Sunday, August 29, 2010

வழித்துணையாய் ஒரு வலி


வாரத்தின் இறுதிநாளை
வாழ்க்கையின் கடைசிநாளாய்க் கொண்டாட
நண்பர்கள் எல்லோரும்
நகர்வலம் போய்விட்டார்கள்!

செய்தித்தாள்களின் தலைப்புக்கள்
செரிமானமாகி விட்டன.

பரிகாசமாய்ச் சிரிக்கிறது
பரிச்சயமான பகல்வெளிச்சம்

ஆளரவமற்ற அறையில் நான்!
வலியவந்து கைகுலுக்கிய
வலிமட்டுமே என்னுடன்
வசித்துக்கொண்டிருக்கிறது!

வழித்துணைக்குப் பதிலாய்
வலித்துணை வாய்த்தது!

இனி விலகமுடியாதபடி
இரண்டறக்கலந்துவிட்டோம்!

வந்தவலியை துணைவியாய்
வரித்துக்கொண்டுவிட்டேன்!
எங்கள் திருமணத்திற்கு
எதிர்காலத்தேதிகளில் ஒன்றை
என்வலியே தேர்ந்தெடுக்கும்!

என் வலி விதவையாகுமா?
உடன்கட்டையேறுமா?

இதற்கோர் விடையளிக்க
இருவருக்கும் தெரியவில்லை!

17 comments:

Ahamed irshad said...

என்னன்னு சொல்றது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிகவும் கொடுமைங்க.. :(
என்ன வலியோஅது?
என்ன புதிரோ இது..

vasu balaji said...

:(ம்ம்

nis said...

நல்லா இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணே,காமடில கலக்கறீங்க,கவிதைல பின்றீஙக.எப்படி?
எனக்கு பிடித்த வரிகள்
வழித்துணைக்குப் பதிலாய்
வலித்துணை வாய்த்தது!
.போட்டுத்தாக்குங்க

கே. பி. ஜனா... said...

வலியைத் துணையாய் ஏற்றுக் கொண்டாயிற்றா? வாழ்க்கை இனி கைக்குள் தான்! நல்லாயிருக்கு கவிதை!

முகுந்த்; Amma said...

என்னாச்சுங்க, இப்படி சோகத்தை பிழிஞ்சு ஒரு கவிதை.

ஸ்ரீராம். said...

வலி சுமங்கலியாய் போய்ச் சேராதா?

Anonymous said...

நல்லா இருக்குங்க கவிதை

Anonymous said...

தனிமையின் கொடுமையை அழகாகச் சொல்லி உள்ளீர்கள். எல்லா பிரிவுகளிலும் அசத்துகிறீர்கள். நன்றி .. :)

Chitra said...

How do you feel now????

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்ரீராம். said...

வலி சுமங்கலியாய் போய்ச் சேராதா?//
வாழ்த்துக்கள் ஸ்ரிராம்..

☀நான் ஆதவன்☀ said...

:(

உங்களிடமிருந்து வலி டைவர்ஸ் வாங்கிச்செல்ல வேண்டுகிறேன்.

Mahi_Granny said...

என்னாச்சு சேட்டைக்கு .

ADHI VENKAT said...

ரொம்ப உருக்கமா இருக்கு. நிச்சயம் வலி சுமங்கலியா போயிடும்.

கோமதி அரசு said...

வாழ்க்கைத்துணையை சீக்கீரம் தேடிக் கொள்ளுங்கள்.

வலி துணையை வாழ்க்கைத்துணை விரட்டிவிடும்.

அப்புறம் சோக கவிதை போய் உல்லாசம் பொங்கும் கவிதைகள் எழுதுவீர்கள்.

சமுத்ரா said...

ur poems are very nice