Monday, March 22, 2010

இன்னாண்ணறே?

செய்தி: பிச்சைக்காரர்களுக்கு பஞ்சாபில் ஐ.டி.கார்டு

இன்னா நயினா, பஞ்சாபுலே இருக்குற பிச்சைக்காரங்க தான் ஒஸ்தியா? இந்த டகால்டி வேலை தானே வேணாங்கிறது?

தமில்நாட்டை அல்லாத்துலேயும் ஃபஷ்டு மாநிலமாக்கணுண்ணு அல்லாரும் சொல்றாங்கோ!


அதிகாரி: வணக்கம், நாங்க சமூகநலத்துறையிலேருந்து வர்றேன்!

பிச்சை: வா நயினா! இன்னா மேட்டரு? மாமுலெல்லாம் போலீசுக்கு ஒண்டி தான் கொட்பேன்!

அதிகாரி: ஐயையோ, நான் மாமூல் எல்லாம் வாங்க மாட்டேன்.

பிச்சை: ஐயே! அதான் நம்ம கிட்டே வந்துகீறே! இப்போ சங்கத்துலே ஒண்ணும் வேக்கன்ஸி இல்லியே நைனா? திருநீர்மலை, மாங்காடு பக்கம் போறேன்னா சொல்லு! அங்கே ரெண்டு மூணு துண்டு போட எடமிருக்குதாம். செவ்வாய், வெள்ளி நல்லா சில்லறை தேறும்

அதிகாரி: அடடா, உங்க கிட்டே வெபரம் கேட்கலாமுன்னு வந்திருக்கேன்.

பிச்சை: ஓ அப்படீண்ணறியா! சரி, கேளு நயினா! தெரிஞ்சதைச் சொல்றேன்! இது கூட சொல்லாங்காட்டி பி.ஏ.படிச்சு இன்னா புண்ணியம்?

அதிகாரி: என்னது பி.ஏ.வா?

பிச்சை: ஏன் நயினா அதுந்து பூட்டே! உனக்கு திர்லக்கேணி திருப்பதி தெர்மா? அவ்ரும் பிச்சைதான் எடுக்கிறாரு! எம்.ஏ.படிச்ச ஆளு!

அதிகாரி: தலை சுத்துது! இவ்வளவு படிச்சவரு ஏன் பிச்சையெடுக்கிறாரு?

பிச்சை: அத்தக் கேக்கிறியா? சொல்றேன் கேளு, படா டமாஸான் ஷ்டோரி! திருப்பதியும் உன்னை மாதிரி டீஜண்டான ஆளாத் தான் இருந்தாரு! பல்லாவரம் டேஜன்லே தினம் போவனா, அவரும் தெனம் ரெண்டு ரூபா போட்டுக்கினே இருப்பாரு! அப்பாலே ரெண்டு ரூபா ஒரு ரூபா ஆயிருச்சு! இன்னான்னு கேக்க ஸொல்லோ அவ்ரு புள்ளை டாக்டருக்குப் படிக்கிறதாங்காட்டி செலவு ஜாஸ்தியாயிடுச்சுன்னாரு! பின்னாலே ஒரு ரூபா அம்பது பைசா ஆனதும் இன்னான்னு கேட்டா, வாத்யாரு சின்ன வூடு வச்சிருக்கக் கண்டி, செலவு ஜாஸ்தியாயிருச்சுப்பான்னு சொல்லிட்டாரு.

அதிகாரி: அதெல்லாம் சரி, அவரு ஏன் பிச்சையெடுக்க வந்தாரு?

பிச்சை: சின்ன வூட்டுக்காரியோட கொளந்தையை எல்.கே.ஜி. படிக்க வச்சாரா? பாவம், நடுரோட்டுக்கே வந்திட்டாரு நயினா!

அதிகாரி: ஓஹோ! உங்க பேரு என்ன?

பிச்சை: வூட்டுலே வச்சது ஏழுமலை! அல்லாரும் கூப்புடறது எல்லீஸ்பேட்டை ஏகா!

அதிகாரி: உங்களோட நிரந்தர முகவரி என்ன? இதே பிளாட்பாரம் தானா?

பிச்சை: இன்னா நயினா, இது பிசினஸ் பண்ணுற எடம். வூடு அட்யாறுலே பழைய டெப்போவாண்ட கீது! ஒரு எம்.என்.சிக்கு வாடகைக்குக் குட்த்துக்கீறேன். இப்போ கண்டி பெருங்களத்தூருலே ஒரு கிரவுண்டு வாங்கிக்கீறேன்.

அதிகாரி: உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா?

பிச்சை: அத்த ஏன் கேக்குறே நயினா? ரெண்டு தபா பண்ணிகினேன், ஒத்து வரலே!

அதிகாரி: ஓஹோ! கொழந்தை குட்டிங்க இருக்குதா?

பிச்சை: ஓ! அதிருக்குது ஏழெட்டு!

அதிகாரி: அவங்களும் இதே தொழில் தானா?

பிச்சை: டமாஸ் பண்ணாதே நயினா! அதுங்கெல்லாம் பெரிய பெரிய இஸ்கூலிலே பட்சிட்டிருக்குது!

அதிகாரி: சரி! உங்களுக்கெல்லாம் அட்டை கொடுக்கப்போறோம். அதுக்காகத் தான் விவரம் கேட்கிறேன்.

பிச்சை: அதான் வாக்காளர் அட்டை இருக்குதே!

அதிகாரி: என்னது வாக்காளர் அட்டையா?

பிச்சை: பத்தாதா நயினா? ரேஷன் கார்டு வச்சுக்கீறேன். காட்டவா?

அதிகாரி: ரேஷன் கார்டு வேறேயா?

பிச்சை: இன்னா பண்றது நயினா? இது ரெண்டும் இல்லேன்னா பேங்குலே கணக்கு வச்சுக்க முடியாதே!

அதிகாரி: பேங்க்....அக்கவுண்டா?

பிச்சை: ஆமாம் நயினா...ஒரு சேவிங்க்ஸ் அக்கவுண்டு...ஒரு கரண்ட் அக்கவுண்டு வச்சிருக்கேன். ஏ.டி.எம். கார்டு கூட இருக்கு!

அதிகாரி: ஏ.டி.எம்.கார்டா?

பிச்சை: கேளு நயினா! இந்த வர்சம் சிங்கப்பூரு போகணுமுன்னு மாஸ்டர்-கார்டும் வாங்கிட்டேன்.

அதிகாரி: என்னாது? சிங்கப்பூரா? நான் சிங்கப்பெருமாள் கோவில் கூட போனதில்லையே?

பிச்சை: இன்னா ஆபீசர் நீ? பதவிலே இருக்க ஸொல்ல நாலு காசு பாக்கத் தாவலே? எப்போ ரிட்டயர் ஆவப்போறே?

அதிகாரி: இன்னும் ஒரு வருஷம் தானிருக்கு!

பிச்சை: கேக்கவே மனசுக்கு பேஜாரா கீதுபா! ரிட்டயர் ஆனதுக்கு அப்பாலே என்ன வந்து பாரு! எங்காளு ஒருத்தர் வி.ஆர்.எஸ்.வாங்கிக்கினு அரசியல்லே சேரப்போறாராம். அவரு இடத்துலே நீ துண்டு விரிச்சு உட்காரு! ஒரு வருசத்துலே திருவாமியூர்லே வூடு கட்டிரலாம்..இன்னாண்ணறே நீ?

48 comments:

Chitra said...

இந்த economic condition ல அடிபடாத பிசினஸ்.

Anonymous said...

தலைப்பு,படத்துக்காகவே ஓட்டு போட்டுட்டேன் நைனா

சைவகொத்துப்பரோட்டா said...

தல சுத்துது சாமியோவ், ஜோடா குச்சிட்டு அப்பாலிக்கா வரேன்.

Ananya Mahadevan said...

படா ஸோக்காக்கீது நைனா, வரிக்கி வரி அம்பூட்டும் டமாஸ்தாம்பா.. அக்கான்..

அஷீதா said...

yepaaaaaaaaaaaaaaa....naan innaike velaya resign panalaaaaaaaaaamnnu yosikiren pa :)

Unknown said...

நைனா நமக்குக் கூட மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலாண்ட ஒரு எடம் இர்ந்தா சொல்லுபா..

(நம்ம ஃபிகர் வூடு பக்கத்துல தாம்பா கீது. அதான்.. அக்காங்க்)

ஜெய்லானி said...

//எங்காளு ஒருத்தர் வி.ஆர்.எஸ்.வாங்கிக்கினு அரசியல்லே சேரப்போறாராம். //

அப்புடி போடு ....போடு....அதான் மாமு. எப்பவும் ஜொல்லுவிட்டு, கைநீட்டிகிட்டு இருக்கிறானுங்க சோமாறி இந்த அரசியல்வாதி பயலுங்க

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல்.

ஆனா அதுக்கும் திறமை வேணும். இல்லையா சேட்டை?

Thenammai Lakshmanan said...

Settaikaaran ...romba sirichu kite iruken ...stop pana mudiyala..
thanks for this...:)))

பொன் மாலை பொழுது said...

//எங்காளு ஒருத்தர் வி.ஆர்.எஸ்.வாங்கிக்கினு அரசியல்லே சேரப்போறாராம். அவரு இடத்துலே நீ துண்டு விரிச்சு உட்காரு! ஒரு வருசத்துலே திருவாமியூர்லே வூடு கட்டிரலாம்..இன்னாண்ணறே நீ//

நக்கலாக்தாகீது ஆனாக்க முளுக்க முளுக்க கரீட்டு நைனா.
அத்த வுட, நானும் வர்ட்டா கண்ணு?

பிரேமா மகள் said...

சேட்டை... நீங்கதான் அந்த ஆபீஸரா? ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க... சென்னையில் இருக்கற பிச்சைக்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து உங்களுக்கு சங்கம் வெச்சாலும் வைப்பாங்க..

நாமக்கல் சிபி said...

வழக்கம்போல கலக்கல்!

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்கு சேட்டை...

பெரம்பலூர்ல ஒரு கால் இல்லாம ஒருத்தர் பிச்சை எடுத்திட்டிருப்பார். விசாரிச்சப்போ நாலு சொந்த வீடு இருக்கிறத கேட்டுட்டு ஆடிப்போயிட்டேன்...

பிரபாகர்.

மங்குனி அமைச்சர் said...

ஹாய் சேட்ட, அவுகள பத்தி பதிவு போட்டதால , அவுகள்லாம் சேந்து பீச்ல உனக்கு ஒரு செல வக்க போறாகளாம்.

Unknown said...

படம் சூப்பரு அத மிட மேட்டரு சூப்பரு

எனா எங்களுக்கும் கொஞ்சம் தர்மம் பனுபா உன் நக்கல

Starjan (ஸ்டார்ஜன்) said...

செம டாபிக், கலக்குங்க சேட்டை...

முகுந்த்; Amma said...

போட்டோ சுப்பரா இக்குதுப்பா!! பேசாம இந்த பிசினேசு ஆரம்பிசிடலம்னு இருக்கேன் :))

பனித்துளி சங்கர் said...

ஆஹா நண்பரே அவங்களையும் நீங்க விட்டுவைக்கவில்லையா .?
கலக்கல் போங்க !

மசக்கவுண்டன் said...

மும்பையிலெ நெசமாலுமே இந்த மாரி நடக்குதாம்ப்பா?

பித்தனின் வாக்கு said...

முதலீடு இல்லா முதலாளிகளின் உலகம். வித்தியாசமான சிந்தனை.

ஆமா இது அனுபவப் பதிவு இல்லைதானே.

நன்றி சேட்டை.

Madhavan Srinivasagopalan said...

//திருநீர்மலை, மாங்காடு பக்கம் போறேன்னா சொல்லு! அங்கே ரெண்டு மூணு துண்டு போட எடமிருக்குதாம். செவ்வாய், வெள்ளி நல்லா சில்லறை தேறும்//

HA.. Ha.. Ha.. HAAAAHAAAA...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பதிவுங்க. சிரிச்சு சிரிச்சு வகுரு வலிக்குது..

இனி மேல உங்களோட ரெகுலர் விசிட்டர் நானு :)

settaikkaran said...

//இந்த economic condition ல அடிபடாத பிசினஸ்.//

இல்லியா பின்னே? இந்த பிசினஸுக்கு ஐ.பி.ஓ.போட்டா ஷேர்-மார்க்கெட்டையே ஒரு கலக்கு கலக்கிரும்! :-))

நன்றிங்க!!

settaikkaran said...

//தலைப்பு,படத்துக்காகவே ஓட்டு போட்டுட்டேன் நைனா//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//தல சுத்துது சாமியோவ், ஜோடா குச்சிட்டு அப்பாலிக்கா வரேன்.//

சொல்லிட்டு வராமலே இருந்திட்டீங்களே அண்ணே? சோடா தானே குடிக்கப்போனீங்க...? :-)))

நன்றி அண்ணே!!!

settaikkaran said...

//படா ஸோக்காக்கீது நைனா, வரிக்கி வரி அம்பூட்டும் டமாஸ்தாம்பா.. அக்கான்..//

படா டமாசா பின்னூட்டம் போட்டிருக்கீங்க...டாங்க்ஸ்!!!!

settaikkaran said...

//yepaaaaaaaaaaaaaaa....naan innaike velaya resign panalaaaaaaaaaamnnu yosikiren pa :)//

நீங்க யோசிக்கிறீங்க, நிறைய பேரு சங்கத்துக்கு அப்ளிகேஷனே அனுப்பியாச்சு! வெயிட்டிங் லிஸ்ட் வெப்-சைட்லே போடுவாங்களாம்...! :-) நன்றிங்க!!

settaikkaran said...

//நைனா நமக்குக் கூட மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலாண்ட ஒரு எடம் இர்ந்தா சொல்லுபா..//

மயிலாப்பூராண்ட எங்கே எடம் கீது? அல்லாத்தையும் துண்டு, துண்டாக்கி வித்துட்டானுங்களே?

//(நம்ம ஃபிகர் வூடு பக்கத்துல தாம்பா கீது. அதான்.. அக்காங்க்)//

சர்த்தான்! ஒரு முடிவோட தான் கீறீங்க! :-))
நன்றிங்க!!!

settaikkaran said...

//அப்புடி போடு ....போடு....அதான் மாமு. எப்பவும் ஜொல்லுவிட்டு, கைநீட்டிகிட்டு இருக்கிறானுங்க சோமாறி இந்த அரசியல்வாதி பயலுங்க//

தேர்தல் நேரத்துலே துண்டு விரிக்குறாங்க, அத்த மறந்துட்டீங்களே...? :-)))

நன்றிங்க!!

settaikkaran said...

//கலக்கல்.

ஆனா அதுக்கும் திறமை வேணும். இல்லையா சேட்டை?//

ஆமா, நிறைய presence of mind, perseverance,concentration எல்லாம் வேணுமாம். :-))

நன்றிங்க!!

settaikkaran said...

//Settaikaaran ...romba sirichu kite iruken ...stop pana mudiyala..
thanks for this...:)))//

ஹி..ஹி! இதை எழுதும்போது கூட..ஹி..ஹி, எனக்கே ரொம்ப...ஹி..ஹி..சிப்பு சிப்பாத் தான் வந்ததுங்க...! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!! :-))

settaikkaran said...

//நக்கலாக்தாகீது ஆனாக்க முளுக்க முளுக்க கரீட்டு நைனா.
அத்த வுட, நானும் வர்ட்டா கண்ணு?//

என்னது? வர்ட்டா வர்ட்டான்னு எங்கிட்டே கேட்கறீங்க எல்லாரும்...? ஃபோட்டோவுலே இருக்கிறது நானில்லீங்க....! அவ்வ்வ்வ்வ்!

நன்றிங்க!!!! :-))

settaikkaran said...

//சேட்டை... நீங்கதான் அந்த ஆபீஸரா? ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க... சென்னையில் இருக்கற பிச்சைக்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து உங்களுக்கு சங்கம் வெச்சாலும் வைப்பாங்க..//

அப்பாடா, நீங்களாவது என்னை அந்த ஆபீசரான்னு கேட்டீங்களே! :-))

அவங்க ஏற்கனவே சங்கம் எல்லாம் வச்சிருக்காங்க தெரியாதா? கட்டிடத்தைத் தான் அண்ணா சாலையிலே ரொம்ப நாளாத் தேடிட்டிருக்காங்க!

நன்றிங்க!!!!

settaikkaran said...

:)

நன்றி!

settaikkaran said...

//வழக்கம்போல கலக்கல்!//

மிக்க நன்றிங்க! :-))

settaikkaran said...

//ரொம்ப நல்லாருக்கு சேட்டை...

பெரம்பலூர்ல ஒரு கால் இல்லாம ஒருத்தர் பிச்சை எடுத்திட்டிருப்பார். விசாரிச்சப்போ நாலு சொந்த வீடு இருக்கிறத கேட்டுட்டு ஆடிப்போயிட்டேன்...//

அந்த மாதிரி நிறைய பேரு இருக்காங்க! உண்மையிலே வசதியில்லாத பிச்சைக்காரங்களும் இருக்காங்க! அவங்களுக்குள்ளேயும் LIG,MIG,HIG குரூப் இருக்குங்க!

மிக்க நன்றி!! :-)))

settaikkaran said...

//ஹாய் சேட்ட, அவுகள பத்தி பதிவு போட்டதால , அவுகள்லாம் சேந்து பீச்ல உனக்கு ஒரு செல வக்க போறாகளாம்.//

சரிதான், உ.பியிலேருந்து காக்காய் வந்து எச்சம் போடவா? :-)

மிக்க நன்றி!!!!

settaikkaran said...

//படம் சூப்பரு அத மிட மேட்டரு சூப்பரு

எனா எங்களுக்கும் கொஞ்சம் தர்மம் பனுபா உன் நக்கல//

நீங்க தான் மீரா ஜாஸ்மின் படத்தைப் போட்டு அசத்தல் அசத்தலாக் கவிதை எழுதி ஜமாய்க்கறீங்களே? :-))))

மிக்க நன்றி!!!!

settaikkaran said...

//செம டாபிக், கலக்குங்க சேட்டை...//

மிக்க நன்றிண்ணே! நான் கலக்குறது இருக்கட்டும், நீங்க வலைச்சரத்துலே கலக்கோ கலக்குன்னு கலக்கறீங்கண்ணே! வாழ்த்துக்கள்!!

settaikkaran said...

//போட்டோ சுப்பரா இக்குதுப்பா!! பேசாம இந்த பிசினேசு ஆரம்பிசிடலம்னு இருக்கேன் :))//

எந்த பிசினஸ்? ஏ.டி.எம்.மெஷின் தயாரிக்கிற பிசினஸ் தானே? சரி தானுங்க!!! :-))))

மிக்க நன்றி!!!

settaikkaran said...

//ஆஹா நண்பரே அவங்களையும் நீங்க விட்டுவைக்கவில்லையா .?
கலக்கல் போங்க !//

நாம யாரை விட்டு வச்சோம் இதுவரைக்கும்..? :-))))
மிக்க நன்றி!!!!!

settaikkaran said...

//மும்பையிலெ நெசமாலுமே இந்த மாரி நடக்குதாம்ப்பா?//

எல்லா ஊரிலேயும், சென்னை உட்பட இருக்குது!

மிக்க நன்றி!!!!!

settaikkaran said...

//முதலீடு இல்லா முதலாளிகளின் உலகம். வித்தியாசமான சிந்தனை.

ஆமா இது அனுபவப் பதிவு இல்லைதானே.//

அனுபவமா? சார் சார், என்னாது இது? உள்குத்து வச்சுப் பேசறீங்களே, நியாயமா....? :-))))))

நன்றிங்க!!!!!

settaikkaran said...

//HA.. Ha.. Ha.. HAAAAHAAAA...//

Thanks for coming Madhavan! :-)))

settaikkaran said...

//கலக்கல் பதிவுங்க. சிரிச்சு சிரிச்சு வகுரு வலிக்குது..

இனி மேல உங்களோட ரெகுலர் விசிட்டர் நானு :)//

ஆஹா! என்ன மகிழ்ச்சியான செய்தி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)))))

பனித்துளி சங்கர் said...

பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்

நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html

பெசொவி said...

ha.....ha.....ஹ......ஹா.......ஹி....ஹீ.....

Aba said...

இதுக்குப் பேர்தான் கம்யுனிசமோ?