Saturday, December 18, 2010

அஞ்சு பைசா திருடினா குத்தமா?

"ஹலோ! யாரு அம்பியா?"

"யோவ், நான் அம்பி இல்லை; அந்நியன்!"

"வணக்கம் அந்நியன் சார்! நல்லாயிருக்கீங்களா? சதா சௌக்கியமா இருக்காங்களா?"

"ஹலோ, நீங்க யாரு பேசறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?"

"என் பேரு கொப்பம்பட்டி கோவாலு! நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரு லஞ்சம் வாங்கிட்டாரு! அதான் தகவல் தெரிவிக்கலாமுன்னு கூப்புட்டேன்."

"என்னது, லஞ்சம் வாங்கிட்டாரா? என்னய்யா, என்னவோ புதுவருச காலண்டர் வாங்கிட்டாருங்கிற மாதிரி சாதாரணமா சொல்றே?"

"இப்போ லஞ்சம் வாங்குறதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே! அது போகட்டும், அஞ்சு பைசா திருடினா குத்தமா அந்நியன் சார்?"

"திஸ் இஸ் டூ மச்! என்னோட "பிட்"டை என்கிட்டேயே போடறீங்களா? அஞ்சு பைசா திருடினாலும் தப்புத்தான். அஞ்சு கோடி பேரு அஞ்சு பைசாவை...."

"ஸ்தூ! ஸ்தூ!! ரொம்ப நீளமான டயலாக்கெல்லாம் கேட்க முடியாது. செல்போனை டாப்-அப் பண்ண மறந்திட்டேன். தப்பா இல்லையா?"

"பெரிய தப்பு! கருட புராணப்படி அந்தாளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது தான். அவரு அட்ரஸைச் சொல்லுங்க!"

"எழுதிக்கோங்க! கொப்பம்பட்டி கோவாலு, கேர் ஆஃப் கோவிந்தா, டுபாக்கூர் பை-பாஸ் ரோடு, கொப்பம்பட்டி! பஸ் நம்பர் 420-ஐப் புடிச்சா எங்க வீட்டுலே தான் வந்து முட்டும்!"

"என்ன கோவாலு? உங்க அட்ரஸையே சொல்லுறீங்க?"

"லஞ்சம் வாங்கினதே நான் தான்! என் அட்ரஸைக் கொடுக்காம வேறே ஏதோ டில்லி அட்ரஸையா கொடுக்க முடியும்?"

"நீங்களே லஞ்சம் வாங்கிட்டு நீங்களே என்கிட்டே புகார் கொடுக்கறீங்க? மனசாட்சி உறுத்திடுச்சா?"

"யோவ் அந்நியன்! என்னை என்ன மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையர்னு நினைச்சுக்கிட்டியா? பண்ணின தப்புக்கு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு மனசாட்சி தெளிவாயிருக்குன்னு புளுகுறதுக்கு?? நான் சோறு திங்கிறேன் சாமி! இப்போ கருடபுராணத்துலே சொல்லியிருக்கிறா மாதிரி தண்டனை கொடுப்பியா மாட்டியா?"

"என்னய்யா இது? நீ லஞ்சம் வாங்கிட்டு என்னை மிரட்டறே?"

"இப்பல்லாம் லஞ்சம் வாங்குறவன் மிரட்டறதுதானய்யா லேட்டஸ்ட் ஃபேஷன்! சொல்லு, நான் சொன்ன அட்ரஸுக்கு வந்து தண்டனை கொடுப்பியா? வரதுக்கு முன்னாடி ஒரு மிஸ்டு கால் கொடு! நான் வாசல்லே வந்து நிக்கிறேன்!"

"என்னய்யா குழப்பறே? இது லஞ்சக்கேசுலே மாட்டுனவங்களை ஒரு பதவியிலேருந்து தூக்கி இன்னொரு பதவியிலே உட்கார வைக்கிற சீசனாச்சே? எதுக்கு வலிய வந்து மாட்டிக்கிறே?"

"என்னய்யா நீ? நம்ம நாட்டு சி.பி.ஐ.மாதிரி சும்மா கேள்வி மேலே கேள்வி கேக்குறியே தவிர ஒண்ணும் பண்ண மாட்டேங்குறியே? எனக்கென்னவோ உன் மேலேயே டவுட்டாயிருக்குது! சொல்லுய்யா, நீயும் மாமன் மச்சான் பேருலே கம்பனி தொடங்கி கருப்புப்பணத்தை வெள்ளோட்டம் விட்டிருக்கியா?"

"மிஸ்டர் கோவாலு! மரியாதையா பேசு! இல்லாட்டி உனக்கு என்ன தண்டனை தெரியுமா? பரிபாதனம்!"

"பரிபாதனமா? அப்படீன்னா?"

"எரிமலைக்குழம்பைக் குடிக்கிற தண்டனை!"

"அடப்போய்யா, நான் என் பொஞ்சாதி பண்ணுற வெந்தயக்கொழம்பையே சாப்பிட்டவன். ஏதோ பெரிய தண்டனை கொடுப்பேன்னு பார்த்தா, காமெடி பண்ணிக்கிட்டு...!"

"கோவாலு! நான் கொடுக்கிற தண்டனையைக் கிண்டல் பண்ணாதீங்க! ’அந்நியன்’ படம் பார்த்தீங்களா இல்லியா?"

"பார்த்தேன்! பார்த்தேன்! எதுக்கும் ஒரு வாட்டி திருப்பிச் சொல்லேன். மொத்தம் எவ்வளவு தண்டனை? எத்தனை அயிட்டம் இருக்கு?"

"அயிட்டமா? யோவ், இதென்ன செட்டிநாடு ரெஸ்டாரண்டா? விட்டா இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் உண்டான்னு கேட்பே போலிருக்கே?"

"கோவிச்சுக்காம சொல்லுய்யா!"

"அந்தகூபம்-அதாவது இருட்டுக்குகையிலே தள்ளி எருமை மாடுங்களை விட்டு மிதிக்கிறது!"

"சரிதான், லாக்-அப்புலே போலீஸ்காரங்க மிதிக்கிறா மாதிரி...!"

"அடுத்தது கிருமிபோஜனம்! இரத்தம் உறிஞ்சுற அட்டைகளால உடம்பு முழுக்கக் கடிக்க விடறது...!"

"ஓஹோ! நாங்க வாங்குற லஞ்சத்துலே கீழேயிருந்து மேலே வரைக்கும் பர்சன்டேஜுன்னு எல்லாரும் உறிஞ்சி எடுக்கிறா மாதிரி...!"

"கும்பீபாகம்! எண்ணையிலே போட்டு வறுத்தெடுக்கிறது!"

"இது ஞாபகமிருக்கு! பாருங்க அந்நியன்! என்னையும் இதே மாதிரி வறுக்கிறதா இருந்தா, அதிகம் மிளகாய் சேர்க்காதீங்க. ஏன்னா எனக்கு அல்சர். காரம் ஒத்துக்காது!"

"யோவ், உன்னைத்தான் வறுக்கவே போறேன்!"

"இப்போ மட்டும் என்ன வாழுதாம்? வாங்கினா ஜனங்க வறுத்தெடுக்கிறாங்க; வாங்கலேன்னா மேலதிகாரிங்க வறுத்தெடுக்கிறாங்க! மொத்தத்துலே வறுபடுறது என்னவோ நிச்சயம்!"

"அடுத்தது தாமிஸ்ரம்! மண்டையிலே குண்டாந்தடியாலே அடிக்கிறது!"

"ஊஹும்! புதுசா ஏதாவது சொல்லு! இதுதான் வீட்டுலே தினப்படி நடக்குதே!"

"என்னய்யா இது? கொஞ்சம் கூட பயப்படவே மாட்டேங்குறியே!"

"அந்நியன்! உன்னோட தண்டனையெல்லாம் படத்துலே பார்க்க சவுண்டு எஃபெக்டோட நல்லாயிருந்திச்சு! கேட்கும்போது பயமே வரமாட்டேங்குது! இருக்கிறதுலேயே நல்ல தண்டனையாப் பார்த்து செலக்ட் பண்ணி சாயங்காலத்துக்குள்ளே ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பு! ஓ.கேவா?"

"எஸ்.எம்.எஸ்.அனுப்பவா? கோவாலு சார்! என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?"

"அட இல்லைய்யா, நம்பு!"

"பேசாம நீங்க போலீஸ்லே போய் சரண்டர் ஆயிருக்கலாமே? அவங்க பார்த்து உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பாங்களே? எதுக்கு என் உசிரை எடுக்கறீங்க?"

"போலீஸா? என்ன விளையாடுறியா? நான் வாங்கியிருக்கிற நூறு ரூபாய் லஞ்சத்துக்கெல்லாம் போலீஸுக்குப் போறதா? லஞ்சமுன்னா ஒரு மரியாதை வேண்டாம்? ஏதோ லட்சக்கணக்குலே, கோடிக்கணக்குலே இருந்தா, கோர்ட், கேஸு, விசாரணைக்கமிசன்னு போறதிலே ஒரு நியாயமிருக்கு!"

"அடப்பாவிகளா!"

"அப்படியே கேஸ் போட்டா மட்டும் என்னாயிரும்? உதாரணத்துக்கு தமிழ்நாட்டுலே கூத்தபெருமாளுன்னு ஒருத்தரு அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கினாரு! பதினேழு வருசம் கேஸ் நடந்து இப்போத்தான் சுப்ரீம் கோர்ட்டுலே ஒரு வருஷம் ஜெயிலுன்னு தீர்ப்பாயிருக்கு! பதினோரு வருசமா சம்பளமும் கிடையாது; கிம்பளமும் கிடையாது! சோத்துக்கு என்னய்யா பண்ணுவான் ஒரு மனிசன்? அம்பது ரூபாய்க்கு பதினேழு வருசமுன்னா, நான் நூறு ரூபாய் வாங்கியிருக்கேன். எனக்கு முப்பத்தி நாலு வருசமா?"

"கோவாலு????"

"அதுனாலே தான், இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு உனக்கு போன் பண்ணினேன். மரியாதையா சட்டுப்புட்டுன்னு வந்து தண்டனை கொடுத்துரு! இல்லாட்டி, சாகுறதுக்கு வேறே வழியா இல்லே எனக்கு? ஏதோ ’காவலன்’ படம் பொங்கலுக்குத்தான் வருதுன்னு சொன்னாங்களென்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ வந்தா வா; வராட்டிப்போ!"

கோவாலு போனைத் துண்டித்தார்.

23 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. எம்மாம் பெரிய பதிவு.. இருக்க படிச்சுட்டு வாரேன்..

அகல்விளக்கு said...

சரவெடி....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் சேட்டை..

கூத்தபெருமாள் , உடம்புல, அடிமை ரத்தமும், மற்றவர்கள் உடம்பில, கட்சி ரத்தமும் ஓடுது போல....


நாட்டில நடக்கும் உண்மை நிலை இதுதான். சே....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சூப்பரப்பு.....

SIVAYOGI said...

adai nanba nalla ezhuthiriye enakku roommmba pitichi irukku...keep it up.... vazhga valarga umathu thondu...nantriyudan.SIVA

பெசொவி said...

kalakaal,
settai rocks!!!!!!!!!!!1

Best Online Jobs said...

100% Real Money Making System

Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/

மங்குனி அமைச்சர் said...

யப்பா சாமி சேட்ட ...... சரியாத்தான் சொல்லி இருக்க

புலிகுட்டி said...

நூறு ரூபாய் எல்லாம் லஞ்சமா?.நாட்டு நடப்பு தெரியும்மில்ல.கொஞ்சம் பெரிய அமொண்டா வாங்க முயற்ச்சி செய் சேட்ட.

Unknown said...

சூப்பரப்பு....

சத்ரியன் said...

//"என்னய்யா நீ? நம்ம நாட்டு சி.பி.ஐ.மாதிரி சும்மா கேள்வி மேலே கேள்வி கேக்குறியே தவிர ஒண்ணும் பண்ண மாட்டேங்குறியே? //

சேட்டை,

வீட்டை விட்டு வெளியில எட்டிப்பாரு.ஆட்டோ கீட்டோ எதுனா வருதான்னு...!

Chitra said...

கலக்ஸ்!!!

Rekha raghavan said...

அருமையான சேட்டை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா,,, புனைபெயர் வச்சிக்கிட்டு இதுமாதிரி உண்மைக்
கதைகளை எழுதலாமா? எனக்குத் தெரியாமல் போயிடுச்சே..சே!

Unknown said...

Super! :-)

சி.பி.செந்தில்குமார் said...

ராசா.... உத்தம ராசாவா?

சேட்டை அண்ணன் கேள்வி

Valaakam said...

சூப்பருங்கோ...கோ...கோ....
கொந்தசாமி :
ஹீ...ஹீ... சமூகத்தில நடக்கிற சாதாரண விஷய்ம் கோபாலு... :P இதுக்கு போய் இம்புட்டு செலவழிச்சு கோல் எல்லாம் போட்டுட்டு... பேசாம இந்த காசுக்கு தைலம் வாங்கி வச்சுக்கோப்பா... வீட்டுல வுளுற அடியை ஆவது தாங்கிகளாம்... :P

தேவன் மாயம் said...

அசத்தல்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சூப்பரப்பு... செமையா சொல்லியிருக்கீங்க...

ரிஷபன் said...

ஒண்ணு போட்டு ரெண்டு சைபருக்கா இத்தனை கலாட்டா?!

Ravi kumar Karunanithi said...

:)

THOPPITHOPPI said...

நச்

ஜெய்லானி said...

ஆஹா..சேட்டை..கலக்கல்....:-))