Tuesday, March 9, 2010

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.04


எதுக்கும் முந்தைய பகுதிகளையும் ஒரு வாட்டி வாசிச்சிருங்க!

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-01

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-02

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-03


களக்காடு கருமுத்துவும் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவும் நட்பில் , உடுப்பி கிருஷ்ண பவனும் ஊசிப்போன வடையும் போல இணைபிரியாமல் இருப்பவர்களாவர். அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கூடத் தராத அளவு தாராளமனம் படைத்த ஐயாக்கண்ணு, சன்னாசிக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டார் என்று கேள்விப்பட்ட கருமுத்துவுக்கு ஆச்சரியத்தில் வயிற்றுப்போக்கே ஏற்பட்டு விட்டது. ஐயாக்கண்ணுவைக் குறித்த பழைய நினைவுகளை அசைபோட அவர் சற்றே பின்னோக்கிச் செல்லவும், பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஒரு பெண் மீது மோதி செமத்தியாக டோஸ் வாங்கிக்கொண்டார். அந்த அளவுக்கு ஐயாக்கண்ணுவின் சிக்கனமானது ஆந்தைக்குளம் முழுக்க பிரசித்தியானது. உதாரணமாக,

ஒருமுறை, ஊரிலிருந்த கிணற்றைத் தூர்வாரி சுத்தப்படுத்துவதற்காக பஞ்சாயத்திலிருந்து நன்கொடை கேட்டு வந்திருந்தனர். "என்ன குளம் வெட்டப்போகிறீர்களா?" என்று அகமகிழ்ந்த ஐயாக்கண்ணு மிகவும் தாராள மனதுடன் வந்தவர்களுக்கு ஒரு வாளித்தண்ணீரை நன்கொடையாக அளித்தார் என்றால், அவரது தாராள மனத்தை என்ன சொல்வது?

அது மட்டுமா? ஐயாக்கண்ணுவின் மகன் கண்ணாயிரத்துக்குக் கண்பார்வை சற்றே மங்கலாகியதும், அவனுக்கு அப்பாவைத் தவிர மற்ற எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிய ஆரம்பித்து விட்டது.

"அப்பா! எனக்குக் கண்ணே தெரியலே! டாக்டரைப் பார்த்துக் கண்ணாடி போடணும்!" என்று அவன் ஐயாக்கண்ணுவிடம் வந்து முறையிட்டான். "எனக்கு தூரத்துப் பார்வை ரொம்பக் குறைஞ்சிருச்சு!"

உடனே ஐயாக்கண்ணு அவனை வெளியே அழைத்துக் கொண்டு போய் வானத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்: "எலேய், அதோ மேலே இருக்குல்லா, அது என்னது?"

கண்ணாயிரம் பட்டென்று பதில் அளித்தான்: "சூரியன்!"

"லேய்! அவ்வளவு தூரத்துலே இருக்கிற சூரியனே தெரியுதுல்லா? பொறவு எதுக்குலே கண்ணாடி? போலே, போய் பொஸ்தகத்தை எடுத்துப் படிலே!" என்று கடிந்து கொண்டார் ஐயாக்கண்ணு.

இவ்வளவு ஏன்? ஒரு முறை ஆந்தைக்குளத்துக்கு விடுமுறைக்கு வந்த கருமுத்துவுக்கே ஐயாக்கண்ணுவின் தயாளகுணத்தை நேரடியாக அறிகிற வாய்ப்பு கிடைத்தது.

ஒரு முறை ஐயாக்கண்ணு கடைக்குப் போய் வாழைப்பழம் எவ்வளவு விலையென்று கேட்டார்.

"ஒரு ரூபாய்!" என்றார் கடைக்காரர்.

"எழுபத்தஞ்சு பைசாவுக்குத் தரமாட்டியா?" என்று கேட்டார் ஐயாக்கண்ணு.

கடுப்பாகிப்போன கடைக்காரர், "எழுபத்தி அஞ்சு பைசாவுக்குத் தோல் தான் வரும்," என்றார். விடுவாரா ஐயாக்கண்ணு?

"இந்தா இருபத்தஞ்சு பைசா," என்று காசை நீட்டினார். "தோலை நீயே வைத்துக்கொண்டு எனக்குப் பழத்தைக் கொடு!"

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஒரு முறை ஐயாக்கண்ணுவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி, அனேகமாக ஆப்பீஸ் பூட்டி விடும் என்கிற கட்டத்தில், அவர் படுத்தபடுக்கையாய் இருந்தபோது நடந்த சம்பவம் இது. முதலில் அவர் தன் மனைவியை அழைத்தார்.

"பக்கத்துலே தான் இருக்கேன்!" என்று மனைவியின் குரல் வந்தது.

"புள்ளை...?"

"தலைமாட்டுலே நின்னுக்கிட்டிருக்கேன் அப்பா!" என்று குரல் வந்தது.

"பொண்ணு...?"

"கால்மாட்டுலே நின்னுக்கிட்டிருக்கேன் அப்பா!" என்று குரல் வந்தது.

"அடப்பாவீங்களா! எல்லாரும் இங்கே இருக்கீங்கன்னா, அந்த ரூமுலே எதுக்குலே ஃபேன் வெட்டியா சுத்திட்டிருக்கு! உங்கப்பனா பில்லு கட்டுவான்?" என்று அலறினாரே ஒரு அலறல்!

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.01

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.02

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.03

34 comments:

அகல்விளக்கு said...

ஹாஹாஹாஹாஹாஹா...

அந்த பேன் மேட்டர படிச்சதுக்கப்புறம் சிரிப்பு பின்னியெடுத்துடுச்சு...

செம ரகள தல......

அன்புடன் நான் said...

கடைசி விடயம் மிக அருமைங்க.
ரசித்தேன்.

ஆடுமாடு said...

ஏம் இப்படி?

சேட்டை ஓவருதான்டே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படி அப்பு..?
ஆமா.. நிலா வெளிச்சத்தில யோசிப்பீங்களோ?...
நல்லாயிருந்துச்சு சேட்டை..

மாதேவி said...

"லேய்! அவ்வளவு தூரத்துலே இருக்கிற சூரியனே தெரியுதுல்லா? பொறவு எதுக்குலே கண்ணாடி?" :))))))))))

Chitra said...

ஒரு முறை ஐயாக்கண்ணு கடைக்குப் போய் வாழைப்பழம் எவ்வளவு விலையென்று கேட்டார்.

"ஒரு ரூபாய்!" என்றார் கடைக்காரர்.

"எழுபத்தஞ்சு பைசாவுக்குத் தரமாட்டியா?" என்று கேட்டார் ஐயாக்கண்ணு.

கடுப்பாகிப்போன கடைக்காரர், "எழுபத்தி அஞ்சு பைசாவுக்குத் தோல் தான் வரும்," என்றார். விடுவாரா ஐயாக்கண்ணு?

"இந்தா இருபத்தஞ்சு பைசா," என்று காசை நீட்டினார். "தோலை நீயே வைத்துக்கொண்டு எனக்குப் பழத்தைக் கொடு!".............. ha,ha,ha,......வாழைப்பழ ஜோக் எப்போதும் சூப்பர் தான்.

முகுந்த்; Amma said...

எங்க சார் கண்டுபிடுச்சீங்க ஆந்தைகுளம் அய்யாகண்ணை? சிக்கன திலகம் பட்டம் கொடுத்திடலாம் போங்க!

Muruganandan M.K. said...

"அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கூடத் தராத அளவு தாராளமனம் ..." அவர் வாழ்வைச் சிரித்து ரசித்தேன்.

Unknown said...

சேட்டை தூளா இருக்கு.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிரும் போல இருக்கு

thiyaa said...

அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

இவ்ளோ விவரமா எழுதறதால அவரை எங்க கண்டுபிடிச்சீங்கன்னு வேற கேக்கறாங்க.. :) ஒரு கார்டூன் அவர் எப்படி இருப்பாருன்னு வரைஞ்சு போட்டிருங்களேன்.. நம்ம திருவாளர் பொதுஜனம் மாதிரி ப்ரபலமாகிடுவாரில்ல்ல..

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே அவர் எங்கண்ணே இருக்கார். அவருக்கு சிஷ்யனா சேரணும்.

அருமையான நடை. கலக்கல் போங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

ஐடியா அய்யாக்கண்ணு, விவராமாதான் இருக்காரு :))

Mythili (மைதிலி ) said...

பேருக்கேத்த மாதிரியே ரொம்ப சேட்டைகாரரா இருப்பீங்க போலிருக்கே?? ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.. அசத்துறார்.. கொஞ்சம் முல்லா நாசருதின் சாயல்ல இருக்கார்... மொத்தத்தில் ரசித்து படித்தேன்..

settaikkaran said...

//ஹாஹாஹாஹாஹாஹா...

அந்த பேன் மேட்டர படிச்சதுக்கப்புறம் சிரிப்பு பின்னியெடுத்துடுச்சு...

செம ரகள தல......//

நன்றிங்கோ! உங்களோட வார்த்தைகள் நிறைய உற்சாகம் தருது! :-))

settaikkaran said...

//கடைசி விடயம் மிக அருமைங்க.
ரசித்தேன்.//

மிக்க நன்றி சி.கருணாகரசு அவர்களே! :-))

settaikkaran said...

//ஏம் இப்படி?

சேட்டை ஓவருதான்டே!//

என்ன செய்யச் சொல்லுதீய? சீரியஸா எளுத வரமாட்டேக்கே? நன்றி!!

settaikkaran said...

//எப்படி அப்பு..? ஆமா.. நிலா வெளிச்சத்தில யோசிப்பீங்களோ?...
நல்லாயிருந்துச்சு சேட்டை..//

சென்னைவாசிங்கெல்லாம் இரவுலே மின்வெட்டு வந்தாத் தான் நிலாவையே பார்ப்பாங்க! :-))

எல்லாம் ஒரு ஃப்ளோவிலே வர்றதுதேன்! நன்றி அண்ணே!!

settaikkaran said...

//:))))))))))//

வருகைக்கும் நகைப்பானுக்கும் நன்றி மாதேவி அவர்களே! :-)

settaikkaran said...

//..............ha,ha,ha,......வாழைப்பழ ஜோக் எப்போதும் சூப்பர் தான்.//

ஆஹா! நன்றி சித்ரா அவர்களே! கூடிய சீக்கிரமே வாழைப்பழம் சம்பந்தப்பட்ட ஜோக்குகளைத் தொகுத்துடலாம்.

settaikkaran said...

//எங்க சார் கண்டுபிடுச்சீங்க ஆந்தைகுளம் அய்யாகண்ணை? சிக்கன திலகம் பட்டம் கொடுத்திடலாம் போங்க!//

வாங்க முகுந்த் அம்மா! ஐயாக்கண்ணு மாதிரி ஆசாமிங்களுக்கு பஞ்சமா? :-) ரொம்ப நன்றி!!

settaikkaran said...

//"அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கூடத் தராத அளவு தாராளமனம் ..." அவர் வாழ்வைச் சிரித்து ரசித்தேன்.//

மிக்க நன்றி Dr.எம்.கே.முருகானந்தன் அவர்களே!

settaikkaran said...

//சேட்டை தூளா இருக்கு.. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிரும் போல இருக்கு//

மிக்க நன்றி முகிலன் அவர்களே! எல்லாம் உங்க ஆசி தான்! :-))

settaikkaran said...

//அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி தியாவின் பேநா அவர்களே! :-)

settaikkaran said...

//இவ்ளோ விவரமா எழுதறதால அவரை எங்க கண்டுபிடிச்சீங்கன்னு வேற கேக்கறாங்க.. :) ஒரு கார்டூன் அவர் எப்படி இருப்பாருன்னு வரைஞ்சு போட்டிருங்களேன்.. நம்ம திருவாளர் பொதுஜனம் மாதிரி ப்ரபலமாகிடுவாரில்ல்ல..//

நல்ல யோசனை தெரிவிச்சிருக்கீங்க முத்துலட்சுமி அவர்களே! நமக்குத் தெரிஞ்ச ஆர்டிஸ்ட் ஒருத்தர் இருக்காரு! சீக்கிரமே கார்ட்டூன் போட்டுருவோம். மிக்க நன்றி!!

settaikkaran said...

//அண்ணே அவர் எங்கண்ணே இருக்கார். அவருக்கு சிஷ்யனா சேரணும்.//

அவரை மாதிரி ஆளுங்க தெருவுக்கு ஒருத்தராவது இருப்பாங்களே அக்பர் அண்ணே!:-))

//அருமையான நடை. கலக்கல் போங்க.//

மிக்க நன்றிங்க! :-))

settaikkaran said...

//ஐடியா அய்யாக்கண்ணு, விவராமாதான் இருக்காரு :))//

இல்லாமே பின்னே? விபரமான ஆளு மட்டுமில்லே, விவகாரமான ஆளும்தேன்! நன்றிண்ணே!!

settaikkaran said...

//பேருக்கேத்த மாதிரியே ரொம்ப சேட்டைகாரரா இருப்பீங்க போலிருக்கே?? ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.. அசத்துறார்.. கொஞ்சம் முல்லா நாசருதின் சாயல்ல இருக்கார்... மொத்தத்தில் ரசித்து படித்தேன்..//

உங்க வலைப்பதிவு பார்த்தேனுங்க! உங்களது வருகை பெருமிதம் ஏற்படுத்துகிறது. ஐயாக்கண்ணு கேரக்டரை சுலபமா முல்லா நஸீருத்தீன் தொடங்கி சான்டா சிங் வரைக்கும் அடையாளம் காண முடியும். மிக்க நன்றி! அடிக்கடி வருகை தாருங்கள்!!

வெங்கட் நாகராஜ் said...

தல, தாங்க முடியல உங்க சேட்டை! யாருப்பா அங்க, வயித்து வலிக்கு ஏதும் மருந்து இருந்தா கொஞ்சம் அனுப்புங்க!

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

அஷீதா said...

ஏனுங்க சார் ..

கலக்கிட்டிங்க போங்க.

ஒரே சிரிப்புதான். எப்பிடிங்க இப்பிடில்லாம்...

உக்காந்து யோசிப்பீங்களோ?

வாழ்த்துகள்!

பித்தனின் வாக்கு said...

அருமையாக உள்ளது. சிரிப்புத் தாங்க வில்லை. பேன் மேட்டர் சூப்பர். நல்லா எழுதியிருக்கிங்க. நான் தொடர் முழுதும் படித்துவிட்டு கருத்துப் போடுகின்றேன். நன்றி.

settaikkaran said...

//தல, தாங்க முடியல உங்க சேட்டை! யாருப்பா அங்க, வயித்து வலிக்கு ஏதும் மருந்து இருந்தா கொஞ்சம் அனுப்புங்க!//

அடடே! ஐயாக்கண்ணுவுக்கும் கூட அடிக்கடி வயித்து வலி வருமுண்ணு, களக்காடு கருமுத்து சொல்லுறாரு! :-)))

நன்றிங்க!!

settaikkaran said...

//ஏனுங்க சார் ..

கலக்கிட்டிங்க போங்க.

ஒரே சிரிப்புதான். எப்பிடிங்க இப்பிடில்லாம்...

உக்காந்து யோசிப்பீங்களோ?

வாழ்த்துகள்!//

ஹிஹி! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி அஷீதா அவர்களே! எல்லாம் ஒரு ஃப்ளோவிலே வர்றது தான்! :-))

settaikkaran said...

//அருமையாக உள்ளது. சிரிப்புத் தாங்க வில்லை. பேன் மேட்டர் சூப்பர். நல்லா எழுதியிருக்கிங்க. நான் தொடர் முழுதும் படித்துவிட்டு கருத்துப் போடுகின்றேன். நன்றி.//

ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அவசியம் மற்ற பகுதிகளையும் படிச்சிட்டு சொல்லுங்க!! :-))