Tuesday, April 12, 2011

குப்பனும் சுப்பனும்

குப்பனும் சுப்பனும் நண்பர்கள்! ஒரு நாள் குப்பன் கோவிலில் ஆன்மீகச்சொற்பொழிவு கேட்கப்போனான். சுப்பன் தாசி வீட்டுக்குப்போனான். குப்பன் மனம் ஆன்மீகச்சொற்பொழிவில் லயிக்கவில்லை. மாறாக, அவன் சுப்பன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருந்தான். சுப்பனோ தாசி வீட்டில் புழுங்கிக்கொண்டிருந்தான். ’அடடா, குப்பனோடு கோவிலுக்குப் போயிருக்கலாமே? இப்படிப் பாவச்செயல் செய்து கொண்டிருக்கிறோமே?’

குப்பனும் சுப்பனும் இறந்துபோனார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் பிறந்தார்கள். ஒரு நாள்....!

"சுப்பா! மெரீனா கடற்கரைக்குப் போகலாமா? அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தை ஆதரித்து ஒரு கூட்டம் இருக்கிறது. போகலாமா?"

"குப்பா! நானும் கேள்விப்பட்டேன்! நாம போயி ஒரு ரெண்டு ரூபாய் மெழுகுவர்த்தி ஏத்தினா ஊழல் ஒழிஞ்சிடுமா? கேட்டாலே கேனத்தனமா இருக்கு! நான் படத்துக்குப் போறேன்!"

குப்பன் மெரீனா கடற்கரைக்குப் போனான். சுப்பான் சினிமாவுக்குப் போனான்.

"எடுபட்ட பய சுப்பா! தினமும் தானே சினிமா பார்க்குறே? ஒரு நாள் பாசாங்குக்காகவாவது இங்கே வந்து கூட்டத்தோட கூட்டமா நின்னிருக்கலாமே?" இது குப்பன்.

"வெவரங்கெட்ட குப்பா! இந்த லஞ்ச ஊழலையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியுமா என்ன? ஜாலியா சினிமா பார்த்திட்டு, கிரிக்கெட் பார்த்திட்டு, நுனி நாக்கு இங்கிலீஷுலே "this country sucks...." ன்னு பேசிட்டிருக்கிறதை விட்டுப்புட்டு, வேலைவெட்டியில்லாத பசங்களோட மெழுகுவர்த்தியைப் பிடிச்சிட்டிருக்கியே? so sad...."

இது நடந்த சில தினங்களில் குப்பனும் சுப்பனும் ஒரு வாக்குச்சாவடியை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவன் வாக்குப்போடலாம்; இன்னொருவன் நழுவலாம். அல்லது இருவருமே ஒத்த முடிவை எடுக்கலாம்.

ஆனால், எத்தனை காலங்கள் மாறினாலும் கோவிலும் தாசிவீடும் இருக்கும்.

மெரீனா பீச்சும், சினிமா தியேட்டரும் இருக்கும்!

குப்பனும் சுப்பனும் இருப்பார்கள் - வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ஊர்களில்! மெழுகுவர்த்திகளும் இருக்கும்! தேர்தலும் இருக்கும்!

இவர்கள் அப்போதும் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், அப்போதும் ஊழல் இருக்கும்!

இருந்துவிட்டுப்போகட்டுமே!

27 comments:

பனித்துளி சங்கர் said...

கவலையை விடுங்க தலைவா அப்பவும் நாம் இப்படி ஏதாவது ஒரு பதிவை போடுவோம் என்ன சொல்றிங்க !???

பொன் மாலை பொழுது said...

உண்மைதான், மனிதர்கள் இருக்கும் வரை இது போண்ட்ற குணங்களும் இருக்கும்தானே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாங்க சார், வாங்க, ரொம்ப நாள் ஆச்சே ஆளைக்காணுமேன்னு ஒரே கவலையாப்போயிடுச்சு. நல்ல வேளையா வந்துட்டீங்க. வரும்போதே குப்பனையும் சுப்பனையும் வேறு அழைச்சுட்டு வந்துட்டீஙக. முழுக்கப்படிச்சுட்டு திரும்ப வரேன்.

நிரூபன் said...

குப்பனும் சுப்பனும் நண்பர்கள்! ஒரு நாள் குப்பன் கோவிலில் ஆன்மீகச்சொற்பொழிவு கேட்கப்போனான். சுப்பன் தாசி வீட்டுக்குப்போனான்//

வணக்கம் சகோ, சமீபத்தில் ஆன்மிக யாத்திரை போனதன் பின் விளைவுகளா பதிவிலும் இருக்கப் போகிறது, இதோ படித்து விட்டு வருகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால், எத்தனை காலங்கள் மாறினாலும் கோவிலும் தாசிவீடும் இருக்கும்.

மெரீனா பீச்சும், சினிமா தியேட்டரும் இருக்கும்!

குப்பனும் சுப்பனும் இருப்பார்கள் - வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ஊர்களில்! மெழுகுவர்த்திகளும் இருக்கும்! தேர்தலும் இருக்கும்!

இவர்கள் அப்போதும் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், அப்போதும் ஊழல் இருக்கும்!

இருந்துவிட்டுப்போகட்டுமே!//

ஆஹா, பேஷா, இருந்துவிட்டுப்போகட்டும்.
நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

நிரூபன் said...

குப்பன் மனம் ஆன்மீகச்சொற்பொழிவில் லயிக்கவில்லை. மாறாக, அவன் சுப்பன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருந்தான்.//

மனம் ஒரு குரங்காம், இது ஒரே நேரத்தில் பல விடயங்களைச் சிந்திக்கும் என்று கூறுவார்கள்... பல இடங்களை நோக்கி அலை பாயும் என்று கூறுவார்கள்.

rajamelaiyur said...

Nenga kuppana ? Suppana?

rajamelaiyur said...

Nan than first a?

MANO நாஞ்சில் மனோ said...

வடை துன்னுட்டு வாரேன்....

நிரூபன் said...

குப்பனும் சுப்பனும் இறந்துபோனார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் பிறந்தார்கள். ஒரு நாள்....!//

ஆன்மிக விடயத்தை, ஜல்சாவுடன் சேர்த்து கில்மாவாக ஊட்டுவீர்கள் என நினைத்தால் இவ் இடத்தில் ஒரு திருப்பத்தைத் தந்து விட்டீர்கள் சகோ. இனித் தான் மெயின் பிக்சரே ஆரம்பமாகிறது போலும்.

நிரூபன் said...

"எடுபட்ட பய சுப்பா! தினமும் தானே சினிமா பார்க்குறே? ஒரு நாள் பாசாங்குக்காகவாவது இங்கே வந்து கூட்டத்தோட கூட்டமா நின்னிருக்கலாமே?"//

ஹி...ஹி... இவ் இடத்தில் பயங்கர உள் கூத்துக்கள் நிறைந்திருக்கிறது, பூடகமாகப் பல விடயங்களைச் சொல்லுகிறீர்கள்.

வேண்டியும் வேண்டாதவர்களாய் ஒரு தடவை போய் தம்மை இனங் காட்டி விட்டு வர நினைப்போரை துவைத்திருக்கிறீர்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

அடடடா செமையா சொல்லிட்டீங்க போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லியில இணச்சி விடுங்க...

நிரூபன் said...

இவர்கள் அப்போதும் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், அப்போதும் ஊழல் இருக்கும்!//

இப்போது பதிவினைப் பார்த்தால், மையக் கருத்தாகிய லஞ்சம் மனித மனங்களில் மாற்றம் வராத வரை என்றுமே எம்மிடம் நிலைத்திருக்கும் என்பதனை ஒரு அழகிய கதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள்.

மனித மனங்களில் தனி நலம் கருத்தாத பொது நலம் எப்போது ஏற்படுகிறதோ அப்போது தான் லஞ்சம் ஒழிக்கப்படும்,இதுவே யதார்த்தம்.

நிரூபன் said...
This comment has been removed by the author.
Speed Master said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க

Aba said...

என்ன சார் உங்க வெப்சைட் ஒருவாரமா ஓபன் ஆகல? ஏதும் பிரச்சனையா? உங்க ப்ராபைல்லையும் அட்ரெஸ் எடுத்துட்டீங்களே? என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்... என்னாச்சு?

Unknown said...

ஏன் பாஸ் இன்ட்லியில் என்ன பிரச்சனை??
மொக்கை குசும்பனுக்கு ஒட்டு போடா முடியவில்லை மொக்கை பாஸ் ஹிஹி

வெங்கட் நாகராஜ் said...

பயணம் முடிந்து திரும்பி தெம்புடன் வந்தது தெரிகிறது பதிவில். பயணம் பற்றி எழுதுங்கள் சேட்டை.

vasu balaji said...

short and sweet:)

பெசொவி said...

குப்பன் ப்ளாக் எழுதறதும், சுப்பன் கமெண்ட் போடறதும்...................இந்த மாதிரிதானே சொல்ல வர்றீங்க?

ஈரோடு கதிர் said...

||இருந்துவிட்டுப்போகட்டுமே!||


இருக்கவேண்டாம்னு சொல்ல முடியுமா என்ன?

middleclassmadhavi said...

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி யோசித்தால் அப்புறம் மனிதர்களுக்கும் ஆட்டு மந்தைக்கும் என்ன வித்தியாசம்?!!!
படம் நல்லாயிருக்கு!!

Bharathi Adipodi said...

ஒரு வாரமா உங்க ப்ளாக் ப்ளாக் அவுட ஆகியிருந்ததே, என்ன விசயம்? உங்கள் நையாண்டி தாங்காமல் அரசியல்வாதிகள் மறைத்துவிட்டார்களோ என்று தோன்றியது.

sudhanandan said...

அல்லாமே ட்ரூத்தான் தல...........

settaikkaran said...

@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫
@கக்கு - மாணிக்கம்
@வை.கோபாலகிருஷ்ணன்
@நிரூபன்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@MANO நாஞ்சில் மனோ
@Speed Master
@கரிகாலன்
@மைந்தன் சிவா
@வெங்கட் நாகராஜ்
@வானம்பாடிகள்
@பெசொவி
@ஈரோடு கதிர்
@middleclassmadhavi
@Bharathi Adipodi
@sudhanandan

பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர, சகோதரிகளே! கொஞ்சம் பணிப்பளு காரணமாக, வலைப்பக்கம் வர முடியாமல் போனதால், தனித்தனியாக உங்களது கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இனிவரும் இடுகைகளுக்கு சரியாக பதிலளிப்பேன் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு உறுதியளிக்கிறேன்.

(இதையே அடுத்த பதிவுக்கும் பதிலாகப் போடப்போறேன் என்பது தான் விசேஷம்! கோவுச்சுக்காதீங்க! ஆணி ரொம்பவே அதிகம்!)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
spoken english material
Learning Books for spoken english
Learning Spoken english materials
Learning Spoken english from home
Home study English
English home study pack
English training books
Spoken English Study Pack
Spoken English training pack
Spoken English self study