Wednesday, September 12, 2012

ஓஹோஹோஹோ! மனிதர்களே!




ஓஹோஹோஹோ! மனிதர்களே!
பேசுவதென்ன சொல்லுங்கள்!
காதுலே இயர்போன்! பையிலே செல்போன்!
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!


தினமும் காதில் செல்போன்வைத்துச் சாலையைக் கடப்பாங்க
ஜனங்கள் பார்க்க கிறுக்கர்கள்போலே உரக்கவே சிரிப்பாங்க
அலறிப்பேசி அடுத்தவன்காதின் ஜவ்வினைக் கிழிப்பாங்க
அதிலும்சிலபேர் ஃபிகர்களைப்பார்த்தால் ஆங்கிலம் உரைப்பாங்க
ஐபோன் பந்தா அடங்கவுமில்லை!
ஆண்ட்ராய்ட் ஜம்பம் முடங்கவுமில்லை!


ஓஹோஹோஹோ! மனிதர்களே!
பேசுவதென்ன சொல்லுங்கள்!
காதுலே இயர்போன்! பையிலே செல்போன்!
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!


மெமரிமுழுதும் பாட்டுக்கள் சேர்த்து உரக்கவே கேட்பாங்க
மெயில்கள் எதுவும் வரலைன்னாலும் அடிக்கடி பார்ப்பாங்க
ஃபேஸ்புக் ட்விட்டர் அனைத்திலும் சேர்ந்து மொக்கை இடுவாங்க
பேசுறமாதிரி காதுலே வைச்சே ஃபோட்டோ சுடுவாங்க
வீட்டுக்கு வழியும் கூகிளில் தேடல்
வில்லங்கமாச்சே புதுயுக மாடல்!


ஓஹோஹோஹோ! மனிதர்களே!
பேசுவதென்ன சொல்லுங்கள்!
காதுலே இயர்போன்! பையிலே செல்போன்!
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!

22 comments:

கும்மாச்சி said...

சேட்டை கலக்கல், வரிக்கு வரி சரியா உட்காருது.

MARI The Great said...

//பேசுறமாதிரி காதுலே வைச்சே ஃபோட்டோ சுடுவாங்க//

அட.. இப்பிடியெல்லாமா பன்னுராணுக! :(

ஸ்ரீராம். said...

சரிதான்...!

எல் கே said...

ippalaam vrum pattuthaan varuthu

சேலம் தேவா said...

எந்த பாட்டோட நடை இது..?!

பொன் மாலை பொழுது said...

//ஓஹோ ஹோ ஹோ ....மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்//

படித்தால் மட்டும் போதுமா.

அது சரி, சேட்டை இரவில் கூட தூங்குவது இல்லையா என்ன??

பால கணேஷ் said...

காதுகள் இல்லாத மனிதனைக்கூட பார்த்துவிடலாம் போல... செல்போன் இல்லா மனிதன் அரை மனிதன் என்றாகி விட்ட காலம் இது. சரியான பொருத்தமான பாட்டு பாடி அசத்திட்டீங்கண்ணே!

ADHI VENKAT said...

நல்லதொரு பாட்டு தான். இப்படித்தானே இருக்கிறார்கள்....

சமீரா said...

என்ன சார் எந்த அரசியல் வியாதியும் சாரி வாதியும் கிடைக்கலையா?? இப்படி பொது மக்களை போட்டு தாக்கறீங்க.....
டோடல் damage ..... கவிஞர்-ன எல்லாவிதமான பாடலும் எழுதனுமோ?? நல்ல பாடல் ...சூப்பர் கலக்கறீங்க...

G.M Balasubramaniam said...


ட்யூனுக்குப் பாட்டு எழுத வந்தாச்சு. இனி பாட்டுக்கு ட்யூன் போட வேண்டும். சினிமாவுக்கு முயல்கிறீர்களா ? வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வீட்டுக்கு வழியும் கூகிளில் தேடல்
வில்லங்கமாச்சே புதுயுக மாடல்!//

;))))) நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.

அஜீம்பாஷா said...

ஓஹோஹோஹோ! மனிதர்களே!
காதில் செல்போன்
எதிரில் ரயில்வண்டி
எமதர்மனின் மிஸ் காலும்
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!

வெங்கட் நாகராஜ் said...

அடடா.. கையில் மொபைல் இல்லாத மனிதர் இல்லை... இதை அழகிய பாட்டாய் படித்த உங்களுக்கு ஒரு பூங்கொத்து!

இராஜராஜேஸ்வரி said...

ஓஹோஹோஹோ! என்று நிதர்சனப் பாடல்.. அருமை ..

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் சார்... உங்கள் தேவைப்படும் பாடல்கள் என் தளத்தில் நிறைய உள்ளன...

ஒரிஜினல் பாட்டே மறந்துரும் போலிருக்கே... ஹா...ஹா...

Rasan said...

அருமையான கலக்கல். நடைமுறையில் செல்போன் அடிப்படை தேவைகளில் ஒன்றாய் மாறிவிட்டது.

Easy (EZ) Editorial Calendar said...

கலக்கல் பதிவு........


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

settaikkaran said...

//@கும்மாச்சி said...

சேட்டை கலக்கல், வரிக்கு வரி சரியா உட்காருது.//

உட்கார்ந்து யோசிச்சு எழுதினோமில்லே? அதான் உட்காருது!
மிக்க நன்றி! :-)

//@வரலாற்று சுவடுகள் said...

அட.. இப்பிடியெல்லாமா பன்னுராணுக! :(//

இப்படிப்பண்ணுறவங்கதான் ஜாஸ்தி! மிக்க நன்றி! :-)

//@ஸ்ரீராம். said...

சரிதான்...!//

மிக்க நன்றி!

//@எல் கே said...

ippalaam vrum pattuthaan varuthu//

புடிக்கலேங்கறீங்க? :-)))))

//@சேலம் தேவா said...

எந்த பாட்டோட நடை இது..?!//

படித்தால் மட்டும் போதுமா? படத்தில் வரும் ஓஹோஹோ மனிதர்களே! மிக்க நன்றி!

//@கக்கு - மாணிக்கம் said...

அது சரி, சேட்டை இரவில் கூட தூங்குவது இல்லையா என்ன??//

பகல் முழுக்க ஆபீஸில் லோல்பட்டுவிட்டு, இரவில் மற்றவர்களை லோல்பட வைப்பதே எம் வாடிக்கை! :-) மிக்க நன்றி!

//@பால கணேஷ் said...

காதுகள் இல்லாத மனிதனைக்கூட பார்த்துவிடலாம் போல... செல்போன் இல்லா மனிதன் அரை மனிதன் என்றாகி விட்ட காலம் இது. சரியான பொருத்தமான பாட்டு பாடி அசத்திட்டீங்கண்ணே!//

அது மட்டுமில்லே கணேஷ்! ஆளாளுக்கு ஒரு ஐபோனை வைச்சுக்கிட்டுப் பண்ணுற அலப்பறை தாங்காமத்தான் கடுப்புலே எழுதினேன். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//@கோவை2தில்லி said...

நல்லதொரு பாட்டு தான். இப்படித்தானே இருக்கிறார்கள்....//

அதே அதே!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//@சமீரா said...

என்ன சார் எந்த அரசியல் வியாதியும் சாரி வாதியும் கிடைக்கலையா?? இப்படி பொது மக்களை போட்டு தாக்கறீங்க.....//

அரசியல்வாதிகளைப் பத்தி எம்புட்டுத்தான் எழுதறது? அதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி...! :-)

//டோடல் damage ..... கவிஞர்-ன எல்லாவிதமான பாடலும் எழுதனுமோ?? நல்ல பாடல் ...சூப்பர் கலக்கறீங்க...//

அடடா, இதையெல்லாம் வைச்சு என்னைக் கவிஞர்னு தப்பா முடிவு பண்ணிராதீங்க! நான் அம்புட்டு வொர்த் கிடையாது! :-))

மிக்க நன்றி!

//@G.M Balasubramaniam said...


ட்யூனுக்குப் பாட்டு எழுத வந்தாச்சு. இனி பாட்டுக்கு ட்யூன் போட வேண்டும். சினிமாவுக்கு முயல்கிறீர்களா ? வாழ்த்துக்கள்.//

அந்த மாதிரி ஆசையெல்லாம் இல்லை ஐயா! அதற்குரிய தொடர்புகளோ அதற்குத்தேவையான நேரமோ என்னிடம் இல்லை. மிக்க நன்றி ஐயா!

//@வை.கோபாலகிருஷ்ணன் said...

;))))) நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.//

நல்லாயிருக்கோ இல்லையோ, வை.கோ.ஐயா சொன்னா சந்தோஷமாயிருக்கு! மிக்க நன்றி ஐயா! :-)

//@azeem basha said...

ஓஹோஹோஹோ! மனிதர்களே!
காதில் செல்போன் எதிரில் ரயில்வண்டி
எமதர்மனின் மிஸ் காலும்
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!//

ஆஹா, சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதன் சிங்கப்பல்லைப் பிடுங்கப் பார்க்குறாரே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//@வெங்கட் நாகராஜ் said...

அடடா.. கையில் மொபைல் இல்லாத மனிதர் இல்லை... இதை அழகிய பாட்டாய் படித்த உங்களுக்கு ஒரு பூங்கொத்து!//

வாங்க வெங்கட்ஜீ! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றிஜீ!

//@இராஜராஜேஸ்வரி said...

ஓஹோஹோஹோ! என்று நிதர்சனப் பாடல்.. அருமை ..//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் சார்... உங்கள் தேவைப்படும் பாடல்கள் என் தளத்தில் நிறைய உள்ளன...ஒரிஜினல் பாட்டே மறந்துரும் போலிருக்கே... ஹா...ஹா...//

ஆஹா! உங்க பக்கம் ஒரு ரவுண்டு சீக்கிரம் அடிக்கணும். வாறேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@Rasan said...

அருமையான கலக்கல். நடைமுறையில் செல்போன் அடிப்படை தேவைகளில் ஒன்றாய் மாறிவிட்டது.//

உண்மை! இருப்பினும் கொஞ்சம் ஓவராப் போயிட்டிருக்கமோன்னு ஒரு டவுட்டு வராமலும் இல்லை! :-))))

மிக்க நன்றி!

//@Easy (EZ) Editorial Calendar said...

கலக்கல் பதிவு........ நன்றி,//

மிக்க நன்றி! :-)

Unknown said...

செல்போனும் கையும் போல நகைச்சுவையும் சேட்டையும் போல என்றும் இனிது வாழ என்று மணமக்களை வாழ்த்தலாம்

கவியாழி said...

ஐயா சிப்பு சிப்பா வருது அருமை