அஹிம்சையெல்லாம் காந்தி சொல்லிக்கொடுத்து வர்றதில்லீங்கோ! அடிக்க முடியுமாங்கிற சந்தேகம்; அடிச்சாத் திருப்பி அடிச்சிருவானோங்கிற பயம்; எவனையோ அடிக்கிறதைத் தவிரவும் பாழாப்போன வாழ்க்கையிலே சிலதுக்கு முன்னுரிமையிருக்குங்குற சொரணை- அது தாங்க இன்னிக்குப் பார்க்கிற அஹிம்சையோட மேக்-அப்பில்லாத தோற்றம்! மத்ததெல்லாம் ஹம்பக்! எனக்கும் அதே முகம் தான்! இல்லாட்டி ஒருவேளை அந்த குடிகாரனை அடிச்சிருப்பேனான்னு கேட்டா, அப்பவும் இல்லேன்னு தான் பதில் வரும். ஏன்னு தான் எளவு புரியமாட்டேங்குது.
தமிழிலே எழுதணுமுன்னா தமிழிலே நிறையப் படிக்கணும்னு சொன்னாங்க! என் ரேஞ்சுக்கு ஜூ.வி,மாலைமலர் போதுமுன்னு படிக்கிறேன். அறைக்குப் போயி மாலை மலரைப் பிரிச்சா எவளையோ எவனோ கெடுத்துட்டான்னு செய்தி! தினம் இந்த மாதிரி செய்தி வருது. ஒவ்வொரு நாளும் பெயரை மட்டும் மாத்தி மத்த மேட்டரை அப்படியே போடுறாங்களோன்னு கூட தோணும். அப்புறம் ஷகீலாவுக்கு மேரேஜு ஆவப்போவது, விந்தியா விவாகரத்து கேட்டிருக்காங்கன்னு செய்தி படிக்கிறதோட என்னோட இருநூறு பைசா தமிழார்வம் முடிஞ்சுதுங்கோ! ராத்திரி மெஸ்ஸிலே வழக்கம்போல முட்டைக்கோசு பொரியல் தானா, இன்னிக்காவது காரக்கொழம்பைக் கண்ணுலே காட்டுவானாங்குற ஜீவமரணக் கேள்வி அண்ணாநகர் டவர் மாதிரி எளும்பி நிக்கும்.
இன்னிக்கு இந்த செய்தி படிச்சதும் எனக்கு மூக்கைப் பொத்திக்கிட்ட பொண்ணுங்க
ஞாபகத்துக்கு வந்தாங்க! 21G-யிலே ஒரு வாரம் பத்துநாள் முன்னாலே இடுப்புலே கை வச்ச ஒரு பொறுக்கியை ஒரு பொண்ணு செருப்பாலே அடிச்சதும் ஞாபகத்துக்கு வந்துச்சு! எவனோ ஒருத்தன் கை தெரிஞ்சோ தெரியாமலோ மேலே பட்டதுக்கே இவ்வளவு ஆக்கிரோசப்படுற ஒரு பொண்ணை, விருப்பமில்லாம கட்டாயப்படுத்தி ஒருத்தன் கெடுக்கும்போது அவளுக்கு எப்படியிருக்கும்? செத்துப்போகணும் போலத்தோணுமோ?
ஒரு குடிகாரன் பக்கத்துலே வந்து உரசிக்கிட்டு உட்கார்றது ஆம்பிளை எனக்கே
புடிக்காதபோது, அந்த மாதிரி ஆம்பளை கிட்டே சிக்கின பொண்ணு என்ன சித்திரவதைப்படுமோ? நல்ல வேளை, நான் பொம்பிளையாப் பொறக்கலே!
எலே குடிகாரா! உன்னாலேயும் இன்னிக்கு ஒரு பாடம் படிச்ச மாதிரி இருக்கு. நாளைக் காலை வரைக்கும் இதோட ஹேங்க்-ஓவர் இருக்குமா தெரியலே!
வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போங்க!
Tweet |
No comments:
Post a Comment