Tuesday, February 2, 2010

இவ்வளவு போதும்

இரவு

சில்லிடும் ஒலி!
சிலிர்த்து விழித்தேன்!
ஜன்னலுக்கு வெளியே
சிரித்தபடி நிலவு


நட்சத்திரங்கள்

உறங்கும் உலகத்தின் கழுத்தில்
நட்சத்திரம் பதித்த மாலையிட்டு
ஆகாயம் அழகு பார்த்தது


மாலை

தொடுவானப்போர்வைக்குள்
சூரியன் ஒளிவதைப் பார்த்து
இரவு சிரித்தது

பனி

குளிர்கால இரவுகளில்
மிச்சமிருந்தது வெப்பம்
இதயங்களில்....

கடல்

கடலுக்கருகே
கால்நீட்டிப்படுத்திருந்தும்
தாகந்தணியாத
மணல்மேடுகள்

மழைக்காலம்

தொடங்கிவிட்டது!
மேகத்தின் மீது
மின்னல் தொடுத்த போர்

அதிகாலை

ஆதவன் எழுப்பியதும்
அரைத்தூக்கத்தில்
அனற்றியது இரவு


(இதை மட்டும் விட்டு வைப்பானேன்....?)

2 comments:

சங்கர் said...

இரவு
நிலா இருந்தாதான் அது இரவு சூரியன் இருந்தா அது பகல்

நட்சத்திரங்கள்
அதுல ஒண்ணு வந்து மோதுற வரைக்கும் இப்படியே சொல்லிக்கிட்டிருங்க

மாலை
போர்வைக்குள்ள வேற யாரு இருந்தது?

பனி
இப்படி சொல்லியே, கட்டிங் கட்டிங்கா விட்டுக்கிட்டிருந்தா, சுடாம என்ன செய்யும்

கடல்
மணலே தெரியாத அளவுக்கு பொங்கினது ஞாபகம் இல்லையா

மழை
நடுவுல போய் சமாதானம் பேசுங்க நோபல் பரிசு குடுப்பாங்க

அதிகாலை
ஆதவன் பார்த்ததுக்கப்புறமும் தூக்கம் வந்ததா

நாங்களும் விட்டு வைக்க மாட்டோம்ல :))

settaikkaran said...

//நாங்களும் விட்டு வைக்க மாட்டோம்ல :))//

எல்லாரும் இதை ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டாங்களோன்னு நானே குழம்பிட்டிருந்தேன். இதுக்குத் தான் நீங்க வேணுங்கிறது. :-))))