Saturday, May 8, 2010

நம்ம வீட்டுப் பிள்ளை!

போன வாரம் நடராஜா தியேட்டரைப் பார்க்கணும்! சும்மா ஜே.ஜேன்னு கூட்டம்! வயசு வித்தியாசமில்லாம நிக்குது சனம்! மல்டிப்ளெக்ஸிலே கேட்டு வழக்கப்பட்ட நுனிநாக்கு இங்கிலிபீசெல்லாம் இங்கிட்டு கிடையாது. பாதி சனம் லுங்கியை மடிச்சுக்கட்டிக்கிட்டு, சட்டையிலே மேலே ரெண்டு பொத்தானை அவுத்து விட்டுக்கிட்டு, களுத்துலே கர்ச்சீப்பைச் சுத்திக்கிட்டு, கையிலே டிக்கெட்டை வாங்குனதும் ஏதோ முதல் பரிசு வாங்குன சந்தோஷத்தோட தியேட்டருக்கு உள்ளாற போகுது! உள்ளே நுழைஞ்சதும் விசில் சத்தம் காதைப் பொளக்குது! படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியான்னு என்னை இஸ்துக்கினு வந்த தோஸ்த்தை திரும்பிப் பார்த்தேன்!

"எப்படி இருக்கு இந்த எக்ஸ்பீரியன்ஸ்?" என்று சிரிக்கிறான் அவன்.

"நல்லாத்தானிருக்கு, ஆனா, டிவியிலே பார்த்துப் பார்த்து சலிச்சுப்போன படத்தை காசு கொடுத்துப் பார்க்க வந்திருக்கிறோமேன்னு நினைச்சா சிப்பு சிப்பா வருது,"ன்னேன்.

"இந்தப் படத்தை ஒருவாட்டியாவது தியேட்டரிலே பாரு! அப்புறம் சொல்லு!"

படமும் ஆரம்பித்தது. பிரிண்ட் கொஞ்சமில்லே, ரொம்பவே மோசம் தான்! டைட்டிலிலேயே டப்பு டப்புன்னு புட்டுக்கிச்சு! "கண்களும் காவடிச் சிந்தாகட்டும்; காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்,"னு பாட்டு! போரடிச்சுது! ஹீரோ எப்போ என்ட்ரீ ஆவப்போறாருன்னு சலிப்பா இருந்திச்சு! பாட்டு ஒருவழியா முடிஞ்சதும், ’அப்பாடா,’ன்னு இருந்திச்சு!

திடீர்னு சனங்களெல்லாம் ஒரே கைதட்டு; விசில்! தலீவரோட கையைக் காட்டுறாங்க, கண்ணைக் காட்டுறாங்க! பதுங்கிப் பதுங்கி பயந்து பயந்து எம்.ஜி.ஆரு எட்டிப்பாக்காரு! முகம் முழுசாத் தெரிஞ்சதும் தியேட்டர் அதிருது! அடுத்த சீனுலே நம்பியாரு சவுக்கை எடுத்துப் போட்டு அடி அடின்னு அடிக்கிறாரு! தியேட்டரிலே அவனவன் ’உஸ்...த்சு...பாவம்,’னு உச்சுக் கொட்டுறான். ஒவ்வொருத்தரும் பத்து வாட்டியாவது பார்த்திருப்பாங்கன்னு நம்ம தோஸ்த் சொல்லுறாரு!

பஞ்ச் டயலாக் கிடையாது; ஹீரோவைச் சுத்தி நூறு பேரு பூவெல்லாம் தூவி ஆடுற டான்ஸ் கிடையாது. எம்.ஜி.ஆர் நம்பியார் கிட்டே அடிவாங்குறாரு! அழுறாரு, ஏன் தற்கொலை பண்ணிக்கவே போறாரு! அக்கா சென்டிமென்ட், குழந்தை சென்டிமென்ட்டுன்னு எல்லாமே அதது இருக்க வேண்டிய விகிதாச்சாரத்துலே இருக்கு.

"எங்களைக் காப்பாத்த யாருமே இல்லியா?"ன்னு அக்கா பண்டரிபாய் அளுவுறாங்க! "நான் இருக்கேன்,"ன்னு சுறுசுறுப்பா அடுத்த எம்.ஜி.ஆரு என்ட்ரீ! திரும்ப தியேட்டரிலே விசில் சத்தம்; கைதட்டல்! இந்த வாட்டி நம்ம தோஸ்தும் சேர்ந்து தட்டுனாருன்னா பார்த்துக்கோங்க!

இரட்டைப் புள்ளைங்க; ஒருத்தரு தைரியசாலி; இன்னொருத்தர் கோழை! இரண்டு பேரும் இடம் மாறுறது தான் கதை! இதே மாதிரி ரஜினி நடிச்ச ’அதிசயப்பிறவி’ன்னு ஒரு படத்தை ராஜ் டிவியிலே பார்த்த ஞாபகம். அதுலே கனகா கூட பரவாயில்லே; ஷீபான்னு இன்னொரு ஹீரோயின்! லாரியிலே அடிபட்டு நசுங்கின எண்ணை டின்னு மாதிரி மூஞ்சி!

அத விடுவோம்! படத்துக்கு வருவோம்! எம்.ஜி.ஆருக்கு இவ்வளோ காமெடி வருமா? அதுலேயும் ’உண்ணாவிரதம் ஓங்குக!’ன்னு சொல்லிட்டே, சோத்தை அள்ளி அள்ளித் தின்னுப்புட்டு, ’உண்ணாவிரதம் ஒழிக’ன்னு சொல்லுவாரு பாருங்க! தியேட்டரே கலகலத்திருச்சு! அதே மாதிரி, ஹோட்டலிலே நாலு இட்டிலி, ஆறு பொங்கல்னு எல்லாத்தையும் டஜன் கணக்கா தின்னுப்புட்டு பில் கொடுக்காம எஸ் ஆவுற இடமும் சூப்பர்!

சரோஜா தேவி முகம் நிறைய ரோஸ் பவுடரும், உதடு நிறைய லிப்ஸ்டிக்கும், தலையை விட பெரிசா கொண்டையுமா வர்றாங்க! அந்த எம்.ஜி.ஆரை இந்த எம்.ஜி.ஆருன்னு நினைச்சுக்கிடுறாங்க பாவம்! ’குமரிப்பெண்ணின் உள்ளத்திலே,’ பாட்டுலே அங்கங்கே கட்டாயிட்டே இருந்திச்சு! அதே மாதிரி எம்.ஜி.ஆரை நம்பியார் அழைச்சுக்கிட்டுப் போற சீனுலே திரையிலே மழையே பெய்யுறா மாதிரி இருந்திச்சு!

"கடவுளே, நான் ஆணையிட்டால் பாட்டுலே கட் இல்லாம இருக்கணுமே,"ன்னு நம்ம தோஸ்த் எல்லாக் கடவுளையும் வேண்டிக்கிறாரு! சொத்தை தந்திரமா எழுதி வாங்குறதுக்காக, நம்பியார் காத்திருக்க, எம்.ஜி.ஆர். நடந்து வரபோது தியேட்டர் சும்மா அதிருது!

நம்பியாரு எம்.ஜி.ஆரைக் கன்னத்துலே அடிக்கிறாரு! எம்.ஜி.ஆரு எழுந்திரிச்சு திரும்ப அடிக்கிறாரு! நம்பியார் சவுக்கை எடுத்து எம்.ஜி.ஆரை அடிக்க வர்றாரு! எம்.ஜி.ஆரு சவுக்கைப் பிடுங்கிட்டு நம்பியாரைப் புரட்டிப் புரட்டி விளாசுறாரு! கைதட்டலுன்னா என்னான்னு கேட்கணுமுன்னா, இந்தப் படத்தைப் போயிப் பாருங்க மக்கா!

"நான் ஆணையிட்டால்...," பாட்டு நடந்திட்டிருக்கையிலே நம்ம தோஸ்தைத் திரும்பிப் பார்த்தேன். ஏதோ, அவரு தான் டி.எம்.சௌந்தர்ராஜன் போல முகத்திலே அப்படியொரு பெருமை!

ஏமாற்றம்னு சொல்லணும்னா நாகேஷ் காமெடி தான்! இருந்தாலும் அவரோட சேட்டை நல்லாவே இருந்திச்சு!

இந்தப் படத்துலே சல்லடை மாதிரி கதையிலே ஓட்டை இருந்தாலும், முதல் பாட்டைத் தவிர எல்லாப் பாட்டும் படு பிரபலமான பாட்டுங்க! கிளைமேக்ஸ் படுசொதப்பல்! இரண்டாவது கதாநாயகியும் ’அதிசயப்பிறவி’ இரண்டாவது கதாநாயகியோட அத்தை மாதிரித் தான் இருந்தாங்க! ஆனால்...

இந்தப் படம் முடிஞ்சு வெளியே வந்தபோது, அவனவன் பேசிட்டுப் போனதைக் கவனிக்கணும்! ஒவ்வொருத்தர் முகத்திலேயும் இருந்த மகிழ்ச்சியைக் கவனிக்கணும்! கொடுத்த காசுக்கு ஒரு சரியான படத்தைப் பார்த்திட்டோமுங்கிற திருப்தியோட எல்லாரும் போயிட்டிருந்தாங்க!

அங்காடித்தெரு,’ மாதிரி விதிவிலக்கா அவ்வப்போது நல்ல படங்கள் வந்தாலும், சமீபத்துலே பார்த்த படங்கள் எல்லாமே சொதப்பின ஏமாற்றம் தான், எம்.ஜி.ஆர்.படங்கள் ரெகுலர் ஷோ ஓடுறதுக்கும், அதுவும் ’ஹவுஸ் ஃபுல்’லா ஓடுறதுக்கும் முக்கிய காரணம்னு சொல்லலாமோ?

’ரெட்டைச்சுழி’ ’சுறா’ மாதிரி படங்களைப் பார்த்திட்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு, ஒரு எம்.ஜி.ஆர்.படத்தை எம்.ஜி.ஆர்.ரசிகர்களோட உட்கார்ந்து தியேட்டரிலே போய்ப் பார்த்த அனுபவம் வித்தியாசமா இருந்திச்சு!

இந்த வாரம் ’பெரிய இடத்துப் பெண்,’ போடுறாங்கன்னு நம்ம தோஸ்த் சொன்னாரு! பார்க்க முடியுமான்னு தெரியலே! அடுத்த வாரம் நமக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு! அது என்னான்னு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க! ஹிஹி! சொல்லாமலா இருப்பேன்?

நிறைய பேரு படம் முடிஞ்சு இந்தக் காலப்படங்களைப் பத்தி ஒரே ஒரு கேள்வியைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்கிட்டே போனாங்க! அது....

"ஏண்டா டேய், படமா எடுக்கறீங்க படம்?"

35 comments:

Chitra said...

’அங்காடித்தெரு,’ மாதிரி விதிவிலக்கா அவ்வப்போது நல்ல படங்கள் வந்தாலும், சமீபத்துலே பார்த்த படங்கள் எல்லாமே சொதப்பின ஏமாற்றம் தான், எம்.ஜி.ஆர்.படங்கள் ரெகுலர் ஷோ ஓடுறதுக்கும், அதுவும் ’ஹவுஸ் ஃபுல்’லா ஓடுறதுக்கும் முக்கிய காரணம்னு சொல்லலாமோ?

’ரெட்டைச்சுழி’ ’சுறா’ மாதிரி படங்களைப் பார்த்திட்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு, ஒரு எம்.ஜி.ஆர்.படத்தை எம்.ஜி.ஆர்.ரசிகர்களோட உட்கார்ந்து தியேட்டரிலே போய்ப் பார்த்த அனுபவம் வித்தியாசமா இருந்திச்சு!......அப்படி போடு அருவாளை.....நச்னு சொல்லிட்டீங்க. அசத்தல்.

பிரபாகர் said...

எம்.ஜி.ஆர் படங்களை ரசித்துப் பார்க்கும் எனக்கு அமிர்தமாய் இருக்கிறது உங்கள் அலசல்.

இதில் ஜீரணிக்கமுடியாத இன்னொரு விஷயம், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு எம்.ஜி.ஆரை தொலைத்தேன் என சொல்லுவார்கள். நிஜமாய் ரசித்துச் சிரித்தேன்...

அடுத்த வாரம் ஏதோ பலமா செய்யறாப்ல இருக்கு! ம்... பார்க்கலாம்...

இந்த இடுகையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லனும்னா ”சூப்பர்!”

டிஸ்கி:

பன்ச் டயலாக்கோடு எம்.ஜி.ஆர் படம் பார்க்கனுமா? இதயக்கனி பாருங்கள்...

பிரபாகர்...

Unknown said...

//"ஏண்டா டேய், படமா எடுக்கறீங்க படம்/

ஏன் நீங்க அவ்வையார்,அருணகிரிநாதர் படமெல்லாம் பாக்குறது இல்லையா

மசக்கவுண்டன் said...

பிரமாதம் சேட்டை. அந்தக்காலத்துல இந்தப்படம் பார்த்ததை அப்பிடியே கண்ணுக்கு முன்னால காட்டிட்டீங்க, ரொம்ப தேங்கஸ்ஸுங்க

Unknown said...

Idugailam nalla than irukku.. Aama nenga youth illaya..!!

pudugaithendral said...

மல்ட்டிப்ளக்ஸ் விட சாதாரண தியேட்டர் தரும் சுகம் ஒரு ரகம்.
புதுக்கோட்டையில் ஒரு தியேட்டர் பத்தி கொசுவத்தி சுத்தணும்னு வெச்சிருக்கேன். சீக்கிரம் போடறேன். ராசி பலன் இன்னும் வரலியே? நீங்க கூட நம்ம வலைப்பூபக்கம் வரலை

ஹேமா said...

பழைய படங்கள் பார்க்கப் பொறுமைதான் கொஞ்சம் வேணும்.விஜய் படத்தைவிட நல்லாவே இருக்கும் !

vasu balaji said...

எம்.ஜி.ஆர்.சிவாஜி படமெல்லாம் பார்க்குறது ஒரு அனுபவம் சேட்டை. அதும் அந்த காலத்தில 36 பைசா, 52 பைசா டிக்கட் வாங்கறதிருக்கே இப்போ நினைச்சா கூட நானா அப்படி படம் பார்த்தேன்னு இருக்கும். நேற்று இன்று நாளைக்கு காத்திருந்து டிக்கட் வாங்கி அனியாயம விழுந்த அறைக்கு கோவிச்சிகிட்டு 10 வருஷம் சினிமாவே போகாம இருந்தேன்:))

Unknown said...

டி.வி.டியில பாக்குறதுதான் பெட்டர். கண்களும் காவடிச் சிந்தாகட்டும் மாதிரி பாட்டை ஓட்டி விட்டுக்கிட்டு பாத்துரலாம்.

அடுத்த வாரம் என்ன வேலைன்னு எனக்குத் தெரியும்.. “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, குடியிருக்க நான் வரவேண்டும்” அப்பிடின்னு கேட்டுக்கிட்டே போகப் போறீங்க.. சரியா?

பனித்துளி சங்கர் said...

முதலில் வாழ்த்துக்கள் !
அப்பறம் மேட்டருக்கு வருகிறேன் . எல்லோரும் புதிய படங்களைப் பார்த்துவிட்டு வந்து அவங்க பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சொல்லாம் சொல்லி எழுது எழுதுனு எழுதி பாவம் மூன்று வருடம் நாயாக பலர் உழைத்து எடுத்த படத்தை முதல் காட்சி ஓடி முடிப்பதற்குள் அடுத்து யாரும் போகாத அளவிற்கு பலர் விமர்சனம் எழுதி பலர் வீட்டின் விளக்குகளை இங்கு கணினியில் இருந்தபடியே ஊதி அனைத்துவிடுகிறார்கள் .

ஆனால் நீங்களோ எப்பொழுதோ வந்த படத்திற்கு சற்று முன் வெளிவந்த படத்திற்கு விமர்சனம் எழுதியது போல் மிகவும் நேர்த்தியாக பதிவில் நகைச்சுவை நடனமாடும் அளவிற்கு மிகவும் அற்புதமாக எழுதி அசத்தி இருக்கிறீர்கள் . மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்தால் என்ன என்ற ஆவலை தூண்டிவிட்டது உங்களின் விமர்சனம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அசத்தலுங்க சேட்டை.

இப்ப வர்ற படங்களுக்கு அந்தக் கால படங்களே பரவாயில்லை.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
எம்.ஜி.ஆர்.சிவாஜி படமெல்லாம் பார்க்குறது ஒரு அனுபவம் சேட்டை. அதும் அந்த காலத்தில 36 பைசா, 52 பைசா டிக்கட் வாங்கறதிருக்கே இப்போ நினைச்சா கூட நானா அப்படி படம் பார்த்தேன்னு இருக்கும். நேற்று இன்று நாளைக்கு காத்திருந்து டிக்கட் வாங்கி அனியாயம விழுந்த அறைக்கு கோவிச்சிகிட்டு 10 வருஷம் சினிமாவே போகாம இருந்தேன்:))
//
ஆஹா! அய்யா சினிமா பார்த்த கதையெல்லாம் இப்போதானே
வெளியே வருது!

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

தலைவர் படம் பார்க்கிறதுன்னாலே தனி சந்தோசம்தான்.

Philosophy Prabhakaran said...

இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் பாருங்க சேட்டை... கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

என்னை போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு
தேனாய் இனித்தது உங்கள் பதிவு
மிக்க நன்றி

கிருஷ்ணா (Krishna) said...

என்ன இருந்தாலும் எங்க வீட்டுப் பிள்ளையை சுறா வுடன் நிறுத்திப் பார்ப்பது கொஞ்சம் over.

ஓகே, எங்க வீட்டுப் பிள்ளை, MGR யின் superhit படம்.

அதை விஜய் யின் எதாவது சூப்பர்ஹிட் படத்தோடு compare செய்தல் ஓகே.

MGR படங்களிலும் failure ஆன படங்கள் உண்டு, என்பதை மறந்து விடாதீர்கள்.

கடைசியாக ஒரு வார்த்தை, எனக்கும் விஜய் படம் பிடிக்காது.

சுதாகர் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே.....

ஹுஸைனம்மா said...

//ரண்டு பேரும் இடம் மாறுறது தான் கதை! இதே மாதிரி ரஜினி நடிச்ச ’அதிசயப்பிறவி’ன்னு ஒரு படத்தை//

அப்பவே “வாணி-ராணி”ன்னு ஒரு படம் வந்து சக்கப்போடு போட்டுது. இன்றைய நிறையப் படங்களப் பாத்தா, பழைய படங்களின் அதே கருதான். அந்தக் கால நாயகிகளின் ஸ்டைல்தான் இப்பத்திய ஃபேஷனும்கூட!!

பழைய படங்களப் பார்க்கும்போதுதான் இந்த மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்குது!!

☀நான் ஆதவன்☀ said...

100% கரெக்ட். இப்ப டிவியில எவ்ளோ பெரிய ஸ்டாரோட புது படம் போட்டாலும், இன்னொரு டிவியில எம்ஜிஆர் படம் போட்டா அதைப் பார்க்க தான் கூட்டமே இருக்கும்

கோமதி அரசு said...

படத்தை நன்கு விமசிரித்து உள்ளீர்கள்!

எனக்கும் அந்த படத்தில் எம்.ஜி.ஆர் நகைசுவை பிடிக்கும்.

அண்ணாமலை..!! said...

தலீவரு படம்னா..தலீவரு படம்தான்!!
சும்மா அசத்திடுவாருல்ல..
சேட்டை!!
உங்க சேட்டை எனக்கு ரொம்ப புடிக்குமுங்கோ..!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பல விசயங்களை அலசுறீங்க.. கலக்குங்க சேட்டை...

settaikkaran said...

Chitra said...

//......அப்படி போடு அருவாளை.....நச்னு சொல்லிட்டீங்க. அசத்தல்.//

நச்’னு ஒரு படம் பார்த்த சந்தோஷம் தான்! :-)
மிக்க நன்றி!

பிரபாகர் said...

//எம்.ஜி.ஆர் படங்களை ரசித்துப் பார்க்கும் எனக்கு அமிர்தமாய் இருக்கிறது உங்கள் அலசல். இதில் ஜீரணிக்கமுடியாத இன்னொரு விஷயம், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு எம்.ஜி.ஆரை தொலைத்தேன் என சொல்லுவார்கள். நிஜமாய் ரசித்துச் சிரித்தேன்...//

ஹாஹா! லாஜிக்கில் உதைக்கிற காட்சிகளுக்குப் பஞ்சமேயில்லாத படம் தான்! :-)

//அடுத்த வாரம் ஏதோ பலமா செய்யறாப்ல இருக்கு! ம்... பார்க்கலாம்...//

ஹிஹி! விரைவில் அறிவிப்பு வரும்! :-)

//இந்த இடுகையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லனும்னா ”சூப்பர்!”//

மிக்க நன்றி!

// டிஸ்கி: பன்ச் டயலாக்கோடு எம்.ஜி.ஆர் படம் பார்க்கனுமா? இதயக்கனி பாருங்கள்.//

பார்த்திட்டாப் போச்சு! :-))

settaikkaran said...

jaisankar jaganathan said...

//ஏன் நீங்க அவ்வையார்,அருணகிரிநாதர் படமெல்லாம் பாக்குறது இல்லையா//

ஹா..ஹா! ஜெய்சங்கர், சில நேரங்களிலே செமத்தியா ஜோக் அடிக்கறீங்க! மிக்க நன்றி!

மசக்கவுண்டன் said...

// பிரமாதம் சேட்டை. அந்தக்காலத்துல இந்தப்படம் பார்த்ததை அப்பிடியே கண்ணுக்கு முன்னால காட்டிட்டீங்க, ரொம்ப தேங்கஸ்ஸுங்க//

இந்தக் காலத்துலேயும் அந்த மாஜிக் வேலை செய்யுது கவுண்டரே! மிக்க நன்றி!! :-)

பேநா மூடி said...

// Idugailam nalla than irukku.. Aama nenga youth illaya..!!//

சாமீ! அன்னிக்கு நடராஜா தியேட்டரிலே பார்க்கணும், இன்னும் எவ்வளவு யூத் எம்.ஜி.ஆர்.படம் பார்க்க வர்றாங்கன்னு...! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

புதுகைத் தென்றல் said...

// மல்ட்டிப்ளக்ஸ் விட சாதாரண தியேட்டர் தரும் சுகம் ஒரு ரகம். புதுக்கோட்டையில் ஒரு தியேட்டர் பத்தி கொசுவத்தி சுத்தணும்னு வெச்சிருக்கேன்.//

உண்மை தான்! சீக்கிரம் கொசுவத்தி சுத்துங்க! :-))

//சீக்கிரம் போடறேன். ராசி பலன் இன்னும் வரலியே? நீங்க கூட நம்ம வலைப்பூபக்கம் வரலை//

அடடா, குறிப்பிட்ட காரணமெல்லாம் இல்லீங்க! ஒரு பதிவு விட்டிருப்பேன்னு நினைக்கிறேன்! உங்க இடுகையை எப்படி படிக்காம இருப்பேன்? வர்றேன்....! மிக்க நன்றி!!

ஹேமா said...

//பழைய படங்கள் பார்க்கப் பொறுமைதான் கொஞ்சம் வேணும்.விஜய் படத்தைவிட நல்லாவே இருக்கும் !//

ஆஹா! இப்போ சொன்னீங்களே, அது நூத்துலே ஒரு வார்த்தை! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

வானம்பாடிகள் said...

//எம்.ஜி.ஆர்.சிவாஜி படமெல்லாம் பார்க்குறது ஒரு அனுபவம் சேட்டை. அதும் அந்த காலத்தில 36 பைசா, 52 பைசா டிக்கட் வாங்கறதிருக்கே இப்போ நினைச்சா கூட நானா அப்படி படம் பார்த்தேன்னு இருக்கும்.//

ஆஹா! கொசுவத்தியை சுத்த வச்சிட்டேன் போலிருக்கே! ஐயா இது குறித்த அனுபவங்களை எழுதினா எப்படியிருக்கும்? :-))

//நேற்று இன்று நாளைக்கு காத்திருந்து டிக்கட் வாங்கி அனியாயம விழுந்த அறைக்கு கோவிச்சிகிட்டு 10 வருஷம் சினிமாவே போகாம இருந்தேன்:))//

சபாஷ்! இதுவல்லவா சபதம்! இன்னும் நிறைய தகவல்களோடு எழுதுங்கள் ஐயா! காத்திருக்கிறோம்! மிக்க நன்றி!

முகிலன் said...

// டி.வி.டியில பாக்குறதுதான் பெட்டர். கண்களும் காவடிச் சிந்தாகட்டும் மாதிரி பாட்டை ஓட்டி விட்டுக்கிட்டு பாத்துரலாம்.//

ஆமாம். ஆனால், தியேட்டரில் டை-ஹார்ட் எம்.ஜி.ஆர்.ரசிகர்களோடு பார்க்கிற அந்த அனுபவம் அலாதி சுகமாயிருந்தது.

//அடுத்த வாரம் என்ன வேலைன்னு எனக்குத் தெரியும்.. “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, குடியிருக்க நான் வரவேண்டும்” அப்பிடின்னு கேட்டுக்கிட்டே போகப் போறீங்க.. சரியா?//

ஹையோ..ஹையோ! நாளைக்குள்ளே தெரிஞ்சுக்குவீங்க! மிக்க நன்றி! :-))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//முதலில் வாழ்த்துக்கள் !// மிக்க நன்றி!!

//அப்பறம் மேட்டருக்கு வருகிறேன் . எல்லோரும் புதிய படங்களைப் பார்த்துவிட்டு வந்து அவங்க பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று சொல்லாம் சொல்லி எழுது எழுதுனு எழுதி பாவம் மூன்று வருடம் நாயாக பலர் உழைத்து எடுத்த படத்தை முதல் காட்சி ஓடி முடிப்பதற்குள் அடுத்து யாரும் போகாத அளவிற்கு பலர் விமர்சனம் எழுதி பலர் வீட்டின் விளக்குகளை இங்கு கணினியில் இருந்தபடியே ஊதி அனைத்துவிடுகிறார்கள்.//

என்ன பண்ணுறது தல? இப்போ விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் தவிர மற்ற படங்கள் அப்படி எழுத வைக்குதே? எழுதுறவங்க என்ன பண்ணுவாங்க?

//ஆனால் நீங்களோ எப்பொழுதோ வந்த படத்திற்கு சற்று முன் வெளிவந்த படத்திற்கு விமர்சனம் எழுதியது போல் மிகவும் நேர்த்தியாக பதிவில் நகைச்சுவை நடனமாடும் அளவிற்கு மிகவும் அற்புதமாக எழுதி அசத்தி இருக்கிறீர்கள் . மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்தால் என்ன என்ற ஆவலை தூண்டிவிட்டது உங்களின் விமர்சனம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !//

எப்போதோ வந்த படம் என்றாலும், இன்றும் அந்த படத்தை ரசிகர்கள் ஈடுபாடோடு பார்ப்பது வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது. மிக்க நன்றி தல!

settaikkaran said...

ச.செந்தில்வேலன் said...

//அசத்தலுங்க சேட்டை. இப்ப வர்ற படங்களுக்கு அந்தக் கால படங்களே பரவாயில்லை.//

அப்படித் தான் நிறைய பேரு பேசிக்கிறாங்க! இது சினிமாக் காரங்களுக்கும் புரிஞ்சேயிருக்குமுன்னு எதிர்பார்ப்போமாக! மிக்க நன்றி! :-)

பிரபாகர் said...

//ஆஹா! அய்யா சினிமா பார்த்த கதையெல்லாம் இப்போதானே வெளியே வருது!//

ஏற்கனவே ஐயா கிட்டே சொல்லியாச்சு! ஒரு பதிவு போடச் சொல்ல வேண்டியது தான்! :-))

அக்பர் said...

//தலைவர் படம் பார்க்கிறதுன்னாலே தனி சந்தோசம்தான்.//

உண்மைதான்! ரொம்ப சந்தோசமான அனுபவமாத் தான் இருந்திச்சு! மிக்க நன்றி! :-)

philosophy prabhakaran said...

//இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் பாருங்க சேட்டை... கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...//

பார்க்கலாம், பார்க்கலாம்! என்ன அவசரம்? இன்னும் சுறாவிலிருந்து மீளலியே? :-) மிக்க நன்றி!

ஸ்ரீராம். said...

வன்மையான கண்டனங்கள் சேட்டை....இதில் நாகேஷ் காமெடி ஏமாற்றமா..? இதில் அவர் வார்த்தைகளை உருட்டி உருட்டிப் பேசும் ஸ்டைல் யாராலும் செய்ய முடியாது...ரசிக்கக் கூடிய காமெடிகளில் அதுவும் ஒன்று...

settaikkaran said...

என்னை போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு
தேனாய் இனித்தது உங்கள் பதிவு
மிக்க நன்றி

May 9, 2010 9:05 AM
Delete
Blogger கிருஷ்ணா (Krishna) said...

என்ன இருந்தாலும் எங்க வீட்டுப் பிள்ளையை சுறா வுடன் நிறுத்திப் பார்ப்பது கொஞ்சம் over.

ஓகே, எங்க வீட்டுப் பிள்ளை, MGR யின் superhit படம்.

அதை விஜய் யின் எதாவது சூப்பர்ஹிட் படத்தோடு compare செய்தல் ஓகே.

MGR படங்களிலும் failure ஆன படங்கள் உண்டு, என்பதை மறந்து விடாதீர்கள்.

கடைசியாக ஒரு வார்த்தை, எனக்கும் விஜய் படம் பிடிக்காது.

settaikkaran said...

சுதாகர் said...

// பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

மிக்க நன்றி!

ஹுஸைனம்மா said...

//அப்பவே “வாணி-ராணி”ன்னு ஒரு படம் வந்து சக்கப்போடு போட்டுது. இன்றைய நிறையப் படங்களப் பாத்தா, பழைய படங்களின் அதே கருதான். அந்தக் கால நாயகிகளின் ஸ்டைல்தான் இப்பத்திய ஃபேஷனும்கூட!!//

ஆஹா! இது வித்தியாசமான, புதிய தகவலாய் இருக்கிறதே! இது குறித்து நிறைய எழுதலாம் போலிருக்கு!

//பழைய படங்களப் பார்க்கும்போதுதான் இந்த மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்குது!!//

கண்டிப்பாக! ரசிகர்களோடு ரசிகராய்ப் பார்ப்பது ஒரு அலாதி மகிழ்ச்சி தான்!

மிக்க நன்றி!

☀நான் ஆதவன்☀ said...

//100% கரெக்ட். இப்ப டிவியில எவ்ளோ பெரிய ஸ்டாரோட புது படம் போட்டாலும், இன்னொரு டிவியில எம்ஜிஆர் படம் போட்டா அதைப் பார்க்க தான் கூட்டமே இருக்கும்//

உம், இதையும் கூட பலர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால், பாருங்களேன், சினிமாத் துறையினர் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லையே!

மிக்க நன்றி!

கோமதி அரசு said...

//படத்தை நன்கு விமசிரித்து உள்ளீர்கள்! எனக்கும் அந்த படத்தில் எம்.ஜி.ஆர் நகைசுவை பிடிக்கும்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அண்ணாமலை..!! said...

// தலீவரு படம்னா..தலீவரு படம்தான்!! சும்மா அசத்திடுவாருல்ல..சேட்டை!! உங்க சேட்டை எனக்கு ரொம்ப புடிக்குமுங்கோ..!!//

ஆஹா! வாங்க, வாங்க, என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்? நல்லா இருக்கீங்களா? சந்தோஷமாயிருக்கு! நன்றி!

பட்டாபட்டி.. said...

//பல விசயங்களை அலசுறீங்க.. கலக்குங்க சேட்டை...//

புதிய அனுபவம் அண்ணே! அதனால் தான் எழுதத் தோன்றியது. மிக்க நன்றி!

settaikkaran said...

ஸ்ரீராம். said...

//வன்மையான கண்டனங்கள் சேட்டை....இதில் நாகேஷ் காமெடி ஏமாற்றமா..? இதில் அவர் வார்த்தைகளை உருட்டி உருட்டிப் பேசும் ஸ்டைல் யாராலும் செய்ய முடியாது...ரசிக்கக் கூடிய காமெடிகளில் அதுவும் ஒன்று...//

உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன். ரசனைகள் மாறுபடுகிறதே, என்ன செய்ய? நாகேஷ் என்றாலே டைமிங் ஜோக்குகள் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் எனக்கு இது ஏமாற்றம் தான்! மற்றபடி அவரது பல சேட்டைகள் எனக்குப் பிடித்திருக்கின்றது என்றும் எழுதியிருக்கிறேனே! நான் எனது படத்துக்குப் பதிலாக, நாகேஷ் படம் போட்டிருப்பதன் காரணமே, நான் அவரது விசிறி மட்டுமல்ல; வெறியன் என்பதால் தான்! அல்டிமேட் காமெடி அவர் தான்! மிக்க நன்றி ஸ்ரீராம்! :-))

மங்குனி அமைச்சர் said...

//’ரெட்டைச்சுழி’ ’சுறா’ மாதிரி படங்களைப் பார்த்திட்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு,///

இந்த படங்கள் எல்லாம் பாதியா ? இனிமே என்கூட சேராத , நான் உன்கூட டூ

ராமலக்ஷ்மி said...

MGR படங்கள் எனக்கும் பிடிக்கும்.

கடைசியா ஸ்டாராங்க எழுப்பியிருக்கீங்க பாருங்க ஒரு சவுண்டு.. ரைட்டு:)))!

Jaleela Kamal said...

வாத்தியார் படம் என்றால் சும்மாவா கூட்டம் சேரத்தான் செய்யும்,
அனைத்தும் தேன் கின்னமாச்சே/

//வலைசரத்தில் அறிமுகப்டுத்தியதற்கு மிக்க நன்றி//