Saturday, February 6, 2010

காதலும் கத்திரிக்காயும்

கத்திரிக்காயின்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வர்றது காதல்தானே? "மொளச்சு மூணு எல விடலே; அதுக்குள்ளே உனக்கெதுக்கு காதலும் கத்திரிக்காயும்?"னு பழைய தமிழ் சினிமாவுலே கதாநாயகிட்டே அம்மாக்கள் எத்தனை படத்துலே கேட்டிருப்பாக! என்னதான் ரைமிங்குக்காகச் சொல்லியிருந்தாலும் இவுக கத்திரிக்காயை ஏன் வம்புக்கு இழுத்தாங்கன்னு புரிய மாட்டேக்கு!

மத்த காயோட பேரையெல்லாம் இந்த மாதிரி கேவலப்படுத்தியிருக்காகளா?

"அவமிருக்காமில்லா சுத்த வெண்டக்காயி,"ன்னு ஒரு வழாவழா கொளகொளா ஆளப்பார்த்து சொல்லுவாகன்னு கேள்விப்பட்டிருப்பீக!

"பொம்பிளை வளத்தியா பொடலங்காய் வளத்தியா,"ன்னு தாவாங்கட்டையிலே கையை வச்சு கிராமத்துப் பொம்பளக ஆச்சரியப்படுவாக!

"என்ன மக்கா கொத்தவரங்கா மாதிரி இளைச்சுப்போயிக்கிடக்கே?"ன்னு எல்லா அம்மாவும் ஊருலேருந்து வந்த புள்ளைக கிட்டே கேப்பாக!

அது போனாப் போட்டு! கத்திரிக்காயை மட்டும் ஏன் நம்மாளுக காதலோட ஒப்பிடுகாக?

உனக்கு ஏம்லே படிப்பும் பாகற்காயுமுன்னு இதுவரைக்கும் யாராவது கேட்டாகளா?

அதுக்குள்ளே உனக்கு எதுக்குலே புல்லட்டும் பூசணிக்காயுமுன்னு எந்த வூட்டுலே கேட்டாக?

அப்ப கத்திரிக்காயின்னா அவ்வளவு எளப்பமாப் போயிருச்சா வே?

லேய், திருநெல்வேலி ஜங்சன் பக்கத்துலே மேம்பாலத்துக்குக் கீழே சந்திரவிலாஸ் ஓட்டல் போயிருக்கீகளா? வட்டவட்டமா கத்திரிக்காயை அரிஞ்சு பஜ்ஜி போடுவாக! போயித் தின்னு பாருங்க மக்கா! அந்த டேஸ்ட்டு காதல்லே வருமாங்கேன்?

எங்கூருலே கேப்பைத்தோசை சுட்டா, அதுக்கு கத்திரிக்காயைக் கரியடுப்புலே சுட்டு, தோலை உரிச்சு, காரம்,பெருங்காயம்,உப்பெல்லாம் போட்டுப் பிசிறித் தருவாக! நானே எட்டு தோசை திம்பேனில்லா? என்ன விளையாடுதீகளா கத்திரிக்காயோட?

காதலுக்கும் கத்திரிக்காயும் என்ன சம்பந்தமுங்கேன்? கத்திரிக்காய் சொத்தைன்னா பார்த்தாலே கண்டு பிடிச்சிரலாம். மச்சம் மாதிரி கரும்புள்ளியிருந்திச்சுன்னா கத்திரிக்காய் சொத்தைன்னு அர்த்தம். ஆனால், காதல் சொத்தையான பொறவு தான் கரும்புள்ளியே தெரியுமில்லா?

பொண்ணுக்குக் கன்னத்துலே கரும்புள்ளியிருந்தா அதிர்ஷ்ட மச்சமுங்கான் கோட்டிக்காரப்பயலுக! கத்திரிக்காய்க்கு மச்சம் இருந்தா வாங்குவீகளாங்கேன்?

இப்படியெல்லாம் கத்திரிக்காயோட வயித்தெரிச்சலைக் கொட்டுனதுனாலே தான் இப்பம் கத்திரிக்கையாலே புது தில்லியிலே பெரிய வெவகாரம் நடந்திட்டிருக்கு! செயற்கைக் கத்திரிக்காய் வேணுமா வேண்டாமான்னு மந்திரிங்கெல்லாம் சண்டை போடுதாக! பேப்பர் படிக்கீகளா இல்லையா?

சும்மாக் கிடந்த கத்திரிக்காயைக் காதலோட சம்பந்தப்படுத்திப் பேசிப் பேசி, இப்பம் கத்திரிக்காயிலேயும் காதலை மாதிரியே செயற்கை வந்திருச்சு பாத்தீகளா?

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காகளா நம்மாளுக? காதல் வேண்டாமுண்ணு ஒதுங்கியிருக்கிறவனைக் கத்திரிக்காயும் வேணாமுன்னு சொல்ல வைச்சுருவாக போலிருக்கே! இப்படியே போச்சுன்னா அஞ்சப்பர்லே செட்டிநாட்டுக் காரக்கொழம்புலே கத்திரிக்காயைப் போடமா என் தலையையா போடுவாக?

10 comments:

கும்மாச்சி said...

கத்திரிக்காய வச்சு ஒரு பதிவா, சேட்டை அசத்துங்க.

அது சரி காதலுக்கும் முருங்கைக்காயுக்கும் சம்பந்தமிருக்கு, மக்கா ஒருத்தனும் சொல்லலே.

நீச்சல்காரன் said...

Nallarukku settai

settaikkaran said...

//கத்திரிக்காய வச்சு ஒரு பதிவா, சேட்டை அசத்துங்க.

அது சரி காதலுக்கும் முருங்கைக்காயுக்கும் சம்பந்தமிருக்கு, மக்கா ஒருத்தனும் சொல்லலே.//

முருங்கைக்காயை வச்சுத் தான் படமே எடுத்துட்டாகளே? ஒரு வேளை GM Drumstick பத்தி விவாதம் வரும்போது எழுதினாலும் எழுதுவேன். மிக்க நன்றிண்ணே!

settaikkaran said...

//Nallarukku settai//

மிக்க நன்றி நீச்சல்காரண்ணே!

சென்ஷி said...

//மச்சம் மாதிரி கரும்புள்ளியிருந்திச்சுன்னா கத்திரிக்காய் சொத்தைன்னு அர்த்தம். ஆனால், காதல் சொத்தையான பொறவு தான் கரும்புள்ளியே தெரியுமில்லா?//

நீங்க சேட்டைக்காரன் இல்லைங்க. வேட்டைக்காரன் போலருக்குது

settaikkaran said...

//நீங்க சேட்டைக்காரன் இல்லைங்க. வேட்டைக்காரன் போலருக்குது//

ஏண்ணே, அவ்வளவு மோசமாவா இருக்கு...? :-)))))))

goma said...

ஐய்யோடா!!!
சந்திரவிலாஸ்லேருந்து டையல் a டிஷ் ..அந்தக் காலத்திலேயே நாங்க செஞ்சிருக்கோமே...
சப்பாத்தி குருமா ,ஃப்ரூட்சாலட் ஐஸ்க்ரீம்...என்னமா ருசிக்கும் தெரியுமா...இந்தக் காலத்து பீட்சா கார்னர் எல்லாம் ஓரங்கட்டணும்...

settaikkaran said...

//ஐய்யோடா!!!
சந்திரவிலாஸ்லேருந்து டையல் a டிஷ் ..அந்தக் காலத்திலேயே நாங்க செஞ்சிருக்கோமே...
சப்பாத்தி குருமா ,ஃப்ரூட்சாலட் ஐஸ்க்ரீம்...என்னமா ருசிக்கும் தெரியுமா...இந்தக் காலத்து பீட்சா கார்னர் எல்லாம் ஓரங்கட்டணும்...//

ஹூம்! படிக்கும்போதே பசிக்குது. ஊருக்குப்போயி ஒரு வெட்டு வெட்டணும்போலிருக்கு....! சாப்பாட்டைத்தான்...!

ரொம்ப நன்றிக்கா

முகுந்த்; Amma said...

Katharikka vachchu evvalavu vishayam erukka!
Nalla pathivu.

settaikkaran said...

//Katharikka vachchu evvalavu vishayam erukka!
Nalla pathivu.//

வாங்க முகுந்த் அம்மா! தாய்க்குலத்தோட ஆதரவு நாளுக்கு நாள் பெருகிட்டே போகுது. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்கம்மா!