Tuesday, September 25, 2012

கொடுப்"பேனா" தவிப்"பேனா"?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Tuesday, September 18, 2012

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா





ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா - மெட்டில்


ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!
ஒரே தீதி ஓயாமலே கிளப்பிவந்தார் பீதி!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

ஓரே புலி வருதுன்னாங்க ஒன்பதுவாட்டி!
ஓரே புலி வருதுன்னாங்க ஒன்பதுவாட்டி!யாரும்
ஓடலைன்னு விலகிப்புட்டார் கூட்டத்தைக் கூட்டி
கூட்டத்தைக் கூட்டி...!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

அடிக்கடியும் அம்மணிக்கு வருது ஜுரம்தான்!-கால்கள்
தடுக்கிப்புட்டா ஜன்பத்துக்கு ஓலைவரும்தான்!
கடுப்பிருந்தும் காங்கிரசோ ஈனசுரம்தான் நாளும்
காதில்பஞ்சை வைச்சிருக்கும் ஆளு மரம்தான்!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

கொல்கத்தாவின் ராணி தினம் கோஷம்விடுத்தார்- தினம்
பல்விளக்கி முடிஞ்சதுமே பாணம்தொடுத்தார்
குண்டைத் தூக்கிப் போட்டுப்போட்டு மண்டையுடைத்தார்-அவர்
குதுப்மினாரை ஹூக்ளியிலே கொண்டுபுதைத்தார்
கொண்டுபுதைத்தார்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

கூட்டு என்று பேருக்குத்தான் தர்மமுமில்லை-தினம்
கும்முகின்ற கூட்டணிபோல் கருமமுமில்லை
ஓட்டுப்போடும் கட்சியெல்லாம் கூட்டுதானய்யா-தினம்
ஓட்டுகின்ற கூட்டுருந்தா வேட்டுதானய்யா...!
வேட்டுதானய்யா...!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!
ஒரே தீதி ஓயாமலே கிளப்பிவந்தார் பீதி!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!
 

Sunday, September 16, 2012

கொழுக்கட்டையும் செய்வாள் பத்தினி!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Wednesday, September 12, 2012

ஓஹோஹோஹோ! மனிதர்களே!




ஓஹோஹோஹோ! மனிதர்களே!
பேசுவதென்ன சொல்லுங்கள்!
காதுலே இயர்போன்! பையிலே செல்போன்!
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!


தினமும் காதில் செல்போன்வைத்துச் சாலையைக் கடப்பாங்க
ஜனங்கள் பார்க்க கிறுக்கர்கள்போலே உரக்கவே சிரிப்பாங்க
அலறிப்பேசி அடுத்தவன்காதின் ஜவ்வினைக் கிழிப்பாங்க
அதிலும்சிலபேர் ஃபிகர்களைப்பார்த்தால் ஆங்கிலம் உரைப்பாங்க
ஐபோன் பந்தா அடங்கவுமில்லை!
ஆண்ட்ராய்ட் ஜம்பம் முடங்கவுமில்லை!


ஓஹோஹோஹோ! மனிதர்களே!
பேசுவதென்ன சொல்லுங்கள்!
காதுலே இயர்போன்! பையிலே செல்போன்!
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!


மெமரிமுழுதும் பாட்டுக்கள் சேர்த்து உரக்கவே கேட்பாங்க
மெயில்கள் எதுவும் வரலைன்னாலும் அடிக்கடி பார்ப்பாங்க
ஃபேஸ்புக் ட்விட்டர் அனைத்திலும் சேர்ந்து மொக்கை இடுவாங்க
பேசுறமாதிரி காதுலே வைச்சே ஃபோட்டோ சுடுவாங்க
வீட்டுக்கு வழியும் கூகிளில் தேடல்
வில்லங்கமாச்சே புதுயுக மாடல்!


ஓஹோஹோஹோ! மனிதர்களே!
பேசுவதென்ன சொல்லுங்கள்!
காதுலே இயர்போன்! பையிலே செல்போன்!
கிளப்புங்க தூள் நீங்கள்!
ஓஹோஹோஹோ!

Monday, September 10, 2012

பீரின்றி அமையாது உலகு!



தமிழக மதுக்கடைகளில் பீர், விஸ்கி விலையேற்றம் செய்தி

ஆறு மனமே ஆறு


பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
ஊதிப் பருத்த வயிறைச் சுமந்து
உருண்டு போறதைப் பாரு!
உருண்டு போறதைப் பாரு!

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு

தண்ணி சோடா மிக்சிங் இன்றி
தனியாக் கலக்கும் பீரு
ஒண்ணுக்கு ரெண்டாய் குடிச்சபின்னே
ரெண்டை நாலாக்கும் பீரு!
சூட்டுக்கு இதம் பீராகும்-கூட
சுண்டலைத் தின்னால் ஜோராகும்-இன்னும்
சுருங்கச் சொல்லுறேன் தாகசாந்திக்கிப்போ
பீரே மக்களின் மோராகும்
பீரே மக்களின் மோராகும்

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு

ஹேவார்ட்ஸ் ஃபாஸ்டர் சாண்ட்-பைப்பர் புல்லட்
கோல்டன் ஈகிள் பிராண்டு
கிங்ஃபிஷர் கோல்டு மார்கோ போலோ
கல்யாணி ஜிங்காரோ உண்டு
கோல்டன் பேர்ளு வோரியன் லைட்பின்னே
மெட்ராஸ் பில்சனர் பிளாக்கு நைட்டு என
மேவிய பீருபலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு!
மேனி செழித்த தமிழ்நாடு!

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு!

மாலை நேரம் ஆனபின்பு
கால்கள் கடுக்க நின்னு
மக்கள் வாங்கிக் குடிக்கிறாங்க
விஸ்கி பிராந்தி ஜின்னு
டாஸ்மாக் என்பது தெய்வமடா-இப்போ
பீரு என்பது சைவமடா! தினம்
டாண்ணு நேரத்தில் கடைக்குப் போயி
வாங்கிக் குடிச்சு உய்வோமடா
வாங்கிக் குடிச்சு உய்வோமடா

பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
பீரு குளிர்ந்த பீரு உந்தன்
பித்தப்பை வளர்க்கும் பீரு
ஊதிப் பருத்த வயிறைச் சுமந்து
உருண்டு போறதைப் பாரு!
உருண்டு போறதைப் பாரு!

Saturday, September 8, 2012

நானொரு சிந்து காவடிச்சிந்து



செய்தி: இஸ்ரோவிலிருந்து 100-வது ராக்கெட் கிளம்பும்!

நானொரு சிந்து காவடிச்சிந்து

நாங்களும் இன்று ஞானமே கொண்டு
வானம் பிடிச்சிப்புட்டோம்!- நூறு
பாணம் அனுப்பிச்சிட்டோம்
நாளும்பொழுதும் நாட்டை உலுக்கும்
ஈனம் மறைச்சுப்புட்டோம்-அதை
இன்று மறந்துப்புட்டோம்!

நாங்களும் இன்று ஞானமே கொண்டு

பொல்லாத விலைவாசி ஏற்றத்தைப் போலே
போகாதே வேறெந்த ராக்கெட்டும் மேலே!
பொல்லாத விலைவாசி ஏற்றத்தைப் போலே
போகாதே வேறெந்த ராக்கெட்டும் மேலே!
பையில்தான் காசோடு சந்தைக்குப் போறார்
கையில்தான் காய்வாங்கி வீட்டுக்கு வாரார்!
உப்புப்புளியும் ஆடம்பரமோ? நாம்
உண்டுசிரிக்கும் நாளும்வருமோ..?
சொல்லுங்களேன்....!

நாங்களும் இன்று ஞானமே கொண்டு

தேசத்தின் மானத்தை வானிலே ஏத்தி
தேர்ந்தாரே நெற்றியில் நாமத்தைச் சாத்தி
தேசத்தின் மானத்தை வானிலே ஏத்தி
தேர்ந்தாரே நெற்றியில் நாமத்தைச் சாத்தி
நாட்டுக்கு நன்மைகள் வந்திடும் என்னும்
நம்பிக்கை ராக்கெட்டு மீளலை இன்னும்
எரிபொருளுக்கு நம் அடிவயிறுண்டு- வீண்
பரிதவிப்பாச்சே சுதந்திரம்கண்டு என்ன பயன்?

நாங்களும் இன்று ஞானமே கொண்டு
வானம் பிடிச்சிப்புட்டோம்!- நூறு
பாணம் அனுப்பிச்சிட்டோம்
நாளும்பொழுதும் நாட்டை உலுக்கும்
ஈனம் மறைச்சுப்புட்டோம்-அதை
இன்று மறந்துப்புட்டோம்!


Wednesday, September 5, 2012

அவர் அப்படியொன்றும் அசடில்லை




டாக்டர்.மன்மோகன் சிங்குக்குப் போதாத காலம் இது! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ‘டைம்பத்திரிகை அவரை ‘செயல்படாத பிரதமர்என்று வருணித்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த நம்மூரு காங்கிரஸ் அதிபுத்திசாலிகள் சென்னைப்பதிப்பு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவை எரித்து, அமெரிக்காவின் ‘டைம்ஸ்பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். 


      (இம்முறை சத்தியமூர்த்தி பவன் தொண்டர்படை என்ன செய்யுமோ? வாஷிங்டன் போஸ்டை-க் கண்டித்து வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நடத்தலாம்.)

      என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிடச் சிறந்தது,என்று பிரதமர் கூறியிருந்ததை ‘வாஷிங்டன் போஸ்ட்ஏன் கிண்டல் செய்திருக்கிறது என்பது புரியவில்லை. ஓபாமாவைப் போல உளறுவாயராக இருப்பதைக் காட்டிலும், சும்மாயிருப்பதே சுகம் என்று நம்ம பிரதமர் சொல்லியிருக்கலாம் அல்லவா? இதையெல்லாமா கிண்டல் பண்ணுவது? வர வர இந்த அமெரிக்கர்கள் பண்ணுற அலப்பறை தாங்கலை சாமீ! (சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதித்துத் தொலைத்திருந்தால், ‘டைம்ஸ்’ ‘வாஷிங்டன் போஸ்ட்போன்ற பத்திரிகைகள் இப்படிக் கரித்துக் கொட்டியிருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.)

      அட, என்ன சேட்டை, திடீர்னு பிரதமருக்கு வக்காலத்து வாங்குறா மாதிரியிருக்கே?ன்னு யோசிக்கிறதுக்குள்ளே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நாமளாவது காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்குறதாவது..! இதோ, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நான் குழுமங்களில் எழுதிய இன்னொரு பாடல்....!



(அங்காடித்தெருபடத்தில் வரும் ‘அவள் அப்படியொன்றும் அழகில்லைமெட்டில் எழுதப்பட்ட பாட்டு.) 

அவர் அப்படியொன்றும் அசடில்லை

அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை

அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை

அவர் தேர்தல் எதிலும் ஜெயித்ததில்லை
தெரிந்தும் தவறைத் தடுத்ததில்லை
அவர் பேரைக் கேட்டால் அதிர்வதில்லை
பெரிதாய் ஓட்டும் குதிர்வதில்லை

(அவர் அப்படியொன்றும் அசடில்லை)

அவர் மேதாவி என்பார் மறுக்கவில்லை
மேல் நாட்டுப்படிப்பும் உதவவில்லை
அவர் பாராளுமன்றத்தில் உறங்கவில்லை
இன்னும் பாழும் விலைகள் இறங்கவில்லை

அவர் அன்னை சொல்லைத் தட்டவில்லை
அவர் அமைச்சர் தலையில் குட்டவில்லை
அவர் வாயில்வருவதைத் திட்டவில்லை
அவர் வார்த்தைகள் எதையும் கொட்டவில்லை
அவர் வேலை என்ன புரியவில்லை
நமக்குப் புரியவில்லை

(அவர் அப்படியொன்றும் அசடில்லை)

அவர் திட்டம்போட்டு எதுவும் நடப்பதில்லை
அவர் திமிராய்ப்பேசுவோரை அடக்கவில்லை
அவர் கட்சிக்குள் கூட நண்பரில்லை
அவர் காசிக்குப் போகவும் நேரமில்லை

அவர் அரசியல்பேச்சில் இரைச்சலில்லை
அவர் அறிக்கைவிடுவதில் குறைச்சலில்லை
அவர் தடுத்தால் கேட்கிற ஆளுமில்லை
புதுத்தலைவலி இல்லா நாளுமில்லை
அவர் சிங்கென்றாலும் சிங்கமில்லை
அவர் சிங்கமில்லை

அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை

Saturday, September 1, 2012

வி.ஆர்.எஸ்.வெங்கடசாமி

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!