Thursday, October 18, 2012

என்னம்மா கண்ணு சௌக்யமா?


என்னம்மா கண்ணு சௌக்யமா?

                ஓரிரு தினங்களுக்கு முன்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது இன்னும் பெயரிடப்படாத அரசியல்கட்சியின் பெயருள்ள தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அந்தப் புயல் இன்னும் ஓயாத நிலையில், இன்று பா.ஜ.க. தலைவர் நித்தின் கட்கரி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

      இந்த நிலைமையில், காங்கிரஸின் சல்மான் குர்ஷிதும், பா.ஜ.க-வின் நித்தின் கட்கரியும் சந்தித்தால் எப்படியிருக்கும்?

      மிஸ்டர் பாரத்படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ் சந்தித்துப் பாடுகிற ‘என்னம்மா கண்ணு சௌக்யமா?மெட்டில் ஒரு கற்பனை!சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   கேஜ்ரிவாலு செஞ்ச வம்புதான்இனிமேல்
            கேள்விமேல் கேள்வியாக அம்புதான்

நித்தின்:    ஊழலும் வடியாத குட்டைதான்நாமும்
            ஊறிப்போய்க் கிடக்கின்ற மட்டைதான்

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!
  

சல்மான்:   வேலியிலே போகுறதை வேட்டிக்குள் விட்டு
           வேதனைதான் படூறீங்க பேராசைப்பட்டு

நித்தின்:    அன்னாவுக்குப் பின்னால்போயி ஆப்பு வாங்கிட்டோம்
            ஆமைமுயல் கதையைப்போல் கொஞ்சம் தூங்கிட்டோம்

சல்மான்:   எங்களைப்போல் நீங்க.....ஓஹோ..ஹோஹோ..ஹோ
            திங்க முடியாது...ஆஹா..ஹாஹா..ஹா

நித்தின்:    சோர்ந்துவிட மாட்டோம்.... ஓஹோ..ஹோஹோ..ஹோ
            சோடைபோக மாட்டோம்.... ஆஹா..ஹாஹா..ஹா

சல்மான்:   சாமர்த்தியம் போதாதே! ஆகாதே!
நித்தன்:    டிரெய்லர்தானே போட்டிருக்கு; பிக்சர் பாருங்க...ஹோய்!


சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

  
சல்மான்:   கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
            கொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை

நித்தின்:    சண்டைக்காரர் போல நாமும் கோஷம் போடலாம்
            சைவப்பூனை போல நாமும் வேஷம் போடலாம்

சல்மான்:         மாத்தி மாத்தி வந்து....ஓஹோ..ஹோஹோ..ஹோ
            போட்டுவைப்போம் பொந்து...ஆஹா..ஹாஹா..ஹா

நித்தின்:    ஆசை நல்லாக் காட்டி...ஓஹோ...ஹோஹோ..ஹோ
            ஆளாளுக்கு லூட்டி...ஆஹா..ஹாஹா..ஹா

சல்மான்:         நம்மை விட்டா ஆளேது...கூடாது

நித்தின்:    காத்துவீசும் எப்பவுமே நம்ம பக்கம்தான்...ஹோய்!

 
சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   கேஜ்ரிவாலு செஞ்ச வம்புதான்இனிமேல்
            கேள்விமேல் கேள்வியாக அம்புதான்

நித்தின்:    ஊழலும் வடியாத குட்டைதான்நாமும்
            ஊறிப்போய்க் கிடக்கின்ற மட்டைதான்

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

*****************************************************
 22 comments:

வெங்கட் நாகராஜ் said...

செம நக்கல் சேட்டை உங்களுக்கு! :)

அவங்களே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க!

நாய் நக்ஸ் said...

செம கலக்கல்...சேட்டை...
:)))))))))))))

Unknown said...

அண்ணா செம சேட்ட....

ரிஷபன் said...

கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை

செம கலக்கல்

அருணா செல்வம் said...

கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
கொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை

கலக்குறீங்க சேட்டை ஐயா.

ஸ்ரீராம். said...

அவர்கள் படும் பாட்டை பாடி விட்டீர்கள்!

பொன் மாலை பொழுது said...

கேஜ்ரி வால் எனும் " அக்னி குஞ்சு " இந்தியாவை சுற்றி சூழும். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இதுதான் இங்கு நடக்கும்.
இதுவும் இல்லையேல் சிவில்வார்தான் முடிவாகும்

cheena (சீனா) said...

அன்பின் சேட்டைக் காரன் - வழக்கம் போல தூள் கெளப்பிட்டீங்க - சூப்பர் பாட்டு - நல்வாழ்த்துகள் சேட்டைக்காரன் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

செம கலக்கல்...

Unknown said...

அருமை சகோ வாங்க பழகலாம்

சசிகலா said...

அசத்திட்டிங்க போங்க.

பால கணேஷ் said...

மொத்தப் பாட்டும் அட்றா சக்கை டைப் தான். அதிலயும் இந்த வரிகள்..

சண்டைக்காரர் போல நாமும் கோஷம் போடலாம்
சைவப்பூனை போல நாமும் வேஷம் போடலாம்

வாய்விட்டுச் சிரிக்க வெச்சுடுச்சு. அருமைண்ணா...

சமீரா said...

பாடல் வரியிலேயே அவங்களோட உள் நோக்கத்த புட்டு புட்டு வச்சிடீங்க... கலக்கல் பாட்டு!!!

திருமயிலை எங்க ஊரு ... said...

சூப்பர் அப்பு

இராஜராஜேஸ்வரி said...

கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
கொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை

கொள்ளியில் நல்ல கொள்ளி எது ???

அருமையான பாட்டு .. பாராட்டுக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம டைமிங் பாஸ்...........

Unknown said...

Facebook sharing button vaikkavum,

Super super super

சீனு said...

தங்கள் நட்பில் இணைந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் சார்

Tamilthotil said...

நகைச்சுவை மூலம் விமர்சனம்.அருமை

சீனுவாசன்.கு said...

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நகைச்சுவை நையாண்டி
சூப்பரா வார்த்தைகளைப் போட்டுக் கலக்கிட்டீங்க!

//சல்மான்: வேலியிலே போகுறதை வேட்டிக்குள் விட்டு
வேதனைதான் படூறீங்க பேராசைப்பட்டு//

//சல்மான்: கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
கொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை//

சூப்பர் சார் ! பாராட்டுக்கள்.

VGK

Unknown said...

கலக்கல் கவிதை!எவரிடத்தும் நேர்மை இல்லை!