Saturday, November 5, 2011

எல்லோரும் எலுமிச்சை வாங்கிக்கிடணும்!

சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய இடுகை இது.

எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!

முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே? 

1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷாய் உபயோகிப்பது!

வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு,விதை,தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச்சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)

எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம்பழத்துக்கு).

ஆயுத பூஜையன்று உங்கள் வாகனச்சக்கரங்களில் தலா ஒரு எலுமிச்சம்பழம் வீதம் வைத்து நசுக்கினால், நீங்கள் போகிற வழியில் யாரும் செல்போன் பேசியபடி குறுக்கே வர மாட்டார்கள் என்பதுடன், சுத்துப்பட்ட பதினெட்டுப் பட்டியில் வாகனம் ஓட்டுகிறவர்களும் கவனமாக ஓட்டுவார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சம்பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால் போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.

இது தவிரவும், எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:

வயிற்றுப் பொருமல்

எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர். 

கொசுக்கடி

தமிழகமெங்கும் மழை கொட்டிக்கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசுவளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசு கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.

உறக்கமின்மை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம்பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.

விஷக்கடி

எலுமிச்சம்பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

காய்ச்சல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782  பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம்பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.

வாந்தி

எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம்பழமிருந்தால் துணிந்து மழைக்காலத்திலும் மாம்பலம், அசோக்நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.

அஜீரணம்

கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தலைவலி

சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.

பித்தம்

இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு இந்த இடுகை நிறைவு செய்யப்படுகிறது. இத்தனை மருத்துவகுணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.

44 comments:

நாய் நக்ஸ் said...

ஹி ..ஹி ..சேட்டை ...
நீங்க எப்படி...பழத்த ...
தேச்சிக்கிட்டு...தானே ..பதிவு போடிங்க ?????

நாய் நக்ஸ் said...

ஆனாலும் சைடு-டிஷ-அ இப்படி
கேவலப்படுதகஊடாது .....
பாருங்க ..குடிமகன்கள் ...
உங்களுக்கு எதிரா வராங்க ...
(கோத்து விட்டாச்சி )

வெங்கட் நாகராஜ் said...

// தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.//

எப்போதும் போல் சேட்டை ட்ரேட் மார்க்.... :)

Thozhirkalam Channel said...

அழுமிச்சையின் மருத்துவ குணங்களை அழகாக நகைச்சுவை இலையில் விருந்து படைத்திருக்கீறீர்..

எழுமிச்சைக்கு மட்டும் அல்ல உமது எழுத்தும் சக்தி அதிகம் உள்ளது என்பதை அறிகிறோம்..

சிறப்பான பதிவு

rajamelaiyur said...

நல்ல கலகிடிங்க ...

பொன் மாலை பொழுது said...

எலும்மிச்சை பழத்தின் மகத்துவம் சொல்லப்போய் வீணாக டாஸ்மாக் வாடிகையாளர்களை வம்புக்கு இழுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. சேட்டையின் பித்தம் தெளிய ஒரு அட்டை பெட்டி நிறைய பழங்கள் அனுப்பி வைக்கப்படும். தினம் ஒன்றாக அல்லது இரண்டாக தலைக்கு தேய்த்து குளிக்க வசதியாக இருக்கும்.

அதுசரி...."டப்பா கிழிந்த "காங்கிரஸ் காரர்களின் வயிதெரிச்சளையும் கொட்டிகொண்ட பாவம் சும்மா விடாது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லவேளையாக எலுமிச்சம்பழத்தின் மகிமையை விஸ்தாரமாக எடுத்துச்சொல்லிப் புரிய வைத்தீர்கள்.

என்னடா கோடை காலமும் இல்லையே ஒரு சிறிய சற்று காய்ந்த பழம் 5 ரூபாயும், சாருள்ள சதைப்பத்தான, புத்தம்புதிய பழம் 10 ரூபாயும் விற்கிறதே என்று யோசித்தேன்.

இந்த எலுமிச்சம்பழ விலைவாசி ஏற்றத்திற்கு, உமது பதிவும் நீருமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

சூப்பரா நகைச்சுவையாக நல்லவே இருக்குது சேட்டை, சார்.

அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து அடித்தது போல ஒரே ‘கிக்’ ஏற்பட்டு விட்டது இதைப் படித்ததும்.

கிக்கான பகிர்வுக்கு நன்றி. vgk

பால கணேஷ் said...

எலுமிச்சைப் பழத்திற்கு இன்னொரு பயனும் உண்டு. நன்றாக ரசம் வைத்து (சமரசம் அல்ல) சாப்பிடலாம். ஹா.. ஹா... இந்த விஷயத்திலும் சத்தியமூர்‌த்தி பவனையும், காங்கிரஸ் காரர்களையும் வம்பிழுத்திருக்கும் உங்கள் சேட்டையின் வெம்மை தணிய ஜுஸ் போட்டும் குடிக்கலாம்!

அனுஷ்யா said...

கொசுத்தொகை-கவித கவித.....:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

கருப்புக் கூலிங் க்ளாஸ் அணிந்த மஞ்சள் எலுமிச்சம்பழம் படம், சினிமா கதாநாயகி போல மிகவும் கவர்ச்சியாக பளிச்சென்று உள்ளது. பார்த்ததும் அவளின் ஹீரோவான ’ஜின்’ அவர்கள் எங்கே? என்று எண்ண வைத்தது. பாராட்டுக்கள்.

middleclassmadhavi said...

அரசியல் எலுமிச்சை அருமை! :-) காபிரைட் வாங்கியாச்சா?!

sudhanandan said...

ஏன் ஏன் ஏண்ணா இப்படி ?

மாங்கனி நகர குழந்தை said...

இன்னொரு முக்கியமானது. கையில நக சுத்தி வந்த எலுமிச்சை பழம் தான் வைப்போம்.......

அகல்விளக்கு said...

ஹாஹா... அட்டகாசம்....

saidaiazeez.blogspot.in said...

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியாக டைம்ஸ் ஆஃப் இண்டியாவையே கடிக்க ஆரம்பிச்சுட்டாரேனு பார்த்தா,கதை அப்படி போகுதா!
வாசித்து முடித்த பிறகு, தலையில் எலுமிச்சம்பழத்தை தேய்த்து குற்றால அறுவியிலே குளித்த அனுபவம் போல இருந்தது

SURYAJEEVA said...

காமடி பண்ணுகிறீர்களா? இல்ல சீரியஸா படிக்கணுமான்னு புரியாம இங்க ஒரு ட்யூப் லைட் முழிச்சிகிட்டு நிக்குது...

கும்மாச்சி said...

சேட்டை எலுமிச்சம்பழத்தையும் விட்டு வைக்கவில்லை. பலே பாஸ் கலக்குங்க.

மகேந்திரன் said...

அசத்தலான நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய
தகவல்களை உங்கள் நடையில் நல்லா
சொல்லியிருக்கேங்க....

K.s.s.Rajh said...

அருமையான தகவல்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு எலுமிச்சைக்குள்ளே இவ்வளவு தகவல்களா...

அசத்தலான தொகுப்பு...

சேலம் தேவா said...

//விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம்பழத்துக்கு).//

ஹா..ஹா...அருமையான சேட்டை.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! ரொம்பவும் சேட்டைதான் ! உங்கள் சின்ன வயது சேட்டைகளை எழுதவும்.

MANO நாஞ்சில் மனோ said...

பல்சுவையாக கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க சூப்பர்...!!!

பால கணேஷ் said...

இவ்வளவு சொன்னீங்க... எலுமிச்சையோட முக்கியமான பயன்பாட்டை விட்டுட்டிங்களே... ரசம் வைச்சுக் குடிக்கலாம். எலுமிச்சையோட அரசியலைக் கலந்து கலாய்க்கிற உங்க சேட்டையோட சூடு தணிய ஜுஸ் போட்டும் குடிக்கலாம்..

Robin said...

//எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம்பழத்துக்கு).// :)

ரிஷபன் said...

இது சீரியஸா.. சேட்டையான்னு புரியல.. எதுக்கும் இருபது ரூபாய்க்கு மூணுன்னு வாங்கி வச்ச பழத்தை ஜூசு பிழிஞ்சு குடிச்சுட்டு வரேன்..

Unknown said...

சேட்டை !
எப்படி உங்களால் இவ்வளவு அருமையாக, நக்கலாக
ஆங்காங்கே அரசியல் குத்தலாக
எழுத முடிகிறது
வரிதோறும் நகைச்சுவையை
வாரி வழங்கிய வள்ளலே
நீர் வாழ்க! வாழ்க!

புலவர் சா இராமாநுசம்

கோகுல் said...

அப்பப்பா!எல்லா கூத்துக்களையும் ஒரு எலுமிசைப்பழத்தில் கோர்த்துவிட்டீர்களே!
கலக்கல் போங்க!

வவ்வால் said...

சேட்டை,

நல்லா விரிவா, நகைச்சுவயாக பயன்களை சொல்லி இருக்கிங்க!

ஆனாலும் நம்ம ஏரியா டாஸ்மாக் மேல கை வைக்கிறதுலா எல்லாருமே ஒரு கண்ணா இருக்காங்க? எலுமிச்ச சாறு பூசின கொசுக்கடிக்காது, டாஸ்மாக் சாறு குடிச்ச கொசு என்ன அனகோண்டா கடிச்சா கூட தெரியாது என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

நாம எல்லாம் வாரத்தில 3 நாளாவது எலீமிச்சம் சோறு தான் சாப்பிட்டு பொழப்ப ஓட்ட வேண்டி இருக்கு, அதான் கூலா இருக்கோம்.

அப்புறம்,மீன்,சிக்கன்லாம் எலிமிச்ச சாறுல ஊறவச்சு வறுத்தா சோக்கா இருக்கும்.

ஹி..ஹி அப்புறம் பொண்ணுங்கள எலுமிச்ச கலருனு சொல்றாங்க அது ஏன்?

curesure Mohamad said...

உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?

Unknown said...

வாய் விட்டு சிரிக்க வைத்த குசும்பு பதிவு.எலுமிச்சை பழசாற்றில் சீரகம் கொஞ்சம் ஊறவைத்து,பின் சீரகத்தை காய வைத்து சாப்பிட்டால் நாக்கில் ”சுரணை” {சுவை}மரத்து போனவர்களுக்கு மீண்டு(ம்) வருமாம்.

முகுந்த்; Amma said...

//எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே? //

நக்கலாக உண்மையை சொல்லுவதில் நீங்க கில்லாடிங்க..

ஆனா..இந்த உண்மைங்களை எல்லாம் எலுமிச்சம்பழத்தில சேர்த்தீங்க பாருங்க...அடா அடா புல்லரிக்குது.

settaikkaran said...

//NAAI-NAKKS said...

ஹி ..ஹி ..சேட்டை ...நீங்க எப்படி...பழத்த ...தேச்சிக்கிட்டு...தானே ..பதிவு போடிங்க ?????//

இது மட்டுமில்லே; எல்லா இடுகையுமே அப்படித்தான் எழுதுறது. :-))

//ஆனாலும் சைடு-டிஷ-அ இப்படி கேவலப்படுதகஊடாது .....பாருங்க குடிமகன்கள் ...உங்களுக்கு எதிரா வராங்க ...(கோத்து விட்டாச்சி )//

அதெல்லாம் ஒண்ணுமில்லே! கு.மு.க தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி இருக்கிற வரைக்கும் என்னை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வெங்கட் நாகராஜ் said...

எப்போதும் போல் சேட்டை ட்ரேட் மார்க்.... :)//

வாங்க வெங்கட்ஜீ!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//Cpede News said...

அழுமிச்சையின் மருத்துவ குணங்களை அழகாக நகைச்சுவை இலையில் விருந்து படைத்திருக்கீறீர்..//

யூ மீன் எலுமிச்சை? மிக்க மகிழ்ச்சி! விருந்து முடிஞ்சதும் லெமன் ஜூஸ் சாப்பிட்டீங்க தானே? :-)

//எழுமிச்சைக்கு மட்டும் அல்ல உமது எழுத்தும் சக்தி அதிகம் உள்ளது என்பதை அறிகிறோம்..சிறப்பான பதிவு//

சக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீக்னஸ் தராமலிருந்தால் போதும் என்பதே எனது பேரவா! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல கலகிடிங்க ...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கக்கு - மாணிக்கம் said...

எலும்மிச்சை பழத்தின் மகத்துவம் சொல்லப்போய் வீணாக டாஸ்மாக் வாடிகையாளர்களை வம்புக்கு இழுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.//

தமிழ்நாட்டின் கருவூலமாய் விளங்கும் டாஸ்மாக் குறித்து தப்பாகச் சொல்வேனா? ஒரு உபயோகத்தைச் சொன்னேன். :-)

//சேட்டையின் பித்தம் தெளிய ஒரு அட்டை பெட்டி நிறைய பழங்கள் அனுப்பி வைக்கப்படும். தினம் ஒன்றாக அல்லது இரண்டாக தலைக்கு தேய்த்து குளிக்க வசதியாக இருக்கும்.//

ஒரு தோட்டமே அனுப்பினாலும் எனக்குப் பத்தாது! :-)

//அதுசரி...."டப்பா கிழிந்த "காங்கிரஸ் காரர்களின் வயிதெரிச்சளையும் கொட்டிகொண்ட பாவம் சும்மா விடாது.//

ஆமா, அவங்க இத்தனை வருசமா நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டுறது மட்டும் சரியா? :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லவேளையாக எலுமிச்சம்பழத்தின் மகிமையை விஸ்தாரமாக எடுத்துச்சொல்லிப் புரிய வைத்தீர்கள்.//

ஐயா! உங்கள் அனுபவத்துக்கு முன் இதெல்லாம் ஒண்ணுமேயில்லை!

//என்னடா கோடை காலமும் இல்லையே ஒரு சிறிய சற்று காய்ந்த பழம் 5 ரூபாயும், சாருள்ள சதைப்பத்தான, புத்தம்புதிய பழம் 10 ரூபாயும் விற்கிறதே என்று யோசித்தேன். இந்த எலுமிச்சம்பழ விலைவாசி ஏற்றத்திற்கு, உமது பதிவும் நீருமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.//

அடடா! இப்படியொரு புரளி திருச்சியிலே பரவிக்கொண்டிருப்பதாக நமது ஒற்றர் தெரிவித்தார். எல்லாம் நம்ம வை.கோ.ஐயாவின் வேலை தானா? :-)
(சும்மா ஜாலிக்கு சார்!)

//சூப்பரா நகைச்சுவையாக நல்லவே இருக்குது சேட்டை, சார். அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து அடித்தது போல ஒரே ‘கிக்’ ஏற்பட்டு விட்டது இதைப் படித்ததும். க்கான பகிர்வுக்கு நன்றி. vgk//


எல்லாம் உங்களைப் போன்ற நகைச்சுவை மன்னர்களின் இடுகைகளை வாசித்து வாசித்து இந்த வான்கோழியும் சிறகை விரித்து ஆட முயல்கிறது ஐயா!

//கருப்புக் கூலிங் க்ளாஸ் அணிந்த மஞ்சள் எலுமிச்சம்பழம் படம், சினிமா கதாநாயகி போல மிகவும் கவர்ச்சியாக பளிச்சென்று உள்ளது. பார்த்ததும் அவளின் ஹீரோவான ’ஜின்’ அவர்கள் எங்கே? என்று எண்ண வைத்தது. பாராட்டுக்கள்.//

ஹாஹா! கூகிளில் தேட ஆரம்பித்ததும் முதலில் கண்ணில் பட்டது இந்தப் படம் தான். சேட்டையாக பொருத்தமாக இருந்ததால், சுட்டு விட்டேன். ஆனால், உங்களது உவமை பிரமாதம் ஐயா!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)


//கணேஷ் said...

எலுமிச்சைப் பழத்திற்கு இன்னொரு பயனும் உண்டு. நன்றாக ரசம் வைத்து (சமரசம் அல்ல) சாப்பிடலாம். ஹா.. ஹா... இந்த விஷயத்திலும் சத்தியமூர்‌த்தி பவனையும், காங்கிரஸ் காரர்களையும் வம்பிழுத்திருக்கும் உங்கள் சேட்டையின் வெம்மை தணிய ஜுஸ் போட்டும் குடிக்கலாம்!//

சத்தியமூர்த்தி பவன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், தமிழ் நாட்டில் பாதிப்பேருக்கு நகைச்சுவை உணர்வே இல்லாமல் போயிருக்குமே? :-))

எனக்கே எலுமிச்சையா? திருநெல்வேலிக்கே அல்வாயா? சரிதான்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மயிலன் said...

கொசுத்தொகை-கவித கவித.....:)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//middleclassmadhavi said...

அரசியல் எலுமிச்சை அருமை! :-) காபிரைட் வாங்கியாச்சா?!//

இன்னும் இல்லை! ஜூஸ் ரைட் தான் வாங்கணும்! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//sudhanandan said...

ஏன் ஏன் ஏண்ணா இப்படி ?//

ரொம்ப நொந்துட்டீங்களோ? :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மாங்கனி நகர குழந்தை said...

இன்னொரு முக்கியமானது. கையில நக சுத்தி வந்த எலுமிச்சை பழம் தான் வைப்போம்.......//

ஆமாம்! ஆனா, தேர்தலுக்கு இன்னும் அஞ்சு வருசமிருகேன்னு சொல்ல்லே!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//அகல்விளக்கு said...

ஹாஹா... அட்டகாசம்....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//சைதை அஜீஸ் said...

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியாக டைம்ஸ் ஆஃப் இண்டியாவையே கடிக்க ஆரம்பிச்சுட்டாரேனு பார்த்தா,கதை அப்படி போகுதா!//

ஹிஹி! டைம்ஸ் ஆஃப் இண்டியாவை ஏற்கனவே ரெண்டு மூணு வாட்டி கடிச்சாச்சு! :-)

//வாசித்து முடித்த பிறகு, தலையில் எலுமிச்சம்பழத்தை தேய்த்து குற்றால அறுவியிலே குளித்த அனுபவம் போல இருந்தது//

ஆஹா, ஏதோ என்னால் முடிந்த சேவை என்று மகிழ்ச்சியடைகிறேன். :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//suryajeeva said...

காமடி பண்ணுகிறீர்களா? இல்ல சீரியஸா படிக்கணுமான்னு புரியாம இங்க ஒரு ட்யூப் லைட் முழிச்சிகிட்டு நிக்குது...//

அதைத் தானே 120 கோடி மக்களும் கொஞ்ச நாளா பண்ணிட்டிருக்காங்க? நானும் பல அறிக்கைகளை வாசிச்சு டியூப்-லைட்டாத் தான் இருப்பேன்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கும்மாச்சி said...

சேட்டை எலுமிச்சம்பழத்தையும் விட்டு வைக்கவில்லை. பலே பாஸ் கலக்குங்க.//

அதான் பயமாயிருக்கு! அடுத்த இடுகைக்கு என்ன பண்றதுன்னே புரியலே! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மகேந்திரன் said...

அசத்தலான நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களை உங்கள் நடையில் நல்லா சொல்லியிருக்கேங்க....//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//K.s.s.Rajh said...

அருமையான தகவல்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு எலுமிச்சைக்குள்ளே இவ்வளவு தகவல்களா...அசத்தலான தொகுப்பு...//

அத்தனையும் முத்துக்கள் நண்பரே! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//சேலம் தேவா said...

ஹா..ஹா...அருமையான சேட்டை.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! ரொம்பவும் சேட்டைதான் ! உங்கள் சின்ன வயது சேட்டைகளை எழுதவும்.//

மிக்க மகிழ்ச்சி! முயற்சிக்கிறேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//MANO நாஞ்சில் மனோ said...

பல்சுவையாக கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க சூப்பர்...!!!//

வாங்க அண்ணாச்சி! மிக்க மகிழ்ச்சி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Robin said...

:)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

இது சீரியஸா.. சேட்டையான்னு புரியல.. எதுக்கும் இருபது ரூபாய்க்கு மூணுன்னு வாங்கி வச்ச பழத்தை ஜூசு பிழிஞ்சு குடிச்சுட்டு வரேன்..//

குடிச்சிட்டு திரும்பி வராததுலேருந்தே இந்த இடுகை என்ன பாடு படுத்தியிருக்குன்னு புரிஞ்சிருச்சு!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

சேட்டை ! எப்படி உங்களால் இவ்வளவு அருமையாக, நக்கலாக ஆங்காங்கே அரசியல் குத்தலாக எழுத முடிகிறது வரிதோறும் நகைச்சுவையை வாரி வழங்கிய வள்ளலே நீர் வாழ்க! வாழ்க!//

புலவர் ஐயாவின் கவிதைகளை வாசிக்கும்போது எனக்கும் இதே கேள்வி எழுவதுண்டு ஐயா! எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆசிகள் தரும் உற்சாகம் தான்!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கோகுல் said...

அப்பப்பா!எல்லா கூத்துக்களையும் ஒரு எலுமிசைப்பழத்தில் கோர்த்துவிட்டீர்களே! கலக்கல் போங்க!//

கிடைச்ச சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டா, மொக்கை போடுவது கடினமாகி விடுமே? :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வவ்வால் said...

சேட்டை, நல்லா விரிவா, நகைச்சுவயாக பயன்களை சொல்லி இருக்கிங்க!//

மிக்க மகிழ்ச்சி!

//ஆனாலும் நம்ம ஏரியா டாஸ்மாக் மேல கை வைக்கிறதுலா எல்லாருமே ஒரு கண்ணா இருக்காங்க?//

காய்ச்ச மரம்தான் கல்லடி படும்! நீங்க அதப் பத்திக் கவலைப்படாதீங்க!

//லுமிச்ச சாறு பூசின கொசுக்கடிக்காது, டாஸ்மாக் சாறு குடிச்ச கொசு என்ன அனகோண்டா கடிச்சா கூட தெரியாது என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.//

இது பத்தி பெரிய ஆராய்ச்சியே பண்ணியிருப்பீங்க போலிருக்குதே? அவசியம் உங்களைப் பத்தி கு.மு.க தலைவர் கிட்டே சொல்லுறேன்.

//நாம எல்லாம் வாரத்தில 3 நாளாவது எலீமிச்சம் சோறு தான் சாப்பிட்டு பொழப்ப ஓட்ட வேண்டி இருக்கு, அதான் கூலா இருக்கோம்.//

இனி அதுவே தான் தினசரி உணவானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. :-)

//அப்புறம்,மீன்,சிக்கன்லாம் எலிமிச்ச சாறுல ஊறவச்சு வறுத்தா சோக்கா இருக்கும். ஹி..ஹி அப்புறம் பொண்ணுங்கள எலுமிச்ச கலருனு சொல்றாங்க அது ஏன்?//

சாமி, அடுத்த இடுகைக்கும் மேட்டர் கொடுத்திருக்கீங்களே? மிக்க மகிழ்ச்சி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//curesure4u said...

உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?//

அவ்வளவு வசதியெல்லாம் கிடையாதுங்க. எங்கே உட்கார்ந்தாலும் யோசிச்சிர வேண்டியது தான்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ரா.செழியன். said...

வாய் விட்டு சிரிக்க வைத்த குசும்பு பதிவு.எலுமிச்சை பழசாற்றில் சீரகம் கொஞ்சம் ஊறவைத்து,பின் சீரகத்தை காய வைத்து சாப்பிட்டால் நாக்கில் ”சுரணை” {சுவை}மரத்து போனவர்களுக்கு மீண்டு(ம்) வருமாம்.//

ஆஹா, புதிது புதிதாகத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளனவே! மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//முகுந்த் அம்மா said...

நக்கலாக உண்மையை சொல்லுவதில் நீங்க கில்லாடிங்க..//

வாங்க டாக்டர்! உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.

//ஆனா..இந்த உண்மைங்களை எல்லாம் எலுமிச்சம்பழத்தில சேர்த்தீங்க பாருங்க...அடா அடா புல்லரிக்குது.//

புல்லரிப்புக்கும் எலுமிச்சை நல்ல மருந்து தானாம். ட்ரை பண்ணுங்க! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

சீனுவாசன்.கு said...

எலு மிச்சம் இல்லாம பூரா சொல்லிப்புட்டீக!

உணவு உலகம் said...

படித்தேன், ரசித்தேன். அம்மாடியோவ், இம்புட்டு விஷயம் இருக்கா!

*anishj* said...

//முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா வகையறா). //

மெய்யாலுமா?

//எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம்பழமிருந்தால் துணிந்து மழைக்காலத்திலும் மாம்பலம், அசோக்நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.//

எலுமிச்சம் பழம் எதுக்கு பயன்படுதோ இல்லையோ இதுக்கு கண்டிப்பா பயன்படும் ;)

அருமையான பதிவு தலிவா !!

Anonymous said...

superb tips. but give the details separate & clear form


Watch this video Child Labor Sexually abused in india

kaialavuman said...

பதிவு (தில்லானா மோகனாம்பாள்) வைத்தி வேடம் போட்ட போது எழுதியதா?
[ப்ரொஃபைல் போட்டோவால் எழுந்த கேள்வி]

G.M Balasubramaniam said...

நான்கு நாட்கள் பதிவுலகுக்கு லீவ் போட்டுவிட்டு, இப்போது வந்து படிக்கும் முதல் பதிவு இது. எலுமிச்சையின் உபயோகங்களை பட்டியலிடும்போது கூட உங்கள் குசும்பு உங்களை விடவில்லையே. convince, confuse, corrupt, என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது இன்னும் ஒரு வியாக்கியானம் கிடைத்துள்ளது.இண்டெரெஸ்டிங் பதிவு. வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

செம சேட்டை!

ezhil said...

கலக்கலான பதிவு. உண்மைகளை வலி புரியாமல் குட்டியுள்ளீர்கள் நன்றி.

ezhil said...

உங்களின் பதிவை என் முகநூலில் பகிர்ந்துள்ளேன் நன்றி. கேஸெல்லாம் போட்டுட மாட்டீங்களே. எதுக்கும் இன்னொரு நன்றி