Sunday, March 28, 2010

ஜெகன்மோகினி

வந்த செய்தி:

முதுமையிலும் இளமை ஊஞ்சலாட்டம்: நடிகை ஆகும் ஆசையில் பணத்தை இழந்த 84 வயது பாட்டி; டைரக்டர் அரவிந்த் மேத்தா மீது புகார்









வராத செய்தி:


படத்தில் வாய்ப்பளிப்பதாகக் கூறி மோசடி:
பாட்டிகள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகை

சென்னை,மார்ச் 28. அண்மையில் படத்தில் வாய்ப்பளிப்பதாகக் கூறி, லலிதா என்ற 84 வயதுப் பாட்டி உட்பட பல பெண்களிடம் பணமோசடி செய்த போலித்தயாரிப்பாளர் கைதானது தெரிந்ததே. இந்தச் செய்தி வெளியானதும் பல பாட்டிகள் தங்களிடமும் பணமோசடி செய்திருப்பதாகப் புகார் தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதில் ஒரு பாட்டி பலமாகத் தும்மியதில் அவரது பல்செட் கழன்று விழுந்ததால் எழும்பூரில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

புளியங்குடி பூவாத்தா என்ற 93 வயதுப் பாட்டி, தன்னை "ஜெகன்மோகினி" படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதாகக் கூறி, போலித் தயாரிப்பாளர் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் வாங்கியதாகப் பரபரப்பாகக் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த விஷயத்தில் ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

"பூவாத்தாவைக் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை! நமீதாவின் தோழியாக நடிக்க வைப்பதாகக் கூறினேன்; பூவாத்தா அதற்கு மறுத்து விட்டார். நமீதாவின் தங்கையாக நடிப்பேன் என்று அடம்பிடித்தார்; அதற்கு நமீதா மறுத்து விட்டார். இப்பொழுது என்னைப் பழிவாங்க இப்படியொரு புகார் தெரிவித்திருக்கிறார்," என்று கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் பரிதாபமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நடிகை நமீதாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டதால் அவரை விசாரிக்க, 1234 போலீஸ்காரர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 72 மணி நேரமாக நடந்த இந்த விசாரணையின் போது நடிகை நமீதாவுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நமீதாவின் வீட்டிலிருந்து விசேஷ ரயில் மூலம் அலுவலகம் திரும்பினர்.

சுங்கான்கடை சுப்பாயி என்ற 91 வயதுப் பாட்டி சூர்யாவுடன் கதாநாயகியாக நடிக்க விரும்பியதால், போலித்தயாரிப்பாளருக்குத் தன் காதிலிருந்த பாம்படங்கள் வரைக்கும் கழற்றி விற்றுப் பணமளித்ததாகத் தெரிகிறது. தற்சமயம் அவரது உடலின் எடை, பாம்படங்கள் இல்லாமல் கணிசமாகக் குறைந்திருப்பதால், பறந்து விடாமலிருக்க இரண்டு காதுகளிலும் படிக்கல்லைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பதாக உருக்கமாகத் தெரிவித்தார்.

இது தவிர பல்லாவரம் முதியோர் இல்லத்திலிருந்து, சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிற ஆசையில் குப்பம்மாள் என்ற 88 வயதுப்பாட்டி குட்டிச்சுவரேறிக் குதிக்க முயன்றதில் சுவர் இடிந்ததோடு, இருந்த ஒரே ஒரு கோரைப்பல்லும் உடைந்ததால், கோடம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இனி அந்தப் பாட்டிக்குப் பல்லே முளைக்காது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டதால், உறவினர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

இது தவிரவும், சூளைமேடு பகுதியில் பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கச் சென்ற பசவம்மாள் என்ற பாட்டிக்கு, சினிமா ஆசை காட்டி அவரது சுருக்குப்பையிலிருந்த இருபத்தி மூன்று ரூபாயையும், ஒரு கவளி வெற்றிலையையும் அபேஸ் செய்த பலே ஆசாமிகளை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் சுருக்குப்பை கண்டுபிடிக்கப்பட்டதால், குற்றவாளிகள் சென்னையில் தான் இருப்பார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இது தவிரவும் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த தேவராஜன், தனது 99 வயதான மனைவி சுந்தரியைக் காணவில்லை என்றும், அனேகமாக அவரும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடிப்போயிருக்கலாம் என்று புகார் தெரிவித்திருக்கிறார். சுந்தரிப்பாட்டியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவரையே சன்மானமாக அளிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் பாட்டிகள் சென்னையை நோக்கிப் படையெடுத்திருப்பதால் திரிஷா,அசின்,பாவனா,ஸ்ரேயா போன்ற நடிகைகளுக்கு மிகுந்த கலவரம் ஏற்பட்டிருப்பதாக நமது நிருபர் அறிகிறார். இந்தச் செய்தி வெளியானதும், தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்கள் அன்டார்டிகாவுக்கு ரகசியமாகத் தப்பித்து விட்டதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

பாட்டிகளின் கலையார்வத்தைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணத்தைக் கறக்கும் போலித்தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பாட்டிகள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது. இது குறித்து வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று நாடுதழுவிய போராட்டமும் அதன் ஒரு பகுதியாக, மாம்பலம் ஒன்றாவது தெருவிலிருந்து இரண்டாவது தெருவரைக்கும் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாகவும், சம்மேளனத்தின் தலைவி காரைக்கால் கமலாப்பாட்டி தெரிவித்துள்ளார்.

32 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Anonymous said...

அட..நாந்தான் முதல்ல!

மோனி said...

..//சுந்தரிப்பாட்டியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவரையே சன்மானமாக அளிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்..//

தேவராஜன் வாழ்க ..

சைவகொத்துப்பரோட்டா said...

இனி, தாத்தாக்கள் பாடு திண்டாட்டம்தான் :))

சிநேகிதன் அக்பர் said...

ஐயைய்யோ இதென்ன புதுப்பிரச்சனை. பாட்டிகளையும் சினிமா ஆசை விடலையா. :)

கலக்கலா எழுதியிருக்கீங்க.

பிரபாகர் said...

அருமை நண்பா!

பாட்டிங்களையும் விட்டு வைக்கலையா?

ம்.... தொடர்ந்து ச்ச்சும்மா கலக்குங்க!

பிரபாகர்...

மசக்கவுண்டன் said...

நல்ல கற்பனை.

Thamiz Priyan said...

Kalakkal boss!

ஆயில்யன் said...

:) டெரா திங்க்’கியிருக்கீங்க சூப்பரூ


/ பதிவுகளை பக்கத்துக்கு 1ன்னு ஆப்ஷனை செலக்ட்டி வையுங்க ஒபன் செய்ய செம டெரரா இருக்கு :) Dashboard > Settings>formatting> show at 1 post on the main page -இப்பிடிக்கா செஞ்சுட்டா செம ஈசி

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம் சேட்டை நண்பா....

உங்க சேட்டைய பாட்டி கூட விட்டு வைக்கல போல...........

வளர்க உங்கள் சேட்டை.......

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை, உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுகொள்ளவும்.

பெசொவி said...

:))))))))))))))

Pushparagam said...

எங்க பாட்டிக்கு சினிமா விட சீரியல்தான் நடிக்கணமாம் அப்பத்தான் அவங்க பிலாக்கணம்
வைக்கிறது நல்லா எடுபடுமாம்
சிபாரிசு செய்யுங்களேன்.
அன்புடன் ராகவன்.வ

Unknown said...

சேட்டை கலக்குறய்யா..

Ahamed irshad said...

நீர் அடிச்ச சேட்டையில தடாலடி சேட்டைய்யா இது.அசத்தல்.

முகுந்த்; Amma said...

கலிகாலம்பா! இந்த வயசில அந்த பாட்டிக்கு ஆசையா பாரு.

சூப்பர் ஆ எழுதி இருக்கீங்க சேட்டை.

Pushparagam said...

எனக்கும் 63வயதாகிறது ஓரளவுக்கு
ந்டிக்க வரும்.ஜகன்மோகினி படத்தில்
நடிக்க வாய்ப்பு கிடைக்குமா,ஏனென்றால் தங்களின்
கதை என் மனதை ஈர்த்துவிட்டது.

ரா.புஷ்பா.

Priya said...

சேட்டையில் கலக்கல்:)

settaikkaran said...

//:-))))//

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே!

settaikkaran said...

//அட..நாந்தான் முதல்ல!//

அதுக்கென்னங்க, அடுத்த தடவை முதல்லே நீங்க வாங்க! இந்த தடவை TVR முந்திக்கிட்டாரு! :-))
நன்றிங்க!!

settaikkaran said...

//தேவராஜன் வாழ்க ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோனி அவர்களே! :-)

settaikkaran said...

//இனி, தாத்தாக்கள் பாடு திண்டாட்டம்தான் :))//

ஆமாண்ணே! பாட்டிகளைக் கூட நம்ப முடியாது போலிருக்கு! :-)

நன்றிங்க

settaikkaran said...

//ஐயைய்யோ இதென்ன புதுப்பிரச்சனை. பாட்டிகளையும் சினிமா ஆசை விடலையா. :)//

ஏனுங்க, தாத்தா வயசானதுக்கப்புறமும் சில பேரு சின்னப்பையன் மாதிரி டூயட் பாடிக்கிட்டுத் திரியும்போது, பாட்டிங்க மட்டும் என்ன பாவம் பண்ணினாங்க? :-))

//கலக்கலா எழுதியிருக்கீங்க.//

மிக்க நன்றிங்க! வலைச்சரத்துலே கலக்கிட்டிருக்கீங்க!!

settaikkaran said...

//அருமை நண்பா!//

நன்றிங்க!

//பாட்டிங்களையும் விட்டு வைக்கலையா?//

நாம விட்டு வைக்க நினச்சாலும் அவங்க விட மாட்டேங்குறாங்களே...? :-)))

..ம்.... தொடர்ந்து ச்ச்சும்மா கலக்குங்க!//

மீண்டும் நன்றி!!

settaikkaran said...

//நல்ல கற்பனை.//

மிக்க நன்றி கவுண்டரே! :-))

settaikkaran said...

//Kalakkal boss!//

மிக்க நன்றி தமிழ்ப்ரியன்! :-))

settaikkaran said...

//:) டெரா திங்க்’கியிருக்கீங்க சூப்பரூ//

ஆஹா! ஆயில்யனின் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. :-)


// பதிவுகளை பக்கத்துக்கு 1ன்னு ஆப்ஷனை செலக்ட்டி வையுங்க ஒபன் செய்ய செம டெரரா இருக்கு :) Dashboard > Settings>formatting> show at 1 post on the main page -இப்பிடிக்கா செஞ்சுட்டா செம ஈசி//

உங்களது யோசனையை உடனடியாக அமல்படுத்தி விட்டேன். வருகைக்கும், கருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வருகை தரவும். :-))

settaikkaran said...

//வணக்கம் சேட்டை நண்பா....//

வாங்கண்ணே! வாங்க!!

//உங்க சேட்டைய பாட்டி கூட விட்டு வைக்கல போல...........//

சேட்டை பண்ணுறதுன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் பாட்டியாவது, பேத்தியாவது...! :-))))))

//வளர்க உங்கள் சேட்டை.......//

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//சேட்டை, உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுகொள்ளவும்.//

அனுபவசாலிகளான வலைப்பதிவர்கள் புதியவர்களை எப்படி ஊக்குவிக்கிறார்கள் என்பதன் அத்தாட்சியான உங்களது விருதினை வலைப்பதிவின் முகப்பிலேயே அனைவரின் பார்வையிலும் தென்படுமாறு பெருமையுடன் வைத்து விட்டேன். மிக்க நன்றி!!

settaikkaran said...

//:))))))))))))))//

பெயர் சொல்ல விரும்பவில்லை - சரி!
நகைப்பானுடன் நிறுத்திட்டீங்களே? கருத்தும் சொல்ல விரும்பவில்லையா? :-))))))))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க பெ.சொ.வி!

settaikkaran said...

//எங்க பாட்டிக்கு சினிமா விட சீரியல்தான் நடிக்கணமாம் அப்பத்தான் அவங்க பிலாக்கணம்
வைக்கிறது நல்லா எடுபடுமாம்
சிபாரிசு செய்யுங்களேன்.//

ஆஹா! தொலைக்காட்சித் தொடர் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே ஐயா! உங்கள் அனுபவத்துக்கு முன்னால் என் பாச்சாவெல்லாம் பலிக்குமா? வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//சேட்டையில் கலக்கல்:)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா அவர்களே! :-)