நம்ம அங்கமல்லி அப்புக்குட்டன் கூட ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சு டிப்ளமா இன் டி.எஸ்.எம்முன்னு ஒரு புதுப்படிப்பை ஆரம்பிக்கலாம். (Dip.in.Tea Shop Management). அட, நக்கல் பண்ணலீங்க! டீக்கடை நடத்துறது ஒண்ணும் விளையாட்டில்லே! அதுலே எவ்வளவு கஷ்டநஷ்டங்களிருக்குன்னு தெரிஞ்சுக்கணுமுன்னா ஒரு நாளைக்கு ஒரு பத்து நிமிஷம் ஏதாவது டீக்கடையைக் கவனியுங்க!
கூட்டமா இருக்கிற ஒரு டீக்கடையிலே, பெரும்பாலும் தோளிலே ஒரு துண்டும், மடிச்சுக்கட்டின லுங்கியுமா, எல்லாருக்கும் டீ போடுறவரை எல்லாரும் மரியாதையா "மாஸ்டர்"னு சொல்லுவாங்க. ஹெட்மாஸ்டர், ரிங் மாஸ்டர், ட்ரில் மாஸ்டர், கராத்தே மாஸ்டர், சரக்கு மாஸ்டர், க்விஸ் மாஸ்டர் மாதிரி இவரும் ஒரு மாஸ்டர் தான். இந்தப் பட்டம் கிடைக்குறதுக்கு அவருக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கணும் தெரியுமா? சாம்பிளுக்கு.......!
* மாஸ்டர், லைட்டா ஒரு டீ
* எனக்கு ஸ்ட்றாங்கா ஒரு டீ
* இங்கே ஒரு மீடியம் டீ...
* அண்ணே, எனக்கு லைட் டீ..சர்க்கரை போடாம...
* எனக்கு மீடியம் டீ...ஆத்தாமக் கொடுங்க..
* எனக்கு ஸ்ட்றாங் டீ...ஆடை போட்டுக் கொடுங்க...
நீங்களும் நானும் டீ மாஸ்டரா இருந்தா குழம்பிப்போயி யாருக்கு என்ன கொடுக்கிறதுன்னு தெரியாம, குறைஞ்சது ஒருத்தருக்காவது வெறும் கிளாஸை மாத்திரம் கொடுத்துருவோம். இன்னும் மோசமானவங்களாயிருந்தா "யோவ், உள்ளே வந்து உனக்கு எப்படி வேணுமோ நீயே போட்டுக்கய்யா,"ன்னு சலிச்சுக்கிட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸைப் பிடிச்சுக் கேரளாவுக்கே ஓடியிருப்போம்.
ஆனா, நம்ம அப்புக்குட்டன் மகா பொறுமைசாலி! யாருக்குக் காப்பி, யாருக்கு டீ, அதுலே எத்தனை பேருக்கு ஸ்ட்றாங், எத்தனை லைட், எத்தனை மீடியமுன்னு கரெக்டா ஞாபகம் வச்சு சரியாப் போட்டுருவாரு. எல்லா டீக்கடையிலும் இந்த மாஸ்டருக்கு உதவி செய்ய ஒண்ணோ ரெண்டோ மைனருங்க இருப்பாங்க! (இவங்களையெல்லாம் குழந்தைத்தொழிலாளர் தடுப்புச்சட்டம் ஒண்ணும் பண்ணாதோ?)
அம்பது பைசாவிலேருந்து மூணு ரூபா வரைக்கும் பிஸ்கெட்டை கண்ணாடி பாட்டில்லே வச்சிருப்பாங்க! சில டீக்கடையிலே காலையிலே மசால்வடை, மெதுவடையும் சாயங்காலமானா வாழைக்காய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி சீசன் சமயத்துலே மிளகாய் பஜ்ஜி சுடச்சுடக் கிடைக்கும். எந்த நேரம் எவ்வளவு கூட்டம் வரும், எவ்வளவு வியாபாரம் ஆகும், எவ்வளவு பால், தேயிலைத்தூள், சர்க்கரை, கடலைமாவு, வாழைக்காய்னு எல்லாத்தையும் அப்புக்குட்டன் விரல்நுனியிலே வைச்சிருப்பாரு.
சும்மா ஆளுக்கொரு ERP வச்சுக்கிட்டு பந்தா பண்ணிட்டிருக்கிற பன்னாட்டு நிறுவனங்களெல்லாம் இவங்க கிட்டே போய் Customer Retention பத்தித் தெரிஞ்சுக்கணும். ரெண்டு நாள் ஒரே டீக்கடைக்குப் போயிப் பாருங்க, மூணாவது நாள் நம்ம தலை தெரிஞ்சதுமே "மாஸ்டர், சாருக்கு ஒரு மீடியம் சாயா!" என்று கல்லாப்பெட்டியிலிருந்து போபிக்குட்டி அப்புக்குட்டனுக்கு ஆர்டர் கொடுத்து விடுவார். இன்னும் கொஞ்ச நாளாச்சுன்னா, "அம்பது ரூபாய் நோட்டா? சில்லறை இல்லையே சார், நாளைக்குக் கொடுங்க; குழப்பமில்லா..." என்று பெருந்தன்மையாக புன்னகையோடு சொல்லுவார் கல்லாப்பெட்டிக்காரர்.
ஒவ்வொரு டீக்கடையிலும் ஒவ்வொரு மாஸ்டரும் ஒவ்வொரு மாதிரி டீ ஆத்துவாரு! இவங்க டீ ஆத்துற ஸ்டைல் இருக்கே, அது அவங்களோட தனித்தன்மையை நிரூபிக்கிறா மாதிரி இருக்கும். ஒரே தெருவிலே ரெண்டு டீக்கடை இருந்தா ரெண்டு மாஸ்டரும் ரெண்டு விதமா டீ ஆத்துவாங்க!
எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் இருக்குன்னா, அது இது தான்! ஒரு பாய்லர் ரெண்டு பாத்திரம், ஒரு டஜன் கிளாஸோட அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ஆரம்பிச்ச டீக்கடையிலே இப்போ சுவத்துலே டைல்ஸ் பதிச்சிருப்பாங்க! சில கடைகளே ரெண்டாப் பிளந்து ஒரு பாதியிலே ஜூஸ், சாண்ட்விச் எல்லாம் கிடைக்கும். இதை விட Business Diversification-க்கு வேறே என்ன உதாரணத்தை நம்மாலே தெருவுக்குத் தெரு காட்டமுடியும்?
அதுனாலே, அப்புக்குட்டன் சேட்டா! ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சிருங்க! வேலையை ரிஸைன் பண்ணிட்டு முதல்லே நான் வந்துருவேன் டிப்ளமா படிக்க...!
Tweet |
7 comments:
நானும் வந்தா அப்புக்குட்டன் சேத்துக்குவாரா...
கேட்டுச்சொல்லுங்க தல..
:-D
//நானும் வந்தா அப்புக்குட்டன் சேத்துக்குவாரா...
கேட்டுச்சொல்லுங்க தல..//
தீர்ச்சையாயிட்டு....! வரணே சாரே!
:)
இன்னும் யாரெல்லாம் இப்படி டிப்ளமோ ஆரம்பிக்கலாம்ன்ன்னு நீங்க ஐடி யாஎல்லத்தையும் சேமிச்சிட்டு சொல்லுங்க..ஒரு நோட்டிஸ் அடிக்கலாம்.. இன்ஸ்ட்யூட் ஆரம்பிக்க டிப்ளோமா கோர்ஸ்ன்னு..
//இன்னும் யாரெல்லாம் இப்படி டிப்ளமோ ஆரம்பிக்கலாம்ன்ன்னு நீங்க ஐடி யாஎல்லத்தையும் சேமிச்சிட்டு சொல்லுங்க..ஒரு நோட்டிஸ் அடிக்கலாம்.. இன்ஸ்ட்யூட் ஆரம்பிக்க டிப்ளோமா கோர்ஸ்ன்னு..//
எல்லாருமே என்னை மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கு! ஆபத்தாச்சே!
:))
சைடுல பாட்டு போடறீங்களே அது யாரு சேட்டை, நீங்களா பாடி இருக்கீங்க.. ?
//சைடுல பாட்டு போடறீங்களே அது யாரு சேட்டை, நீங்களா பாடி இருக்கீங்க.. ?//
நானே தான்! இதை விட நல்ல மென்பொருள் சீக்கிரம் கிடைக்கும். அப்புறம் நிறையப் பாடப்போறேன். யாரையும் விடுறதா இல்லே...சொல்லிப்புட்டேன்!
Post a Comment