Wednesday, February 10, 2010

கஷ்டமில்லாத காதல்

தெரிஞ்சோ தெரியாமலோ என்னை நிறைய பேர் (?) "காதல் விரோதி,"ன்னு நினைச்சிட்டிருக்காங்க! அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன் - நான் காதலைப் பத்தி எழுத ஆரம்பிச்சா இன்னிக்கு வலையுலகத்திலே நிறைய பேருக்கு ஆஃபீஸ் பூட்டிரும். சாம்பிளுக்கு "காதல்" பத்தி இங்கே எழுதியிருக்கிறதைப் படியுங்க! அதுக்கப்புறமும் உங்க கருத்தை நீங்க மாத்திக்கலேன்னா உங்களுக்கே காதலைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லி நான் எஸ்கேப் ஆயிருவேன்.

காதல் இருக்கே! அடடா, அது மட்டும் வந்திட்டா பார்க்குலே பெஞ்சு முழுக்க இடமிருந்தாலும் காதலர்கள் நடுப்புல தான் உட்காருவாங்க! ஒரு இளநீரிலே ரெண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிக்கிறதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷனுங்க! காதல் கிறுக்கு மட்டும் பிடிச்சிட்டா,இளநீரே இல்லாம ஆளுக்கு ஒரு வெறும் ஸ்ட்ராவையே கடிச்சு மென்னு தின்னுருவாங்க!

பணமிருந்தாத் தான் காதல் வருமுன்னு சில பேர் எழுதறதைப் படிக்கும்போதெல்லாம் நினைப்பேன் - இவங்க கிட்டே பணமுமில்லே; காதலுமில்லே போலிருக்குன்னு! பணத்தாலே காதலை விலைகொடுத்து வாங்க முடியாதுண்ணே! இருந்தா இன்னும் கொஞ்சம் பேரம் பேசலாம்; அம்புட்டுத்தேன்!

உண்மைக்காதல் உண்மைக்காதல்னு சொல்லுறாங்களே! அப்படீன்னா என்னா? மத்த காதலெல்லாம் பர்மா பஜாரிலே கிடைக்கிற திருட்டு டிவிடி மாதிரின்னா அர்த்தம்? உண்மைக்காதல்ங்கிறது கடவுள் மாதிரி- கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லைன்னு சொல்லுறாங்க! யோவ், நீ கண்டவனா விண்டவனான்னு கேட்கவா முடியும்? உண்மைக்காதல்ங்கிறது பிசாசு மாதிரிங்க; நிறைய பேரு இருக்கா இல்லியான்னு நிறையவே பேசுவாங்க; ஆனா, ஒரு பயபுள்ளையும் பார்த்தது கிடையாது.

வூடி ஆலன்கிறவரு காதலைப் பத்தி என்ன சொல்லியிருக்கிறாரு படியுங்களேன். (இதையெல்லாமா நீ படிக்கிறேன்னு கேட்காதீக? யாரோ ஃபார்வார்டு பண்ணுற மடலைக் கூடவா நான் படிக்க மாட்டேன்?) வூடி ஆலன் சொல்லுறாரு:

"To love is to suffer. To avoid suffering one must not love. But then one suffers from not loving. Therefore to love is to suffer, not to love is to suffer. To suffer is to suffer. To be happy is to love. To be happy then is to suffer. But suffering makes one unhappy. Therefore, to be unhappy one must love, or love to suffer, or suffer from too much happiness. I hope you're getting this down."

இதோட மொழிபெயர்ப்பைக் கடைசியிலே போடுறேண்ணே!

அகதா கிறிஸ்டீயைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க! கேள்விப்படாதவங்க, கேள்விப்பட்டவங்க கிட்டே போய்க் கேளுங்க, என்னை விட்டிருங்க! அவரு காதலைப் பத்தி என்ன சொல்லுறாருன்னா....

"ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கணவனாக அமையப்பெற்ற பெண் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி; அவளுக்கு வயதாக ஆக, கணவருக்கு அவள் மீது ஆர்வம் அதிகரிக்குமாம்."

கார்ட்டூன் பட ஜாம்பவான் வால்ட் டிஸ்னி என்ன சொல்லுறாருன்னா, மன்னிக்கவும், என்ன சொன்னாருன்னா "இந்த உலகத்திலே இருக்கிற எந்தப் பெண்ணை விடவும், நான் மிக்கி மவுஸைத் தான் அதிகம் காதலிக்கிறேன்.". பார்த்தீங்களா, மத்தவங்களுக்கெல்லாம் காதலின்னா, இவருக்கு காதெலி....!

ஆகவே, காதலைப் பத்தியும் ஒரு பதிவு போட்டாச்சு. இனிமேலாவது என்னை காதல்விரோதின்னு சொல்லாதீக! சிம்ரன் தொடங்கி தமன்னா வரைக்கும் நான் எத்தனை பேரைக் காதலிச்சிருக்கேன்னு சொன்னா காதல்னா எனக்கு எவ்வளவு பிடிக்குமுன்னு உங்களுக்குப் புரியும். (அட, ஒரு ஃப்ளோவிலே தமன்னா பெயர் வந்திருச்சே, ஒரு படம் போட்டிர வேண்டியது தான்)

வூடி ஆலன் சொன்னதோட மொழிபெயர்ப்பைப் பார்க்கலாமா?

"காதலிக்கிறது கஷ்டப்படுறது. கஷ்டப்படாம இருக்க காதலிக்காம இருக்கணும். ஆனா காதலிக்காம இருக்கிறது கஷ்டம். அதுனாலே, காதலிக்கிறதும், காதலிக்காம இருக்கிறதும் ரெண்டுமே கஷ்டம் தான். கஷ்டப்படுறது கஷ்டமானது தான். சந்தோஷம்னா காதலிக்கணும். அப்படீன்னா, சந்தோஷப்படுறதும் கஷ்டப்படத்தான்னு ஆயிடுது. ஆனா, கஷ்டப்படுறது ஒருத்தரைக் கஷ்டப்படுத்தும். ஆகையினாலே, கஷ்டப்படுறதுக்கு ஒருத்தர் காதலிக்கணும், இல்லேன்னா காதலிச்சுக் கஷ்டப்படணும் அதுவும் இல்லேன்னா ரொம்ப சந்தோஷமாயிருந்து பின்னாலே கஷ்டப்படணும். ஏதாவது புரிஞ்சுதுங்களா?"

ரொம்ப "கஷ்டப்பட்டு" மொழிபெயர்த்திருக்கேன். நல்ல வேளை, இந்த வூடி ஆலன் நம்மூருலே இருந்திருந்தா விசுவுக்குப் போட்டியா "தலைவி ஒரு குளவி"ன்னு படம் எடுத்து நம்ம எல்லார் மண்டையிலேயும் கொட்டியிருப்பாரு.

14 comments:

சென்ஷி said...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்களை இங்க சொல்றதா வேணாமா...

manjoorraja said...

அப்ப காதலித்து கஸ்டப்படப்போறெயா இல்லே கஸ்டப்படுவதற்காக காதலிக்க போறெயா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை ரொம்ப நல்லாருக்கு ..

நல்லாத்தான் யோசிக்கிறாங்க இல்ல ...

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்

கட்டபொம்மன் said...

மன்னர் காதல் மூடுல இருக்கிறாரு ...

ஒரு கவிதை சொல்ல முடியுமா ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

ஆமா இந்த "வூடி ஆலன்" விசுவுக்கு அக்காவா? :))

மாதேவி said...

:) காதெலி..காதல்.

settaikkaran said...

//இனிய காதலர் தின நல்வாழ்த்துக்களை இங்க சொல்றதா வேணாமா...//

சென்ஷிண்ணே, அதான் இன்னா வேண்ணாலும் எளுதலாமுன்னு சொல்லிட்டோமில்லா? :-))

நன்றிண்ணே!!

settaikkaran said...

//அப்ப காதலித்து கஸ்டப்படப்போறெயா இல்லே கஸ்டப்படுவதற்காக காதலிக்க போறெயா?//

முதல்லே கஷ்டப்பட்டாவது காதலிச்சிரணும். அப்புறம் காதலிச்சிட்டே கஷ்டப்படணும். அதுக்கப்புறம் காதல்னாலும் கஷ்டமுன்னாலும் பெரிசா வித்தியாசம் தெரியாதுன்னு முடிவு பண்ணிப்புட்டேன்.

நன்றி மஞ்சூர் ராசா அண்ணே!

settaikkaran said...

//சேட்டை ரொம்ப நல்லாருக்கு ..

நல்லாத்தான் யோசிக்கிறாங்க இல்ல ...//

ஆமாண்ணே, நாளுக்கு நாள் நம்ம சிந்தனை மெருகேறிட்டே போவுது; இது எங்கே கொண்டுபோய் விடுமோன்னு தெரியலேண்ணே! :-))))

//இனிய காதலர்தின வாழ்த்துக்கள்//

ஹூம்! அதெல்லாம் காதலி இருக்கிறவங்க கொண்டாட வேண்டிய சங்கதி! :-(((((

நன்றி ஸ்டார்ஜன் அண்ணே!

settaikkaran said...

//மன்னர் காதல் மூடுல இருக்கிறாரு ...

ஒரு கவிதை சொல்ல முடியுமா ..//

கட்டப்பொம்மன் அண்ணாச்சி! பிப்ருவரி 14 அன்னிக்குப் பாருங்க! இங்கே ஒரு கச்சேரியே நடக்கப்போவுது. :-))

நன்றிண்ணே

settaikkaran said...

நன்றி முத்துலட்சுமி அவர்களே!

settaikkaran said...

// ஆமா இந்த "வூடி ஆலன்" விசுவுக்கு அக்காவா? :))//

தெரியலேண்ணே! நம்ம கேடி பாலனுக்குத் தூரத்து உறவா இருப்பாரோ?

நன்றி சைவக்கொத்துப்பரோட்டா அண்ணே!

settaikkaran said...

// :) காதெலி..காதல்.//

வாங்க வாங்க மாதேவி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க