Monday, May 10, 2010

சேட்டை @ வலைச்சரம்

வருடக்கணக்காக தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை வரை கூட்டுவண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் கூட என்னை அழைத்து,"இந்த ஒரு வாரம் நீ வண்டியை ஓட்டு!" என்று யாரும் சொன்னதில்லை!

ஒரு நாள் கூட என் மேலாளர் என்னை அழைத்து,"இன்னும் ஏழு நாட்களுக்கு இந்த அலுவலகத்துக்கு நீ தான் மேனேஜர்; புகுந்து விளையாடு!" என்று தாராளமாகச் சொன்னது கிடையாது.

ஆனால், நம் மதிப்புக்குரிய சீனா ஐயாவின் பெருந்தன்மையைப் பாருங்களேன்! மே 10, 2010 தொடங்கி மே 16,2010 வரையிலான ஒரு வாரகாலத்துக்கு என்னை "வலைச்சரம்" ஆசிரியராக நியமித்திருக்கிறார். இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் விடுகிற ஆசாமியா நான்? கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டேன்.

இந்த ஐந்து வருடங்களில் "வலைச்சரம்" பணியாற்றிய பதிவர்களின் பட்டியலைப் பார்த்தபோது, மவுண்ட் ரோட்டில் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு போவது போலிருந்தது. அதே சமயம், சீனா ஐயாவின் அழைப்பு, ஒரு விதத்தில், எனது வலையுலகப் பிரவேசத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதையும் பெருமையோடு உணர்ந்தேன்.

ஒரு கல்யாணமென்றால், மணமக்கள், உற்றார் உறவினர், நாதஸ்வரம் பார்ட்டி, சமையல் கோஷ்டி மட்டும் தானா? வருகிறவர்களை வாய்நிறைய அழைத்து உபசரிக்கவும் ஒருவர் வேண்டுமல்லவா? அந்த அளவிலாவது என் பங்கை அளிக்கப் போகிறேன்!

நீங்கள் இருக்கும்போது என்ன கவலை? இங்கு வந்து உற்சாகப்படுத்துவது போல அங்கும் வந்து என்னை ஊக்கப்படுத்த மாட்டீர்களா என்ன? உங்கள் அனைவரது அன்பும், ஆதரவும் உள்ளவரையில் இந்தப் பொறுப்பை நல்லபடியாக நிறைவேற்றி, சீனா ஐயா என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு செயல்வடிவத்தில் நன்றி தெரிவிக்க முடியும் என்பதே எனது நம்பிக்கை.

அப்படியானால், இந்த ஒரு வாரம் "சேட்டைக்காரன்" இங்கு எந்த இடுகையும் போட மாட்டானோ என்றா கேட்கிறீர்கள்? ஆசை,தோசை,அப்பளம், வடை! அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுவதாக இல்லை. வழக்கம்போல எனது இடுகைகள் (?!) இங்கும் தொடரும்.

நேரம் கிடைக்கும்போது 'வலைச்சரம்’ வந்து நாலு வார்த்தை நல்லதா சொல்லுங்க மகாஜனங்களே! உங்களைத் தான் மலைபோல நம்பியிருக்கேன். முன்கூட்டியே நன்றியையும் சொல்லி விடுகிறேன்.

வர்ட்ட்டா?

34 comments:

Ahamed irshad said...

வே(சே)ட்டை ஆரம்பமாச்சுடோய் .....

வாழ்த்துக்கள்..அசத்துங்க...

பனித்துளி சங்கர் said...

///////நீங்கள் இருக்கும்போது என்ன கவலை? இங்கு வந்து உற்சாகப்படுத்துவது போல அங்கும் வந்து என்னை ஊக்கப்படுத்த மாட்டீர்களா என்ன?////////

என்ன இப்படி சொல்லிட்டீங்க நண்பரே .
அதெல்லாம் முதலில் இருப்போம் கவலையை விடுங்க .
உங்களின் தீவிர ரசிகன் நான் . உங்களின் நகைச்சுவை பதிவுகளால் இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதுற எழுத்தில் தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கவேண்டும் .
வாழ்த்துக்கள் நண்பரே !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்குற கலக்குல..எல்லோரும் கலங்கனும்..

பின்னி பெடலெடுங்க...
வாழ்த்துக்கள்.. சேட்டை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எக்கசக்க ஆசையா இருக்கே.. கூட்டுவண்டி ஓட்டனும், ஒரு நாள் மேனேஜர் ம். :)

vasu balaji said...

ஆஹா! இங்க டே மேச்! அங்க நைட் மேச்! சேட்டைய அவுத்துடுங்க ராசா!

manjoorraja said...

இனிய வாழ்த்துகள்.

பிரபாகர் said...

அறிமுகமே அசத்தலா இருக்கே! இன்னும் ஒரு வாரம் டபுள் ஜாலி... கலக்குங்க நண்பா!

பிரபாகர்.

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை, உங்களது கலக்கலான திறமைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் இங்கும் பின்னி பெடலெடுப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்

அன்புடன் நான் said...

கலக்குங்க....
வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் நண்பா!!

ஹுஸைனம்மா said...

வாழ்த்துக்கள் சேட்டை!! மிக்க மகிழ்ச்சி!!

கண்ணகி said...

சேட்டைகள் பராக்...பராக்...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

pudugaithendral said...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அங்க வந்து கும்மிடறோம் கும்மி.

(அதிக பட்ச வலைச்சரபதிவு என்னுடையதுதான். எங்க ஆயில்யன் பாஸை பீட் செய்யணும்னு கங்கணம் கட்டிகிட்டு அடிச்சேன். அதை முறியடிங்க தம்பி)

ஜில்தண்ணி said...

வாழ்த்துக்கள் சேட்டை
கலக்குங்க கலக்குங்க!!!!!!!!!

மசக்கவுண்டன் said...

வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

எனக்கும் ஆசையாத்தான் கீது வாஜாரே! ஒருதபா தாம்பரத்லேருந்து நம்ம பீச்சாங்கர வரிக்கும் நம்ம தலீவரு சேட்டக்கார அண்ணாத்த ட்ரைன்னு ஓட்டிகினு வரணும்பா

ரிஷபன் said...

உங்களால முடியும்னு அவருக்குத் தெரியாதா.. கலக்குங்க.. வாழ்த்துகள்

முகுந்த்; Amma said...

வாழ்த்துக்கள் சேட்டைக்கார அண்ணாச்சி. வழக்கம் போல கலக்குங்க.

சிநேகிதன் அக்பர் said...

கலக்குங்க சேட்டை.

வாழ்த்துகள்.

நஜீபா said...

சேட்டை, அடிச்சுத் தூள் பண்ணுங்க....! :-))

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை ஆரம்பம் ஆகட்டும். நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

Chitra said...

Best Wishes!!!

அஷீதா said...

கலக்குங்க.. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! :)

ஜெய்லானி said...

@@@அஷீதா--//கலக்குங்க.. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! :) //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

வின்சென்ட். said...

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

ஹேமா said...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சேட்டை இடம் மாறுதோ !

rajamani said...

Gurupeyarchi nadakka irrupathal, ippadiellam matram varumnu engalakku munnadiea theriuminga. . . . . . . congrats

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் சேட்டை! மிக்க மகிழ்ச்சியாகயிருக்கிறது.

settaikkaran said...

அஹமது இர்ஷாத் said...

//வே(சே)ட்டை ஆரம்பமாச்சுடோய்! வாழ்த்துக்கள்..அசத்துங்க...//

மிக்க நன்றி நண்பரே!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//என்ன இப்படி சொல்லிட்டீங்க நண்பரே .அதெல்லாம் முதலில் இருப்போம் கவலையை விடுங்க .உங்களின் தீவிர ரசிகன் நான் . உங்களின் நகைச்சுவை பதிவுகளால் இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதுற எழுத்தில் தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கவேண்டும் .வாழ்த்துக்கள் நண்பரே!//

எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, உங்கள் ஆதரவு குறித்து!
மிக்க நன்றி நண்பரே!

பட்டாபட்டி.. said...

//கலக்குற கலக்குல..எல்லோரும் கலங்கனும்..பின்னி பெடலெடுங்க...வாழ்த்துக்கள்..சேட்டை..//

சொல்லிட்டீங்கல்லே? பின்னிப் பெடலெடுத்திருவோம்..! மிக்க நன்றி அண்ணே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//எக்கசக்க ஆசையா இருக்கே.. கூட்டுவண்டி ஓட்டனும், ஒரு நாள் மேனேஜர் ம்.:)//

ஹிஹி! அது இருக்குதுங்க நிறையா! :-)
மிக்க நன்றி!

பிரபாகர் said...

//அறிமுகமே அசத்தலா இருக்கே! இன்னும் ஒரு வாரம் டபுள் ஜாலி... கலக்குங்க நண்பா!//

உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லணும். வலைச்சரத்தில் எனக்குப் பிள்ளையார் சுழி போட்டவராயிற்றே!
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

மஞ்சூர் ராசா said...

//இனிய வாழ்த்துகள்.//

மிக்க நன்றி அண்ணே!

வானம்பாடிகள் said...

//ஆஹா! இங்க டே மேச்! அங்க நைட் மேச்! சேட்டைய அவுத்துடுங்க ராசா!//

அதான் அம்பயர் நீங்க இருக்கீங்களே? மிக்க நன்றி ஐயா!

வெங்கட் நாகராஜ் said...

//சேட்டை, உங்களது கலக்கலான திறமைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் இங்கும் பின்னி பெடலெடுப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.//

உங்கள் உறுதுணையிருக்கும்போது பின்னிப் பெடலெடுப்பதா கடினம்! மிக்க நன்றி!

சி. கருணாகரசு said...

//கலக்குங்க....வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி!

சைவகொத்துப்பரோட்டா said...

//வாழ்த்துக்கள் நண்பா!!//

மிக்க நன்றி!

settaikkaran said...

ஹுஸைனம்மா said...

//வாழ்த்துக்கள் சேட்டை!! மிக்க மகிழ்ச்சி!!//

மிக்க நன்றி!

கண்ணகி said...

//சேட்டைகள் பராக்...பராக்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி! :-))

புதுகைத் தென்றல் said...

//வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அங்க வந்து கும்மிடறோம் கும்மி.//

ஆஹா, கும்முங்க! :-)

//(அதிக பட்ச வலைச்சரபதிவு என்னுடையதுதான். எங்க ஆயில்யன் பாஸை பீட் செய்யணும்னு கங்கணம் கட்டிகிட்டு அடிச்சேன். அதை முறியடிங்க தம்பி)//

என்னங்க, உங்க கூட நான் போட்டி போடுறதா? ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை போதாதா எனக்கு? மிக்க நன்றி!

ஜில்தண்ணி said...

//வாழ்த்துக்கள் சேட்டை! கலக்குங்க கலக்குங்க!!!!!!!!!//

மிக்க நன்றி!

மசக்கவுண்டன் said...

//வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி!

கக்கு - மாணிக்கம் said...

//எனக்கும் ஆசையாத்தான் கீது வாஜாரே! ஒருதபா தாம்பரத்லேருந்து நம்ம பீச்சாங்கர வரிக்கும் நம்ம தலீவரு சேட்டக்கார அண்ணாத்த ட்ரைன்னு ஓட்டிகினு வரணும்பா//

அதுவும் நடக்கட்டும் ஒரு நாள்! :-)) மிக்க நன்றி!

settaikkaran said...

ரிஷபன் said...

// உங்களால முடியும்னு அவருக்குத் தெரியாதா.. கலக்குங்க.. வாழ்த்துகள்//

அப்படித் தான் நினைக்கிறேன். மிக்க நன்றி!!

முகுந்த் அம்மா said...

// வாழ்த்துக்கள் சேட்டைக்கார அண்ணாச்சி. வழக்கம் போல கலக்குங்க.//

கலக்கிருவோம்! :-) மிக்க நன்றி!

அக்பர் said...

//கலக்குங்க சேட்டை. வாழ்த்துகள்.//

மிக்க நன்றி! :-)

நஜீபா said...

//சேட்டை, அடிச்சுத் தூள் பண்ணுங்க....! :-))//

பண்ணிடலாம், பண்ணிடலாம். மிக்க நன்றி!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//சேட்டை ஆரம்பம் ஆகட்டும். நல்வாழ்த்துகள்.//

ஆயிருச்சு! ஆயிருச்சு!! மிக்க நன்றி!

கோமதி அரசு said...

//இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

@ Chitra
@ அஷீதா
@ஜெய்லானி
@Mrs.Menagasathia
@வின்சென்ட்
@ஹேமா
@rajamani
@நீச்சல்காரன்

இதைப் பதிவிடும் நேரத்திலிருந்தே திடீரென்று நேரமெல்லாம் காணாமல் போய்விட்டிருப்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். :-))

உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்!
.