Sunday, January 16, 2011

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

சினிமா விரும்பிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாமா? செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் பழையது முதல் புதியது வரை, பல்வேறு மொழிகளில் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு; பிறர் சொல்லக் கேட்டு, விசாரித்து வாங்கிவந்து வீட்டிலேயே டி.வி.டியில் பல படங்களைப் பார்க்கிற வசதி. இதுவும் போக, உபரி சவுகரியமாக, இருபது ரூபாய்க்கு திருட்டு டிவிடிக்கள் வேறு! அப்புறம் இருக்கவே இருக்கிறது இணையதளங்கள், டோரண்டுகள்!

ஆனால், இவற்றில் சரிபாதி வசதிகளும் இல்லாத காலத்தில் வெளிவந்த பல படங்களும், அந்தப் படங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் படைத்த வரலாறுகளும், அதன் நாயகர்களும் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நம்மோடு அவ்வப்போது உரசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. அதில் நமக்கு மிகவும் அன்னியோன்னியமானவர் ஒருவர் உண்டேன்றால், அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று தைரியமாகச் சொல்லலாம்.

நேர்மறையான ஆற்றல் (Positive Energy) என்ற உந்துசக்தியை நமக்குள் உருவாக்க பலவழிகள் கூறப்பட்டுள்ளன:

தியானம் செய்; சகமனிதனை மதித்துவாழ்; தளைகளை அறுத்தெறி; நல்லதையே பார்; அமைதியை விரும்பு; கவலை தவிர்...இன்னும் எத்தனையோ? இது குறித்துத் தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்? என்னென்ன வியாக்கியானங்கள்? பலருக்கு இவை புரியாமல், கைக்கெட்டாமல் இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு எல்லாரும் அறிந்த ஒரு உதாரணத்தை சட்டென்று சொல்வதென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் என்று துணிந்து அடித்துக் கூறிவிடலாம்.

"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன? தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதிகள் கூட கால் ஊன்றியிராத அந்தப் படங்களில் தென்பட்ட அதே குறைகள் இன்றும், இந்த அதிநவீன யுவசினிமா காலத்திலும் தொடர்கிறது எனும்போது, அவை மட்டும் ஒரு சாராரால் எள்ளப்படுவது ஏன்?

அதன் பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களை மோஸர் பேயரின் புண்ணியத்தால் நேரம் கிடைத்தபோதெல்லாம் பார்க்க நேர்ந்தது. மதுரை வீரன், மன்னாதி மன்னன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி..இன்னும் பல.....!

திரைத்துறையில் பணிபுரியும் சிலரோடு எம்.ஜி.ஆர் படங்கள் குறித்து பலமுறை உரையாடியபோதெல்லாம், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. மேற்கத்திய பாணியில் வசனங்களைக் குறைத்து, கேமிராவின் உபயோகத்தை அதிகமாக்கிப் படங்களை எடுத்த ஸ்ரீதர்; புராண இதிகாசங்களின் அடிப்படையில் பல படங்களைத் தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்; பெரிய நட்சத்திரங்கள், நிறைய பாடல்கள், கணிசமான கண்ணைக் கசக்கவைக்கும் உருக்கமான காட்சிகளோடு படங்களை இயக்கிய ஏ.பீம்சிங்; பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஜெமினி எஸ்.எஸ்.வாசன்; அதிரடி படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ்...என்று பல்வேறு விதமான திரைப்படங்களை எடுத்தவர்களும் எம்.ஜி.ஆருடன் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அண்மையில் புத்தகக்கண்காட்சியில் தமிழ்த்திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எம்.ஜி.ஆர் குறித்து பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. இது தவிர, எம்.ஜி.ஆர் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களையும் பார்வையிட நேரிட்டது.

’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.

எம்.ஜி.ஆர் பல விதங்களில் இன்று முன்னோடி! திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி - அவர் அடைந்த வெற்றி இன்றளவிலும் மலைப்புடன் வியந்து நோக்கப்படுகின்றது. பலருக்கு அவர் லட்சிய புருஷனாகவும், சிலருக்கு வியாபார தந்திரமாகவும், இன்னும் சிலருக்கு கேடயமாகவும் இன்னும் இருப்பது தான் காலங்கடந்தும் நிலைத்திருக்கிற அவரது புகழின் அடையாளங்கள்!

’அவரு ஒருத்தருக்குத்தான்யா படம் பார்க்க வர்றவங்களோட பல்ஸு தெரிஞ்சிருந்தது,’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒரு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் கூறியபோது, அது சத்தியம் என்று விளங்கியது.

அவரது பாடல்களில் இழையோடிய கருத்துக்கள்; நேர்மறையான சிந்தனை; சமூக அக்கறை; கிஞ்சித்தும் தவறான முன்னோடிகளை உருவாக்கி விடாமலிருப்பதற்காக அவர் மேற்கொண்ட எச்சரிக்கை - இவற்றில் ஒரு குந்துமணியளவு இன்றைக்கு "நாளைய முதல்வர்" என்று சுவரொட்டி அடித்துக் கொள்கிற அல்பங்களுக்கு இருந்தால், இன்னேரம் தமிழகத்தின் திரையுலகமும், அரசியலும் ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்தித்திருக்கக் கூடும்.

எம்.ஜி.ஆரைப் பற்றி ஆய்வு செய்கிற பொறுமையோ, அவர் குறித்த தகவல்களைத் தொகுத்தளிக்கிற முயற்சியோ இல்லாதுபோனாலும், இன்றும் வரலாறாய், ஏழை எளிய மக்களின் மன அரியணையில் வீற்றிருக்கும் அந்த யுகபுருஷனை, அவரது பிறந்தநாளன்று வணங்குகிறேன்.

இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!

வாத்தியார் வாத்தியார் தான்!

25 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

நிசம்தான் பிரபலமாகம இருந்த காலத்துலேயே நானே போட போறப் போறேன் சட்டம் ஊருக்கு நண்மை புரிந்திடுக் திட்டம் என்று படித்தவர் எம்ஜியாரின் இன்னுமொரு பலம் பாசிட்டிவ் திங்கிங்க் சிவாஜியைப் போல சட்டி சுட்டதடா கை விட்டதடா என்றோ போனால் போகட்டும் போடா என்று ஒரு போதும் சொன்னதில்லை

பிரபாகர் said...

வாத்தியார் வாத்தியார்தான்... இது மாதிரி எழுதுவதில் சேட்டை சேட்டைதான்...

பிரபாகர்...

yeskha said...

என்னது..... எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?

எல் கே said...

உண்மைதான் சேட்டை. அவர் பெயருக்கு இன்றைக்கும் இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை

சேலம் தேவா said...

//yeskha said...
என்னது..... எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?//

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்ற பொருளில் கூறியுள்ளார்.

Chitra said...

’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.


...... உண்மைதான்.... He was a legend!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல இடுகை. அவரது கட்சியிலேயே பலர் மறந்துவிட்ட நிலையில் அவர் பிறந்த நாள் அன்று அவரைப் பற்றி ஒரு நல்ல இடுகை இட்டதற்கு நன்றி சேட்டை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்கள் எப்ப வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து புதுபடம் பார்த்தாலும் கூடவே ஒரு எம் ஜி ஆர் படமும் எடுத்துபார்ப்போம் அப்பல்லாம்..

அவருடைய பாடல்கள் மூலமா இன்னும் நினைச்சிட்டே இருக்கோமெ...

நீச்சல்காரன் said...

பள்ளி காலத்தில் எம்.ஜி.ஆர்.படங்களுக்கு மட்டும் வீட்டில் அனுமதியுண்டு. எம்.ஜி.ஆர். விசிறியின் மகன் என சொல்வதிலும் ஒரே குஷிதான்

Philosophy Prabhakaran said...

சூப்பர் சேட்டை...

கோமதி அரசு said...

//இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!//

உண்மை உண்மை.

அவர் போல் யாரும் இல்லை.
அவர் அவர் தான்.

நன்றி சேட்டை.

எங்கவீட்டுப்பிள்ளை,நாடோடி மன்னன் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

settaikkaran said...

//தங்கராசு நாகேந்திரன் said...

நிசம்தான் பிரபலமாகம இருந்த காலத்துலேயே நானே போட போறப் போறேன் சட்டம் ஊருக்கு நண்மை புரிந்திடுக் திட்டம் என்று படித்தவர் எம்ஜியாரின் இன்னுமொரு பலம் பாசிட்டிவ் திங்கிங்க் சிவாஜியைப் போல சட்டி சுட்டதடா கை விட்டதடா என்றோ போனால் போகட்டும் போடா என்று ஒரு போதும் சொன்னதில்லை//

மிகவும் உண்மை. சிவாஜி-எம்.ஜி.ஆர் இருவரது படங்களும் இருவேறு வகையைச் சார்ந்தவை. ஆனால், அவர்களுக்குள் இருந்த ஆரோக்கியமான போட்டி, தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது என்று பல தமிழ்ப்பட ஆர்வலர்களும் அனுபவஸ்தர்களும் தெரிவிக்கின்றனர். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//பிரபாகர் said...

வாத்தியார் வாத்தியார்தான்... இது மாதிரி எழுதுவதில் சேட்டை சேட்டைதான்...//

ஹாஹா! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//yeskha said...

என்னது..... எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?//

ஹிஹி! :-)

settaikkaran said...

//எல் கே said...

உண்மைதான் சேட்டை. அவர் பெயருக்கு இன்றைக்கும் இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை//

அவரை அவருக்குப் பிந்தைய இரண்டு தலைமுறைகள் நினைத்துக்கொண்டிருப்பதே அதன் சாட்சி. மிக்க நன்றி கார்த்தி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

//yeskha said...
என்னது..... எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?//

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்ற பொருளில் கூறியுள்ளார்.//

நன்றி சேலம் தேவா! அதைக் குறிப்பிடும் விதமாகத்தான் தலைப்பே இட்டேன். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Chitra said...

...... உண்மைதான்.... He was a legend!//

நிச்சயமாக. சகாப்தம் முடியவில்லை! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல இடுகை. அவரது கட்சியிலேயே பலர் மறந்துவிட்ட நிலையில் அவர் பிறந்த நாள் அன்று அவரைப் பற்றி ஒரு நல்ல இடுகை இட்டதற்கு நன்றி சேட்டை.//

எம்.ஜி.ஆரைப் பற்றி தமிழ்சினிமா, தமிழக அரசியல் இரண்டில் எதை கவனிப்பவர்களாய் இருந்தாலும் குறிப்பிடாது இருக்க முடிவதில்லையே ஐயா! இது தொடரும் அவரது ஆளுமைக்கு எனது எளிய மரியாதை! மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்கள் எப்ப வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து புதுபடம் பார்த்தாலும் கூடவே ஒரு எம் ஜி ஆர் படமும் எடுத்துபார்ப்போம் அப்பல்லாம்..//

ம்ம்ம்! அண்மைக்காலமாக அவரது பழைய படங்களை பலர் விரும்பிப்பார்ப்பதாக அறிகிறேன். ஒருவிதத்தில் அந்த செய்தியே தூண்டுதல் என்றும் கூறலாம்.

//அவருடைய பாடல்கள் மூலமா இன்னும் நினைச்சிட்டே இருக்கோமெ...//

ஆமாம். எனது அலைபேசியில் மெமரி கார்டு முழுக்க அவரது பாடல்கள்தான். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//நீச்சல்காரன் said...

பள்ளி காலத்தில் எம்.ஜி.ஆர்.படங்களுக்கு மட்டும் வீட்டில் அனுமதியுண்டு. எம்.ஜி.ஆர். விசிறியின் மகன் என சொல்வதிலும் ஒரே குஷிதான்//

இப்படிப் பல வீட்டில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர்.ரசிகர்களுக்கு அவர் எப்போதுமே பெருமிதம் தரும் நினைவுகளையே தந்து சென்றிருக்கிறார். மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

சூப்பர் சேட்டை...//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கோமதி அரசு said...

உண்மை உண்மை. அவர் போல் யாரும் இல்லை. அவர் அவர் தான்.
நன்றி சேட்டை.//

உங்களது வருகையும் கருத்தும் மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. மிக்க நன்றி!

//எங்கவீட்டுப்பிள்ளை,நாடோடி மன்னன் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.//

உம், சமீபத்தில் ராஜ் டிவியில் "நாடோடி மன்னன்," பார்த்தேன். சான்ஸே இல்லை. வாத்தியார் வாத்தியார் தான்!

Jayadev Das said...

\\"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."\\ எம்ஜிஆரு ஆட்சிக்கு வந்து இதெல்லாம் நடந்துச்சா. குஷ்டமப்பா.... சீ... கஷ்டமப்பா....

Jayadev Das said...

\\’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.\\ தமிழன் இளிச்ச வாயன் வேறெந்த சூட்சுமமும் இல்லை. எந்த மடையனாவது பக்கத்து ஸ்டேட் காரனை கூட்டியாந்து பதவியில் உட்கார வைப்பானா? பெருச்சாளியை கட்டு சோத்தில் கட்டி வச்ச மாதிரி வேலையை தமிழன் செஞ்சான். இவர் ஆட்சியில் தான் மலையாளிகள் சென்னையை கோரமாக ஆக்கிரமித்தார்கள், MRF போன்ற நிறுவனகள் கோலோச்ச ஆரம்பித்தன. மலையாளிகளை தூக்கு தூக்கென்று தூக்கி வச்சிட்டு அவன் மண்டையைப் போட்டுட்டு போயிட்டான். இன்னைக்கு முல்லைப் பெரியாறு பெப்பே.... என்று பலனை நாம் அனுபவிக்கிறோம்.

settaikkaran said...

@Jayadev Das

உயிரோடு இல்லாத ஒரு மனிதரை ஒருமையில் அழைப்பதிலிருந்தே உங்கள் தரம் வெளிப்படுகிறது. உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.