Monday, August 8, 2011

லொள்ளாசனம்



நாமல்லாம் மெக்டொனால்டு, கே.எஃப்.ஸி, கெல்லோக்ஸ்-னு வெளிநாட்டு சமாச்சாரம் ஒவ்வொண்ணுத்தியும் இறக்குமதி செஞ்சு பந்தா பண்ணிக்கிட்டுத் திரியுறோம். ஆனா, அவிய்ங்க நம்ம நாட்டுலேருந்து மூலிகை, தியானம், யோகா எல்லாத்தியும் எடுத்துக்கிட்டுக் கண்டமேனிக்கு பயன்படுத்திட்டிருக்காங்க!

உதாரணத்துக்கு யோகாவையே எடுத்துக்குவோம். நம்ம ஊருலே சந்துக்குச் சந்து இருக்குறது ரெண்டே விசயம்தான். ஒண்ணு டாஸ்மாக் கடை; இன்னொண்ணு யோகா கிளாஸ்! ஒரே நாளுலே யோகா சொல்லிக் கொடுக்கிற கில்லாடிங்களை மாம்பலம், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பக்கத்துலே நிறைய பார்க்கலாம். அட, இம்புட்டு ஏன், நம்ம பாபா ராம்தேவ் கூட யோகா சொல்லிக்கொடுத்து ஹரித்வாருலே பாதியை வளைச்சுப் போட்டிருக்காராம்.

அமெரிக்காவுலே பிளாரிடா மாகாணத்துலே சுஸீ டிடெல்மேன் என்ற வுமண், மனிசனுங்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்தது பத்தாதுன்னு இப்போ நாய்க்கும் சொல்லிக் கொடுக்கிறாங்களாம். அதுக்குப் பேரு டாகா! (DOGA)

இவங்க 2002-லேருந்தே ஆண்,பெண் மற்றும் மிருகங்களுக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்கிறாங்களாம். இப்போ சீனா, ஜப்பானிலேருந்தெல்லாம் நாய்ங்க பாஸ்போர்ட் வாங்கிட்டு இவங்க கிட்டே டாகா கத்துக்கிடணுமுன்னு அமெரிக்கன் எம்பஸி வாசல்லே வாலைக்குழைச்சுக்கிட்டு வரிசையிலே நின்னுக்கிட்டிருக்குதாம். நம்மூருலே அமெரிக்கன் எம்பஸி வாசல்லே நிக்குறவங்க கோவிச்சுக்காதீங்கப்பு, நான் ஒண்ணும் ரீல் விடலே!

இதைப் படிச்சா உங்களுக்கே தெரியும்!

இதையும் பார்த்து வையுங்களேன்...!



இதைப் பார்த்ததும் உங்க மனசுலே என்ன தோணுதுன்னு புரியுது. என்னடா இது, அமெரிக்காவுலே இருக்கிற நாய்கூட யோகா பண்ணுது. நாமல்லாம் இந்தியாவுலே மனுசனாயிருந்தும் யோகா கத்துக்காம இருக்கோமேன்னு தானே யோசிக்கிறீங்க!

நாமல்லாம் இப்பவே யோகாசனம் தினமும் பண்ணிட்டுத்தானிருக்கோம்.

உதாரணத்துக்கு, காலையிலே எழுந்ததும் பல்விளக்குறோமோ இல்லையோ, சன் டிவியை போடுறோமில்லியா, அதுக்குப் பேருதான் சூரிய நமஸ்காரம்!

தினமும் வீட்டுலேருந்து கெளம்பி டாஸ்மாக் கடையெல்லாம் தாண்டி, குப்பையும் கூளமுமாயிருக்கிற ரோட்டுலே மூக்கைப் பிடிச்சிட்டு நடந்துபோறோமில்லே, அதுக்குப் பேருதான் பிராணாயாமம்.

அப்பாலே, பஸ்-லேயும் ரயில்-லேயும் உட்கார இடம்கிடைக்காம, நெரிசலிலே ஒத்தைக்காலிலே நின்னுக்கிட்டு, ஓத்தைக்காலைத் தூக்கிக்கினே பிரயாணம் பண்ணுறோமே - அது உட்டான்பாத ஆசனம்.

மாசக்கடைசியிலே எவனாவது கைமாத்துக் கேட்டிருவானோன்னு, தலையைக் காலுக்கு நடுவுலே ஒளிச்சுட்டுத் தப்பிக்கிறோமே, அதுக்குப் பேருதான் பஸ்சிமோத்தன் ஆசனம்.

அன்னாடம் திடுதிடுப்புன்னு கரண்டு போயி, தூக்கமில்லாம எப்படா தலைக்கு மேலே சீலிங் ஃபேன் சுத்துமுன்னு உத்தரத்தையே வெறிச்சுப் பார்த்திட்டிருக்கோமில்லே, அதுக்குப் பேரு - மத்ஸ்யாசனம்.

கல்யாணம் ஆனவங்க பொஞ்சாதிக்கு முன்னாடியும், ஆனவங்க ஆகாதவங்க எல்லாரும் ஆபீசுலே மேனேஜர் முன்னாடியும் அடிக்கொருவாட்டி பண்ணிட்டிருக்கோமே - அதுக்குப் பேருதான் சர்வாங்க ஆசனம்.

சுருக்கமா சொல்லணுமுன்னா, தண்ணியடிச்சிட்டு உண்மையை உளர்றது மாதிரி, நம்மளையறியாமலே நாமளும் பல யோகாசனங்களைப் பண்ணிட்டுத்தானிருக்கோம். அதுனாலே நாமல்லாம் அமெரிக்காவுலே இருக்கிற நாய்ங்க மேலே பொறாமைப் பட வேண்டாண்ணேன்!

அமெரிக்காவுலே வேண்ணா ஒருத்தர் நாய்க்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலாம். ஆனா, நம்மூரு நாய்ங்க முன்னாடி யாரும் நிக்க முடியாது. யாரும் சொல்லிக் கொடுக்காமலே நம்மூரு நாய்ங்க எப்படி யோகாசனம் பண்ணுதுன்னு பாருங்களேன்!

28 comments:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிலர், நாய் கவனிப்புக்கென்று. மாதம் அறுநூறு டாலர்கள் முதல் ஆயிரம் டாலர்கள் வரை செலவிடுகிறார்கள். ஒரு குழந்தை போலவே கவனித்துக் கொள்கிறார்கள். யோகா செய்வது - நாய்களுக்கு உள்ள obedience பள்ளிகளில் சேர்ப்பது - health இன்சூரன்ஸ் எடுப்பது - grooming - டாக்டர் இடம் monthly செக் அப் என்று அமர்களப்படும். நாய்க்காவது பரவாயில்லை. சில பூனைகளுக்கு உள்ள வாழ்வை பார்த்தால்..... எம்மாடி!

Speed Master said...

நீங்க என்ன யோக டீச்சரா ???


ஆமா பாஸ் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து சுடிதாரேட ஓடுவீங்களா



அப்பாவி வாசகன்

கும்மாச்சி said...

சேட்டை இன்னாதான் அமெரிக்காகாரன் நம்மகிட்டே சுட்டுகிட்டு சொல்லிகொடுத்தாலும், நீங்க சொன்னது போல் நமது தினசரி வாழ்கையே பெரிய யோகாதான். அதுபோல அவன் செய்ய முடியுமா?

சாந்தி மாரியப்பன் said...

அதானே... நம்ம அன்னாட வாழ்க்கைல இல்லாத யோகாவையா பாபாவும் அம்பேரிக்கா மாஸ்டரும் சொல்லிக்கொடுத்துடப்போறாங்க :-))))

இந்திரா said...

கடைசி வீடியோ காட்சி அட்டகாசம்.

இன்னைக்கு சூழ்நிலைல நாம பண்ற யோகாவ பத்தின விளக்கம் கலக்கல்ங்க..

Philosophy Prabhakaran said...

சேட்டை நீங்க இங்கிலிபீசு ப்ளாக் ஆரம்பிச்ச மேட்டர் இன்னைக்குத்தான் கும்மாச்சி சொல்லி தெரிஞ்சிக்கிட்டேன்... வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

ஆனா நான் அங்க எல்லாம் வரமாட்டேன்... ஒன்லி டமில்...

Philosophy Prabhakaran said...

உங்க தளத்தில் இருந்து நிறைய பேர் என் தளத்திற்கு stats வருவதாக சொல்லுகிறது... நன்றி சேட்டை இணைப்பு கொடுத்ததற்கு...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
கொஞ்சம் வித்தியாசமான பதிவினைத் தந்திருக்கிறீங்க
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது..

நாய்..டோகா பார்த்துச் சிரிப்பை அடக்க முடியலை சகோ.

கே. பி. ஜனா... said...

சிரிச்சு வயிறு சுளுக்கிக்கிட்டதுக்கு ஏதாச்சும் யோகாசனம் இருக்கா?

சிநேகிதன் அக்பர் said...

சிரிக்க .. சிந்திக்க.. அருமையான பதிவு சேட்டை.

sudhanandan said...

எங்கள் வீடியோவை எங்கள் அனுமதியின்றி போட்டதற்கு லொள் லொள் லொள் ....
- தெரு நாய்கள் சங்கம், சென்னை கிளை

வெங்கட் நாகராஜ் said...

அடாடா... என்னா ஒரு ஆராய்ச்சி... :) நம்ம நாட்டுல இருக்கிற நல்லதெல்லாம் அடுத்த நாட்டுக்காரங்க சொல்லித்தானே நமக்குப் புரியும்...

நாய்களுக்கு கூட யோகாவா... இது நல்லா இருக்கு சேட்டை....

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா யோகாசனம் தலைப்பு வெச்சா லேடீஸ் ஃபோட்டோ போட்டுக்கலாம? ஐடியா சூப்பர். ஹி ஹி

அம்பாளடியாள் said...

அடடா இவங்கள் எல்லாம் நல்லா யோகா செயுராங்களே
நமக்குத்தான் புடிபடுதில்ல ஹி..ஹி ....ஹி ...நன்றி சகோ
அருமையான பகிர்வுக்கு.......

settaikkaran said...

//Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிலர், நாய் கவனிப்புக்கென்று. மாதம் அறுநூறு டாலர்கள் முதல் ஆயிரம் டாலர்கள் வரை செலவிடுகிறார்கள்.//

ஓஹோ! அதான் அமெரிக்க பொருளாதாரம் அப்பப்போ சிக்கல்லே மாட்டிக்குது போலிருக்குது! :-)

//ஒரு குழந்தை போலவே கவனித்துக் கொள்கிறார்கள். யோகா செய்வது - நாய்களுக்கு உள்ள obedience பள்ளிகளில் சேர்ப்பது - health இன்சூரன்ஸ் எடுப்பது - grooming - டாக்டர் இடம் monthly செக் அப் என்று அமர்களப்படும்.//

நாயாய்ப் பிறந்திடில்-னு பட்டினத்தார் பாடியிருக்கிறாரு! அடுத்த ஜென்மத்துலே அமெரிக்காவுலே நாயாப் பிறக்கணும்னு வேண்டிக்கிறேன். :-))

//நாய்க்காவது பரவாயில்லை.சில பூனைகளுக்கு உள்ள வாழ்வை பார்த்தால்..... எம்மாடி!//

ஓ! அதுவும் படிச்சேனே! அதையெல்லாம் இன்னொரு மொக்கைக்கு-னு Buffer-லே வச்சிருக்கேன். மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//Speed Master said...

நீங்க என்ன யோக டீச்சரா ??? ஆமா பாஸ் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து சுடிதாரேட ஓடுவீங்களா!//

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க, அதுனாலே தான் முந்தின இடுகைகளை வாசிக்கலேன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி! :-)

//அப்பாவி வாசகன்//

யாரு, நீங்க அப்பாவியா? நாங்களும் இதே வலையுலகத்துலே தான் இருக்கோம். :-))

settaikkaran said...

//கும்மாச்சி said...

சேட்டை இன்னாதான் அமெரிக்காகாரன் நம்மகிட்டே சுட்டுகிட்டு சொல்லிகொடுத்தாலும், நீங்க சொன்னது போல் நமது தினசரி வாழ்கையே பெரிய யோகாதான். அதுபோல அவன் செய்ய முடியுமா?//

கண்டிப்பாக! இன்னும் கொஞ்சம் சீரியஸாப் பார்த்தா முந்திய தலைமுறையைச் சேர்ந்தவங்க, யோகா, தியானம் இதெல்லாம் இல்லாமலே நீண்டநாட்கள் ஆரோக்கியத்தோட வாழ்ந்தாங்களே! :-))

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

அதானே... நம்ம அன்னாட வாழ்க்கைல இல்லாத யோகாவையா பாபாவும் அம்பேரிக்கா மாஸ்டரும் சொல்லிக்கொடுத்துடப்போறாங்க :-))))//

கரெக்ட்! கிராமத்துலே இருக்கிற தாத்தாவும் பாட்டியும் அதை விட நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுப்பாங்க - காசு வாங்காமலே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//இந்திரா said...

கடைசி வீடியோ காட்சி அட்டகாசம். இன்னைக்கு சூழ்நிலைல நாம பண்ற யோகாவ பத்தின விளக்கம் கலக்கல்ங்க..//

நாம பண்ணிட்டிருக்கிறதைத்தான் கொஞ்சம் அங்கே இங்கேன்னு பார்த்து ஒப்பிட்டு எழுதினேன். மிக்க நன்றி சகோதரி..! :-)

settaikkaran said...

// Philosophy Prabhakaran said...

சேட்டை நீங்க இங்கிலிபீசு ப்ளாக் ஆரம்பிச்ச மேட்டர் இன்னைக்குத்தான் கும்மாச்சி சொல்லி தெரிஞ்சிக்கிட்டேன்... வாழ்த்துக்கள்...//

ஹிஹி! அது வந்து சும்மா ஒரு உல்லுலாயிக்கு ஆரம்பிச்சிருக்கேன். :-))

//ஆனா நான் அங்க எல்லாம் வரமாட்டேன்... ஒன்லி டமில்...//

நானு வந்து ராஜ்தீப் சர்தேசாய், அர்னாப் கோஸ்வாமி மாதிரி ஆவணுமுன்னு ஆரம்பிச்சிருக்கேன். வர்றதும் வராததும் உங்க இஷ்டம்! :-)

//Philosophy Prabhakaran said...

உங்க தளத்தில் இருந்து நிறைய பேர் என் தளத்திற்கு stats வருவதாக சொல்லுகிறது... நன்றி சேட்டை இணைப்பு கொடுத்ததற்கு...//

அப்படியா? நான் ஒண்ணுமே பண்ணலியே, எது எப்படியோ தமிழ்மணம் நட்சத்திரத்தோட எழுத்தை இன்னும் நிறைய பேர் வாசிக்கிறது மகிழ்ச்சி. நன்றி!

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் பாஸ், கொஞ்சம் வித்தியாசமான பதிவினைத் தந்திருக்கிறீங்க
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது..நாய்..டோகா பார்த்துச் சிரிப்பை அடக்க முடியலை சகோ.

அப்ப்பபோ கொஞ்சம் வரைட்டி பண்றதுதான்! இது வீடியோ பார்த்ததும் வந்த ஐடியா சகோ! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கே. பி. ஜனா... said...

சிரிச்சு வயிறு சுளுக்கிக்கிட்டதுக்கு ஏதாச்சும் யோகாசனம் இருக்கா?//

இருக்குதே! அடிக்கடி இங்கே வரணும் நீங்க - ரிப்பீட்டாசனம்! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

சிரிக்க .. சிந்திக்க.. அருமையான பதிவு சேட்டை.//

வாங்கண்ணே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//sudhanandan said...

எங்கள் வீடியோவை எங்கள் அனுமதியின்றி போட்டதற்கு லொள் லொள் லொள் ....
- தெரு நாய்கள் சங்கம், சென்னை கிளை//

அட என்னாது, நான் சங்கத்தலைவருக்கு டபுள் பொறை வாங்கிக் கொடுத்திட்டுத்தானே வீடியோ ரைட்ஸ் வாங்குனேன்..? :-))

மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

அடாடா... என்னா ஒரு ஆராய்ச்சி... :) நம்ம நாட்டுல இருக்கிற நல்லதெல்லாம் அடுத்த நாட்டுக்காரங்க சொல்லித்தானே நமக்குப் புரியும்...//

அதான் வெங்கட்ஜீ! மஞ்சளைப் பத்தி மாய்ஞ்சு மாய்ஞ்சு ஊருலே சொல்வாங்க. ஆனா, அதுக்கு அமெரிக்காவுலே பேட்டன்ட் கேட்டப்புறம்தான் நமக்கு உறைக்குது. :-))

//நாய்களுக்கு கூட யோகாவா... இது நல்லா இருக்கு சேட்டை....//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா யோகாசனம் தலைப்பு வெச்சா லேடீஸ் ஃபோட்டோ போட்டுக்கலாம? ஐடியா சூப்பர். ஹி ஹி//

அதுக்கென்ன தல, தாராளமாப் போட்டுக்குங்க! என் கிட்டே கூட ஸ்ரேயா பத்மாசனம் பண்ணுறா மாதிரி ஒரு போட்டோ இருந்திச்சு. :-)

மிக்க நன்றி தல! :-)

Philosophy Prabhakaran said...

// ராஜ்தீப் சர்தேசாய், அர்னாப் கோஸ்வாமி //

இவுகள்லாம் யாரு... வடநாட்டு அரசியல்வாதிகள் பெயர் மாதிரி இருக்கே...