Thursday, March 25, 2010

பேருந்தில் காதல்! (தொ/ப‍)

தொ/ப= தொடர்பதிவு

"பேருந்தில் காதல்" என்ற தலைப்பில் என்னை(யும்) தொடர்பதிவுக்கு முன்கூட்டியே பஸ்ஸில் கைக்குட்டை போடுவது போல மின்னரட்டையில் அழைத்த சிங்கை நண்பர் பிரபாகருக்கும், பதிவிலேயே அழைத்த பனித்துளி சங்கருக்கும் எனது மனமார்ந்த நன்றி! எனக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லேங்கிறதுனாலே, இந்தத் தொடர்பதிவுலே காதலும் இருக்காது; பேருந்தும் இருக்காது! (எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கறேன்னு கேட்கறீங்களா? முழுசாப் படிச்சிட்டுக் கேளுங்க!)

தையெழுதுற ஆசையோட சென்னைக்கு வர்ற இளைஞர்களைப் பார்த்தாலே சட்டுன்னு அடையாளம் கண்டுபிடிச்சிடலாம். தண்ணின்னு நினைச்சு ஓமத்திரவத்தைக் குடிச்சவங்க மாதிரி பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு இருப்பாங்க! அப்படியொரு கதாசிரியரும் நானும், நான் சென்னைக்கு வந்த புதுசிலே, தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குப் பக்கத்துலே குடியிருந்தபோது நண்பர்களானோம்.

அவருடைய இயற்பெயர் கண்ணப்பன். பொள்ளாச்சி பக்கத்துலேருந்து தானும் ஒரு பாக்யராஜ் மாதிரி கதை,திரைக்கதை,வசனம்,டைரக்சன் எல்லாம் பண்ணணுமுன்னு ஒரு பெரிய கனவோட சென்னைக்கு வந்திருந்தாருங்க! பாக்யராஜ் முருங்கைக்காய் மகிமையைக் கண்டுபிடிச்சா மாதிரி, இவரு முட்டக்கோசைப் பத்தி ஒரு மினி-ஆராய்ச்சியெல்லாம் பண்ணி, அவர் இயக்கப்போற படத்துலே சொருகிடமுண்ணு திட்டமெல்லாம் போட்டிருந்தாரு. அலுக்காம சலிக்காம தினமும் யாராவது ஒரு தயாரிப்பாளரையோ, இயக்குனரையோ போய் பார்த்திட்டு வர்றேன்னு போயிட்டு அவங்க வீட்டு கூர்க்காவுக்கு காலேஜ் பீடி வாங்கிக்கொடுத்து சினேகிதம் பண்ணிட்டு வர்றதோட சரி! ஒரு டீயும், மசால்வடையும் வாங்கிக் கொடுத்தாப் போதும், படத்தோட கதையைச் சொல்லுவாரோ இல்லியோ, அவரோட சொந்த சோகக்கதையை ரீ-ரிகார்டிங்கோட சொல்லிருவாரு! அப்படித்தான் ஒரு நாள், தி.நகர் பஸ் டெப்போவுக்கு எதிரே இருக்கிற டீக்கடையிலே டீயும், வடையும் முடிச்சிட்டு பனகல் பார்க்குக்கு நடந்துக்கிட்டே போயிட்டிருந்தபோது.....

"பதினாறு வயதினிலே ரேஞ்சுக்கு ஒரு கதை சொன்னேன்! பிடிக்கலே! கமர்ஷியலா எழுதிட்டு வான்னு சொல்லுறாரு அந்த டைரக்டர்!"னு சலிச்சுக்கிட்டாரு!

"மச்சி! பேசாம அவரு கேட்கிறா மாதிரி ஒரு கதை சொல்ல வேண்டியது தானே?"ன்னு அனுதாபத்தோட கேட்டேன். இவரும் ஒரு நாள், பெரிய டைரக்டராயிட்டா, நானும் அஜித்,விஜய்க்குப் போட்டியா ஹீரோவாகிடாமுங்கிற நல்லெண்ணம் தான்.

"அவருக்கு 456 ரொம்ப ராசியான நம்பராம். அதுனாலே நாலு சென்டிமென்ட் சீன், அஞ்சு சண்டை, ஆறு பாட்டு வர மாதிரி ஒரு கதை வேணுமாம்!"ன்னு பெருமூச்சு விட்டாரு கண்ணப்பன்.

"இது பெரிய விஷயமா?" நான் கேட்டேன்.

"காதல் கதையா இருக்கணுமாம். முடிவுலே ரெண்டு பேரும் சாவுறா மாதிரி இருக்கணுமாம். தமிழ் சினிமாவுலே கடைசியிலே ரெண்டு பேரு செத்துப்போயி ரொம்ப நாளாச்சாம்."

"அதான் எல்லா சினிமாவுலேயும் பார்க்கிறவங்களைச் சாவடிக்கிறாங்களே? போதாதா?"

"இன்னும் கேளு! படத்தோட பெயர், அதுலே வர்ற கேரக்டரங்களோட பெயர் ரெண்டு எழுத்துக்கு மேலே இருக்கக் கூடாதாம்."

"இதெல்லாம் ஒரு பிரச்சினையா?"ன்னு அலட்சியமாக் கேட்டேன்.

"என்னடா சர்வசாதாரணமாச் சொல்லறே? அவரு சொல்லுறா மாதிரி ஒரு கதையோட அவுட்-லைன் உன்னாலே சொல்ல முடியுமா?"ன்னு சவால் விட்டாரு கண்ணப்பன்.

"ஏன் முடியாது? உட்கார்ந்து பேசுவோம். ஒரு சூப்பர் கதை சொல்லுறேன் பாரு!"

அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் பனகல் பார்க்கில் இருந்தோம்.

"படத்துக்கு முதல்லே டைட்டில் வைக்கலாமா?" நான் கேட்டேன்.

"ஓ!"

"படத்தோட பெயர் 47!"

"அதென்ன 47?"

"முதல்லே கதையை எழுதி முடிப்போம்.அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்! எழுத்துக்கூட்டிப்பாரு! சரியா ரெண்டு எழுத்துத் தானே டைட்டில்?"

"47! அட ஆமாண்டா!"

"47-ன்னா அது பஸ் ரூட்டாக் கூட இருக்கலாம்! அதுனாலே கதையிலே எப்படியாவது ஒரு பஸ் சீனைப் புகுத்திரலாம்."

"அதான் 12-B வந்திருச்சே!" என்று கண்ணப்பன் கேட்டான்.

"அதுக்கென்ன? திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருவண்ணாமலைன்னு எல்லா ஊரு பேருலேயும் படம் எடுத்தீங்க! அப்புறம் சென்னை-28, புதுப்பேட்டை, மத்திய சென்னைன்னு படம் எடுத்தீங்க! இன்னும் கொஞ்ச நாளிலே வீட்டு நம்பரைத் தான் படத்துக்குப் பெயரா வைக்க வேண்டி வரும். அதுக்கு இன்னொரு பஸ் ரூட் நம்பரை வைக்கக்கூடாதா?" என்று அறிவுபூர்வமாக (?!) கேட்டதும் கண்ணப்பன் அடங்கினான்.

"சரிடா! கதையைச் சொல்லு!"

"முதல் கண்டிஷன் ஓ.கே! அடுத்தது நாலு எமோஷனல் சீன் வேணுமா ம்...ம்ம்..ம்ம்ம்! சரி, குறிச்சுக்கோ! ஒரு கதாநாயகன், ஒரு கதாநாயகி, ஒரு வில்லன்! கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஒரு சீன், கதாநாயகிக்கும் வில்லனுக்கும் ஒரு சீன்...வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் ஒரு சீன்! அப்படிப் பார்த்தாலும் ஒரு சீன் குறையுதே! ஓ.கே! வில்லனுக்கு ஒரு தங்கை! மொத்தம் நாலு பேரு! ஆளுக்கு ஒரு எமோஷனல் சீன்! சரியா?"

"சூப்பர்!"

"அடுத்தது என்ன?"

"முதல்லே கதை என்னான்னு முடிவு பண்ணிடலாம்." என்றான் கண்ணப்பன் அவசர அவசரமாக.

"கால்குலேட்டர் வச்சிருக்கியா?" என்று கேட்டேன். "ஒரு சின்னக் கணக்குப் போட்டுப் பார்க்கணும்."

"இதோ செல்லுலே இருக்கே!"

செல்போனிலிருந்த கால்குலேட்டரை எடுத்து நாலு எமோஷனல் சீன், ஐந்து சண்டைகள், ஆறு பாடல்கள் வர வேண்டுமென்றால், அதற்கு என்னென்ன அயிட்டங்கள் வேண்டுமென்று கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கிப் பார்த்தேன்.

"மச்சி! உங்க புரொட்யூசர் சொல்லுற மாதிரி கதை வேணுமுன்னா, இன்னும் ஒரு அண்ணன், ரெண்டு தங்கச்சி வேணும் போலிருக்கேடா!"

"என்னடா சரவணபவன்லே பார்சல் ஆர்டர் பண்ணுறா மாதிரி சொல்லுறே?"

"டேய்! படம்னா ஹீரோ,ஹீரோயின் மட்டும் தானா?" என்று அதட்டினேன்.

"சரி, எதுக்கும் கதாநாயகிக்கும் ஒரு தங்கச்சியைச் சேர்த்துக்கலாமா? ரெண்டு பேருலே யாரை வேண்ணா கிட்நாப் பண்ண வில்லனுக்கு வசதியா இருக்குமே?"

"அனேகமாத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். இதோ, ஒரு வழியா கதையோட அவுட்லைன் ரெடி பண்ணிட்டேன். குறிச்சுக்கோ!"

மாடல் கேள்வித்தாளைக் குறித்துக்கொள்ளும் ப்ளஸ் டூ மாணவனின் ஆர்வத்தோடு கண்ணப்பன் குறித்துக்கொள்ள, நான் கதைச் சுருக்கத்தைச் சொன்னேன்.

"ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுறான்! ஆனா, ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணலே! அவ லவ் பண்ணுறது வில்லனை!"

"என்னது?"

"எழுதுடா! இப்பத் தானே கதையே ஆரம்பிக்குது!"

"சரி!"

"எழுதிட்டியா? ஹீரோயின் வில்லனை லவ் பண்ணுறா. ஆனா, வில்லன் லவ் பண்ணுறது ஹீரோவோட தங்கையை!"

"டேய்....!"

"குறுக்கே பேசாம எழுது! வில்லன் ஹீரோவோட தங்கச்சியை லவ் பண்ணறான். ஆனா, ஹீரோவோட தங்கச்சி ஹீரோயினோட அண்ணனை லவ் பண்ணுறா!"

"பைத்தியமே பிடிச்சிடும் போலிருக்கே!"

"லவ் ஸ்டோரின்னா அப்படித்தாண்டா இருக்கும். எழுதிக்கோ! ஹீரோவோட தங்கச்சி ஹீரோயினோட அண்ணனை லவ் பண்ணுறா! ஆனா, ஹீரோயினோட அண்ணன் வில்லனோட தங்கச்சியை லவ் பண்ணுறான்."

"சுத்தம்! வெளங்கிரும்!"

"ஹீரோயினோட அண்ணன் வில்லனோட தங்கச்சியை லவ் பண்ணுறானா? ஆனா வில்லனோட தங்கச்சி ஹீரோவோட அண்ணனை லவ் பண்ணுறா!"

"நான் அம்பேல்"

"அவசரப்படாதேடா! வில்லனோட தங்கச்சி ஹீரோவோட அண்ணனை லவ் பண்ணுறா. ஆனா, ஹீரோவோட அண்ணன் ஹீரோயினை லவ் பண்ணுறான்."

"அடேய்! ஏற்கனவே ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுறானேடா?"

"ஓ! இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கியா? அப்படீன்னா ஜனங்களும் ஞாபகம் வச்சிருப்பாங்க! இருந்தா என்னடா? பழைய படங்களிலே இது மாதிரி எத்தனை கதை வந்திருக்கு? அண்ணன், தம்பி ரெண்டு பேருலே ஒருத்தன் தியாகம் பண்ணுவான்! உனக்கு எப்படியும் ரெண்டு பேரு சாகணுமே, இவங்க ரெண்டு பேருலே ஒருத்தரை குளோஸ் பண்ணிடலாம்."

"அதெல்லாம் சரி? பஸ் ரூட்டுக்கும் கதைக்கும் என்னடா சம்பந்தம்?"

"இது ஒரு பெரிய விஷயமா? ஹீரோ டிரைவர், வில்லன் கண்டக்டர்! ஹீரோயின்...."

"செக்-இன்ஸ்பெக்டரா?"

"இல்லைடா! ஹீரோயின் பாசஞ்சர்! ஹீரோயின் நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குறா! வில்லன் டிக்கெட்டுக்குப் பின்னாலே பேலன்ஸ் எழுதறதுக்குப் பதிலா அவரோட செல் நம்பரை எழுதிக்கொடுத்திடறாரு! இங்கேருந்து தான் கதை ஆரம்பிக்கிறது.."

"இந்த இடத்துலே ஒரு டூயட் வைக்கலாம் இல்லே?" கண்ணப்பனுக்கு ஒரே குஷி!

"வச்சுக்கலாமே! இதோ பாரு! இனிமே அன்னக்கிளி படம் எடுத்தாலும் அமெரிக்காவிலே ஒரு பாட்டு எடுக்கணும். மச்சானப் பாத்தீங்களா பாட்டுன்னாலும் மன்ஹாட்டன்லே போயி எடுக்கணும். சரியா?"

"டேய்! எங்க புரொட்யூசர் வேளச்சேரியே தாண்டக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு! நீ பாட்டுக்கு வெளிநாட்டுலே ஷூட்டிங்குன்னு சொல்லறே...?"

"மச்சி! இதுவரை தமிழ்ப்படத்துலே வராத கற்பனை! டூயட் பாடிக்கிட்டிருக்கும்போது பஸ் அப்படியே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கே போயிடறா மாதிரி...."

"என்னடா உளர்றே? பஸ் அமெரிக்கா எப்படிப் போகும்...?"

"ஏன் போகாது? கொலம்பஸ் போகலியா என்ன....?"

"சரி சரி, சொல்லித் தொலை!" கண்ணப்பன் தலையில் அடித்துக்கொண்டான்.

"மச்சி! பார்த்தேன் ரசித்தேன்னு ஒரு படம் வந்தது தெரியுமா? பிரசாந்த் நடிச்சது! லைலாவும் பாத்திமா பாபுவும் பஸ்ஸிலே வரும்போது பின்னாடியே போயி லவ்ஸ் வுடுவாரே! அதை விட பிரமாதமா பண்ணனும். ஹீரோயின் லைலாவை விட அழகா போடணும்."

"எங்க புரொட்யூசர் காதுலே விழுந்தா ஃபாத்திமா பாபுவையே ஹீரோயினாப் போட்டுருவாருடா!"

"அட கஷ்டமே! எப்படியோ, இந்த லவ் ஸ்டோரிக்கும் பஸ்ஸுக்கும் கனெக்ஷன் இருக்கிறா மாதிரி கதை வந்திருச்சில்லே...அது போதும்!"

"ஹும்! ஒரு வகையிலே கரெக்டு தாண்டா! ஃபார்ட்டி செவன் பஸ் மாதிரியே உன் கதையிலேயும் உட்கார்ந்திட்டிருக்கிறவங்களை விடவும் தொங்கிட்டு வர்றவங்க தான் அதிகம்!" என்று ஒப்புக்கொண்டான் கண்ணப்பன்.

"மொத்தம் மூணு ஆம்பிளை, மூணு பொம்பிளை, மாத்தி மாத்தி ஈஸியா ஆறு பாட்டு போடலாம்," என்று யோசனை தெரிவித்தேன் நான்.

"அஞ்சு சண்டை?" கண்ணப்பன் சந்தேகமாகக் கேட்டான்.

"எழுதிக்கோ! ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரு சண்டை! ஹீரோவோட அண்ணனுக்கும் வில்லனுக்கும் ஒரு சண்டை! ஹீரோவுக்கும் ஹீரோவோட அண்ணனுக்கும் ஒரு சண்டை!"

"அண்ணன் தம்பி எங்கேயாவது சண்டை போடுவாங்களாடா?"

"மச்சி! அவங்க தாண்டா வில்லனை விட ஆக்ரோஷமா பறந்து பறந்து அடிப்பாங்க!"

"சரி! அப்படியும் மூணு சண்டை தானே ஆச்சு! மீதி மூணு....?"

"இன்னும் மூணு சண்டை வேணுமா?" நான் யோசித்தேன். "பேசாம வில்லனுக்கும் ஒரு அண்ணனோ தம்பியோ சொருகிடலம். அவன் ஹீரோவோட தங்கச்சி, ஹீரோயினோட தங்கச்சி ரெண்டு பேரையுமே லவ் பண்ணுறான்னு வச்சுக்கலாம்."

"ஐயையோ! வேண்டாம்! இப்போ சொன்னியே இந்த மூணு சண்டையையே கூட ஒருவாட்டி போட வச்சிடறேன். இதுக்கு மேலே யாராவது யாரையாவது லவ் பண்ணினா கடவுளுக்கே அடுக்காது!"

"ஓ.கே! ஒரு வழியா கதையோட அவுட்-லைன் ரெடியாயிடுச்சு!"

"டேய்! எல்லாருக்கும் பெயர் வைக்கணுண்டா!"

"இப்போதைக்கு டம்மியா பேர் சொல்லறேன். குறிச்சுக்கோ! ஹீரோ பெயர் ராஜா! ஹீரோவோட அண்ணன் பெயர் ஓஜா!"

"ஓஜாவா? வடநாட்டுப் பெயர் மாதிரி இருக்கு?"

"தமிழ் சினிமாவுலே ஒரு புதுமை வேண்டாமா?"

"சரி, வில்லனுக்கு என்ன பெயர்?"

"வில்லனுக்குப் பெயர்....தேஜா! ஹீரோயினோட அண்ணன் பெயர் கூஜா!"

"சரி! மத்தவங்க பெயரையும் சொல்லிடு!" கண்ணப்பன் கண்ணும் கருத்துமாகக் குறிப்பெடுத்துக்கொண்டான்.

"ஹீரோயின் பெயர் பூஜா! ஹீரோவோட தங்கை பெயர் ஸ்ரீஜா! வில்லனோட தங்கை பெயர் மாஜா!"

கண்ணப்பன் இனிப் பேசிப் புண்ணியமில்லை என்பது போல நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருந்தான்.

"சரி, இப்போ பெயரோட கதையைச் சொல்லுறேன். எழுதிக்கோ சரியா?"

"சரி!"

"ராஜா பூஜாவை லவ் பண்ணுறான். ஆனா பூஜா தேஜாவை லவ் பண்ணுறா. தேஜா ராஜாவோட தங்கை ஸ்ரீஜாவை லவ் பண்ணுறான். ஆனா ஸ்ரீஜா பூஜாவோட அண்ணன் கூஜாவை லவ் பண்ணுறா. பூஜாவோட அண்ணன் கூஜா தேஜாவோட தங்கை மாஜாவை லவ் பண்ணறான். தேஜாவோட தங்கை மாஜா ராஜாவோட அண்ணன் ஓஜாவை லவ் பண்ணுறா. ராஜாவோட அண்ணன் ஓஜா கூஜாவோட தங்கை பூஜாவை லவ் பண்ணுறான்."

"நல்ல வேளை! அவ்வளவு தானே கதை?" கண்ணப்பனின் முகம் வெயிலில் காயப்போட்ட வேட்டி போல வெளிறிப்போயிருந்தது.

"டேய்! காமெடி வேண்டாமா?"

"இதுக்கு மேலே என்னடா காமெடி?" கண்ணப்பன் முகத்தில் பார்த்திபனிடம் அகப்பட்ட வடிவேலுவைப் போல விரக்தி தொனித்தது. "உலக வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு லவ் ஸ்டோரியைப் பார்த்து ஜனங்களெல்லாம் வயிறு குலுங்கச் சிரிக்கப்போறாங்கடா!"

"அது சரி! காமெடி தனி பிட்டா பின்னாடி கூட சேர்த்துக்கலாம்."

"ஆமாண்டா! கதை சொன்னது போதும். ரூமுக்குப் போயிடலாமாடா? என்னமோ தெரியலே! நீ கதை சொன்னதைக் கேட்டதுலேருந்து கடுக்காய் சாப்பிட்டது மாதிரி குடலுக்குள்ளே கொடக்கு மொடக்குன்னு சத்தம் கேட்குதுடா!"

"மச்சி! லவ் ஸ்டோரின்னா அப்பா, அம்மா வேண்டாமா?" நான் விடுவதாயில்லை.

"உன்னோட லவ் ஸ்டோரிக்கு லவ்வே வேண்டாமேடா!"

"இப்படியெல்லாம் வெறுத்துப்போய்ப் பேசாதே மச்சி! இந்தக் கதையை மட்டும் படமா எடுத்தேன்னு வையி, இந்த உலகமே உன்னைப் பத்திப் பேசும் தெரியுமா?"

"ஓ! ரொம்ப நல்லாத் தெரியும்! அதுக்கப்புறம் என்னாலே வெளியே தெருவிலே நடமாடவே முடியாதுன்னு இப்பவே புரிஞ்சுக்கிட்டேன்."

"இதோ பாரு! ஹீரோ,ஹீரோயின்,வில்லன்னு மொத்தம் மூணு குடும்பம் இருக்குதில்லையா? அட் லீஸ்ட் ஒரு அப்பாவையாவது சேர்த்துக்கலாண்டா!"

"என்னது, மூணு குடும்பத்துக்கும் ஒரு அப்பாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!"

"அவசரப்படாதே! மூணு குடும்பத்துக்கும் தலா ஒரு அப்பா!"

"டேய்! ஏண்டா இப்படி இம்சை பண்றே?"

"என்னடா நீ? அப்பா-அம்மா கேரக்டர் இருந்தாத் தானே நீ கேட்கிறா மாதிரி ரெண்டு பேரு சாக முடியும்?"

கண்ணப்பன் பொறுமையிழந்து உறுமினான்.

"டேய்! போதும் நிறுத்துடா! கடைசியிலே சாகப்போற ரெண்டு பேர் யாருன்னு எனக்குத் தெரியுண்டா!"

"யாரு?" என்று நான் குழம்பியபடி கேட்டேன்.

"உன்னைக் கொலை பண்ணிட்டு நானும் தற்கொலை பண்ணிக்குவேன்."

அதற்கு மறுநாள் பொள்ளாச்சிக்குப் பொடிநடையாகவே போனவன் அதன்பிறகு சென்னை திரும்பவேயில்லை. ஆனால் ’47 - பேருந்தில் காதல்’ என்ற கதையை நான் முழுமையாக்கி, எவனாவது இளிச்சவாயன் தயாரிப்பாளராகக் கிடைத்தால் அவருக்குச் சொல்லி ஒரு காதல் காவியமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருக்கிறேன்.

இன்னொரு தடவை கதை கேட்கறீங்களா...?

பி.கு (அ) நற்செய்தி: இந்தத் தொடர்பதிவைத் தொடர நினைப்பவர்கள் பாண்டிபஜாரில் 12B பிடிக்க நினைப்பவர்களைப் போல அதிகமாக இருப்பதால், யார் வேண்டுமானாலும் ஃபுட்போர்டில் தொங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

56 comments:

Praveenkumar said...

அடேங்கப்பா...! இவ்வளவு பெரிய தொடரா.... பேருந்தா? இல்லை இது இரயிலா...? என ஆச்சரியமடைந்தேன். செமகலக்கலா... நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க..பாஸ்..! அடுத்து இரயிலில் காதல்னு யாராவது எங்க தலய கூப்பிடுங்க... தொடரட்டும் தல உங்கள் சேட்டைகள். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

Thamiz Priyan said...

செம காமெடிங்க.. சிரிச்சு மாளலை!

பிரபாகர் said...

காதல் சீக்குவன்ஸ் மயங்கி விழுற அளவுக்கு இருக்கு சேட்டை...

அசத்தலான கலக்கல் வழக்கம்போல்...

பிரபாகர்...

Chitra said...

"என்னடா உளர்றே? பஸ் அமெரிக்கா எப்படிப் போகும்...?"

"ஏன் போகாது? கொலம்பஸ் போகலியா என்ன....?"

..........உங்கள் approach பிடிச்சு இருக்குது .

இந்த தொடர் பஸ்/ட்ரைன் பதிவு nalllllllllllllllllaaaaaaaaaa போகுது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிரிச்சிட்டே இருக்கேன்..
நான் அந்த யாரை யாரு லவ் செய்யறா இடத்துல ( உறவு எனக்கு எப்பவுமே மனக்கணக்கா போடவராது) சரியா கவனிக்காம சிரிச்சிட்டே வந்துட்டேன் நல்லவேளை டைரக்டர் சரிய கவனிச்சு சொல்லிட்டார்..

உன் லவ் ஸ்டோரிக்கு லவ்வே வேணாமேடான்னு அவர் சொல்லும் போது ..;)))

வாழ்நாளில் ஒரு நாள் கூடியது .

ISR Selvakumar said...

சரளமான நகைச்சுவை!
முட்டை கோஸை வைத்து உங்க நண்பர் கண்டுபிடித்த சமாச்சாரத்தையும் 47-கதையில் கொண்டுவந்திருந்தால் இன்னும் அசத்தலாக இருந்திருக்கும்.

Unknown said...

யப்பா தலை சுத்து சுத்துனு சுத்துது..

பாலச்சந்தருக்கு அப்பாவா இருப்பீங்க போல..

பிரபாகர் said...

ஆஹா, இது நூறாவது பதிவல்லவா! வாழ்த்துக்கள்... செந்தில்வேலன் நேற்றே நினைவுப்படுத்தியும் மறந்துவிட்டேனே!

இன்னும் நிறைய எழுதிக் கலக்குங்கள் நண்பா!

பிரபாகர்...

நசரேயன் said...

சரளமான நகைச்சுவை

சைவகொத்துப்பரோட்டா said...

100 - க்கு வாழ்த்துக்கள் நண்பரே.
கதை படிச்சதுக்கு அப்பால, தல லைட்டா சுத்துது.

Punnakku Moottai said...

சேட்ட,

இந்த காவிய காதல் கதையை படித்துக் கொண்டிருக்கும் போதே, மொதல்லே ஒன்னதான் துரு பிடிச்ச hacksaw பிளேடால அறுத்து கொல்லுன்னுமுன்னு நினைச்சேன்.

ஆனா பாவம் நீ. எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன். இப்படி உன்னை எழுத தூண்டிய திரு. பிரபாகர் இன்று இரவு என் அறைக்கு வருவதாக உள்ளார். நாளை காலை அவர் என் அறையை விட்டு வெளியே வரமாட்டார்.

இப்படிப்பட்ட ஒரு காதல் கதை அல்ல காவியத்தை எழுத தூண்டிய பிரபாவை இன்றே போட்டுத்தள்ளிவிடுகிறேன்.

கண்ணப்பா, நீ தெய்வமப்பா. கடவுள் உன்னை காப்பாற்றுவாராக (நீ இன்னும் உயிரோடு இருந்தால்).

ரசிக்கும் படியான கதைக்கு நன்றி. உங்கள் கதை வேட்டைக்காரன், கந்தசாமி, தம்பிக்கு இந்த ஊரு கதைகளை விட மிக சுப்பர்.

பித்தனின் வாக்கு said...

சேட்டை மறுபடியும் சேட்டை பண்ணீருக்கீங்க. நல்லா இருக்கு தொடர். ஆனா முக்கால் வாசிக்கு மேல கொஞ்சம் அலுப்புத் தட்டுது. பின்னர் முடிவில் நல்ல காமெடி. மிக நன்று. இரண்டாவது தடவை ரிப்பீட்டு ஆகாமல் பார்த்துக் கொண்டிருந்தால் நலம்.

கேடம்பாக்கத்தில் இருக்கும் நிறைய துணை இயக்குநர்களிடம் இந்தக் கதை சொன்னால் போதும், அவர்களும் திருந்தி,ஊரைப் பார்க்கப் போவார்கள். நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

3 months 100 posts!!!

வாழ்த்துக்கள்..எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைங்க தொடர்ந்து..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பித்தனின் வாக்கு said...
@Punnakku Moottai said...
@சேட்டை

சேட்டை.. நம்ம பித்தன் சார். “நானும் ஹீரோ” தான் ஹின்ஸ் கொடுத்துட்டாரு.. நம்ம கதைக்கு ,பிரபாகரனை போட்டு தள்ளிடலாமுனு, நம்ம அண்ணன் “ Punnakku Moottai“ சொல்றாரு..அதனால , வில்லனும் கிடச்சுட்டாரு..

நடுவுல ரெண்டுழுத்து வார்த்தை “ரேப்” பை சேருங்க.. நடிக்க நானும் வாரேன்..

சம்பளமா?..

சே. சே.. அதெல்லாம் வேண்டாம்.. ஒரு நாலு டேக் எடுங்க .. போதும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பித்தனின் வாக்கு said...

சேட்டை மறுபடியும் சேட்டை பண்ணீருக்கீங்க. நல்லா இருக்கு தொடர். ஆனா முக்கால் வாசிக்கு மேல கொஞ்சம் அலுப்புத் தட்டுது
//

அணுகவும்..
டாக்டர் நித்தி..
கர்நாடகா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Punnakku Moottai said...
இந்த ஊரு கதைகளை விட மிக சுப்பர்.
//

இதில் உள்குத்து எதுவுமில்லயே சார்..

ஆனாலும் சூப்பர்..

பிரேமா மகள் said...

யப்பா.. யாராவது இந்த பையனை நாடு கடத்துங்களேன்....

மங்குனி அமைச்சர் said...

//
March 26, 2010 9:50 AM
Blogger பட்டாபட்டி.. said...


நடுவுல ரெண்டுழுத்து வார்த்தை “ரேப்” பை சேருங்க.. நடிக்க நானும் வாரேன்..

சம்பளமா?..

சே. சே.. அதெல்லாம் வேண்டாம்.. ஒரு நாலு டேக் எடுங்க .. போதும்//


டேய் பட்டா எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , கதைல ரெண்டுக்கு மேல எதுவும் இருக்க கூடாது , அதுனால ரேப் சீன்ல , நீ ரெண்டு டேக் நான் ரெண்டு டேக் , எப்புடி இப்ப பாரு கணக்கு சரியா வரும்

மங்குனி அமைச்சர் said...

//Blogger பிரேமா மகள் said...

யப்பா.. யாராவது இந்த பையனை நாடு கடத்துங்களேன்....//

ரெண்டு எழுத்து உள்ள நாடா இருக்கட்டும்

பனித்துளி சங்கர் said...

{{{என்னடா சரவணபவன்லே பார்சல் ஆர்டர் பண்ணுறா மாதிரி சொல்லுறே?"}}}

{{{{{அதான் எல்லா சினிமாவுலேயும் பார்க்கிறவங்களைச் சாவடிக்கிறாங்களே? போதாதா?"}}}}}

எப்பிடி இப்பிடி எல்லாம்,,,,,,,,,,அருமையான பதிவு நண்பேரே!!
வாழ்த்துகள் !!!!

பனித்துளி சங்கர் said...

{{{{{"ராஜா பூஜாவை லவ் பண்ணுறான். ஆனா பூஜா தேஜாவை லவ் பண்ணுறா. தேஜா ராஜாவோட தங்கை ஸ்ரீஜாவை லவ் பண்ணுறான். ஆனா ஸ்ரீஜா பூஜாவோட அண்ணன் கூஜாவை லவ் பண்ணுறா. பூஜாவோட அண்ணன் கூஜா தேஜாவோட தங்கை மாஜாவை லவ் பண்ணறான். தேஜாவோட தங்கை மாஜா ராஜாவோட அண்ணன் ஓஜாவை லவ் பண்ணுறா. ராஜாவோட அண்ணன் ஓஜா கூஜாவோட தங்கை பூஜாவை லவ் பண்ணுறான்." }}}}}}


ஸ்ஸ் ஸ் ,,,,,,,,,,,,அப்பா...... கண்ண கட்டுதே!!!

முகுந்த்; Amma said...

சேட்டைகார அண்ணாச்சி,
சிரிச்சி என்வயிறு புண்ணாச்சி,
இப்போ எனக்கு என்னாச்சி,
உங்க 47 பேருந்து காதல் கதை கேட்டு பைத்தியம் புடிச்சாச்சி

முகுந்த்; Amma said...

அண்ணாச்சி சதமடித்ததர்க்கு வாழ்த்துக்கள்

settaikkaran said...

//அடேங்கப்பா...! இவ்வளவு பெரிய தொடரா.... பேருந்தா? இல்லை இது இரயிலா...? என ஆச்சரியமடைந்தேன். செமகலக்கலா... நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க..பாஸ்..! அடுத்து இரயிலில் காதல்னு யாராவது எங்க தலய கூப்பிடுங்க... தொடரட்டும் தல உங்கள் சேட்டைகள். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.//

ஆஹா! போட்டுக் கொடுக்காதீங்க அண்ணே! தொடர்பதிவுக்குத் தாராளமா அழையுங்க! ஆனால், காதல் மட்டும் இல்லாம பார்த்துக்கட்டும்! எனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத சங்கதி அது! :-)))))))))))

மிக்க நன்றி!

settaikkaran said...

//செம காமெடிங்க.. சிரிச்சு மாளலை!//

மிக்க நன்றிங்க தமிழ்ப்ரியன்! :-))))

settaikkaran said...

//காதல் சீக்குவன்ஸ் மயங்கி விழுற அளவுக்கு இருக்கு சேட்டை...

அசத்தலான கலக்கல் வழக்கம்போல்...//

என்னங்க பண்ணுறது? அனுபவமில்லாத விஷயத்தைப் பத்தி எழுதணுமான்னு முதல்லே எனக்கே தலை சுத்த ஆரம்பிச்சிடுச்சு! அதோட விளைவு தான் இந்தப் பதிவு!

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//..........உங்கள் approach பிடிச்சு இருக்குது .

இந்த தொடர் பஸ்/ட்ரைன் பதிவு nalllllllllllllllllaaaaaaaaaa போகுது.//

நல்ல வேளை! யாரும் டிரையின் காதல் தொடர்பதிவுன்னு ஆரம்பிக்கலே! இல்லாட்டி அது ராஜ்தானி மாதிரி நீளமாப் போயிருக்கும்! :-))

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//சிரிச்சிட்டே இருக்கேன்..
நான் அந்த யாரை யாரு லவ் செய்யறா இடத்துல ( உறவு எனக்கு எப்பவுமே மனக்கணக்கா போடவராது) சரியா கவனிக்காம சிரிச்சிட்டே வந்துட்டேன் நல்லவேளை டைரக்டர் சரிய கவனிச்சு சொல்லிட்டார்..//

ஐயோ, அது டைரக்டர் இல்லை! அவர் தான் கதாசிரியர்! ரொம்பவே குழப்பிட்டேன் போலிருக்கே....! :-(((((

//உன் லவ் ஸ்டோரிக்கு லவ்வே வேணாமேடான்னு அவர் சொல்லும் போது ..;)))

வாழ்நாளில் ஒரு நாள் கூடியது .//

எப்படியோ, உங்களையெல்லாம் சிரிக்க வைக்க முடிஞ்சதே, அது போதும் எனக்கு! மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//சரளமான நகைச்சுவை!
முட்டை கோஸை வைத்து உங்க நண்பர் கண்டுபிடித்த சமாச்சாரத்தையும் 47-கதையில் கொண்டுவந்திருந்தால் இன்னும் அசத்தலாக இருந்திருக்கும்.//

இப்பவே ரொம்ப நீளமாயிருக்குன்னு சொல்லிட்டாங்க! :-((

இதுலே முட்டக்கோசையும் சேர்த்திருந்தேன்னா, நிறைய பேரு முட்டையாலேயே அடிச்சிருப்பாங்க! :-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//யப்பா தலை சுத்து சுத்துனு சுத்துது..

பாலச்சந்தருக்கு அப்பாவா இருப்பீங்க போல..//

என்னங்க பண்ணுறது, பாலசந்தர் இப்பல்லாம் படம் எடுக்கிறதில்லை. அதுக்காக, ஜனங்களை அப்படியே விட்டு வைக்க முடியுமா? அதான், ஏதோ என்னாலானது நாலு பேரைத் தலையைப் பிச்சுக்க வைக்கணுமுன்னா எதுவுமே தப்பில்லே! :-))

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//ஆஹா, இது நூறாவது பதிவல்லவா! வாழ்த்துக்கள்... செந்தில்வேலன் நேற்றே நினைவுப்படுத்தியும் மறந்துவிட்டேனே!

இன்னும் நிறைய எழுதிக் கலக்குங்கள் நண்பா!//

மிக்க நன்றிங்க! நூறு பதிவு போட்டிருக்கிறேன் என்பதை விட பல நல்ல உள்ளங்களின் நட்பும் வாழ்த்துகளும் கிடைத்திருப்பதே மனதுக்கு நிறைவை அளிக்கிறது. மீண்டும் மீண்டும் நன்றிகள்!!

settaikkaran said...

//சரளமான நகைச்சுவை//

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

//00 - க்கு வாழ்த்துக்கள் நண்பரே.
கதை படிச்சதுக்கு அப்பால, தல லைட்டா சுத்துது.//

லைட்டா தானா? :-))))))

எழுதி முடிக்கிறதுக்கு முன்னாடி என் தலை ஓரியண்ட் ஃபேன் மாதிரி சுத்திட்டிருந்தது.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க! எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆதரவு தானுங்க!

settaikkaran said...

//இந்த காவிய காதல் கதையை படித்துக் கொண்டிருக்கும் போதே, மொதல்லே ஒன்னதான் துரு பிடிச்ச hacksaw பிளேடால அறுத்து கொல்லுன்னுமுன்னு நினைச்சேன்.//

நல்ல வேளை, கொலைப்பழியிலேருந்து தப்பிச்சீங்க! :-)))

//ஆனா பாவம் நீ. எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன். இப்படி உன்னை எழுத தூண்டிய திரு. பிரபாகர் இன்று இரவு என் அறைக்கு வருவதாக உள்ளார். நாளை காலை அவர் என் அறையை விட்டு வெளியே வரமாட்டார்.//

ஹை! வந்திட்டாரில்லே? உங்க மொண்ண பிளேடாலே எங்க தலயை ஒண்ணும் பண்ண முடியாது. ஆமா...! :-))

//இப்படிப்பட்ட ஒரு காதல் கதை அல்ல காவியத்தை எழுத தூண்டிய பிரபாவை இன்றே போட்டுத்தள்ளிவிடுகிறேன்.//

பேச்சு பேச்சா இருக்கணும்! ஏன் இந்தக்கொலை வெறி? :-))))

//கண்ணப்பா, நீ தெய்வமப்பா. கடவுள் உன்னை காப்பாற்றுவாராக (நீ இன்னும் உயிரோடு இருந்தால்).//

இருக்காருங்கோ! குவைத்திலே பொட்டி தட்டிக்கிட்டு ரொம்ப மகிழ்ச்சியா இருக்காருங்க! உங்க ஆசி தான்!!

//ரசிக்கும் படியான கதைக்கு நன்றி. உங்கள் கதை வேட்டைக்காரன், கந்தசாமி, தம்பிக்கு இந்த ஊரு கதைகளை விட மிக சுப்பர்.//

அதானே பார்த்தேன், என் கதை மக்கள்ஸுக்கு பிடிக்காம போயிடுமா? மிக்க நன்றிங்க!!!!! :-)))))

settaikkaran said...

//சேட்டை மறுபடியும் சேட்டை பண்ணீருக்கீங்க. நல்லா இருக்கு தொடர். ஆனா முக்கால் வாசிக்கு மேல கொஞ்சம் அலுப்புத் தட்டுது.//

உண்மை தான்! இதை நிறைய பேர் சுட்டிக்காட்டியிருக்காங்க! ஒண்ணு ரெண்டு பத்தியை ஈவு இரக்கமில்லாம வெட்டியிருக்கணும். :-((

//கேடம்பாக்கத்தில் இருக்கும் நிறைய துணை இயக்குநர்களிடம் இந்தக் கதை சொன்னால் போதும், அவர்களும் திருந்தி,ஊரைப் பார்க்கப் போவார்கள். நன்றி.//

மற்றவங்களைப் பத்தித் தெரியாது. கண்ணப்பன் திருந்தி குவைத்துக்குப்போயி மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்!

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//வாழ்த்துக்கள்..எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைங்க தொடர்ந்து..//

கண்டிப்பாக எல்லாரையும் சிரிக்க வைப்பேன், சிந்தக்கவும் வைப்பேன் (எதுக்குச் சிரிச்சோமுன்னு...!).

உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!

settaikkaran said...

//சேட்டை.. நம்ம பித்தன் சார். “நானும் ஹீரோ” தான் ஹின்ஸ் கொடுத்துட்டாரு.. நம்ம கதைக்கு ,பிரபாகரனை போட்டு தள்ளிடலாமுனு, நம்ம அண்ணன் “ Punnakku Moottai“ சொல்றாரு..அதனால , வில்லனும் கிடச்சுட்டாரு..

நடுவுல ரெண்டுழுத்து வார்த்தை “ரேப்” பை சேருங்க.. நடிக்க நானும் வாரேன்..//

அண்ணே, லேடீஸ் பார்க்க வரணுமண்ணே! தாய்க்குலத்தோட ஆதரவு இல்லேன்னா படம் ஒடாது! :-))


//சம்பளமா?..

சே. சே.. அதெல்லாம் வேண்டாம்.. ஒரு நாலு டேக் எடுங்க .. போதும்//

ஒரு டேக் எடுத்தாலே அது மிஸ்டேக்! இதுலே நாலா? :-)))

மிக்க நன்றிங்க

settaikkaran said...

//சேட்டை மறுபடியும் சேட்டை பண்ணீருக்கீங்க. நல்லா இருக்கு தொடர். ஆனா முக்கால் வாசிக்கு மேல கொஞ்சம் அலுப்புத் தட்டுது
//

அணுகவும்..
டாக்டர் நித்தி..
கர்நாடகா..//

ஹா..ஹா! வில்லங்கத்துலே மாட்டிக்கவா? நான் மாட்டேன்

settaikkaran said...

//யப்பா.. யாராவது இந்த பையனை நாடு கடத்துங்களேன்....//

இப்படி யாராவது சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு தான் இன்னும் பாஸ்போர்ட் கூட எடுக்கலே! இப்போ என்ன செய்வீங்க??? :-)))

நன்றிங்க!!!!

settaikkaran said...

//டேய் பட்டா எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , கதைல ரெண்டுக்கு மேல எதுவும் இருக்க கூடாது , அதுனால ரேப் சீன்ல , நீ ரெண்டு டேக் நான் ரெண்டு டேக் , எப்புடி இப்ப பாரு கணக்கு சரியா வரும்//

ஆஹா! ஒண்ணு கூடிட்டாங்கய்யா! ஒண்ணு கூடிட்டாங்கய்யா!!!

நன்றிங்கண்ணே!!! :-))

settaikkaran said...

//ரெண்டு எழுத்து உள்ள நாடா இருக்கட்டும்//

ரெண்டு எழுத்து நாடா? ஐயோ, "கொட" நாடா? நான் வல்லே!!

நன்றிங்க!!

settaikkaran said...

//எப்பிடி இப்பிடி எல்லாம்,,,,,,,,,,அருமையான பதிவு நண்பேரே!!
வாழ்த்துகள் !!!!//

எல்லாம் உங்க அழைப்பு தந்த களிப்புதான்! மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//ஸ்ஸ் ஸ் ,,,,,,,,,,,,அப்பா...... கண்ண கட்டுதே!!!//

உங்களுக்கே இப்படீன்னா கதாசிரியருக்கும், டைரக்டருக்கும் எப்படி இருந்திருக்கும்.?

settaikkaran said...

//சேட்டைகார அண்ணாச்சி,
சிரிச்சி என்வயிறு புண்ணாச்சி,
இப்போ எனக்கு என்னாச்சி,
உங்க 47 பேருந்து காதல் கதை கேட்டு பைத்தியம் புடிச்சாச்சி//

ஆஹா! உங்க பின்னூட்டத்துலேருந்தே தெரியுது, எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கீங்கன்னு! :-))))))

மிக்க நன்றிங்க!!!!

settaikkaran said...

//அண்ணாச்சி சதமடித்ததர்க்கு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க! எல்லாம் உங்களைப் போன்றவர்களின் அன்பும் ஆதரவும் தான் காரணம்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

100 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

சேட்டை உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

prince said...

சேட்டைகள் ஆரம்பம் 1981 முதல் ..........மீண்டும் வருவேன். Be careful !!! நான் உன்ன சொன்னேன்.......ட்டோயெங்

அன்புடன் மலிக்கா said...

100,பதிவில் சேட்டைக்குள் புகுந்திருக்கேனா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

அம்மாடி என்னா ஒரு சேட்டை பஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸில். சூப்பர்..

settaikkaran said...

//100 பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.//

உங்களைப் போன்றோரின் ஆதரவும் வழிகாட்டுதலும் தான் இதுவரை என்னை இயக்கி வந்திருக்கின்றன; இனியும் தொடர வேண்டும் அண்ணே!

//சேட்டை உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.//

வலைச்சரத்துக்கும், உங்களுக்கும் நான் மட்டுமல்ல, புதிய வலைப்பதிவாளர்கள் அனைவருமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

settaikkaran said...

//சேட்டைகள் ஆரம்பம் 1981 முதல் ..........மீண்டும் வருவேன். Be careful !!! நான் உன்ன சொன்னேன்.......ட்டோயெங்//

வாங்க வாங்க! வடை போச்சே-ன்னு சொல்ல மாட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//100,பதிவில் சேட்டைக்குள் புகுந்திருக்கேனா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளியுங்கள்!

//அம்மாடி என்னா ஒரு சேட்டை பஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸில். சூப்பர்..//

ஹி..ஹி! மிக்க நன்றிங்க!! :-)))

அடிக்கடி வாருங்கள்!!!

மாயாவி said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சிரிச்சு,சிரிச்சு முடியல...........!!

நீங்க கதாசிரியரானால் கோடம்பாக்கத்தில பாதி தயாரிப்பாளர்களோட வீடு,காணி,
வயல் எல்லாம் தப்பிச்சிரும்!

settaikkaran said...

//100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சிரிச்சு,சிரிச்சு முடியல...........!!//

மிக்க நன்றி!!!

//நீங்க கதாசிரியரானால் கோடம்பாக்கத்தில பாதி தயாரிப்பாளர்களோட வீடு,காணி,
வயல் எல்லாம் தப்பிச்சிரும்!//

அப்படியா சொல்றீங்க? ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் இந்தக் கதையோட உரிமையை வாங்கிட்டுப் போயிட்டாரே? அவ்வளவு தானா? :-))))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

Aba said...

அடப்பாவி ஹி ஹி... டேய்... ஹி.. ஹி... முடியலடா என்னால.. ஹிஹிஹிஹிஈ... தாங்க ஹி ஹி ஹி... முடியஹி.. ல.... சிட்டி பாபு மாதிரி ஜோக்கடிச்சுட்டிருந்த என்னைய இப்பிடி மதன் பாப் ஆக்கிட்டியேயா...

இப்பதான் உங்க எல்லாப் பதிவும் படிச்சுட்டிருக்கேன்.... எல்லாரும் என்னைய ஏதோ மாதிரி பாக்குறாய்ங்க...

வெளியூர்க்காரனுக்கு குஉட இப்பிடி நான் சிரிச்சதில்ல...

Anonymous said...

setta, analum idu over setta.. Sirichu malala,enga officela ellarum enna oru madi pakuranga pa enaku edum aiduchanu wera kelvi.
Any way romba nalla iruku hee heeeeeee.

இராஜராஜேஸ்வரி said...

AK 47 போல
நான் ஸ்டாப் நகைச்சுவைகள்..!