சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே!
தேசிகனே! தேசிகனே!
அச்சுப்பிழை தேசிகனே!
அன்னையை வைத்தே காமெடியா?
அவசர தேசிகனே!
பெரும் வருத்தம் வருத்தம்!
தேவை திருத்தம் திருத்தம்!
பேரை மாற்றிவந்த வம்பைப் பாரும்
பேரை மாற்றிவந்த வம்பைப் பாருமே!
தேசிகனே! தேசிகனே!
அச்சுப்பிழை தேசிகனே!
உங்கள் கட்சி காமெடியோ பெரிது!
யார் உம்மோடும் போட்டியிடல் அரிது!
தினமொன்றாய் வருது!
காப்பியிலே சர்க்கரைபோல் கரைந்து-நம்
காங்கிரஸே காமெடியின் விருந்து
காசின்றியே அருந்து!
செய்தியும் அளித்து சிரிப்பினைக் கொடுக்கும்
சேவையில் வெல்ல யாரு?
போகுதுபொழுது புண்ணியம் உமக்கு
சிரித்திருக்குது ஊரு!
தேசிகனே! தேசிகனே!
அச்சுப்பிழை தேசிகனே!
சிண்டுப்பிடி தினசரி சிறக்கும்-பின்
துண்டுதுணி வேட்டியெல்லாம் அவிழ்க்கும்
கோஷ்டிச்சண்டை வலுக்கும்
’தொண்டரடி’ என்பதற்கு விளக்கம்-நாம்
தொலைவிலே நின்றுபார்த்தால் கிடைக்கும்
நாற்காலிகள் பறக்கும்!
வடிவேலு படங்கள் வரவில்லையென்னும்
வருத்தமே எமக்கில்லையே!
தேவையில்லை எமக்கு சிரிப்பொலி டிவி
காங்கிரசுக்கிணையில்லையே!
தேசிகனே! தேசிகனே!
அச்சுப்பிழை தேசிகனே!
அன்னையை வைத்தே காமெடியா?
அவசர தேசிகனே!
பெரும் வருத்தம் வருத்தம்!
தேவை திருத்தம் திருத்தம்!
பேரை மாற்றிவந்த வம்பைப் பாரும்
பேரை மாற்றிவந்த வம்பைப் பாருமே!
Tweet |
23 comments:
ஸார் .........சூப்பர் ......
தங்கள் வலைத் தளம் இன்று தான் வந்தேன் !
அருமை !!!
இதில் காமெடி ஏதுமிருக்கா சேட்டை. ?நிஜமாகவே அப்படி ஒரு நோட்டீசா.?
சட்டியிலிருக்கிறதுதானே அகப்பையில வரும்? அன்னை சோனியா அன்னை சோனியான்னே மண்டையில ஒலிக்கறதால வந்த வினை.
ம் ...
தினசரியில் செய்தி பார்த்து மிரண்டுதான் போனேன்.. நீங்க பாட்டே பாடிட்டீங்க.
சத்தியமாக எனக்கு இது புரியவே இல்லை. ஒரு நிகழ்சிக்கு நோட்டீஸ் அடிச்சா அதை திரும்பவும் பார்த்து தவறு இருந்தா சரி செய்ய எல்லா அச்சகத்திலும் ப்ரூப் ரீடர் இருப்பாரே? சரி செய்து பின்னர் தானே வெளியில் வரும் வழக்கம்?
காங்கிரசில் இருப்பது எல்லாமே இப்பிடி " பிடாரிகளாக" வா இருக்கும்?
தலை முதல் கால் வரை?
இதில் வாய் மட்டும் எல்லோருக்கும் பின் புறம் வரை நீள்வதில் குறையில்லை.
இதில் எனக்கு மனம் கொள்ளாத வருத்தமே சேட்டை. என்னால் இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவை ஆளும் ஒரு பாரம்பரிய கட்சியின் தமிழ் நாட்டு பிரிவில் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது ஒருவகையில் நாட்டுக்கு நல்லதுதான் போலும்.
நடக்கட்டும்
அருமையான கிண்டல் கவிதை
தொடர்ந்து நாட்டு நடப்புகளுக்கு
தங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
அருமையான கிண்டல் கவிதை
தொடர்ந்து நாட்டு நடப்புகளுக்கு
தங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
அவசரம் அவருக்கு - இல்லைன்னா வேறு யாராவது போஸ்டர் அடிச்சுடுவாங்க!
அன்னைக்குக் கோபம் வருமோ?
கவிதை வரிகள் அருமை தொடருங்கள்.
மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான தேசிகனை கவுக்குறதுக்காக அவரோட எதிரிகள் செஞ்ச சதிப்பா இது......இதுபற்றி இதுக்கு யார்,யார் காரணம்ன்னு அகில இந்திய தலைமைக்கு விரிவா நான் மெயில் அனுப்பிட்டேன்...அநேகமா இன்னும் ரெண்டு நாட்களில் அவங்கமேல நடவ்டிக்கை எதிர்பார்க்கலாம்
naan velai.....
sonia gandhikkou thaizhe theriyathou...!!!!
ஹா...ஹா.. நல்ல வரிகள்...
tm6
கொடுமை! :D
அன்னையை வைத்தே காமெடியா?
உள்ளத்தில் இருந்தது
உதட்டில் வந்திருக்கும் !
இந்த சமாசாரம் சோனியா காந்திக்குத் தெரிஞ்சிருக்குமா? சரியாகப் பிழை திருத்தி வெளியிடவும் அக்கறையின்றி இப்படியொரு அச்சுப்பிழை தேசிகன். அருமையாக பாடலில் வாரிட்டீங்க..!
அருமையான பாடல்!அதுமட்டுமல்ல கவிதை சவுக்கு கொண்டு சாடல்! புத்தி வருமா இனியாவது?
ஹஹஹஹஹஹஹஹாஆஆஆஆஆ
படித்துச் சிரித்தேன்.
அருமை!
இது அச்சு பிழையா இல்ல அவரே அப்படிதான் ஆசைப்பட்டு செஞ்சாரோ... எப்படி இருந்தாலும் அதனால ஒரு ரகசிய சிநேகிதன் கிடைத்ததில் மகிழ்ச்சி,,,
அச்சுப்பிழையை கவனிக்காமல் எப்படித்தான் வெளியிட்டார்களோ?
நல்லாவே கிண்டலாக எழுதியுள்ளீர்கள்.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Luxurious hotel in chennai | Budget Hotels in Chennai | Centrally Located Hotels in Chennai |Hotels near Shankarnetralaya | Boutique Hotels in Chennai | Hudsonloungebar|Chennai Bars and Lounges | PubsinChennai | Hotel reservation chennai
Post a Comment