Friday, October 5, 2012

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது



வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது
வயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது
மின்சாரத்தைத் தேடுது
ஏறாதே பில்லு! போதாதோ சொல்லு!
கரண்ட்டில்லா ஊரு! கரையேத்த யாரு?
வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது



ஏகப்பட்ட லைட்டு மாட்டிவைத்தபோதும்
இருட்டில் நாளும் இருக்குது வீடு
சீலிங் ஃபேனும் இருக்கு! ஃபீலிங் இல்லை நமக்கு!
இரவில் புழுக்கம் பகலிலே சூடு!
சீலிங் ஃபேனும் இருக்கு! ஃபீலிங் இல்லை நமக்கு!
இரவில் புழுக்கம் பகலிலே சூடு!

வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது

கிரைண்டரிலே நாமும் மாவரைச்சு மீண்டும்
இட்டிலி தோசை தின்பதெந்த நாளோ?
மிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்
மிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ?
மிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்
மிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ?

வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது

தீமையிலும் இருக்கு நல்லதொண்ணு நமக்கு
தொடர்கள் பார்த்து அழவில்லை யாரும்
பார்க்குப்பக்கம் போனா வாக்கிங் வரும் கூட்டம்
என்னமோ புண்ணியம் மின்வெட்டுக்குச் சேரும்
பார்க்குப்பக்கம் போனா வாக்கிங் வரும் கூட்டம்
என்னமோ புண்ணியம் மின்வெட்டுக்குச் சேரும்

வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது
வயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது
மின்சாரத்தைத் தேடுது
ஏறாதே பில்லு! போதாதோ சொல்லு!
கரண்ட்டில்லா ஊரு! கரையேத்த யாரு?
வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது

24 comments:

r.v.saravanan said...

ஒளிரும் பாடல் நல்லாருக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை நிலை... இப்படி பாட்டை பாடி மனசை தேத்திக்க வேண்டியது தான்...

இங்கே 16 Hours Power Cut...!!!

வெங்கட் நாகராஜ் said...

புண்பட்ட மனசை பாட்டெழுதி ஆத்த வேண்டியது தான் சேட்டை ஜி!....

நல்ல பகிர்வு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

வாவ்வ்வ்வவ்வ்வ்..... கலக்க்க்கக்க்க்கல் சாங்...!
அடி பின்னிட்டீங்க சகோ.சேட்டை..!

Anonymous said...

ரசிக்கும் படியான யதார்த்தம் விரவும் பாடல் !!!

அருணா செல்வம் said...

வாசமில்லா மலரிலும்
தேன் இருப்பது போல்
மின்சாரம் இல்லா காரணத்தால்
சில நன்மைகளும் இருக்கிறது
என்பதை அழகாக பாட்டில் கொண்டு வந்துவிட்டீர்கள்....
அருமை.

கும்மாச்சி said...

குரு சூப்பர்.

ஸ்ரீராம். said...

சூப்பர்!

Unknown said...


தீமையிலும் இருக்கு நல்லதொண்ணு நமக்கு
தொடர்கள் பார்த்து அழவில்லை யாரும்

உண்மையான கருத்து!இதற்காகவே இம், மின்வெட்டு உதவுதே !என்பதே மகிழவேண்டிய ஒன்று! கவிதையும் வழக்கம் போல கலக்கல்!

Anonymous said...

மின்சாரக்கனவு..!!

Tamilthotil said...

மிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்
மிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ?

நூற்றுக்கு நூறு உண்மை. இது நகரங்கள், புறநகரங்களின் வலிகள். கிராமங்களின் வலிகள் சொல்லில் அடங்காது

சசிகலா said...

இப்படி வரிகளை ரசிக்க அப்படி ஒரு மின்சாரம் இல்லாமலே போகட்டுமே.

Easy (EZ) Editorial Calendar said...

உண்மை....உண்மை...உங்கள் பாட்டு வரிகள் ரொம்ப நல்லா இருக்கு..

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பால கணேஷ் said...

துட்டுக்கு லட்டா, லட்டுக்கு துட்டா என்பது போல மெட்டுக்கு நீங்க எழுதினீங்களா. உஙகள வரிகளுக்கு மெட்டு போட்டாங்களான்ற மாதிரி அருமையா அமைஞ்சிருக்கு. மின்சாரப் பாடல் ஷாக்கடிக்கவில்லை. அருமை.

முத்தரசு said...

வெளிச்சம் இல்லா நாடிது
விடியலைதான் தேடுது...

சமீரா said...

ஹஹஹா... இன்னைக்கு டார்கெட் கரண்ட்-ஆ? சூப்பர் சாங்... டைமிங் பாட்டு.. அசத்திடீங்க..
ஒரு டவுட் - இந்த பாட்டு கரண்ட் இருக்கும் போது எழுதினதா? இல்ல இல்லாதப்ப எழுதினதா?

இராஜராஜேஸ்வரி said...

மின்சாரம் இல்லாமல் வந்த
சாரமான கவிதை !

ADHI VENKAT said...

பிரமாதம். இப்படியெல்லாம் பாட்டெழுதி புலம்பிக்க வேண்டியதாகி விட்டது. என்று சரியாகுமோ...

MANO நாஞ்சில் மனோ said...

ha ha ha ha ha asatthal makka....!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாட்டு கலக்கல்.

மாதேவி said...

கலக்கல்.

சிரமம் புரிகிறது.நாங்களும் ஒருகாலம் வருடக்கணக்கில் தொடர்ந்து அனுபவித்திருக்கின்றோம்.

Thozhirkalam Channel said...

அட,, சேட்டை தான்,, நல்லாவே இருக்கு,,,

தொடருங்கள்,,,

settaikkaran said...

தங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை இங்கு செலவிட்டு, வாசித்து, பின்னூட்டமிட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

@r.v.saravanan
@திண்டுக்கல்
@வெங்கட் நாகராஜ்
@~முஹம்மத் ஆஷிக்
@இக்பால் செல்வன்
@அருணா செல்வம்
@கும்மாச்சி
@ஸ்ரீராம்.
@புலவர் சா இராமாநுசம்
@! சிவகுமார் !
@Tamilraja k
@Sasi Kala
@Easy (EZ) Editorial Calendar
@பால கணேஷ்
@முத்தரசு (மனசாட்சி)
@சமீரா
@இராஜராஜேஸ்வரி
@கோவை2தில்லி
@MANO நாஞ்சில் மனோ
@T.N.MURALIDHARAN
@மாதேவி
@தொழிற்களம் குழு

நேரமின்மை காரணமாக உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டத்துக்கும் தனித்தனியே பதிலெழுதி, எனது நன்றியைத் தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//
வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது
வயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது
மின்சாரத்தைத் தேடுது
ஏறாதே பில்லு! போதாதோ சொல்லு!
கரண்ட்டில்லா ஊரு! கரையேத்த யாரு?
வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது//

அழகான நகைச்சுவையான பாடல்.
பாராட்டுக்கள்.