Friday, September 9, 2011

உடல்நல விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட டாஸ்மாக்


சென்னையிலிருந்து நமது சிறப்பு நிருபர்: மந்தாரம்புதூர் மப்பண்ணன்.

சென்னை அண்ணா சாலையில் புதிதாக எழும்பியுள்ள அடுக்கு மாடிக்கட்டிடத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகிலேயே மிகப்பெரிய கட்சிக்கட்டிடத்தை எழுப்பிய பெருமிதம் குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் முகத்தில், பொட்டென்று திறந்த பீர்பாட்டிலைப் போலப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

"மற்ற கட்சிகளைப் போல நாங்கள் தொண்டர்களிடமிருந்து நிதிவசூலித்து இந்தக் கட்டிடத்தை எழுப்பவில்லை," என்று உணர்ச்சிபொங்கக் கூறிய கிருஷ்ணசாமி, "எமது கட்சித்தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் கால்கடுக்கக் காத்திருந்து சேகரித்த காலிபாட்டில்களைக் காயலான்கடையில் விற்ற பணத்தில்தான் ஒரே ஆண்டில் இப்படியொரு கட்டிடத்தைக் கட்ட முடிந்தது." என்று குறிப்பிட்டபோது, கு.மு.க தொண்டர்கள் குதூகலத்தோடு "சியர்ஸ்! சியர்ஸ்!!" என்று கூக்குரல் எழுப்பினர். இருக்காதா பின்னே? சென்ற 2009-10 நிதியாண்டில் காலி பாட்டில்களை விற்ற கணக்கில் மட்டும் அரசுக்கே ரூ.500 கோடி வருவாய் கிடைத்ததாமே?

இதைத் தொடர்ந்து நமது கேள்விகளுக்கு, கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி அளித்த பதில்கள் பின்வருமாறு:

கேள்வி: இந்த ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.14,965 கோடி வருமானம் தமிழக அரசுக்குக் கிடைத்திருப்பதாக, சட்டசபையில் விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே? இது குறித்து உங்களது கருத்தென்ன?

பதில்: மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு ரவுண்டிலும் மப்பு அதிகரிப்பது போல ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வருமானமும் அதிகரித்து வருவது எங்கள் கட்சித்தொண்டர்களுக்கு மாநிலத்தின் மீதுள்ள அக்கறையைப் பறைசாற்றுகிறது. 1995-96-ம் ஆண்டில் இந்த வருவாய் வெறும் ரூ. 1,425 கோடியாக இருந்ததைக் கவனித்தாலே, இந்த ஐந்தாண்டுகளில் எங்களது கட்சியின் வளர்ச்சியை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி: அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க தகவல்கள் இருக்கின்றனவா?

பதில்: தொடர்ந்து பீர்வகைகளின் விற்பனை இரண்டாவது இடத்திலேயே இருப்பது கவலை தருவதாக உள்ளது. மதுவகைகள் கடந்த நிதியாண்டில் 480.46 லட்சம் பெட்டிகள் விற்பனையாகியிருக்கும்போது, பீர் வகைகள் வெறும் 270.88 லட்சம் பெட்டிகள் மட்டுமே விற்பனையாகியிருப்பது, இன்னும் எங்களது கட்சிக் கொள்கைகள் தமிழகத்தை முழுமையாகச் சென்றடையவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, எங்கள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் "சாண்ட்பைப்பர்" சபாபதியின் தலைமையில் "பீரின்றி அமையாது உலகு," என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் குடிமக்களும் இந்தப் போராட்டத்துக்கு பீராதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி: இப்படியொரு விழிப்புணர்ச்சி தேவைதானா?

பதில்: என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட ’தினமும் பீர் குடிப்பது உடல்நலத்துக்கு நல்லது,’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்களே? அதனால் தான் ’உடல் மண்ணுக்கு; குடல் பீருக்கு," என்பதை எங்கள் கட்சியின் கோஷமாகவே வைத்திருக்கிறோம்.

கேள்வி: இப்படியொரு விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தை மேற்கொண்டால், பிற மதுவகைகளின் விற்பனை பாதிக்கப்படாதா?

பதில்: அது எப்படி பாதிக்கும்? அதே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்களே? ’ஒரு நாளைக்கு இரண்டு ரவுண்டு மது அருந்துவதும் இருதயத்துக்கு மிகவும் நல்லது என்று?

கேள்வி: ஆனால், உங்கள் தொண்டர்கள் இரண்டு ரவுண்டோடு நிறுத்துவதில்லையே?

பதில்: அப்படியெல்லாம் அபாண்டமாகச் சொல்லக்கூடாது. எங்கள் தொண்டர்கள் ஒரே கடையில் இரண்டு ரவுண்டுக்கு மேல் அடிக்கக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். இரண்டு ரவுண்டு போதவில்லையென்றால், அடுத்த கடைக்குப் போய் மேலும் இரண்டு ரவுண்டு அடிக்கலாம். அது கட்சியின் விதிமுறை மீறலாகக் கருதப்பட மாட்டாது.

இன்னும் சொல்லப்போனால், எங்களது கட்சி நிர்வாகிகளில் பலர் தினமும் இரண்டு ரவுண்டு விஸ்கியும், ஒரு பாட்டில் பீரும் குடித்து அவரவர் உடல்நலத்தைச் சிறப்பாகப் பேணி வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: அப்படியென்றால், அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த ஆண்டும் மொத்தம் எத்தனை வெள்ளரிக்காய், கொய்யாக்காய், மாங்காய் விற்பனையாகியது என்ற விபரத்தை அரசு தரவில்லை. அதே போல எத்தனை ஆம்லெட், எத்தனை ஆப்பாயில் என்ற கணக்கும் வெளியிடப்படவில்லை. குறைந்தபட்சம் எத்தனை டன் ஊறுகாய் விற்பனையாயிற்று, அதில் மாங்காய் ஊறுகாய் எவ்வளவு, எலுமிச்சை ஊறுகாய் எவ்வளவு என்பன போன்ற அத்தியாவசியத் தகவல்களையாவது அரசு வெளியிட வேண்டாமா?

கேள்வி: உங்களது கட்சி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்குவதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டுமுதல் எட்டு நாட்கள் விடுமுறையாமே?

பதில்: இது ஜனநாயக விரோதப்போக்கு! குடியரசு நாட்டிலே, குடியரசு தினத்தன்று குடிக்க முடியாது என்பது எதேச்சாதிகாரம் அல்லவா? இதைக் கண்டித்து எமது பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி காலவரையற்ற "ஜின்"னாவிரதம் இருக்கப்போகிறார். எமது கோரிக்கையை அரசு ஏற்கும்வரையில் அவர் ஜின் தவிர பிற சரக்குகளை மட்டுமே அருந்துவார்.

கேள்வி: உங்கள் கட்சி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து எதிர்க்கிறதே? திடீரென்று தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தி விடும் என்ற பயமில்லையா?

பதில்: டாஸ்மாக் கடைகள் விஷயத்தைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சிகளுமே எங்களது கொள்கையைத் தான் கடைபிடிக்கின்றன. நாங்கள் இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு இலவசங்கள் அளிக்க அரசுக்கு ஏது நிதி? ஆகையால், மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.

கேள்வி: ஆனால், உங்களது கட்சியின் கோரிக்கைகள் தொடர்ந்து அரசால் நிராகரிக்கப்படுகின்றனவே?

பதில்: உண்மைதான்! ஒரு குவார்ட்டருக்கு ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாகத் தருவதாக தேர்தலின்போது வாக்களித்ததை, அரசியல்வாதிகளின் பேச்சு விடிஞ்சால் போச்சு என்ற பழமொழிக்கேற்ப மறந்துவிட்டார்கள்.

கேள்வி: உங்களது கட்சியில் உங்களது குடும்பத்தாருக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகக் கூறி, முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி போர்க்கொடி உயர்த்தியிருக்கிறாரே?

பதில்: இது அபாண்டமான குற்றச்சாட்டு! ஒரு முறை எனக்கு மப்பு கொஞ்சம் அதிகமாகியிருக்கவே, நள்ளிரவுக்கு மேல் என்னை கோவிந்தசாமி ஒரு மீன்பாடி வண்டியிலே வீட்டுக்குக் கொண்டு சேர்த்தார். கதவைத் திறந்த என் மனைவி, தூக்கக்கலக்கத்தில் எனக்குப் பதிலாக கோவிந்தசாமியை நையப்புடைத்து விட்டார். இதற்காக, என் கட்சியில் என் குடும்பத்தாரின் தலையீடு இருப்பதாகச் சொல்வதா?

கேள்வி: கடைசியாக, அரசு உடனடியாக கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டி ஏதேனும் கோரிக்கைகளை வைப்பீர்களா?

பதில்: நிச்சயம்! ’இந்தியா கிராமங்களில் வாழ்கிறது,’ என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். ஆனால், அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நகரங்களில்
3,562 டாஸ்மாக் கடைகள் இருக்கையில், கிராமப்புறங்களில் வெறும் 3,128 கடைகள் மட்டுமே இருப்பதாக அறிய முடிகிறது. படித்தவர்கள் பெரும்பாலும் வசிக்கும் நகரங்களில் இருப்பதை விடவும், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் இன்னும் பல கடைகளைத் திறந்தால், இனி வருகிற தேர்தல்களில் இலவச ஹ்யூண்டாய் கார்கள் அளிப்பதாகவும் வாக்குறுதியளிக்க முடியும். எனவே, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இதுகுறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுவோம்.

பேட்டியின் முடிவில், நிருபர்களுக்கு மார்கோ போலோ பீரும், காரசேவும் வழங்கப்பட்டது.

36 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தண்ணியடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்
ஜன்னி கண்டு சாவார்

Philosophy Prabhakaran said...

மச்சி ஒப்பன் த பாட்டில்...

Philosophy Prabhakaran said...

நீங்க ஒருமாதிரியான ஆள்தான்... எல்லா சரக்கு பேரையும் மைண்ட்ல வச்சிருக்கீங்க...

நாய் நக்ஸ் said...

YES......CHEERS !!!

Unknown said...

மாப்ள ஹிஹி!

வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தண்ணியடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்
ஜன்னி கண்டு சாவார் //


இது சூப்பர்..

சிரிச்சு மாளலைங்க...

SURYAJEEVA said...

எட்டு நாள் லீவு விட்டா கேப்டன் கோவிச்சுக்க மாட்டாரா?

வெட்டிப்பேச்சு said...

ஏதேது.. உங்க கு.ம.க செயலாளர், கிங் பிஷர் கிருஷ்ணசாமிக்கு 'மாம்பழத்தை'ப் பார்த்து கொஞ்சமும் பயமில்லை போலிருக்கிறதே..

dhandapani said...

சேட்டை அண்ணாச்சி! மீண்டும் சந்திக்கிறோம்.

அண்மைக்காலமாய் சில வலைப்பூக்களில் நீங்கள் எழுதிய சில பின்னூட்டங்களை வாசித்தபோது, அனேகமாய் உங்களது அடுத்த இடுகை வலையுலம் பற்றியதாய் இருக்குமோ என்று எண்ணினேன். ஆனால், வழக்கம்போல எதையும் கண்டுகொள்ளாமல், உங்களது பாணியில் எழுதியிருக்கிறீர்கள்.

மாற்றுக்கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாமல், சொன்னவர்கள் குறித்து மறைமுகத் தாக்குதல் நடத்துகிற சில வயோதிக பதிவர்களின் புலம்பல்களையெல்லாம் அலட்சியம் செய்வதே சாலச்சிறந்தது. அவர்களுக்குத் துணையாக அனானிகள் என்ற பெயரில், அடிபட்டு உதைவாங்கி ஓடிப்போன சிலர் வலிதாளாமல் புலம்பிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் தாண்டி உங்களது எழுத்தை மட்டும் கவனத்தில் வையுங்கள்!

இப்படியெல்லாம் வலையுலகம் குறித்துக் குறைப்படுபவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பதை அவர்களே பறைசாற்றிக்கொள்ளட்டும். அவர்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவர்கள் அல்லர்.

உங்களது நண்பனாய் உரிமையுடன் வைக்கிற வேண்டுகோள் இது! மீண்டும் பிறிதொரு நாள் வருவேன்.

rajamelaiyur said...

//
மந்தாரம்புதூர் மப்பண்ணன்.
//

பெயர் அருமை

rajamelaiyur said...

சங்கத்துல நாங்களும் சேரலாமா ?

rajamelaiyur said...

தமிழ்மணம் 7

MANO நாஞ்சில் மனோ said...

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் கால்கடுக்கக் காத்திருந்து சேகரித்த காலிபாட்டில்களைக் காயலான்கடையில் விற்ற பணத்தில்தான் ஒரே ஆண்டில் இப்படியொரு கட்டிடத்தைக் கட்ட முடிந்தது." என்று குறிப்பிட்டபோது, கு.மு.க தொண்டர்கள் குதூகலத்தோடு "சியர்ஸ்! சியர்ஸ்!!" என்று கூக்குரல் எழுப்பினர். //


அவ்வ்வ்வவ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

உங்க சங்கத்துல என்னையும் செர்த்துக்கொங்கப்பூ...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஒன்பது, குத்தியாச்சி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படிக்கப்படிக்க ஒரே ‘கிக்’ ஆயிடுச்சுங்க!

வரிக்குவரி சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாயிடுச்சுங்க!

கிக் இறங்கும் வரை தொடர்வேன்.....
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உலகிலேயே மிகப்பெரிய கட்சிக்கட்டிடத்தை எழுப்பிய பெருமிதம் குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் முகத்தில், பொட்டென்று திறந்த பீர்பாட்டிலைப் போலப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.//

அஹா! எப்பேர்ப்பட்ட உதாரணம்!
சேட்டை நீங்க இங்கதான் ஸ்டெடியா
நிக்கிறீங்க!

பொங்கி வந்தது எனக்கும் சிரிப்பு. vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

// "சியர்ஸ்! சியர்ஸ்!!" என்று கூக்குரல் எழுப்பினர்.//

உங்களுக்கும் என் சியர்ஸ்! சியர்ஸ்!!

//’உடல் மண்ணுக்கு; குடல் பீருக்கு"//

ஆஹா! விளக்கம் வெகு அருமை!

//அடுத்த கடைக்குப் போய் மேலும் இரண்டு ரவுண்டு அடிக்கலாம். அது கட்சியின் விதிமுறை மீறலாகக் கருதப்பட மாட்டாது.//

சபாஷ்! பின்னென்ன, பின்னிப்புட்டீங்க, சார்.

//குறைந்தபட்சம் எத்தனை டன் ஊறுகாய் விற்பனையாயிற்று, அதில் மாங்காய் ஊறுகாய் எவ்வளவு, எலுமிச்சை ஊறுகாய் எவ்வளவு என்பன போன்ற அத்தியாவசியத் தகவல்களையாவது அரசு வெளியிட வேண்டாமா?//

அதானே! மறைமுகமாக எவ்வளவு தொழில்கள் பெருகியுள்ளன. எவ்வளவு பேர் வாழ்க்கைத்தரங்கள் உயர்ந்துள்ளன. தகவல்கள் கட்டாயம் வெளியிடப்பட்டே ஆக வேண்டும்.

கிக் இறங்கவே இல்லை....
தொடர்வேன்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//குடியரசு நாட்டிலே, குடியரசு தினத்தன்று குடிக்க முடியாது என்பது எதேச்சாதிகாரம் அல்லவா? இதைக் கண்டித்து எமது பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி காலவரையற்ற "ஜின்"னாவிரதம் இருக்கப்போகிறார். எமது கோரிக்கையை அரசு ஏற்கும்வரையில் அவர் ஜின் தவிர பிற சரக்குகளை மட்டுமே அருந்துவார்.//

ஜின் வித் லெமனா? உண்ணாவிரதம் முடியும் போது லெமன் ஜூஸ் மட்டும் தரப்படுவதால், குறிப்பிடவில்லையோ!

//கதவைத் திறந்த என் மனைவி, தூக்கக்கலக்கத்தில் எனக்குப் பதிலாக கோவிந்தசாமியை நையப்புடைத்து விட்டார்.//

அடப்பாவமே! ஆனால் நான் அவரின் அன்பு மனைவியை இந்த வரிகளில் மிகவும் "enjoy" செய்தேன்.

//பேட்டியின் முடிவில், நிருபர்களுக்கு மார்கோ போலோ பீரும், காரசேவும் வழங்கப்பட்டது.//

இதை ஆர்வத்துடன் படித்து, சிரித்து மகிழ்ந்த எங்களுக்கு நீங்கள் வழங்கக் கூடாதா?

கையைக்கொடுங்கள். கண்ணில் ஒத்திக்கொள்கிறேன். இதைவிட இந்த விஷயத்தை இவ்வளவு நகைச்சுவை ததும்ப யாராலுமே எழுத முடியாது.

அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 14 to 15 in INDLI &
தமிழ்மணத்தில் 10 out of 10 தரும் பாக்யம் பெற்றேன். வாழ்த்துக்கள். vgk

கும்மாச்சி said...

\\பேட்டியின் முடிவில், நிருபர்களுக்கு மார்கோ போலோ பீரும், காரசேவும் வழங்கப்பட்டது.//


ஹா ஹா ஹாஹ்!!!!!!!!!!!

Sivakumar said...

வெள்ளரிக்காய், ஆப் பாயில் புலனாய்வு..கேப்டனையே மிஞ்சிட்டீங்க!

Anonymous said...

பீர்பா(ட்டி)ல் நகைச்சுவை சூப்பர்

Anonymous said...

கலக்கல் டாஸ்மாக்...
உங்களுக்கு பாஸ்மார்க்...

Aathira mullai said...

ஒருபுறம் உங்களுடைய கட்டுரை அருமை என்றால் மறுபுறம் ,
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தண்ணியடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்
ஜன்னி கண்டு சாவார் //
இது போன்ற திருக்குறள் வேற..

நல்லாத்தான் இருக்கு.. ரசித்தேன். சிரித்தேன்.நன்றி

நிரூபன் said...

உடல்நல விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட டாஸ்மாக்//

தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே பாஸ்,
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

சென்னையிலிருந்து நமது சிறப்பு நிருபர்: மந்தாரம்புதூர் மப்பண்ணன்.//


சொல்லவேயில்ல பாஸ்,
சேட்டை பத்திரிகையும் தொடங்கியாச்சா...

அவ்...........

பெயர் கூட சூப்பரா இருக்கே..

நிரூபன் said...

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் முகத்தில், பொட்டென்று திறந்த பீர்பாட்டிலைப் போலப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.//

ஹா...ஹா...இது தான் டைம்மின் காமெடியா?

நிரூபன் said...

குடி மக்களை வைத்து ஒரு குதூகலமான பதிவினைத் தந்திருக்கிறீங்க..

ரசித்தேன் பாஸ்.

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

தண்ணியடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்
ஜன்னி கண்டு சாவார்//

இதென்ன மதுக்குறளா பானா ராவன்னா? :-))
மிக்க நன்றி!

//Philosophy Prabhakaran said...

மச்சி ஒப்பன் த பாட்டில்...//

மங்காத்தா ஹாங்க்-ஓவர் இன்னுமிருக்கா..?

//நீங்க ஒருமாதிரியான ஆள்தான்... எல்லா சரக்கு பேரையும் மைண்ட்ல வச்சிருக்கீங்க...//

டாஸ்மாக் வெப்சைட்டுலே தான் வெலாவரியா இருக்குதே! :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//NAAI-NAKKS said...

YES......CHEERS !!!//

Thanks! Cheers! :-)


//விக்கியுலகம் said...

மாப்ள ஹிஹி!//

வாங்க வாங்க! ஹிஹி, புரியுது புரியுது! மிக்க நன்றி! :-)

//வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
தண்ணியடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்
ஜன்னி கண்டு சாவார் //

இது சூப்பர்..சிரிச்சு மாளலைங்க...//

பானா ராவன்னாவா கொக்கா? :-)

//ஏதேது.. உங்க கு.ம.க செயலாளர், கிங் பிஷர் கிருஷ்ணசாமிக்கு 'மாம்பழத்தை'ப் பார்த்து கொஞ்சமும் பயமில்லை போலிருக்கிறதே..//

இதுக்கு முன்னாடி ரயிலே ரயிலே-ன்னு ஒரு இடுகை போட்டிருக்கிறேன். :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//suryajeeva said...

எட்டு நாள் லீவு விட்டா கேப்டன் கோவிச்சுக்க மாட்டாரா?//

அவரு என்ன டாஸ்மாக்-கா போறாரு? :-))
மிக்க நன்றி!

//dhandapani said...

அனேகமாய் உங்களது அடுத்த இடுகை வலையுலம் பற்றியதாய் இருக்குமோ என்று எண்ணினேன். ஆனால், வழக்கம்போல எதையும் கண்டுகொள்ளாமல், உங்களது பாணியில் எழுதியிருக்கிறீர்கள்.//

பாணி-ன்னு சொல்றதை விட, இயல்புன்னு சொல்லிடலாம் தண்ட்ஸ்! :-)

//மாற்றுக்கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாமல், சொன்னவர்கள் குறித்து மறைமுகத் தாக்குதல் நடத்துகிற சில வயோதிக பதிவர்களின் புலம்பல்களையெல்லாம் அலட்சியம் செய்வதே சாலச்சிறந்தது. அவர்களுக்குத் துணையாக அனானிகள் என்ற பெயரில், அடிபட்டு உதைவாங்கி ஓடிப்போன சிலர் வலிதாளாமல் புலம்பிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் தாண்டி உங்களது எழுத்தை மட்டும் கவனத்தில் வையுங்கள்!//

புரியுது! கடைபிடிப்பேன்!

//இப்படியெல்லாம் வலையுலகம் குறித்துக் குறைப்படுபவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பதை அவர்களே பறைசாற்றிக்கொள்ளட்டும். அவர்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவர்கள் அல்லர்.//

அப்படிச் சொல்ல முடியாது தண்ட்ஸ்! நமது அபிமானத்துக்குரியவர்கள் அப்படி எழுதினால், சில கருத்துக்களை உரிமையோடு சொல்லலாம் என்றுதான் கருதுகிறேன். ஆனால், மனக்கசப்பு ஏற்படாமல் இருக்க, பேசாமல் இருப்பதே உசிதம் என்று தோன்றுகிறது. :-(

//உங்களது நண்பனாய் உரிமையுடன் வைக்கிற வேண்டுகோள் இது! மீண்டும் பிறிதொரு நாள் வருவேன்.//

தனிமடல் விரைவில்! :-)
நன்றி தண்ட்ஸ்!

settaikkaran said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

பெயர் அருமை//

ஹிஹி! :-)

//சங்கத்துல நாங்களும் சேரலாமா ?//

இன்றுமுதல் ஆயுள்கால உறுப்பினர். போதுமா? :-)

//தமிழ்மணம் 7///

மிக்க நன்றி நண்பரே! :-)

//MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வவ்வ்வ்....//

என்னாச்சுங்க, நம்ப முடியலியா? :-)

//உங்க சங்கத்துல என்னையும் செர்த்துக்கொங்கப்பூ...//

சேர்த்திக்கிட்டோம்! ஆயுள்கால உறுப்பினராக...! :-)

// தமிழ்மணம் ஒன்பது, குத்தியாச்சி...//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

படிக்கப்படிக்க ஒரே ‘கிக்’ ஆயிடுச்சுங்க! வரிக்குவரி சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாயிடுச்சுங்க! கிக் இறங்கும் வரை தொடர்வேன்.....//

வாங்க ஐயா! கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் நீங்க வராதது ஒரு பெரிய குறையாக இருந்தது.

//அஹா! எப்பேர்ப்பட்ட உதாரணம்! சேட்டை நீங்க இங்கதான் ஸ்டெடியா நிக்கிறீங்க! பொங்கி வந்தது எனக்கும் சிரிப்பு.//

அங்கங்கே தாளிச்சுக் கொட்டி ஒப்பேத்தியே ஆகணுமுங்கிற கட்டாயம் இருக்குதே ஐயா! அதுனாலே இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! :-)

//சபாஷ்! பின்னென்ன, பின்னிப்புட்டீங்க, சார்.//

:-))

//அதானே! மறைமுகமாக எவ்வளவு தொழில்கள் பெருகியுள்ளன. எவ்வளவு பேர் வாழ்க்கைத்தரங்கள் உயர்ந்துள்ளன. தகவல்கள் கட்டாயம் வெளியிடப்பட்டே ஆக வேண்டும்.//

மெய்யாலுமே, கடைகளிலே இந்த மாதிரி உபரி சமாச்சாரங்கள் நல்லா விற்பனையாகுதாம். :-)

//கிக் இறங்கவே இல்லை....தொடர்வேன்....//

பார்த்து ஐயா! ரெண்டு ரவுண்டுதான் அலவ்ட்-னு கு.மு.க.சர்குலர் போட்டிருக்காங்க! :-)

//ஜின் வித் லெமனா? உண்ணாவிரதம் முடியும் போது லெமன் ஜூஸ் மட்டும் தரப்படுவதால், குறிப்பிடவில்லையோ!//

காம்பினேஷன் எல்லாம் கரெக்டா சொல்றீங்க ஐயா! இனி அடுத்த கு.மு.க.பதிவுக்கு உங்க கிட்டே கொஞ்சம் ’டிப்ஸ்’ கேட்கலாம் போலிருக்குது! :-)

//அடப்பாவமே! ஆனால் நான் அவரின் அன்பு மனைவியை இந்த வரிகளில் மிகவும் "enjoy" செய்தேன்.//

நான் கூட! ஏன்னா அடிவாங்குனது கோல்கொண்டா கோவிந்தசாமிதானே? :-))))

//இதை ஆர்வத்துடன் படித்து, சிரித்து மகிழ்ந்த எங்களுக்கு நீங்கள் வழங்கக் கூடாதா?//

அதுக்கும் ஒரு நாள் வராமலா இருக்கப்போகுது? வழங்கிருவோம்! :-))

//கையைக்கொடுங்கள். கண்ணில் ஒத்திக்கொள்கிறேன். இதைவிட இந்த விஷயத்தை இவ்வளவு நகைச்சுவை ததும்ப யாராலுமே எழுத முடியாது.//

மிக்க மகிழ்ச்சி ஐயா! ரசித்ததை பொறுமையாக குறிப்பிட்டு பாராட்டுகிற உங்களது ரசனையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம்!

// தமிழ்மணத்தில் 10 out of 10 தரும் பாக்யம் பெற்றேன். வாழ்த்துக்கள். vgk//

உங்களைப் போன்றவர்களின் வருகையும், கருத்தும்தான் உண்மையான பாக்கியமாக கருதுகிறேன். வாக்களிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி!
மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//கும்மாச்சி said...

ஹா ஹா ஹாஹ்!!!!!!!!!!!//

என்னாச்சு? நல்ல பிராண்டு இல்லையா மார்கோ போலோ? :-)
மிக்க நன்றி!

//! சிவகுமார் ! said...

வெள்ளரிக்காய், ஆப் பாயில் புலனாய்வு..கேப்டனையே மிஞ்சிட்டீங்க!//

பின்னே, மேட்டர் அப்படிப்பட்ட மேட்டர் ஆச்சே? :-)
மிக்க நன்றி!

//ஷீ-நிசி said...

பீர்பா(ட்டி)ல் நகைச்சுவை சூப்பர்//

மிக்க நன்றி நண்பரே!

//ரெவெரி said...

கலக்கல் டாஸ்மாக்...உங்களுக்கு பாஸ்மார்க்...//

ஆஹா! மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//ஆதிரா said...

///ஒருபுறம் உங்களுடைய கட்டுரை அருமை என்றால் மறுபுறம் ,
//பன்னிக்குட்டி ராம்சாமி said... தண்ணியடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்
ஜன்னி கண்டு சாவார் // இது போன்ற திருக்குறள் வேற..///

அது மதுக்குறள்! :-))

//நல்லாத்தான் இருக்கு.. ரசித்தேன். சிரித்தேன்.நன்றி//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//நிரூபன் said...

தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கே பாஸ், இருங்க படிச்சிட்டு வாரேன்.//

வாங்க சகோ! :-)

//சொல்லவேயில்ல பாஸ், சேட்டை பத்திரிகையும் தொடங்கியாச்சா...அவ்...........பெயர் கூட சூப்பரா இருக்கே..//

காசா பணமா? யோசிக்காமலே ஆரம்பிச்சிர வேண்டியது தானே? :-)

//ஹா...ஹா...இது தான் டைம்மின் காமெடியா?//

ஒரு ஃப்ளோவுலே வந்திருச்சு சகோ! :-)

//குடி மக்களை வைத்து ஒரு குதூகலமான பதிவினைத் தந்திருக்கிறீங்க..ரசித்தேன் பாஸ்.//

மிக்க நன்றி சகோ! வழக்கம்போல உற்சாகமூட்டுகிற உங்களது பின்னூட்டங்கள் மகிழ்ச்சி தருகின்றன. :-)