(முன்னெச்சரிக்கை: இது கடும்பாக்கள்! வெண்பாக்கள் அல்ல)
தனக்கென வோர்முழந் தானே யெனினும்
மெனக்கிடு மெல்லிடை யாளே-எனக்கு
இருப துனக்குப் பதினெட் டதனிற்
பெருமது ஸ்ரேயா எழில்
எழிலுறு சேல்விழி காணுவர் நெஞ்சிற்
பொழிலுறு பூம்புன லோடும்-வழிதனிற்
வான்தரு வரமென யாங்கணும் பெய்திடும்
மானிவள் நோக்கில் மழை
மழையெனுங் கார்குழல் மாதிவள் காணின்
தழைந்திடுந் தாவரம் யாவும்-விழைந்தே
திருவிளை யாடலின் திங்கள் முகத்தால்
மருவிய தென்மனம் பார்
பாரினிற் பாவையர் ஆயிர மாயினு
ஆரிவள் போலுளர் ஆயிழை-ஓர்ந்தால்
அவாவும் மிகுமே அணங்கின் அழகை
சிவாஜி படந்தனிற் காண்
காண இருவிழி போதா தெனமனங்
கோணக் கிடந்தேன் கோதையால்-வீணாய்
உமியெனக் காற்றில் உழன்றேன் அழகால்
தமிழ்மகன் ஆசை மிக
மிகவும் மனதினில் மீன்விழி யாள்பெயர்
பகலும் இரவும் பகன்றேன்-அகந்தனில்
யாரணை போடுவர் ஆவலுக் கேமுகத்
தோரணை கண்டதன் பின்
பின்வரு நாளினில் பித்தந் தொடர
முன்வரு இன்முகம் காட்டியே-என்மனம்
வெந்ததே விண்முகில் போல்குழல் கண்டதும்
கந்தசா மிப்படத் தால்
ஆலாய்ப் பறந்தேன் அணங்கால் சுணங்கி
நூலாய் இளைத்தேன் நிதமுமே-வேலென
எட்டியே நின்றவள் எய்திடும் பார்வையை
குட்டி படத்தில் பார்
Moral of the story: வார்த்தைகளை மடித்து எழுதினால் கவிதை; ஒடித்து எழுதினால் வெண்பா.
Tweet |
10 comments:
//விண்முகில் போல்குழல் கண்டதும்//
அதை தான் பார்த்தீங்களா, நம்பிட்டேன் :)
அவ்வ்வ்வ்வ்வ்..
moral of the story தூள்......
அப்புறம் இதெல்லாம் மெய்யாலுமே நீங்க எழுதினதா....
இல்லை புராண இதிகாசங்களில் உள்ள ஸ்ரேயா பற்றிய குறிப்பா....
ஒன்றும் விளங்கவில்லை அரசே....
(ச்சே... படிச்சு முடிக்குறதுக்கு முன்னாடி மன்னர்காலத்துக்கே போய்ட்டேனே...)
:-)
அதகளம் போங்கள்....
////விண்முகில் போல்குழல் கண்டதும்//
அதை தான் பார்த்தீங்களா, நம்பிட்டேன் :)//
என்னண்ணே பண்ணுறது? வலைப்பதிவுன்னாலும் சேட்டைக்கு ஒரு அளவிருக்கே! :-))
//அவ்வ்வ்வ்வ்வ்..
moral of the story தூள்......//
என்னங்க பண்ணுறது? எதை எழுதினாலும் குத்தமுண்ணு சொல்லுறாங்க! சரி, முழுக்க முழுக்கக் குத்தமாவே ஒரு பாட்டை மொத்தமா எழுதிட்டேன்.
//அப்புறம் இதெல்லாம் மெய்யாலுமே நீங்க எழுதினதா....//
பின்னே மண்டபத்துலே யாரோ எழுதினதை என் பாட்டுன்னு சொல்லுறேன்னு நினைச்சீங்களா? என்னுது தான்..என்னுதுதான்...
//இல்லை புராண இதிகாசங்களில் உள்ள ஸ்ரேயா பற்றிய குறிப்பா....
ஒன்றும் விளங்கவில்லை அரசே....//
என்னையும் அரசாக்கிட்டீங்களா? பேரரசாக்கிடாதீங்க, பொளப்பு கெட்டுரும்....
(ச்சே... படிச்சு முடிக்குறதுக்கு முன்னாடி மன்னர்காலத்துக்கே போய்ட்டேனே...)
:-)
அதகளம் போங்கள்....
ரொம்ப நன்றிங்க! ஸ்ரேயாவுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சிருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்..! ஹூம்!
//Moral of the story: வார்த்தைகளை மடித்து எழுதினால் கவிதை//
இதப்படிக்கறதுக்கு தூக்குல தொங்கலாம்
//இதப்படிக்கறதுக்கு தூக்குல தொங்கலாம்//
ஐயையோ! நீங்க படிச்சிட்டீங்களே! கொலைக்கேசுலே மாட்டி விட்டுட்டாங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
சேட்டை, ஸ்ரெயா அந்தாதியை படித்து மனம்மகிழ்ந்து நம் குழும நண்பர்களும் ரசிக்கட்டும் என மீள்பதிவாக போட்டுட்டேன்.
உண்மையிலேயே நீங்க பெரிய கவிஞர் தான்..
நீங்க வெண்பா என்றால் என்ன என்றே தெரியாமல் இதை எழுதியதாய் சொன்னால் என்னால் நம்பமுடியவில்லை!!! சிறு கவனக்குறைவால் ஒன்றிரண்டு பிழை போல!? நான் இந்த மரபுக்கவிதைகளில் அப்பாடக்கர் எல்லாம் இல்ல சார்! நம்ம ஊமைக்கனவுகள் blog விஜூ அண்ணா பதிவை படித்து கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன். ஆனா நீங்க சிக்ஸர் அடுச்சிருகீங்க!!
நீங்க வெண்பா என்றால் என்ன என்றே தெரியாமல் இதை எழுதியதாய் சொன்னால் என்னால் நம்பமுடியவில்லை!!! சிறு கவனக்குறைவால் ஒன்றிரண்டு பிழை போல!? நான் இந்த மரபுக்கவிதைகளில் அப்பாடக்கர் எல்லாம் இல்ல சார்! நம்ம ஊமைக்கனவுகள் blog விஜூ அண்ணா பதிவை படித்து கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன். ஆனா நீங்க சிக்ஸர் அடுச்சிருகீங்க!!
Post a Comment