Saturday, March 13, 2010

மந்திரம் சொல்லுங்கோ!


ஐ.பி.எல்.சீசன் 3 இன்று முதல் ஆரம்பித்து விட்டது என்றபோதும், எங்கள் மேன்சனின் கிரிக்கெட் அபிமானிகளின் முகங்கள் மொட்டைமாடியில் காயப்போட்ட மோர்மிளகாய் வற்றல் போலச் சுருங்கியிருந்தன. அதிலும் என் அறைத்தோழன் வைத்தியின் முகத்தில் செல்போனைத் தொலைத்த சோகம் தென்பட்டதும் ஆவலை அடக்க முடியாத நான் (வழக்கம்போலவே!) அவர்களிடம் விபரம் கேட்டேன்.


"தம்பிக்கு இந்த ஊரு படம் பார்த்திட்டு வந்தது மாதிரி ஏண்டா தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கீங்க? அதான் கிரிக்கெட் ஆரம்பமாயிடுச்சே!"

"சே! ஆரம்பமாயி என்ன புண்ணியம்? பேதி இல்லைடா!"

"பேதி இல்லேன்னா என்னா? ஒரு சொட்டு விளக்கெண்ணை சாப்பிடு! தானா வரும்!"

"சண்டாளா! நான் மந்திரா பேதியைப் பத்திச் சொல்லறேண்டா!"

"மந்திரா பேதியா? எந்த டீமுக்கு ஆடுவாங்க?"

என் நண்பன் வைத்திக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் இன்னேரம் நான் பெசன்ட் நகர் போகாமலே பொசுங்கியிருப்பேன்.

"பாவி! கிரிக்கெட் தெரியாட்டிப் பரவாயில்லை; மந்திரா பேதியைக் கூடவா தெரியாது? சிம்புவோட ஒரு படத்துலே கூட நடிச்சாங்களேடா!"

"சிம்பு படமெல்லாம் என்னோட சிலபஸிலே கிடையாது!"

என் கையாலேயே என் கண்ணைக் குத்துவது மாதிரி, எனது கணினியைத் தட்டியெழுப்பி, திரையில் மந்திரா பேதியின் படத்தைக் காட்டினான் வைத்தி.

"ஓ! இதுவா மந்திரா பேதி? சரி,அவங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?"

"கிரிக்கெட் பார்க்காதவங்களைக் கூட பார்க்க வைச்ச புண்ணியவதிடா மந்திரா! உலகக்கோப்பையிலே இந்தியா தோத்துப்போனதுக்கப்புறமும் நானெல்லாம் உயிரோட இருக்கேன்னா, அதுக்கு மந்திராவை அடுத்த தடவை பார்க்கலாமுங்கிற நம்பிக்கை தாண்டா காரணம்!"

"இவங்க கிரிக்கெட் ஆடுவாங்களா?"

"இவங்க ஆடமாட்டாங்கடா! இவங்களப் பார்த்தாலே ஆடாத மனமெல்லாம் ஆடும்! விதவிதமா டிரஸ் பண்ணிக்கிட்டு கையிலே மைக்கைப் புடிச்சிட்டு ஓடிக்கிட்டேயிருப்பாங்க! ஒவ்வொரு நாளும் இவங்க என்ன கலர் டிரஸ் போடுவாங்க, ஸாரியா, ஜீன்ஸான்னு எல்லாரும் பட்டிமண்டபமெல்லாம் நடத்துவோம்."

"அதெல்லாம் சரி! இவங்க ஏன் வரமாட்டாங்க? உடம்பு சரியில்லையா?"

"இல்லைடா! லண்டன் டிவியிலே கமெண்ட்டரி கொடுப்பாங்களாம். இந்தியாவிலே கமெண்ட்டரி கொடுக்க மாட்டாங்களாம்! கேள்விப்பட்டதிலிருந்து யாரோ வாய்வழியாக் கையை விட்டு மனசைப் போட்டுப் பிசையுறா மாதிரியிருக்கு!"

"இதுக்கெல்லாம் நம்பிக்கையைத் தளர விடலாமா? வாழ்க்கைன்னா இன்பம் துன்பம் ரெண்டும் மாறி மாறி வரத்தான் செய்யும்!"

"உண்மைதாண்டா! எங்கப்பா மெனக்கெட்டு ஊரிலேருந்து போன் பண்ணிச்சொன்னாரு! எனக்கு இப்போ நேரம் சரியில்லே, யாருக்காவது வஸ்திர தானம் பண்ணினாத் தான் தோஷம் தீருமுன்னு சொன்னாரு! மறந்திட்டேன்!"

"ஒண்ணும் கவலைப்படாதே ராஜா! பேசாம மந்திரா பேதிக்கே வஸ்திர தானம் பண்ணிடேன்! பார்த்தாலே சரியாத் துணிமணியில்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க போலத் தெரியுதே!"

"டேய்! இதையெல்லாம் கலைக்கண்ணோட பார்க்கணுண்டா! உனக்குக் கொஞ்சம் கூட அழகுணர்ச்சியே இல்லை!"

"காலையிலே பத்துமணி வரைக்கும் குளிக்காம பேசிட்டிருந்தா அழுக்குணர்ச்சி தான் இருக்கும்; அழகுணர்ச்சி இருக்காது!"

"நான் எவ்வளவு வேதனையோட புலம்பிட்டிருக்கேன். ஒரு வார்த்தை ஆறுதலாச் சொல்லாம, கிண்டல் பண்ணறியே? இனிமேல் வாழ்க்கையிலே கிரிக்கெட்டே பார்க்கப்போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேண்டா!"

"டேய் டேய்! அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதே! இந்த மந்திரா இல்லாட்டி என்ன, அவளுக்குப் பதிலா இன்னொரு அழகான பொண்ணைப் போடப்போறாங்க! நீ மனசைத் தளர விடாதே! இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு, நல்லா சாப்பிட்டு நல்லாத் தூங்கு! ஒரு நாள் ஓய்வு எடுத்தா மனசுக்கு ஆறுதலா இருக்கும்!"

"வயித்தெரிச்சலைக் கொட்டிக்காதேடா! மந்திராவுக்குப் பதிலா இந்த வருஷம் யாரு வரப்போறாங்கன்னு தெரியுமா? இதோ பாரு!"

என் நண்பன் கணினியைத் தட்டி ஒரு படத்தைக் காண்பித்தான்.

"இந்த மூஞ்சியைக் காட்டுறதுக்காக, மந்திரா பேதியைத் தூக்கிட்டாங்கடா படுபாவிங்க!"

நான் பார்த்தேன். என் கண்கள் இருண்டு கொண்டு வருவது போல.....

யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்கப்பா! ஐயையோ...! என்னவோ பண்ணுதே எனக்கு....!!

26 comments:

Paleo God said...

படிச்சிட்டு மாத்திரை முழுங்கனுமா
முழுங்கிட்டு படிக்கனுமா...??:)

பிரேமா மகள் said...

பாவம்‍ப்பா சிங்.. .. அவரை விட்டிடுங்க...

pudugaithendral said...

:)) சித்துவுடன் அருண்லால் வேறு. :(
வேற யாருமே கிடைக்கலை இவங்களுக்கு

Chitra said...

"சிம்பு படமெல்லாம் என்னோட சிலபஸிலே கிடையாது!"

ha,ha,ha,ha.....

............ மந்திரம் போய் தந்திரம் வந்ததோ?

Unknown said...

எனக்கு ஜாலி.. ஏன்னா நான் ஐ.டிவி (இங்கிலாந்தின் டிவி) டெலிகாஸ்டத்தான நெட்ல பாக்கப் போறேன்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்கப்பா! ஐயையோ...! என்னவோ பண்ணுதே எனக்கு....!! ///

ஆமா! யாராவது சீக்கிரம் போன் பண்ணுங்க... சேட்டையை காப்பாத்தியாகணும்..

சிநேகிதன் அக்பர் said...

எங்களுக்கும்தான்.

எல் கே said...

Siddhu is much better than lot of experts

-LK
http://vezham.co.cc

அஷீதா said...

Ayayoo chettai sir

Nnga thoongave maateengalo? unga alamal thaanga mudiya maatengudhe.

daily oru oru padhivu pottu kalakireenga neenga...

Grt...keep it up.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிம்பு படமெல்லாம் என்னோட சிலபஸிலே கிடையாது//

:))

அன்புடன் நான் said...

அதுல்லாம்... சரித்தான்...
வருத்தம் உங்களுக்கா.... உங்க நண்பருக்க???

Ananya Mahadevan said...

//பேசாம மந்திரா பேதிக்கே வஸ்திர தானம் பண்ணிடேன்! பார்த்தாலே சரியாத் துணிமணியில்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க போலத் தெரியுதே!"//ஆமாமா, ஷ்ரேயவை விடத்தான் மந்திர கம்மியா ட்ரெஸ் பண்ணிக்கறா, வஸ்த்திர தானம் தேவைதான். க்ர்ர்ர்...

மைஸ் ஒன்லி அட்டெண்டென்ஸ், கிரிக்கெட்டு தெரியாது! ப்ரசெண்ட் சார்!

Unknown said...

சரி . பொண்ணுங்க வேணும்னா சிங்க சைட் அடிக்கட்டும் தல

settaikkaran said...

//படிச்சிட்டு மாத்திரை முழுங்கனுமா
முழுங்கிட்டு படிக்கனுமா...??:)//

போர்த்திக்கிட்டுப் படுத்துக்கலாம். படுத்துக்கிட்டும் போர்த்திக்கலாம்! :-)
நன்றி!!!!!

settaikkaran said...

//பாவம்‍ப்பா சிங்.. .. அவரை விட்டிடுங்க...//

ஐயா, அவரு அப்படி என்னதான் பேசுதாருன்னு பார்த்தேன். தலையைப் பிச்சுக்கலாம் போலிருக்கு! ஆத்தாடி!!
நன்றி!!!!!

settaikkaran said...

//:)) சித்துவுடன் அருண்லால் வேறு. :( வேற யாருமே கிடைக்கலை இவங்களுக்கு//

என்னோட கிரிக்கெட் அறிவு படுமந்தம்! ஆனா, இவ்வளவு பேர் விரும்பிப் பார்க்கிற ஒரு பெண் வர்ணனையாளருக்குப் பதிலா, நிறைய பேர் ஐயோன்னு கூவுற ஒரு ஆளாங்கிற எண்ணம் காரணமாத் தான் எழுதினேன். நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//"சிம்பு படமெல்லாம் என்னோட சிலபஸிலே கிடையாது!"

ha,ha,ha,ha.....

............ மந்திரம் போய் தந்திரம் வந்ததோ?//

மந்திரமுமில்லாம, தந்திரமுமில்லாம அந்தரத்துலே தொங்க விட்டுட்டாங்க! :-)))
நன்றிங்க!!!

settaikkaran said...

//எனக்கு ஜாலி.. ஏன்னா நான் ஐ.டிவி (இங்கிலாந்தின் டிவி) டெலிகாஸ்டத்தான நெட்ல பாக்கப் போறேன்..//

ஆஹா! ஏதோ நம்மாளுங்க எங்கேயாவது சந்தோஷமாயிருந்தா சரிதான்! :-)))
நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//ஆமா! யாராவது சீக்கிரம் போன் பண்ணுங்க... சேட்டையை காப்பாத்தியாகணும்..//

அண்ணே! சித்துவோட சித்திரவதைக்கு ஆம்புலன்ஸ் மட்டுமில்லே, தனியா ஒரு ஆஸ்பத்திரியே வேணுமிங்கான் நம்ப ஃபிரண்டு! :-))
நன்றிண்ணே!!!!!!

settaikkaran said...

//எங்களுக்கும்தான்.//

பாருங்க! எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு...! :-)))
நன்றிங்க!!!!!!!

settaikkaran said...

//Siddhu is much better than lot of experts

-LK
http://vezham.co.cc//

அப்படியா சொல்றீங்க? சர்தாங்க! :-)))
நன்றிங்க! அடிக்கடி வாங்க!!!!

settaikkaran said...

//Ayayoo chettai sir

Nnga thoongave maateengalo? unga alamal thaanga mudiya maatengudhe.

daily oru oru padhivu pottu kalakireenga neenga...

Grt...keep it up.//

மொக்கை போடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, தூக்கமாவது பசியாவது...? :-)))
நன்றிங்க!!!!!

settaikkaran said...

//சிம்பு படமெல்லாம் என்னோட சிலபஸிலே கிடையாது :))//

நெசம் தானுங்க! தவறிப்போய் வி.தா.வ பார்த்ததிலேருந்து வயித்துவலியிலே அவஸ்தைப்படுறேன்! நன்றிங்க!!!!!! :-))

settaikkaran said...

//அதுல்லாம்... சரித்தான்...வருத்தம் உங்களுக்கா.... உங்க நண்பருக்க???//

மந்திராவோட படத்தை நண்பர் காட்டினதுக்கப்புறம், ரெண்டு பேருக்கும் தான்! :-))
நன்றிங்க!!!!!

settaikkaran said...

//மைஸ் ஒன்லி அட்டெண்டென்ஸ், கிரிக்கெட்டு தெரியாது! ப்ரசெண்ட் சார்!//

பரவாயில்லை! கிரிக்கெட் தெரியாத நான் எழுதவே செஞ்சிருக்கேனே! :-)))
நன்றிங்க!!!!!!

settaikkaran said...

//சரி . பொண்ணுங்க வேணும்னா சிங்க சைட் அடிக்கட்டும் தல//

ஹாஹா! இது சூப்பர் ஐடியா! எனி டேக்கர்ஸ்? :-)))
நன்றிங்க!!!!