Monday, February 8, 2010

இப்படியொரு பழியா?

என்னை நீங்க எந்தக் கோவிலுக்குப் போயி எவ்வளவு கிலோ கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ணச் சொன்னாலும் பண்ணத் தயாருங்க! சத்தியமா கீழே இருக்கிற பாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லீங்க! ஒரு வாரமா எஸ்.எம்.எஸ், தனிமடல்னு எக்கச்சக்கமான பேரு "இந்தப் பாட்டை எழுதினது நீங்க தானே?"ன்னு கேட்டு என்னை நிம்மதியா தூங்கக்கூட விடாமப்பண்ணிட்டாங்க! தயவு செய்து படிச்சுப் பார்த்திட்டுச் சொல்லுங்க; இந்தப் பாட்டு நான் எழுதினா மாதிரியா இருக்கு? ஏன் இப்படிப் புரளி கிளப்புறாங்க?

அதிரி புதிரி பண்ணிக்கடா!
எதிரி உனக்கு இல்லையடா!
தொட்டதெல்லாம் வெற்றியடா!
தொடாததும் தொட்டுக்கடா!
கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே!
உன் கையால் நீ தொட்டால் கன்னி மொட்டுக்குள்ளே
டொட்டடாய்ங்ங்ங்....டொட்டடாய்ங்ங்ங்....

அதிரி புதிரி பண்ணட்டுமா?
எகிறி எகிறி துள்ளட்டுமா?
பின்னழகைப் பின்னட்டுமா?
பிச்சுப் பிச்சுத் தின்னட்டுமா?
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே!
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத்தண்டுக்குள்ளே
டொட்டடாய்ங்ங்ங்....டொட்டடாய்ங்ங்ங்....

ரெண்டுபேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனைநாள் தின்னுவது இட்டிலி வடை சாம்பார்?
முக்கனியில் ரெண்டுகனி முட்டித்திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோசை
பணயக்கைதிபோல என்னை ஆட்டிப்படைக்கிறே
பங்குச்சந்தையைப்போல என்னை ஏத்தி எறக்குறே
நெத்தியிலே எப்பவும் சுத்தி அடிக்கிறே
கத்திக்கண்ணு வத்திவச்சா என் உச்சி மண்டையிலே
டொட்டடாய்ங்ங்ங்....டொட்டடாய்ங்ங்ங்....

பச்சப்புள்ளே போலிருப்பா லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ளே வச்சதென்ன முந்திரிக்காத் தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா
ஒரம்போட்டு வளர்த்ததப்பா பொத்திக்கிட்டு போப்பா
ஏப்ரல்மாத ஏரிபோல ஹார்ட் எறங்குதே
தங்கம்வெலையைப் போல சும்மா ஸ்கர்ட் ஏறுதே
புத்தியிலே எப்பவும் நண்டு ஊறுதே
பச்சுப்பச்சு இச்சுவச்சா என் நரம்புமண்டலத்துலே
டொட்டடாய்ங்ங்ங்....டொட்டடாய்ங்ங்ங்....

வாழ்க்கை இட்லி மாதிரி, ஆசை தோசை அப்பளம் வடை, காதலும் கத்திரிக்காயும் போன்ற பெயர்களிலே பதிவுகள் போட்டிருக்கிறேன் என்பது உண்மைதான். இல்லேன்னு சொல்லலை; மற்றபடி, இந்தப் பாடலை எழுதியது நான் இல்லை; என்னை விட்டிருங்க....!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

6 comments:

pudugaithendral said...

:)) நல்லவே உக்காந்து யோசிச்சிருக்கீங்க போல இருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

எப்படி.... இப்படி எல்லாம்.....?

settaikkaran said...

// :)) நல்லவே உக்காந்து யோசிச்சிருக்கீங்க போல இருக்கு.//

என்னண்ணே பண்ணுறது? கொஞ்சம் படுத்தாலும் எழுந்திரிச்சு உட்கார வச்சிடறாங்களே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!!

settaikkaran said...

// எப்படி.... இப்படி எல்லாம்.....?//

நானா எளுதுறேன்? எளுத வச்சுப்புடறாங்கண்ணே!

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!!

pudugaithendral said...

என்னண்ணே பண்ணுறது? கொஞ்சம் படுத்தாலும் எழுந்திரிச்சு உட்கார வச்சிடறாங்களே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!!//

:)))))))))) me akka.

கமெண்ட் வந்துச்சுன்னா அப்படியே அந்த பேரைத்தட்டி ஓடிப்போய் அவங்க ஃப்ரொபைலை படிங்கப்பா :)))

settaikkaran said...

// :)))))))))) me akka.

கமெண்ட் வந்துச்சுன்னா அப்படியே அந்த பேரைத்தட்டி ஓடிப்போய் அவங்க ஃப்ரொபைலை படிங்கப்பா :))) //

ஆஹா! மன்னிச்சுக்குங்க அக்கா! இனிமே கவனமா பார்த்து எழுதறேன். :-))