Tuesday, August 28, 2012

மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?



மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? - மெட்டு

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

வானவெளியில் 2G-யில் வேட்டை
பூமிக்குள்ளும் போடுவோம் ஓட்டை
வந்தவரைக்கும் லாபம் என்று
வாயில்போட்டுத் தீர்ப்போம் தின்று
வாயில்போட்டுத் தீர்ப்போம் தின்று
புறங்கை முழுதும் வடியும் தேனே!
புண்ணியபாவம் பார்ப்பது வீணே!

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

ஊழல் எமது வாடிக்கையாச்சு!
உண்மை நேர்மை வேடிக்கையாச்சு!
நாட்டில் ஜனங்கள் நம்பிக்கை குலைத்து
நடத்தும் ஊழல் கேளிக்கையாச்சு!
நடத்தும் ஊழல் கேளிக்கையாச்சு!
கரங்கள் மீது படிந்தது கரியா?
கணக்கைச் சொன்னால் சீறுதல் சரியா?

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள் சார்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

அனுஷ்யா said...

ஹி..ஹி.. நான் ஒரு ராகத்துல வாசிச்சேன்... சிரிப்பாதான் இருக்கு நிஜம்..

MARI The Great said...

டாக்டர் சொன்ன மாதிரி சிரிப்பாத்தான் இருக்கு! :)

கும்மாச்சி said...

கலக்குங்க சேட்டை. அருமை.

Rekha raghavan said...

இந்த பாடலை அடுத்த தேர்தலுக்கு எதிர் கட்சியினர் பயன் படுத்திக் கொள்ளப் போவதாக ஒரு வதந்தி உலாவுவதால் உங்களுக்கு சன்மானம் வரும். காத்திருக்கவும். கிண்டல் பாட்டும் உங்களுக்கு அருமையாக வருது சேட்டை. பாராட்டுகள்.

நாய் நக்ஸ் said...

Nice
settai......

எல் கே said...

வேணு ஜி , செம செம.. துக்ளக்கில் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பாடல் இப்படிதான் போட்டு இருந்தாங்க

ஸ்ரீராம். said...

அடியே கொல்லுதே ராகத்தில் படித்துப் பார்த்தேன்! :))

சக்தி கல்வி மையம் said...

super

அப்பாதுரை said...

Raghavan Kalyanaraman :-)

ரிஷபன் said...

கரங்கள் மீது படிந்தது கரியா?
கணக்கைச் சொன்னால் சீறுதல் சரியா?

கரங்கள் மீது மட்டுமல்ல நம் முகங்களிலும் அப்பி விட்டார்கள்

சமீரா said...

சூப்பர் சார்!!! உண்மை நிலவரத்தை கவிதையா படிச்சிடீங்க!!! வரவர நீங்க கண்ணதாசன் பட்டுகோட்டை ரேஞ்சு-கு தின்க் பண்றீங்க சார்!!!

kaialavuman said...

//புறங்கை முழுதும் வடியும் தேனே!
புண்ணியபாவம் பார்ப்பது வீணே!//

இந்த வரிகளுக்கு காப்புரிமை பெற்றவரிடமிருந்து அனுமதி கிடைத்ததா?

settaikkaran said...

//புறங்கை முழுதும் வடியும் தேனே!
புண்ணியபாவம் பார்ப்பது வீணே!//

இந்த வரிகளுக்கு காப்புரிமை பெற்றவரிடமிருந்து அனுமதி கிடைத்ததா?


காப்பி அடிக்கிற பழக்கம் எனக்கில்லை. இதற்கு யார் காப்புரிமை வைத்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு போடா முடியுமா...? சீரியசாக கேட்கிறேன்.

settaikkaran said...

வேங்கட ஸ்ரீனிவாசன்...
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதுகிற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். ஆதாரத்தோடு பேசுங்க. தெரிஞ்சுதா...?

இந்திரா said...

எதுகை மோனைல புகுந்து விளையாடியிருக்கீங்க சேட்டை..
அசத்துங்க.

kaialavuman said...

//காப்பி அடிக்கிற பழக்கம் எனக்கில்லை. இதற்கு யார் காப்புரிமை வைத்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு போடா முடியுமா...?//

தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்ற தத்துவத்தை முதன் முதலில் உலகிற்கு சொன்னவன் தமிழன். அதைத் தமிழனுக்கே சொன்னவர் தமிழினத் தலைவர். அவரிடம் இருந்து காப்புரிமை பெற்றுவிட்டீர்களா?

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே, படத்துல இருக்கிறவரு, எக்ஸ்ட்ராவா காதுலையும் பஞ்சு வச்சி அடைச்சிருக்காராம்...

ம்ஹூம் இந்த பாட்டு அவருக்கு கேக்கிரது சந்தேகம்தான்....

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை, பாட்டெல்லாம் போட்டு அசத்தறீங்க!

ஏற்கனவே தலைப்பாக்காரர் நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கார்..... :)

settaikkaran said...

//திண்டுக்கல் தனபாலன்

உண்மை வரிகள் சார்...தொடர வாழ்த்துக்கள்... நன்றி...//

அவசியம் தொடர்வேன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//மயிலன் said...

ஹி..ஹி.. நான் ஒரு ராகத்துல வாசிச்சேன்... சிரிப்பாதான் இருக்கு நிஜம்..//

டாக்டருக்கு சங்கீத ஞானம் இருக்கும் போலிருக்குது! சேட்டை, உஷாரா இருந்துக்கடா! நன்றி மயிலன்! 

//வரலாற்று சுவடுகள்

டாக்டர் சொன்ன மாதிரி சிரிப்பாத்தான் இருக்கு! :)//

மிக்க நன்றி!

//கும்மாச்சி said...

கலக்குங்க சேட்டை. அருமை.//

சொல்லிட்டீங்கல்ல..?கலக்கிருவோம்! மிக்க நன்றி!

settaikkaran said...

//Raghavan Kalyanaraman said...

இந்த பாடலை அடுத்த தேர்தலுக்கு எதிர் கட்சியினர் பயன் படுத்திக் கொள்ளப் போவதாக ஒரு வதந்தி உலாவுவதால் உங்களுக்கு சன்மானம் வரும். காத்திருக்கவும். கிண்டல் பாட்டும் உங்களுக்கு அருமையாக வருது சேட்டை. பாராட்டுகள்.//

சன்மானம் வராட்டி கூட பரவாயில்லை சார்! ஆட்டோவோ சுமோவோ வந்துரக்கூடாது! மிக்க நன்றி!

//நாய் நக்ஸ் -இலையையும் தின்பவன்

Nice settai......//

Thanks Friend! :-)

//எல் கே said...

வேணு ஜி , செம செம.. துக்ளக்கில் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பாடல் இப்படிதான் போட்டு இருந்தாங்க//

அடடா, இதுக்கும் போட்டியா? அவ்வ்வ்வ்! எனிவே, கருத்துக்கு நன்றி கார்த்தி! :-)

//ஸ்ரீராம். said...

அடியே கொல்லுதே ராகத்தில் படித்துப் பார்த்தேன்! :))//

ஆஹா, அந்த மெட்டுலே ஒரு பாட்டு எழுதிட்டாப் போச்சு! காசா பணமா? :-))))
மிக்க நன்றி!

//வேடந்தாங்கல் - கருண் said...

Super//

மிக்க நன்றி!

//அப்பாதுரை said...

Raghavan Kalyanaraman :-)//

கலக்குறாரு இல்லே? :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

கரங்கள் மீது மட்டுமல்ல நம் முகங்களிலும் அப்பி விட்டார்கள்//

அதுவும் குழைச்சுப் பூசிட்டாங்க! மிக்க நன்றி!

//சமீரா said...

சூப்பர் சார்!!! உண்மை நிலவரத்தை கவிதையா படிச்சிடீங்க!!! வரவர நீங்க கண்ணதாசன் பட்டுகோட்டை ரேஞ்சு-கு தின்க் பண்றீங்க சார்!!!//

ஆஹா! இப்படி பில்ட்-அப் பண்ணிட்டீங்களே! இதை கன்டின்யூ பண்ணியே ஆகணும் போலிருக்குதே! :-)

மிக்க நன்றி சகோதரி!

//இந்திரா said...

எதுகை மோனைல புகுந்து விளையாடியிருக்கீங்க சேட்டை..அசத்துங்க.//

சொல்லிட்டீங்களா? இனிமே இதுமாதிரி அடிக்கடி எழுதிர வேண்டியதுதான்!

மிக்க நன்றி சகோதரி!

//வெங்கட ஸ்ரீநிவாசன் said...

தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்ற தத்துவத்தை முதன் முதலில் உலகிற்கு சொன்னவன் தமிழன். அதைத் தமிழனுக்கே சொன்னவர் தமிழினத் தலைவர். அவரிடம் இருந்து காப்புரிமை பெற்றுவிட்டீர்களா?//

அதுக்கெல்லாம் எங்கேங்க காப்பி ரைட் இருக்குது? உங்க முதல் பின்னூட்டத்தைப் பார்த்தா, நான் யாரோ எழுதின வரிகளைச் சுட்டுப்போட்டுட்டதா மத்தவங்க நினைக்கிற மாதிரி இருந்திச்சு! கலைஞர்ட்ட போயி காப்பிரைட் வாங்குறதெல்லாம் ஆவுற காரியமா...?

மிக்க நன்றி!

//பட்டிகாட்டான் Jey said...

அண்ணே, படத்துல இருக்கிறவரு, எக்ஸ்ட்ராவா காதுலையும் பஞ்சு வச்சி அடைச்சிருக்காராம்...ம்ஹூம் இந்த பாட்டு அவருக்கு கேக்கிரது சந்தேகம்தான்....//

அதுனாலதான் அவரை அங்கன உட்கார்த்தி வச்சிருக்காங்க! :-)

மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

சேட்டை, பாட்டெல்லாம் போட்டு அசத்தறீங்க! ஏற்கனவே தலைப்பாக்காரர் நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கார்..... :)//

வெங்கட்ஜீ! அவருக்கு தமிழ் தெரியாது! தப்பிச்சாரு ( நானும் தான்!)

மிக்க நன்றிஜீ!

kaialavuman said...

//கலைஞர்ட்ட போயி காப்பிரைட் வாங்குறதெல்லாம் ஆவுற காரியமா...?//
அது முடியாது, அதனால் தான் இப்பொழுது இந்த தத்துவத்தை அவரே நாட்டுடமையாக்கி விட்டார் போலிருக்கிறது.

//யாரோ எழுதின வரிகளைச் சுட்டுப்போட்டுட்டதா மத்தவங்க நினைக்கிற மாதிரி இருந்திச்சு! //
ஓஒ! ஒரு smiley போட்டிருந்தால் சரியாக இருந்திருக்குமோ?