Friday, February 26, 2010

ஐயோ பாவம்


முன்குறிப்பு: இது என் படைப்புக்களைப் படிக்கிறவர்கள் பற்றிய பதிவு அல்ல!

அழைத்தபோதெல்லாம் தோன்றி அருள்பாலித்த கூகிளாண்டவருக்கு நேற்று என்ன எரிச்சலோ?

"உன்னோட நச்சு தாங்கலடா சேட்டை! கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டியா?" என்று இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு வந்து கதவைத் தட்டியதும், எழுந்து திறக்க வரும் மேன்சன் மேனேஜரைப் போல கடுப்புடன் கேட்டார்.

"கோச்சுக்காதே மாம்ஸ்! எனக்கு ஒரே வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் சொல்லேன் ப்ளீஸ்!" என்று கெஞ்சினேன். என் அவசரம் எனக்கு, அடுத்த பதிவு போட்டாக வேண்டுமே?

"கேட்டுத்தொலை!" என்று முணுமுணுத்தார் கூகிளாண்டவர். "இவனெல்லாம் பிளாக் ஆரம்பிக்கலேன்னு யாரு அழுதாங்க?"

"ஒரு வார்த்தை! ரெண்டே ரெண்டு எழுத்து! அர்த்தம் மட்டும் சொல்லு மாம்ஸ்!"

"டேய் சேட்டை, ஓவரா பில்ட்-அப் கொடுக்காதே! அது என்ன வார்த்தைன்னு சொல்லு!" என்று பற்களை நறநறவென்று கடித்தார் கூகிளாண்டவர்.

"எதுக்கெடுத்தாலும் ஐயோ ஐயோங்கிறோமே! இதுக்கென்ன மாம்ஸ் அர்த்தம்?"

"இது ஒரு சப்பை மேட்டர்!" என்று எரிந்து விழுந்தார் மாம்ஸ். "Interjection expressing sorrow,distress or sympathy."

"இப்போ எதுக்கு பீட்டர் வுடுறே? தமிழ்லே பேச மாட்டியா? மனசுக்குள்ளே பெரிய மெட்ராஸ்வாசின்னு நினைப்பா?" என்று கடுப்படித்தேன் மாம்ஸை!

"உன் கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்குப் பேசாம நான் அஜித்தாவோ ரஜினியாவோ பொறந்திருக்கலாம்," என்று தலையில் மடேர் மடேரென்று அடித்துக்கொண்டார் கூகிளாண்டவர்.

"தெரியாதுன்னு சொல்லு! அதுக்காக இங்கிலீஷுலே பேசி என்னை குழப்பாதே! ஒரு உதாரணம் கூடவா சொல்ல முடியலே உன்னாலே?" நான் விடுவதாக இல்லை கூகிளாண்டவரை!

"சரி, உதாரணம் தானே? ’ஐயோ குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டது!’ போதுமா உதாரணம்?" மாம்ஸ் அப்பீட் ஆவதற்கு ஆயத்தமானார்.

"ஏன்? தாத்தா கட்டில்லேருந்து விழுந்தா ஐயோன்னு சொல்லாம ஹையான்னா சொல்லுவாங்க?"

"சேட்டை, முடியலேடா!"

"இரு இரு, எஸ்கேப் ஆக ட்ரை பண்ணாதே! சாமி படம் பார்த்திருக்கியா?"

"ஓ! கந்தன் கருணை, திருவிளையாடல்,திருவருட்செல்வர், திருமலை தென்குமரின்னு ஏகப்பட்ட சாமிப்படம் பார்த்திருக்கேன்!"

"உன் கிட்டே கேட்டேன் பாரு, என் புத்தியை...,"

"செருப்பாலே அடிக்கணுமா? இரு கழட்டித்தர்றேன்!" கூகிளாண்டவர் முகத்தில் குதூகலம்.

"எதுக்கு மாம்ஸ் பறக்கறே? இப்போத் தானே பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அதுக்கப்புறம் செருப்படி தானாவே வரும்! விக்ரம்-த்ரிஷா நடிச்ச சாமி படம் பார்த்தியான்னு கேட்டா நீ பக்திப்படத்தோட பெயரா சொல்லிட்டிருக்கே?"

"ஓ! த்ரிஷாவா?"

"வாயை மூடு மாம்ஸ்! உள்ளே க்வாலியர் ஒன்டே மேட்ச் லைவ் டெலிகாஸ்ட் தெரியுது. அந்தப் படத்துலே ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்குன்னு ஒரு பாட்டு வரும் தெரியுமா?"

"ஹி..ஹி! தெரியுமே!"

என்ன கொடுமைங்கண்ணா இது? த்ரிஷான்னா கூகிளாண்டவர் கூட வழியுறாரு பாருங்க!

"அந்தப் பாட்டுலே என்ன விக்ரம் த்ரிஷாவைப் பார்த்து சோகமாவா பாடறாரு?"

"இல்லை!"

"எம்.குமரன் ஸன் ஆஃப் மஹாலட்சுமி படத்துலே ஐயோ..ஐயையோ..உன் கண்கள் ஐயையோன்னு ஜெயம் ரவி அசினைப் பார்த்துப் பாடுவாரே, அவரென்ன அசினைப் பார்த்து மிரண்டு போயா பாடுனாரு?"

"இல்லை!"

"அதையும் விடு! ரிதம் படத்துலே ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு ரம்யா கிருஷ்ணன் பாடுனாங்களே...அதுக்கு என்ன அர்த்தம்?"

"டேய் சேட்டை! உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன்? ஆத்துலே போற தண்ணியை அய்யாகுடி அம்மாகுடிங்கிறா மாதிரி உனக்கும் இலவசமா ஒரு பிளாக் கொடுத்ததுக்கா இந்த டார்ச்சர்?"

"மழுப்பாதே மாம்ஸ்! உனக்கு ஐயோங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியலேன்னு சொல்லு! இனிமே நீ கூகிளாண்டவர் இல்லை. கூகிளடியார் தான்னு ஒத்துக்கோ!"

"டேய் விக்கி சொல்லறதைத் தானேடா நானும் சொல்றேன்," என்று அழவே ஆரம்பித்து விட்டார் மாம்ஸ்.

"நீ விக்கி சொல்றியோ இல்ல திக்கி சொல்றியோ, தப்பு தப்பு தானே?" நானா விடுவேன்.

"எப்படிடா தப்பு?"

"கேளு மாம்ஸ்! ஒரு அழகான பொண்ணு "ஐயோ, எனக்குக் கூச்சமா இருக்கு,"ன்னு சொல்லறதில்லையா?"

"சமீபகாலத்துலே அப்படியொரு சம்பவம் நடந்ததா எனக்குத் தெரியலியே சேட்டை!" என்று விசும்பி விசும்பி அழுதார் கூகிளாண்டவர்.

"என்னைப் பார்த்தே,’ஐயோ சேட்டை, இந்தச் சட்டையிலே நீ பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டாயிருக்கேன்.’னு சொல்றாங்களே, அதுக்கென்ன சொல்லறே?"

"ஆதாரமில்லாத புரளியெல்லாம் நான் சீரியஸா எடுத்துக்கிறதில்லே சேட்டை!"

"மொத்தத்துலே உனக்கும் சரி, விக்கிக்கும் சரி, ஒரு சின்ன வார்த்தைக்குக் கூட அர்த்தம் தெரியலே. ஆனா ரெண்டு பேரும் பெரிய பருப்பு மாதிரி அல்டாப் பண்ணிட்டுத் திரியறீங்க. இல்லையா?"

என்னை ஏற இறங்கப் பார்த்த கூகிளாண்டவர் மறுகணமே "ஐயையோ தெய்வமே, என்னைக் காப்பாத்து,"ன்னு ஜூட் விட்டுப்புட்டாரு!

அவர் போனாப் போறாருங்க! நீங்களாவது சொல்லுங்க! ஐயோன்னா என்னங்க அர்த்தம்?

37 comments:

மதுரை சரவணன் said...

ayyo theiyvame eppadi ippadi? saralamaaka varukirathu ayyo naan vera sollanumaa!

அகல்விளக்கு said...

ஐயையே...

யாராவது காப்பாத்துங்க...
தெரியாம இந்தப்பக்கம் வந்துட்டேன்...

Ananya Mahadevan said...

இன்னிக்கி எனக்கு வடை போச்சு,வெள்ளி சனியில் பதிவு போடாதே போடாதேன்னு சொன்னா கேக்குறியா?
"ஆதாரமில்லாத புரளியெல்லாம் நான் சீரியஸா எடுத்துக்கிறதில்லே சேட்டை.
இந்தப்பதிவுலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச வரி இதான்!ஹீ ஹீ. என்னதான் அர்த்தம் தெரியாட்டியும் கூகிளாண்டவர் கூகிளாண்டவர் தான்! சேட்டைக்கீ விக்‌ஷனரிப்ப்ரதாயகா ஸ்மரணம் ஜெய் ஜெய் கூகிளீஷவரா!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல்ல உங்க ராசிக்கு என்ன பலனு பாத்தீங்களா?..
கூகிளாண்டவரையே கும்மறீங்க..

உங்களுக்கு ஐயோ-க்கு அர்த்தம் வேண்டும்.. அவ்வளவுதானே..
அதுக்குப்போயி...

அதாவது.. ஐயோ -வுல , ஐ-க்கு என்ன அர்த்தமுனா..
.
.
.
சே.. கரண்டு போச்சே..
ஆற்காட்டாரே.. சீக்கிரமா மனசு வைய் சாரே...
இல்லாட்டி சேட்டை,எங்க்கு தெரியாதுனு , தப்பா நினைச்சுக்குமே...


( பட்டாபட்டி.. எப்படியோ சமாளிச்சுட்டயா...நன்றி : ஆற்காட்டார்)

சைவகொத்துப்பரோட்டா said...

ஐயோ சாமி, நான் இன்னைக்கு லீவு.

Unknown said...

ஐயோ ஐயோ ஐயோ

வேற ஒண்ணுமில்லை இதயும் படிக்க வந்தேனே நானே என்னை அடிச்சிக்கிறேன்..

Chitra said...

இதுக்கு அர்த்தம் தெரியலியா? ஐயோ! ஐயோ!

மசக்கவுண்டன் said...

அது ஐயோ இல்லீங்க தம்பி, அய்யோன்னு சொல்லோணுமுங்க. அதுக்கு அர்த்தம் என்னான்னா அய்யோ கடவுளே எங்க தலைலெ ஏன் இப்படி எளுதினேன்னு அர்த்தமுங்க

அன்புடன் நான் said...

அய்யோ... அய்யோ... இதுகூடவா தெரியல.

மங்குனி அமைச்சர் said...

"ஐயோ" நேத்து டாஸ்மாக்ல சரகடிகுபோது நான் உன்கிட்ட கேட்ட்ட விசயத்த அப்படியே ப்ளாக் -ல போட்டியா பரவால்ல பொழச்சு போ. என்னால ஒருத்தர் நல்லா இருக்கார்னா எனக்கு சந்தோசம்தான். என் பேர சொல்லி நல்லா இரு (எப்படி பட்டாப்பட்டி நானும் எஸ்கேப் ஆகிட்டனா )

ரோஸ்விக் said...

அய்யோ.... அய்யோ... இது கூட தெரியல... சிப்பு, சிப்பா வருது... (அங்க யாருப்பா... சிங்கமுத்தா??) - எஸ்கேப்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹய்யோ நல்லா மடக்கி இருக்க்கீங்க சேட்டை.. ;)

சரி ஐயோ வா அய்யோ வா இல்ல ஹய்யோ வா ?


(பாப் அப் கமெண்ட் பாக்ஸ் நல்லவிசயம்.. முன்னாடி இருந்த கமெண்ட் பாக்ஸ் ரொம்ப ப்ரச்சனை பண்ணுச்சு சொல்ல நினைச்சு மறந்துட்டேன் )

நாகராஜன் said...

ஐயோ/அய்யோ சேட்டை, முடியலேடா சாமி!

settaikkaran said...

//ayyo theiyvame eppadi ippadi? saralamaaka varukirathu ayyo naan vera sollanumaa!//

ரொம்ப நன்றிங்க மதுரை சரவணன்! :-)

settaikkaran said...

//ஐயையே...யாராவது காப்பாத்துங்க...
தெரியாம இந்தப்பக்கம் வந்துட்டேன்...//

இப்படியே அடிக்கடி வாங்கண்ணே! நன்றிங்க!!

settaikkaran said...

//சேட்டைக்கீ விக்‌ஷனரிப்ப்ரதாயகா ஸ்மரணம் ஜெய் ஜெய் கூகிளீஷவரா!!!!//

மிக்க நன்றிங்க! வருகைக்கும் கருத்துக்கும்!!

settaikkaran said...

//முதல்ல உங்க ராசிக்கு என்ன பலனு பாத்தீங்களா?..கூகிளாண்டவரையே கும்மறீங்க..//

அது பரவாயில்லீங்க! பதினோரு மொக்கை எழுதினா ஆண்டவன் அருள் திரும்பக் கிடைச்சிடும்னு ஸ்வாமி ஃபீட்பேக்கானந்தா சொல்லியிருக்காரு!


தொடர்ந்து உற்சாகமூட்டும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றிண்ணே!

settaikkaran said...

//ஐயோ சாமி, நான் இன்னைக்கு லீவு.//

ஐயையோ! ஒரு புகாரி ஹோட்டல் முகாரி பாடுகிறதே...! :-)

ரொம்ப நன்றிங்க!

settaikkaran said...

//ஐயோ ஐயோ ஐயோ

வேற ஒண்ணுமில்லை இதயும் படிக்க வந்தேனே நானே என்னை அடிச்சிக்கிறேன்..//

வெள்ளிக்கிழமையும் அதுவுமா இத்தனை பேரை அலறடிச்சிருக்கேனே, எனக்கு டைரக்ட் சொர்க்கம் தான். :-)) ரொம்ப நன்றி!!

settaikkaran said...

//இதுக்கு அர்த்தம் தெரியலியா? ஐயோ! ஐயோ!//

ஆஹா! நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? :-)) ரொம்ப நன்றிங்க!!

settaikkaran said...

//அது ஐயோ இல்லீங்க தம்பி, அய்யோன்னு சொல்லோணுமுங்க. அதுக்கு அர்த்தம் என்னான்னா அய்யோ கடவுளே எங்க தலைலெ ஏன் இப்படி எளுதினேன்னு அர்த்தமுங்க//

சின்னக்கவுண்டரோட தீர்ப்பு தான் எட்டுப்பட்டியிலும் பெயர் போனதாச்சே! :-))))

ரொம்ப நன்றிங்கோ!

settaikkaran said...

//அய்யோ... அய்யோ... இதுகூடவா தெரியல.//

என் கிட்டே கேட்கறீங்களா? உங்க கிட்டேயே கேட்டுக்கறீங்களா அண்ணே? ரொம்ப நன்றிங்க!!

settaikkaran said...

//"ஐயோ" நேத்து டாஸ்மாக்ல சரகடிகுபோது நான் உன்கிட்ட கேட்ட்ட விசயத்த அப்படியே ப்ளாக் -ல போட்டியா பரவால்ல பொழச்சு போ. என்னால ஒருத்தர் நல்லா இருக்கார்னா எனக்கு சந்தோசம்தான். என் பேர சொல்லி நல்லா இரு (எப்படி பட்டாப்பட்டி நானும் எஸ்கேப் ஆகிட்டனா )//

ஹி..ஹி! இதுக்குத்தாண்ணே டாஸ்மாக்குலே ரகசியம் பேசக்கூடாதுன்னுறது. ரொம்ப நன்றிண்ணே! :-)))

settaikkaran said...

//அய்யோ.... அய்யோ... இது கூட தெரியல... சிப்பு, சிப்பா வருது... (அங்க யாருப்பா... சிங்கமுத்தா??) - எஸ்கேப்//

ஆஹா! சேட்டைக்காரன்கிறதுக்குப் பதிலா சிங்கமுத்துன்னு பெயர் வச்சிருக்கலாம் போலிருக்கே! :-)))) ரொம்ப நன்றிங்க!!

settaikkaran said...

//ஹய்யோ நல்லா மடக்கி இருக்க்கீங்க சேட்டை.. ;)

சரி ஐயோ வா அய்யோ வா இல்ல ஹய்யோ வா ?//

அட, இத வச்சு இன்னொரு பதிவு எழுதிடலாம் போலிருக்குதே! ஏங்க பயந்திடாதீங்க! நான் உடனே எழுத மாட்டேன்!


//(பாப் அப் கமெண்ட் பாக்ஸ் நல்லவிசயம்.. முன்னாடி இருந்த கமெண்ட் பாக்ஸ் ரொம்ப ப்ரச்சனை பண்ணுச்சு சொல்ல நினைச்சு மறந்துட்டேன் )//

உங்களை மாதிரியே என் மேலே அக்கறை கொண்ட ஒரு நல்ல உள்ளம் செய்த உதவி தான் எல்லாம். வேறே யாரு, நம்ம பிரபாகர் சார் தான்! அவருக்கும் நன்றி! என்னை உற்சாகப்படுத்துற உங்களுக்கும் ரொம்ப நன்றிங்க!

settaikkaran said...

//ஐயோ/அய்யோ சேட்டை, முடியலேடா சாமி!//

ஆஹா! ராசுக்குட்டியையே அலறடிக்கிறதுன்னா சாதாரணமா? :-))) ரொம்ப நன்றிங்க!!

நாகராஜன் said...

ஆமாம் தம்பி சேட்டை, நம்ம தாத்தா பாட்டிங்க எல்லாம் ஐயோ-ங்கறது எம தர்ம ராஜாவோட மனைவியின் பேருன்னு சொல்லுவாங்களே... இதை எல்லாம் இந்த கூகுளாண்டவர் சொல்லலையா இல்லை நம்ம தாத்தா பாட்டி சொன்னது எல்லாம் சும்மானாச்சுக்குமா?

பிரபாகர் இதுக்கு பதில் வைச்சுருந்தாலும் வைச்சுருக்கலாம்... :) எதுக்கும் அவர் பின்னூட்டம் போடற வரைக்கும் காத்திருக்கலாம்... :)

சிநேகிதன் அக்பர் said...

ஐயோ! ஐயோ!! இன்னுமா இந்தா உலகம் நம்மல நம்பிக்கிட்டு இருக்கு.

settaikkaran said...

//நம்ம தாத்தா பாட்டிங்க எல்லாம் ஐயோ-ங்கறது எம தர்ம ராஜாவோட மனைவியின் பேருன்னு சொல்லுவாங்களே... இதை எல்லாம் இந்த கூகுளாண்டவர் சொல்லலையா இல்லை நம்ம தாத்தா பாட்டி சொன்னது எல்லாம் சும்மானாச்சுக்குமா?//

கூகிளாண்டவருக்கே எமதர்மராஜன் மனைவி பெயரைச் சொல்ல பயம் போலிருக்கு!:-)

//பிரபாகர் இதுக்கு பதில் வைச்சுருந்தாலும் வைச்சுருக்கலாம்... :) எதுக்கும் அவர் பின்னூட்டம் போடற வரைக்கும் காத்திருக்கலாம்... :)//

நன்றிங்க! நானும் காத்திருக்கிறேன்!!

settaikkaran said...

//ஐயோ! ஐயோ!! இன்னுமா இந்தா உலகம் நம்மல நம்பிக்கிட்டு இருக்கு.//

என்ன அக்பர் அப்படிக் கேட்டுப்புட்டீங்க? முன்னை விட இப்போ தான் உலகம் அதிகமா நம்பிட்டிருக்கு! :-))))

ரொம்ப நன்றிங்க, வருகைக்கும் கருத்துக்கும்...!

பனித்துளி சங்கர் said...

கலக்குறீங்கறி போங்க !


{{{{{{{{{{{ அகல்விளக்கு said...
ஐயையே...

யாராவது காப்பாத்துங்க...
தெரியாம இந்தப்பக்கம் வந்துட்டேன்...

February 26, 2010 10:19 AM }}}}}}}}}

இருந்தாலும் இந்த அளவிற்கு இவங்களை பயமுறுத்தாக்கூடாது நீங்க ஆமா !

பிரபாகர் said...

ஐயோ!

இவ்வளவு அழகா சேட்டை எழுதியிருக்காப்ல...

ஐயோ, பால அடுப்பில பால வெச்சிட்டு வந்துட்டேனே!

http://umaprabhu.blogspot.com/2010/02/blog-post.html - தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன், பாருங்க.

பிரபாகர்.

Thamiz Priyan said...

நல்லா சிரிச்சேனுங்க.. :-)

settaikkaran said...

// ஐயோ! இவ்வளவு அழகா சேட்டை எழுதியிருக்காப்ல...//

உங்களுக்கும் வந்திருச்சா நண்பரே?

//ஐயோ, பால அடுப்பில பால வெச்சிட்டு வந்துட்டேனே!//

அத்தோட இங்கே வந்திருக்கீங்க பாருங்க! அங்கே தான் நீங்க நிக்குறீங்க! ரொம்ப நன்றி!!

settaikkaran said...

//நல்லா சிரிச்சேனுங்க.. :-)//

மிக்க நன்றி தமிழ்ப்ரியன்! :-))

பொன் மாலை பொழுது said...

ஐயோ சேட்டை மெட்ராஸ்ல எந்த எடம்முன்னு சொல்லு தலீவா
ஒன்னிய வந்து கண்டுகினும் போலகீது. ஆக்காங் !!

Karthikeyan said...

எமனின் மனைவியின் பெயர்தான் “ஐயோ” நண்பரே...