Wednesday, March 3, 2010

மை நேம் இஸ் ஹிட்டானந்தா!


நான் முடிவு பண்ணிட்டேன்; இன்னியிலிருந்து என் பெயர் சுவாமி ஹிட்டானந்தா! மத்தவங்கெல்லாம் உஜாலாவுக்கு மாறுவாங்க; நான் குஜாலாவுக்கு மாறிட்டேன். எத்தனை நாளைக்குத் தான் இந்த ஏழாயிரச் சொச்சம் சம்பளம், இருநூற்று முப்பது ரூபாய் இன்க்ரிமென்ட், எட்டு பர்சன்ட் போனஸ், இருபத்தி ஏழு ரூபா பேட்டான்னு காலம் தள்ளுறது? காலாகாலத்துலே கொஞ்சம் காசு பார்த்தாத் தானே, நானும் அடையாறு கற்பகம் காலனியிலே ஒரு வீடுகட்டிக் குடியேறலாம். யாரைக் கேட்டாலும் சிங்கப்பூர் போனேன்,மலேஷியா போனேன்னு பீத்திக்கிறாங்க; நான் இன்னும் சிங்கப்பெருமாள்கோவிலுக்குக் கூட போனதில்லீங்க! அட் லீஸ்ட் ஒரு டயோட்டாவாச்சும் இல்லாம என்ன வாழ்க்கை இது? வெறுத்திருச்சு! நான் சாமியாராகப்போறேன்!

மத்தவங்க மாதிரி திருவண்ணாமலைக்குப் போயி ஆசிரமம் கட்டப்போறதில்லை. பரங்கிமலை அடிவாரத்துலேயே பத்துக்கு பத்துலே ஒரு குடிசை போட்டு முதல்லே இடத்தைப் பிடிச்சுக்கறேன். அப்புறம் நீங்கள் எல்லாருமா வந்து போக ஆரம்பிச்சீங்கன்னா ஓ.எம்.ஆருலே ஒதுக்குப்புறமா நூறு ஏக்கரிலே ஒரு ஆசிரமம் கட்ட முடியாமலா போயிரும்?

இப்படி பொதுவா சாமியாராப் போகப்போறேன்னு சொல்லி உங்களைக் குழப்ப விரும்பலே! ஒவ்வொரு சாமியாருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்குமில்லா? ஒரு சாமியாரு கன்னத்துலே கடிச்சு அருள்பாலிப்பாரு! இன்னொரு சாமியாரு கட்டிப்புடிச்சு ஆசிர்வாதம் பண்ணுவாரு! ஒருத்தர் டான்ஸ் ஆடுவாரு! ஒருத்தர் க்வார்ட்டர் அடிப்பாரு! முன்னே மாதிரி இல்லே! இப்பெல்லாம் சாமியாராப் போகிறது ரொம்பக் கஷ்டமண்ணே! காம்பட்டிஷன் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு! நிறைய சாமியாருங்கெல்லாம் அஹமதாபாத் ஐ.ஐ.எம்-லே போய் படிச்சிட்டு வர வேண்டியதாகிப்போச்சு!

மத்தவங்க கிட்டே இல்லாத சிறப்பம்சம் ஏதாவது இருந்தாத் தான் பக்தகேடிங்க, மன்னிக்கவும், பக்தகோடிங்க வருவாங்க! அதுனாலே என்னோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா, நான் பக்தர்களோட முதுகைப் பார்த்து அருள்வாக்கு சொல்லுவேன்! முதுகு எவ்வளவு அகலமாயிருக்கோ, அதுக்குத் தகுந்தா மாதிரி காணிக்கை போடணும். இதுக்குண்ணே புதுசா எலாஸ்டிக் டேப் ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன்!

கையைப் பார்த்து அருள்வாக்கு சொல்லுவாங்க; முகத்தைப் பார்த்து சொல்லுவாங்க! முதுகைப் பார்த்து அருள்வாக்கு சொல்லுற சாமியார் நான் ஒருத்தன் தான்! ஆனா ஒரு கண்டிஷன், ஆசிரமத்துக்கு வர்றதுக்கு முன்னாடி எல்லாரும் நல்லா சோப்புப்போட்டுக் குளிச்சிட்டு வரணும். அப்போத்தான் அருள்வாக்கு சொல்லுவேன். யாராச்சும் அழுக்கு முதுகோட வந்து அருள்வாக்கு கேட்டா அதே முதுகிலே ஓங்கி அப்பிருவேன். (வந்திட்டேன் பார்த்தீங்களா? எனக்கு ஏன் Hit ஆனந்தான்னு பெயர் வச்சுக்கிட்டேன்னு புரிஞ்சுக்கிட்டீங்களா?)

இப்படி சேட்டை அம்போன்னு சாமியாராப் போறானேன்னு யாரும் கவலைப்படாதீங்க! வலைப்பதிவர்களுக்காக ஸ்பெஷல் வழிபாடு, சாதா ஸ்பெஷல் வழிபாடு, நெய்ரோஸ்ட் வழிபாடுன்னு தனித்தனியா உருவாக்குவேன். உதாரணத்துக்கு, பிளாக்கர்கள் தினசரி காலையிலே எழுந்ததும் (மறக்காம பல் விளக்கிட்டு) சொல்ல வேண்டிய மந்திரம் இது:

இன்டர்நெட்டம் பிராடுபேண்டம் நித்யபோஸ்டம் நமோஸ்துதே ட்ராஃபிக்காணாம் சூப்பரஸ்யாம் ஸ்டார் ப்ராப்தி சித்யதே!
இத்தோட "ஜன்னலைத்திற; கொசுவரட்டும்,"னு ஒரு புஸ்தகம் எழுதிட்டிருக்கேன். ஆளுக்கு பதினோரு காப்பி வாங்கியே தீரணும்.

எந்தரோ ’பிளாகா’னு பாவுலு அந்தரிகி வந்தனமு!

எங்கே, எல்லாரும் ஒருவாட்டி சொல்லுங்கோ!

சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!

40 comments:

Ananya Mahadevan said...

சூப்பர் ஃபாஸ்டு சேட்டை!
போலோ சத்குரு ஹிட்டானந்தாகீ ஜெய்!

பொன் மாலை பொழுது said...

சத்தியமா எனக்கும் இது போல எண்ணம் ரொம்ப நாளா இருக்கு. பயப்படாதீங்க தல! போட்டிக்கு வரமாட்டேன்.
பேசாம நம்ம ரெண்டு பேருமே சேந்து ஆரம்பிச்சிடலாம். சரி நீங்க பெரிய சாமி. நா சின்ன சாமி சரியா?
சென்னைல த்தா கீறேன் . சந்திப்போம்

EKSAAR said...

ம்ம்.. ஆகுங்க.. முதுகா பாத்து, அப்புறம் எங்க எங்க பாக்க திட்டமோ?

மாதேவி said...

ஹா..ஹா...
சுவாமிஜீக்கு.....ஜே!

Unknown said...

பதிவரானந்தாக்ளப் பார்த்தா நித்தியானந்தா புண்ணியத்துல ரொம்ப ஆனந்தமாத்தா இருக்கீங்க. வாழ்க வளமுடன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சாமி எனக்கு ஒரு அருள்வாக்கு சொல்லப்படாதா.. என் எதிர்காலம் என்ன?...

கட்டபொம்மன் said...

அந்த அண்டை நாட்டு மன்னன் ரொம்ப தொல்லைக்கொடுக்கிறான். என்ன செய்ய?. சுவாமிஜி அவர்களே ..

சைவகொத்துப்பரோட்டா said...

சத்குரு சேட்டையானந்தா புகழ் வளர்க :))

முகுந்த்; Amma said...

சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு :))). வாழ்க ஹிட்டானந்தா புகழ்.

Unknown said...

அமெரிக்க ப்ராஞ்சை நான் பாத்துக்குறேன்.. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் நீங்க வந்தா போதும், மத்தபடி கலெக்சன்ல கட்டிங் கரெக்டா அனுப்பிருவேன்.. :))

Rekha raghavan said...

//இன்டர்நெட்டம் பிராடுபேண்டம் நித்யபோஸ்டம் நமோஸ்துதே ட்ராஃபிக்காணாம் சூப்பரஸ்யாம் ஸ்டார் ப்ராப்தி சித்யதே! //

இதை தினமும் எத்தனை முறை சொல்லவேண்டும் சுவாமிகளே?

ரேகா ராகவன்.

Chitra said...

அமெரிக்க ப்ராஞ்சை நான் பாத்துக்குறேன்.. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் நீங்க வந்தா போதும், மத்தபடி கலெக்சன்ல கட்டிங் கரெக்டா அனுப்பிருவேன்.. :))


.........முகிலன், நானும் இங்கேதான் இருக்கேன். நீங்க ஈஸ்ட் சைடு - நான் வெஸ்ட் சைடு. ஓகே?

உமர் | Umar said...

சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!
சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!
சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!

மங்குனி அமைச்சர் said...

//மங்குனி அமைச்சர் பின்னூட்டத்துலே கூட பின்னிப் பெடல் எடுக்கிறாரு பாருங்க! நான் நகைச்சுவையா எழுத தேட வேண்டிய அவசியமேயில்லேண்ணே! உங்களை மாதிரி நாலஞ்சு பேரோட பதிவைப் படிச்சாலே போதும்! நன்றிண்ணே!!//

அப்பா சொந்த சரக்கு ஏதும் இல்லையா (நீங்களும் என்ன மாதிரிதானா )

சுவாமி ஹிட்டானந்தா ஆசிரமம்:

இந்த பெண் பக்தர்களுக்கு ( முப்பது வயசுக்கு கீல) மட்டும் சுவாமி மன்குநியானந்தா அருள்வாக்கு சொல்வார்.
பை
ஆடர்
சுவாமி ஹிட்டானந்தா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@சேட்டை
நிறைய சாமியாருங்கெல்லாம் அஹமதாபாத் ஐ.ஐ.எம்-லே போய் படிச்சிட்டு வர வேண்டியதாகிப்போச்சு!
//

ஹரிதுவாரில் உள்ள எங்கள் பிராஞ்சில் படித்தால் ,
ஆயுள் சந்தா கட்ட வேண்டியது இல்லை..

மேலும் , சனி , ஞாயிறு ..".வீடியோ போட்டோகிராபர் ஆவது எப்படி?"
என்ற தொழில் கல்வி சொல்லித்தரப்படும்..

வரதராஜலு .பூ said...

//சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!//

ஜே!ஜே!ஜே!ஜே!

settaikkaran said...

//சூப்பர் ஃபாஸ்டு சேட்டை!
போலோ சத்குரு ஹிட்டானந்தாகீ ஜெய்!//

சீக்ரமேவ ஸ்டார்-ப்ளாக்கர் ப்ராப்தி ரஸ்து!!

settaikkaran said...

//சத்தியமா எனக்கும் இது போல எண்ணம் ரொம்ப நாளா இருக்கு.//

எல்லா மேதைங்களும் ஒரே மாதிரி சிந்திப்பாங்கங்கிறது இது தானோ?:-))

//பயப்படாதீங்க தல! போட்டிக்கு வரமாட்டேன்.பேசாம நம்ம ரெண்டு பேருமே சேந்து ஆரம்பிச்சிடலாம். சரி நீங்க பெரிய சாமி. நா சின்ன சாமி சரியா?//

சேச்சே! அப்படியெல்லாம் நினைப்பேனா? ஆபீஸிலே இல்லாட்டாலும் பரவாயில்லை, ஆசிரமத்துலே கண்டிப்பா ஒரு ஹையரார்க்கி இருக்கணும்!

//சென்னைல த்தா கீறேன் . சந்திப்போம்//

ஓ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

settaikkaran said...

//ம்ம்.. ஆகுங்க.. முதுகா பாத்து, அப்புறம் எங்க எங்க பாக்க திட்டமோ?//

தொழில் ரகசியம் எல்லாத்தையும் புட்டுப்புட்டா வைப்பாங்க? :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//ஹா..ஹா... சுவாமிஜீக்கு.....ஜே!//

மாதேவிக்கும் சீக்ரமேவ டாப்-ப்ளாக்கர் அவார்டு ப்ராப்தி ரஸ்து!! :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//சாமி எனக்கு ஒரு அருள்வாக்கு சொல்லப்படாதா.. என் எதிர்காலம் என்ன?...//

ஸ்டார்ஜன்னோட ஸ்டாருங்க ரொம்ப பிரகாசமா எரிஞ்சிட்டிருக்கு! எதுக்கும் ஒரு வால்டேஜ் ஸ்டெபிலைசர் வாங்கி வச்சுக்கோங்க! :-))

நன்றிண்ணே!!

settaikkaran said...

//பதிவரானந்தாக்ளப் பார்த்தா நித்தியானந்தா புண்ணியத்துல ரொம்ப ஆனந்தமாத்தா இருக்கீங்க. வாழ்க வளமுடன்.//

இந்த நித்தியானந்தா இல்லாட்டி இன்னொரு சுத்தியானந்தா இருப்பாரு! ஆக மொத்தத்துலே எங்க காட்டுலே மழை தான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

//அந்த அண்டை நாட்டு மன்னன் ரொம்ப தொல்லைக்கொடுக்கிறான். என்ன செய்ய?. சுவாமிஜி அவர்களே ..//

அவனிடம் ட்ரோஜனாயுதம் இருக்கிற மமதையால் தொல்லை கொடுக்கிறான். ஒரு காஸ்பர்ஸ்கை யாகம் செய்தால் சரியாகி விடும். மொத்தச் செலவு லட்ச ரூபாய் மட்டுமே!!

நன்றிண்ணே!! :-))

settaikkaran said...

//சத்குரு சேட்டையானந்தா புகழ் வளர்க :))//

சைவக்கொத்துப்பரோட்டா மகராஜுக்கு ஜே!

settaikkaran said...

//சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு :))). வாழ்க ஹிட்டானந்தா புகழ்.//

சீக்ரமேவ கோடி ஹிட் ப்ராப்தி ரஸ்து!

;-))

settaikkaran said...

//அமெரிக்க ப்ராஞ்சை நான் பாத்துக்குறேன்.. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் நீங்க வந்தா போதும், மத்தபடி கலெக்சன்ல கட்டிங் கரெக்டா அனுப்பிருவேன்.. :))//

அப்ப சரி, முதல் ஆறுமாசத்துக்கு யார் யாருக்கு அருள்வாக்கு சொல்லணுமோ, அவங்க முதுகோட கலர்போட்டோ அனுப்பி வையுங்க! :-))

நன்றிங்க!!

settaikkaran said...

//இதை தினமும் எத்தனை முறை சொல்லவேண்டும் சுவாமிகளே?//

இதை ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி! ;-))

நன்றிங்க!!

settaikkaran said...

//.........முகிலன், நானும் இங்கேதான் இருக்கேன். நீங்க ஈஸ்ட் சைடு - நான் வெஸ்ட் சைடு. ஓகே?//

ஆஹா! உண்மையிலேயே இந்த பிளான் ஒர்க்-அவுட்டாகும் போலிருக்குதே? ;-))

நன்றிங்க!!

settaikkaran said...

//சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!
சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!
சத்குரு ஹிட்டானந்தா சுவாமிஜீக்கு.....ஜே!//

சொல்லுங்க சிஷ்யரே! உங்களுக்கு எந்த ஊருலே பிரான்ச் வேணும்? :-))

நன்றிங்க!!

settaikkaran said...

//அப்பா சொந்த சரக்கு ஏதும் இல்லையா (நீங்களும் என்ன மாதிரிதானா )//

உங்களோட என்னை ஒப்பிடலாமாண்ணே? நான் தவழ்ந்துட்டிருக்கேன், நீங்க பறந்திட்டிருக்கீங்க!


//இந்த பெண் பக்தர்களுக்கு ( முப்பது வயசுக்கு கீல) மட்டும் சுவாமி மன்குநியானந்தா அருள்வாக்கு சொல்வார்.
பை
ஆடர்
சுவாமி ஹிட்டானந்தா//

உங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கேன்சல் செய்யணும் போலிருக்கே? :-))))

நன்றிண்ணே!! அடிக்கடி வந்து கலக்குங்க!!

settaikkaran said...

//ஹரிதுவாரில் உள்ள எங்கள் பிராஞ்சில் படித்தால் ,
ஆயுள் சந்தா கட்ட வேண்டியது இல்லை..//

அதுக்கென்ன? பட்டாபட்டி யூனிவர்சிட்டி ஸ்டடி சென்டர் ஒண்ணு ஆரம்பிச்சிட்டாப் போச்சு!

//மேலும் , சனி , ஞாயிறு ..".வீடியோ போட்டோகிராபர் ஆவது எப்படி?"
என்ற தொழில் கல்வி சொல்லித்தரப்படும்..//

சூப்பர் ஐடியா அண்ணே! உடனே ஜாயின்ட்-வென்சரிலே செய்வோம்! துட்டை அள்ளிடலாம். :-))

நன்றிண்ணே!!

settaikkaran said...

//ஜே!ஜே!ஜே!ஜே!//

வரதராஜுலுகாரு! சீக்ரமேவ டாப்-ப்ளாக்கர் ப்ராப்தி ரஸ்து!! :-))

சிநேகிதன் அக்பர் said...

சாமி எனக்கும் ஏதாவது கொடுங்க சாமி (அருள் வாக்குதான்) :)

settaikkaran said...

//சாமி எனக்கும் ஏதாவது கொடுங்க சாமி (அருள் வாக்குதான்) :)//

அடடா, முதுகைப்பார்க்காம அருள்வாக்கு சொல்லுறது தொழில்தர்மத்துக்கு விரோதமாச்சே! இருந்தாலும், உங்க முதுகுக்கு, சாரி உங்களுக்கு நல்ல எதிர்காலமிருக்கு! :-))

நன்றிங்க

மங்குனி அமைச்சர் said...

//உங்களோட என்னை ஒப்பிடலாமாண்ணே? நான் தவழ்ந்துட்டிருக்கேன், நீங்க பறந்திட்டிருக்கீங்க!//

சாமி நான் ப்ளாக் -க்கு வந்து பதினைந்து நாள் தான் ஆச்சு , ரொம்ப ரொம்ப புதுசு ஓவரா பில்டப் குடுத்து கவுதிராதிக , நான் பாவம்

Prathap Kumar S. said...

செல்லாது,,,செல்லாது,,,
எனக்கு போட்டியாவா? நான்தான் முதல்ல ஆரமபிச்சேன்... வேணா நாம ரெண்டுபேரும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கலாம்... டீல் ஓகேவா---தல

சாமக்கோடங்கி said...

வேறு மேட்டர் கிடைக்கும்வரை இதே வேலையாய் இருப்பதாய் முடிவா என்ன..?

settaikkaran said...

//சாமி நான் ப்ளாக் -க்கு வந்து பதினைந்து நாள் தான் ஆச்சு , ரொம்ப ரொம்ப புதுசு ஓவரா பில்டப் குடுத்து கவுதிராதிக , நான் பாவம்//

நானும் இன்னும் தவழுற குழந்தை தன் அண்ணே...:-))

settaikkaran said...

//செல்லாது,,,செல்லாது,,,
எனக்கு போட்டியாவா? நான்தான் முதல்ல ஆரமபிச்சேன்... வேணா நாம ரெண்டுபேரும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கலாம்... டீல் ஓகேவா---தல//

ஆஹா! எல்லாருமா சேர்ந்து ஒரு IPO போட்டு ஒரு பப்ளிக் லிமிட்டட் கம்பனியா ஆரம்பிக்கலாம் போலிருக்கே...? நன்றி நாஞ்சில் பிரதாப் அவர்களே!

settaikkaran said...

//வேறு மேட்டர் கிடைக்கும்வரை இதே வேலையாய் இருப்பதாய் முடிவா என்ன..?//

ஐயா சாமக் கோடங்கி.! நீங்க தாமதமா வந்திட்டு என்னை நொள்ளை சொல்லறீங்களா? :-)))