Friday, March 25, 2011

சமூகப்பருப்பு

இன்று காலையில் கண்விழித்ததுமே நான் ஒரு உறுதியோடுதான் எழுந்தேன். "கூகிள் சும்மாக் கொடுத்திட்டா இப்படியா மொக்கை போடுவே? சமூகத்துக்கு ஏதாச்சும் செய்ய வேண்டாமா?" என்று பத்துவருசத்துக்கு முன்னாலே செத்துப்போன என்னோட பாட்டி புதுசா பல்செட் மாட்டிக்கிட்டு வந்து கனவுலே திட்டினாங்க! அதுனாலே, தினமும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு நன்மையாவது செய்யாமல் தூங்கக்கூடாதுன்னு கஜேந்திரன் டீ ஸ்டால் வாசலிலே சபதம் மேற்கொண்டேன். தினமும் ஒரு நல்ல காரியமாவது செய்யணும். சமூகத்துக்கு எதையாவது செய்யணும். என்ன செய்யலாம்? எவன் மாட்டுவான்...?

யோசனையோடு டீக்கடையிலேருந்து நடக்க ஆரம்பிச்சபோது, எதிரே ஒரு பஜாஜ் எம்-80 யிலே பின்னாடி நிறைய நியூஸ்பேப்பர் கட்டுக்களை வச்சுக்கிட்டு ஒரு அண்ணாச்சி வந்திட்டிருந்தாரு. அவர் வண்டியிலே ஹெட்-லைட் இன்னும் எரிஞ்சிட்டிருந்தது.

"ஐயகோ, பகல் ஏழுமணிக்கு ஹெட்-லைட் போட்டுக்கிட்டுப் போறாரே? எதிர்ப்பக்கத்துலேருந்து வர்றவனுக்குக் கவனம் பிசகுமே? ஆக்ஸிடெண்ட் ஆக வாய்ப்பிருக்கே? சமூகப்பொறுப்பு...சமூகப்பொறுப்பு!"

"அண்ணாச்சி!" என்று கையசைத்தேன். "வண்டி லைட்டு எரியுது பாருங்க. அணைச்சிட்டு ஓட்டுங்க!"

தேர்தல் பிரசாரத்துக்குப் போன டிவி சீரியல் நடிகை மாதிரி நான் கையசைக்கவும், அண்ணாச்சி வேகத்தைக் குறைத்து, புரிந்து கொண்டு ஹெட்-லைட்டை அணைத்துவிட்டு, லுங்கி கட்டிய சினேகா போல புன்னகைத்து விட்டுப்போனார். அப்பாடா, என் பங்குக்கு சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய டீயை, அதாவது சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றிவிட்டேன். இத்தோடு விடுவதா? அடுத்த கடமை எங்கே?? சமூகப்பொறுப்பு.!! சமூகப்பொறுப்பு...!!

அலுவலகத்துக்குக் கிளம்பினேன். வழியில் எங்காவது சமூகக்கடமையாற்ற வாய்ப்பிருக்கிறதா என்று நான் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனபோது அந்த சின்னப்பையன்..ஐயோ, வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து விழுந்த பந்தை எடுப்பதற்காக இப்படித் தலைதெறிக்க ஓடி வருகிறானே! எதிர்த்திசையில் குப்பைலாரி வந்து கொண்டிருக்கிறதே! ஒரே ஜம்ப்ப்பு.....!

"என்ன தம்பி இப்படியா ஓடிவருவே? நான் மட்டும் பிடிக்கலேன்னா என்னாயிருக்கும்?"

"ஙொய்யால, என்னைக் காப்பாத்தினது இருக்கட்டும். பந்து லாரி டயருலே நசுங்கிருச்சே! எங்கப்பன் கிட்டே எப்புடிக் காசு கேப்பேன்?"

லாரியில் அடிபட்ட பந்தையும் என் மூஞ்சியையும் ஒரே மாதிரி பார்த்தவாறே அந்தச் சிறுவன் வீட்டுக்குள் திரும்பினான். ஒரு சின்னப்பையன், இப்படிப் பேசிட்டானே? போகட்டும், நாம சமூகத்துக்கு இன்னிக்கு ரெண்டாவது கடமையை ஆற்றியாச்சு! அது தான் முக்கியம்! பாட்டி, உங்க பேராண்டியோட தொண்டைப் பார்த்துட்டு பெருமைப்படுவீங்கதானே?

இப்படியே தினசரி ரெண்டு கடமை செஞ்சாப்போதும். சண்டேயன்னிக்கு ஒருநாள் ஹாலிடே விட்டிரலாம் - என்று முடிவெடுத்தேன். ஆனால், மாலை ........

வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி ஸ்கூட்டியில் எதிரே வந்து கொண்டிருந்தார். அவர் வண்டியை எடுக்கும்போது ஸ்டாண்டை சரியாக நீக்கவில்லை போலிருக்கிறது; அது சாலையை ஏறத்தாழ உரசியபடி மிகவும் தாழ்ந்திருந்தது. ஐயையோ, வண்டி திரும்பும்போது ஸ்டாண்டு சாலையோடு உராய்ந்தால் குடைசாய்ந்து தலைகுப்புற விழ வேண்டி வருமே! சமூகப்பொறுப்பு...சமூகப்பொறுப்பு...!

"மேடம்..மேடம்..மேடம்! ஸ்டாண்டு! ஸ்டாண்டு!"

அந்த அம்மணி என்னைக் கடந்தவாறே திரும்பிப்பார்த்து, நான் சொல்வது புரியாமல், கிட்டத்தட்ட என்னை மாதிரியே பேந்தப்பேந்த விழிக்க, இந்தக் களேபரத்தில் எதிரே வந்த காய்கறிவண்டியும் ஸ்கூட்டியும் மோத....

"நான் பாட்டுக்குப் போயிட்டிருந்தேன். இந்த ஆளுதான் கத்திக் கூப்பிட்டான். திரும்பிப் பார்த்தேன். எதிரே வண்டி வந்ததைக் கவனிக்கலே!" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி சிட்டாகப் பறந்தாள்.

"ஏண்டா டேய்.....!" என்னை நோக்கி ஒரு கூட்டம்.......

எப்போது மயக்கமடைந்தேன், எப்படி.....

"பாட்டி! கடைசியிலே ஒன் கிட்டேயே வந்திட்டேன் பாட்டி!"

"மிஸ்டர் சேட்டை! கேன் யூ ஹியர் மீ? மிஸ்டர் சேட்டை!"

"யாரு இங்கிலீஷ்லே பேசறது?" முணுமுணுத்தேன். "அப்ப நான் இன்னும் சாகலியா?"

"நோ மிஸ்டர் சேட்டை! நீங்க அம்பேலோ ஆஸ்பத்திரியிலே இருக்கீங்க!"

"அப்ப கண்டிப்பா செத்திருவேன்!"

"உங்களை யாரோ அடிச்சுப்போட்டுட்டாங்க, நாங்கதான் ஆம்புலன்ஸ்லே அள்ளிப்போட்டுக்கிட்டு வந்தோம். இப்போ எப்படியிருக்கு!"

"ரொம்ப பயமாயிருக்கு டாக்டர், எனக்கு சொத்துபத்து கூட கிடையாது!"

"பயப்படாதீங்க சேட்டை, எங்களுக்கும் சமூகப்பொறுப்பு இருக்கு!"

"நிறுத்துய்யா," என்று கூவினேன். "எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"

பட உதவி: கூகிள் சமூகம்

49 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை?

சி.பி.செந்தில்குமார் said...

>>>நீங்க அம்பேலோ ஆஸ்பத்திரியிலே இருக்கீங்க!"


haa haa ஹா ஹா இங்கே தான் நிக்கறான் சந்திரன்

சி.பி.செந்தில்குமார் said...

>>"எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"

சேட்டை அண்ணன் யாரையோ தாக்கரார்னு தெரியுது... ஆனா யாரைன்னு தெரியல... உள்குத்து ஹா ஹா செம...

பொன் மாலை பொழுது said...

//"எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"//

மறுபடியும் அடி விழும். கொஞ்சமாவது சமூக பொறுப்பு இல்லாம இப்டியா பேசறது?

Anonymous said...

இப்போ மட்டும் நீங்க ரொம்ப நல்லவான அண்ணாச்சி !!! ஹிஹிஹி !!!

ராஜகோபால் said...

சேட்டைக்கு ரொம்பதான் சேட்ட!

ஜெய்லானி said...

ஆஹா..சேட்டையின் உள்குத்து புரியுது ..!! நமக்கு எப்பவும் மொக்கைதான் சரிப்படும் நீங்க கலக்குங்க :-))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் இறந்துபோன பாட்டியும் பல்செட் அணிந்து நள்ளிரவில் என்னை அறைந்து எழுப்பி, சமூகப்பொறுப்பு இல்லாமல் இப்படித்தூங்குகிறாயே, சமூகப்பொறுப்பு வந்துள்ள சேட்டையைப்பார் என்றாள்.

மணி அதிகாலை 3 ஆனது. டேஷ் போர்டில் சேட்டை எதோ பருப்பு என்ற தலைப்புடன்.

ராத்திரி வேளையில் பருப்பு என்றால் ருசிக்க எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

தப்பா நினைக்காதீங்க... வறுத்த முந்திரிப்பருப்பைத்தான் சொன்னேன்.

படுக்கையில் படுத்தபடியே லேப்டாப்பில் படித்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

சிரித்ததில் கட்டிலில் இருந்து அப்படியே விழுந்து விட்டேன்.

நானும் இப்போது அம்பேலா அல்லது அப்பேலா ஆஸ்பத்தரியிலா தெரியவில்லை.

[என் ஒரே சொத்தும் நம் சேட்டை மட்டும் தான்.]

என் மயக்கம் தெளிந்தால் தான் தெரியும்.

இதற்கிடையில் என் பாட்டியும், புதிய பல்செட் தாத்தாவுக்கு வாங்கிப்போகணும் என்று என் பர்ஸிலிருந்து பணத்துடன் எஸ்கேப்.

பருப்பு சுவைக்க ஜோராய் இருந்திச்சு.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
தொடரட்டும் சமூகப்பருப்பும், பொறுப்பும்.

Chitra said...

"நோ மிஸ்டர் சேட்டை! நீங்க அம்பேலோ ஆஸ்பத்திரியிலே இருக்கீங்க!"

"அப்ப கண்டிப்பா செத்திருவேன்!"

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.....சமூக லொள்ளு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

"நிறுத்துய்யா," என்று கூவினேன். "எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"

எனக்கும் இதுல ஏதோ இன்சைட் பன்ச் ( உள்குத்து ) இருக்கும்னு தான் தோணுது!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த ஸ்கூட்டியில் வந்த பெண்மணிக்கு உதவ (சமூகத்தின் பருப்பைப்பார்க்க)நீங்கள் எப்படிச்செயல் பட்டிருக்கணும்னா:

அவளின் முன்னே சினிமா ஹீரோ போலப்பாய்ந்து அவளை நிறுத்தி,

டக்குணு அவளுக்குக் கீழே குனிந்து,
ராடை (ROD) உங்கள் கையிலே பிடித்து, ஒரே தூக்காத்தூக்கி, விட்டுருக்கலாம்.***

விபத்தில்லாம வேலையே முடிஞ்சிருக்கும். வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு அம்பேலாயிட்டீங்களே!

[***நான் சொன்னது ஸ்கூட்டி ஸ்டாண்ட் ராடை(Rod)த்தாங்க]

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா இதற்குப்பேர்தான் சமூகப்பொறுப்பா?..

எல் கே said...

சேட்டை, உன் சேட்டை தாங்கலை

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை?//

ஆமா தல...வாங்க! :-)

>>>நீங்க அம்பேலோ ஆஸ்பத்திரியிலே இருக்கீங்க!"//

//haa haa ஹா ஹா இங்கே தான் நிக்கறான் சந்திரன்//

அங்கேயே நின்னுக்கிட்டிருக்காம நகர்ந்தா சரிதான்! :-)

//சேட்டை அண்ணன் யாரையோ தாக்கரார்னு தெரியுது... ஆனா யாரைன்னு தெரியல... உள்குத்து ஹா ஹா செம...//

ஐயையோ, கனவுலே வந்து பொறுப்பாயிருன்னு சொன்னது என் சொந்தப்பாட்டி தல! யாராவது பாட்டியைத் தாக்குவாங்களா? :-)

மிக்க நன்றி தல..!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

மறுபடியும் அடி விழும். கொஞ்சமாவது சமூக பொறுப்பு இல்லாம இப்டியா பேசறது?//

இப்படி யாராவது கேப்பீங்கன்னு தெரிஞ்சுதானே நான் ’சமூகப்பருப்பு’ன்னு தலைப்பு வச்சிருக்கேன். இப்போ என்ன செய்வீங்க? :-)))))

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//இக்பால் செல்வன் said...

இப்போ மட்டும் நீங்க ரொம்ப நல்லவான அண்ணாச்சி !!! ஹிஹிஹி !!!//

ஐயையோ, நான் படுமோசமானவனுங்க! நேத்துத்தான் திஹார் ஜெயில்லேருந்து ரிலீஸ் பண்ணினாங்க. தப்பித்தவறி யாராச்சும் என்னையெல்லாம் நல்லவங்க லிஸ்டுலே சேர்த்திராதீங்க. அப்புறம் கஷ்டம் உங்களுக்குத்தான்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//ராஜகோபால் said...

சேட்டைக்கு ரொம்பதான் சேட்ட!//

ஹிஹி, அதுனாலேதான் சேட்டை சேட்டையா இருக்கான்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஜெய்லானி said...

ஆஹா..சேட்டையின் உள்குத்து புரியுது ..!! நமக்கு எப்பவும் மொக்கைதான் சரிப்படும் நீங்க கலக்குங்க :-))))//

ஆஹா, எம்புட்டு நாளாச்சு உங்களை இங்கே பார்த்து? உள்குத்து-வெளிக்குத்து எதுவும் இல்லீங்க! இது வழக்கமான மொக்கைதான்! :-)

மிக்க நன்றி!

john danushan said...

அசத்திட்டிங்க சேட்ட

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

என் இறந்துபோன பாட்டியும் பல்செட் அணிந்து நள்ளிரவில் என்னை அறைந்து எழுப்பி, சமூகப்பொறுப்பு இல்லாமல் இப்படித்தூங்குகிறாயே, சமூகப்பொறுப்பு வந்துள்ள சேட்டையைப்பார் என்றாள்.//

ஆஹா, எல்லாப் பாட்டிகளும் இப்படித்தான் இருப்பாங்க போலிருக்கு! :-))

//மணி அதிகாலை 3 ஆனது. டேஷ் போர்டில் சேட்டை எதோ பருப்பு என்ற தலைப்புடன். ராத்திரி வேளையில் பருப்பு என்றால் ருசிக்க எனக்கு ரொம்பப்பிடிக்கும். தப்பா நினைக்காதீங்க... வறுத்த முந்திரிப்பருப்பைத்தான் சொன்னேன்.//

புரியுது புரியுது! :-) எனக்கும் வறுத்தது எதுவாயிருந்தாலும் பிடிக்கும். எங்க கிராமத்துலே புளியங்கொட்டையை வறுத்து நிஜார் பாக்கெட்டுலெ போட்டுக்கிட்டு சுத்தினதுண்டு. :-)


//படுக்கையில் படுத்தபடியே லேப்டாப்பில் படித்ததும் விழுந்து விழுந்து சிரித்தேன்.சிரித்ததில் கட்டிலில் இருந்து அப்படியே விழுந்து விட்டேன்.//

அடடா, எழுந்திரிச்சிட்டீங்களா இல்லையா? வ.வ.ஸ்ரீக்கு அடுத்தபடியா என்ன தொடர் எழுதப்போறீங்கன்னு நாங்கல்லாம் எழுச்சியோட காத்திட்டிருக்கோம். :-)

//நானும் இப்போது அம்பேலா அல்லது அப்பேலா ஆஸ்பத்தரியிலா தெரியவில்லை.//

த்சு..த்சு..த்சு! கெவுளிச்சத்தமில்லை; என்னுதுதான். :-)

//[என் ஒரே சொத்தும் நம் சேட்டை மட்டும் தான்.]//

புல்லரிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு ஃபுல்லா புல்லரிச்சிட்டதுங்க! :-))

//என் மயக்கம் தெளிந்தால் தான் தெரியும்.//

தெளிய வச்சிரலாம். அடுத்த பதிவு வரும் பாருங்க!

//இதற்கிடையில் என் பாட்டியும், புதிய பல்செட் தாத்தாவுக்கு வாங்கிப்போகணும் என்று என் பர்ஸிலிருந்து பணத்துடன் எஸ்கேப்.//

தாத்தா?? யூ டூ தாத்தா?? என்று கேளுங்க!

//பருப்பு சுவைக்க ஜோராய் இருந்திச்சு.//

அதுனாலேதான் அதுக்குப் பேரு பருப்பு! :-)

//வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் சமூகப்பருப்பும், பொறுப்பும்.//

மிக்க நன்றி!

settaikkaran said...

//Chitra said...

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.....சமூக லொள்ளு!//

வாங்க சகோதரி, விடுமுறையெல்லாம் நல்லபடியாகக் கழிஞ்சுதா? மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//எனக்கும் இதுல ஏதோ இன்சைட் பன்ச் ( உள்குத்து ) இருக்கும்னு தான் தோணுது!!//

அப்போ உள்குத்து வைச்சு எழுதற அளவுக்கு எனக்கு வீக்கம், அதாவது வளர்ச்சி வந்திருச்சின்னு நினைக்கறீங்களா? சர்தானுங்க! :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த ஸ்கூட்டியில் வந்த பெண்மணிக்கு உதவ (சமூகத்தின் பருப்பைப்பார்க்க)நீங்கள் எப்படிச்செயல் பட்டிருக்கணும்னா://

சொல்லுங்க, குறிச்சு வைச்சுக்கிறேன். திரும்பவும் காய்ச்சல் வராதுன்னு என்ன நிச்சயம்?

//அவளின் முன்னே சினிமா ஹீரோ போலப்பாய்ந்து அவளை நிறுத்தி,//

யாரு? நானு....? சினிமா ஹீரோ மாதிரி...? சர்தான்...!

//டக்குணு அவளுக்குக் கீழே குனிந்து,ராடை (ROD) உங்கள் கையிலே பிடித்து, ஒரே தூக்காத்தூக்கி, விட்டுருக்கலாம்.***//

நல்ல யோசனை, அப்படிப் பண்ணியிருந்தா அனேகமா இந்த இடுகையைப் போட எனக்குக் கையே இருந்திருக்காதோ?

//விபத்தில்லாம வேலையே முடிஞ்சிருக்கும். வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு அம்பேலாயிட்டீங்களே!//

தப்புப்பண்ணிட்டனே! :-((

//[***நான் சொன்னது ஸ்கூட்டி ஸ்டாண்ட் ராடை(Rod)த்தாங்க]//

அதுவும் புரிஞ்சுக்கிட்டேன்! :-))

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பட்டாபட்டி.... said...

ஹா..ஹா இதற்குப்பேர்தான் சமூகப்பொறுப்பா?..//

வாங்கண்ணே, வாங்க! :-))

அனேகமா ஏறக்குறைய இதுவாத்தான் இருக்குமுன்னு குத்துமதிப்பா எழுதியிருக்கேண்ணே! :-)
மிக்க நன்றிண்ணே!

settaikkaran said...

//எல் கே said...

சேட்டை, உன் சேட்டை தாங்கலை//

அப்படியா கார்த்தி? :-)
அடுத்தவாட்டி கொஞ்சம் கொறச்சுக்கிறேன். :)

நன்றி கர்ர்த்தி!

settaikkaran said...

//john danushan said...

அசத்திட்டிங்க சேட்ட//

மிக்க நன்றி நண்பரே! :-))

Ponchandar said...

இதோ நானும் சமூக பொறுப்புள்ளவனாக மாறிட்டேன்.... என்னை "லோ"கிரவுண்ட்(பாளையங்கோட்டை)-ல் வந்து சந்திக்கவும்

Unknown said...

சமூகப்பருப்பு வேகிரும்...

Unknown said...

வணக்கம் பாஸ்....
நல்லா மொக்கை போடுறீங்க...
உங்க கிட்ட இருந்து கொஞ்ச ஆசீர் வாதம் அனுப்பி வையுங்க...
அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

Anonymous said...

// "எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"//

சூப்ப்ப்பர்!!!

சமூக பொறுப்பு மிக்க பதிவு எழுதிய சேட்டைக்கு சென்னையில் விருப்பப்பட்ட தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிந்தாலும் இன்று உங்களுக்காக ஒரு நாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தலைவா..சமூகம் காக்க சுனாமியாக சீறி வா! பினாமியாக இருக்க நாங்க ரெடி!!

Jey said...

பாட்டிய தொனைக்கி வச்சிகிட்டு, உள்குத்து, வெளிக் குத்து, நடுக்குத்து, சைடு குத்துனு எல்லாகுத்தையும் சரியாக் குத்தினாமாறி இருக்குதே சேட்டை...

இருந்தாலும் இந்த குத்து ரொம்பப் பிடிச்சிருக்கு சேட்டை( நம்ம பங்குக்கு உசிப்பேத்தியாச்சு...)

sudhanandan said...

எனக்கும் சமூக பொறுப்பு வந்துடுச்சு.....

Anonymous said...

என்ன சேட்டை அண்ணே... இதுக்கெல்லாம் பயந்து சமுக சேவை செய்றதை நிறுத்துனா எப்படி?

உயிர் போகும் வரை செய்ய வேண்டும் நம் அரசியல்வாதிகளை போல... சமூக சேவையை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிகொடுத்த சேட்டையே அம்பேலாவுல இருக்காருன்னா அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"நிறுத்துய்யா," என்று கூவினேன். "எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"//////

அப்போ துவரம்பருப்பு, பாசிப்பருப்புன்னு பேச போறாங்க.....

settaikkaran said...

//Ponchandar said...

இதோ நானும் சமூக பொறுப்புள்ளவனாக மாறிட்டேன்.... என்னை "லோ"கிரவுண்ட்(பாளையங்கோட்டை)-ல் வந்து சந்திக்கவும்//

ஹைகிரவுண்டுலே ஆஸ்பத்திரி! பாளையங்கோட்டைலே ரொம்ப ஃபேமஸான இடமில்லே இருக்குது?? :-)))

(பஸ் ஸ்டாண்டை சொன்னேன்!)

நன்றி நண்பரே!

settaikkaran said...

//மைந்தன் சிவா said...

சமூகப்பருப்பு வேகிரும்...//

வேகிரும்...? வேகுமா...? வேகணும்! :-)

//வணக்கம் பாஸ்....நல்லா மொக்கை போடுறீங்க...உங்க கிட்ட இருந்து கொஞ்ச ஆசீர்வாதம் அனுப்பி வையுங்க... //

என்கிட்டே ஆசீர்வாதமா கேட்கறீங்க? சரி, உங்களுக்கே இப்படியொரு விபரீத ஆசை இருந்தா நான் என்ன பண்ண? பிடிங்க ஆசீர்வாதம்! :-))

//அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??//

ஊஹும்! எப்போ வேண்ணாலும் வாங்க, போதும்...!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

சூப்ப்ப்பர்!!! சமூக பொறுப்பு மிக்க பதிவு எழுதிய சேட்டைக்கு சென்னையில் விருப்பப்பட்ட தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. //

எனக்கு அனேகமா கண்ணம்மாபேட்டை தான்! :-)

//வேட்பு மனு தாக்கல் முடிந்தாலும் இன்று உங்களுக்காக ஒரு நாள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தலைவா..சமூகம் காக்க சுனாமியாக சீறி வா! பினாமியாக இருக்க நாங்க ரெடி!!//

ஆஹா, கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Jey said...

பாட்டிய தொனைக்கி வச்சிகிட்டு, உள்குத்து, வெளிக் குத்து, நடுக்குத்து, சைடு குத்துனு எல்லாகுத்தையும் சரியாக் குத்தினாமாறி இருக்குதே சேட்டை...//

செத்துப்போன பாட்டியை தொணைக்கு வச்சுக்கிட்டு இத்தனை குத்து குத்துனா சாமி கண்ணக்குத்திராது? அதெல்லாம் பண்ண மாட்டேங்கோய்...! :-))

//இருந்தாலும் இந்த குத்து ரொம்பப் பிடிச்சிருக்கு சேட்டை( நம்ம பங்குக்கு உசிப்பேத்தியாச்சு...)//

ஏற்கனவே இங்கே ரணகளம்தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//sudhanandan said...

எனக்கும் சமூக பொறுப்பு வந்துடுச்சு.....//

மெய்யாலுமா? சரி, நீங்க எடுக்கிற முடிவுக்கெல்லாம் கம்பனி பொறுப்பேற்கவா முடியும்? :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//'அ'னா 'ஆ'வன்னா said...

என்ன சேட்டை அண்ணே... இதுக்கெல்லாம் பயந்து சமுக சேவை செய்றதை நிறுத்துனா எப்படி?//

இதுக்கே பயப்படலேன்னா வேறே எதுக்குத்தான் பயப்படுறதாம்? :-)

//உயிர் போகும் வரை செய்ய வேண்டும் நம் அரசியல்வாதிகளை போல... சமூக சேவையை...//

இது பேச்சு! அப்போ அடுத்த மந்திரிசபையிலே எனக்கும்...ஹிஹி, என்ன, ஓ.கேவா?

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடிகொடுத்த சேட்டையே அம்பேலாவுல இருக்காருன்னா அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்...?//

பானா ராவன்னா, நீங்களும் மத்தவங்க மாதிரியே உசுப்பேத்தறீங்களே? :-)

//அப்போ துவரம்பருப்பு, பாசிப்பருப்புன்னு பேச போறாங்க.....//

நம்ம கோபு சார் முந்திரிப்பருப்பு பத்தியே பேசிட்டுப்போயிட்டாரே? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

vasu balaji said...

வரிக்கு வரி கட் பேஸ்ட் போட்டு சிலாகிச்சா மத்தவங்களுக்கு பின்னூட்டம் போட கஷ்டம் அப்படிங்கற சமூகப் பருப்போட சபாஷ்னு மட்டும் சொல்லிக்கிறேன்.:))

ரிஷபன் said...

சமூகப் பருப்பை இனி வருடாந்திர சாமான் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டியதுதான்..

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

வரிக்கு வரி கட் பேஸ்ட் போட்டு சிலாகிச்சா மத்தவங்களுக்கு பின்னூட்டம் போட கஷ்டம் அப்படிங்கற சமூகப் பருப்போட சபாஷ்னு மட்டும் சொல்லிக்கிறேன்.:))//

ஐயா! அண்டர்ஸ்டுட்...! :-)) உங்க சபாஷுக்கே ஒரு சபாஷ் சொல்லிக்கிறேன்! :-)
மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//ரிஷபன் said...

சமூகப் பருப்பை இனி வருடாந்திர சாமான் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டியதுதான்..//

நல்ல யோசனைதான். யாராவது ரேஷன் கடையிலே மலிவுவிலைக்குத் தர்றதா சொன்னாலும் சொல்லுவாங்க! மிக்க நன்றி! :-)

நிரூபன் said...

கஜேந்திரன் டீ ஸ்டால் வாசலிலே சபதம் மேற்கொண்டேன். தினமும் ஒரு நல்ல காரியமாவது செய்யணும். சமூகத்துக்கு எதையாவது செய்யணும். என்ன செய்யலாம்? எவன் மாட்டுவான்...?//

வணக்கம் சகோதரம் சேட்டை! எப்படி நலமா? பதிவின் ஆரம்பமே செம கடியாகத் தான் இருக்கு, ஒரு நோக்கத்தோடை அலையுற ஆட்களை நோண்டி எடுக்கிறது என்றே புறப்பட்டிருக்கிறீங்க.

நிரூபன் said...

தேர்தல் பிரசாரத்துக்குப் போன டிவி சீரியல் நடிகை மாதிரி நான் கையசைக்கவும், அண்ணாச்சி வேகத்தைக் குறைத்து, புரிந்து கொண்டு ஹெட்-லைட்டை அணைத்துவிட்டு, லுங்கி கட்டிய சினேகா போல புன்னகைத்து விட்டுப்போனார். அப்பாடா, என் பங்குக்கு சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய டீயை, அதாவது சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றிவிட்டேன். இத்தோடு விடுவதா? அடுத்த கடமை எங்கே?? சமூகப்பொறுப்பு.!! சமூகப்பொறுப்பு...!!//

சகோ, பூடகமாகச் சொல்லும் உங்களின் மொழிக் கையாள்கையும், கருத்துப் படமும் நிறையக் கருத்துக்களைச் சொல்லுகின்றன. இந்தப் பதிவினை விமர்சிக்கலாம். ஆனால் எனக்கு செருப்பு மாலை போட இன்னொரு பதிவு தயாராகி விடும். நம்மளுக்கு நீங்க சொல்ல வாறது என்னான்னு புரியுது சேட்டை. Take it easy.
லுங்கி கட்டிய சினேகா!

இதிலை இலக்கிய நயம் மட்டுமல்ல. உவமான உவமேயங்கள் எனப்படும் அணியும் இருக்கு. அதோடை இலக்கிய நயமும் விரவிக் கிடக்குது. நீங்க ரொம்ப பெரியாளாகிட்டீங்க.
இந்த நாற்றுச் சிறுவன் வாழ்த்துகிறேன்!

நிரூபன் said...

"பயப்படாதீங்க சேட்டை, எங்களுக்கும் சமூகப்பொறுப்பு இருக்கு!"

"நிறுத்துய்யா," என்று கூவினேன். "எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"//

சமூகத்திற்குத் தேவையான பதிவு. அதுவும் உதவி செய்யப் போய் உபத்திரத்தில் மாட்டுவோர்களை எள்ளி நகையாடி, கிண்டலடித்துள்ளீர்கள். ரசித்தேன். புது மாதிரியான சிந்தனை.
டெம்பிளேட் கொமென்ஸை தவிர்க்க வேண்டும் என்பதால் ஐ ஆம் சோ லேட்.