Saturday, March 20, 2010

காக்கா...காக்கா!

இது ஒரு வித்தியாசமான காக்காய்-நரி கதை! மனதைத் தேற்றிக்கொண்டு படிக்கவும்.

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையிலே இருந்த ஒரு மரத்துலே, ஒரு காக்காய் உட்கார்ந்திட்டிருந்ததாம். அந்தப் பக்கமா போன ஒரு நரிக்கு, அந்தக் காக்காய் வெளியூர் காக்காய்னு சட்டுன்னு புரிஞ்சிருச்சு! எப்படீன்னு கேட்கறீங்களா, எல்லாக் காக்காயும் "கா..கா..கா,"ன்னு கரையும்; இந்தக் காக்காய் "க்யா...க்யா..க்யா,"ன்னு கரைஞ்சிட்டிருந்ததாம். அனேகமா இது இந்திக்காக்காய்னு புரிஞ்சுக்கிட்டு நரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு மரத்தடியிலே போய் நின்னு அண்ணாந்து பார்த்துச்சாம்.

ஏய் காக்கா! உன்னை இதுக்கு முன்னாலே நான் பார்த்ததேயில்லையே! வெளியூரா?-ன்னு நரி கேட்டுதாம்.

ஆமாம் நரிபாய்! நான் லக்னோவிலிருந்து வர்றேன். சென்னைக்குப் போயிட்டிருக்கேன்-னு காக்கா சொல்லிச்சாம்

நரிக்கு இந்தி தெரியுமா? காக்காய்க்குத் தமிழ் தெரியுமா? மிருகங்களும் பறவைகளும் பேசுமான்னு கேட்கிறவங்க, பேசாம ரஷியன் கலாச்சார மையத்துக்குப் போயி ஏதாவது குறுந்தாடி டைரக்டருங்க எடுத்த கலைப்படத்தைப் பார்க்கப்போயிடுங்க! லாஜிக்கைப் பத்திக் கவலைப்படாத தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் மேலே படிச்சா போதும்!

சரி, கதைக்குப் போகலாம்! லக்னோ காக்கா சென்னைக்குப் போறேன்னு சொன்னதும் நரிக்கு பெரிசா ஆச்சரியம் ஏற்படலே! அதுக்குத் தெரியாதா என்ன, தமிழ்நாட்டுலே காக்காய்க்குப் பஞ்சமேயில்லைன்னு!

ஏன் காக்கா? இப்படி ஒரு வயசுக்கு வந்த காக்கா தன்னந்தனியா உ.பியிலேருந்து தமிழ்நாட்டுக்குப் பறந்து வந்திருக்கியே? உனக்குப் பயமாயில்லே?-ன்னு நரி கேட்டுச்சாம்.

"அது ஒரு பெரிய கதை,"ன்னு காக்கா பெருமூச்சு விட்டுதாம். நரிக்கு பக்குன்னு ஆயிடுச்சாம்! இந்தக் காக்காய்க்கு ஏதோ ஒரு சோகமான ஃப்ளாஷ்-பேக் இருக்கும் போலிருக்கேன்னே நினைச்சிட்டிருக்கும்போதே பரத்வாஜ் பின்னணி இசையிலே "ஓ...ஓ..ஓஓ..ஓஓ..ஓஓஓ!"ன்னு கோரஸ் சத்தத்தோட காக்கா கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுதாம்.

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!


உத்திரப்பிரதேசத்துலே, நாடு முழுக்க இருக்கிற மனுசங்களோட பாவத்தைக் கழுவிக் கழுவி அழுக்கா ஒடிட்டிருக்கிற கங்கைநதிக்கரையோரத்தில் இருக்கிற கௌவாநகர் கிராமத்து வேப்பமரம் தான் அந்தக் காக்காயோட பூர்வீகம்! அந்த மரத்துலே உச்சாணிக்கிளையிலே தன்னோட குடும்பத்தாரோட அது ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருந்தபோது தான், நம்ம காக்கையோட வாழ்க்கையிலே புயலடிச்சா மாதிரி அந்த சம்பவம் நடந்தது.

காக்காயோட அம்மா காக்காய் காக்காஜீ கடையிலேருந்து கபளீகரம் பண்ணிட்டு வந்த சமோசாவை நம்ம ஹீரோயின் காக்காய் கொத்திக் கொத்திச் சாப்பிட்டுக்கிட்டிருந்தபோது, "ஞொய்ங்ங்ங்,"னு பெருசா சத்தம் கேட்டுது. மரத்துலேயிருந்த எல்லா காக்காய்ங்களும் பயந்து போய் "க்யா..க்யா..க்யா,"ன்னு கரைய ஆரம்பிச்சுது. தூரத்துலே மணிக்கு ஐந்நூறு கி.மீ.வேகத்துலே கறுப்பா மேகம் திரண்டுகிட்டு வர்றா மாதிரி இருந்தது. கிட்டத்துலே வர வரத் தான் அது மேகமில்லை; தேனீக்கூட்டமுன்னு புரிஞ்சுது. எல்லாத் தேனீக்களும் தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியமுன்னு பறந்துக்கிட்டிருக்க, ஒரே ஒரு வயசான தேனீ மட்டும் களைப்பாகிப் போய் காக்காய் இருந்த மரத்துலே உட்கார்ந்தது.

"தேனீஜீ! என்னாச்சு, எல்லாரும் ஊரையை காலி பண்ணிட்டுப் போறீங்க போலிருக்கே? என்ன சமாச்சாரம்?"னு காக்காய் ரொம்ப அக்கறையாக் கேட்டுதாம்.

"அத ஏன் கேட்கறீங்க காக்கா? நம்ம முதலமைச்சர் மாயாவதி கலந்துக்கிட்ட பொதுக்கூட்டதுலே எங்காளுங்க தெரியாத்தனமா பறந்து போயிட்டாங்களாம். அதுக்காக, உ.பி.போலீஸோட தனிப்படை எங்களைத் துரத்திக்கிட்டு வருது,"ன்னு மூச்சிரைக்கச் சொல்லிச்சாம் தேனீஜி!

"அடடா, பொதுவா நீங்க யாரு வம்புக்கும் போக மாட்டீங்களே? எதுக்கு பெஹன்ஜீ பேசற கூட்டத்துக்கெல்லாம் போறீங்க? அவங்க படத்து மேலே ஹோலிப்பண்டிகை அன்னிக்கு சாயம் வீசிட்டாங்கன்னு ப்ளஸ் டூ படிக்கிற மாணவங்களையே பிடிச்சு ஜெயில்லே போட்டவங்களாச்சே?"ன்னு காக்காய் ரொம்ப கவலையோட கேட்டுதாம்.

"என்ன பண்ணறது? அன்னிக்கு பெஹன்ஜீ போட்டிருந்த மாலை வித்தியாசமா இருந்ததா? இந்த மாதிரி பெரிய பெரிய பூவை நாங்க பார்த்ததேயில்லையா? இதுலே கண்டிப்பா நிறைய தேன் இருக்குமோன்னு ஒரு நப்பாசையிலே பக்கத்துலே போய்ப் பார்க்கப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சது, அது பூமாலையில்லே; ரூபாய் நோட்டு மாலைன்னு! எல்லாம் எங்க தலைவிதி!"ன்னு அங்கலாய்ச்சுக்கிச்சாம் தேனீஜீ!

"அப்புறம் என்ன நடந்தது?"ன்னு காக்காய் கேட்டுதாம்.

"என்ன நடக்கும்? பெஹன்ஜீ ’இது எதிர்க்கட்சியோட சதி,’ன்னு சொல்லிட்டாங்களாம். உ.பி.போலீஸைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? உடனே கேஸ் போட்டுட்டாங்க! எந்த மரத்துக்குப் போனாலும் துரத்தித் துரத்தி விரட்டறாங்க! சரி, இனிமே இங்கே இருந்தா பொழைப்பு நடக்காதுன்னு கூட்டம் கூட்டமா உ.பியை விட்டே எல்லாரும் தப்பிச்சுப் போயிட்டிருக்கோம்."

"தேனீஜி! அதோ தூரத்துலே பாருங்க! உ.பி.தனி போலீஸ் வந்திட்டிருக்கு!"ன்னு காக்காய் அலறிச்சாம்.

"ஐயோ! நான் கிளம்பறேன் காக்காய்! இங்கே இருந்தா என்னைப் பிடிச்சிட்டுப் போயி ஜெயில்லே போட்டுருவாங்க!"ன்னு பாவம், அந்த வயசான தேனியும் பறந்தே போயிருச்சாம்.

கொஞ்ச நேரத்துலே உ.பி.தனி போலீஸ் வந்து மரத்தை ரவுண்ட் பண்ணிச்சாம்.

"ஏய் காக்கா! இந்தப் பக்கமா தேனீ போனதைப் பார்த்தீங்களா?"ன்னு கேட்டாராம் ஒரு போலீஸ்காரர்.

"இல்லீங்களே! நாங்க இப்போத் தான் கண் முழிச்சு ப்ரேக்-ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்,"னு காக்காய் பதில் சொல்லிச்சாம்.

போலீஸ்காரங்கெல்லாம் அவங்களுக்குள்ளே என்னமோ ரகசியம் பேசினாங்களாம். அப்புறமா, அந்த போலீஸ்காரர் காக்காயைப் பார்த்துக் கேட்டாராம்.

"ஏய் காக்கா! இந்த மரத்துலே மொத்தம் எத்தனை காக்காய்ங்க இருக்கீங்க?"ன்னு கேட்டாராம்.

"நாங்க ஒரு நூற்றைம்பது பேர் இருக்கோம். ஆம்பிளைக்காக்காயெல்லாம் லஞ்சுக்கு ஏற்பாடு பண்ண வெளியே போயிருக்காங்க. ஏன்? என்ன விஷயம்?"னு கேட்டுதாம் காக்காய்.

"ஓஹோ! உ.பி.முழுக்க பெஹன்ஜீயோட சிலை வரப்போகுது தெரியுமில்லே? சிலை திறந்ததுக்கப்புறம் நீங்க அது மேலே எச்சம் போட்டா என்னாகிறது? அதுனாலே இந்த மரத்துலே இருக்கிற எல்லாக் காக்காயையும் நாங்க தற்காப்பு நடவடிக்கையா கைது பண்ணுறோம்,"ன்னு சொன்னாராம் போலீஸ்காரர்.

"என்னது? கைதா?"ன்னு காக்காய் அலறிச்சாம். அடுத்த நிமிஸமே அந்த மரத்திலிருந்த காக்காய் எல்லாம் தப்பிச்சோம், பிழைச்சோம்னு பறந்து உ.பியை விட்டே வெளியேறிடுச்சாம்.

இது தான் காக்காயோட ஃபிளாஷ்-பேக்! கேட்டதும் நரியோட கண்ணுலேருந்து தண்ணியாக் கொட்ட ஆரம்பிச்சுதாம்.

"உன் கதையைக் கேட்டா ரொம்ப வருத்தமாயிருக்கு காக்காய்! நீ எடுத்தது ரொம்ப சரியான முடிவு! தமிழ்நாடு காக்காய்களுக்கு சொர்க்கம் மாதிரி! இங்கே மனுசன் இல்லாத இடத்துலே கூட சிலையிருக்கும். நீ இஷ்டம் போல மிச்சம் மீதி வைக்காம எச்சம் போட்டு சந்தோஷமாயிருக்கலாம். யாரு கண்டா? உனக்கும் எனக்கும் கூட சிலை வைப்பாங்க தமிழ்நாட்டுலே! அதுனாலே நீ நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுலே சந்தோஷமா, புது வாழ்க்கை தொடங்கு!"னு நரி சொல்லிச்சாம்.

"நான் மட்டுமா? மாயாவதி அம்மாவோட போஸ்டரை ஒரு கழுதை தின்னுருச்சுன்னு இப்போ எல்லாக் கழுதையையும் கைது பண்ணப்போறாங்களாம். ஒரு நாய் மாயாவதியோட காரைப் பார்த்துக் குரைச்சதுன்னு நாயைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைச்சிருக்காங்களாம். இவங்க எல்லாரும் எங்களை மாதிரியே தமிழ்நாட்டுக்கு வந்தா என்னாகிறது?"னு காக்காய் கவலையோட சொல்லிச்சாம்.

"அதைப் பத்தியெல்லாம் நீ ஏன் கவலைப்படுறே? தமிழ்நாட்டுலே இருக்கிற மனுசனை மாதிரி எதைப் பத்தியும் கவலைப்படாம நீ பாட்டுக்கு வந்தியா, வடையைத் தின்னியா போனியான்னு இருக்கக் கத்துக்க! இந்த சமுதாயத்தை நாம திருத்த முடியாது!" னு ஆறுதல் சொல்லிச்சாம் நரி.

"பகோத் சுக்ரியா நரிபாய்!"னு காக்காய் சொல்லிச்சாம்.

"காக்கா, காக்கா! நீ நல்லாப் பாடுவியே! ஒரு பாட்டுப்பாடேன்,"னு இளிச்சுதாம் நரி.

உடனே காக்காய் பாடிச்சாம்.

"தும் பாஸ் ஆயே..பேல்பூரி காயே! குச் குச் ஹோத்தா ஹை!"

51 comments:

எறும்பு said...

ஆம்...இந்த சமுதாயத்தை நாம திருத்த முடியாது!"

நாமக்கல் சிபி said...

:))

நாமக்கல் சிபி said...

//இன்னா வேண்ணாலும் எளுதலாம்//

இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

பொன் மாலை பொழுது said...

//இங்கே மனுசன் இல்லாத இடத்துலே கூட சிலையிருக்கும்//
//உனக்கும் எனக்கும் கூட சிலை வைப்பாங்க தமிழ்நாட்டுலே!//

நன்னா ஒறைக்கிற மாதிரின்னா சொல்லியிருக்கேள்!
பேஷா தான் எழுதறேள்!!
எழிதிண்டே இருங்கோ!

manjoorraja said...

வாயில்லா பிராணிகள் பாவம்..... இனி மேல் அவை வாழ காட்டிலும் இடமில்லை நாட்டிலும் இடமில்லை.

பிரபாகர் said...

நம்ம மாநிலம் எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுது நண்பா!

கலகலப்பாய் நன்கு சாடியிருக்கிறீர்கள்...

பிரபாகர்.

சைவகொத்துப்பரோட்டா said...

காக்கா கதையும், அது பாடின பாட்டும், நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நல்ல பார்க் ஐ எல்லாம் அழிச்சு சிலை கட்டின வெற்றிடமா மாத்தினதுக்காக நான் அந்தம்மா மேல செம கடுப்பு ல இருக்கேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Super Buddy..

மசக்கவுண்டன் said...

இனி மாலையெல்லாம் ரூபா நோட்லதான் கட்டோணும்னு ஒரு சட்டம் வரப்போகுதுன்னு எங்கூர்லெ பேசிக்கிறாங்க. அப்டீங்களா?

Unknown said...

யார்தான் சிலை வைக்கவில்லை. தமிழகத்தில் கன்யாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடியில் சிலை வைத்தார்களே அதைக் கேட்டீர்களா?

பீச் ரோட்டில் நடு சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலை வைத்தார்களே அதைக் கேட்டீர்களா?

ஒரு தலித் தலைவர் தனக்கு சிலை வைத்தால் மட்டும் உங்களுக்கு அது தப்பாகத் தெரிகிறதா??

யாஹூ_ராம்ஜி வர்றதுக்கு முன்னால அவரு சார்பா நான் போட்டுடறேன்..

ஹி ஹி ஹி ஹி.. :))

மங்குனி அமைச்சர் said...

சேட்ட, அருமையா எழுதிருக்க , என்னா புளோ? , சுப்பர் சேட்ட

Unknown said...

unkalukku ithe velaiyaa pocchu

Chitra said...

Om Shanthi OM!

நம்பல்க்கி ஹிந்தி குச் குச் அவ்ளவே!

ஜெட்லி... said...

நோ பொலிடிக்ஸ்....

ஜெய்லானி said...

//தும் பாஸ் ஆயே..பேல்பூரி காயே! குச் குச் ஹோத்தா ஹை!"//

ஹா...ஹா... பாட்டு சூப்பர்..

நாளும் நலமே விளையட்டும் said...

ரொம்ப நாளாச்சி வாய் விட்டு சிரிச்சி!
அது என்ன பிற்படுத்தப் பட்ட வகுப்பு தலைவர் எது செஞ்சாலும் சரியாமா?
இந்த அம்மாவுக்கு நம்ம அம்மா, அய்யா பரவாஇல்லை.

முகுந்த்; Amma said...

எனக்கு politics தெரியாதுங்கோ :((

சிநேகிதன் அக்பர் said...

//இந்த சமுதாயத்தை திருத்த முடியாது//

அப்ப நாம திருந்துவோம்.

கலக்கல்.

ரிஷபன் said...

உங்க சேட்டை படிக்கிறவங்களுக்கு சிரிப்பு வேட்டை..

பனித்துளி சங்கர் said...

நண்பரே இப்ப இருக்குற காக்காய் எல்லாம் ரொம்ப உசாரா இருக்கு .

கலக்கல் வாழ்த்துக்கள் நண்பரே !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சேட்டை - உங்க சேட்டைக்கி ஒரு அளவே இல்லையா. விட்டா anti மாயவதி movement ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கு. பாத்துங்க உங்கள கைது பண்ண ஆள் வர போகுது. சூப்பர் கற்பனை. ரசித்து படித்தேன்

Philosophy Prabhakaran said...

நல்ல பதிவு... கருத்தை விட அதை நீங்கள் கதையாக சொன்ன விதம் அற்புதம்... நல்ல க்ரியடிவிட்டி நண்பா...

தாராபுரத்தான் said...

என்ன? தூண்டி விடுகிறீர்கள் போல தெரியுது.

settaikkaran said...

//ஆம்...இந்த சமுதாயத்தை நாம திருத்த முடியாது!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எறும்பு!

settaikkaran said...

//இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!//

நன்றி நாமக்கல் சிபி அண்ணே! வருகைக்கும் கருத்துக்கும்...! :-))))

settaikkaran said...

//நன்னா ஒறைக்கிற மாதிரின்னா சொல்லியிருக்கேள்! பேஷா தான் எழுதறேள்!! எழிதிண்டே இருங்கோ!//

நன்றிங்க! கதாகாலட்சேபம் படிச்சதோட எஃபெக்ட் இன்னும் தெரியுது உங்க பின்னூட்டத்துலே...! :-)))

settaikkaran said...

//வாயில்லா பிராணிகள் பாவம்..... இனி மேல் அவை வாழ காட்டிலும் இடமில்லை நாட்டிலும் இடமில்லை.//

வாயுள்ள பிராணிகளுக்கும் தான் அண்ணே! :-(((

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மஞ்சூர் அண்ணே!

settaikkaran said...

//நம்ம மாநிலம் எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுது நண்பா!//

இப்படி எதையாவது சொல்லி நாமளும் சமாதானப்பட்டுக்க வேண்டியது தான் போலிருக்கு! :-((

//கலகலப்பாய் நன்கு சாடியிருக்கிறீர்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)))

settaikkaran said...

//காக்கா கதையும், அது பாடின பாட்டும், நல்லா இருக்கு.//

ஹி..ஹி! நான் எழுதினதாலே காக்கா பாட்டு பொருத்தமா அமைஞ்சிருச்சு அண்ணே! மிக்க நன்றி!! :-)))

settaikkaran said...

//நல்ல நல்ல பார்க் ஐ எல்லாம் அழிச்சு சிலை கட்டின வெற்றிடமா மாத்தினதுக்காக நான் அந்தம்மா மேல செம கடுப்பு ல இருக்கேன்..//

அதையும் இதுலே குறிப்பிடறதாத் தானிருந்தேன். ஆனா, ரொம்ப அரசியலாயிடுமோன்னு விட்டுட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//Super Buddy..//

மிக்க நன்றி அண்ணே! :-))

settaikkaran said...

//இனி மாலையெல்லாம் ரூபா நோட்லதான் கட்டோணும்னு ஒரு சட்டம் வரப்போகுதுன்னு எங்கூர்லெ பேசிக்கிறாங்க. அப்டீங்களா?//

ஒங்கூருக்கு நான் வரும்போது ஞாபகத்துலே வச்சிக்கோங்க கவுண்டரே! எனக்கும் அதே மாதிரி....என்ன சரியா? :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

//யாஹூ_ராம்ஜி வர்றதுக்கு முன்னால அவரு சார்பா நான் போட்டுடறேன்..

ஹி ஹி ஹி ஹி.. :))//

ஆஹா! போட்டுக் கொடுத்திராதீங்க சாமீ! :-)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகிலன் அவர்களே!!!

settaikkaran said...

//சேட்ட, அருமையா எழுதிருக்க , என்னா புளோ? , சுப்பர் சேட்ட//

நன்றி மங்குனி அண்ணே! எல்லாம் உங்க ஆசி தான்!!

settaikkaran said...

//unkalukku ithe velaiyaa pocchu//

ஹி..ஹி! நன்றிங்க!!!

settaikkaran said...

//Om Shanthi OM!

நம்பல்க்கி ஹிந்தி குச் குச் அவ்ளவே!//

நம்பளோட ஹிந்தி ஷாரூக்கானோட தமிழை விட மோசம்! :-)

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//நோ பொலிடிக்ஸ்....//

இது பாலிடிக்ஸா மட்டும் இருந்திருந்தா தொட்டிருக்கவே மாட்டேனுங்க! :-))

மிக்க நன்றி!!!

settaikkaran said...

//ஹா...ஹா... பாட்டு சூப்பர்..//

ஹி..ஹி! நான் காக்கா பாட்டு எழுதினா நல்லா இல்லாமப் போகுமா? :-)

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//ரொம்ப நாளாச்சி வாய் விட்டு சிரிச்சி!
அது என்ன பிற்படுத்தப் பட்ட வகுப்பு தலைவர் எது செஞ்சாலும் சரியாமா?
இந்த அம்மாவுக்கு நம்ம அம்மா, அய்யா பரவாஇல்லை.//

உண்மையான ஆதங்கம் தான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//எனக்கு politics தெரியாதுங்கோ :((//

தப்பிச்சீங்கோ! மிக்க நன்றிங்கோ! :-))))

settaikkaran said...

//அப்ப நாம திருந்துவோம்.

கலக்கல்.//

மெய்யாலுமே திருத்தணுமுங்க! மிக்க நன்றிங்க!! :-)

settaikkaran said...

//உங்க சேட்டை படிக்கிறவங்களுக்கு சிரிப்பு வேட்டை..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

//நண்பரே இப்ப இருக்குற காக்காய் எல்லாம் ரொம்ப உசாரா இருக்கு .//

அண்ணே, பறக்குற காக்காயைத் தானே சொல்றீங்க? சரி தான்! :-))

//கலக்கல் வாழ்த்துக்கள் நண்பரே !//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//சேட்டை - உங்க சேட்டைக்கி ஒரு அளவே இல்லையா. விட்டா anti மாயவதி movement ஆரம்பிச்சுடுவீங்க போல இருக்கு. பாத்துங்க உங்கள கைது பண்ண ஆள் வர போகுது. சூப்பர் கற்பனை. ரசித்து படித்தேன்//

எல்லாம் தள்ளியிருக்கிற தைரியத்துலே எழுதினது தான். இருந்தாலும் ஆட்டோ வர்றதுக்கான வாய்ப்பு இருக்குதுங்க! :-((

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//நல்ல பதிவு... கருத்தை விட அதை நீங்கள் கதையாக சொன்ன விதம் அற்புதம்... நல்ல க்ரியடிவிட்டி நண்பா...//

மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க!! :-))

settaikkaran said...

//என்ன? தூண்டி விடுகிறீர்கள் போல தெரியுது.//

யாரைத் தூண்டி விடுகிறேனுங்க? காக்காயையா? நரியையா? புரியலீங்களே...??? :-((((

மிக்க நன்றிங்க!!!

பித்தனின் வாக்கு said...

சேட்டை எப்படி இப்படி வித்தியாசமா சிந்திக்கிறீங்க. நல்ல சிந்தனை. அதை காமெடியா சொல்லியிருப்பது மிகவும் அருமை.

ஹிம் நமக்கு இப்படி எல்லாம் சிந்திக்க வரமாட்டேங்குது. அது எல்லாம் மூளை இருக்குறவங்க யோசிக்க வேண்டிய விசயம்.

ஆமா தமிழ் நாட்டுக்கு வர்ற காக்காய்க்கு வாழ்க போட சொல்லிக் கொடுத்தீர்களா? அல்லது அட்லீஸ்ட் ஒரு பாராட்டுக் கவிதையாது பாடத் தெரிஞ்சுருக்கனும். அது ரொம்ப முக்கியம்.

நன்றி சேட்டை.

பெசொவி said...

காக்கைங்கதான் ரூபாய் மாலை போட்டுச்சுங்களோன்னு நான் நினைச்சேன். ஆனா அப்படி இல்லை போலிருக்கு.....நல்ல கற்பனை நண்பரே!

Mayuram Swami said...

Superrrrrrrrrrrrrrr....

Settai... Kalakeetinga...

I am new to your Blog...

I enjoyed all your postings.

settaikkaran said...

//Superrrrrrrrrrrrrrr....

Settai... Kalakeetinga...

I am new to your Blog...

I enjoyed all your postings.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-))