Saturday, May 15, 2010

சேட்டை டிவியில் டாக்டர் "Z"

சேட்டை: வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டிவியின் "டாக்டர் இஜெட்" நிகழ்ச்சி! இன்றைய தினம் ஆண்களுக்கு ஏற்படும் காதல் என்ற தீராத வியாதி குறித்து நேயர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க டாக்டர்.குடைச்சலூர் கோவிந்தா வந்திருக்கிறார்! நேயர்கள் தங்கள் சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டுப் பயனடையலாம்.வணக்கம் டாக்டர்!

டாக்டர்: வணக்கம்!

சேட்டை: சமீபகாலமாக காதல்நோயால் நிறைய ஆண்கள் அவதிப்படுவதாக ஆல் இந்தியா லவ்வாலஜிஸ்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் கவலை தெரிவிக்கிறது. இந்தக் காதல்நோய்க்கு உண்டான ஆரம்ப அறிகுறிகள் என்னவென்று சொல்ல முடியுமா டாக்டர்?

டாக்டர்: இட்டிஸ் வெரி சிம்பிள்! வேலைக்குப் போகாத இளைஞர்களுக்கு காதல் வந்தா, வீட்டிலே அடிக்கடி பணம் காணாமப் போகும். வேலைக்குப் போகிற இளைஞர்களுக்குக் காதல் வந்தா, அடிக்கடி அவங்களே காணாமப் போயிருவாங்க!

சேட்டை: நல்ல பதில் டாக்டர்! நேயர் ஒருவர் தொலைபேசியில் அழைக்கிறார்! ஹலோ! வணக்கம்! சேட்டை டிவியின் டாக்டர் இஜெட்!

நேயர்: ஹலோ டாக்டருங்களா? என் பையன் ஒரு நாளைக்கு நூறுவாட்டி கண்ணாடி முன்னாலே நின்னுக்கிட்டு தலை சீவிட்டிருந்தானுங்க! இப்போ ரொம்ப அதிகமாகவே தலைசீவ ஆரம்பிச்சுட்டான்! பார்க்கிறவங்கெல்லாம் திருப்பதியா பழநியான்னு கேட்கிற அளவுக்கு, தலை சீவி சீவி முடியெல்லாம் கொட்டிருச்சுங்க! இதுக்கென்னங்க பண்ணலாம்?

டாக்டர்: இது ஆரம்பகால அறிகுறி மாதிரித் தான் தெரியுது! முடிஞ்சா சீப்பை ஒளிச்சு வையிங்க, இல்லாட்டி கண்ணாடியை ஒளிச்சு வையிங்க! ரெண்டும் முடியாட்டி பையனையே ஒளிச்சு வச்சிருங்க! சரியாப் போயிரும்.

நேயர்: ரொம்ப நன்றி டாக்டர்!

சேட்டை: டாக்டர்! இப்போ கான்சர் வந்தா இரத்தப்பரிசோதனை பண்ணிக் கண்டுபிடிக்கிறா மாதிரி, காதலைக் கண்டுபிடிக்க ஏதாவது பரிசோதனை இருக்குங்களா?

டாக்டர்: இப்பத்தான் டெவலப் பண்ணிட்டிருக்காங்க! கான்சரைக் கண்டுபிடிக்கிற பரிசோதனைக்கு "ஹிஸ்டபதாலஜீ"ன்னு சொல்லுறோமில்லையா? அதே மாதிரி காதலுக்கு "கஷ்ட’பதாலஜீ"ன்னு ஒண்ணு கண்டு பிடிச்சிருக்காங்க! ஆனா, ஆரம்ப காலத்துலேயே பண்ணனும்; இல்லாட்டி ஊசி போட்டு எடுத்தா இரத்தத்துக்கு பதிலா பீர் தான் வரும்!

சேட்டை: இது தவிர பார்த்தாலே கண்டுபிடிக்கிற மாதிரி ஏதாவது அறிகுறி இருக்குங்களா?

டாக்டர்: நிறைய இருக்கு! அது ஏரியாவுக்கு ஏரியா மாறுபடும்! ரொம்ப காமன் ஆன சிம்ப்டம் என்னான்னா, முகத்தைப் பார்த்தீங்கன்னா டைனோசருக்கு டயரியா வந்தது மாதிரி ரொம்ப வெளிறிப்போயிருக்கும்! திடீர்னு உடம்பு இளைச்சிடும்! ஒரே பேண்ட்டைக் கிழிச்சு ஆல்டர் பண்ணினா மூணு தைக்கலாம்!

சேட்டை: ரொம்ப உபயோகமான தகவலெல்லாம் சொல்றீங்க! இப்போ அடுத்த நேயரோட தொலைபேசி அழைப்பைக் கேட்கலாமா? வணக்கம், சேட்டை டிவி! சொல்லுங்க!

நேயர்: என்னங்க, நூறு கிராம் கடுகு, நூறு வெந்தயம், சின்ன வெங்காயம் அரைக்கிலோ, புளி கால் கிலோ எல்லாத்தையும் பத்தாம் நம்பர் வீட்டுக்கு அனுப்பி வையுங்க!

சேட்டை: ஹலோ, இது டிவி ஸ்டேஷன்! மளிகைக்கடையில்லை!!

நேயர்: டிவி ஸ்டேஷனா? சரி, அப்படியே 'டுமீல்குப்பம்’ படத்திலேருந்து ஒரு பாட்டுப்போடுங்க! கேட்டுட்டு சமைக்கப்போறேன்.

சேட்டை: போனை வையுங்கம்மா! சாரி டாக்டர், ராங் நம்பர்!

டாக்டர்: பரவாயில்லீங்க! அடிக்கடி என் கிளீனிக்குக்குக் கூட இந்த மாதிரி ராங் நம்பர் வரும். யாராவது நல்ல டாக்டர் இருக்காங்களான்னு கேட்பாங்க!

சேட்டை: டாக்டர், இந்த கவிதை எழுதுறது கூட காதலோட அறிகுறின்னு சொல்லுறாங்களே, அது பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

டாக்டர்: அப்படி உறுதியாச் சொல்ல முடியாது! எல்லாக் காதலாலேயும் கவிதை வராது! சில பேரு கவிதை எழுதி கொஞ்சம் சுமாரா வந்தா, அதை வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னு காதலிக்கிறதும் உண்டு! இந்த மாதிரி கவிதை எழுதுறவங்களுக்கு தினமும் ரெண்டு வேளை ’லவோசின்’ மாத்திரை தொடர்ந்து பத்து வருசம் கொடுத்தா நோய் தீவிரமடையாது!

சேட்டை: ஏன் டாக்டர், இப்போ கான்சருக்கு இருக்கிற மாதிரியே காதலுக்கும் இரத்தப்பரிசோதனை இருக்கிறதா சொன்னீங்க! அதே மாதிரி கான்சரை குணப்படுத்த ’கீமோதெரபி’ இருக்கிற மாதிரி காதலுக்கு ஏதாவது இருக்கா டாக்டர்?

டாக்டர்: ஓ இருக்கே! அதுக்குப் பேரு ’மாமோதெரபி!’ அதாவது பையன் எந்தப் பொண்ணை காதலிக்கிறானோ அந்தப் பொண்ணோட அப்பா காதுலே விஷயத்தைப் போட்டுட்டா அவரு குணப்படுத்த வேண்டிய விதத்துலே குணப்படுத்திருவாரு! அதுனாலே தான் இதுக்குப் பேரு மாமோதெரபி! இதைத் தொடர்ந்து பையனுக்கு நிறைய எக்ஸ்-ரேயெல்லாம் எடுக்க வேண்டி வரும். சிலருக்கு ஆபரேஷன் வரை கூட போகலாம்.

சேட்டை: இதுக்கு உத்தேசமா எவ்வளவு செலவாகும் டாக்டர்?

டாக்டர்: அதெல்லாம் பொண்ணோட அப்பாவோட சக்தியைப் பொறுத்தது. குத்துமதிப்பா எதுவும் சொல்லுறதுக்கில்லை! ஆனா, பெரும்பாலான கேசுலே பார்த்தீங்கன்னா அதுக்கப்புறம் இந்த வியாதி திரும்ப வரவே வராது! நல்ல சக்ஸஸ் பர்சன்டேஜ்! வில்லேஜ் பக்கமெல்லொம் இந்த ட்ரீட்மெண்ட் தான் ரொம்ப பாப்புலர்!

சேட்டை: அருமையான தகவல்! இப்போ இன்னொருத்தர் தொலைபேசியிலே தொடர்பு கொள்ளுறாரு! வணக்கம்! சேட்டை டிவி, டாக்டர் இஜெட்! உங்க கேள்வியென்ன சொல்லுங்க?

நேயர்: வணக்கம் டாக்டர்! என் பேரு மீனலோசினி! எங்க தெருவிலே ஒரு பையனுக்கு காதல்நோய் வந்திருச்சுங்க! ’உன்னைக் காதலிக்கிறேன்; நீ கல்யாணம் பண்ணிக்கலேன்னா தற்கொலை செய்துக்குவேன்,’னு மிரட்டறாருங்க! இதுக்கு என்னங்க பண்ணுறது?

டாக்டர்: அதாவது காதல் வேறே, கல்யாணம் வேறேங்குறது அவருக்கு இன்னும் புரியலே போலிருக்கு! இந்த மாதிரி பேசுறவங்க ’எதுக்கும் இருக்கட்டும்,’னு உங்க கிட்டே சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேருகிட்டேயாவது சொல்லியிருப்பாருங்க! இந்த மாதிரி அறிகுறியிருந்தா வியாதி தானாகவே கூட குணமாயிடறதுக்கு சான்ஸ் இருக்கு! பயப்படாதீங்க!

நேயர்: டாக்டர், கல்யாணம் பண்ணிக்கிடலேன்னா தற்கொலைன்னு பயமுறுத்தறாரு! பயமாயிருக்கு டாக்டர்!

டாக்டர்: பயப்படாம புத்திசாலித்தனமா டீல் பண்ணுங்க! கல்யாணத்துக்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரொம்ப ப்ரெஷர் கொடுத்தா ’வா, கல்யாணம் பண்ணிக்கலாம்,’னு சொல்லுங்க! கல்யாணமும் வேண்டாம், தற்கொலையும் வேண்டாமுன்னு போனாலும் போயிருவாங்க!

நேயர்: ரொம்ப நன்றி டாக்டர்!

சேட்டை: சமீபத்துலே இந்தியாவிலே பணவீக்கம் அதிகமானதுக்கு காதல்நோய் அதிகமா பரவியிருக்கிறது தான் காரணம்னு உலக வங்கியிலேருந்து ஒரு அறிக்கை விட்டிருக்காங்களே! இது பத்தி என்ன சொல்றீங்க?

டாக்டர்: கண்டிப்பா இருக்கும்! காதல்நோய் பரவிச்சுன்னா சேமிப்பு குறைஞ்சிடுது இல்லையா? செல்போன், பெட்ரோல், சினிமா, ஷாப்பிங், ஹோட்டல்னு எவ்வளவு செலவு இருக்குது! இதுலே சில பேரு ஒண்ணுக்கு மூணு நாலு சிம்கார்டு வச்சிருப்பாங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்திருப்பாங்க! எல்லாம் செலவுதானே? எனக்குத் தெரிஞ்ச ஒரு பேஷியண்ட் பெட்ரோல் செலவுக்காக வண்டியையே அடமானம் வச்சிட்டாருன்னா பாருங்களேன்!

சேட்டை: உண்மையிலேயே ரொம்ப பயங்கரமான வியாதிதான் டாக்டர்!

(டெலிபோன் மணி அடிக்கிறது)

சேட்டை: ஹலோ வணக்கம், இது மளிகைக்கடையில்லை; சேட்டை டிவி! சொல்லுங்க!

டெலிபோனில் பெண்குரல்: சேட்டை! யூ ஆர் அட்ரோஷியஸ்! செல்போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணிட்டா கண்டுபிடிக்க முடியாதுன்னா நினைச்சே? நேத்து சத்யம்லே ஈவ்னிங் ஷோவுக்குப் போலாமுன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டியே! உனக்காக நான் அஞ்சு மணியிலேருந்து ரெண்டரை நிமிஷம் கால்கடுக்கக் காத்திட்டிருந்தேன் தெரியுமா? என் செல்போனுக்கு டாப்-அப் பண்ணச் சொன்னேன். அதையும் மறந்திட்டே இல்லே நீ? ஐயம் ஃபெட் அப் வித் யூ!

சேட்டை: ஹலோ டார்லிங்! நான் சொல்றதைக் கேளு!

பெண்குரல்: ஓஹோ! நீ சொல்றதை நான் கேட்கணுமா? இது எப்போலெருந்து? ஆளை விடு! நான் பாய்-ஃபிரண்டை மாத்திக்கிட்டேன்! ஐ ஹேட் யூ!

(டெலிபோன் துண்டிக்கப்படுகிறது)

டாக்டர்: சேட்டை! இது கொஞ்சம் அட்வான்ஸ் ஸ்டேஜிலே இருக்கும்போலிருக்கே?

சேட்டை: ஏன் டாக்டர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க? இப்பெல்லாம் இந்த மாதிரி சட்டுன்னு மெடிக்கேஷனை மாத்திக்கிறாங்களே? இதுக்கு என்ன பண்ணலாம் டாக்டர்?

டாக்டர்: காதல்நோயைப் பத்தி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தணும் சேட்டை! இந்தக் காதல் சினிமா டிக்கெட் மாதிரி! கிடைச்சதும் பத்திரமா பாக்கெட்டுலே போட்டுக்கணும்! கேட்டுலே பாதியைக் கிழிச்சிருவாங்க! படம் முடிஞ்சதும் சுருட்டிக் குப்பையிலே போட்டுட்டு சுத்தமா மறந்திடணும்! இப்பல்லாம் நூத்துக்கு தொண்ணூத்தி அஞ்சு பேஷியன்ட்ஸ் இப்படித்தான் பண்ணுறாங்க! இதுக்குப் பேரு பொய்யாலிசிஸ்! இப்படி இருந்தா பிரச்சினையே கிடையாது.

சேட்டை: ஏதாவது மேஜர் சர்ஜரி பண்ணி குணப்படுத்த முடியுமா டாக்டர்?

டாக்டர்: பண்ணலாம், ஆனா எதுக்கு வீண்செலவு? அதுக்குப் பேசாம கல்யாணத்தைப் பண்ணி வச்சிரலாம்! ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணு தான்! ரெண்டுலேயுமே பொழைக்கிற சான்ஸ் ரொம்ப கம்மி!

சேட்டை: டாக்டர், உங்க பரந்த அனுபவத்திலே எத்தனையோ பேஷியண்டுங்களை காதல்நோயிலேருந்து குணப்படுத்தியிருப்பீங்க! அதுலே குறிப்பிடத்தக்க ஒரு கேஸ் பத்தி சொல்லுங்களேன்!

டாக்டர்: ஓ யெஸ்! பாண்டியன்னு ஒரு 'அக்யூட் லவ் சிண்ட்ரோம்' கேஸ்! எங்க ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டிருந்தோம். காதலி கைவிட்டுட்டா சோர்ந்து போகக் கூடாது! இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லாயிருன்னு கவுன்சலிங் பண்ணினோம்! எங்க ட்ரீட்மெண்ட்லே அந்தப் பையன் குணமடைஞ்சதோட இல்லாம, எங்க ஆஸ்பத்திரிலேருந்தே ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு பில் கூட செட்டில் பண்ணாம ராத்திரியோட ராத்திரியே ஓடிப்போயிட்டான்!

சேட்டை: அட பாவமே! நிறைய பணம் நஷ்டமாயிருச்சுன்னு சொல்லுங்க!

டாக்டர்: பணம் போனாப் போகுது சேட்டை! அவன் யாரைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போனானோ அந்த நர்ஸைத் தான் நான் ஒன்-ஸைடா லவ் பண்ணிட்டிருந்தேன். இப்படி அடிமடியிலேயே கைவச்சிட்டானே, அவன் உருப்படுவானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சேட்டை: டாக்டர், நேயர்களெல்லாம் பார்த்திட்டிருக்காங்க! அழாதீங்க, நீங்க ஒரு டாக்டர்!

டாக்டர்: போய்யா யோவ், டாக்டருன்னா லவ் பண்ணக்கூடாதா? அந்தப் பொண்ணை நினைச்சு நான் பிரிஸ்கிருப்ஷன் பேட்லே கவிதையெல்லாம் எழுதியிருந்தேன் சேட்டை! ’உளுந்து ஊறினா தோசை, உள்ளம் ஊறினா ஆசை, உதட்டுக்கு மேலே மீசை, உடனே கொடுத்திடு பீஸை,’ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்...இப்படிப் பண்ணிட்டாளேய்யா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சேட்டை: நேயர்களே, தவிர்க்க முடியாத காரணங்களால்,இந்த நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுகிறது. வணக்கம்

(நிகழ்ச்சி நிறைவு)

27 comments:

உமர் | Umar said...

கலக்கல்

சாந்தி மாரியப்பன் said...

லவ்வாலஜில ப்ரொபசராயிட்டீங்க சேட்டை. அதுக்கும் சேர்த்து டபுள் டாக்டர் பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

vasu balaji said...

டாக்டர் கவுஜ ஜூப்பரு:)).செம கலக்கல். ஆனா சேட்டை இடுகையில இது சக்கரை இனிக்கிது மாதிரிதானே:))

Ahamed irshad said...

அசத்தீட்டீங்க சேட்டை....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெண்குரல்: ஓஹோ! நீ சொல்றதை நான் கேட்கணுமா? இது எப்போலெருந்து? ஆளை விடு! நான் பாய்-ஃபிரண்டை மாத்திக்கிட்டேன்! ஐ ஹேட் யூ!//

சேட்டை அந்த பொண்ணோட அட்ரெஸ் கிடைக்குமா ஹீ ஹீ

பிரபாகர் said...

சேட்டை நண்பா!

கலக்கல்! நினைத்ததை ஆசான் சொல்லிட்டதால் அதையே ரிப்பீட்ட்டி பல்சுவையும் தாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்!

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

சேட்டை டிவியில வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை.

வாழ்த்துகள் சேட்டை.

பொன் மாலை பொழுது said...

// டைனோசருக்கு டயரியா வந்தது மாதிரி //

அதுசரி, சேட்டைக்கு டயாரியா வந்த எப்படி இருக்கும்?

நெறையா மெடிக்கல் சயின்ஸ் தகவல்கள் படிப்பீர்கள்
என தெரிகிறது. நடத்துங்க ராஜா.!

manjoorraja said...

டாக்டர் இஜட்டே கவுந்துப்புட்டாரா?

சைவகொத்துப்பரோட்டா said...

அட!! டாக்டர் "z" வந்த மேட்டர சொல்லவே இல்ல.......:))

பெசொவி said...

//பயப்படாம புத்திசாலித்தனமா டீல் பண்ணுங்க! கல்யாணத்துக்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரொம்ப ப்ரெஷர் கொடுத்தா ’வா, கல்யாணம் பண்ணிக்கலாம்,’னு சொல்லுங்க! கல்யாணமும் வேண்டாம், தற்கொலையும் வேண்டாமுன்னு போனாலும் போயிருவாங்க//

யப்பா....சிரிச்சு.....சிரிச்சு.....வயிறே புண்ணாயிடுச்சு.....கலக்கல் தொடர்க!

அகல்விளக்கு said...

டாக்டரே பேஷண்டாயிட்டாரே.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

ஆனாலும் அவரு சொன்ன கவிதை சூப்பரு...

ஜெய்லானி said...

//நேயர்களெல்லாம் பார்த்திட்டிருக்காங்க! அழாதீங்க, நீங்க ஒரு டாக்டர்!

டாக்டர்: போய்யா யோவ், டாக்டருன்னா லவ் பண்ணக்கூடாதா? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

puduvaisiva said...

"டுமீல்குப்பம்’ படத்திலேருந்து ஒரு பாட்டுப்போடுங்க! கேட்டுட்டு சமைக்கப்போறேன்"

:-))

Rekha raghavan said...

//டாக்டர்: பரவாயில்லீங்க! அடிக்கடி என் கிளீனிக்குக்குக் கூட இந்த மாதிரி ராங் நம்பர் வரும். யாராவது நல்ல டாக்டர் இருக்காங்களான்னு கேட்பாங்க!//

ஐயோ! கொன்னுட்டீங்க சேட்டை. சிரிக்க வைக்கறதுக்குன்னே நீங்க பிறந்திருக்கீங்க.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

ரிஷபன் said...

சான்ஸே இல்ல.. யப்பா.. அது எப்படி புதுசு புதுசா கற்பனை ஊற்றெடுக்குது.. நகைச்சுவை மிக்ஸ்ல..

ஸ்ரீராம். said...

ச்சே...இந்த அழுமூஞ்சி டாக்டர் மூஸ் மூசுன்னு அழுது ஒரு நல்ல இடுகையை அரைகுறையா நிறுத்த வச்சிட்டாரே...!

சுதாகர் said...

நல்ல நகைச்சுவை சேட்டை....

ஹேமா said...

//"ஹிஸ்டபதாலஜீ"ன்னு சொல்லுறோமில்லையா? அதே மாதிரி காதலுக்கு "கஷ்ட’பதாலஜீ"ன்னு...//

சேட்டை T.V க்கு வாழ்த்துகள்.

மசக்கவுண்டன் said...

ஆஜர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நோய்கள் பேரெல்லாம் படிச்சிட்டு
சிரிப்பு சிரிப்பா வருது.

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல் ப்ரோக்ராம்-களை வரிசையாகக் கொடுத்துக் கொண்டு இருக்கும் சேட்டை டி.வி. இன்னும் தொடர வாழ்த்துக்கள். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது - யாருப்பா அங்க அண்ணனுக்கு ரெண்டு நாள் லீவ் சொல்லிடுங்கப்பா!!

வெங்கட் நாகராஜ்

settaikkaran said...

கும்மி said...

//கலக்கல்//

மிக்க நன்றி! :-)

அமைதிச்சாரல் said...

//லவ்வாலஜில ப்ரொபசராயிட்டீங்க சேட்டை.அதுக்கும் சேர்த்து டபுள் டாக்டர் பட்டம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.//

டபுள் பட்டத்துக்கு ட்ரிபிள் தேங்க்ஸ்! :-)

வானம்பாடிகள் said...

//டாக்டர் கவுஜ ஜூப்பரு:)).செம கலக்கல். ஆனா சேட்டை இடுகையில இது சக்கரை இனிக்கிது மாதிரிதானே:))//

மிக்க நன்றி ஐயா! தொடரும் உங்களது ஊக்குவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது!

அஹமது இர்ஷாத் said...

//அசத்தீட்டீங்க சேட்டை....//

மிக்க நன்றி! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சேட்டை அந்த பொண்ணோட அட்ரெஸ் கிடைக்குமா ஹீ ஹீ//

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது! மிக்க நன்றி! :-)

பிரபாகர் said...

//கலக்கல்! நினைத்ததை ஆசான் சொல்லிட்டதால் அதையே ரிப்பீட்ட்டி பல்சுவையும் தாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்!//

அவசியம் பல்சுவையையும் ஒரு கை பார்த்துவிட்டால் போச்சு! மிக்க நன்றி!! :-)

அக்பர் said...

//சேட்டை டிவியில வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை.வாழ்த்துகள் சேட்டை.//

ஆஹா, பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அண்ணே! :-)

settaikkaran said...

கக்கு - மாணிக்கம் said...

//அதுசரி, சேட்டைக்கு டயாரியா வந்த எப்படி இருக்கும்?//

ஏன் இந்தக் கொலைவெறி? :-(

//நெறையா மெடிக்கல் சயின்ஸ் தகவல்கள் படிப்பீர்கள் என தெரிகிறது. நடத்துங்க ராஜா.!//

ஹிஹி, அதுலே பாருங்கண்ணே, கேன்சர்னு அடிச்சா விக்கியிலே கிடைக்காததா? மிக்க நன்றி! :-)

மஞ்சூர் ராசா said...

//டாக்டர் இஜட்டே கவுந்துப்புட்டாரா?//

ஹிஹி! அவரும் மனிசன் தானுங்களே அண்ணே? மிக்க நன்றி! :-)

சைவகொத்துப்பரோட்டா said...

//அட!! டாக்டர் "z" வந்த மேட்டர சொல்லவே இல்ல.......:))//

அவர் எப்போ வருவாரு, எப்படி வருவாருன்னு அவருக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்திருவாரு! மிக்க நன்றி! :-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//யப்பா....சிரிச்சு.....சிரிச்சு.....வயிறே புண்ணாயிடுச்சு.....கலக்கல் தொடர்க!//

தொடரும், தொடரும்...! மிக்க நன்றி! :-)

//பயப்படாம புத்திசாலித்தனமா டீல் பண்ணுங்க! கல்யாணத்துக்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரொம்ப ப்ரெஷர் கொடுத்தா ’வா, கல்யாணம் பண்ணிக்கலாம்,’னு சொல்லுங்க! கல்யாணமும் வேண்டாம், தற்கொலையும் வேண்டாமுன்னு போனாலும் போயிருவாங்க//

அகல்விளக்கு said...

//டாக்டரே பேஷண்டாயிட்டாரே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்....ஆனாலும் அவரு சொன்ன கவிதை சூப்பரு...//

பார்த்தீங்களா? டாக்டருங்களுக்கும் நம்மளை மாதிரியே மென்மையான இதயம் தான்! :-)

மிக்க நன்றி!


ஜெய்லானி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அழுகைக்கு நன்றி, மன்னிக்கவும், வருகைக்கு நன்றி! :-)))

♠புதுவை சிவா♠ said...

//:-))//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

KALYANARAMAN RAGHAVAN said...

//ஐயோ! கொன்னுட்டீங்க சேட்டை. சிரிக்க வைக்கறதுக்குன்னே நீங்க பிறந்திருக்கீங்க.//

ஆஹா, என்னே யான் பெற்ற பேறு! மிக்க நன்றி! :-)

ரிஷபன் said...

//சான்ஸே இல்ல.. யப்பா.. அது எப்படி புதுசு புதுசா கற்பனை ஊற்றெடுக்குது.. நகைச்சுவை மிக்ஸ்ல..//

எல்லாம் அப்படியே ஒரு ஃபுளோவிலே வர்றது தான்! மிக்க நன்றி! :-)

ஸ்ரீராம். said...

//ச்சே...இந்த அழுமூஞ்சி டாக்டர் மூஸ் மூசுன்னு அழுது ஒரு நல்ல இடுகையை அரைகுறையா நிறுத்த வச்சிட்டாரே...!//

அதுக்கென்ன, இன்னொரு புரோகிராமுக்குக் கூப்பிட்டாப் போச்சு! மிக்க நன்றி! :-)

சுதாகர் said...

//நல்ல நகைச்சுவை சேட்டை....//

மிக்க நன்றி! :-)

ஹேமா said...

//சேட்டை T.V க்கு வாழ்த்துகள்.//

மிக்க நன்றி! :-)

மசக்கவுண்டன் said...

//ஆஜர்//

மிக்க நன்றி! :-)

NIZAMUDEEN said...

//நோய்கள் பேரெல்லாம் படிச்சிட்டு சிரிப்பு சிரிப்பா வருது.//

ஹிஹி! மிக்க நன்றி! :-)

வெங்கட் நாகராஜ் said...

//கலக்கல் ப்ரோக்ராம்-களை வரிசையாகக் கொடுத்துக் கொண்டு இருக்கும் சேட்டை டி.வி. இன்னும் தொடர வாழ்த்துக்கள். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது - யாருப்பா அங்க அண்ணனுக்கு ரெண்டு நாள் லீவ் சொல்லிடுங்கப்பா!!//

அப்படியே எனக்கும் ரெண்டு நாள் லீவு வாங்கிக் கொடுங்க சார், ஆணி மாளலே! மிக்க நன்றி! :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐயோ... சிரிச்சு சிரிச்சு முடியலப்பா... டாக்டர் கிட்ட கேட்டு (இந்த டாக்டர் வேண்டாம்) வயத்து வலி மாத்திரை பார்சல் ப்ளீஸ்

goma said...

டாக்டர் எழுதின கவிதை சூப்பரோ சூப்பர்

’உளுந்து ஊறினா தோசை, உள்ளம் ஊறினா ஆசை, உதட்டுக்கு மேலே மீசை, உடனே கொடுத்திடு பீஸை,’
கொடுக்கலேன்னா போட்டுடுவே கேசை