Tuesday, December 14, 2010

ஏனுங்கோ, ஈரோடு போறீங்களாக்கும்...?

"சேட்டை, டிசம்பர் மாசக் கடைசியிலே என்ன பண்ணுறதா உத்தேசம்?"

"வேறே என்னா, எவனாவது அகப்பட்டா கைமாத்து வாங்கறதா உத்தேசம்!"

"நீ ஏன் உருப்படலேன்னு இப்பத்தானே தெரியுது. டிசம்பர் 26-ம் தேதி ஃப்ரீயா இருப்பியா?"

"நான் எப்பவுமே ஃப்ரீ தான். இப்போ மட்டுமென்ன டிக்கெட் வாங்கிட்டா பார்க்க வர்றே?"

"முடியலே சேட்டை, நான் மேட்டருக்கே வர்றேன். டிசம்பர் 26-ம் தேதி ஈரோடு பதிவர் குழும சந்திப்புக்குப் போலாமா?"

"டேய், நமக்கும் ஈரோட்டுக்கும் என்ன சம்பந்தம் சாமி? அது அந்த ஊருக்காரவுங்க சந்திச்சுப் பேசப்போறாங்க...!"

"ஆமாம், ஈரோட்டுலே இருக்கிற பதிவருங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து மஞ்சள் மண்டி வைக்கிறதைப் பத்திப் பேசப்போறாங்களாக்கும். அதுதான் பதிவருங்க, வாசகருங்க எல்லாரும் வாங்கன்னு ஆளாளுக்கு விலாவரியா இடுகை போட்டிருக்காங்கல்லே?"

"ஆமாமா, நான் கூட பார்த்தேன்! நம்ம அகல்விளக்கு கூட "நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம்,"னு கவிதையாவே அழைப்பு விடுத்திருந்தாரு!"

"கவிதையா, விடு, அதுதான் உனக்குப் புரியாதே! நம்ம டாக்டர் ஐயா கூட ஒரு இடுகை போட்டிருந்தாரே?"

"யாரு, டாக்டர் ராமதாஸா?"

"சேட்டை, அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு நேருலே வந்து உன் மண்டையிலே குட்டுவேன். நான் சொல்லுறது நம்ம ’சாமியின் மன அலைகள்,’ டாக்டர் ஐயா...!"

"ஓ சரி சரி! "ஈரோடு ஈரோடு ஈரோடு,"ன்னு காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுலே சவுண்டு விடுறா மாதிரியே இடுகை போட்டு அழைச்சிருந்தாரு! அதுலே பாரு, அவரு போனவாட்டி சென்னை வந்தப்போ, சந்திக்கிறேன்னு சொல்லிப்புட்டு ஜகா வாங்கிட்டேன். மனுஷன் கோவிச்சுக்குவாரோன்னு பயமாயிருக்கு!"

"அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாரு! நீ ஒரு சொதப்பல் கேசுன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே! உன் கிட்டே அதையெல்லாம் அவங்க எதிர்பார்க்க மாட்டாங்க!"

"அதுவும் சரிதான்!"

"அப்புறம் சேட்டை, நம்ம ஈரோடு கதிர் "சங்கமம் 2010 – தயாராகுங்கள்!"னு எழுதியிருந்தாரே, படிச்சியா?"

"படிச்சேன்! அதுலே அவரு,"நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும் எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்,"னு எழுதியிருந்தாரு! அதான் யோசிக்கிறேன்! பள்ளிப்பாளையம் பாலத்துக்குக் கீழே காவேரி வேறே கரைபுரண்டு ஒடுதாம். ஏதோ வலையுலகத்துக்கு ஒரு நல்ல காரியம் பண்ணலாமுன்னு என்னை, காவேரியிலே புடிச்சுத் தள்ளிருவாரோன்னு பயமாயிருக்கு!"

"சேச்சே, அதெல்லாம் பண்ணமாட்டாரு, அந்த ஊருக்காரங்களோட விருந்தோம்பல் பத்தித் தெரியாதா உனக்கு?"

"ஆமாண்டா!"

"சேட்டை, பள்ளிப்பாளையமுன்னா காவேரி மட்டும்தானா? எக்கச்சக்கமா தேங்காய் போட்டு, செமத்தியா காரம்போட்டு பள்ளிப்பாளையம் சிக்கன் கிடைக்கும் தெரியுமா? வா, போய் ஒரு வெட்டு வெட்டலாம்!"

"எனக்கும் ஆசைதான்! அத்தோட போனவாட்டியே திண்டல் முருகன் கோவிலுக்குப் போகாம வந்திட்டேன். பவானி சங்கமத்தைப் பார்க்கணும்! பெரியார் வீட்டைப் பார்க்கணும். பெரிய மாரியம்மன் கோவிலுக்குப் போகணும்னு தோணுது. எங்கேடா முடியப்போவுது...?"

"பவானின்னதும் ஞாபகம் வருது! நம்ம சங்கவியோட வலைப்பதிவை எவனோ ஆட்டையைப் போட்டுட்டானேடா சேட்டை?"

"ஆமாண்டா, என்னை மாதிரி மொக்கையோட வலைப்பதிவையே ஒருவாட்டி திருடிப்புட்டானுக. அவரு மாதிரி உழைச்சு, உருப்படியா எழுதுறவங்களை விட்டு வைக்கவா போறாங்க? ஆனா ஒரு நல்ல செய்தி, அவரோட பதிவு திரும்பக் கிடைச்சிருச்சாம். "எனக்கு வடை கிடைச்சிருச்சு.."ன்னு இடுகை போட்டிருக்காரு!"

"சந்தோஷண்டா! அவரும் "26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்" னு இடுகை எழுதியிருந்தாரு!"

"ஓ! படிச்சேனே!"

"அப்புறம், நம்ம ’அட்ரா சக்கைசி.பி.செந்தில்குமார், சென்னிமலை கூட பக்கத்துலே தானே இருக்காரு. அவரையும் போய்ப் பார்க்கலாமே?"

"சர்தான், அவரு ஏதாவது தியேட்டருலே விமர்சனம் எழுதுறதுக்குன்னே படம் பார்த்திட்டிருப்பாரு! அவரை எப்படி சந்திக்கிறதாம்...?"

"இதுக்குத்தான் உன்னை மாதிரி படமே பார்க்காம விமர்சனம் எழுதணும்கிறது. அது போகட்டும், இப்போ நீ என்னதான் சொல்லுறே? வர்றியா இல்லையா?"

"வரணுமுன்னு ஆசைதான். ஆனா, டிசம்பர் 26 அன்னிக்கு எங்க கோவில்லே மண்டல பூஜை நடக்குது. நான் போகாம இருக்க முடியாது. ஊருலேருந்து கிளம்பினாலும் ஈரோடு போய்ச் சேர ராத்திரி ஆயிடும்."

"ஓஹோ!"

"அதுனாலே என்ன, நீங்கல்லாம் போய் பட்டையைக் கிளப்பிட்டு வாங்க! சென்னை ஆளுங்க கூட அப்படியே கிறிஸ்துமஸ் லீவுக்கு ஜாலியா சேர்ந்து ஈரோடு போயி ஒரு ரவுண்டடிச்சிட்டு வரலாமே?"

"சென்னையிலிருந்தா?"

"நிறைய பேரு போவாங்கன்னு எனக்குத் தெரியும். அட, நம்ம பிரபாகர் கூட சிங்கப்பூருலேருந்து போறாரு, சென்னையிலிருந்தா போக மாட்டாங்க?"

"பார்த்தேன் பார்த்தேன்! சங்கமத்துக்கு வாரீயளா?-னு இடுகை போட்டிருந்தாரு!"

"சரி நண்பா, நல்லபடியா போய் கலந்துக்கோ! நிறைய ஈரோடு பதிவர்களைப் பத்திப் பேச முடியலே. அவங்களுக்கும் என்னோட வணக்கங்களைச் சொல்லு! விழா நல்லபடியா நடக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்!"

"சரிடா சேட்டை, ஈரோட்டுலேருந்து ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"

"அந்த ஊருக்காரங்க எல்லாருமே சூப்பரா எழுதுறாங்களே? அதுக்கு ஏதாவது ரகசிய ஃபார்முலா வச்சிருந்தா, நைஸா அபேஸ் பண்ணிட்டு வந்திரு! நாமளும் எத்தனை நாளுதான் மொக்கை போடுறதாம்...?"

"ஓ.கே!"

27 comments:

vasu balaji said...

அப்ப போகலையா. இதுக்கா இம்புட்டு அலம்பல்:))

க.பாலாசி said...

ரொம்ப நன்றிங்க சேட்டை பகிர்ந்தமைக்கு.. எல்லோரும் வாங்க கலந்துக்கலாம், கலக்கலாம்..

ஈரோடு கதிர் said...

அடடா, பெரியார் மன்றம் அன்னிக்கு இருந்திருந்தா கூட்டத்த அங்கேயே வச்சிருந்திருக்கலாம்....

நீங்க சொன்னபிறகுதான் நினைவுக்கு வருது

மிக அசத்தலான பகிர்வு

நன்றி சேட்டை!

அமர பாரதி said...

சேட்டை, மரியதையாகவோ மரியாதையில்லாமலோ கண்டிப்பாக சங்கமத்துக்கு வரவும்.

sakthi said...

அப்போ வரலையா

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு சேட்டை.

பவள சங்கரி said...

நல்ல பதிவுங்க....ஏனுங்க நாங்களும் நம்மூரூதானே...........எங்களையும் சேத்துக்கலாங்களே.........

பிரபாகர் said...

நீங்களும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!... முடிந்தால் வாருங்கள் நண்பரே!...

பிரபாகர்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

விழா நல்லபடியா நடக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்!.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சென்னையில இருந்து ஏரோபிளேன் போகுதானு கேட்டு சொல்லுங்க சேட்டை..
ஹி..ஹி நானும் வரலாமுனு இருந்தேன்.. ஹி..ஹி லீவு கிடைக்கலே..

VELU.G said...

ஏனுங்க ரொம்ப நல்ல சொன்னீங்க

ஆனா வரமாட்டீங்கங்கரதுதான் கொஞ்சம் வருத்தம்

Chitra said...

"அந்த ஊருக்காரங்க எல்லாருமே சூப்பரா எழுதுறாங்களே? அதுக்கு ஏதாவது ரகசிய ஃபார்முலா வச்சிருந்தா, நைஸா அபேஸ் பண்ணிட்டு வந்திரு!


.... Good(f) idea! Super!

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் பதிவு எங்க ஊர்க்கறாங்க எல்லாத்தையும் கொண்டு வந்துட்டீங்க மிக்க நன்றி சேட்டை...

என் வலைப்பதிவு திரும்ப கிடைக்க நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி...

உங்களை ஈரோடு சங்கமத்திற்கு வருக வருக என அழைக்கிறேன்...

நிச்சயம் வாங்க வாங்க வாங்க...

அமர பாரதி said...

அய்யா பட்டாபட்டி,

//ஹி..ஹி லீவு கிடைக்கலே.. // சங்கமம் நடக்கறது ஞாயித்துக் கிழமை. சனி நைட்டு பொறப்பட்டா திங்கள் காலையில சென்னை போயிறலாமே.

பழமைபேசி said...

நானும் வர்றேன் யாரும் சொன்னபாட்டக் காணம்... ஆள், ஆளுக்கு வாழ்த்துச் சொல்றதுலயே இருக்காங்க....

சரி, நானும் வாழ்த்துச் சொல்லிக்கிறேன்... விழா சிறப்பெய்த வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//நிச்சயம் வாங்க வாங்க//

வாங்க வாங்கன்னா, என்னா அர்த்தம்? உதை வாங்கவா? விருந்தோம்பலை வாங்கவா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வந்தா பஸ் க்கு காசு கொடுப்பாங்களா?

R. Gopi said...

:)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வந்தா பஸ் க்கு காசு கொடுப்பாங்களா?
////////


பஸ்சுக்கு ஏன் கொடுக்கணும்?!! கண்டக்டருக்கிட்டதானே கொடுக்கணும்?!!

வைகை said...

விழாவுக்கு வாழ்த்துக்கள்

suneel krishnan said...

"அந்த ஊருக்காரங்க எல்லாருமே சூப்பரா எழுதுறாங்களே? அதுக்கு ஏதாவது ரகசிய ஃபார்முலா வச்சிருந்தா, நைஸா அபேஸ் பண்ணிட்டு வந்திரு!//
இந்த சந்தேகம் ரொம்ப நாளா எனக்கும் இருக்கு :)

Unknown said...

//அதுக்கு ஏதாவது ரகசிய ஃபார்முலா வச்சிருந்தா, நைஸா அபேஸ் பண்ணிட்டு வந்திரு! நாமளும் எத்தனை நாளுதான் மொக்கை போடுறதாம்//

:-))

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு வர்லை எனும் 2 வார்த்தை மேட்டரை சுவையாக 4 பக்க அளவுக்கு எழுதி அனைவரையும் கலாய்த்த சேட்டை அண்ணனுக்கு ஒரு ஓ போட்டு 2 ஓட்டும் போட்டு

அவருக்கு பதிவுலகின் மணிரத்னம் என்ற பட்டத்தையும் அளிக்கிறோம்

சி.பி.செந்தில்குமார் said...

"அந்த ஊருக்காரங்க எல்லாருமே சூப்பரா எழுதுறாங்களே? அதுக்கு ஏதாவது ரகசிய ஃபார்முலா வச்சிருந்தா, நைஸா அபேஸ் பண்ணிட்டு வந்திரு!//

எல்லாம் நீங்க எழுதற நகைச்சுவை ஐடியாக்களை படிச்சு படிச்சு உரு போட்டு தேத்தறதுதான்.நீங்க சூரியன், நான் உங்க ஓளியில் உருவான சாதா நட்சத்திரம்

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சருக்கு ஓலை அனுப்பாத ஈரோடு பதிவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்

Anonymous said...

ஈரோடு போகலங்குறத இவ்வ்வ்வ்வ்ளோ சுத்தி வளச்சு சொல்லணுமா???

அடப்போங்கப்ப்ப்பா..

சிவகுமாரன் said...

பதிவர் சந்திப்பெல்லாம் உண்மையாகவே நடக்குதா. எங்க மதுரையில எப்ப ?