Monday, September 10, 2012

பீரின்றி அமையாது உலகு!



தமிழக மதுக்கடைகளில் பீர், விஸ்கி விலையேற்றம் செய்தி

ஆறு மனமே ஆறு


பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
ஊதிப் பருத்த வயிறைச் சுமந்து
உருண்டு போறதைப் பாரு!
உருண்டு போறதைப் பாரு!

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு

தண்ணி சோடா மிக்சிங் இன்றி
தனியாக் கலக்கும் பீரு
ஒண்ணுக்கு ரெண்டாய் குடிச்சபின்னே
ரெண்டை நாலாக்கும் பீரு!
சூட்டுக்கு இதம் பீராகும்-கூட
சுண்டலைத் தின்னால் ஜோராகும்-இன்னும்
சுருங்கச் சொல்லுறேன் தாகசாந்திக்கிப்போ
பீரே மக்களின் மோராகும்
பீரே மக்களின் மோராகும்

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு

ஹேவார்ட்ஸ் ஃபாஸ்டர் சாண்ட்-பைப்பர் புல்லட்
கோல்டன் ஈகிள் பிராண்டு
கிங்ஃபிஷர் கோல்டு மார்கோ போலோ
கல்யாணி ஜிங்காரோ உண்டு
கோல்டன் பேர்ளு வோரியன் லைட்பின்னே
மெட்ராஸ் பில்சனர் பிளாக்கு நைட்டு என
மேவிய பீருபலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு!
மேனி செழித்த தமிழ்நாடு!

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு!

மாலை நேரம் ஆனபின்பு
கால்கள் கடுக்க நின்னு
மக்கள் வாங்கிக் குடிக்கிறாங்க
விஸ்கி பிராந்தி ஜின்னு
டாஸ்மாக் என்பது தெய்வமடா-இப்போ
பீரு என்பது சைவமடா! தினம்
டாண்ணு நேரத்தில் கடைக்குப் போயி
வாங்கிக் குடிச்சு உய்வோமடா
வாங்கிக் குடிச்சு உய்வோமடா

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
ஊதிப் பருத்த வயிறைச் சுமந்து
உருண்டு போறதைப் பாரு!
உருண்டு போறதைப் பாரு!

19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பீரு கவிதை ஜோரு தான் !

பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஹேவார்ட்ஸ் ஃபாஸ்டர் சாண்ட்-பைப்பர் புல்லட்
கோல்டன் ஈகிள் பிராண்டு
கிங்ஃபிஷர் கோல்டு மார்கோ போலோ
கல்யாணி ஜிங்காரோ உண்டு
கோல்டன் ஈகிள் வோரியன் லைட்–பின்னே
மெட்ராஸ் பில்சனர் பிளாக்கு நைட்டு//

அடேங்கப்பா இவ்வளவு
வகைய றாவா! [ராவா?]

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பீரின்றி அமையாது உலகு!//

தலைப்பு அருமை, தலைவா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழக மதுக்கடைகளில் பீர், விஸ்கி விலையேற்றம் – செய்தி

எதன் விலை தான் ஏறவில்லை?
விலவாசி ஏற்றம் என்ற கவலையை மறக்கத்தான் குடிமகன்கள் இதை வாங்கிக்குடிக்கிறார்கள். அதனால்

//ஆறு மனமே ஆறு//

அதுவும் சரி தான், சார்ரு!!

திண்டுக்கல் தனபாலன் said...

பல பதிவுகளில் (ஆறு மனமே ஆறு) இந்தப் பாட்டை பயன்படுத்தி இருக்கிறேன்...

உங்க பாட்டு நல்ல கலக்கல்...

கும்மாச்சி said...

அண்ணே கவிதை சூப்பர்.

பொன் மாலை பொழுது said...

// ஊதிப் பருத்த வயிறைச் சுமந்து
உருண்டு போறதைப் பாரு! //

அண்ணே நீங்களுமா இப்படி? பீர் அடிப்பதற்கும் ஊதி பருத்த வயிறுக்கும் சம்பந்தம் இல்லே அண்ணே
அது வெறும் Myth. வீணாக நம்ம பிள்ளைகளை கலவரபடுத்தாதீர்கள்.
வயிறில், அதன் சுற்று சுவரில் அதிகம் கொழுப்பு சேர்வதால் மட்டுமே வயிறு வெளியில் தள்ளிக்கொண்டு வரும் என்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.. கொஞ்சமாக சாப்பிட்டு அதிகம் வேலை செய்தால் போதும் வாளி வாளியாக பீர் அடுத்தாலும் தொப்பை வராது. இது உண்மை.

Unknown said...

@கக்கு - மாணிக்கம்
பாஸ்! நெஞ்சில பீரை வார்த்தீங்க! :-)

கோவை நேரம் said...

சும்மா ஜில்லுனு இருக்கு,,,

ஸ்ரீராம். said...

இதைக் பிரதி எடுத்து நம் கல்லூரி மாணவர்களிடம் கொடுத்தால் பஸ்களிலும், மின்வண்டிகளிலும் ஏற்கெனவே கலக்கிக் கொண்டிருப்பவர்கள், இதையும் பாடி ஒரு வழி செய்து விடுவார்கள்!! :))

sathishsangkavi.blogspot.com said...

அண்ணே பீரு சூப்பருருருருருரு.....

இந்திரா said...

கவிதையாசிரியர் சேட்டை வாழ்க..

சமீரா said...

படிக்கும் போதே மயக்கமா வருது.. இத குடிகரவங்க எப்படியோ.. ஊர்ல இருக்கற எல்ல பீர் பேரையும் சொல்லிடீங்க போல!!!
கலக்கல் பாட்டு சார்...

வெங்கட் நாகராஜ் said...

பீரு.. உங்க கவிதை ஜோரு!

நல்லா ஜில்லுன்னு பீரு அடிச்சா மாதிரி இருக்கு!

சசிகலா said...

இதுக்கும் பதிவா நடத்துங்க.

settaikkaran said...

//@வை.கோபாலகிருஷ்ணன் said...

பீரு கவிதை ஜோரு தான் ! பாராட்டுக்கள்.//

வருக ஐயா, வருக! :-)

அடேங்கப்பா இவ்வளவு வகைய றாவா! [ராவா?]//

பீரை றாவாத் தானே குடிக்கணுமாம்? சம்பிரதாயம்! :-)

//தலைப்பு அருமை, தலைவா.//

ஹிஹி! ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஜூ.வி.யிலே போட்ட தலைப்புத்தான்! சுட்டபழம் கசக்கவா செய்யும்?

//எதன் விலை தான் ஏறவில்லை? விலவாசி ஏற்றம் என்ற கவலையை மறக்கத்தான் குடிமகன்கள் இதை வாங்கிக்குடிக்கிறார்கள். அதனால் //ஆறு மனமே ஆறு// அதுவும் சரி தான், சார்ரு!!//

நானும் அதைத்தான் சொல்லியிருக்கேன்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!

//@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.//

ஓ.கேஸ்! :-)

//திண்டுக்கல் தனபாலன் said...

பல பதிவுகளில் (ஆறு மனமே ஆறு) இந்தப் பாட்டை பயன்படுத்தி இருக்கிறேன்...உங்க பாட்டு நல்ல கலக்கல்...//

அதானே பார்த்தேன். இந்த மாதிரியான ஐடியாவெல்லாம் எனக்கு எப்படி வருதுன்னு இப்பத்தான் புரியுது! மிக்க நன்றி! :-))
//@கும்மாச்சி said...

அண்ணே கவிதை சூப்பர்.//

மிக்க நன்றி! :-))

//கக்கு - மாணிக்கம் said...

அண்ணே நீங்களுமா இப்படி? பீர் அடிப்பதற்கும் ஊதி பருத்த வயிறுக்கும் சம்பந்தம் இல்லே அண்ணே அது வெறும் Myth. வீணாக நம்ம பிள்ளைகளை கலவரபடுத்தாதீர்கள். வயிறில், அதன் சுற்று சுவரில் அதிகம் கொழுப்பு சேர்வதால் மட்டுமே வயிறு வெளியில் தள்ளிக்கொண்டு வரும் என்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.. கொஞ்சமாக சாப்பிட்டு அதிகம் வேலை செய்தால் போதும் வாளி வாளியாக பீர் அடுத்தாலும் தொப்பை வராது. இது உண்மை.//

என்னங்க இது? நானே ரொம்பக் கஷ்டப்பட்டு சந்தமெல்லாம் பார்த்து ஒரு பாட்டு எழுதினா, அதுலே பொருட்குற்றமா? சரி, எவ்வளவு பிழையிருக்குதோ, அதற்குத் தகுந்தவாறு பரிசைக் குறைத்துக் கொள்ளுங்களேன்! :-))

மிக்க நன்றி! :- ))

//ஜீ... said...

@கக்கு – மாணிக்கம் பாஸ்! நெஞ்சில பீரை வார்த்தீங்க! :-)//

ஆஹா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா!

:-))

//கோவை நேரம் said...

சும்மா ஜில்லுனு இருக்கு,,,//

மிக்க நன்றி! :-))

//@ஸ்ரீராம். said...

இதைக் பிரதி எடுத்து நம் கல்லூரி மாணவர்களிடம் கொடுத்தால் பஸ்களிலும், மின்வண்டிகளிலும் ஏற்கெனவே கலக்கிக் கொண்டிருப்பவர்கள், இதையும் பாடி ஒரு வழி செய்து விடுவார்கள்!! :))//

அது சரி, இத்தகைய பொது நலத்தொண்டை (மாணவர்களிடம் கொடுப்பதை) யார் செய்யப்போகிறார்கள்? எந்தரோ மாகானுபாவுலு அந்தரிகி வந்தனமு! :-))

மிக்க நன்றி!

//@சங்கவி said...

அண்ணே பீரு சூப்பருருருருருரு.....//

ஓ..ஓ..ஓ..ஓ, கிக்கு ஏறுதே! மிக்க நன்றி! :- ))

//@இந்திரா said...

கவிதையாசிரியர் சேட்டை வாழ்க..//

என்னாது, கவிதையா? ஞானப்பண்டிதா, இதென்ன சோதனை?

மிக்க நன்றி! :-))

//@சமீரா said...

படிக்கும் போதே மயக்கமா வருது.. இத குடிகரவங்க எப்படியோ.. ஊர்ல இருக்கற எல்ல பீர் பேரையும் சொல்லிடீங்க போல!!! கலக்கல் பாட்டு சார்...//

இன்னும் ரெண்டு பிராண்டு விட்டுப்போயிருச்சுன்னு ரெண்டு மூணு பேர் தனிமடல் போட்டிருக்காங்க! :-)))

மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

பீரு.. உங்க கவிதை ஜோரு! நல்லா ஜில்லுன்னு பீரு அடிச்சா மாதிரி இருக்கு!//

தனியாவா? யே பாத் டீக் நஹீ ஹை வெங்கட்ஜீ! : -))

மிக்க நன்றி! :-)

//@Sasi Kala said...

இதுக்கும் பதிவா நடத்துங்க.//

ஹிஹி, மிக்க நன்றி! :-))

அ. வேல்முருகன் said...

என்ன சார், ஒரே நேரத்திலே பீருக்கு இத்தனை விளம்பரம் கொடுத்தா தவிச்சருவான் தமிழன்

settaikkaran said...

//அ. வேல்முருகன் said...

என்ன சார், ஒரே நேரத்திலே பீருக்கு இத்தனை விளம்பரம் கொடுத்தா தவிச்சருவான் தமிழன்//

இருந்தாலும் ஜனநாயகத்துலே தேர்வு செய்யுற உரிமை கொடுக்கணுமா வேண்டாமா? :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

கவியாழி said...

மழைவேற பெய்யுது நீங்க பீரு பத்தி சொல்றீங்க,இப்போ சாப்பிட சல்ப்பு பிடிக்கும் ஹாட் சொல்லுங்க