Wednesday, March 17, 2010

ஜலமஹாத்மியம்


திமிகிட திமிகிட வாத்யம்ருதங்கம்!
திமிகிட திமிகிட வாத்யம்ருதங்கம்!
ஜலானந்தஹரே! அக்வா ஃபினா
பிஸ்லேரிவாட்டர் ஹரே!

ஆதௌ கீர்த்தனாரம்பத்துலே, அவா அவா வாட்டர் பாட்டில்கள் ஜாக்கிரதை! முன்னெல்லாம் பொன்னையும், பொருளையும், பொண்ணையும் திருடிண்டிருந்தா. இனிமேல் வர காலத்துலே தண்ணியையே திருட வேண்டி வந்துடுமோன்னு ஒரு பயம் வந்துடுத்தே! லோகத்துலே தண்ணி எவ்வளவு குறைஞ்சிண்டே போறதுன்னு நம்ம வின்சென்ட் மாதிரி அக்கறையுள்ள மனுஷாள் எழுதறதைப் படிக்கறச்சே மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்கிறதே!

இயற்கையாகப்பட்டது லோகத்துக்கு கொடுத்திருக்கிற வரங்களிலே ரொம்பவும் பெரிய வரமாச்சே இந்தத் தண்ணீர்! தாகத்தைத் தீர்த்துக்குறதுலேருந்து டாஸ்மாக்குலே மிக்ஸிங் பண்ணறது வரைக்கும் இந்த தீர்த்தமில்லாம காரியம் நடக்காதோன்னோ? இப்பேர்ப்பட்ட தண்ணீருக்கு, நம்ம முத்துலட்சுமி சொல்லற மாதிரி நாமெல்லாம் எவ்வளவு கடமைப்பட்டிருக்கணும்?


இப்படியே நீர்வளத்தைப் பத்திக் கவலைப்படாம, இயற்கையை நாம சுரண்டிண்டிருந்தா அது எதுலே கொண்டு போய் விடும் தெரியுமோன்னோ? அதை ஞாபகப்படுத்தறதுக்காகவே தான் இந்த "ஜலமஹாத்மியம்," என்கிற கதாகாலட்சேபத்தை நடத்தப்போறேன். கேட்கறதுக்கு முன்னாலே, எல்லாரும் ஒரு நூற்றாண்டு தள்ளிப்போயிடுவோமா? நாமெல்லாரும் இப்போ இருக்கிறது 22 -ம் நூற்றாண்டுலே! அப்போ என்ன நடக்கறதுன்னு பார்க்கலமா?

கலியாகப்பட்டது முத்தினதாலே, ஜீவநதிகளும், ஏரிகளும்,குளங்களும் வறண்டு போயிட்டதால், மனுஷாளுக்கும் குளியலுக்குமே ஸ்நானப்பிராப்தி இல்லாமப் போயிடுத்து. முன்னெல்லாம் தீபாவளிப்பண்டிகை கொண்டாடறச்சே, "ஏண்ணா, கங்கா ஸ்நானம் ஆயிடுத்தா?"ன்னு விஜாரிப்பா! இந்தக் காலத்துலே பாருங்கோ, "வேக்கூம் ஸ்நானம் ஆயிடுத்தா?"ன்னு கேட்கும்படியாயிடுத்து!

இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே, அத்திப்பட்டி அத்திப்பட்டிங்கிற ஊருலே, சுட்டிப்பொண்ணு சுமதியாகப்பட்டவள், ஒரு தீபாவளியன்னிக்கு தன்னோட தாயாரண்ட போயி, "ஏம்மா, போன தீபாவளியின் போது, அடுத்த தீபாவளிக்கு குளிப்பாட்டறேன்னு சொன்னியே! இன்னிக்காவது என்னைக் குளிப்பாட்டுவியா?"ன்னு கேட்டா பாருங்கோ! நம்ம நாட்டுலே எது இருக்கோ இல்லியோ, கண்ணுலே ஜலம் வரதுக்கு மட்டும் குறைச்சலே இருக்காதோன்னோ? சுமதியோட ஆசையைக் கேட்டதும், தாயாரான ஆனந்தவல்லி மனசு நொந்துபோயி, கண்ணீரும் கம்பலையுமா, "கண்ணன் வருவான், கதை சொல்லுவான்,’ மெட்டுலே பாட ஆரம்பிச்சுட்டா! என்ன பாட்டு?

தண்ணிவருமா தாகம்தீருமா
தம்ளர்தண்ணி கண்ணில்படவில்லை இங்கே!
குழாயினிலே காத்து மட்டும்தான்
குடிக்கவே தண்ணியில்லை!குளியல் எங்கே?

தாயாரோட சஞ்சலத்தைப் பார்த்ததும், சுட்டிப்பொண்ணு சுமதி மனசைத் தேத்திண்டு, அந்த தீபாவளியும் குளிக்காமலேயே கொண்டாடலாமுன்னு முடிவு பண்ணிட்டா! ஆனா, அந்தக் கொழந்தைக்கு லோகத்துலே ஏன் இவ்வளவு தண்ணிப்பஞ்சம் வந்ததுன்னு தெரிஞ்சுக்கணுமுன்னு ஒரே ஆசை! அதுனாலே பட்டாசு வெடிக்காம, அம்மா பக்கத்துலே உட்கார்ந்துண்டு ’நானொரு சிந்து காவடி சிந்து,’ மெட்டுலே பாட்டாவே கேள்வி கேட்டாள்! எப்படி....?

ஏனில்லை தண்ணீர்?
ஏனிந்தக் கண்ணீர்?
ஏனில்லை தண்ணீர்?
ஏனிந்தக் கண்ணீர்?
யார்செய்த வேலையிது?-இங்கு
யார்செய்த வேலையிது?
தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைக்காணோம்
யார் செய்த லீலையிது?-இங்கு
யார் செய்த லீலையிது?

மகளோட தாகத்தைத் தீர்க்க தண்ணியில்லாமப்போயிட்டாலும், அவளோட அறிவுதாகத்தையாவது தீர்க்கலாமேன்னு ஆனந்தவல்லியாகப்பட்டவள், சுட்டிப்பொண்ணு சுமதிக்கு லோகத்துலே எப்படித் தண்ணீர்க்கஷ்டம் வந்ததுன்னு சொல்லத் தொடங்கினாள். என்னான்னு.....? கேளுங்கோ!!

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
முன்னோர் செய்த லீலையடி
முடித்து வைத்தார் வேலையடி!

நிலத்தடிநீர் உறிஞ்சியதால்
நீர்வளங்கள் குறைந்ததடி
கழிவுத்தண்ணீர் ஆற்றில்விட்டுக்
காய்ந்துவறண்டு போனதடி
கழிவுத்தண்ணீர் ஆற்றில்விட்டுக்
காய்ந்துவறண்டு போனதடி

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
முன்னோர் செய்த லீலையடி
முடித்து வைத்தார் வேலையடி!

ஏரிகளைத் தூரெடுக்க எவருக்குமே கவலையில்லை
எவருக்குமே பயன்படாமல் கடலில்விழுந்த கணக்குமில்லை
மரங்கள்நட்டு வனம்வளர்த்து
மழைபெருக்க முயலவில்லை
மனதுவைத்துக் கிணறுவெட்டி
மனிதன்நீரைச் சேர்க்கவில்லை!

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
முன்னோர் செய்த லீலையடி
முடித்து விட்டார் வேலையடி!

ஆனந்தவல்லி இப்படிச்சொன்னதும், சுட்டிப்பொண்ணு சுமதிக்குட்டிக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. இருக்காதா பின்னே? அவளோட தாத்தா, கொள்ளுத்தாத்தா பண்ணின தப்புக்கு அவ தானே அவஸ்தைப்பட்டிண்டிருக்கா தண்ணியில்லாம?

இதெல்லாம் கனவோ கற்பனையோ இல்லேங்காணும்! மனுஷாள் பொறுப்பில்லாம இருந்தா இதெல்லாம் நடந்தே தீரும்! அப்படி நெஜமாகவே நடக்காம இருக்கணுமுண்ணா, நாமெல்லாம் தண்ணீரை விரயம் பண்ணாம மிச்சம் பிடிக்கணும்! உங்க வருங்கால சந்ததிக்கு சொத்து,சுகம்,ஆஸ்தி,பாஸ்தி சேர்த்து வச்சிட்டுப்போகாட்டாலும் பரவாயில்லை! அவா இருக்கப்போற லோகத்தை நாஸ்தி பண்ணாம இருக்கணுமோன்னோ?

"தண்ணிபட்ட பாடு, தண்ணிபட்ட பாடு,"ன்னு சொல்றோமோன்னோ? தண்ணிக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு ஸ்வாமி? இப்போ தண்ணிக்காக மாநிலங்கள் சண்டை போடறா; நாளைக்கு தேசங்கள் சண்டை போடற காலம் வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை! நம்ம முகுந்தம்மா இதைப் பத்தி எவ்வளவு அழகா எழுதியிருக்கார்னு சித்த வாசியுங்கோ!

அதுனாலே...

ஷவரிலே குளிக்கிறவா பக்கெட்டுலே தண்ணியைப் பிடிச்சு வச்சிண்டு குளிங்கோ! இல்லை, ஷவரிலே குளிச்சாத் தான் என் சரீரத்துலே இருக்கற அழுக்கு போகுன்னு சொல்லறவா, அட் லீஸ்ட் குளிச்சுட்டு சுருக்குன்னு வெளியே வந்துடுங்கோ! ஷவருக்கடியிலே நின்னுண்டு ’சலங்கை ஒலி’ ஜெயப்ரதா மாதிரி "மவுனமான நேரம்,"னு பாட்டெல்லாம் நாராசமாப் பாடி அக்கம் பக்கத்துலே இருக்கிறவாளோட பிராணனை வாங்காதேள்!

குழாயைத் திறந்து வச்சிண்டு கண்ணாடியிலே அவா அவா அழகு சொரூபத்தையே அரை மணிநேரம் பாத்துண்டு நிக்காதேள்! இப்பவே கேன்-லே தண்ணி விற்கறா! பாட்டில்லே தண்ணி விற்கறா! பாக்கெட்டிலே தண்ணி விற்கறா! இப்படியே போச்சுன்னா சாச்செட்-லே தண்ணி விற்கற நாள் வந்துடும் தெரியறதோன்னோ? அப்புறம் குளிக்கிறதுக்கு ஷாம்பூ வாங்குற மாதிரி ஒரு சாச்செட் தண்ணி வாங்க வேண்டி வந்திடும்!

வேனல் காலத்துலே சோடா குடிக்கிறதுக்குப் பதிலா, சந்திரமண்டலத்துக்குப் போறவா மாதிரி குட்டி குட்டி மாத்திரை தான் கிடைக்கும். ஒரே கோலாவிலே ரெண்டு ஸ்ட்றா போட்டுச் சாப்பிடற காதல் ஜோடிகளே! உங்க பேரன் பேத்தி காலத்துலே பெப்ஸியும் இருக்காது, ஸ்ட்றாவும் இருக்காது. Straw(வைக்கோல்) தான் மிச்சமிருக்கும்!

ரேஷன் கடையிலே அரிசி,பருப்பு,மண்ணெண்னை வாங்குற மாதிரி தண்ணியும் மாசத்துக்கு ஒரு குடும்பத்துக்கு அஞ்சு லிட்டர்னு கொடுக்கிற காலம் வந்துடும்.

தேர்தல்லே புடவை,வேஷ்டி கொடுக்கிறா மாதிரி தொகுதியெல்லாம் தண்ணிக்கே தண்ணிபட்ட பாடா விநியோகம் நடக்கும்.

வீட்டுலே கிணறு வச்சிருக்கிற மாப்பிள்ளை தான் வேணுமுன்னு பொண்ணுங்கல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுவா! வரதட்சணையா டாங்கர் டாங்கரா தண்ணி கொடுக்க ஆரம்பிச்சுடுவா!

இப்போதைக்கு சந்திரமண்டலத்துலே தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கா! அப்புறம், அங்கிருந்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வர்றேன்னு அரசியல்வாதியெல்லாம் திட்டம் போடுவா! அப்புறமென்ன, டெண்டர் தான், காண்ட்ராக்ட் தான்! கமிஷனிலே ஆரம்பிச்சு விசாரணைக் கமிஷன் வரைக்கும் போகும்! இதெல்ல்லாம் தேவையா?

எல்லாரும் தண்ணீரை மிச்சம் பண்ணுங்கோ! லோகத்தைக் காப்பாத்துங்கோ! வரப்போற சந்ததி நம்பளை நினைச்சுப் பெருமைப்படறா மாதிரி பண்ணுவோம். மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம்! ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் மிச்சம் பிடிக்கறதுன்னு நாம எல்லாரும் ஒரு பிரதிக்ஞை எடுத்துப்போம்!

வலைப்பதிவாளர்களே! உங்களுக்கும் இந்த சேட்டைக்கார பாகவதரோட ஒரு கோரிக்கை! எல்லாரும் உலக தண்ணீர் தினம் பற்றி ஒரு பதிவு போட்டு, லோகத்துலே இருக்கிறவாளுக்கு தண்ணீரின் மகத்துவம் குறித்து, ஏதோ நம்மால் முடிந்த அளவு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோமே!

வலைப்பதிவாளருக்கும் வாசிக்கவந்தவர்க்கும்
களிப்புடன் செல்பவர்க்கும் கடுப்புடன் போனவர்க்கும்
மங்களம் சுப மங்களம்! நித்ய சுப மங்களம்! சுப மங்களம்!

61 comments:

பிரபாகர் said...

புரட்சித்தலைவர் ராக்கெட் விடுவது பற்றி நடத்திய ரவுசை பாலோ பண்ணி சமுதாய அக்கறையோடு, தண்ணீர் பிரச்சினை பற்றி தெளிவாய் எழுதி கலக்கியிருக்கிறீர்கள். அருமை நண்பா!

பிரபாகர்.

Ananya Mahadevan said...

எப்படி சேட்டை? எதிலும் புதுமை, எங்கும் வித்தியாசம்! கலக்குறேப்பா.. ஜூப்பரு.

சைவகொத்துப்பரோட்டா said...

பேஷ்.......பேஷ்......கதா காலட்சேபம் ரொம்ப நன்னா இருக்கு.

Chitra said...

முன்னெல்லாம் தீபாவளிப்பண்டிகை கொண்டாடறச்சே, "ஏண்ணா, கங்கா ஸ்நானம் ஆயிடுத்தா?"ன்னு விஜாரிப்பா! இந்தக் காலத்துலே பாருங்கோ, "வேக்கூம் ஸ்நானம் ஆயிடுத்தா?"ன்னு கேட்கும்படியாயிடுத்து!


................ :-(
தண்ணீர் பிரச்சினையை கூட இவ்வளவு சுவையோடு அருமையா சொல்லிட்டீங்க (பாடிட்டீங்க). அசத்தல்.

Unknown said...

சேட்டைக்கு நடுவிலும் ஒரு நல்ல முகம்

ஹாஹ் ஹா ஹா

ஜெட்லி... said...

அப்போ 22 தேத்தி சரக்கு கடையில் கூட்டம் பயங்கரமா இருக்குமே

ஜெட்லி... said...

அப்போ 22 தேத்தி சரக்கு கடையில் கூட்டம் பயங்கரமா இருக்குமே

பனித்துளி சங்கர் said...

இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

தலை சுற்றுகிறது . அருமையான தொகுப்பு கலக்கல் நண்பரே !

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ வலைப்பதிவாளருக்கும் வாசிக்கவந்தவர்க்கும்
களிப்புடன் செல்பவர்க்கும் கடுப்புடன் போனவர்க்கும்
மங்களம் சுப மங்களம்! நித்ய சுப மங்களம்! சுப மங்களம்! }}}}}}}}}}}}



அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ திமிகிட திமிகிட வாத்யம்ருதங்கம்!
திமிகிட திமிகிட வாத்யம்ருதங்கம்!
ஜலானந்தஹரே! அக்வா ஃபினா
பிஸ்லேரிவாட்டர் ஹரே! }}}}}}}}}}


ஆஹா ஏவளவு எளிமையான வார்த்தைகள் .

எல்லோருக்கும் எளிதில் பயித்தியம் பிடித்துவிடும் அதுமட்டும் உண்மை .

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{{{{இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே, அத்திப்பட்டி அத்திப்பட்டிங்கிற ஊருலே, சுட்டிப்பொண்ணு சுமதியாகப்பட்டவள், ஒரு தீபாவளியன்னிக்கு தன்னோட தாயாரண்ட போயி, "ஏம்மா, போன தீபாவளியின் போது, அடுத்த தீபாவளிக்கு குளிப்பாட்டறேன்னு சொன்னியே! இன்னிக்காவது என்னைக் குளிப்பாட்டுவியா?"ன்னு கேட்டா பாருங்கோ! நம்ம நாட்டுலே எது இருக்கோ இல்லியோ, கண்ணுலே ஜலம் வரதுக்கு மட்டும் குறைச்சலே இருக்காதோன்னோ? சுமதியோட ஆசையைக் கேட்டதும், தாயாரான ஆனந்தவல்லி மனசு நொந்துபோயி, கண்ணீரும் கம்பலையுமா, "கண்ணன் வருவான், கதை சொல்லுவான்,’ மெட்டுலே பாட ஆரம்பிச்சுட்டா! என்ன பாட்டு?

தண்ணிவருமா தாகம்தீருமா
தம்ளர்தண்ணி கண்ணில்படவில்லை இங்கே!
குழாயினிலே காத்து மட்டும்தான்
குடிக்கவே தண்ணியில்லை!குளியல் எங்கே? }}}}}}}}}}}}}}}}}



எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

முகுந்த்; Amma said...

சேட்டைகாரபாகவதர் அண்ணா உங்க கதாகாலச்சேபம் அருமை போங்கோ! தண்ணீர் தினத்திற்காக உங்களுக்கே உண்டான நகைச்சுவை உணர்வோட ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டு இருக்கேள் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

வின்சென்ட். said...

முதலில் பதிவு இட்டதற்கு மிக்க நன்றி. அதனை வித்தியாசமாக கதாகாலச்சேபம் வடிவில் நகைச்சுவை உணர்வோடு தந்தது அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

புதுமையான நடையில் அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேஷ் பேஷ் ..:)
இட்ஸ் டிஃபரண்ட் ..
எல்லாரையும் கேட்டுக்கிட்ட விதத்துல ..கதை கேட்டுட்டு கண்ணால ஜலம் மட்டும் விட்ட்டுட்டு போகாம, மறக்காம எல்லாரும் பதிவு போடுவாங்கன்னு நம்புவோம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லா பாட்டும் அசத்தல், ஹம் செய்து பாத்துட்டேன்.. வரிகளோட.. :)

Thamiz Priyan said...

மகுடத்திற்கானப் பதிவு!

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர்!! :)) அசத்துங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா சொன்னீங்க. serious ஆனா விசியத்த நகைச்சுவையா சொன்ன அணுகுமுறை நல்லா இருக்கு. மார்ச் 22 குறிச்சு வெச்சுக்கறேன். இந்த தலைமுறைக்கு ரெம்ப தேவையான பதிவு

மதி said...

பதிவு இட நேரமில்லை. ஏதோ என்னால் முடிந்தது, வோட்டை போட்டு விட்டேன்

மசக்கவுண்டன் said...

கண்டிப்பா உலக தண்ணீர் தினத்தைப்பற்றி ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@அண்ணே..
இனிமேல, நான் குளிச்சா, தூக்கிப்போட்டு மிதிங்கண்ணே..
ஏன்னே.. இந்த கூவம்..கூவமுனு சொல்றாங்களே..
அதைய சுண்டக் காய்ச்சி குடிச்சா...பிரச்சனை தீருமானு சொல்லுங்கண்ணே..

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, சேட்டையைக் காட்டினாலும் அதிலும் ஒரு மெஸேஜ் இருக்கு. மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

கோமதி அரசு said...

அருமையான கதாகாலட்சேபம்.

பாடல்கள்,கருத்துக்கள் அருமை.

நானும் என் பங்குக்கு என்னல் முடிந்த தண்ணீர் விழிப்புணர்வு பதிவு போட்டு இருக்கிறேன்.

pudugaithendral said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.

சிநேகிதன் அக்பர் said...

சரியா சொன்னீங்க.

இங்கு ஆறே கிடையாது. கடல் நீரை குடி நீராக்குகிறார்கள்.

உப்பு நீரில் குளிப்பதால் தலை முடி உதிர்தல் , சரும பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

இப்ப யோசிக்கலைன்னா பின்னாடி கஷ்டம் தான்.

ஆர்வா said...

///இப்போதைக்கு சந்திரமண்டலத்துலே தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கா! அப்புறம், அங்கிருந்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வர்றேன்னு அரசியல்வாதியெல்லாம் திட்டம் போடுவா!//

நடந்தாலும் நடக்கும்.. சொல்ல முடியாது.

மங்குனி அமைச்சர் said...

சேட்ட இந்த பதிவு ஒரே போர் , அதுனால நோ கமெண்ட்ஸ் .

settaikkaran said...

//புரட்சித்தலைவர் ராக்கெட் விடுவது பற்றி நடத்திய ரவுசை பாலோ பண்ணி சமுதாய அக்கறையோடு, தண்ணீர் பிரச்சினை பற்றி தெளிவாய் எழுதி கலக்கியிருக்கிறீர்கள். அருமை நண்பா!//

மிக்க நன்றி நண்பரே! என்னைச் சுற்றிலும் உற்சாகமளிக்கிற உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இருக்கையில், இதெல்லாம் சாத்தியமாகிறது.

settaikkaran said...

//எப்படி சேட்டை? எதிலும் புதுமை, எங்கும் வித்தியாசம்! கலக்குறேப்பா.. ஜூப்பரு.//

உங்களை மாதிரி பூமாலைகளோடு சேர்ந்து இந்த நாருக்கும் சற்று நறுமணம் வருகிறது. அவ்வளவு தான்! :-)) மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//பேஷ்.......பேஷ்......கதா காலட்சேபம் ரொம்ப நன்னா இருக்கு.//

ஆஹா! அண்ணே, உங்களுக்கும் பிடிச்சுதா! ரொம்ப சந்தோஷமாயிருக்கு! :-)) மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//................ :-(
தண்ணீர் பிரச்சினையை கூட இவ்வளவு சுவையோடு அருமையா சொல்லிட்டீங்க (பாடிட்டீங்க). அசத்தல்.//

தொடர்ந்து ஊக்கமளிக்க நீங்களெல்லாம் இருக்கிற நம்பிக்கை தான் புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னைத் தூண்டுகிறது.மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//சேட்டைக்கு நடுவிலும் ஒரு நல்ல முகம் ஹாஹ் ஹா ஹா//

ஒரேயடியா முகத்தைக் காட்டக் கூடாதுன்னு தான் இதுலேயும் கொஞ்சம் சேட்டை! :-)) மிக்க நன்றிங்க!!!!

settaikkaran said...

//அப்போ 22 தேத்தி சரக்கு கடையில்
கூட்டம் பயங்கரமா இருக்குமே//

ஆமாண்ணே, எதுக்கும் சீக்கிரமாப் போயித் துண்டைப் போட்டு இடம் பிடிக்கறது நல்லது! :-)) மிக்க நன்றிங்க!!!!

settaikkaran said...

//தலை சுற்றுகிறது . அருமையான தொகுப்பு கலக்கல் நண்பரே !//

தலைசுற்றினால் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்; அவர்கள் முதுகை அவர்களாலேயே பார்க்க முடியும்! :-)) மிக்க நன்றிங்க!!!!

settaikkaran said...

//இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .//

ஏன், ஓட்டுச்சாவடி ரொம்ப தூரமா? :-)) மிக்க நன்றிங்க!!!!

//மீண்டும் வருவான் பனித்துளி !//

வாங்க வாங்க!!

settaikkaran said...

//இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .//

ஏன், ஓட்டுச்சாவடி ரொம்ப தூரமா? :-)) மிக்க நன்றிங்க!!!!

//மீண்டும் வருவான் பனித்துளி !//

வாங்க வாங்க!!

settaikkaran said...

//அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????//

என்னாச்சு?? குழாயிலே தண்ணி வரலியா??????

settaikkaran said...

//ஆஹா ஏவளவு எளிமையான வார்த்தைகள் .//

:-)))))

//எல்லோருக்கும் எளிதில் பயித்தியம் பிடித்துவிடும் அதுமட்டும் உண்மை .//

எல்லாருக்கும் எளிதில் பிடிக்குமா என்று தெரியாது. ஆனால்.....! :-)))))))))

settaikkaran said...

//எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !//

எல்லாம் ஒரு........
ஃப்ளோவுலே வர்றது தான்! :-))))) மிக்க நன்றிங்க!

settaikkaran said...

//சேட்டைகாரபாகவதர் அண்ணா உங்க கதாகாலச்சேபம் அருமை போங்கோ! தண்ணீர் தினத்திற்காக உங்களுக்கே உண்டான நகைச்சுவை உணர்வோட ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டு இருக்கேள் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!//

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய மூவரில் நீங்களும் ஒருவர் அல்லவா? ஆகையால் நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//முதலில் பதிவு இட்டதற்கு மிக்க நன்றி. அதனை வித்தியாசமாக கதாகாலச்சேபம் வடிவில் நகைச்சுவை உணர்வோடு தந்தது அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.//

உங்களது வலைப்பதிவு முகவரியை முத்துலட்சுமி அவர்களிடமிருந்து பெற்று அன்று முதல் பின்தொடருகிறேன். உங்களது அருமையான பதிவுகளை வாசித்து ஏற்பட்ட உந்துதலே இந்தப் பதிவை எழுத வைத்தது. எனவே, நான் இரட்டிப்பு மடங்காக நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு! மிக்க மிக்க நன்றி வின்சென்ட் அவர்களே!!

settaikkaran said...

//புதுமையான நடையில் அருமை//

மிக்க நன்றி நீச்சல்காரரே! உற்சாகமூட்டுகிறது உங்கள் வருகையும் கருத்தும்!!

settaikkaran said...

//பேஷ் பேஷ் ..:)
இட்ஸ் டிஃபரண்ட் ..//

நீங்கள் எனக்கு அளித்த உந்துதலும், உங்களால் வின்சென்ட் அவர்களின் பதிவைப் படித்ததுமே இந்தப் பதிவின் முழுக்காரணங்களாகும். ஆகையால், முதற்கண் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!!

//எல்லாரையும் கேட்டுக்கிட்ட விதத்துல ..கதை கேட்டுட்டு கண்ணால ஜலம் மட்டும் விட்ட்டுட்டு போகாம, மறக்காம எல்லாரும் பதிவு போடுவாங்கன்னு நம்புவோம்..//


நானும் அவ்வண்ணமே நம்புகிறேன். நல்லதே நடப்பதாக!!

settaikkaran said...

//பேஷ் பேஷ் ..:)
இட்ஸ் டிஃபரண்ட் ..//

நீங்கள் எனக்கு அளித்த உந்துதலும், உங்களால் வின்சென்ட் அவர்களின் பதிவைப் படித்ததுமே இந்தப் பதிவின் முழுக்காரணங்களாகும். ஆகையால், முதற்கண் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!!

//எல்லாரையும் கேட்டுக்கிட்ட விதத்துல ..கதை கேட்டுட்டு கண்ணால ஜலம் மட்டும் விட்ட்டுட்டு போகாம, மறக்காம எல்லாரும் பதிவு போடுவாங்கன்னு நம்புவோம்..//


நானும் அவ்வண்ணமே நம்புகிறேன். நல்லதே நடப்பதாக!!

settaikkaran said...

//எல்லா பாட்டும் அசத்தல், ஹம் செய்து பாத்துட்டேன்.. வரிகளோட.. :)//

நானும் முதலில் பாடிப்பார்த்து விட்டு, சில திருத்தங்கள் செய்து தான் போட்டேன். நல்ல வேளை, நானே பாடியிருந்தால் பயந்திருப்பீர்கள்! மிக்க நன்றிங்க!!!!

settaikkaran said...

//மகுடத்திற்கானப் பதிவு!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்ப்ரியன் அவர்களே!! அடிக்கடி வாருங்கள்!!

settaikkaran said...

//சூப்பர்!! :)) அசத்துங்க//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நான் ஆதவன் அவர்களே!!

settaikkaran said...

//நல்லா சொன்னீங்க. serious ஆனா விசியத்த நகைச்சுவையா சொன்ன அணுகுமுறை நல்லா இருக்கு. மார்ச் 22 குறிச்சு வெச்சுக்கறேன். இந்த தலைமுறைக்கு ரெம்ப தேவையான பதிவு//


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி அவர்களே!! அடிக்கடி வாருங்கள்! நீங்களும் ஒரு பதிவு எழுதி விடுங்கள்!!!

settaikkaran said...

//பதிவு இட நேரமில்லை. ஏதோ என்னால் முடிந்தது, வோட்டை போட்டு விட்டேன்//

:-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதி அவர்களே!! அடிக்கடி வாருங்கள்!

settaikkaran said...

//கண்டிப்பா உலக தண்ணீர் தினத்தைப்பற்றி ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்//

ஆமாம் கவுண்டரே, நீங்கள் அசத்தலாய் எழுதுவீர்கள் என்று எனக்கும் தெரியும்!! தூள் கிளப்புங்கள்! மிக்க நன்றி!! :-))))

settaikkaran said...

//@அண்ணே..இனிமேல, நான் குளிச்சா, தூக்கிப்போட்டு மிதிங்கண்ணே..ஏன்னே.. இந்த கூவம்..கூவமுனு சொல்றாங்களே..
அதைய சுண்டக் காய்ச்சி குடிச்சா...பிரச்சனை தீருமானு சொல்லுங்கண்ணே..//

ஐயையோ, குளிக்காம இருந்திடாதீங்க! எல்லாரும் ஆசை தீரக் குளிக்கிறதுக்கு தண்ணீரை எப்படி மிச்சப்படுத்தலாமுன்னு ஒரு பதிவு போடுங்கண்ணே! அப்புறம், கூவத்தைக் காய்ச்சுறதா? அதுவே காய்ஞ்சு போய் நாறிட்டுத் தானே இருக்குதுண்ணே? ஏன் இந்தக் கொலைவெறி...? :-))))))))))))))))))))

மிக்க நன்றி!! :-))))

settaikkaran said...

//நல்ல பதிவு, சேட்டையைக் காட்டினாலும் அதிலும் ஒரு மெஸேஜ் இருக்கு. மிக்க நன்றி.//

ஹி..ஹி! சேட்டையில்லாம சேட்டைக்காரன்னா எப்புடி??

மிக்க நன்றி!! :-))))

settaikkaran said...

//என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .//

ஆஹா! உங்க ஆர்வத்தை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியலேங்க! :-)))))))

//மீண்டும் வருவான் பனித்துளி !//

இந்த அப்ரோச்சும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

மிக்க நன்றி!! :-))))

settaikkaran said...

//அருமையான கதாகாலட்சேபம்.

பாடல்கள்,கருத்துக்கள் அருமை.

நானும் என் பங்குக்கு என்னல் முடிந்த தண்ணீர் விழிப்புணர்வு பதிவு போட்டு இருக்கிறேன்.//


மிக்க மகிழ்ச்சி! உங்களைப் போன்றோர்களின் பொதுநல அக்கறை மிக்க பதிவுகள் தான் என் போன்றவர்களின் சேட்டையைத் தற்காலிகமாக நிறுத்தி இது போலவும் எழுதத் தூண்டுகின்றன.

மிக்க நன்றி!! :-))))

settaikkaran said...

//ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.//

உங்கள் வருகையும் கருத்தும் உற்சாகமளிக்கின்றன.
மிக்க நன்றி!! :-))))

settaikkaran said...

//சரியா சொன்னீங்க.

இங்கு ஆறே கிடையாது. கடல் நீரை குடி நீராக்குகிறார்கள்.

உப்பு நீரில் குளிப்பதால் தலை முடி உதிர்தல் , சரும பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

இப்ப யோசிக்கலைன்னா பின்னாடி கஷ்டம் தான்.//

நிஜமே! இப்படியும் பேராபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதைப் பற்றி சமகாலச் சிந்தனையுடையவர்கள் அக்கறையாக எழுதி, என்னையும் ஒரு துளியாய் இணைத்து விட்டார்கள். அவர்களுக்கும் வருகை புரிந்து கருத்துத் தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றிகள்!!!

settaikkaran said...

//நடந்தாலும் நடக்கும்.. சொல்ல முடியாது.//

:-((
அந்த பயம் எல்லாருக்கும் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-))))

பிரேமா மகள் said...

சேட்டை.... நீங்க இந்த தண்ணியைப் பத்தியும் எழுதுவீங்கன்னு நினைக்கவே இல்ல.. மற்றபடி உங்க சிந்தனை அருமை..