தலைப்பைப் பார்த்து வேறு எதையோ எதிர்பார்த்து வந்தால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல.
சமீபகாலமா அஜித்-ரஜினிக்கு அடுத்தபடியா செய்தித்தாள்களில் அடிபடுற போலி ஐபிஎஸ் அதிகாரி சாருலதாவைப் பத்தி எழுதப்போறேன். இதை எழுதற தூண்டுதல் எனக்கு எப்படி வந்ததுன்னு கேட்கறீகளா?
அதாவதுங்க, ஒரு ஊரிலே சமீபத்துலே ஊரடங்குச்சட்டம் போட்டிருந்தாங்களாம். நாலு பேருக்கு மேலே யாரும் கூடிநிக்கக் கூடாதுன்னு. ஆனா பாருங்க, அந்த ஊருலே காவல்துறை உதவி ஆய்வாளரா இருந்த பெண்மணிக்கு ஒரு போன் வந்ததாம்- ஒரு இடத்துலே மக்கள் கூட்டம் கூட்டமா நிக்குறாங்கன்னு! உடனே இந்தம்மாவும் விஜயசாந்தி மாதிரி வீராவேசமாக் கிளம்பிப்போயி. தனியொரு ஆளா நின்னே, கூட்டமா நின்னுக்கிட்டிருந்த மக்களையெல்லாம் லத்தி சார்ஜ் பண்ணி கலைச்சிட்டு வந்தாங்களாம். அடுத்த நாள் பத்திரிகையெல்லாத்திலேயும் அந்த பெண் அதிகாரியைப் பத்தித்தான் நியூஸ்! இருக்காதா பின்னே, தடையுத்தரவை அமல் படுத்துறேன்னு, பாவம், பஸ் ஸ்டாப்புலே ஊருக்குப் போகறதுக்காக நின்னுக்கிட்டிருந்தவங்களையெல்லாம் விரட்டி விரட்டி வீட்டுக்கே திரும்பிப் போக வச்சிட்டாங்களாமே!
"உங்களுக்கெல்லாம் யாரு ட்ரெயினிங் கொடுத்தாங்க?"ன்னு விசாரணையின் போது கேட்டிருக்காங்க. அப்போ தான் சாருலதா ஐ.பி.எஸ்னு அந்த உதவி ஆய்வாளர் சொல்லவும், இந்தம்மா மாட்டிக்கிட்டாங்களாம்.
சாருலதாவை சும்மாச் சொல்லக்கூடாது. போலீஸுக்கே தொப்பி போட்டுவிட்டவங்க இந்த ஒரு அம்மணி தான்! இவங்களைப் பத்தி ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து மக்களெல்லாம் படித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்காங்க!
என்னமோ பணத்தை மட்டும் தான் மோசடி பண்ணியிருக்காங்கன்னு நினைக்காதீங்க! கல்லூரிகளிலே நடக்கிற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முகாம்களுக்கு அம்மணி சிறப்பு விருந்தினராகப் போயி, வருங்கால சந்ததிக்கு பயிற்சியெல்லாம் கொடுத்திருக்காங்களாம். இவங்க பயிற்சி கொடுத்ததைப் பார்த்து நிறைய மாணவர்கள் "நம்ம வாத்தியாருங்களை விட இந்த அம்மா நல்லா பாடம் நடத்துறாங்களே,"ன்னு மூக்கு மேலே விரல் வச்சிருக்காங்களாம்.(அவங்கவங்க மூக்கு மேலே தான்!)
இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுமுன்னு சொல்றாங்க! அது வர்ற வரைக்கும் நாம ஏன் காத்திருக்கணும்? பெயரை வெளியிட விரும்பாத சில காவல்துறை அதிகாரிகள் சொன்ன சில திடுக்கிடும் தகவல்கள் இதோ, உங்களுக்காக:
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.தேர்வுகளை எப்படி எழுதணும், கண்காணிப்பாளருடைய கண்ணில் மண்ணைத்தூவிட்டு எப்படி காப்பியடிக்கிறது, இவ்வளவு கஷ்டப்பட்டும் தேர்வுலே தோல்வியடைஞ்சா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பட்டங்களே இல்லாமல் எப்படி மக்கள் தலையத் தடவறது, அதாவது எப்படி மக்களுக்கு சேவை செய்யறதுன்னு ரொம்பவே விலாவரியா அம்மணி பயிற்சி கொடுத்திருக்காங்களாம். இவரோட பேச்சைக் கேட்டு ஆசிரியப்பெருமக்கள் எல்லாம் மிரண்டு போயிட்டாங்களாம். இருக்காதா பின்னே, மெனக்கெட்டு பி.எட், எம்.ஃபில்னு கஷ்டப்பட்டுப் படிச்சு தினமும் தொண்டைத்தண்ணி வத்துற அளவுக்குக் கத்துறதை விடவும் பேசாம போலீஸ் உத்தியோகத்துக்குப் போயிருந்தா நின்ன இடத்திலேயே சம்பாதிச்சிருக்கலாமா இல்லையா?
இத்தோட திடுக்கிடும் செய்திகள் முடிவுற்றதான்னா அது தான் இல்லை.
அண்மையில் நிறைவுற்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சாருலதா எழுதிய "மாமூல் மகாத்மியம்," என்ற புத்தகத்தை முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டதாகவும் இப்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி ஏற்கனவே "முப்பது நாட்களில் தொப்பை போடுவது எப்படி?" என்ற புத்தகம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதாவதற்கு சில தினங்கள் முன்பு, சித்தப்பா டி.வியில் சாருலதாவின் பேட்டி ஒரு செவ்வாய்க்கிழமை காலையில் நேரடியாக ஓளிபரப்பானதாகவும், பிடிபடாமல் லஞ்சம் வாங்குவது குறித்து நேயர்கள் தொலைபேசியில் அழைத்துக் கேட்டு அறிந்து கொண்டதாகவும் ஒரு "பகீர்"தகவல் இப்போது வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகியிருக்கிறது. இதே நேரலைப் பேட்டியில் தமிழகத்தில் லஞ்சநிலவரம் குறித்த நேயர்களின் சந்தேகங்களுக்கு சாருலதா பதிலளித்திருப்பதாகவும், நகரவாரியாக யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் அளிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை மிகவும் துல்லியமாக அளித்திருப்பதாகவும் அனுபவஸ்தர்கள் ஆச்சரியத்தோடும், அடக்கத்தோடும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடைசியாகக் கிடைத்த தகவல்: போலி ஐ.பி.எஸ்.அதிகாரி சாருலதாவின் வாழ்க்கை வரலாறு(?) திரைப்படமாகிறது. ஒரே நேரத்தில் 420 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கழுத்தறுத்தான்பட்டி கார்மேகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சினேகாவின் நடிப்பில் "வைஜயந்தி ஐ.பி.எஸ்," ரீமேக் ஆகிக்கொண்டிருப்பதால், சாருலதா பற்றிய படத்திற்கு அனேகமாக "பொய்ஜெயந்தி ஐ.பி.எஸ்," என்ற பெயர் சூட்டப்படலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து வருகிற செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் போகப்போக நிறைய திடுக்கிடும் தகவல்கள் வருமென்று தான் தோன்றுகிறது.

Tweet |
26 comments:
மீ த ஃப்ர்ஸ்ட்டு!!! மறுபடியும் கலக்கிட்டியே! காலங்கார்த்தல போஸ்ட்டு போடுறதை வழக்கமாக்கிக்கோ! நாளின் ஆரம்பத்துல இப்படி வயிறு வலிக்க சிரிச்சா நாள் பூரா சந்தோஷமா இருக்கு.
:)))) 100% நையாண்டி
அவனுக்கு (சாரு) இவ தேவலாம்
இந்தம்மா , அடுத்த முதலைமைச்சர் ஆகுற நேரம் வந்திடுச்சு போல..
ஆமா.. கீழ இருக்கிற லிஸ்டல இந்தம்மா பேரு முன்னாடி போடனுமா இல்ல பின்னாடி போடனுமா சேட்டை..
ஸ்டாலின்,
அழகிரி,
விஜயகாந்த்,
சரத்குமார்,
ராமதாஸ்,
அன்புமணி,
கார்திக்,
விஜய்,
சதீஸ்(விஜயகாந்த் மச்சான்)
மற்றும் பல சில..
தமிழன் எதையும் தாங்குவான்
சே..சே..தப்பா நினச்சுக்காதீங்க..
எதையும் தாங்குவானா , எதையும் தாங்கும் இதயம்னு சொல்ல வந்தேன்..
:)
சாருலதா பற்றிய படத்திற்கு அனேகமாக "பொய்ஜெயந்தி ஐ.பி.எஸ்," என்ற பெயர் சூட்டப்படலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து வருகிற செய்திகள் தெரிவிக்கின்றன.
...........நல்ல ஐடியா. செஞ்சாலும் செய்வாங்க, April Fools!
//"பொய்ஜெயந்தி ஐ.பி.எஸ்," //
இப்படி ஒரு தலைப்பில் கண்டிப்பா ஒரு படம் வரும் பாருங்க. அதனால இப்பவே தலைப்பை பதிவு பண்ணீங்கன்னா நாலு காசு பார்க்கலாம். சிரி சிரின்னு சிரிக்க வைத்த பதிவு.
ரேகா ராகவன்.
பொறாமைல போசுங்குறேன்னு மட்டும் நல்லா தெரியுது. ஏன்பா நமக்கெல்லாம் இந்த மாதிரி ஐடியா வரமாட்டேன்குது. அவுங்களோட தெறமைக்கு அவார்டு குடுப்பத விட்டிட்டு பொறாமபடாதப்பா.
சேட்டை , நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆரம்பத்துல நிசாமான நூசுன்னு நினைச்சிட்டேன்...ஹி...ஹி...
//மீ த ஃப்ர்ஸ்ட்டு!!! மறுபடியும் கலக்கிட்டியே! காலங்கார்த்தல போஸ்ட்டு போடுறதை வழக்கமாக்கிக்கோ! நாளின் ஆரம்பத்துல இப்படி வயிறு வலிக்க சிரிச்சா நாள் பூரா சந்தோஷமா இருக்கு.//
கரெக்ட்! காலங்கார்த்தாலே எல்லாரோட மூளையும் ரொம்ப சுறுசுறுப்பா இருக்குமாம். உங்களை மாதிரியே எல்லாரும் நல்லாவே மறுமொழி போடுவாங்க! நல்ல ஐடியா! நன்றிக்கா! :-))
//:)))) 100% நையாண்டி//
ஆஹா! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!!
//அவனுக்கு (சாரு) இவ தேவலாம்//
ஹா..ஹா! அவ்வளவு கடுப்பிலேயா இருக்கீங்க? :-)). வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
//இந்தம்மா , அடுத்த முதலைமைச்சர் ஆகுற நேரம் வந்திடுச்சு போல..//
ஆஹா! ஒட்டுப்போடுறதா முடிவே பண்ணிட்டீங்களா?:-))
//ஆமா.. கீழ இருக்கிற லிஸ்டல இந்தம்மா பேரு முன்னாடி போடனுமா இல்ல பின்னாடி போடனுமா சேட்டை..//
இவங்கள்ளே யாரு முன்னாடி,பின்னாடி வந்தாலும் பரவாயில்லே, ஆனா நம்ம ரெண்டு பேரோட பேரும் காணோமே அண்ணே! தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறந்திருச்சா?
//தமிழன் எதையும் தாங்குவான் சே..சே..தப்பா நினச்சுக்காதீங்க..எதையும் தாங்குவானா , எதையும் தாங்கும் இதயம்னு சொல்ல வந்தேன்..//
ஆஹா, உங்களைத் தப்பா நினைக்க முடியுங்களா? தலைவரு சொன்னா அதுலே எப்பவுமே ஒரு ஆழமான கருத்து இருக்குமில்லா? நன்றிண்ணே!!
//...........நல்ல ஐடியா. செஞ்சாலும் செய்வாங்க, April Fools!//
ஹாஹா! உங்க வாக்கு பலிச்சா ஒரு டிக்கெட் வாங்கி அனுப்பறேனுங்க! ரொம்ப நன்றி!!
//இப்படி ஒரு தலைப்பில் கண்டிப்பா ஒரு படம் வரும் பாருங்க. அதனால இப்பவே தலைப்பை பதிவு பண்ணீங்கன்னா நாலு காசு பார்க்கலாம். சிரி சிரின்னு சிரிக்க வைத்த பதிவு.//
ரொம்ப நன்றிங்க! எல்லாரும் சிரிச்சிட்டிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
//பொறாமைல போசுங்குறேன்னு மட்டும் நல்லா தெரியுது. ஏன்பா நமக்கெல்லாம் இந்த மாதிரி ஐடியா வரமாட்டேன்குது. அவுங்களோட தெறமைக்கு அவார்டு குடுப்பத விட்டிட்டு பொறாமபடாதப்பா.//
மங்குனியண்ணே! எல்லாரும் அவங்களை மாதிரி ஆயிட்டா, அப்புறம் வலையுலகம் என்னாகிறது. நம்மளை மாதிரி ரெண்டு பேர் வேணுமில்லா இங்கேயும்? :-))
நன்றிங்கண்ணே! உங்க அப்ரோச் எனக்கு ரொம்ம்பப் பிடிச்சிருக்கண்ணே
//சேட்டை , நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.//
ஓ.கே.அண்ணே! பண்ணிட்டாப் போச்சு! :-))
என்ன சதீஸ் அவரயுமா உனக்கு ஓவர் குசும்பு சேட்டை
அவர்கிட்டயே சேட்டையா தல.....
குட்....
:)
//என்ன சதீஸ் அவரயுமா//
எவ்வளவோ பண்ணறோம், இதப் பண்ண மாட்டோமா?
//உனக்கு ஓவர் குசும்பு சேட்டை//
குசும்பு நானில்லீங்க! அது இன்னொரு பதிவரு! என்னை விட சூப்பரா எழுதுவாரு! நன்றிண்ணே!
//அவர்கிட்டயே சேட்டையா தல.....//
சான்ஸே இல்லீங்க! சும்மா டைட்டில்லே மட்டும் ஒரு லூல்ஸுக்காக...
//குட்....//
ரொம்ப நன்றிங்க
:)
நல்ல சேட்டைதான்.. கலக்குங்க
தம்பி சேட்டை, ரொம்ப நல்லா எழுதறீங்க... பிரபாகர் அறிமுகம் செய்து தான் உங்க இடுகைகளை படிக்க ஆரம்பிச்சேன்... உங்களோட முந்தைய இடுகைகளை எல்லாம் படிச்சுட்டு இருக்கேன்... ரொம்ப நல்ல ஆரம்பம்... வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்... எல்லாம் படிச்சு முடிச்சுட்டு உங்க புது பதிவுகளுக்கு பின்னூட்டம் எழுதறேன்...
சேட்டை,
என்ன இங்கயுமான்னு வந்து பார்த்தா, உங்க அக்மார்க் நக்கலோட, எள்ளலோட அருமை... கலக்குறீங்க நண்பா... வாழ்த்துக்கள்....
பிரபாகர்.
பாஸ்.. உங்களுக்கு மட்டும் மூளை கிலோ கணக்குல இருக்குமா என்ன?
Post a Comment