Monday, October 29, 2012

கமலுக்கு மணி கட்டிய முக்தா சீனிவாசன்





சினிமா குறித்து நான் வலைப்பதிவில் அதிகம் எழுதுவதில்லை. ஆனால், ‘தி ஹிந்துநாளிதழில் ‘நாயகன்படம் வெளியாகி 25 ஆண்டுகளானதை முன்னிட்டு, கமல்ஹாசன் எழுதிய ஒரு கட்டுரையில், அவர் திருவாய்மலர்ந்தருளிய சில கருத்துக்களை வாசித்தபோது, ‘இந்தப் பூனைக்கு மணிகட்ட யாருமில்லையா?என்று எண்ணியது உண்மை. முக்தா சீனிவாசன் சென்ற வார ‘தி ஹிந்துவில் கமலின் கருத்துக்களை ஆணித்தரமாக மறுத்து எழுதிய இடுகையை வாசித்ததும் சபாஷ்! இது பதில்என்று சொல்லிக் கொண்டேன். அவர்களது வாதப்பிரதிவாதங்கள் இணையத்தில் கிடைப்பதால், அவற்றை விட்டுவிட்டு, ஒரு சராசரி ரசிகனாக எனக்கு எழுந்த சில கேள்விகளை மட்டும் முன்வைக்க விருப்பம்.

      கமல் தனது கட்டுரையில், ‘நாயகன் படத்தின் வெற்றிக்குத் தான் மட்டுமே காரணம் என்பதுபோன்ற ஒரு பிரமையை உருவாக்க மிகவும் மெனக்கெட்டிருந்ததைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. ஆனால், முக்தா சீனிவாசன் தனது மறுப்பில் சொல்லியிருப்பதுபோல, அதற்காக படத்தின் தயாரிப்பாளரை மட்டம் தட்டியிருப்பது, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று திரைப்படத்துறையில் தசாவதாரமெடுத்து, விசுவரூபமாய் விண்ணளாவ நிற்கிற ஒரு ‘நாயகன்செய்யத்தக்க காரியமல்ல.

      மேற்படிக்கட்டுரையில், வாசிப்பவரைப் புருவம் சுருங்கச் செய்த சில பத்திகளைக் காண்போம்.

      //After making Vikram, in 1986, I realised I should have asked Mani to direct it. It was his cup of tea. He asked me what had happened, because the story was so different from what I’d told him. I told him that this was bound to happen. I said, “The intelligence of (the writer) Sujatha and Kamal Haasan was bound to be diluted by Kodambakkam. It will happen to you too.”//

      விக்ரம் படத்தின் கதையை சுஜாதா ‘குமுதம்பத்திரிகையில் எழுதியதைப் படித்தவர்களுக்கு, ‘காக்கிச்சட்டைபடத்தின் வெற்றியில் பிரகாசமாக இருந்த இயக்குனர் ராஜசேகரை கமல் இயக்குனராக்கியிருந்தார் என்று சுஜாதா குறிப்பிட்டிருந்தது ஞாபகமிருக்கும். என்ன செய்வது, ராஜசேகர் அகாலமரணமடைந்து விட்டதால், கமல் என்ன வேண்டுமானாலும் இப்போது சொல்லலாம்.

      அப்புறம், சுஜாதா மற்றும் கமல் இருவரின் புத்திசாலித்தனத்தை கோடம்பாக்கம் நீர்த்துவிடச் செய்தது என்று கமல் குறிப்பிட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. தன் சொந்தப்பணத்தைப் போட்டு, தானே தயாரித்த படத்தில் அவரே வியாபாரத்துக்காக, சமரசங்கள் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டுவிட்டு, இன்னொரு பழம்பெரும் தயாரிப்பாளரின் தலையை உருட்டுவது என்ன நியாயமோ? கமலின் கூற்றுப்படியே ‘ஓல்ட்-ஸ்கூல்தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் செய்தால் தவறு; ‘நியோ-ஸ்கூல்கமல் செய்தால் அது சரியா? என்ன வாதமோ, கமலுக்கே வெளிச்சம்.

      //A little later, the producer-director Muktha Srinivasan, with whom I’d made films like Simla Special, said he wanted to make another film with me.//

//Muktha Films had a reputation for being tight-fisted. When Mr. Srinivasan heard that we wanted to shoot in Bombay, he wasn’t happy. He just wanted us to make a film — any film — that would net him a profit of Rs. 5 lakh. That is how he was used to working. Films were a business. He wasn’t interested in films as art.//

      சிம்லா ஸ்பெஷல்போன்ற தனது படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் என்று சௌகரியமாக, தனது ஒரு தோல்விப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் கமல். உண்மை என்ன தெரியுமா? ‘தங்கத்திலே வைரம்,’ ‘பட்டிக்காட்டு ராஜாபோன்ற டப்பாப் படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துவந்த கமல்ஹாசனை முழுநீளப் படத்துக்கும் கதாநாயகனாகப் போட்டு எடுத்ததோடு, கமலை முதன்முதலாக ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்என்று மூக்கால் பாடவைத்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டவரும் இதே முக்தா சீனிவாசன் தான்,பாவம்!

      நிறைகுடம்தொடங்கி ‘பரீட்சைக்கு நேரமாச்சுவரைக்கும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு டஜன் படங்கள், ‘பொல்லாதவன்,சிவப்புச்சூரியன்என்று ரஜினியை வைத்து இரண்டு படங்கள் எடுத்தவர்கள் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தினர். மீதியை கோடிட்ட இடத்தை நிரப்புவது போல நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

      கமலின் கூற்றுப்படி, முக்தா சீனிவாசனுக்கு சினிமா எடுப்பது வியாபாரம்; அப்படியென்றால், கமலுக்கு இல்லையா? அவர் தயாரித்த படங்கள், நடித்த படங்கள் எல்லாமே கலைப்படங்கள் தானா? முக்தா பிலிம்ஸை விடுங்கள்! தேவர் பிலிம்ஸில் யானைக்கு அண்ணனாக நடித்த ‘ராம்-லட்சுமண்மற்றும் ‘தாயில்லாமல் நானில்லைபோன்ற படங்களெல்லாம் கலையில் தோய்ந்து போன படங்களா? ஏ.வி.எம்-முடன் இணைந்து ‘சகலகலாவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, பேர் சொல்ல ஒரு பிள்ளைபோன்ற படங்களில் நடித்தாரே. அவையெல்லாம் உலகத்திரைப்படங்களின் வரிசையில் வருமா?
     
      //Earlier in my career, I told Bharathiraja that the psychopathic killer in Sigappu Rojakkal should not be singing and dancing. But he deflected my objections saying that the song (Ninaivo oru paravai) was a dream song, shot from the heroine’s point of view.//

      சந்தடி சாக்கில் பாரதிராஜாவையும் உரசியாகி விட்டது. மலையாளத்தில் ‘அடிமகள்என்ற பெயரில் வெளியான படத்தை கே.பாலசந்தர் ‘நிழல் நிஜமாகிறதுஎன்ற பெயரில் எடுத்திருந்தார். அந்தப் படம் வந்த சுவடே தெரியாமல் சுருண்டு கொண்டது. காரணம், படத்தில் வந்த அனுமந்துவின் கதாபாத்திரம் 16 வயதினிலே சப்பாணியோடு அவ்வளவு ஒத்திருந்தது. பாரதிராஜா ஒரு புயல்போல தமிழ்சினிமாவில் வீசிய அந்தக் கதாபாத்திரத்தைப் போன்ற இன்னொரு பாத்திரத்தை ரசிகர்கள் ஏற்க விரும்பவில்லை. அப்படியொரு கதாபாத்திரத்தைக் கமலுக்குத் தந்த பாரதிராஜா ‘நினைவோ ஒரு பறவைபாடலை எடுத்ததிலும் கமலுக்கு ஆட்சேபணை தானாம். சரி, அவரது குருநாதரின் ‘நிழல் நிஜமாகிறது படத்தில் ஒரு அரசு அதிகாரியாக வருகிற கமல் திடீரென்று சம்பந்தா சம்பந்தமின்றி பரத நாட்டியம் ஆடுகிற காட்சிக்கு மட்டும் எப்படி ஒப்புக்கொண்டு நடித்தாரோ!

      மீண்டும் சுஜாதா எழுதிய ‘விக்ரம்படக்கதைக்கு வருவோம். ‘நாயகன் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி; அவன் நடனமாடுவது போலக் காட்டினால், சரிவராது என்பதால், படத்தின் டைட்டில் காட்சியில் புகைமூட்டத்துக்குள் ஆடுவது போலக் காட்டியதாகசுஜாதா எழுதியிருந்தார். அதே படத்தில் ‘என் ஜோடி மஞ்சக்குருவிஎன்று கமல் குத்தாட்டம் போட்டிருந்தாரே, அது எதில் சேர்த்தி?

     //Nayakan was one of the films — along with the films I’ve done with Balu Mahendra, K. Vishwanath and, of course, my guru K. Balachander — that made me decide that I should not be doing short-livedmasala movies anymore.//

      கமலுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும், இது ரொம்பவே ஓவர்! ‘நாயகன் படத்துக்குப் பிறகு, கமல் மசாலா படத்திலேயே நடிக்கவில்லையா? உலக நாயகனின் காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?

     //I told the producer that he was going to get awards. He said he hadn’t made the film to get awards, merely to make profits. And he was nervous about the film’s dark lighting and so on.//

      குணாபடம் வெளிவரும் முன்னர், ‘அது ஒரு ஆர்ட் ஃபிலிம்என்ற செய்தியை பல வாரப்பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. உடனே நமது உலக நாயகர் ஒரு பிரபல வாரப்பத்திரிகைக்குக் கடிதம் எழுதியிருந்தார். “ வினியோகஸ்தர்களைப் பொறுத்தவரை ஆர்ட் ஃபிலிம் என்பது கெட்ட வார்த்தை. எனது குணா படம் ஆர்ட் ஃபிலிம் அல்ல; இது எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட படம்,என்று பகீரங்கமாக ஒரு விளக்கம் எழுதியிருந்தார். அதாவது என் படம் கலைப்படமில்லை; வியாபாரப்படம்தான் எல்லாரும் வந்து பாருங்கோன்னு ‘அபிராமி...அபிராமி...அபிராமி...ன்னு கதறிவிட்டார் மனிதர்.

      நாயகன்படம் தயாரிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை கமலும் முக்தா சீனிவாசனும் மற்றவர்களும்தான் அறிவார்கள். ஆனால், நினைவு தெரிந்த நாள் முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம் என பலமொழிகளில் பல படங்களைப் பார்த்துக்கொண்டு வரும் எனக்கு உலக நாயகன் கமல்ஹாசனின் படங்களை ரா.பா-வுக்கு முன், ரா.பாவுக்குப் பின் என்று தலைகீழாகத் தெரியும். (ரா.பா ராஜபார்வை).

       நான் இணையத்தில் எழுத வந்த நாள்முதலாகவே, கமல்ஹாசனின் படங்கள் குறித்த அபரிமிதமான மெய்சிலிர்ப்புகளையும், நேர் எதிர்மறையான மூர்க்கத்தனமான விமர்சனங்களையும் வாசித்து வருகிறேன். அவரது படங்கள் தொடர்புடைய செய்திகள் இணையமெங்கும் விரவிக் கிடந்தாலும், ஒரு ரசிகனாக அவரது படத்தை மட்டுமே விமர்சிப்பது என்று அவர் குறித்த எதிர்மறையான செய்திகளை வைத்து இடுகை எழுத முயற்சித்ததில்லை.

      ஆனால், ‘நாயகன்படம் பற்றிய கமலின் கட்டுரை, மீண்டும் மீண்டும் அவரது இரட்டை நிலையையும், ஓல்ட்-ஸ்கூல் என்று ஏற்றிய ஏணியைத் தூற்றி, தன்னை மேதாவி என்று நிலைநிறுத்த முயல்கிற அனாவசியமான ஈகோவையுமே வெளிப்படுத்தியது. ஒரு திரைப்பட ஆர்வலன் என்ற முறையில், இந்த இடுகையை எழுதுவதற்கு அவரது இந்த விபரீத முரண்பாடே காரணமாகவும் இருந்தது.

      கலைஞானி! உங்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?

***********

25 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
ஹிண்டு பத்திரிக்கை என்றால் தமிழர்கள் படிக்க மாட்டார்கள்
எனக் கூட கமல் நினைத்திருக்க வாய்ப்புண்டு
இதுவே தினத்தந்தி குமுதம் என்றால் ஒருமாதிரியும்
கணையாழி கசட தபற எனில் ஒரு மாதிரியும் பேசும்
வல்லமையும் இரட்டைக் குணமும் கமலுக்கு உண்டு
சரி விடுங்கள் அவர் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார்

tech news in tamil said...

மிக அருமை

semmalai akash said...

அருமையான விளக்கங்கள், பல தகவல்கள் எனக்கு புதியதாகவே இருக்கிறது, இதுவரை கேட்டதுகூட இல்லை,பகிர்வுக்கு நன்றி ஐயா.......

சசிகலா said...

பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன் .

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லியிருப்பவை நூற்றுக்கு நூறு சரி. கமல் பேசுவதைப் புரிந்து கொள்ளவே தனி அகராதி வேண்டும். புரியாமல் பேசுவதில் வல்லவர்.

SathyaPriyan said...

இதே கருத்துடன் ஒட்டி அமைந்த எனது பதிவு. ஆனால் உங்கள் அளவுக்கு அழகாக எழுத இயலவில்லை.

http://sathyapriyan.blogspot.com/2012/10/blog-post_25.html

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் அருமை... நன்றி...
tm8

unmaiyalan said...

இதே மாதிரி ரஜினி பற்றி எழுத துணிவிருக்கா ?........எழுதுவீர்கள் என்றால் கமல் செய்தது 100 தவறு .....இல்லை என்றால் ரஜினியோடு ஒப்பிடும் போது இது தவறே இல்லை ..................

settaikkaran said...

இடுகையைப் பாராட்டியவர்களுக்கு நன்றி! :-)

//unmaiyalan said...

இதே மாதிரி ரஜினி பற்றி எழுத துணிவிருக்கா ?........எழுதுவீர்கள் என்றால் கமல் செய்தது 100 தவறு .....இல்லை என்றால் ரஜினியோடு ஒப்பிடும் போது இது தவறே இல்லை ..................//

இதை விட பலவீனமான வாதம் கிடைக்கவில்லையா? :-)) கமலை ஏதாவது சொன்னால், உடனே ரஜினியையும் சொல்லணுமா? போங்க சார், காமெடி பண்ணிக்கிட்டு! :-))




அப்பாதுரை said...

வெளியிலிருந்து படிக்கும் பொழுது கமல்ஹாசன் யாரையும் இடித்தது போலத் தோன்றவில்லையே? சுஜாதாவின் intelligenceஓடு சந்தடி சாக்கில் தன்னையும் சேர்த்துக் கொண்டதை வேண்டுமானால் சொல்லலாம் :)

ரஜினி பற்றி எழுத தைரியம் தேவையில்லை - அரை புத்திசாலித்தனத்தோடு முதலில் ஏதாவது சொல்லட்டும், பிறகு பார்ப்போம் :)

having said that, தமிழ்த் திரையுலகில் இத்தனை காலம் மேல்தளத்தில் குப்பை கொட்ட ஏதாவது புத்திசாலித்தனம் இருந்தே ஆகவேண்டும்.

Unknown said...

கலைஞானி! உங்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?

>>>>

நச்...

பொன் மாலை பொழுது said...

/// ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்’ என்று மூக்கால் பாடவைத்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டவரும் இதே முக்தா சீனிவாசன் தான்,பாவம்! ///

சீரியசான ஒரு இடுகையில் தங்களையும் மீறி வெளிவந்த இந்த நக்கல்............
கமலிடமும் மறதிகள் நிறைய உண்டு போலும். விடுங்கள்.

கும்மாச்சி said...

மிகவும் சரியான கருத்து. அவர் குருநாதரே கலைஞானியின் மேதாவித்தனத்தாலும், கர்வத்தினாலும் இவரை வைத்து படம் எடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகாலம் ஆகிறது. இவர் காசை கொட்டவைத்து தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி வரவைத்த "ஆளவந்தான்" என்ன ஆனது என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

கமலகாசனுக்கு தான் அறிவுஜீவி என்ற ஒரு மமதை உண்டு.அதை ஓயாமல் அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டிருப்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்.

அந்த இரு கட்டுரைகளையும் நான் நிதானமாக ஒரு முறையும்,ரசித்து இன்னொரு முறையும் படித்தேன்.

மேற்கண்ட அறிவுஜீவித்தனத்தை அவிழ்த்துக் காட்டும் அவசியம் முதல் கட்டுரையில் இருந்தது; விட்டால் மணியையும் உரசியிருப்பார்;ஆனால் அவர் திரும்ப இவரது டவுசரைக் கழட்டி விட்டால் என்ன செய்வது?

முக்தா பேசாமல் புகைந்து கொண்டுதான் இருப்பார்; அவர் தன்னை எதிர்த்துக் கருத்தும் சொல்லும் அளவை விடத் தான் வளர்ந்து விட்டதாக எண்ணிய மமதையின் வெளிப்பாடுதான் அந்தக் கடிதம்.

சரியான வைத்திருக்கும் தலைப்பின் படி- முக்தா மணியைக் கட்டி விட்டார். இனி முன்னாலும் பின்னாலும் அடைத்துக் கொண்டு பேசாமல் இருப்பதே வழி. :))

பிகு: எனக்கும் கமலகாசன் நடித்த பல படங்கள் பிடிக்கும்; நான் ரசினி ரசிகர் அல்ல.(இது மாதிரி டிஸ்கியெல்லாம் போட வேண்டியதிருக்கிறது, இல்லாவிட்டால், நீ ரசினியின் நடிப்பு பற்றி இப்படி எங்காவது எழுதியிருக்கிறாயா என்ற கேள்வி வந்து தொலைக்கும்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நச் பதிவு, அலசி காய போட்டுட்டீங்க... நிறைய டீட்டெயில்ஸ்... கொஞ்சம் சமீபகால உதாரணங்களும் கொடுத்திருக்கலாம்....!

Krubhakaran said...

கலைஞானி! உங்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?


Super.

பால கணேஷ் said...

மிகச் சரியான வாதங்கள். அருமையாக துவைத்துக் காயப் போட்டுள்ளீர்கள் கலைஞானியை. அவர் விக்ரம் பற்றியும் குணா பற்றியும் அளித்த பேட்டிகளையும் அவரின் துவக்க காலத்திலிருந்தே அவதானித்து வருபவன் என்ற முறையிலும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் கை தட்டி ஆமோதிக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

சரியான அலசல்....

கமல் - ஒன்றும் சொல்வதிற்கில்லை. அவர் பேசுவது பல சமயங்களில் அவருக்கே புரிவதில்லை!

Gopi said...

//இதை விட பலவீனமான வாதம் கிடைக்கவில்லையா? :-)) கமலை ஏதாவது சொன்னால், உடனே ரஜினியையும் சொல்லணுமா? போங்க சார், காமெடி பண்ணிக்கிட்டு! :-))//

அது காமெடியாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனா அப்படி சொல்லி அவர் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீங்க நைசா எஸ் ஆயிட்டீங்கன்னு தான் எனக்கு தோணுது. அவர் ரஜினியை குறிப்பிட்டது ஒரு குறியீடு தான். "கமலை மட்டும் ஏன் எல்லாரும் எப்படா போட்டு பார்க்கலாம்னு காத்துக்கிட்டு இருக்கீங்க, மத்தவங்களை அதே மாதிரி விமர்சிப்பீங்களான்றது" தான் அவர் கேள்வி.

ரஜினி ஒக்கேனக்கல் பத்தி பேசுனாரே அதை பத்தி ஏதாவது எழுதி இருக்கீங்களா? இல்லை மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்களை கமல் எடுத்தாரே, அதை பாராட்டி தான் எழுதி இருக்கீங்களா?

வர்த்தக வெற்றி மட்டும் இருந்தா போதும், இங்கு அத்தனை அபத்தங்களும், ஒன்னு ஆராதிக்கப்படும் இல்லைன்னா அமுக்கி வாசிக்கப்படும். அது இல்லையென்றால் அவர் எப்படிப்பட்ட படைப்பாளியாய் இருந்தாலும் அவரை கிழிக்க கத்தியோடு அலைவது நம் குணம்.

settaikkaran said...

//@ Ramani

மிகச் சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள். ஹிண்டு பத்திரிக்கை என்றால் தமிழர்கள் படிக்க மாட்டார்கள் எனக் கூட கமல் நினைத்திருக்க வாய்ப்புண்டு. இதுவே தினத்தந்தி குமுதம் என்றால் ஒருமாதிரியும் கணையாழி கசட தபற எனில் ஒரு மாதிரியும் பேசும் வல்லமையும் இரட்டைக் குணமும் கமலுக்கு உண்டு. சரி விடுங்கள் அவர் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார்//

விளக்கமாகச் சொல்லி, இறுதியில் முத்தாய்ப்பாக உங்களது கருத்தை அழகாய் வலியுறுத்தியிருக்கிறீர்கள்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்!

//@ஆட்டோமொபைல்

மிக அருமை//

மிக்க நன்றி!

//@Semmalai Akash!

அருமையான விளக்கங்கள், பல தகவல்கள் எனக்கு புதியதாகவே இருக்கிறது, இதுவரை கேட்டதுகூட இல்லை,பகிர்வுக்கு நன்றி ஐயா.......//

வாங்க ஆகாஷ்! கொஞ்சம் பழைய தகவல்கள்தான்; நிறைய நினைவிலிருந்து எழுதியவை. மிக்க நன்றி ஆகாஷ்! :-)

//@Sasi Kala

பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன் .//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி!

//@ஸ்ரீராம்.

நீங்கள் சொல்லியிருப்பவை நூற்றுக்கு நூறு சரி. கமல் பேசுவதைப் புரிந்து கொள்ளவே தனி அகராதி வேண்டும். புரியாமல் பேசுவதில் வல்லவர்.//

துரதிருஷ்டவசமாக அவரது கட்டுரையைப் பலர் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். மிக்க நன்றி! :-)

//@SathyaPriyan

இதே கருத்துடன் ஒட்டி அமைந்த எனது பதிவு. ஆனால் உங்கள் அளவுக்கு அழகாக எழுத இயலவில்லை.http://sathyapriyan.blogspot.com/2012/10/blog-post_25.html//

நானும் வாசித்தேன் நண்பரே! ஒத்த கருத்துடைய பதிவர் என்பதில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@திண்டுக்கல் தனபாலன்

விமர்சனம் அருமை... நன்றி...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

@அப்பாதுரை said...

வெளியிலிருந்து படிக்கும் பொழுது கமல்ஹாசன் யாரையும் இடித்தது போலத் தோன்றவில்லையே? சுஜாதாவின் intelligenceஓடு சந்தடி சாக்கில் தன்னையும் சேர்த்துக் கொண்டதை வேண்டுமானால் சொல்லலாம் :)//

கட்டுரையை முழுமையாக இணையத்திலேயே கூடப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்களே சார்? :-)

//ரஜினி பற்றி எழுத தைரியம் தேவையில்லை - அரை புத்திசாலித்தனத்தோடு முதலில் ஏதாவது சொல்லட்டும், பிறகு பார்ப்போம் :)//

அவரும் சொல்லுவார்- சொல்லியிருக்கிறார். :-)

// having said that, தமிழ்த் திரையுலகில் இத்தனை காலம் மேல்தளத்தில் குப்பை கொட்ட ஏதாவது புத்திசாலித்தனம் இருந்தே ஆகவேண்டும்.//

நிச்சயம்! வெற்றி அதிர்ஷ்டம் அல்ல! ஆனால், அதற்கு உதவிய ஏணிகளை மறக்காமல் இருப்பது நல்லதல்லவா? மிக்க நன்றி! :-)

//@விக்கியுலகம்

நச்....//

மிக்க நன்றி நண்பரே! :-)

//@Manickam sattanathan

சீரியசான ஒரு இடுகையில் தங்களையும் மீறி வெளிவந்த இந்த நக்கல்............//

:-) எம்புட்டு ட்ரை பண்ணாலும் தலைகாட்டிருது.

//கமலிடமும் மறதிகள் நிறைய உண்டு போலும். விடுங்கள்.//

அப்படித்தான் தோணுது. மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//கும்மாச்சி

மிகவும் சரியான கருத்து. அவர் குருநாதரே கலைஞானியின் மேதாவித்தனத்தாலும், கர்வத்தினாலும் இவரை வைத்து படம் எடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகாலம் ஆகிறது. இவர் காசை கொட்டவைத்து தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி வரவைத்த "ஆளவந்தான்" என்ன ஆனது என்று நம் எல்லோருக்கும் தெரியுமே.//


அது குறித்தும் அந்த சமயத்தில் வெளியான பல செய்திகளை நானும் வாசித்திருக்கிறேன். மிக்க நன்றி! :-)

//| * | அறிவன்#11802717200764379909 | * |

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கமலகாசனுக்கு தான் அறிவுஜீவி என்ற ஒரு மமதை உண்டு.அதை ஓயாமல் அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டிருப்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்.//

அதில் பெரிய தவறு இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் சொல்வதுபோல ‘Give the devil its due’ என்பதைச் சற்றுக் கடைபிடித்தால் நன்றாக இருந்திருக்கலாம் போலிருக்கிறது. :-)

//அந்த இரு கட்டுரைகளையும் நான் நிதானமாக ஒரு முறையும்,ரசித்து இன்னொரு முறையும் படித்தேன். மேற்கண்ட அறிவுஜீவித்தனத்தை அவிழ்த்துக் காட்டும் அவசியம் முதல் கட்டுரையில் இருந்தது; விட்டால் மணியையும் உரசியிருப்பார்;ஆனால் அவர் திரும்ப இவரது டவுசரைக் கழட்டி விட்டால் என்ன செய்வது?//

அந்த வாதப்பிரதிவாதங்களை இரு தனி நபர்கள் சம்பந்தப்பட்டது என்று நான் இந்த இடுகையில் கொள்ளவில்லை. ஆனால், சராசரி சினிமா ரசிகனாக, ஒரு முன்னாள் கமல் ரசிகனாக எனக்கு எழுந்த கேள்விகளையே முன்வைத்தேன்.

//முக்தா பேசாமல் புகைந்து கொண்டுதான் இருப்பார்; அவர் தன்னை எதிர்த்துக் கருத்தும் சொல்லும் அளவை விடத் தான் வளர்ந்து விட்டதாக எண்ணிய மமதையின் வெளிப்பாடுதான் அந்தக் கடிதம். சரியான வைத்திருக்கும் தலைப்பின் படி- முக்தா மணியைக் கட்டி விட்டார். இனி முன்னாலும் பின்னாலும் அடைத்துக் கொண்டு பேசாமல் இருப்பதே வழி. :))//


அவர் கருத்துக்களைத் தெரிவிக்கட்டும். நானும் அவ்வப்போது சினிமாவைப் பற்றி கொஞ்சம் காரசாரமாக எழுத வேண்டாமா?

//பிகு: எனக்கும் கமலகாசன் நடித்த பல படங்கள் பிடிக்கும்; நான் ரசினி ரசிகர் அல்ல.(இது மாதிரி டிஸ்கியெல்லாம் போட வேண்டியதிருக்கிறது, இல்லாவிட்டால், நீ ரசினியின் நடிப்பு பற்றி இப்படி எங்காவது எழுதியிருக்கிறாயா என்ற கேள்வி வந்து தொலைக்கும்!)//

எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும்தான்! ஆனால், ரஜினியையும் விமர்சித்து எழுதியிருக்கிறேன். அதைப் பலர் கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி! :-)

settaikkaran said...

//@பன்னிக்குட்டி ராம்சாமி

நச் பதிவு, அலசி காய போட்டுட்டீங்க... நிறைய டீட்டெயில்ஸ்... கொஞ்சம் சமீபகால உதாரணங்களும் கொடுத்திருக்கலாம்....!//

வாங்க பானா ராவன்னா! இடுகையே ‘நாயகன்’ படம் பற்றியது என்பதால், கொஞ்சம் அந்தக்காலத்துலேயே இருந்திட்டேன். இன்னொரு சான்ஸ் கொடுக்காமலா இருக்கப்போறாரு கமல்? :-)

மிக்க நன்றி! :-)

//@Krubhakaran

Super.//

மிக்க நன்றி நண்பரே!

//@பால கணேஷ்

மிகச் சரியான வாதங்கள். அருமையாக துவைத்துக் காயப் போட்டுள்ளீர்கள் கலைஞானியை. அவர் விக்ரம் பற்றியும் குணா பற்றியும் அளித்த பேட்டிகளையும் அவரின் துவக்க காலத்திலிருந்தே அவதானித்து வருபவன் என்ற முறையிலும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் கை தட்டி ஆமோதிக்கிறேன்.//

நன்றி கணேஷ்! இந்த மாதிரி இடுகைகளில் வந்து ஆமோதிப்பதற்கும் ஒரு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. மிக்க நன்றி கணேஷ்!

//@வெங்கட் நாகராஜ்

சரியான அலசல்....கமல் - ஒன்றும் சொல்வதிற்கில்லை. அவர் பேசுவது பல சமயங்களில் அவருக்கே புரிவதில்லை!//

ஹாஹா! இது செம பஞ்ச் வெங்கட்ஜீ! மிக்க நன்றி! :-)

//@Gopi

அது காமெடியாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனா அப்படி சொல்லி அவர் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீங்க நைசா எஸ் ஆயிட்டீங்கன்னு தான் எனக்கு தோணுது. அவர் ரஜினியை குறிப்பிட்டது ஒரு குறியீடு தான். "கமலை மட்டும் ஏன் எல்லாரும் எப்படா போட்டு பார்க்கலாம்னு காத்துக்கிட்டு இருக்கீங்க, மத்தவங்களை அதே மாதிரி விமர்சிப்பீங்களான்றது" தான் அவர் கேள்வி.//

அனேகமாக நீங்க என் பதிவுக்கு வருவது இதுவே முதல் தடவையென்று நினைக்கிறேன். பால் தாக்கரேயை ‘என் தெய்வம் மாதிரி’ என்று ரஜினி சொன்னபோது, ‘காறித்துப்ப வேண்டும் போலிருக்கிறது’ என்று எழுதியிருக்கிறேன். அப்புறம், எனது வலையுலகப் பயணமே ரஜினியைக் கிண்டல் பண்ணி நான் எழுதிய ‘ரசிகா ரசிகா ரஜினி சொல்றேன் அடக்கி வாசிடா’ என்ற நக்கல் பாடலில் தான் (எனது பழைய பதிவில்) தொடங்கியது. கூகிளில் தேடினால் கிடைக்கிறது.

அப்போது எந்த ரஜினி ரசிகனும் என்னிடம் சண்டைக்கு வரவில்லை. இன்னொரு வலைப்பதிவில் சென்று என்னை நக்கல் பண்ணி, எனது வலைப்பதிவுக்கு ஹிட்ஸ் அதிகமாக்கவில்லை! :-)))))))))


//ரஜினி ஒக்கேனக்கல் பத்தி பேசுனாரே அதை பத்தி ஏதாவது எழுதி இருக்கீங்களா? இல்லை மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்களை கமல் எடுத்தாரே, அதை பாராட்டி தான் எழுதி இருக்கீங்களா?//

எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுகிறேன். அவ்வளவுதான்! எனது வலைப்பதிவு முதல் 1000 வலைப்பதிவுகளில் கூட இடம் பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இந்த அளவு பிரபலமே இல்லாத ஒருவனான நான் எழுதுவதையே நீங்கள் விமர்சிக்க முடியுமென்றால், கமலையும் நான் விமர்சிக்க முடியும். அதுவும் நான் காசு கொடுத்து வாங்குகிற ஒரு செய்தித்தாளில் அப்படியொரு கட்டுரை வந்திருக்கும்போது, என் மனதில் பட்டதை எழுதுவேன் – தேவைப்பட்டால் இனியும்! :-)

//வர்த்தக வெற்றி மட்டும் இருந்தா போதும், இங்கு அத்தனை அபத்தங்களும், ஒன்னு ஆராதிக்கப்படும் இல்லைன்னா அமுக்கி வாசிக்கப்படும். அது இல்லையென்றால் அவர் எப்படிப்பட்ட படைப்பாளியாய் இருந்தாலும் அவரை கிழிக்க கத்தியோடு அலைவது நம் குணம்.//

கமலுக்கும் மற்ற நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால், அது உங்கள் விருப்பம். என் கருத்து என் விருப்பம். அவ்வளவே!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

Unknown said...

அடடா எவ்வளவு செய்திகள்! எப்படிதான் நினைவில் வைத்துள்ளீர்களோ? எனக்கு வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள்!

வருண் said...

***Gopi said...

//இதை விட பலவீனமான வாதம் கிடைக்கவில்லையா? :-)) கமலை ஏதாவது சொன்னால், உடனே ரஜினியையும் சொல்லணுமா? போங்க சார், காமெடி பண்ணிக்கிட்டு! :-))//

அது காமெடியாகவே இருந்து விட்டு போகட்டும்.***

என்ன காமெடியா இருந்துட்டுப் போகட்டும்? அது காமெடியேதான் சார்! :))))

கமலைச்சொல்லி என்ன செய்ய? உங்கள மாரி ஆட்களைத்தான் சொல்லனும் சார்.

அந்தாளு தன் குறையை ஒத்துக்கம்மாட்டர்னா, நீங்க அவர் குறையை நிறையாக்கும் மிகப்பெரிய காமெடியன், சார்! :)))

எங்க இருந்து வர்ரீங்க நீங்க, அந்த "லோக சினிமா ரசிகன்" போன்றவர்கள் எல்லாம்??

Gopi said...

வேற எதுவும் உருப்படியா யோசிக்க தெரியாதுன்னாலும், குற்றம் கண்டுபிடித்தே (அதுவும் கமல்னா காண்டு பொங்கி வழிய)பேர் வாங்க நினைக்கும் வருண் வகையறாக்கள் எல்லாம் மலிவா கிடைக்கிற ஊர்ல, எங்களை மாதிரியும் கொஞ்சம் பேரு இருப்பாங்க சார்.

நீங்க எல்லாம், அஞ்சாம் கிளாஸ் நீதி போதனை கதையை, பேரன் புத்தகத்துல இருந்து படிச்சிட்டு வந்து மேடையில அளந்து விட்டா வாய் பொளந்துக்கிட்டு விசிலடிக்கிற 'அன்ட்ராயருங்க' தானே? உங்களுக்கு 'அந்தாளு' லெவல் எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.

புள்ள குட்டிங்க எல்லாம் இருக்கா, ஸ்கூலுக்கு போறாங்களா? அந்த 'டயலாக்' ஞாபகத்துக்கு வந்தா அதுவும் 'அந்தாளு' எழுதுனது தான்.