Tuesday, February 8, 2011

பேல்பூரி

கேட்டதும் கேட்க விரும்புவதும்

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தாமல் கருணாநிதி கவனமாக இருக்கிறார்-அன்பழகன்

சந்தோசம்! வருகிற மார்ச் 31 2011 நிலவரப்படி தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.1,01,541 கோடிகளாக இருக்குமாமே! முடிஞ்சா அந்தச் சுமையையும் இறக்குங்க பார்க்கலாம்.

கருப்புப் பண முதலைகள் 17 பேருக்கு நோட்டீஸ்-பிரணாப் தகவல்

நல்ல காரியம் பண்ணினீங்க! அவங்க முன்ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா பாவம்?

பிப்ரவரி 14-ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம்-கமல் வேண்டுகோள் விடுத்தார்.

என்னது இது? இன்னும் ’மன்மதன் அம்பு’ கடுப்பு தீரலியா? ’காதலர் தினம்,’ அதுவுமா பெட்ரோல் போடாதீங்கன்னா, எப்படி ஃபிகருங்களோட ஊரைச் சுத்துறதாம்?

காங்கிரஸில் இணைந்தது சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி!

இனிமேல் "மஜா" ராஜ்யம் தான்னு சொல்லுங்க!

"திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்", ஸ்ரேயா

இந்த நல்ல புத்தி முன்னமே வந்திருந்தா, நான் அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தைக் கலைச்சிருக்க மாட்டேனே?

தில்லியில் வாழைப்பழம் விலை கடும் உயர்வு

வயிறு தெரியாமத் தின்னுப்புட்டு அஜீரணத்தாலே அவதிப்படுறவங்க (கல்மாடி வகையறா...) எண்ணிக்கை அதிகமாயிடுச்சோ? எதுக்கும் வருமான வரித்துறையை வாழைப்பழமண்டி எல்லாத்தையும் ஒரு சோதனை பண்ணச்சொல்லுங்கப்பா!

ஜனவரியில் டெல்லியில் 82,368 பாட்டில் ஸ்காட்ச் விற்பனை

சந்தேகமேயில்லை! இந்தியா வல்லரசுதான்!

படித்ததும் மகிழ்ந்ததும்!

நண்பர் பிரபாகர் சிங்கப்பூரிலிருந்து வந்ததும் இருமுறை சந்தித்தாகி விட்டது. கடைசியாய், ஒரு நாள் முழுக்க சென்னை நகர்வலம் வந்து, அயனோக்ஸில் "ஆடுகளம்" பார்த்து, பாண்டிபஜார் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இனிப்பு, கார போளியும், ஃபில்டர் காப்பியும் குடித்து உலகப்பொருளாதாரம், பின்நவீனத்துவம் நீங்கலாக எல்லாவற்றையும் பற்றி அரட்டையடித்தோம். இப்போதெல்லாம் நான் அவரிடம் கேட்பது:

"சிங்கப்பூரை விட்டுட்டீங்க; இங்கே வந்திட்டீங்க! சந்தோஷம்! ஏன் எழுதுறதை விட்டீங்க?"

’விடவில்லையே!’ என்பது போல ஒரு இடுகை எழுதியிருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சியாக இருந்தது. வந்தனம் நண்பரே!

பார்த்ததும் நெகிழ்ந்ததும்!

பார்பி பொம்மை போன்றதொரு சிறுமி! எதிரேயிருக்கும் பள்ளிமுடிந்து, தாயின் கையைப் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்கும் தறுவாயில், கண்மூடித்தனமாக கடந்த பல்ஸர் ஒன்று மோதி, ஓரிரெண்டு அடிகள் இழுத்துச் சென்றதில் கணுக்காலருகே சதை பிய்ந்துவிட்டது. கடவுள் புண்ணியத்தில், உயிருக்கு ஆபத்தில்லை. உடனடியாக, சைல்ட் டிரஸ்ட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுமிக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சின்னக்குழந்தையாயிருந்தாலும், தைரியமாக படுக்கையில் உட்கார்ந்தபடி ஓரிரு தினங்களில் பள்ளியில் நடைபெறவிருந்த விளையாட்டு தினத்துக்காக நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

"எனக்கு ஒண்ணுமில்லேம்மா! நான் கண்டிப்பா டான்ஸ் ஆடுவேன்!"

ஆனால், அவள் ஆடவில்லை! உடல் முழுமையாகத் தேறும்வரைக்கும் ஆடுகிற நிலையில் அந்த பிஞ்சு தேகம் இல்லை. அந்த விபத்திலிருந்து அவள் மீண்டுவிட்டாள். அவளது ஏமாற்றத்திலிருந்து......?

மோட்டார் சைக்கிள் மாவீரர்களே! உங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும், அடுத்தவர்களைப் பற்றி கொஞ்சம் யோசித்தால், ஆக்ஸிலேட்டரை அதிகம் முறுக்க மாட்டீர்கள்.


மெட்டில் ஒரு குட்டு

நாக்பூர் பட விழாவில் நான் கடவுள் திரையிடப்படுவதாக அறிந்தேன்.

நான் கடவுள்’ என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று. படம் முழுக்கவும் ஆறுதலே இன்றி அழுத்தமாக அகோரிகள் தொடங்கி, பிச்சைக்காரர்கள் வரையிலும் படத்தின் தென்பட்டவர்களோடு நெளிந்தபடி உட்கார்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்ச்சிபூர்வமான அசவுகரியத்தை அனுபவித்தேன். ஆனால், அது தானே உண்மை என்பதை வலுக்கட்டாயமாக புறந்தள்ள முயன்றும் தோற்றுப்போனேன். இளையராஜா- நான் இறந்து போவதற்குள் ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிற ஒரு யுகபுருஷன்.

இப்போது ஐ.எஸ்.ஆர்.ஒ-விலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப்பட்டதொரு மகத்தான ஊழலைப் பற்றி, இசைஞானியின் இசையில் நக்கலும் குத்தலுமாய் ஒரு பாடலைக் கேட்டால் எப்படியிருக்கும்? கீழே தரப்பட்டுள்ள சுட்டியைச் சொடுக்கி, பாருங்கள், கேளுங்கள்!

நாஞ்சில் வேணுவின் வலைப்பூ: பழங்கஞ்சி

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்


கடைசிப்பத்தி:

"-------------- புத்தகம் வாங்கிட்டேன்!"

"அந்தாளு எழுதினதையா? லூஸா நீ?"

"-------------- புத்தகமும் வாங்கினேன்."

"ஓ! நீ அந்த ஊருக்காரனா?"

"சரியாப் போச்சு! -------------- புத்தகம் எப்படி?"

"அடப்பாவி! அவனா நீ?"

"அப்போ எதைத் தான் படிக்கிறதாம்? -------------- பரவாயில்லையா?"

"இனம் இனத்தோட தானே சேரும்! அது போகட்டும், பொன்னியின் செல்வன் படிச்சியா?"

"இல்லேப்பா, நம்மளாலே அம்புட்டுப் பெரிய புத்தகமெல்லாம் படிக்க முடியாது."

"நீயெல்லாம் தமிழன்னு சொல்லிக்கிறதே தப்புடா!"

நீதி: புத்தகம் வாங்க விரும்பினால், வாங்கினோமா படித்தோமா என்று சத்தம்காட்டாமல் இருப்பதே சாலச்சிறந்தது. வாங்கின புத்தகத்தைப் பற்றி நண்பர்களிடம் உரையாடினால் (அ) பீற்றிக்கொண்டால் சிக்கல்தான். இப்போது எனக்கு ’பொன்னியின் செல்வன்’ வாங்கி தமிழன்தான் என்று நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.

அமரர் கல்கி காக்க காக்க!
அருண்மொழிவர்மன் காக்க காக்க!!

36 comments:

எல் கே said...

//அமரர் கல்கி காக்க காக்க!
அருண்மொழிவர்மன் காக்க காக்க!!///

வந்தியத் தேவன் காக்க

சமுத்ரா said...

அருமை..எவ்வளவு உழைத்து (லிங்க் எல்லாம் கொடுத்து) அழகாக எழுதி இருக்கிறீர்கள்!

sathishsangkavi.blogspot.com said...

கேட்டதும் கேட்க விரும்புவதும் சூப்பர்...

பொன் மாலை பொழுது said...

பேல் பூரி போதும். சேட்டை டி .வி யயை ஏனய்யா இழுத்து மூடினீர் எங்களது உத்தரவு இல்லாமல்??
சேட்டை டி.வி மீண்டும் தொடங்கா விட்டால் உங்கள் வீட்டின் முன்பு பட்டினி போராட்டம் ஆரம்பிக்க திட்டம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபாகர் அண்ணே இங்கயா இருக்காரு?

Chitra said...

கருப்புப் பண முதலைகள் 17 பேருக்கு நோட்டீஸ்-பிரணாப் தகவல்

நல்ல காரியம் பண்ணினீங்க! அவங்க முன்ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா பாவம்?

...செம நக்கலு! உங்கள் trademark முத்திரை பதித்தது. :-)

Speed Master said...

//அமரர் கல்கி காக்க காக்க!
அருண்மொழிவர்மன் காக்க காக்க!!

யார் இவர்கள்?

Unknown said...

//என்னது இது? இன்னும் ’மன்மதன் அம்பு’ கடுப்பு தீரலியா? ’காதலர் தினம்,’ அதுவுமா பெட்ரோல் போடாதீங்கன்னா, எப்படி ஃபிகருங்களோட ஊரைச் சுத்துறதாம்?//
:-))

வெங்கட் நாகராஜ் said...

:) கலக்கல்...

பாடல் லின்க் - நல்லாவே இருக்கு பாட்டு

MANO நாஞ்சில் மனோ said...

//என்னது இது? இன்னும் ’மன்மதன் அம்பு’ கடுப்பு தீரலியா? ’காதலர் தினம்,’ அதுவுமா பெட்ரோல் போடாதீங்கன்னா, எப்படி ஃபிகருங்களோட ஊரைச் சுத்துறதாம்?//


பின்னே......

சிநேகிதன் அக்பர் said...

மசால் பூரி , பானி பூரியும் சேர்ந்து இருக்கு. அருமை சேட்டை.

அரசியல் பேசாம ஒதுங்கி இருந்தாலும் விடமாட்டாங்க போல இருக்கு இந்த அரசியல்வாதிகள்.

வழக்கம்போலவே அருமையான பதிவு.

Anonymous said...

என்னது இது? இன்னும் ’மன்மதன் அம்பு’ கடுப்பு தீரலியா? ’காதலர் தினம்,’ அதுவுமா பெட்ரோல் போடாதீங்கன்னா, எப்படி ஃபிகருங்களோட ஊரைச் சுத்துறதாம்///
ஆமாம் சார் இந்தாளுக்கு இளசுகளை பார்த்தாலே கடுப்புதான்..பெண்கள் விரும்புற மாதவனுக்கு வில்லன் வேசம் கொடுத்தா மாதிரி

Unknown said...

'கடைசி பத்திதான்' சுவாரஸ்யம் ...

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
Unknown said...

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தாமல் கருணாநிதி கவனமாக இருக்கிறார்-அன்பழகன்//

கண்டிப்பாக தமிழ் நாட்டில் வரிகளைவிட வாரிசுகளின் மீது தான் கலைஞருக்கு அதிக கவனம்.

ப்ரியா said...

உக்காந்து ரொம்பவே யோசிக்கிறீங்களோ??????????

சி.பி.செந்தில்குமார் said...

HA HA HA

Jayadev Das said...

//’காதலர் தினம்,’ அதுவுமா பெட்ரோல் போடாதீங்கன்னா, எப்படி ஃபிகருங்களோட ஊரைச் சுத்துறதாம்?// அட ஆமாம், இது என் இவருக்கு ஸ்ட்ரைக் ஆகல?

Philosophy Prabhakaran said...

ஸ்ரேயாவை விடவே மாட்டீங்களா...

Philosophy Prabhakaran said...

ஒருவேளை சிங்கப்பூர்ல இருந்து வாறவங்கள மட்டும்தான் பார்ப்பீங்களா..

settaikkaran said...

//சமுத்ரா said...

அருமை..எவ்வளவு உழைத்து (லிங்க் எல்லாம் கொடுத்து) அழகாக எழுதி இருக்கிறீர்கள்!//

முதல் வருகையிலேயே உற்சாகமூட்டும் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சங்கவி said...

கேட்டதும் கேட்க விரும்புவதும் சூப்பர்...//

ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டின அளவுக்கு எழுதியிருக்கிறேன் நண்பரே!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

பேல் பூரி போதும். சேட்டை டி .வி யயை ஏனய்யா இழுத்து மூடினீர் எங்களது உத்தரவு இல்லாமல்??//

நீங்களும் ரொம்ப நாளா இதை திரும்பத் திரும்பக் கேட்பதனால், பூட்டை உடைத்துத் திறந்தாச்சு! :-)

//சேட்டை டி.வி மீண்டும் தொடங்கா விட்டால் உங்கள் வீட்டின் முன்பு பட்டினி போராட்டம் ஆரம்பிக்க திட்டம்.//

அதெல்லாம் வேண்டாம்! அடுத்த பதிவைப் பாருங்க! சேட்டை டிவி வந்தாச்சு! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபாகர் அண்ணே இங்கயா இருக்காரு?//

ஆமாங்க! இந்தியாவில் தான்! நன்றி!

settaikkaran said...

//Chitra said...

...செம நக்கலு! உங்கள் trademark முத்திரை பதித்தது. :-)//

வகிறு எரியுதுங்க, ஆனா நக்கல் தானே பண்ண முடியுது?
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

:) கலக்கல்...பாடல் லின்க் - நல்லாவே இருக்கு பாட்டு//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கே. ஆர்.விஜயன் said...

கண்டிப்பாக தமிழ் நாட்டில் வரிகளைவிட வாரிசுகளின் மீது தான் கலைஞருக்கு அதிக கவனம்.//

நல்லாச் சொன்னீங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

/ப்ரியா said...

உக்காந்து ரொம்பவே யோசிக்கிறீங்களோ??????????//

ஆமாமில்லே? எனி பிராப்ளம்...? :-))

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

HA HA HA//

நன்றி தல!

settaikkaran said...

//Jayadev Das said...

அட ஆமாம், இது என் இவருக்கு ஸ்ட்ரைக் ஆகல?//

தெரியலியே....தெரியலியே...(நாயகன் ஸ்டைலில் சொல்லிப்பாருங்க!) நன்றி! :-)

settaikkaran said...

/Philosophy Prabhakaran said...

ஸ்ரேயாவை விடவே மாட்டீங்களா...//

முதல்லே அவங்களை விடச் சொல்லுங்க!

//ஒருவேளை சிங்கப்பூர்ல இருந்து வாறவங்கள மட்டும்தான் பார்ப்பீங்களா..//

உங்களுக்கு என்ன பிரச்சினை? புத்தகக் கண்காட்சி பத்தி எழுதினபோதும் இதே மாதிரி கேட்டீங்க! ஒருத்தரை நான் சந்திக்க விருப்பம் மட்டும் இருந்தாப் போதாது. அதற்கு நேரம், இடம், வாய்ப்பு எல்லாம் ஒத்து வரணும்.

உங்க கேள்விக்கு பதில்: எனக்கு யாரைச் சந்திக்க விருப்பமிருக்கோ, அவங்களைத் தான் நான் சந்திப்பேன். போதுமா?

(இதுலே நான் நகைப்பான் போடலே!)

Philosophy Prabhakaran said...

// எனக்கு யாரைச் சந்திக்க விருப்பமிருக்கோ, அவங்களைத் தான் நான் சந்திப்பேன். போதுமா? //

போதும் நண்பரே...

மங்குனி அமைச்சர் said...

sorry setta,

மதுரை சரவணன் said...

kalakkal..vaalththukkal