Friday, February 5, 2010

ஸ்ரேயா மட்டும் இல்லேன்னா.....!


படம் ஓடுதா இல்லியான்னே புரியாத அளவுக்கு தேர்தலிலே தோல்வியடைஞ்ச கட்சி ஆஃபீஸ் மாதிரி வெறிச்சோடியிருந்த தியேட்டர்; ஆரம்பிக்கும்போது ஒரு நூறு பேர், இடைவேளையின் போது நிறைய பேர் "இது ஆவுறதில்லே,"ன்னு முடிவு பண்ணிட்டா மாதிரி வீட்டுக்குக் கிளம்பிட்டாங்கன்னே நினைக்கிறேன். கொஞ்சம் பயமாவும் இருந்தது, கூட்டமே இல்லாம படம் பார்க்கும்போது.

வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுறது ரொம்பத் தப்பு. ஆனா, என்னண்ணே பண்ணுறது? கே.எஸ்.ரவிகுமார்-சரத்குமார் காம்பினேஷன் சோடை போகாதுன்னு நம்பிப்போனா வேப்பங்காய் சூப்பை வெல குடுத்து வாங்கினா மாதிரியில்லே ஆயிரிச்சு? ஸ்ரேயா மட்டும் இல்லேன்னா, கண்டிப்பா இடைவேளைக்கு முன்னாடியே எழுந்திரிச்சு ஓடி வந்திருப்பேன்.

என்னவோ, அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத் தலைவருன்னுறதுனாலே இப்படிச் சொல்லுறேன்னு நினைக்காதீங்க! இவங்கெல்லாம் என்னா சொல்றாங்கன்னு பாருங்க!

தெனாலி.காம்:

"விதவிதமான உடைகளுடன் அழகாக வளையவரும்ஸ்ரேயாவுக்கு உற்சாகமாகத் துள்ளும் காட்சிகள் லட்டு சாப்பிடுவது மாதிரி. இதில்அனாயாசமாக ஸ்கோர் செய்யும் ஸ்ரேயா அம்மாவின் இறுதிச் சடங்கிலும் அப்பாவை அடையாளம்கண்டுகொள்ளும்போதும் கொஞ்சம் நடித்திருக்கிறார்."



என்வழி.காம்:

"ஸ்ரேயா இதில் நடிக்கவும் செய்துள்ளார்!. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவு யாரும் இல்லை."


சரத்குமார் வயசான கெட்-அப்புலே காட்டுற முதிர்ச்சி படத்தோட ப்ளஸ் பாயின்டுகளில் ரொம்ப முக்கியமானது. சீக்கு வந்த கோழி மாதிரி இளைச்சுத் துரும்பா, குரல் கம்மிப்போயி வர்ற கவுண்டமணியோட காமெடி எடுபடலே! ஆனா, அவரும் இல்லாமப்போயிருந்தா இது குசேலன்-II மாதிரி ஆகியிருக்கும். இந்தப் படத்துக்கு யாராவது இசையமைப்பாளர் இருக்காங்களாய்யா? எந்தக் காலத்துலே இருக்காரு அவரு?

ஜகன்னாதன்னுற பெயர்தான் ஜக்குபாயாம்! அவ்வ்வ்வ்வ்!

பாவம் என்னோட ஸ்ரேயா! இந்தப் படத்துலே நிறைய காட்சிகளைத் தூக்கி நிறுத்துறதே அவங்க நடிப்புதான்! யோவ், சிரிக்காதீங்க, சீரியசாப் பேசிட்டிருக்கேன்.

"அவனை மட்டும் பார்த்தேன்...," என்று அப்பா மேலிருக்கிற வெறுப்பைக் காட்டுவதாக இருக்கட்டும். வில்லன்களால் குலைத்துப்போடப் பட்டிருக்கிற வீட்டில் புலம்புகிற காட்சியாக இருக்கட்டும். இதை விட ஒரு கனவுக்கன்னி கிட்டேருந்து என்னத்தை எதிர்பார்க்கறீங்க? டூ மச்!!

இந்தப் படத்துக்கு 32 கோடி ரூபாய் செலவு பண்ணினோமுன்னு மூக்காலே அழுதவங்க கிட்டே ஒரு கேள்வி. என்னை மாதிரி ஸ்ரேயாவுக்காகவாச்சும் படம் பார்க்க வருவாங்கன்னு சதித்திட்டம் தீட்டி, இப்படியெல்லாம் மொக்கைப்படம் எடுத்து நாங்க வியர்வையும், இரத்தமும் சிந்தி சம்பாதிச்ச பணத்தைப் புடுங்குறது மட்டும் நியாயமா?

படம் முடிஞ்சு வெளியே வரும்போது ஆபரேட்டரே என்னைப் பார்த்து ஒரு மாதிரியா சிரிக்குறாருன்னா பார்த்துக்கோங்க! சே, இந்தப் பாவத்தைக் கழுவ இன்னொரு தடவை "குட்டி" பார்த்துற வேண்டியது தான்.

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தனக்கு துணையாக இருந்ததற்காக சிநேகமா சிரிச்சிருப்பார்.. :)

settaikkaran said...

//தனக்கு துணையாக இருந்ததற்காக சிநேகமா சிரிச்சிருப்பார்.. :)//

அவரு நிலைமைய நெனச்சா பாவமாயிருக்கு. பிடிச்சிருக்கோ இல்லையோ, அவரு ஒவ்வொரு காட்சியின்போதும் கொஞ்சமாவது பார்த்தே ஆகணும். :-((((