எல்லா டிவிகளும் தொடர்ந்து செஞ்சுட்டிருக்காங்க! அதாவது தினம் அவங்க கிட்டே பல்பு வாங்கிட்டிருக்கோம்!

இப்படி இவங்க காப்பி-பேஸ்ட் பண்ணி கொள்ளை கொள்ளையாக் காசு சம்பாதிக்கிறாங்களே, முதல்லே அவங்களைக் குத்தம் சொல்லுங்க!

அதை விட்டுப்புட்டு, எந்த ஆதாயத்துக்காகவும் இல்லாம, பொழுதுபோக்குக்காகவோ, மற்றவர்கள் தெரிஞ்சுக்கிடட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாகவோ காப்பி-பேஸ்ட் பண்ணுற பதிவர்களை மட்டும் குற்றம் சொல்லுறது நியாமில்லேன்னு படுதுங்க! அப்புறம் உங்க இஷ்டம்!

"நன்றி"-ன்னு போட்டு எழுதற வரைக்கும், காப்பிரைட் சட்டத்தை மீறாதவரைக்கும் தப்பில்லை! இல்லவே இல்லை!

நான் காப்பி-பேஸ்ட் பண்ணுறதில்லை. காரணம் ரொம்ப சிம்பிள்!

மற்ற பதிவர்கள் திருக்குறளை காப்பி-பேஸ்ட் பண்ணினா எப்படிப் போடுவாங்க?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
நன்றி: திருவள்ளுவர்.

அதையே நான் போட்டா...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
நன்றி: தமிழ் வாத்தியார் அடைக்கோழி!

46 comments:

Chitra said...

தருமிஸம் வேறு..... Plagiarism வேறு என்று ..... வாதிட்டு கிளியர் பண்ணிட்டீங்களே..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

நடராஜன் said...

ஒற்றியெடுத்து ஒட்டி ஒப்பேற்றிக்கொண்டிருக்கும் உன்மத்தர்களுக்கு ஓர் விளக்காய் விளங்கும் சேட்டையே! நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!
நன்றி: தமிழ் வாத்தியார் அடைக்கோழி!

எப்பூடி!?!?!?!??

நிரூபன் said...

சகோதரம்,
சூப்பர் பதிவு, காலையில் வந்து கும்முறேன்.

நிரூபன் said...

பீடிகை.01: இந்த இடுகையில் உள்குத்து, வெளிக்குத்து, இடக்குத்து, வலக்குத்து, நடுக்குத்து, மேல்குத்து, கீழ்க்குத்து, முன்குத்து, பின்குத்து எதுவும் இல்லை என்று செத்துப்போன என் கொள்ளுத்தாத்தாவின் எள்ளுப்பாட்டியின் மீது சத்தியம் செய்கிறேன்.//

ஆமா...அவங்க எந்த உலகத்திலை இருக்கிறாங்க.

அவ்.....இப்படியெல்லாம் யோசிப்பீங்களா.

நிரூபன் said...

அந்தோ! சற்றும் சுயமுனைப்பின்றி, பிறரது உழைப்பினை இலகுவாய் ஒற்றியெடுத்து ஒட்டி ஒப்பேற்றிக்கொண்டிருக்கும் உன்மத்தர்காள்! உம்மால் வலையுலகம் பொலிவற்று, நலிவுற்று, கிலியுற்றுக் கிடக்கும் இழிநிலையை எங்ஙனம் விளக்குவது? ஐயகோ! - என்றெல்லாம் விசனத்தில் புருவங்சுருக்கி, பொங்கியெழுந்து ஆங்காங்கே பலரது கண்டனக்குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. (சேட்டை, உனக்கும் தமிழ் வருதுடா ராசா!) //

பாஸ், மேற்கொண்டு இதே மெட்டிலை போயிருக்கலாமே.

அவ்....அவ்....

நிரூபன் said...

பெரியோர்களே! தாய்மார்களே!!

இந்த மூணு பேருமே ஒரே பேப்பரைக் கையிலே வைச்சுக்கிட்டு, "என் கிட்டே தான் இருக்கு; நான் தான் கண்டுபிடிச்சேன்," என்று மார்தட்டிக்கிற பெருமையைப் பார்த்த பிறகுமா, காப்பி-பேஸ்ட் பண்ணுறது தப்புன்னு சொல்றீங்க? //

சகோ, மேலே உள்ள இம்புட்டுப் பெயர்களையும் வாசித்து, ஒரு முடிவுக்கு வர முன்னாடியே என் தலை சுத்துது...


இது தான் மரண மொக்கை என்பதோ...அவ்...அவ்...

நிரூபன் said...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
நன்றி: திருவள்ளுவர்.

அதையே நான் போட்டா...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
நன்றி: தமிழ் வாத்தியார் அடைக்கோழி! //

ஸப்பா.................இந்தக் குத்து யாருக்கு....

நிரூபன் said...

காப்பி...பேஸ்ட் காப்புரிமைச் சங்கத்தினருக்கு மரண மொக்கை மூலம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

சத்ரியன் said...

//சேட்டை, உனக்கும் தமிழ் வருதுடா ராசா!) //

(இங்கயும் “கொப்பி & பேஸ்ட்” தான் ஹி..ஹி...ஹி!)

ஆமாங்ணா! சேட்டைக்கும் தமிழ் வருதே.ஆச்சர்யக் குறி.

சாந்தி மாரியப்பன் said...

//"நன்றி"-ன்னு போட்டு எழுதற வரைக்கும், காப்பிரைட் சட்டத்தை மீறாதவரைக்கும் தப்பில்லை! இல்லவே இல்லை//
(நன்றி: சேட்டை டிவி)

கரெக்டு.. நான்கூட இதை உங்க இடுகையிலிருந்துதான் காப்பி பேஸ்ட் செஞ்சு போட்டிருக்கேன்

Unknown said...

சூப்பர்!

சேலம் தேவா said...

"நன்றி" ’தொட்டுத்தொடரும் ஒரு ஒட்டுப் பாரம்பரியம்." எந்த ஆதாயத்துக்காகவும் இல்லாம, பொழுதுபோக்குக்காகவோ, மற்றவர்கள் தெரிஞ்சுக்கிடட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாகவோ காப்பி-பேஸ்ட் பண்ணுற பதிவர்களை மட்டும் குற்றம் சொல்லுறது நியாமில்லே :)

கும்மாச்சி said...

அடாடா எங்களுக்கெல்லாம் வாதாட ஒரு ஆள் இல்லையே என்றிருந்தோம், சேட்டை இருக்காருப்பா.

தக்குடு said...

நிஜமாவே சேட்டைதான்யா உமக்கு!! :)) காப்பி பேஷ்ட் பதிவர்களை இப்படி கூட கலாய்கலாம்னு இப்ப தான் புரியர்து! :)

சிநேகிதன் அக்பர் said...

எப்படி இப்படியெல்லாம்.... முடியல.

கமெண்ட்ஸ் காப்பி பேஸ்ட் பண்ணுறவங்களுக்கும் தீர்ப்பு சொல்லுங்க பாஸ் :)

Unknown said...

தலைவா இதை காப்பி பண்ணீட்டேன் ஆனால் பேஸ்ட் ஆக மாட்டேங்குது என்ன பண்ணலாம்.??/

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த இடுகையில் உள்குத்து, வெளிக்குத்து, இடக்குத்து, வலக்குத்து, நடுக்குத்து, மேல்குத்து, கீழ்க்குத்து, முன்குத்து, பின்குத்து எதுவும் இல்லை என்று செத்துப்போன என் கொள்ளுத்தாத்தாவின் எள்ளுப்பாட்டியின் மீது சத்தியம் செய்கிறேன்.

அய்யோ , கும்மாங்குத்து

சி.பி.செந்தில்குமார் said...

இந்தப்பதிவு எனக்கு சப்போர்ட்டா இருக்கா? தாக்குதா? ஒண்ணூம் புரியல.. ஆனா செம காமெ3டி ஹா ஹா

settaikkaran said...

//Chitra said...

தருமிஸம் வேறு..... Plagiarism வேறு என்று ..... வாதிட்டு கிளியர் பண்ணிட்டீங்களே..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

அதே! அதே! மதுரைத்திட்டம் மாதிரி தளங்களில் எத்தனையோ இலக்கியங்கள், நாவல்கள் இருக்கின்றன. அதுபோலத்தானே இதுவும் என்ற கேள்விதான் எனக்கும்! மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//Natarajan said...

ஒற்றியெடுத்து ஒட்டி ஒப்பேற்றிக்கொண்டிருக்கும் உன்மத்தர்களுக்கு ஓர் விளக்காய் விளங்கும் சேட்டையே! நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!//

நான் தண்ணியன் ஆனேன்! :-)

//நன்றி: தமிழ் வாத்தியார் அடைக்கோழி! எப்பூடி!?!?!?!??//

சூப்பர்! சார் நீங்களா? இன்னும் டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடி போடறீங்களா சார்? :-)) (சும்மா ஸோக்க்கு...!)

மிக்க நன்றி! அடிக்கடி வாங்க! :-))

settaikkaran said...

//நிரூபன் said...

சகோதரம், சூப்பர் பதிவு, காலையில் வந்து கும்முறேன்.//

வாங்க வாங்க! :-)

//ஆமா...அவங்க எந்த உலகத்திலை இருக்கிறாங்க.//

அப்பல்லாம் சொர்க்கத்துலே அட்மிஷன் ஈசியாக் கிடைச்சுதாம். அனேகமா அங்கே தான்...!

//அவ்.....இப்படியெல்லாம் யோசிப்பீங்களா.//

இப்போத்தான் தெரிஞ்சுக்கிட்டீங்களா...?

//பாஸ், மேற்கொண்டு இதே மெட்டிலை போயிருக்கலாமே.//

நான் போயிருப்பேன். என் தமிழ் வந்திருக்காதே! :-((

//சகோ, மேலே உள்ள இம்புட்டுப் பெயர்களையும் வாசித்து, ஒரு முடிவுக்கு வர முன்னாடியே என் தலை சுத்துது...//

இவங்கல்லாம் இந்தியாவின் பிரபல செய்தித்தொலைக்காட்சிகளின் பிரபலங்கள்! அதுனாலே அந்த அவஸ்தையெல்லாம் உங்களுக்கு புரியாது!

//இது தான் மரண மொக்கை என்பதோ...அவ்...அவ்...//

சூப்பர் ஐடியா! இப்படியொரு Tag சீக்கிரம் ஆரம்பிச்சிடறேன். :-)

//ஸப்பா.................இந்தக் குத்து யாருக்கு....//

வாத்தியாருக்குத்தான்! :-))

//காப்பி...பேஸ்ட் காப்புரிமைச் சங்கத்தினருக்கு மரண மொக்கை மூலம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.//

காப்பிரைட் மீறல் இல்லாதவரை, காப்பி-பேஸ்ட் தவிரவும் நிறைய தினுசு தினுசாய் இடுகைகள் எழுதும் வரை, மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டுமே என்ற நல்லெண்ணத்தோடு ஒற்றி ஒட்டப்பட்டால் அது தவறில்லை என்பதே எனது உறுதியான நம்பிக்கை.

நன்றி சகோ! :-)

settaikkaran said...

//சத்ரியன் said...

ஆமாங்ணா! சேட்டைக்கும் தமிழ் வருதே.ஆச்சர்யக் குறி.//

ஆஹா, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்களே!!!!!!!!!!!!!!!!!!!
(எத்தனை ஆச்சரியக்குறி பார்த்தீங்களா? ஹிஹி) மிக்க நன்றி!

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

கரெக்டு.. நான்கூட இதை உங்க இடுகையிலிருந்துதான் காப்பி பேஸ்ட் செஞ்சு போட்டிருக்கேன்//

என்னது, என்னோட இடுகையைக் காப்பி பேஸ்ட் பண்ணறீங்களா? ஆனந்தக்கண்ணீர் கொட்டுதே! மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//விக்கியுலகம் said...

சூப்பர்!//

நன்றி! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

"நன்றி" ’தொட்டுத்தொடரும் ஒரு ஒட்டுப் பாரம்பரியம்." எந்த ஆதாயத்துக்காகவும் இல்லாம, பொழுதுபோக்குக்காகவோ, மற்றவர்கள் தெரிஞ்சுக்கிடட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாகவோ காப்பி-பேஸ்ட் பண்ணுற பதிவர்களை மட்டும் குற்றம் சொல்லுறது நியாமில்லே :)//

புன்னகை சம்மதத்தின் அறிகுறின்னு ஒத்துக்கிறேன்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கும்மாச்சி said...

அடாடா எங்களுக்கெல்லாம் வாதாட ஒரு ஆள் இல்லையே என்றிருந்தோம், சேட்டை இருக்காருப்பா.//

உங்களுக்குப் பிரச்சினைன்னா சொல்லுங்க, மொக்கை போட்டே எதிரிகளைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கிறேன். இது என் மவுஸ் மீது ஆணை! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//தக்குடு said...

நிஜமாவே சேட்டைதான்யா உமக்கு!! :)) காப்பி பேஷ்ட் பதிவர்களை இப்படி கூட கலாய்கலாம்னு இப்ப தான் புரியர்து! :)//

என்னது, கலாய்ச்சிருக்கேனா? அவ்வ்வ்வ்வ்வ்! :-)
எனிவே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

எப்படி இப்படியெல்லாம்.... முடியல.

கமெண்ட்ஸ் காப்பி பேஸ்ட் பண்ணுறவங்களுக்கும் தீர்ப்பு சொல்லுங்க பாஸ் :)//

அண்ணே, இந்தப் பதிவைப் படிச்ச பாதிப்பு நீங்க எப்படியும் ஒரு மாசமாகாதா? அப்பாலிக்கா எழுதறேன். மிக்க நன்றிண்ணே! :-)

settaikkaran said...

//கே. ஆர்.விஜயன் said...

தலைவா இதை காப்பி பண்ணீட்டேன் ஆனால் பேஸ்ட் ஆக மாட்டேங்குது என்ன பண்ணலாம்.??//

கீ-போர்டை மாத்தலாம். :-)))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அய்யோ , கும்மாங்குத்து//

இல்லை தல, என்னை யாரும் குத்திருவாங்களோன்னு தான் முன்னெச்செரிக்கையா...ஹிஹி!

//இந்தப்பதிவு எனக்கு சப்போர்ட்டா இருக்கா? தாக்குதா? ஒண்ணூம் புரியல.. ஆனா செம காமெ3டி ஹா ஹா//

உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யாரையும் குறிவச்சு எழுதறதே இல்லை. இது ரொம்ப நடுநிலையிலிருந்து யோசிச்சு (?) எழுதினது தல..!
மிக்க நன்றி!

Anonymous said...

தமிழ் விளையாடியிருக்கிறது...அந்த காப்பி பேஸ்ட் பற்றிய பகுதியில்... பதிவு முழுக்க காமெடியில் காப்பி பேஸ்ட் நியாயங்களை உணர்த்தியிருக்கிறீர்கள்..

Nirosh said...

காப்பி அண்ட் பேஸ்ட் என்றவுடன்.. ஏதோ பல் துலக்காமல் தேநீர் குடிப்பதை பற்றியாக்கும் என நினைத்துவிட்டேன்... வாசித்த பின்புதான் உண்மையின் உளறல புரிந்தது.... வாழ்த்துக்கள் நண்பா...!

ம.தி.சுதா said...

/////'பீடி'யைக் கையில் வைத்துக்கொண்டு எழுதியது எனப் பொருள்கொள்ளுதல் தவிர்க்க! ////

சே.. சே அப்பியெல்லாம் நினைக்கமாட்டமுல்ல... நாங்க வாயில தான் வச்சிருப்போமுல்ல..

ம.தி.சுதா said...

அப்படின்னா எனக்கும் திருக்க(கு)றள் சொல்லித் தருவீரா ?

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
இந்தப்பதிவு எனக்கு சப்போர்ட்டா இருக்கா? தாக்குதா? ஒண்ணூம் புரியல.. ஆனா செம காமெ3டி ஹா ஹா//
யாரு பதிவைப் படிச்சீங்க,உங்களுக்கு புரியறதுக்கு!

உணவு உலகம் said...

சில விஷயங்களை சிரிக்க வைத்தே புரிய வைத்திருகிறீர்கள். நன்றி.

ரிஷபன் said...

"பொய்! பொய்! நான் ஜெட்-லாகில் இருந்தபோது என்னோட கட்டுரையை காக்காய் தூக்கிட்டுப் போயிருச்சு!" என்று அவர் சொன்னாலும், எல்லாரும் அதை அன்-நம்பபிள்-னு மறுத்திட்டாங்க!

ஹா.. ஹா..

சுபத்ரா said...

//FOOD said...

சில விஷயங்களை சிரிக்க வைத்தே புரிய வைத்திருகிறீர்கள். நன்றி.
//

சேட்டையோட TM சேட்டையே அது தான?!

Sivakumar said...

எல்லாரிடமும் பாயும் அர்னாப் கோஸ்வாமி, சம்பீபதில் (நம்ம) மேடம் ஜெ.வை பேட்டி கண்ட போது பம்மியதை பார்த்தீர்களா... (பெண்) சிங்கம்லே!!

settaikkaran said...

//ஷீ-நிசி said...

தமிழ் விளையாடியிருக்கிறது...அந்த காப்பி பேஸ்ட் பற்றிய பகுதியில்... பதிவு முழுக்க காமெடியில் காப்பி பேஸ்ட் நியாயங்களை உணர்த்தியிருக்கிறீர்கள்..//

வலைப்பதிவு எழுதுவது அவரவரின் விருப்பம் மற்றும் ரசனையைப் பொறுத்த விஷயம் என்று நம்புவதால், சிலரின் ஆட்சேபணைகளை நானும் எனக்குத் தெரிந்த வழியில் ஆட்சேபித்திருக்கிறேன். அவ்வளவே...! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//Nirosh said...

காப்பி அண்ட் பேஸ்ட் என்றவுடன்.. ஏதோ பல் துலக்காமல் தேநீர் குடிப்பதை பற்றியாக்கும் என நினைத்துவிட்டேன்... வாசித்த பின்புதான் உண்மையின் உளறல புரிந்தது.... வாழ்த்துக்கள் நண்பா...!//

என்னது உண்மையின் உளறலா? எப்படி என்னைப் பத்தி இவ்வளவு சுருக்காக் கண்டுபிடிச்சீங்க? :-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//♔ம.தி.சுதா♔ said...

//சே.. சே அப்பியெல்லாம் நினைக்கமாட்டமுல்ல... நாங்க வாயில தான் வச்சிருப்போமுல்ல..//

கரெக்ட், அப்பத்தானே என்ன எழுதினாலும் புகையும்..? :-)

//அப்படின்னா எனக்கும் திருக்க(கு)றள் சொல்லித் தருவீரா ?//

ஊஹும், இன்னும் நானே படிக்கலே!
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said... இந்தப்பதிவு எனக்கு சப்போர்ட்டா இருக்கா? தாக்குதா? ஒண்ணூம் புரியல.. ஆனா செம காமெ3டி ஹா ஹா//

யாரு பதிவைப் படிச்சீங்க,உங்களுக்கு புரியறதுக்கு!//

ஆஹா, தல அப்படியா பண்ணிட்டிருக்காரு? இருக்கட்டும்! :-)

//சில விஷயங்களை சிரிக்க வைத்தே புரிய வைத்திருகிறீர்கள். நன்றி.//

உங்களது வருகையும் கருத்தும் மிகவும் உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

ஹா.. ஹா..//

மிக்க நன்றி! :-)

//சுபத்ரா said...

//FOOD said...சில விஷயங்களை சிரிக்க வைத்தே புரிய வைத்திருகிறீர்கள். நன்றி.//

சேட்டையோட TM சேட்டையே அது தான?!//

இன்னும் TM வாங்கலீங்க! :-)
வருகைக்கு நன்றி!

G.M Balasubramaniam said...

சில நாட்களுக்குமுன் டாக்டர் கந்தசாமி ஐயா இது பற்றி எழுதியிருந்தார். அவர் இடுகைகளை யார் வேண்டுமானாலும் காப்பி -பேஸ்ட் செய்யலாம் என்றும் எழுதியிருந்தார். என் கண்ணுக்குத்தான் அம்மாதிரி பதிவுகள் தென்படவில்லையோ என்னவோ. ஏன் ஒரே சிந்தனை மற்றவருக்கும் தோன்றியிருக்கலாம் அல்லவா.?

சக்தி பிரகாஷ் said...

பதிவுல போடறது ஒரு பக்கம் கெடக்கட்டும். சக பதிவர் ஒருத்தரோட பதிவு போன வாரம் தினகரன்லையே போட்டுட்டாங்க, நீங்க வேற. அவரு பொலம்பி தீர்த்து, அதுக்கு ஒரு விளக்கப் பதிவு வேற போட்டு நொந்து பொய் கெடக்கராறு. செய்தித் தாளிலிருந்து சுட்டு பதிவு எழுதுன காலம் பொய் இப்பல்லாம் பதிவுகளில் இருந்து சுட்டு செய்தி போடறாங்கப்பா. அதுலயும் தினகரன் புரட்சியே பண்றாங்க. எதுக்கும் நீங்களும் தினகரனை தொடர்ந்து படிங்க. எனைக்காவது உங்க பதிவும் பதிப்பிக்கப் படும். (அவர்கள் பெயரில்)